கடந்த 24ம் திகதி பெரியார் அவர்களின் நினைவுதினம் என்பதால் பெரியாரைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று யோசித்தேன்.
எனக்கு பெரியாரின் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் பெருத்த ஈடுபாடு உண்டு. ஆனால் பெரியாரின் கொள்கைகள் மதிக்கப்படுவதில்லையே என்ற எண்ணம் வந்தது. அது ஏன் என யோசித்த பொழுது எனக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த பதிவு எண்ணமாக வந்தது.
சில அறிஞர்களை நாங்கள் மதிக்குமளவிற்கு அவர்களது கருத்துக்களுக்கோ, அவர்களது கொள்ளைகளுக்கோ நாம் மதிப்பு வழங்குவதில்லை.
அவர்களை நாம் மதிப்பதில் சிறிதளவிற்கு கூட அவர்களது கொள்கைகள் மதிக்கப்படுவதில்லை.
இதில் முதலாவது இடத்தில் பெரியாரை குறிப்பிடலாம்.
பெரியார், பெரியார் என்று பெரியாரிடத்தில் பலருக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரது கொள்கைகள் அந்தளவுக்கு மதிக்கப்படுகின்றனவா???
பெரியார் ஒருமுறை இலங்கை வந்திருந்த பொழுது கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இரவு பத்து மணிக்கு ஒரு கலந்துரையாடல் அல்லது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
அங்கு குழுமியிருந்தவர்கள் வெறுமனே 30 பேர் தானாம். அவர்கள் முன்பு பெரியார் அவர்கள் 3 மணித்தியாலங்கள் உரை நிகழ்த்தினாராம்.
அவ்வளவு நேரம் உரையாற்றி விட்டு அங்கிருந்தவர்களை பார்த்து கூறினாராம்,
'இவ்வளவு சிறிய தொகையினர் மத்தியில் மூன்று மணிநேரம் பேசியது பற்றி நீங்கள் எனக்கு பைத்தியக்காரன் பட்டம் சூட்டலாம். நூற்றுக்கு நூறாக மக்கள் வைத்திருக்கு நம்பிக்கைக்கும் சம்பிரதாயங்களுக்கும் சமூக அமைப்புக்களுக்கும் எதிரான கொள்கையை முன்வைத்திருப்பதால் இக்கொள்கையை இங்கே கூடியிருக்கும் உங்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் நோக்கத்துடன்தான் இவ்வளவு நேரமாக எனது கொள்கையை விளக்கியிருக்கிறேன்.' என்றாராம்.
பெரியார் அவர்கள் இவ்வளவு கஷ்ரப்பட்டு பரப்ப நினைத்த கொள்கைகளை ஏன் நாம் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை???
பெரியாரை நாம் ஏற்றுக் கொண்ட அளவுக்கு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?
தமிழர்கள் மத்தியில் கடவுள், சாதி, மதம், தேசியம், மூட நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம் என்று பெரியார் எதிர்த்தவை இப்போது இல்லையா?
பெரியாரை ஏற்றுக் கொண்ட அளவுக்கு நாம் ஏன் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?
பெரியாரின் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றால் அவர் மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டார்?
2 பின்னூட்டங்கள்:
பெரியாரை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு அதை உலகம் முழுவதும் பலர் கடைபிடித்துவருகின்றனர்.
ஆனால் ஒரு சிலரின் ஏமாற்றுப் பிழைப்புக்கு பெரியார் இடையூறாக இருப்பதால் ஏற்றுக் கொள்ள அவர்களால் முடியவில்லை.
சாதாரணமக்களை கடவுள், மதம் ஜாதி என்ற இல்லாத கயைமைகளை உருவாக்கி மூளைக்கு விலங்கிட்டு இருக்கிறார்கள். அதை உடைக்கும் பணியை நம்மைப் போன்றவர்கள் செய்தால் அவர்களும் பெரியாரை ஏற்றுக் கொள்வார்கள்.
சிறப்பான பதிவு இது.
நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆனால் இதை என் ஆதங்கமாக தான் வெளியிட விரும்பினேன்.
பெரியாரின் கொள்கைகள் மேலும் பரப்பப்பட வேண்டும்.
வருகைக்கு நன்றி.
புதுவருட வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக