க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மனிதர்களுக்கு ஆறறிவு, பகுத்தறிவு என நாம் மார்தட்டிக் கொண்டாலும் எமக்கு சிந்திக்கும் திறன் குறைவு தான்...
நாமெல்லாம் சீரியஸாக மொக்கை போடும் இனம்...

கீழே சில சந்தர்ப்பங்களில் நாம் விடைகள் தெளிவாகத் தெரிந்த வினாக்களை எவ்வாறு கேட்கிறோம் எனப் பாருங்கள்.
அந்த வினாக்களுக்கு இப்படியான விடைகள் கிடைக்கவில்லை என மகிழ்ச்சியாக இருங்கள்.


1. திரையரங்கில்: திரையரங்கில் நீங்கள் உங்கள் நண்பன் அல்லது தெரிந்தவரைக் காணும் போது..

முட்டாள்தனமான கேள்வி: மச்சான்... நீ இங்க என்னடா செய்யிறாய்?
விடை: உனக்குத் தெரியாதா? நான் இங்க கறுப்புச் சந்தையில (Black இல) ரிக்கெற் விக்கிறன்.2. பேருந்தில்: நெரிசல் மிக்க பேருந்தில், உயர்ந்த குதி கொண்ட செருப்பணிந்த பருமனான பெண்மணி ஒருவர் உங்கள் காலை மிதித்துவிடுகிறார்.

முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். காயப்படுத்தி விட்டதா?
விடை: இல்லை. இல்லவே இல்லை. நான் இப்போது மயக்கத்தில் இருக்கிறேன். வேண்டுமானால் இன்னுமொருமுறை மிதித்துப் பாருங்களேன்?3. இறந்த வீட்டில்: இறந்தவருக்கு நெருங்கிய ஒருவர் அழுதவாறே...

முட்டாள்தனமான கேள்வி: ஏன்? ஏன்? ஏன் இவர்? மற்றவங்க எல்லாரையும் விட்டிற்று ஏன் இவரை மட்டும்?
விடை: ஏன்? அவருக்கு பதிலா நீங்க (மேல) போக விரும்பிறீங்களா?4. உணவகத்தில்: உணவகத்தில் நீங்கள் உணவு பரிமாறுபவரிடம்...

முட்டாள்தனமான கேள்வி: மசாலாத் தோசை நல்லமா?
விடை: இல்லை. அது கூடாது. கூடவே கூடாது. அதுக்குள்ள நாங்கள் கல்லு, மண் எல்லாம் கலந்து செய்யிறனாங்கள். அடிக்கடி துப்பவும் செய்வம்.5. குடும்ப ஒன்றுகூடலில்: நீண்ட காலத்தின் பின்னர் உங்களைக் காணும் அன்ரிமார்...

முட்டாள்தனமான கேள்வி: ஹேய் கோபி... நீ இப்ப பெரியாளா வந்திற்றாய்...
விடை: நல்லது. ஆனா நீங்க சொல்லிக் கொள்ற அளவுக்கு மெல்லிசா மாறேல.6. திருமணம்: உங்கள் நண்பியொருத்தி தனது திருமணம் பற்றி உங்களுக்கு அறிவிக்கும் போது நீங்கள்...

முட்டாள்தனமான கேள்வி: நீ கலியாணம் முடிக்கப்போற பெடியன் நல்லவனா?
விடை: இல்ல. அவன் மனுசிய அடிக்கிற ரகம். உணர்வுகளற்ற ஜடம். குடிகாரன். எல்லாம் சும்மா காசுக்காகத் தான்...7. தொலைபேசி: நடு இரவில் நித்திரை செய்துகொண்டிருக்கும் போது அழைப்பு வருகிறது... மறுமுனையில்...

முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். நித்திரை செய்து கொண்டிருந்தீங்களா?
விடை: சீ, இல்லை. ஒபாமான்ர சுகாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் சரியா எண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன். நான் நித்திரை எண்டா நீ நினைச்சாய்? நீ ஒரு முட்டாள்.8. தலைமுடி: உங்கள் நண்பனொருவன் தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டுவருகிறான்...

முட்டாள்தனமான கேள்வி: ஹேய்... தலைமயிர் வெட்டியிருக்கிறாய் போல?
விடை: சீ.. இப்ப இலையுதிர்காலம் தானே? அதுதான் உதிர்க்கிறன்.9. பல்வைத்தியர்: பல்வைத்தியர் உங்களைப் பரிசோதிக்கும் போது வாயில் தட்டி, அடித்துப் பார்க்கிறார்.

முட்டாள்தனமாக கேள்வி: நோகுதா எண்டு சொல்லுங்கோ...
விடை: இல்லை. அது நோகாது. அடியுங்கோ. இரத்தம் தான் கொஞ்சம் வரும்.10. புகைத்தல்: நீங்கள் வீதியில் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓர் அழகான பெண்மணி வருகிறார்.

முட்டாள்தனமான கேள்வி: ஒ! நீ புகைக்கிறனியா?
விடை: கடவுளே... என்ன அதிசயம்... இது ஒரு துண்டு வெண்கட்டி(Chalk). இப்ப என்னடாவெண்டா நுனியில புகையுது... என்ன அதிசயம்...

*************************************************************************************

யாழ்தேவின் நட்சத்திர வாரம் இன்றோடு நிறைவடைகிறது.
என்னை நட்சத்திரமாக தெரிவுசெய்தமைக்கு யாழ்தேவி திரட்டிக்கு எனது நன்றிகள்.
அப்படியே யாழ்தேவி திரட்டியில் இதுவரை தங்களை இணைத்துக் கொள்ளாத தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இருப்பின் அவர்களை யாழ்தேவியில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் யாழ்தேவிக்கு எனது நன்றிகள்.

இந்த நட்சத்திர வாரக் காலப்பகுதியில் ஒரு சிந்தனைப் பதிவும் (சீரியஸ் பதிவு), ஒரு தொடர் பதிவும் போட்டுவிட்டேன்.
சிந்தனைப்பதிவு போட்டு நொந்து போனதால் (ஒரு ஈ, காக்கா கூட என் வலைப்பதிவுப் பக்கம் வரேல) 'சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தில்' கெளரவ உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறேன்.

10 பின்னூட்டங்கள்:

சிரிக்க வச்சிட்டீங்கள்.. நான் அனேகமா உப்பிடியான பதில் குடுக்கிறனான்...

ஆனால் கிரிக்கட் பட்டு விக்கட்டை சும்மா ஷோவுக்கு தூக்கிகொண்டு உலாத்திறாக்களிட்ட தம்பி என்ன விளையாடவோ எண் கேட்டால் கெக்கே புக்கே எண்டு சிரிப்புதான் வருது

//சிந்தனைப்பதிவு போட்டு நொந்து போனதால் (ஒரு ஈ, காக்கா கூட என் வலைப்பதிவுப் பக்கம் வரேல) 'சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தில்' கெளரவ உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறேன்//

நான் அப்பவே சொன்னான். நீங்கதான் நம்பவே இல்லை. எங்கள் சங்கத்தில் கௌரவம் எல்லாம் கிடையாது. வெறும் உறுப்பினராக மட்டுமே சேரலாம்.

nice post....

a active member of
சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தி

நல்லாயிருக்கு.
இந்த மாதிரி கேள்விகள் எங்களிடம் கேட்கும்போது இப்படித்தான் கலக்குவோம்.
நல்ல பதிவு

என்னோட பங்குக்கு....

ஏ: தீபாவளிக்கு உடுப்பு வாங்கியாச்சா?
பி: இல்ல. எனக்கு தான் வாங்கனும்.

//புல்லட் கூறியது...
சிரிக்க வச்சிட்டீங்கள்.. நான் அனேகமா உப்பிடியான பதில் குடுக்கிறனான்...//
சிரிச்சது சந்தோஷம்...
அதுசரி... நீங்க யாரு... த கிரேட் புல்லட். நீங்க இப்பிடிப் பதில் குடுக்காட்டி பிறகென்ன...


//ஆனால் கிரிக்கட் பட்டு விக்கட்டை சும்மா ஷோவுக்கு தூக்கிகொண்டு உலாத்திறாக்களிட்ட தம்பி என்ன விளையாடவோ எண் கேட்டால் கெக்கே புக்கே எண்டு சிரிப்புதான் வருது //

அது கெக்கே புக்கே எண்டு சிரிக்கிறதில்ல த கிரேட் புல்லட் அண்ணா. அதுக்கு பேர் புன்னகை. (புன்னகை எண்டு சொன்னோன்ன இப்ப சிரிச்சீங்க பாருங்கோ அதுக்குப் பேர் தான் கெக்க புக்கே எண்டு சிரிக்கிறது)

அதுசரி... யார் அப்பிடி திரிஞ்சது? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

//Subankan கூறியது...
//சிந்தனைப்பதிவு போட்டு நொந்து போனதால் (ஒரு ஈ, காக்கா கூட என் வலைப்பதிவுப் பக்கம் வரேல) 'சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தில்' கெளரவ உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறேன்//

நான் அப்பவே சொன்னான். நீங்கதான் நம்பவே இல்லை. எங்கள் சங்கத்தில் கௌரவம் எல்லாம் கிடையாது. வெறும் உறுப்பினராக மட்டுமே சேரலாம். //

எனக்கு கெளரவ உறுப்பினர் பதவி வேணும்... நான் அழுவன்...

சரி, இப்பொதைக்கு வெறும் உறுப்பினராக சேர்ந்து விடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
nice post....

a active member of
சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தி //

என்னது நிறைய நாட்களாக காணவில்லை? ஆங்கிலத்தில் வேறு பின்னூட்டம்...???

ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
நல்லாயிருக்கு.
இந்த மாதிரி கேள்விகள் எங்களிடம் கேட்கும்போது இப்படித்தான் கலக்குவோம்.
நல்ல பதிவு

என்னோட பங்குக்கு....

ஏ: தீபாவளிக்கு உடுப்பு வாங்கியாச்சா?
பி: இல்ல. எனக்கு தான் வாங்கனும். //

தொடர்பதிவுக்கு அழைத்திருந்தேன்...
ஏற்றுக் கொண்டதாக சொல்லவில்லையே?
பரிசையும் ஏற்றுக் கொள்ளவில்லையே...???

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

பகிடி நல்லாயிருக்கு சிரிச்சேன்........நன்றி

//நிலாமதி கூறியது...
பகிடி நல்லாயிருக்கு சிரிச்சேன்........நன்றி //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...