க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மின்னஞ்சலில் கிடைத்தது...
அனுப்பியவரின் விபரம் தரப்பட்டுள்ளது...
**********************************************************


எயிட்ஸ் நோய் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் அஞ்சி ஓடும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் எயிட்ஸ் நோயாளியொருவரை துணிந்து திருமணம் செய்துள்ளார்.

முஹம்மத் அஸிம் அஷ்ரப் என்ற இந்த எயிட்ஸ் நோயாளி, எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க எடுத்துக் கொண்ட மும்முர பிரசார நடவடிக்கைகளைப் பார்த்து கவரப்பட்டே அவர் மீது காதல் கொண்டதாக ருபினா அஷ்ரப் என்ற மேற்படி 30 வயது மதிக்கத்தக்க பெண் தெரிவித்தார்.

அஸிம் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விபரம் குறித்து அவரது உறவினரான தனது நண்பி ஒருவர் மூலம் ருபினா அறிந்தார்.அச்சமயம் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸிமை ருபினா நேரில் சென்று பார்த்தார். அதற்கு முன் ருபினா தனது வாழ்க்கையில் எயிட்ஸ் நோயாளி எவரையும் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலவீனமடைந்திருந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காத அஸிமின் நிலை அவரைக் கவர்ந்தது.

தனது காதல் தொடர்பில் ருபினா "டெய்லி டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ""அவரது தைரியம் என்னைப் பாதித்தது. ஆனால், அவரை எதிர்காலத்தில் காதலிப்பேன் என்றோ, அவரைக் திருமணம் செய்வேன் என்றோ அந்நேரத்தில் நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், அவர் நல்ல ஆராக்கியம் பெறவேண்டும் என விரும்பினேன். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் அவருக்கு உதவுவதாக வாக்குறுதியளித்தேன்'' என்று கூறினார்.

தொடர்ந்து முல்தானில் அஸிம், எயிட்ஸ் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டபோது ருபினா அவரை மீண்டும் சந்தித்தார்.

"அன்று அவரைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவர் முன்னைய நோயாளித் தோற்றம் மாறி அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் தோன்றினார்.ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் பணியில் நான் அவருக்கு உதவ ஆரம்பித்தேன்" என ருபினா தெரிவித்தார்.

"ஒருநாள் நான் அவரிடம் எனது காதலைத் தெரிவித்தேன். அஸிம் எனது முடிவு பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி மறுத்தார். விடயத்தை கேள்விப்பட்ட இருவரது குடும்பத்தவருக்கும் பெரும் அதிர்ச்சி. எனினும், பெரும் சிரமத்தின் பின் எனது குடும்பத்தவர்கள் எனது காதலுக்கு இணங்கினர். ஆனால், அஸிமோ திருமணத்தை தவிர்க்க எவரிடமும் கூறாமல் கராச்சி நகருக்கு பயணமானார்.ஆனால் நான் மனம் தளராது விடாது முயற்சி செய்ததன் பயனாக, கடைசியில் அவர் எனது காதலை ஏற்று என்னைத் திருமணம் செய்ய இணங்கினார்" என ருபினா தெரிவித்தார்.

அஸிமுக்கு 19 வயதாக இருக்கும்போது அவருக்கு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தின் மூலம் இந்த எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமண பந்தத்தில் இணைந்துள்ள அஸிமும் ருபினாவும் பரிசோதனைக் குழாய் மூலம் குழந்தையொன்றைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.
Posted by எம்.ரிஷான் ஷெரீப்

--
http://www.mrishanshareef.tk/
http://www.rishanshareefpoems.tk/
http://www.rishanshareefarticles.tk/
http://www.myphotocollections.tk/
http://www.rishanworldnews.tk/
http://www.picturestothink.tk/
http://www.shortstories.tk/
http://www.rishan.tk/

0 பின்னூட்டங்கள்: