க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக வவுனியாவிற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. திடீர் விஜயம் என்பதால் பதிவொன்றை இட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை.
கொஞ்சம் பின்னூட்டங்களும் வந்திருந்தன. பதிலளிக்கவும் முடியவில்லை.

முன்பைய வவுனியா வீடு வவுனியா நகரத்திற்கு அண்மையில் (காமினி மகா வித்தியாலயத்திற்கு 200, 300 மீற்றர்கள் அருகில் என்று சொல்லலாம்.) தான் இருந்தது. அந்த வீட்டிற்கு 100 மீற்றர்கள் தூரத்தில் ஒரு இணைய மேயும் இடம் இருந்தது.
ஆனால் இப்போதைய புதிய வீடு தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. அந்தப் பிரதேசத்தில் இணைய மேயும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் களைத்துவிட்டேன்.
கடைசியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டு அங்கே போய் உட்கார்ந்தால் அது உலகத்தில் மிகவும் வேகமான கணணியாகவும், இணைய இணைப்பாகவும் இருந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் வந்துவிட்டேன்.
அப்போது தான் யாழ்தேவி திரட்டி 'தினக்குரல்' பத்திரிகை மற்றும் 'இருக்கிறம்' சஞ்சிகைகளோடு ஒன்று சேர்ந்து பதிவர்களின் படைப்புக்களை முன்னேற்றுவதற்கு எடுத்த முயற்சியை அறிந்து கொண்டேன்.
அத்தோடு யாழ்தேவி நிர்வாகக் குழுவில் வந்தியத்தேவன் அண்ணா இருப்பதாக அறிந்து கொண்டேன். யாழ்தேவி அறிக்கையை வந்தியத்தேவன் அண்ணா தான் விடுத்திருந்தார்.
ஆகவே வந்தியத்தேவன் அண்ணாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
யாழ்தேவியின் பணி தொடரட்டும்.

வவுனியாவில் சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை.
சென்ற முறை காமினி மகாவித்தியாலய அகதி முகாம்களை அல்லது நலன்புரி முகாம்களை காண முடிந்தது. இம்முறை அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை.

*************************************************

அத்தோடு ஒரு செய்தியையும் அறியக்கிடைத்தது.
இலங்கையின் அதிகாரத் தலைநகராக அம்பாந்தோட்டை (ஹம்பாந்தோட்ட) விரைவில் தெரிவாகும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஓர் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். வணிகத்தலைநகராக கொழும்பு தொடர்ந்து செயற்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது எதிர்பார்க்கப்பட்டது என்பதால் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

'மன்னர் எங்கிருக்கிறாரோ அங்கு தான் அவரின் அரண்மனையும் இருக்கும். அரண்மனை இருக்குமிடத்தில் தான் அரச சபையும் இருக்கும்' என ஐந்தாம் ஆண்டு கதைப்புத்தகத்தில் இருந்தது. இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை இந்தச் செய்தியை அறியும்வரை.


*************************************************
விசிறி வேலை செய்யாத புகையிரதத்தை அனுப்பிய இலங்கை புகையிரதத் திணைக்களம் ஒழிக...
நான் கொழும்புக்கு திரும்பி வரும் போது வந்த புகையிரதத்தில் மின்விசிறி தொழிற்படவில்லை.
இலங்கையில் எல்லாமே இப்படித் தானோ...!

*************************************************

தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் பதிவு செல்கிறது என யோசிக்க வேண்டாம்.
வவுனியாவிற்குச் செல்வதற்கு முன்னர் சவரம் செய்யலாம் என சவர சாதனத்தை (ஷேவிங் றேசர் என்பதன் தமிழ் என்ன?) தேடியால் அதைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேடியும் கிடைக்கவில்லை.
அதனால் தாடியோடு (உனக்கெங்கடா தாடி என்று இந்தப் பச்சைக்குழந்தையை அவமானப்படுத்த விரும்புவர்களுக்கு ஓர் செய்தி. அது ஒட்டுத் தாடி என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இறுக்கமாக ஒட்டிக் கொண்டுவிட்டதால் கழற்ற முடியவில்லை. எனவே ஷேவ் செய்ய வேண்டி ஏற்பட்டது.) வவுனியாவிற்குப் போக வேண்டி ஏற்பட்டது.
பின்னர் வவுனியாவிற்குப் போய் அங்கே ஓர் ஷேவிங் றேசர் வாங்கி ஷேவ் செய்தேன்.
எனவே தான்,
தாடியோடு வவுனியாவிற்குப் போய் தாடியில்லாமல் கொழும்பிற்கு வந்த கதை என்றேன்.

இனி தொடர்ந்து பதிவிட எதிர்பார்க்கிறேன்.

(தலைப்பைப் பார்த்துவிட்டு உள்குத்துகள் இருக்குமென எதிர்பார்த்து வந்தவர்கள் என்னைக் கும்மியெடுக்க இத்தால் அனுமதி வழங்கப்படுகிறது.)

6 பின்னூட்டங்கள்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். .. தொடர்ந்து எழுதுங்கள்

////அத்தோடு ஒரு செய்தியையும் அறியக்கிடைத்தது.
இலங்கையின் அதிகாரத் தலைநகராக அம்பாந்தோட்டை (ஹம்பாந்தோட்ட) விரைவில் தெரிவாகும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஓர் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். வணிகத்தலைநகராக கொழும்பு தொடர்ந்து செயற்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது எதிர்பார்க்கப்பட்டது என்பதால் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

'மன்னர் எங்கிருக்கிறாரோ அங்கு தான் அவரின் அரண்மனையும் இருக்கும். அரண்மனை இருக்குமிடத்தில் தான் அரச சபையும் இருக்கும்' என ஐந்தாம் ஆண்டு கதைப்புத்தகத்தில் இருந்தது. இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை இந்தச் செய்தியை அறியும்வரை.////

கொழும்பை வர்த்தக தலைநகராக வைத்துக்கொண்டு நிர்வாக தலைநகரமாக வேறு தகுந்த இடத்தை தெரிவு செய்யவேண்டும் என்று நான் சில வருடங்களாகவே எதிர்பார்த்திருந்தேன். (அது குரணாகலாகவோ, அம்பாந்தோட்டையாகவோ அல்லது வவுனியாகவோ சுட இருக்கலாம் என்று நிகைத்திருந்தேன். ஆனால், அது மன்னரின் இடத்துக்கு சென்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.) ஓட்டுமொத்த அதிகார, வர்த்தக, சட்ட நிலையங்கள் கொழும்புக்குள் முடக்கப்பட்டு விட்டால் மற்றப் பகுதிகளில் அபிவிருத்திகளில் தொய்வு ஏற்படலாம்.

Welcome back

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். .. தொடர்ந்து எழுதுங்கள் //

நன்றி யோ வொய்ஸ்...

//மருதமூரான். கூறியது...
கொழும்பை வர்த்தக தலைநகராக வைத்துக்கொண்டு நிர்வாக தலைநகரமாக வேறு தகுந்த இடத்தை தெரிவு செய்யவேண்டும் என்று நான் சில வருடங்களாகவே எதிர்பார்த்திருந்தேன். (அது குரணாகலாகவோ, அம்பாந்தோட்டையாகவோ அல்லது வவுனியாகவோ சுட இருக்கலாம் என்று நிகைத்திருந்தேன். ஆனால், அது மன்னரின் இடத்துக்கு சென்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.) ஓட்டுமொத்த அதிகார, வர்த்தக, சட்ட நிலையங்கள் கொழும்புக்குள் முடக்கப்பட்டு விட்டால் மற்றப் பகுதிகளில் அபிவிருத்திகளில் தொய்வு ஏற்படலாம். //

ஆனால் இப்போதும் கூட இலங்கையின் தலைநகர் கொழும்பு இல்லையே?
பூகோள ரீதியாக கொழும்பிற்கும் சிறி ஜெயவர்தனபுரவிற்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் எல்லாவற்றிற்கும் ஏன் அம்பாந்தோட்டை?
விமானநிலையம -அம்பாந்தோட்டையில்

துறைமுகம் - அம்பாந்தோட்டையில்

சர்வதேச கிறிக்கெற் அரங்கு - அம்பாந்தோட்டையில்

இப்படி எல்லாமே அங்கு போனால் மற்றைய பிரதேசங்கள் என்ன மாதிரி?

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=63036

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//Subankan கூறியது...
Welcome back //

Thank you... Thank you...