க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

கலிபோர்னியா பிரதேசத்தில் 'அனோ நியூவோ' (Ano Nuevo*) என்ற பெயருடைய அதாவது 'புதுவருட முனை' என்ற பெயருடைய ஓர் முனை உள்ளதாம். கடல் நாய்களின் ஒருவகையான தும்பிக்கை வைத்த கடல்நாய்கள் (Elephant Seals) உலகிலேயே இங்கு மட்டும் தான் வருமாம். இவற்றில் ஆண் சீல்கள் அலாஸ்காவிலிருந்து (அதாவது ஏறத்தாழ 4000 மைல் தொலைவிலிருந்து) நீந்தியபடி டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இந்த முனையை சரியாக அடையுமாம். இந்த முனையை அடைந்து தங்கள் பிரதேசங்களை படித்து வைத்துக் கொள்ளுமாம்.
பெண் சீல்கள் எதிர்த்திசையான ஹவாய் தீவுகளிலிருந்து (அதாவது 3000 மைல் தொலைவிலிருந்து) நீந்தி சரியாக இந்த முனையை அடையுமாம்.
அப்போதிருந்து அவர்களின் காதல் ஆரம்பித்து பெப்ரவரி 14ம் திகதி உச்சக்கட்டத்தை அடையுமாம்.
(காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி அனுஷ்டிக்கப்பட இந்தக் காரணமும் சொல்லப்படுவதுண்டு. வலன்ரைன்ஸ் தினம் என்பது வலன்ரைன் என்ற பாதிரியாரை நினைவுபடுத்தி என்றும் சொல்கிறார்கள். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்வது எனது வேலையல்ல...)
பெண் சீல்கள் குட்டி இட்டவுடன் பெண் சீல்கள் ஹவாய் தீவுகளிற்கும், ஆண் சீல்கள் அலாஸ்காவிற்கும் சென்று விடும்.
மறுபடியும் டிசம்பர் மாதம் அதே இடத்தில் சந்திப்பு நடக்குமாம். ஆனால் முதல் முறை சந்தித்த ஜோடிகள் தான் மீண்டும் ஜோடிகள் என்பது நிச்சயமில்லையாம். (இத தான் கலாசார சீரழிவு எண்டுவாங்களோ... ஹி ஹி...)
எது எப்படியோ, அவ்வளவு தூரம் அவை நீந்தி வந்து ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தை வந்தடைவது ஆச்சரியமான விடயம் தானே...

*- (ANO என்று யசீர் அரபாத் அவர்களின் விடுதலை அமைப்பான பலஸ்தீன விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்த விடுதலை அமைப்பும் உள்ளது. Abu Nidal Organization என்பது அந்த அமைப்பின் பெயர்)

0 பின்னூட்டங்கள்: