க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாளுக்கு பிறகு எழுதுறன்...
ஆனா முந்தி எழுத ஆரம்பிக்கேக்கயே என்ன எழுதோணும் எண்டு ஒரு சட்டகம் (பிறேம்) மனதில வந்திடும்.
(டேய் யார்றா அங்க 'பிளான் பண்ணி எழுதிற மாதிரி நீ என்னத்தடா இதுவர எழுதி கிழிச்சுருக்கிறாய்' எண்டு கேக்கிறது? ஆ? இப்பிடி உண்மய கதச்சா குறூப் வச்சு அடிப்பன். நாங்க எல்லாம் ஊரில பெரிய ரவுடியாக்கும்... கவனம்...)
இப்ப என்ர நிலமை போர்ம் ஐ இழந்த மத்தியூ ஹெய்டனின் நிலமை...
ம்...

அண்மையில வெளியிடப்பட்ட வில்லு படப் பாடல்களை கேட்க முடிந்தது. வழமையாக விஜயின் பாடல்களைப் போல இருக்கின்றன.
பாடல்களின் காட்சிகள் வெளிவந்த பின்னர் அவை வழமையைப் போல ஜொலிக்கும் போல இருக்கு.
ஆனா அந்த 'ஹேய் ராமா' பாடல் என்னை கொஞ்சம் இரசிக்க வைத்தது.
தொடக்கத்தில் வழமையான கதாநாயக வீர வசனங்களை கொண்டிருக்கும் பாடலில் கொஞ்சம் நல்ல கருத்துக்களையும் சேர்த்து இருக்கிறார்கள். அதாவது கைச்சல் மருந்துக்கு மேலே இனிப்ப தடவுதல் போல என்று கெளரவமாக சொல்லலாம்.

'ஹேய் ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டன்...
ஹெய் பீமா பீமா பீமா பீமா பீமாகிட்ட கதையை கேட்டன்...
முருக முருக முருக முருகன்கிட்ட வேல கேட்டன்...
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்கிட்ட மலய கேட்டன்...
உங்ககிட்ட அன்ப கேட்டன்...'
(அன்பு மட்டுமா? வாக்கு கேக்கேல தானே?)

இதுக்கு பிறகு நம்மட வடிவேலுவ கொஞ்ச நாளா உழக்கிக் கொண்டு திரிஞ்ச நம்ம கோவை சரளாவ கத்த விட்டிருக்கிறாங்க...
(யெக்கா... சரளாக்கா... பிரமாதம்...)

இப்படத்தில் விஜய் இற்கு புகழ் என்று பெயராம்...
ஆகவே...

'பேரு புகழ் கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு...
பேருலயே புகழ கொண்ட என்னப்போல வேற யாரு...'

இதற்கு பிறகு தான் நான் இந்தப் பாடலை பற்றி எழுத தோன்ற காரணமான வரிகள் வருகின்றன...

'ஆண்டவன்தான் என்னப் பாத்து என்ன வேணும் எண்டு கேட்டா....
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பன்...'

அண்ண! விஜய் அண்ண! உங்கட கொஞ்ச நாள் நடவடிக்கைகளால நீங்க என்ன செய்தாலும் ஒரு மார்க்கமாவே தெரியுது...
நீங்க அரசியலுக்கு வர செய்யிறீங்களோ... உங்கட படம் ஓடுறதுக்கு செய்யிறீங்களோ... இல்ல உண்மையான பாசம், நன்றிக் கடன்ல செய்யிறீங்களோ... ஒண்டுமே தெரியேல...
யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி தானே...
ம்... ம்...
அண்ணே... விஜயகாந் அண்ணே... நீங்க கொட்டை போடுறதுக்கு முதல் விஜய் கொட்டை போட்டு மரம் முளைக்கப் பண்ணி பழம் பழுக்கப் பண்ணிடுவார் போல இருக்கே...

என்றாலும் இதற்கு பின்னர் சில வரிகள் என்னைக் கவர்ந்தன...

'பாரதி ஐ படிச்சுப்புட்டா பெண்களுக்கு வீரம் வரும்...
கார்ள் மார்க்ஸ்ஸ நெனச்சுப் புட்டா கண்களுக்குள் நெருப்பு வரும்...
பெரியார மதிச்சுப் புட்டா பகுத்தறிவு தானா வரும்...
அம்மா, அப்பாவ வணங்கிப் பாரு... எல்லாருக்கும் எல்லா வரும்...'

நல்லா தான் இருக்கு...

இந்தப் பாட்ட விமர்சனம் செய்யிறது என்ர நோக்கம் இல்ல...
ஆனா,
'ஆண்டவன்தான் என்னப் பாத்து என்ன வேணும் எண்டு கேட்டா....
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பன்...' எண்ட வரிகள் நம்மட நாட்டு ஆக்களப் பற்றி சொல்ற மாதிரி இருந்தது. அது தான் இந்தப் பாட்டுக்கு ஒரு பதிவு...

0 பின்னூட்டங்கள்: