க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இணையத்தளமொன்றை மேய்ந்து கொண்டிருக்கும் போது வாசித்த ஓர் 'சொந்தக் கதை! சோகக் கதை'.
குறிப்பிட்ட இணையத்தளத்தை மறந்து விட்டேன். தெரிந்திருந்தால் ஆதாரம் என அந்த இணையத்தளத்தை குறிப்பிட்டிருப்பேன்.
இதோ அந்த 'சொந்தக் கதை! சோகக் கதை'.
குறிப்பு: ஆங்கிலத்தில் இருந்ததை தமிழிற்கு மொழி மாற்றம் செய்தேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அந்த நபர் சொல்வதாகவே கதை தொடர்கிறது.
இதோ...

நான் ஒரு பெண்ணை உண்மையாக நேசித்துக் கொண்டிருந்தேன். அந்த விடயம் அவள் வீட்டிற்கு தெரியவர அவர்களும் பெரியளவில் எதிர்ப்பின்றி திருமணத்திற்க ஏற்றுக் கொண்டார்கள். திருமண நாளும் குறிக்கப்பட்டது.
திருமணத்திற்கு உடைகள் வாங்குவதைப் பற்றி கதைப்பதற்காக அவளின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் வீடு வெறுமையாக இருந்தது. நான் உரிமையோடு உள்ளே சென்றேன். அங்கே எனது காதலியின் தங்கை மாத்திரம் இருந்தாள்.
குடும்பத்தினர் எல்லோரும் கோயிலுக்கு சென்றிருப்பதாகவும் என்னை காத்திருக்கும் படியும் சொன்னாள்.
நானும் சரி என்றுவிட்டு சோபாவில் அமர்ந்தேன். அவள் (காதலியின் தங்கை) என்னருகே வந்து 'அத்தான்! நீங்கள் இன்னும் சில நாட்களில் அக்காவை மணம் புரிய போகிறீர்கள். ஆனால் அதற்கு முன்னரே நான் உங்களோடு வாழ விரும்புகிறேன். ஒருமுறையாவது' என்றாள். அவள் அழகானவள் தான், அவள் மீது எனக்கு ஒரு கண் இருந்தாலும் நான் எனது காதலியை உண்மையாக காதலித்ததால் என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. நான் உடனே 'வேண்டாம். அது உன் அக்காவிற்கு செய்யும் துரோகம்' என்றேன். அவளோ விடுவதாக இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஒரு முடிவு எடுத்தவனாக நான் உடனே வீட்டிலிருந்து எனது காரை நோக்கி வேகமாக சென்றேன்.
அந்தக் கணத்தில் வீட்டிற்கு வெளியேயிருந்து எனது மாமனார் ஓடி வந்து என்னை கட்டியணைத்துவிட்டு 'எங்கள் சோதனையில் நீங்கள் தேறிவிட்டீர்கள். உங்களை விட வேறு ஒரு உண்மையான கணவனை என் மகள் அடைய முடியாது' என்றார்.
நானோ அவர் அணைப்பில் நசுங்கிக் கொண்டிருந்தேன்.
ஆகவே தோழர்களே! நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை இது தான்.
'உங்கள் ஆணுறைகளை எப்பொழுதும் கார்களிலேயே வைத்திருங்கள். சட்டைப் பையில் அல்ல'.

இது தான் அந்தக் கதை.
அந்த அறிவுரையை கவனமாகப் படியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: