க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மக்கள் ஏன் என்னை நேசிக்கிறார்கள்- டெரல் ஹெயார்.

வேகமாக துடுப்பெடுத்தாடுவது எப்படி- ராகுல் ட்ராவிட்

எல்லைக்கோட்டில் வினைத்திறனான பந்து தடுக்கும் முறை- மொன்ரி பனசர். (முன்னுரை அஜந்த மென்டிஸ்)

இறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- இந்திய அணி

அரையிறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- தென்னாபிரிக்க அணி.

உடல் தகுதியுடன் இருப்பது எப்படி- இன்ஸமாம் மற்றும் அக்தர். (முன்னுரை அர்ஜீன ரணதுங்க)

சொந்த நாட்டுக்காக விளையாடுவது எப்படி- கெவின் பீற்றர்சன் (முன்னுரை பிரன்டன் நாஷ்)

உலகக் கிண்ண போட்டியை ஒழுங்குபடுத்துவது எப்படி- சர்வதேச கிறிக்கெற் சபை.

துடுப்பெடுத்தாடுதலின் அழகு - முத்தையா முரளிதரன்

விளையாட்டில் நேர்மை - அவுஸ்ரேலிய அணி

நானும் என் மனைவியும் - ஷேன் வோர்ன்

சமிந்த வாஸ் ஐ எதிர்கொள்வது எப்படி - ஸ் ரீபன் பிளமிங்

ஸ்குவாஷ் பந்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி - கில்கிறிஸ்ற்

பால் குடிப்பதன் மகிமை - மகேந்திரசிங் டோனி

போதை மருந்துப் பாவனையின் பின்னர் சாட்டுப் போக்கு சொல்வது - அக்தர் மற்றும் அசிப் (முன்னுரை ஷேன் வோர்ன்)

முக்கால் கை கொண்ட ஷேர்ட் அணிவதன் நன்மை - ஹர்பஜன் சிங்

எனது கையில் உலகக் கிண்ணம் - ஹேர்ச்சில் கிப்ஸ்

நானும் எனது தந்தையும் - ஜெகன் முபாரக்

கைத்தொலைபேசியில் செய்திகள் அனுப்பும் கலை- ஷேன் வோர்ன்

நான், அம்மா, காயங்கள் மற்றும் மருந்துகள்- ஷேன் வோர்ன்

போட்டிகளில் முன்னரே முடிவு செய்வது எப்படி- முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்

13 பேர் ஓரணியில் விளையாடுவது எப்படி- றிக்கி பொன்ரிங்


மஹிந்த சிந்தனை...
வரி விதிக்கும் திட்டம் 2010.

நாட்டின் பொருளாதாரம் நடுவீதிக்கு வந்து விட்டதால் அடுத்த வருடத்திற்கான வரிவிதிப்புத் திட்டங்கள்.


ஒருவர் வரி விசாரணை செய்யப்படுகிறார்.
விசாரிப்பவர் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ர ஆலோசகருமான திரு.பஷில் ராஜபக்ஷ.
(இவர் ஜனாதிபதியின்ர சகோதரர் எண்டு நான் சொல்லேல... சத்தியமா சொல்லேல...)

1) கேள்வி : என்ன செய்யிறாய்?

   பதில்  : வியாபாரம்.

   வரி   : வியாபார வரி கட்டு.


2) கேள்வி : என்ன வியாபாரம் செய்யிறாய்?

   பதில்  : சாமான் விற்கிறது.

   வரி   : விற்பனை வரி கட்டு.


3) கேள்வி : எங்கயிருந்து வியாபாரச் சாமான்கள வாங்கிறாய்?

   பதில்  : வெளிநாட்டிலயிருந்து.

   வரி   : பொது விற்பனை வரி, சுங்க வரி மற்றும் 'ஒக்ரோய் கட்டு. (Octroi)


4) கேள்வி : சாமான்கள விற்று என்ன கிடைக்குது உனக்கு?

   பதில்  : இலாபம்.

   வரி   : வருமான வரி கட்டு.


5) கேள்வி : இலாபத்த என்ன செய்யிறாய்?

   பதில்  : பங்குதாரருக்கு பிரிச்சு குடுக்கிறனான்

   வரி   : பங்கு வரி கட்டு.


6) கேள்வி : பொருட்களை எங்க உற்பத்தி செய்யிறாய்?

   பதில்  : தொழிற்சாலயில.

   வரி   : உள்நாட்டு உற்பத்தி வரி கட்டு.


7)கேள்வி : உனக்கு அலுவலகம், பண்டக சாலை, தொழிற்சாலை சொந்தமா இருக்கா?

   பதில்  : ஓம்.

   வரி   : மாநகர சபைக்கு வரி கட்டு. தீயணைப்பு வரி கட்டு.


8) கேள்வி : உனக்கு கீழ ஊழியர்கள் வேல செய்யிறாங்களா?

   பதில்  : ஓம்.
  
   வரி   : ஊழியர் சேவை வரி கட்டு.


9) கேள்வி : மில்லியன் கணக்கில வியாபாரம் செய்யிறியா?

   பதில்  : ஓம்.

   வரி   : பணப் புரழ்வு வரி கட்டு.


10)கேள்வி : வங்கியில இருந்து 1 இலட்சத்துக்கு மேல பணம் எடுப்பியா?

   பதில்  : ஓம்.

   வரி   : பண கையாளல் வரி கட்டு.


11)கேள்வி : ஊழியருக்கான சாப்பாட்ட எங்க வாங்கிறனீ?

   பதில்  : உணவு விடுதியில.

   வரி   : உணவு மற்றும் களியாட்ட வரி கட்டு.


12)கேள்வி : வியாபார விடயமாக வெளிநாட்டுக்குப் போறனியா?

   பதில்  : ஓம்.

   வரி   : வெளிநாடடு வியாபார வரி கட்டு.


13)கேள்வி : அரசாங்க சேவைகள பயன்படுத்திறியா?

   பதில்  : ஓம்.

   வரி   : சேவை வரி கட்டு.


14)கேள்வி : வியாபாரம் செய்ய முதல் எங்கயிருந்து கிடச்சது?

   பதில்  : பிறந்த நாள் பரிசா கிடச்சது.

   வரி   : நன்கொடை வரி கட்டு.


15)கேள்வி : ஏதாவது சொத்து இருக்குதா?

   பதில்  : ஓம்.

   வரி   : சொத்து வரி கட்டு.


16)கேள்வி : வியாபார உளைச்சல குறைக்க என்ன செய்யிறனீ?

   பதில்  : படம் பாக்க போவன்.

   வரி   : களியாட்ட வரி கட்டு.


17)கேள்வி : வீடு ஏதும் வாங்கினியா?

   பதில்  : ஓம்.

   வரி   : அஞ்சல் வரி, பதிவு வரி கட்டு.


18)கேள்வி : எப்பிடி பயணம் செய்யிறனீ?

   பதில்  : பேருந்து,

   வரி   : கூடுதல் கட்டணம் செலுத்து.


19)கேள்வி : பிள்ளைகள் படிக்கிறாங்களா?

   பதில்  : ஓம்.

   வரி   : கல்வி வரி, மேலதிக கல்வி வரி, உயர் கல்வி வரி கட்டு.


20)கேள்வி : முந்தி வரி ஏதும் கட்ட பிந்தினதா?

   பதில்  : ஓம்.

   வரி   : தண்டப்பணம் கட்டு, வட்டி கட்டு.


22)கேள்வி : ஏதும் கேக்க விரும்பிறியா???

   பதில்  :  ஓம். என்னால இவ்வளவும் வரியும் கட்ட ஏலாது. நான் சாகலாமா?

   வரி   :  பொறு. அண்ணாட்ட கேட்டு சொல்றன். அண்ணாக்கு ஈமச்சடங்கு வரி பற்றி ஒரு எண்ணம் இருக்கு.

எல்லா நாடுகளுக்கும் கடன் உண்டெனில் (உண்மை! அமெரிக்காவிற்கும் கடன் உண்டு.) பணமெல்லாம் எங்கே செல்கிறது.
(விசித்திரம்)

கால்நடைகளுக்கான உணவின் சுவை அதிகரிக்கப் பட்டால் அதை சுவைத்துப் பார்ப்பது யார்?
(ஒரு யோசனை கொடுக்கத் தான் தேவை)

ஒளிக்கு ஒரு வேகம் இருக்கெனில் இருளின் வேகம் என்ன?
(முட்டாள் தனம்)

விமானம் விபத்தைச் சந்திக்கும் போது விமானத்திலுள்ள கறுப்புப் பெட்டி சேதமடையாது எனில் கறுப்புப் பெட்டியாலேயே முழு விமானத்தையும் ஏன் செய்யக் கூடாது?
(மிக நல்ல யோசனை)

பதிப்புரிமைக்குரிய அடையாளத்திற்கான காப்புரிமை யாரிடம் உள்ளது?
(யாருக்கு தெரியும்?)

நீருக்கடியில் உங்களால் அழ முடியுமா?
(ஒரு முறை முயற்சி செய்கிறேன்)

பொதுவாக கடுமையாக வேலை செய்வதை நாய் போல உழைத்தல் என்கிறோம். ஆனால் நாய் பொதுவாக ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வு தானே எடுக்கிறது?
(வேறு எதையோ குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்)

தொலைபேசியிலும், கணிப்பானிலும் இலக்கங்கள் இலக்கத் தட்டில் ஒன்றுக் கொன்று வேறுமாதிரி இருக்கக் காரணம் என்ன?
(கடவுளுக்கு தான் தெரியும்)

மீனுக்கு எப்போதாவது தாகமெடுக்குமா?
(கேட்டுச் சொல்கிறேன்)

வட்ட வடிவிலான அறையின் மூலைப் பகுதியை கண்டுபிடிக்க உங்களால் முடியுமா?
(ஒற்றைக் கண்ணால்?)

மரங்களில் ஓய்வெடுக்கும் பறவைகள் நித்திரை செய்த பின்பும் ஏன் கீழே விழுவதில்லை?
(இன்று இரவு பார்க்கத் தான் வேண்டும்)

முதலில் வந்தது பழமா அல்லது ஒரேஞ் (செம்மஞ்சள்) வர்ணமா?
(வித்து)

சோளம் எண்ணை சோளத்திலிருந்து செய்யப்படுகிறது எனி்ல், மரக்கறி எண்ணெய் மரக்கறிகளிலிருந்து செய்யப்படுகிறது எனில் குழந்தை (Baby oil) எண்ணைய்???
(அபிப்பிராயம் இல்லை)

ஒருவருக்கு நினைவிழப்பு ஏற்படின் தனக்கு நினைவிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா?
(யாராவது உதவி செய்யவும்)

நீருக்கடியில் வைத்து பலூனை உடைக்க முடியுமா?
(ஆம். உங்களால் முடியும்.)

கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் 'buildING' என அழைக்கப்பட காரணம் என்ன?
(புதுமையாக இருக்கிறது என???)

நீங்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் வானொலியை இயக்கினால் உங்களால் வானொலியின் ஒலியைக் கேட்க முடியுமா?
(விஞ்ஞான ரீதியாக சிந்திக்க வேண்டி இருக்கிறது)

நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்களெனில் அந்த நேரத்தில் உங்கள் வாகன முகப்பு மின்விளக்கை ஒளிரச் செய்யின் என்ன நடக்கும்?

ஒருவர் நிலமொன்றை உரிமையாக வைத்திருப்பாராயின் பூமியின் அடிவரை அந்த நிலம் அவருக்கா சொந்தம்?
(இது நன்றாக இருக்கிறது)

பொதுவாக எல்லா கார்களுக்கும் வேகமானியில் 130 வரை காணப்படும். ஆனால் சட்டரீதியாக அந்தளவு வேகமாக செல்ல முடியாதே? பிறகேன்???
(முட்டாள் தனம். விதியை உடையுங்கள்)

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தடை என்றால் பெரும்பாலான மதுபான நிலையங்களில் வாகனத்தரிப்பிட வசதி காணப்பட காரணம் என்ன?
(அது தானே?)

ஒழுங்கான சிறுதுயில்கள் வயதடைதலை தடுக்கின்றன. முக்கியமாக நீங்கள் வாகனத்தைச் செலுத்துகையில் எடுப்பது.

ஒரு பிள்ளை உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெற்றோராவீர்கள். இரண்டு பிள்ளைகள் எனின் இருவருக்குமிடையில் நடுவராவீர்கள்.

திருமணம் என்பது ஒரு உறவு. அதில் ஒருவர் எப்போதுமே சரியாக இருப்பார். மற்றவர் கணவனாக இருப்பார்.

நாம் அனைவரும் வரிகளை புன்னகை கொண்டு செலுத்த வேண்டுமென நினைக்கிறேன். நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பணம் கேட்கிறார்கள்.

ஒரு குழந்தையின் அதிகப்படியான வளர்ச்சி ஏற்படும் காலமானது, பாடசாலைக்கு செல்ல நீங்கள் புதிய சீருடைகளை வாங்கிய பின் ஒரு மாதத்திற்குள் ஏற்படும்.

நீங்கள் யாருடன் வாழ விரும்புகிறீர்களோ அவரை மணப்பதை விட, யாரில்லாமல் உங்களால் வாழ முடியாதோ அவரையே மணவுங்கள். ஆனால் எதைச் செய்யினும் பிற்காலத்தில் வருத்தப்படத் தான் போகிறீர்கள்.

காதலை உங்களால் பணத்தைக் கொடுத்து வாங்க முடியாது. ஆனால் காதலிக்க தொடங்கிய பின் அதற்காக செலுத்துவீர்கள்.

வாக்களிக்காது விடுகின்ற நல்ல பிரஜைகளால் தான் பிழையானவர்கள் தேர்வாகிறார்கள்.

சோம்பல் என்பது வேறொன்றுமில்லை. களைப்படைய முன்னரே நாம் எடுக்கும் ஓய்வு தான் சோம்பல்.

திருமணம் என்பது கொடுப்பதும் பெறுவதும் தான். நீங்களாக கொடுப்பது சிறந்தது, அல்லது உங்கள் மனைவி எப்படியோ எடுத்துக் கொள்வாள்.

மனைவியும் கணவனும் எப்போதுமே சமரசம் செய்து கொள்வார்கள். கணவன் பிழை செய்வதாக ஒத்துக் கொள்வான். மனைவி அதை ஏற்றுக் கொள்வாள்.

பெண்களுக்கு முதலிடம். அழகான பெண்களுக்கு அதனிலும் முன்னுரிமை.

ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு அதிக முறை காதலில் விழுவது அவசியமானது, ஆனால் அதே நபருடன்.

உண்மையான நண்பர்கள் என்பவர்கள் கைத்தொலைபேசி மாறும் போது தப்பிப் பிழைத்து நம் கைத்தொலைபேசியில் இலக்கங்கள் இருப்பவர்கள் தான்.

சேமிப்பு என்பது மிகச்சிறந்தது. குறிப்பாக உங்கள் தந்தை உங்களுக்கு சேமித்திருப்பின்.

நம் மொழியை தாய் மொழி என்று அழைக்கிறோம், ஏனென்றால் தந்தைமார் கதைப்பது குறைவு.