க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

“என்ன பெரிசு! சிலையையே சுத்தி சுத்தி வாறாய்?”
“சிலையில இருக்கிற ஆள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு… ஆனா சட்டெண்டு ஞாபகம் வருதில்ல…”
“உன்ன தான் சிலையா வச்சிருக்கிறாங்க. இதுக்கு தான் கண்டவன் போனவனுக்கெல்லாம் உயிரோட இருக்கேக்கயே சிலை வைக்க கூடாதெண்டுறது. கேட்டா தானே…”


“வர வர சினிமா மோசமாப்போச்சு. மீச முளைக்காத 14 வயசில என்ன காதல் வேண்டியிருக்கு. அந்தக் காலத்தில 40 வயசில தான் காதலே தொடங்கும். காலம் கெட்டுப்போச்சு.”
“ஆமாய்யா… அப்பெல்லாம் 90 வயசில தான் எமன் வருவான். இப்பவெல்லாம் 30, 40 வயசிலயே வந்து நிக்கிறானே? என்ன செய்யச் சொல்றா?”


“டொக்ரர்! சின்னக் குழந்தைகளுக்கு உடம்பு ரப்பர் மாதிரி, கீழ விழுந்தாக் கூட எலும்பு முறியாதெண்டு சொன்னீங்களே?”
“ஆமாம் பாப்பா… அதுக்கென்ன இப்போ?”
“உங்க குழந்தய மொட்டமாடிலேருந்து கீழ தள்ளி விட்டிட்டன். எதுக்கும் போய்ப் பாருங்கோ!”


“என்ன செய்யுது?”
“ஒரே தலையிடி டொக்ரர்!”
“எத்தின நாளா?”
“இப்ப தான்… ஒரு 10 நாளா…”
“எனக்கு 10 வருஷமா தலையிடி இருக்கு தெரியுமா?”
“ஓகோ… அப்ப வாங்க ரெண்டு பேருமா ஒரு நல்ல டொக்ரரிட்ட போவம்… கிளம்புங்க…”


“என் பையன் ரஷ்யாவில MBBS முடிச்சிற்று வந்தான்… சட்டுபுட்டுன்னு கலியாணத்த முடிச்சு வச்சிற்றன்…”
“காச கரியாக்கி படிப்பிச்ச பிறகு தான் முடிக்கோணுமா…
என்ர மோனுக்கு A/L முடிஞ்சதுமே முடிச்சு வச்சிற்றன்…”


“இந்த மார்கழியோட பொண்ணுக்கு தோஷமெல்லாம் கழியுது….”
“அப்ப தையில கலியாணத்த முடிச்சிடலாமெண்டு சொல்லுங்க…”
“முடியாதே… அதுக்கு மேல தானே ஏழரைச்சனி தொடங்குது…”
“…???”


“மந்திரி பதவியிலயும் இருந்துகொண்டு… சொந்தக் காரங்கள வச்சு கசிப்பு காய்ச்சி விக்கிறதா எதிர்க்கட்சி காரங்க குற்றம் சாட்டுறாங்களே…”
“மந்திரியே காச்சிறதுக்கு சட்டத்தில இடமில்லயே… சட்டமே தெரியாதவங்க எதிர்க்கட்சியா இருக்கிறது தான் இந்த நாட்டின்ர சாபக்கேடு…”


“ஏம்பா கொண்டக்ரர்! வயசுப் பெட்டையளெண்டா மிச்சக்காச உள்ளங்கையில அழுத்தி வச்சி குடுப்பியே… என்ன மாதிரி கிழவியள் எண்டா சில்லற இல்லயெண்டுவியே… நல்ல ஆள் தானப்பா நீ…”
“அடக்கிழவி… கட்டயில போற வயசில ஆசயப்பாரு…”
“அடிக் கட்டயால…”


“என்னங்க இது… சினிமா கமரா மானா(Camera man) இருக்கிற நம்ம பிள்ள வீட்டுக்கு வந்திருக்கிறான்… பால் காய்ச்சிக் குடுக்கலாம் எண்டா இந்த பசு மாடு விடமாட்டனெண்டுது… என்னாச்சு இந்தச் சனியனுக்கு…?”
“ஏய்! மாட்ட ஏன் பேசுறாய்? இவன் கமராவோட போய் மாட்ட கவர்ச்சியா படமெடத்திருப்பான்… மானமுள்ள மாடாச்சே… அது தான் தண்ணி காட்டுது…”

(தொடரும்…)

0 பின்னூட்டங்கள்: