க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...




Posted by Picasa

நம் காதல் தண்டவாளம் போன்றதென்றாய்…
பிரிய மாட்டோம் என்கிறாய் என்று நினைத்தேன், ஆனால்…
இப்போது தான் புரிந்தது…
சேர மாட்டோம் என்றாய் என்று.

நம்மிடையே ஓர் மனம் தான் உண்டு என்றாய்... இரு மனம் ஒரு மனம் ஆகி விட்டதென்று நினைத்தேன்... இப்போது தான் புரிகிறது, உனக்கு மனமே இல்லையென்று சொன்னாய் என்று...


மம என்பது சிங்களச் சொல்லா?
மம என்பதற்கு தூய தமிழில் 'என்னுடையது' என்று அர்த்தம்.
அதற்கான ஆதாரம் வேண்டுவோர் 'தமிழ்-தமிழ்' அகராதியை பார்க்கவும்.

மனம் வருந்துதடி…
என் மனம் வருந்துதடி…
புனிதமான நட்பை கூட கள்ளத்தனமாய்
களவாக செய்கிறோம்…

நான் ஆண், நீ பெண் என்பது
சமூகத்திற்கடி, நட்புக்கு அல்ல…
ஆனாலும் தறிகெட்ட சமூகத்திற்கு
அஞ்சுகிறோம், மறைக்கின்றோம் எமது நட்பை…

என் வாழ்நாள் முழுதும் உனக்கென தந்தேன்
உன் வாழ்நாளை எடுத்துக் கொண்டு…
காதலை மதிக்கும் இந்த சமூகம்
நட்பை மட்டும் மிதிப்பதென்னடி…?

இதற்கெல்லாம் அஞ்ச நானொன்றும்
மூடன் இல்லையடி…
என் இதயத்தில் வீரப்பெண்
உன்னையமல்லவா தாங்குகிறேன்…

உன்னிடம் தந்துவிட எதுவுமே என்னிடமில்லை...
என் உயிரைத் தவிர...
ஆனாலும் என் மனம் துடிக்கிறது…
இதயம் கூட சொல்கிறது…

நட்பிற்கு இலக்கணம் ஏதும் இல்லை,
அன்பு செலுத்துவதை தவிர…
என்னிடம் இருக்கும் அன்பையெல்லாம்
கைமாற்றாய் தருகிறேன், திருப்பி தருவாய் என…

நீ கூட கொமர்ஷல் வங்கி தான்
நான் தருவதையெல்லாம் வட்டியோடு தருகிறாய்…
கேட்காத போதெல்லாம் வட்டியை உயர்த்தி
இருமடங்காய் அன்பை தருகிறாய்…

நீ கூட பயங்கரவாதி தான்…
உன் அன்பு எனும் ஆட்லறியால் என்
இதயம் எனும் “பங்கர்”ஐ கைப்பற்றி
சர்வாதிகாரம் புரிகிறாய்…

கவிதைக்கு இலக்கணம் கம்பராய் இருக்கலாம்
நட்புக்கு நீதானே இலக்கணம்…
பழகப் பழக பால் வேண்டுமானால் புளிக்கலாம்
நட்பு இனிக்கிறது, தெவிட்டுகிறது…

மேலும் மேலும் சொல்ல அன்பு இருக்கிறது
ஆனால் வார்த்தை இல்லை
உன் அன்பிலே ஊறி நனைந்து விட்டேன்
தொடர்ந்து நனைகிறேன்…

தமிழுக்கு அமுதென்று பெயர்.(?)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதொன்று அறியேன் என்றார் ‘பாரதி பித்தன்’ பாரதிதாசன்.
இதே கருத்தை இன்றைய (பெரும்பாலான) தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடமும், சினிமா தயாரிப்பாளர்களிடமும் சொல்லி பாருங்கள். அவர்கள் சொல்வார்கள், “.Bharathithasan doesn’t know the English language. That’s why he said like that. (பாரதிதாசனுக்கு ஆங்கில மொழி தெரியாது. அதனால் தான் அப்படி சொன்னார்)” என்று. நீங்கள் ‘மன்டாரின்’ மொழியில் ஏதாவது கேட்டால் கூட அவர்களுக்கு விளங்கினாலென்ன, விளங்காவிட்டாலென்ன அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் சிறிது கலந்த ஆங்கிலத்தில் தான் விடையளிப்பார்கள் போலும். (கவனிக்கவும்! ஆங்கிலம் கலந்த தமிழ் வேறு, தமிழ் கலந்த ஆங்கிலம் என்பது வேறு.)
நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் என்ற பெயரில் கிழிந்த அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என்றால் அவர்களுக்கு அளவாக அமைய கூடிய ஆடைகளை அனுசரனையாளர்களின் அனுசரனையோடு அணிந்து கொண்டு வந்து தமிழுக்கு இவர்கள் செய்கின்ற கொடுமைகள்! சொல்லி அடங்கா!
(இவர்களின் உடைகளுக்கு அனுசரனையாளர்கள் வேறு!)
வணக்கம் and welcome to அசத்தப்போவது யாரு.
அடுத்ததாக வந்து அசத்த போறவர் Mr.கண்ணன்.
Please welcome him on stage please.
Let us have a short commercial break.
Welcome back after the short commercial break.
இன்றைக்கு எங்கட show அ நேரில பார்த்து enjoy பண்ணினீங்க. எப்பிடி feel பண்றீங்க?
இப்படி பல பல தமிழ் கொலைகள்.
மேற்படி ஆங்கில சொற்களுக்கு பிரதியீட்டு தமிழ் சொற்கள் இல்லையா? தெரியாவிட்டால் தமிழகத்திலேயே பல தமிழ் விசுவாசிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழில் கதைப்பதை பெருமையாக நினைக்கும் தொகுப்பாளினிகள் எமக்கு வேண்டும் என்று கேட்கும் நிகழ்ச்சி இயக்குனர்கள் எமக்கு வேண்டும்.
வணக்கம்! அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.
அடுத்ததாக வந்து அசத்த போகின்றவர் திரு.கண்ணன். அவரை அன்புடன் வரவேற்போம்.
ஒரு சிறிய விளம்பர இடைவேளையின் பின்னர் மீண்டும் சந்திப்போம்.
விளம்பர இடைவேளையின் பின்னர் வரவேற்கிறோம்.
எங்கள் நிகழ்ச்சியை இன்றைக்கு நேரில் பார்த்து இரசித்தீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?
(சுத்த தமிழில் மட்டும் கதைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை அல்ல.)
இவ்வாறு கதைப்பதால் தங்கள் நிகழ்ச்சியின் தரம் குறைந்து விடும் என்று நினைக்கிறார்களா?
இது இவ்வாறு என்றால் ‘Grand master’ நிகழ்ச்சியில் இலங்கை தமிழிச்சி அணியும் வட இந்திய சாயலான உடைகளும், அவரின் தமிழ் உச்சரிப்புக்களும். இலங்கையில் சேலைகளை அப்பெண்மணிக்கு வழங்க அனுசரனையாளர்கள் யாருமே இல்லையா
திறமை இருந்தும் அவை அடிபட்டுப் போகும்படி இவர்கள் செயற்பட கூடாது என்பதே எமது கோரிக்கை. யாரையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல.
ஆங்கிலம் என்பது இன்றைய நிலையில் அத்தியாவசியம் என்ற உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் அதற்காக தமிழை கொச்சைப் படுத்துவது போல தமிழ் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது பிழை என்பதே எமது கருத்து.
தமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது.