க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'ஓர் ஆணிண் அல்லது பெண்ணின் புற அழகிற்காக அவர்களை மணப்பது என்பது ஓர் வீட்டின் புற வர்ணப் பூச்சிற்காக அந்த வீட்டையே வாங்குவது போலாகும்...'
-சொன்னவர் சார்ள்ஸ் டிக்கன்ஸ்.

'கோப மனோநிலையில் உள்ள போது முடீவுகள் எடுப்பதையும்,
சந்தோசமாக உள்ளபோது சத்தியங்கள் வழங்குவதையும் தவிருங்கள்.'

'சந்தோசம் என்பது சிறிய சிறிய விடயங்களில் கூட கிடைக்கும். ஆனால் சந்தோசம் என்பது சிறிய விடயமல்ல...'

'அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்.
கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க வேண்டும்.'

'மற்றவர்களின் மனங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்...'
-சொன்னவர் இலங்கையின் முடிசூடா மன்னன், உலகத்தின் கலங்கரை விளக்கு என்று அழைக்கப்படாமல் வெட்டிப்பயல் என அழைக்கப்படும் க.கோபி கிருஷ்ணா.
(வேற யாரும் இத சொன்னாங்களோ தெரியேல... ஆனா எனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தானா வந்தது இந்த பொன் மொழி. இப்பிடி தான், சில நாட்களுக்கு முன்பு நான் மிகவும் மதித்த ஒரு நட்பு எனக்கு துரோகம் செய்ய அந்த மனநிலையில் கூட ஒரு கருத்து சொன்னன் அந்த உறவுக்கு..
'உண்மைகள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை, மாறாக மிதிக்கப்படும்...
உண்மையாக இருப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன???')

'பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.'
(ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்க்கும் போது சுவை குறைந்து விட்டது.
'Leave something for parents,
never leave parents for something.
எனக்கு மொழிபெயர்ப்பு எல்லாம் அந்தளவுக்கு வராதுங்க...)

'வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...
தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.'

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் தமக்கு மொட்டை போடுவதில்லை...
மாறாக மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள்...
-சொன்னவர் பெரியார்.

2 பின்னூட்டங்கள்:

இந்தக் கருத்துக்கள் யாவும் நன்றாக உள்ளது. ஆனால் இவற்றில் நான் எத்தனையைத் தேவையான போது கடைப்பிடிகிறேனோ? கடைப்பிடிபேனோ?? சொல்லத் தெரியவில்லை.

good