தனிமை இரக்கம்.
குயிலனாய் நின்னோடு குலவியின் கலளி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்து பின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடைப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உற்றுவாள் நாட்களில்
வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயிலையிற் றென்றெவர்! வனுப்பரவுக் கவட்கே!
(1904 ம் ஆண்டு 'விவேகபானு' எனும் பத்திரிகையில் வெளியானது.)
இந்த கவிதைக்க முன்னரே பல கவிதைகளை எழுதியிருந்தாலும் இது தானாம் முதலில் அச்சிலேறிய கவிதை.
1 பின்னூட்டங்கள்:
This is over.
Stop it gopi.
கருத்துரையிடுக