க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மறத்தமிழர்கள் ஏன் தீவிரவாதிகளாக மாறமுடியாது என்றும், மறத்தமிழர்களால் ஏன் ஒரு விமானத்தைக் கடத்த முடியாது என்றும் தெரியுமா?


(இது முற்றுமுழுதான நகைச்சுவைக்காக மட்டுமே. எந்தவித அரசியல், இன கேவலப்படுத்தலும் கிடையாது)


1. நாம் எப்போதுமே பிந்தித் தான் செயற்படுவோம். அதனால் கடத்த நினைத்த விமானத்தை அல்ல அதற்கு பிறகு சென்ற 10 விமானங்களையும் தவறவிட்டுவிடுவோம்.


2. எப்போதுமே நாம் சத்தமாகவே கதைப்போம். அதனால் விமானநிலையத்திலேயே நாம் கடத்தப்போகும் விடயம் தெரியவந்துவிடும்.


3. விமானத்தில் இருக்கும் இலவச உணவு, சிற்றுண்டிகளைப் பார்த்ததும் நாம் ஏன் விமானத்துக்குள் வந்தோம் என்பதை மறந்து இலவசங்களை ஒருபிடி பிடிப்போம்.


4. எமக்கு கையை நீட்டி, அசைத்து கதைத்தே பழக்கம். எனவே கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே தவறவிட்டுவிடுவோம்.


5. எங்களுக்கு விமானத்தில் பறப்பதென்றால் ஓர் ஆசை. விமானத்தில் ஏறியவுடனேயே நாம் விமானத்தை கடத்தும் திட்டத்தை கைவிட்டு அப்படீயே விமானத்தில் பறந்து எங்கேயாவது வெளிநாட்டுக்கு போய்விடுவோம்.


6. விமானத்துக்குள் விவாதங்கள் செய்து சண்டை ஒன்றை நமக்குள்ளேயே தொடங்கி நம்மை நாமே காட்டிக் கொடுப்போம்.


7. எங்களால் இரகசியங்களை காப்பாற்ற முடியாது.
விமானம் கடத்த 1 வாரத்திற்கு மன்னரே ஊரெல்லாம் அதை எப்படியாவத பரப்பி சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வோம்.


8. எங்கள் விமானக்கடத்தல் திட்டத்தை கிறிக்கெற் போட்டிகளைப் பார்க்கும் ஆவலால் தள்ளிப்போட்டுக் கொண்டெ செல்வோம்.


9. நாம் பணயக்கைதியாகப் பிடித்த ஒருவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அடிபட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வோம்.

22 பின்னூட்டங்கள்:

நாங்கள் நாங்கள் என கூறுவது என்னையும் சேர்த்துதானட என்றால், நான் அப்படியில்லை.

நாங்கள்ளாம் ஊருல ஓடுற ட்ரெயினையே ஒரு கையால புடிச்சி நிப்பாட்டுனவங்க. அதுவும் லெப்ட் ஹேண்டல தெரியுமுல்ல.

சரியாகச் சொன்னீங்கள்
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி

உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது? மறத்தமிழன் நீங்க சொன்ன மற்றதெல்லாம் செய்றாங்களோ இல்லையோ பேசி பேசியே காலத்தை கடத்திடுறான் இதோ நம்மல போலத் தான்

இங்கு நம்மலனு சொன்னது என்னையும் உங்களையும் தான்

வாழ்த்துக்கள்
ரசித்தேன்

விமானத்தில் தரப்படும் உணவுகளுக்காக அடிபடுவோம்.
ம்ம் மறத்தமிழர்கள் கோபிக்கபோகின்றார்கள், கவனம்.

ஆகா என்ன பிரமாதம். வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவருக்கு...

கற்பனை நல்லாயிருக்கு. தொடருங்கோ.


** விமானத்த கடத்துறதால கிடைக்கிற பணம் கனவுல உறுத்திட்டேயிருக்கும். அதனால கடத்துறதுக்கு முன்னதாவே ஒருத்தர ஒருத்தர் காட்டிக்கொடுத்திட்டு கடைசியில வெறுங் கையோட வானத்த பார்த்திட்டு இருப்போம்.

** விமானப் பணிப்பெண்களின் அழகைப் பார்த்து வழிஞ்சு வழிஞ்சு கதைச்சு உண்மையை கக்கிடுவோம்.

இது எப்படி?

அப்போ தமிழர்கள் தீவிரவாதிகள் என்று சொல்றாங்களே...

நச்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்...

சாப்பாட்டு மேட்டர் சூப்பர்.

//நாங்கள்ளாம் ஊருல ஓடுற ட்ரெயினையே ஒரு கையால புடிச்சி நிப்பாட்டுனவங்க. அதுவும் லெப்ட் ஹேண்டல தெரியுமுல்ல.
//

செயினைப் பிடிச்சு இருத்திருப்பீங்க. LOL

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

நாங்கள் நாங்கள் என கூறுவது என்னையும் சேர்த்துதானட என்றால், நான் அப்படியில்லை.

நாங்கள்ளாம் ஊருல ஓடுற ட்ரெயினையே ஒரு கையால புடிச்சி நிப்பாட்டுனவங்க. அதுவும் லெப்ட் ஹேண்டல தெரியுமுல்ல. //

ஆகா... அடடே... பாருங்களன்...

உங்களப் போல ஒராளத் தான் தேடிக் கொண்டு திரிஞ்சன்...
கிட்டியில அண்டப் புழுகர், ஆகாசப் புழுகர் போட்டி நடக்கப் போகுதாம்...
விண்ணப்பம் போடுங்கோ...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ்...

//suba கூறியது...

சரியாகச் சொன்னீங்கள்
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி //

இது பணியா... இது சும்மா மற்றவர்களை அலுப்பேத்துற விஷயம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//suba கூறியது...

சரியாகச் சொன்னீங்கள்
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி //

இது பணியா... இது சும்மா மற்றவர்களை அலுப்பேத்துற விஷயம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...

உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது? மறத்தமிழன் நீங்க சொன்ன மற்றதெல்லாம் செய்றாங்களோ இல்லையோ பேசி பேசியே காலத்தை கடத்திடுறான் இதோ நம்மல போலத் தான்

இங்கு நம்மலனு சொன்னது என்னையும் உங்களையும் தான்

வாழ்த்துக்கள்
ரசித்தேன் //

நான் எப்பயுமே பொதுப்படையில தான் கதைப்பன்... எப்பவுமே வெட்டிப்பசங்க சங்கத்தில நானும் உறுப்பினர் தான்...
நீங்க நம்மள எண்டு சொன்னா சந்தோஷம் தான்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

// வந்தியத்தேவன் கூறியது...

விமானத்தில் தரப்படும் உணவுகளுக்காக அடிபடுவோம்.
ம்ம் மறத்தமிழர்கள் கோபிக்கபோகின்றார்கள், கவனம். //

நீங்க அப்ப அடிக்க மாட்டீங்களா?
அப்ப நீங்க மறத்தமிழர் இல்லையா?
(குழப்பம் ஏற்படுத்த அலைவோர் சங்கம். )

ம்...
கோபித்தால் தாங்குற அளவுக்கு சக்தி இருக்கு அண்ணா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// ilangan கூறியது...

ஆகா என்ன பிரமாதம். வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவருக்கு... //

அடடே...
நன்றி நண்பா வாழ்த்துக்களுக்கு...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

// இறக்குவானை நிர்ஷன் கூறியது...

கற்பனை நல்லாயிருக்கு. தொடருங்கோ. //
தொடர்ந்திட்டாப் போச்சு...// ** விமானத்த கடத்துறதால கிடைக்கிற பணம் கனவுல உறுத்திட்டேயிருக்கும். அதனால கடத்துறதுக்கு முன்னதாவே ஒருத்தர ஒருத்தர் காட்டிக்கொடுத்திட்டு கடைசியில வெறுங் கையோட வானத்த பார்த்திட்டு இருப்போம்.

** விமானப் பணிப்பெண்களின் அழகைப் பார்த்து வழிஞ்சு வழிஞ்சு கதைச்சு உண்மையை கக்கிடுவோம்.

இது எப்படி? //

ஆகா...
எனக்கெதிரா புதுக்கட்சி தொடங்கிற்றாங்கய்யா எனக்கு ஆப்பு வைக்கிறதுக்கு... ஹி ஹி...

உங்கள் கற்பனையும் அருமை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// சந்ரு கூறியது...

அப்போ தமிழர்கள் தீவிரவாதிகள் என்று சொல்றாங்களே... //

அவங்களுக்கு விளக்கம் போதாது...
பொடிப்பசங்க...
தமிழங்க எப்பிடி... முடியாது முடியாது...
(அரசியல் எதுவும் இல்லை. சும்மா நகைச்சுவை... யாரும் வந்து கும்மக் கூடாது...)

//சந்ரு கூறியது...

நச்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்... //

வாழ்த்துக்களுக்கம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

//Subankan கூறியது...

சாப்பாட்டு மேட்டர் சூப்பர். //

எனக்குப் பிடிச்ச விஷயமாச்சே சாப்பாடு...!!! ஹி ஹி ஹி...

//நாங்கள்ளாம் ஊருல ஓடுற ட்ரெயினையே ஒரு கையால புடிச்சி நிப்பாட்டுனவங்க. அதுவும் லெப்ட் ஹேண்டல தெரியுமுல்ல.
//

செயினைப் பிடிச்சு இருத்திருப்பீங்க. LOL //

எப்பிடி இப்பிடி திறந்த புத்தகமா இருக்கிறீஞ்க???

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

@ தமிழினி...

ஏற்கனவே உறுப்பினர் தான்..
ஆனால் இன்று தமிழ்ப் பிரிவு வேலை செய்யவில்லை எனக்கு...

வருகைக்கு நன்றி...