க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நாட்டில அவனவன் பண்ற கூத்தப் பாத்த நமக்கும் ஏதாவது கூத்துப் பண்ணோணும் எண்டு ஒரு ஆசை வந்திச்சு. சரி புதுவருடம் வர்றதால அதக் காரணமா வச்சுக் கொண்டு எங்கவாவது போகலாம் எண்டு.....நினைச்ச்ச்சன்.... சரி நம்மளால ஐ.பி.எல் பாக்க தென்னாபிரிக்காவுக்கா போக முடியும்? (பணப் பிரச்சினை இல்ல... நமக்கு நிறைய தனியார் வகுப்புக்கள் இருக்கு... அடிக்கடி நிறைய நாள் போகாம விட்டா {சாதாரணமா சொல்றதெண்டா 'இடக்கிட கோயிங், அடிக்கடி கட்டிங்'} ஒருத்தன் குறைஞ்சாலும் பறவாயில்ல எண்டு அடிச்சு கலைச்சிடுவாங்க.)
சரியெண்டு வவுனியாவில அக்கா இருக்கிறா தானே அங்க போவம் எண்டு நான் யோசிக்க முதலே அக்காவே கூப்பிட்டிட்டா.
(நான் வவுனியா போக நினைச்சதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதையெல்லாம் சொல்லி அரசியல்வாதி ஆக விரும்பேல.)
சரி நானும் போனன்.
நான் போன இராசிக்கு அண்டைக்கு பொலன்னறுவ க்கு கிட்ட எங்கோ ஒரு புகையிரதம் தடம்புரள, நம்மள கல்கமுவ எண்டொரு இடத்தில புகையிரதத்தில இருந்து இறக்கி பேருந்து மூலம் (உள் மூலமா, வெளி மூலமா எண்டு கேக்கப்படாது. பிச்சுப் புடுவன் பிச்சு.) இன்னொரு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து இன்னொரு புகையிரதத்தில் மதவாச்சி சென்று அங்க பதிவெல்லாம் முடிச்சிற்று அங்கயிருந்து பேருந்து மூலம் வவுனியா போனன்.

எங்க வீடு பிரதான வீதியும் இன்னொரு வீதியும் சந்திக்கும் மூலையில். வலது பக்கமாக 200 மீற்றர் போனால் காமினி மகா வித்தியாலயம். ஒரு தொகை வன்னி சகோதர சகோதரிகள் அங்கு தான் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். இடது பக்கமாக 200 மீற்றரில் இணைய மேயும் இடம்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில வச்சாலும் அதின்ர புத்தி மாறுமோ???
அங்க போனதும் இணைய மேயும் இடத்துக்கு போறத பழக்கமாக்கிற்றன்.

ஒருநாள் போய் அவுஸ்ரேலிய தென்னாபிரிக்கா 4ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளின் ஹைலைட்ஸை (தமிழ்ல என்னெண்டு சொல்றது?) பாத்திற்று வலைப்பூக்கள எல்லாம் மேஞ்சிற்று தற்செயலா நேரத்தப் பா......த்த்தத்தன். 7.45... அடப்படுபாவி வவுனியாவில ஊரடங்கு சட்டமெதுவும் இருக்குமோ தெரியாது எண்டு நமக்கு இருக்கிற கொஞ்ச மூளையும் (கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றன்... இருக்கு...)  நம்மள மேலும் குழப்பி விட்டிற்று. சரியெண்டு கடையில இருந்து வெளில வந்தன்.
வெந்த புண்ணில வேல் அல்லது சிலுவை பாய்ச்சிறது போல வாசலில ஒரு ஆமி மாமா... ஈரக்குலை நடுங்கிறதெண்டா என்னெண்டு அண்டைக்கு தான் தெரியும். குருவி படத்தில 'கோச்சா' எண்ட பெயர கேட்டோண்ண மலேசியாவில ஒருத்தன் நடனம் ஆடுறத யோசிச்சு பாருங்க...
டேய் யார்றா அது... சைலன்ஸ்... அதான் எழுதிக்கிட்டிருக்கிறமுள்ள...
(5 நிமிடம் அமைதியா இருக்கிறன். நீங்களும் 5 நிமிடம் பேசாம இருங்கோ...)

என்ர புண்ணியத்தில அவன் ஒண்டுமெ கேக்கேல... என்னால் 'என்' செயல்... (நான்........கடவுள்...!!!)

நானும் தப்பினமெண்டு நினைச்ச்ச்ச்ச்ச்ச்ச்சன்..... ஒரு பத்து அடி எடுத்து வச்சிருப்பன்... மொத்தம் மூணு பேரு... தங்களால எவ்வளவு முடியுமொ அந்தளவு பாரங்கள முதுகில வச்சுக் கொண்டு கையில சுடுற சாமானையும் ('தோசைக் கல்'லா எண்டு கேக்கிறதுக்கு உதை விழும்... ரொம்பத்தான் நக்கல்...) வச்சுக் கொண்டு நிண்டாங்க. ஒரு முதியவர சோதனை செய்த கொண்டு இருந்தார்கள். வயசு போன ஆளுக்கே சோதனை எண்டா... நமக்கு...???
நாம என்ன தான் அப்பாவி எண்டாலும் 200 கிலோகிறாம் நிறை, 180 சதம மீற்றரில இருக்கிற ஒருத்தன பாத்து யாருமே அப்பாவி எண்டு நம்ப மாட்டாங்க எண்டு எனக்குத் தெரியும். அதுவும் தாடியோட...!!!
அடையாள அட்டை பொக்கற்ல தொட்டுப் பாத்தன்... இருக்கு... காவல்துறை பதிவுத் துண்டு (அதாங்க பொலிஸ் றிப்போட்) இருக்குமோ எண்டு ஒரு சந்தேகம்... பயந்த கொண்டு கிட்ட போக அவங்க எங்கயோ வாய் பாக்க நான் ஓடி வீட்ட போய்ற்றன்...

கதையும் முடிஞ்சு கத்தரிக்காக் கறியும் முடிஞ்சு... ஓடுங்கோ....

மைதானத்தில் 80,000 இரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்க எதிரில் பந்துவீச்சாளர் ஓடிவர துடுப்பெடுத்தாடுவது என்பது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பமல்ல.
கடந்த ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய வீரர்கள் பணத்தை விட இந்த அனுபவத்தை விரும்பினார்களாம். (நம்பிற்றம்)
பெருந்தொகைப் பணத்தோடு உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த வீரர்களோடு ஒரே அணியில் விளையாடும் அனுபவம் போன்றவற்றால் ஐ.பி.எல் போட்டிகளை வீரர்கள் பெரிதும் விரும்பிளர். இரசிகர்கள் அதைவிட ஒருபடி மேலே போய் ஐ.பி.எல் மேல் வெறியாக இருந்தார்கள்.
ஐ.சி.எல் போட்டிகளை புறக்கணித்த அல்லது பெரிதாக முக்கியத்துவம் தராத ஊடகங்கள் ஐ.பி.எல் ஐ தூக்கிக் கொண்டாடின.
ஒரே மாதத்தில் லலித் மோடி என்பவர் உலகம் முழுவதுக்கும் பரிச்சயமானார்.

முதலாவது சுற்றுத் தொடரே இவ்வளவு வெற்றி பெற இரண்டாவது தொடரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே சர்ச்சைகளால் உலகெங்கும் முக்கிய பேசு பொருளாக மாறியது ஐ.பி.எல்.
ராஜஸ்தான் கிரிக்கெட் சபையில் லலித் மோடி பண மோசடி செய்ததாக முதலில் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன். பின்னர் அந்தக் குற்றச் சாட்டுக்களை மறைக்க ராஜஸ்தானிலிருந்து போட்டிகளை பாதுகாப்புக் காரணம் காட்டி லலித் மோடி குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.
எல்லாவற்றையும் தாண்டி தேர்தல்கள் காரணமாக பாதுகாப்புக் காரணங்களுக்காக போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது கேள்விக்குரியதாகியது. போட்டிகள் தென்னாபிரிக்காவிற்கு மாற்றப்படலாம் என ஊகங்கள் அல்லது வதந்திகள் (ஐ.பி.எல் அதிகாரிகளின் அப்போதைய வார்த்தை) வெளியாகின். இவற்றை ஒட்டுமொத்தமாக மறுத்தார் லலித் மோடி.
எனினும் இறுதியில் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்றும் இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வழமை போல போட்டிகளை இலங்கையில் நடத்த தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு தங்கள் மூக்கை தாங்களே உடைத்துக் கொண்டது இலங்கை கிறிக்கெற் சபை. ஐ.பி.எல் ஐ எந்த தைரியத்தில் இலங்கையில் நடாத்துவதற்கு கேட்டார்கள் எனப் புரியவில்லை. இரண்டே இரண்டு மின்னொளி கொண்ட மைதானங்கள்... ஒன்று அடிக்கடி பழுதடையும் மின்னொளி தொகதியைக் கொண்டது. இரண்டிலும் கழிவறைகள் கூட ஒழுங்கில்லை. சரி இவர்களை விடுவோம்.

லக்ஸ்மன், ட்ராவிட் அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டமை பொன்றன சர்ச்சைகளாக மாறின.
ஜோன் புச்சானனின் பல அணித்தலைவர்கள் சிந்தனை, பின்னர் கங்குலி அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டமை, ஷாருக்கான் கவாஸ்கரை மரியாதையின்றி கதைத்தமை தொடர்பில் சர்ச்சை எழ ஷாருக்கான் மன்னிப்புக் கோரினார். கவாஸ்கரை எனக்கு பெரிதாக பிடிக்காது என்றாலும் அவர் ஓர் தலைசிறந்த வீரர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரை கரிக்கெற் சம்பந்தமான ஓர் கூற்றுக்காக ஓர் நடிகர் எதிர்ப்பது லலித் மோடியின் அரண்மனையில் மட்டுமே நடைபெறும்.

பின்னர் தென்னாபிக்கா தெரிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது நடைபெற இருப்பதாலும், உள்ளூர் போட்டிகள் பாதிப்படையும் என்பதாலும் அங்கே ஐ.பி.எல் நடைபெற சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்த போதிலும் இறுதியாக தெரிவி்க்கப்பட்ட பாரணம் காலநிலை. இங்கிலாந்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் தென்னாபிரிக்கா வாய்ப்பைப் பெற்றது.
தென்னாபிரிக்காவில் கோடை காலம் என்ற போதிலும் மழை பெய்யாது என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களும் வழங்கப்பட முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் தொடர்ந்து மழை குழப்பி வருவது ஒரு சலிப்பைத் தருகிறது.

அடுத்ததாக இருபதுக்கு இருபது போட்டிகளில் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் விளாசியடிக்கப்படும் ஆறு ஓட்டங்களைப் பார்ப்பதற்கே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
இருபதுக்கு இருபது போட்டிகளில் 130 ஓட்டங்களை பெற்றுவிட்டு அந்த அணி இலகுவாக வெற்றி பெறுவது ஐ.பி.எல் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.

எனக்குப் பிடித்த முரளி, சனத், லசித்த மலிங்க, வோன் உட்பட பலர் பந்துவீச்சில் பிரகாசித்தாலும் ஐ.பி.எல் போட்டிகள் சுவாரசியத்ததை பெரிதளவில் ஏற்படுத்தாதது உண்மையே.
அதற்கு 10 பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் விடப்படும் 7.5 நிமிட இடைவெளியும் ஓர் காரணம். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் ஓர் துடுப்பாட்ட வீரரும் அந்த 7.5 நிமிட இடைவெளியின் பின்னர் தன்னை மீண்டும் தயார்படுத்த (coming back to momentum என்பார்கள்) சிறிது நேரம் எடுக்க ஐ.பி.எல் 2009 போட்டிகள் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிக்கும் போட்டிகளாக மாறுவது என்பது உண்மையே.
கடந்த முறை ஆரம்பத்தில் 200 ஓட்டங்கள் எல்லாம் இலகுவாக பெறப்பட பிற்பாதியில் 150 ஓட்டங்களும் ஓரளவு போதுமான நிலை காணப்பட்டது. ஆடுகளம் தொடர்ந்து பாவிக்கப்பட இப்படியான நிலை ஏற்படும்.
ஆனால் இம்முறை 150 ஓட்டங்களே போதும் என்றால் பிற்பாதியில் 100 ஓட்டங்கள் போதுமோ???
வாழ்க லலித் மோடியும் அவர்தம் வியாபாரப் புத்தியும்...

மெளனத்தைப் பற்றி ஆயிரம் ஆயிரம் கவிதை சொல்கிறார்கள்...
ஆனால் உன் மெளனத்தை என்னால் இரசிக்க முடியவில்லை...
என் மரணத்தின் வாசலின் திறப்பு தான் உன் மெளனம்...

இணையத்தளமொன்றில் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் எது என்று ஓர் உரையாடல் பகுதியொன்றைவாசிக்கக் கிடைத்தது.
அதில் ஓர் நண்பர் எழுதியிருந்த விடயம் சிறிது வித்தியாசமாக தென்பட்டது.
மொழிமாற்றம் செய்து தருகிறேன்.

'12-05-2008. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் காதலி என்னை விட்டு பிரிந்த நாள். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனது முழுக்க வலி. இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ஒரு வாரமாக என்னால் உணவைத் தொடமுடியவில்லை. இறந்து விடலாம் போல இருந்தது. ஆனால் அந்த 12-05-2008 என்ற நாளால் தான், அந்த சம்பவத்தால் தான் இப்பொழுது நான் எந்தக் கஷ்டங்களும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன். அதனால் அந்த நாள் என் வாழ்வில் மிகவும் முக்கியமானது.'

இணையத்தளமொன்றை மேய்ந்து கொண்டிருக்கும் போது வாசித்த ஓர் 'சொந்தக் கதை! சோகக் கதை'.
குறிப்பிட்ட இணையத்தளத்தை மறந்து விட்டேன். தெரிந்திருந்தால் ஆதாரம் என அந்த இணையத்தளத்தை குறிப்பிட்டிருப்பேன்.
இதோ அந்த 'சொந்தக் கதை! சோகக் கதை'.
குறிப்பு: ஆங்கிலத்தில் இருந்ததை தமிழிற்கு மொழி மாற்றம் செய்தேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அந்த நபர் சொல்வதாகவே கதை தொடர்கிறது.
இதோ...

நான் ஒரு பெண்ணை உண்மையாக நேசித்துக் கொண்டிருந்தேன். அந்த விடயம் அவள் வீட்டிற்கு தெரியவர அவர்களும் பெரியளவில் எதிர்ப்பின்றி திருமணத்திற்க ஏற்றுக் கொண்டார்கள். திருமண நாளும் குறிக்கப்பட்டது.
திருமணத்திற்கு உடைகள் வாங்குவதைப் பற்றி கதைப்பதற்காக அவளின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் வீடு வெறுமையாக இருந்தது. நான் உரிமையோடு உள்ளே சென்றேன். அங்கே எனது காதலியின் தங்கை மாத்திரம் இருந்தாள்.
குடும்பத்தினர் எல்லோரும் கோயிலுக்கு சென்றிருப்பதாகவும் என்னை காத்திருக்கும் படியும் சொன்னாள்.
நானும் சரி என்றுவிட்டு சோபாவில் அமர்ந்தேன். அவள் (காதலியின் தங்கை) என்னருகே வந்து 'அத்தான்! நீங்கள் இன்னும் சில நாட்களில் அக்காவை மணம் புரிய போகிறீர்கள். ஆனால் அதற்கு முன்னரே நான் உங்களோடு வாழ விரும்புகிறேன். ஒருமுறையாவது' என்றாள். அவள் அழகானவள் தான், அவள் மீது எனக்கு ஒரு கண் இருந்தாலும் நான் எனது காதலியை உண்மையாக காதலித்ததால் என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. நான் உடனே 'வேண்டாம். அது உன் அக்காவிற்கு செய்யும் துரோகம்' என்றேன். அவளோ விடுவதாக இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஒரு முடிவு எடுத்தவனாக நான் உடனே வீட்டிலிருந்து எனது காரை நோக்கி வேகமாக சென்றேன்.
அந்தக் கணத்தில் வீட்டிற்கு வெளியேயிருந்து எனது மாமனார் ஓடி வந்து என்னை கட்டியணைத்துவிட்டு 'எங்கள் சோதனையில் நீங்கள் தேறிவிட்டீர்கள். உங்களை விட வேறு ஒரு உண்மையான கணவனை என் மகள் அடைய முடியாது' என்றார்.
நானோ அவர் அணைப்பில் நசுங்கிக் கொண்டிருந்தேன்.
ஆகவே தோழர்களே! நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை இது தான்.
'உங்கள் ஆணுறைகளை எப்பொழுதும் கார்களிலேயே வைத்திருங்கள். சட்டைப் பையில் அல்ல'.

இது தான் அந்தக் கதை.
அந்த அறிவுரையை கவனமாகப் படியுங்கள்.

நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் பூ முகம் கண்முன்னே வருகிறது...
உன் பூ முகம் மறக்க நினக்கிறேன்,
நம் காதல் கண் முன்னே வருகிறது...
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண் முன்னே வருகிறது...
 

 *****************************************************

எதிர்காலத்தை அறிய சோதிடனிடம் சென்றேன் அவளோடு,
24 வயதில் உனக்கு காதல் மணம் என்றால் அவளிடம்...
படுபாவி! யாருடன் என்பதை சொல்ல மறந்து விட்டான்...

*****************************************************

இலங்கைத் தேயிலை இட்ட
தேநீரை உறிஞ்சிக் குடிக்கையில்
நினைவில் கொள்ளுங்கள்...
நீங்கள் உறிஞ்சிக் குடிப்பது தேநீர் மட்டுமல்ல...
ஏழைகளின் இரத்தத்தையும் தான்...

கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன், இது சுட்டது தான்...

நன்றி slcricket.com