க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மைதானத்தில் 80,000 இரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்க எதிரில் பந்துவீச்சாளர் ஓடிவர துடுப்பெடுத்தாடுவது என்பது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பமல்ல.
கடந்த ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய வீரர்கள் பணத்தை விட இந்த அனுபவத்தை விரும்பினார்களாம். (நம்பிற்றம்)
பெருந்தொகைப் பணத்தோடு உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த வீரர்களோடு ஒரே அணியில் விளையாடும் அனுபவம் போன்றவற்றால் ஐ.பி.எல் போட்டிகளை வீரர்கள் பெரிதும் விரும்பிளர். இரசிகர்கள் அதைவிட ஒருபடி மேலே போய் ஐ.பி.எல் மேல் வெறியாக இருந்தார்கள்.
ஐ.சி.எல் போட்டிகளை புறக்கணித்த அல்லது பெரிதாக முக்கியத்துவம் தராத ஊடகங்கள் ஐ.பி.எல் ஐ தூக்கிக் கொண்டாடின.
ஒரே மாதத்தில் லலித் மோடி என்பவர் உலகம் முழுவதுக்கும் பரிச்சயமானார்.

முதலாவது சுற்றுத் தொடரே இவ்வளவு வெற்றி பெற இரண்டாவது தொடரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே சர்ச்சைகளால் உலகெங்கும் முக்கிய பேசு பொருளாக மாறியது ஐ.பி.எல்.
ராஜஸ்தான் கிரிக்கெட் சபையில் லலித் மோடி பண மோசடி செய்ததாக முதலில் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன். பின்னர் அந்தக் குற்றச் சாட்டுக்களை மறைக்க ராஜஸ்தானிலிருந்து போட்டிகளை பாதுகாப்புக் காரணம் காட்டி லலித் மோடி குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.
எல்லாவற்றையும் தாண்டி தேர்தல்கள் காரணமாக பாதுகாப்புக் காரணங்களுக்காக போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது கேள்விக்குரியதாகியது. போட்டிகள் தென்னாபிரிக்காவிற்கு மாற்றப்படலாம் என ஊகங்கள் அல்லது வதந்திகள் (ஐ.பி.எல் அதிகாரிகளின் அப்போதைய வார்த்தை) வெளியாகின். இவற்றை ஒட்டுமொத்தமாக மறுத்தார் லலித் மோடி.
எனினும் இறுதியில் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்றும் இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வழமை போல போட்டிகளை இலங்கையில் நடத்த தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு தங்கள் மூக்கை தாங்களே உடைத்துக் கொண்டது இலங்கை கிறிக்கெற் சபை. ஐ.பி.எல் ஐ எந்த தைரியத்தில் இலங்கையில் நடாத்துவதற்கு கேட்டார்கள் எனப் புரியவில்லை. இரண்டே இரண்டு மின்னொளி கொண்ட மைதானங்கள்... ஒன்று அடிக்கடி பழுதடையும் மின்னொளி தொகதியைக் கொண்டது. இரண்டிலும் கழிவறைகள் கூட ஒழுங்கில்லை. சரி இவர்களை விடுவோம்.

லக்ஸ்மன், ட்ராவிட் அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டமை பொன்றன சர்ச்சைகளாக மாறின.
ஜோன் புச்சானனின் பல அணித்தலைவர்கள் சிந்தனை, பின்னர் கங்குலி அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டமை, ஷாருக்கான் கவாஸ்கரை மரியாதையின்றி கதைத்தமை தொடர்பில் சர்ச்சை எழ ஷாருக்கான் மன்னிப்புக் கோரினார். கவாஸ்கரை எனக்கு பெரிதாக பிடிக்காது என்றாலும் அவர் ஓர் தலைசிறந்த வீரர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரை கரிக்கெற் சம்பந்தமான ஓர் கூற்றுக்காக ஓர் நடிகர் எதிர்ப்பது லலித் மோடியின் அரண்மனையில் மட்டுமே நடைபெறும்.

பின்னர் தென்னாபிக்கா தெரிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது நடைபெற இருப்பதாலும், உள்ளூர் போட்டிகள் பாதிப்படையும் என்பதாலும் அங்கே ஐ.பி.எல் நடைபெற சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்த போதிலும் இறுதியாக தெரிவி்க்கப்பட்ட பாரணம் காலநிலை. இங்கிலாந்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் தென்னாபிரிக்கா வாய்ப்பைப் பெற்றது.
தென்னாபிரிக்காவில் கோடை காலம் என்ற போதிலும் மழை பெய்யாது என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களும் வழங்கப்பட முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் தொடர்ந்து மழை குழப்பி வருவது ஒரு சலிப்பைத் தருகிறது.

அடுத்ததாக இருபதுக்கு இருபது போட்டிகளில் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் விளாசியடிக்கப்படும் ஆறு ஓட்டங்களைப் பார்ப்பதற்கே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
இருபதுக்கு இருபது போட்டிகளில் 130 ஓட்டங்களை பெற்றுவிட்டு அந்த அணி இலகுவாக வெற்றி பெறுவது ஐ.பி.எல் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.

எனக்குப் பிடித்த முரளி, சனத், லசித்த மலிங்க, வோன் உட்பட பலர் பந்துவீச்சில் பிரகாசித்தாலும் ஐ.பி.எல் போட்டிகள் சுவாரசியத்ததை பெரிதளவில் ஏற்படுத்தாதது உண்மையே.
அதற்கு 10 பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் விடப்படும் 7.5 நிமிட இடைவெளியும் ஓர் காரணம். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் ஓர் துடுப்பாட்ட வீரரும் அந்த 7.5 நிமிட இடைவெளியின் பின்னர் தன்னை மீண்டும் தயார்படுத்த (coming back to momentum என்பார்கள்) சிறிது நேரம் எடுக்க ஐ.பி.எல் 2009 போட்டிகள் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிக்கும் போட்டிகளாக மாறுவது என்பது உண்மையே.
கடந்த முறை ஆரம்பத்தில் 200 ஓட்டங்கள் எல்லாம் இலகுவாக பெறப்பட பிற்பாதியில் 150 ஓட்டங்களும் ஓரளவு போதுமான நிலை காணப்பட்டது. ஆடுகளம் தொடர்ந்து பாவிக்கப்பட இப்படியான நிலை ஏற்படும்.
ஆனால் இம்முறை 150 ஓட்டங்களே போதும் என்றால் பிற்பாதியில் 100 ஓட்டங்கள் போதுமோ???
வாழ்க லலித் மோடியும் அவர்தம் வியாபாரப் புத்தியும்...

1 பின்னூட்டங்கள்:

//வாழ்க லலித் மோடியும் அவர்தம் வியாபாரப் புத்தியும்...//
Haa haa...