க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உதித்நாராயணன் என்றோரு பாடகர் இருக்கிறாரே... தமிழில் அரைவாசிச் சொற்களை சாப்பிட்டுவிட்டு மிகுதியை விருப்பமின்றி பாடும் பாடகர் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இறக்குமதி. சிவாஜி திரைப்படத்தில் சகானா சாரல் பாடலை இவர் தான் பாடியிருந்தாலும், அந்தப் பாடலை அவர் கவிப்பேரரசு அவர்களின் நேரடி பார்வையின் கீழ் பாடியதால் தான் அந்தப் பாடலின் தமிழ் ஓரளவுக்கு தப்பித்ததாம்.
இவரின் தமிழ் விழுங்கும் திறமையை யாரடி நீ மோகினி திரைப்படத்தில் அருமையாக காணலாம். எங்கேயோ பார்த்த மயக்கம், ஓ! பேபி, நெஞ்ச கசக்கிவிட்டு ஆகிய பாடல்களில் தமிழை அழகாக சாப்பிட்டிருக்கிறார்.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால் எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற பாடலை கார்த்திக் என்ற பாடகர் அருமையாக பாடியிருந்தார். அந்தப் பாடல் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்புக் கிடைத்திருந்தது. ஆனால் திரைப்படத்தில் உதித் நாராயணன் பாடிய பாடல் தான் இடம்பெற்றிருந்தது. தமிழை விழுங்கினால் தான் பாடலுக்கு நல்லது என படத்தின் இயக்குனர் விரும்பினாரோ என்னவோ...
ம்...
இது இப்படி என்றால் சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் புதியவர் ஒருவர் விழுங்க ஆரம்பித்திருக்கிறார். நான் எப்போது பெண்ணானேன் என்ற பாடலை பாடியிருக்கும் றீனா பரத்வாஜ் (இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் என்று நினைக்கிறேன். தமிழை விழுங்கினால் தான் பாட வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்தாரோ என்னவோ...) என்பவர் தான் அந்த புதிய முகம். சிலவேளைகளில் உதித்நாராயணன் அவர்களிடம் விசேட பயிற்சி பெற்றாரோ என்னவோ... சிறந்த குரல்வளம் கொண்ட இவருக்கு தமிழ் உச்சரிப்புக்கு புள்ளிகள் வழங்க முடியாதுள்ளதே...
எப்படி ஐயா உங்களால மட்டும் முடியுது...

0 பின்னூட்டங்கள்: