க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பதிவர்களின் உண்மை எண்ணங்களை அறிய உதவும் தொடர்பதிவுகளில் ஒன்றாக இந்த தொடர்பதிவை நான் பாக்கிறேன்...
நான் விரும்பும் தொடர்பதிவுகளில் இதுவும் ஒன்று.

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்ப அண்ணா யோ வொய்ஸ் இற்கு நன்றிகள்.
என் உண்மையான முகத்தை இயலுமானவளவிற்கு மற்றவர்களை புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறேன்.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.


தமிழ்

அன்புக்குரியவர்கள்: மனித உணர்வு கொண்ட அனைவரும்.

ஆசைக்குரியவர்: இப்போது அப்படி யாரும் கிடையாது.

இலவசமாய் கிடைப்பது: ஆப்புகள்...

ஈதலில் சிறந்தது: ஆதரவு மொழி

உலகத்தில் பயப்படுவது: எனக்கு

ஊமை கண்ட கனவு: முயன்றால் பலிக்கும்.

எப்போதும் உடனிருப்பது: என் மனச்சாட்சி

ஏன் இந்த பதிவு: அன்பு அண்ணா யோ வெய்ஸ் யோகா அழைத்ததால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி

ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்

ஓசையில் பிடித்தது: இனிமையான எந்த ஒலியும்

ஔவை மொழி ஒன்று: சித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம்

(அ)ஃறிணையில் பிடித்தது: மான்English

1. A – Avatar (Blogger) Name / Original Name : கனககோபி என்னும் க.கோபிகிருஷ்ணா

2. B – Best friend? : தேடுகிறேன்...

3. C – Cake or Pie? : கேக் என்று வைத்துக் கொள்ளலாம்.

4. D – Drink of choice : பழரசம்

5. E – Essential item you use every day? : கணணி, அலைபேசி.. (இரண்டும் அவசியம் என்றில்லை என்றாலும் என்னோடு ஒட்டிக் கொண்டுவிட்டன.)

6. F – Favorite color ? : வானத்து நீலம்.

7. G – Gummy Bears Or Worms : பயமில்லை

8. H – Hometown? : யாழ்ப்பாணம்

9. I – Indulgence? : தனிமை, அமைதி

10. J – January or February? : ஜனவரி

11. K – Kids & their name : திட்டமெதுவும் இல்லை

12. L – Life is incomplete without : சாதனைகள்

13. M – Marriage date? திட்டமெதுவும் இல்லை

14. N – Number of siblings : ஐந்து

15. O – Oranges or Apples : அப்பிள்

16. P – Phobias/Fears? : அப்படி எதுவும் கிடையாது.

17. Q – Quote for today? : புத்திசாலிகள் பிரச்சினைகளை தீர்க்கிறார்கள், அதிபுத்திசாலிகள் பிரச்சினைகளை தடுக்கிறார்கள் - அல்பேட் ஐன்ஸ்டீன்

18. R – Reason to smile? : இதுவரை கண்டுபிடிக்கவில்லை. (சிலவேளை என்னை நினைத்தோ? )

19. S – Season? : குளிர்காலம்


21. U – Unknown fact about me? : நானோரு கோபக்காரன். ஆனால் அன்பு செலுத்துபவர்களிடம் அடிமை போல.

22. V – Vegetable you don't like? : பூசணிக்காய், பாகற்காய், தக்காளிப்பழம்

23. W- Worse habit? : Much sensitive.

24. X – X-rays you've had? : ஒருமுறை. இதயநோவிற்கு.

25. Y – Your favorite food? : அப்படி எதுவும் கிடையாது.

26. Z – Zodiac sign? : மகரம். (உனக்கு இண்டைக்கு நல்லநாள் எண்டா சிரிச்சிற்றுப் போவன். இண்டைக்கு உனக்கு கூடாத நாள் எண்டா சோதிடம் பொய் எண்டுசொல்லுவன். ஆனால் நம்பி்க்கை கிடையாது.)

எழுதச் சொன்னாக்கள் எல்லாம் எழுதுங்கோ....
பகிருங்கோ.....

60 பின்னூட்டங்கள்:

//விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.//

யோ அண்ணாவினை அறிமுகப்படுத்தவிலையே

//இலவசமாய் கிடைப்பது: ஆப்புகள்...
//

வத்தால் திரும்பக் கிடைக்கும்தானே?

//உலகத்தில் பயப்படுவது: எனக்கு
//

அடிக்கடி கண்ணாடி பார்க்கவேண்டாம். பயம் வரத்தான் செய்யும்

//ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்
//

ஐ சி. இஸ் இட்?

//(அ)ஃறிணையில் பிடித்தது: மான்
//

உயர்திணையிலும் மான்தான் பிடிக்கும் என்று அறிந்தேனே?

//2. B – Best friend? : தேடுகிறேன்...
//

டு லெட்

//K – Kids & their name : திட்டமெதுவும் இல்லை//

திட்டம் போட்டுட்டா மட்டும்?

// R – Reason to smile? : இதுவரை கண்டுபிடிக்கவில்லை. (சிலவேளை என்னை நினைத்தோ? )//

எந்த நேரமும் சிரித்தால் இப்படித்தான்

//Y – Your favorite food? : அப்படி எதுவும் கிடையாது.//

பச்சைப் பொய். பாத்தாத் தெரியல

//உனக்கு இண்டைக்கு நல்லநாள் எண்டா சிரிச்சிற்றுப் போவன். இண்டைக்கு உனக்கு கூடாத நாள் எண்டா சோதிடம் பொய் எண்டுசொல்லுவன். ஆனால் நம்பி்க்கை கிடையாது//

இந்த அப்போச் எனக்குப் பிடிச்சிருக்கு

சுபாங்கனுடன் சேர்ந்து கும்ம விருப்பமிருந்தாலும், சொந்த பணிகள் காரணமாக விட்டு செல்கிறேன், நாளை இங்கு கும்மவிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

//
Subankan கூறியது...
//விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.//

யோ அண்ணாவினை அறிமுகப்படுத்தவிலையே //

இதுக்கு முதல் எழுதின யோ வொய்ஸ் அண்ணாவும் சந்ரு அண்ணாவ அறிமுகப்படுத்தேல...
மூத்தவர்கள் தவறு செய்ததால குழந்தையான நான் தவறுசெய்துவிட்டேன்...

மன்னிப்புக் கோருகிறேன்....

//Subankan கூறியது...
//இலவசமாய் கிடைப்பது: ஆப்புகள்...
//

வத்தால் திரும்பக் கிடைக்கும்தானே? //

வராமலே கிடைக்கும்...
ஒரு பதிவு போடுங்கள்... எப்படி என்று தெரியும்....

//Subankan கூறியது...
//உலகத்தில் பயப்படுவது: எனக்கு
//

அடிக்கடி கண்ணாடி பார்க்கவேண்டாம். பயம் வரத்தான் செய்யும்//

அறிவுரைக்கு நன்றி...

இனி தவிர்த்துக் கொள்கிறேன்....

//Subankan கூறியது...
//ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்
//

ஐ சி. இஸ் இட்?//

ஓமடாப்பா...
சொன்னா விளங்காதே?
ஒருக்கா சொன்ன விளங்காதே?
விளக்கம் இல்லயே?
ஏனிப்பிடி இருக்கிறாய்? ஆ?
(இப்ப விளங்கிற்றுதோ?)

// Subankan கூறியது...
//(அ)ஃறிணையில் பிடித்தது: மான்
//

உயர்திணையிலும் மான்தான் பிடிக்கும் என்று அறிந்தேனே? //

மான் அஃறிணை என்று தான் எனக்குத் தெரியும்...
உயர்திணையில் இருப்பது இதுவரை தெரியாது....
இப்போதும் தெரியாது...

//Subankan கூறியது...
//2. B – Best friend? : தேடுகிறேன்...
//

டு லெட் //

நம்பிக்கை தான் வாழ்க்கை....

//Subankan கூறியது...
//K – Kids & their name : திட்டமெதுவும் இல்லை//

திட்டம் போட்டுட்டா மட்டும்? //

திட்டமே இல்லாதபோது வேறுவிடயங்கள் எனக்கெதற்கு?

// Subankan கூறியது...
// R – Reason to smile? : இதுவரை கண்டுபிடிக்கவில்லை. (சிலவேளை என்னை நினைத்தோ? )//

எந்த நேரமும் சிரித்தால் இப்படித்தான் //

யாரது?
யாரைப் பற்றிக் கதைக்கிறீர்கள்?

//Subankan கூறியது...
//Y – Your favorite food? : அப்படி எதுவும் கிடையாது.//

பச்சைப் பொய். பாத்தாத் தெரியல //

உண்மையாத் தானப்பா...
இது பரம்பரை காரணமாக வந்த பருமன்...

//ubankan கூறியது...
//உனக்கு இண்டைக்கு நல்லநாள் எண்டா சிரிச்சிற்றுப் போவன். இண்டைக்கு உனக்கு கூடாத நாள் எண்டா சோதிடம் பொய் எண்டுசொல்லுவன். ஆனால் நம்பி்க்கை கிடையாது//

இந்த அப்போச் எனக்குப் பிடிச்சிருக்கு //

மிக்க நன்றி....
நீங்க நல்வரா? கெட்டவரா?

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கனுடன் சேர்ந்து கும்ம விருப்பமிருந்தாலும், சொந்த பணிகள் காரணமாக விட்டு செல்கிறேன், நாளை இங்கு கும்மவிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். //

உங்களை வெளியேறச்செய்த சொந்தப் பணிகள் வாழ்க....

//மிக்க நன்றி....
நீங்க நல்வரா? கெட்டவரா?//

தெரியலியேப்பா

// Subankan கூறியது...
//மிக்க நன்றி....
நீங்க நல்வரா? கெட்டவரா?//

தெரியலியேப்பா//

நாயகன் கமலெண்ட நினைப்பு?
ம்.. ம்....

கும்மியடிப்பது ஆரம்பமா... தாத்தா கோபியின் வலைப்பதிவிலே கும்மியடிக்க எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன்.

//சந்ரு கூறியது...
கும்மியடிப்பது ஆரம்பமா... தாத்தா கோபியின் வலைப்பதிவிலே கும்மியடிக்க எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன். //

வேணாம்.... விட்டிருங்கோ.... அழுதிருவன்....

//கனககோபி கூறியது...
//சந்ரு கூறியது...
கும்மியடிப்பது ஆரம்பமா... தாத்தா கோபியின் வலைப்பதிவிலே கும்மியடிக்க எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன். //

வேணாம்.... விட்டிருங்கோ.... அழுதிருவன்....//

நாங்க தொல்லைக்கே தொல்லை தருவம்...ம்ம்ம்ம்.... அடங்கணும். இல்ல அடக்குவம்...

//சந்ரு கூறியது...
//கனககோபி கூறியது...
//சந்ரு கூறியது...
கும்மியடிப்பது ஆரம்பமா... தாத்தா கோபியின் வலைப்பதிவிலே கும்மியடிக்க எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன். //

வேணாம்.... விட்டிருங்கோ.... அழுதிருவன்....//

நாங்க தொல்லைக்கே தொல்லை தருவம்...ம்ம்ம்ம்.... அடங்கணும். இல்ல அடக்குவம்... //

நானெப்பா உங்களுக்குச் செய்தன்?

//////கனககோபி கூறியது...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கனுடன் சேர்ந்து கும்ம விருப்பமிருந்தாலும், சொந்த பணிகள் காரணமாக விட்டு செல்கிறேன், நாளை இங்கு கும்மவிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். //

உங்களை வெளியேறச்செய்த சொந்தப் பணிகள் வாழ்க.//////

கோபி அழுவதாக செய்தி வந்தவுடன், கும்மிக்கு வந்துட்டன், சொந்த வேலை கும்மியை விட முக்கியமில்லை

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
//////கனககோபி கூறியது...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கனுடன் சேர்ந்து கும்ம விருப்பமிருந்தாலும், சொந்த பணிகள் காரணமாக விட்டு செல்கிறேன், நாளை இங்கு கும்மவிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். //

உங்களை வெளியேறச்செய்த சொந்தப் பணிகள் வாழ்க.//////

கோபி அழுவதாக செய்தி வந்தவுடன், கும்மிக்கு வந்துட்டன், சொந்த வேலை கும்மியை விட முக்கியமில்லை //

அடச்சீ....
மனுசி உங்களக் காணேல எண்டு தேடுறாவாம்...
போங்கய்யா போங்க....

எனக்கு மனுஷியை விட நீங்கள் தான் முக்கியம் கோபி

//சந்ரு கூறியது...
நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட... //

என்னய்யா இது?

சுபாங்கன் கூறிய மாதிரி நீங்கள் என்னை அறிதுமுகப்படுத்தாதது பெரும் தவறு..

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
எனக்கு மனுஷியை விட நீங்கள் தான் முக்கியம் கோபி //
கதை வேற மாதிரிப் போயிடும்...

போங்கப்பா...
குடும்பம் தான் முதல்....

// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கன் கூறிய மாதிரி நீங்கள் என்னை அறிதுமுகப்படுத்தாதது பெரும் தவறு.. //

நீங்களேன் சந்ரு அண்ணாவை அறிமுகம் செய்யேல?

சீச்சீ.. நான் இன்னும் பச்சை பாலகன்.. அம்மாட சொல்லிட்டுதான் வந்தன்

அத அந்த பதிவுல கேட்டுருக்கோனும், இப்ப கேட்க முடியாது.

முடிஞ்சது முடிஞ்சு போச்சி...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கன் கூறிய மாதிரி நீங்கள் என்னை அறிதுமுகப்படுத்தாதது பெரும் தவறு..//


கோபி அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதோடு 15 நாட்கள் உணவின்றி போடவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறேன்.

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சீச்சீ.. நான் இன்னும் பச்சை பாலகன்.. அம்மாட சொல்லிட்டுதான் வந்தன் //

முக்கிய வேலை இருப்பதன் காரணமாக நான் செல்கிறேன்...
நாளை காலை உங்கள் பின்னூட்டங்களுக்கு விடையளிக்கிறேன்...
நன்றிகள்...

அப்படி தப்பி ஓட முடியொது கோபி..

என் அன்புத் தம்பி கோபியின் பதிவில் கும்மவேண்டாம் கட்சித் தொண்டர்களே. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரும்பினால் ஒவ்வொரு நாளும் 1மணித்தியாலம் கும்மலாம்

கோபி பாவம் என விட்டுவிடுறேன்..

// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
அத அந்த பதிவுல கேட்டுருக்கோனும், இப்ப கேட்க முடியாது.

முடிஞ்சது முடிஞ்சு போச்சி... //

நீங்கள் மூத்தவர் என்பதால் மரியாதை கொடுத்து எதிர்த்துக் கதைக்கவில்லை....
அது இப்படி இடியாக வருமெண்டு எதிர்பார்க்கவே இல்லை...

//சந்ரு கூறியது...
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சுபாங்கன் கூறிய மாதிரி நீங்கள் என்னை அறிதுமுகப்படுத்தாதது பெரும் தவறு..//


கோபி அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதோடு 15 நாட்கள் உணவின்றி போடவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறேன். //

நானே விலகுறனப்பா.....

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
அப்படி தப்பி ஓட முடியொது கோபி..//

இது ராஜதந்திரம் யோ வொய்ஸ் அண்ணா....

//சந்ரு கூறியது...
என் அன்புத் தம்பி கோபியின் பதிவில் கும்மவேண்டாம் கட்சித் தொண்டர்களே. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரும்பினால் ஒவ்வொரு நாளும் 1மணித்தியாலம் கும்மலாம் //

கும்ம வேண்டாம் என்பதற்கு நன்றி...
பிறகென்ன ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மணித்தியாலம்?

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
கோபி பாவம் என விட்டுவிடுறேன்.. //

மிக்க நன்றி அண்ணா..... :P

அய் நானும் மகரம் தான்.

//Balavasakan கூறியது...
அய் நானும் மகரம் தான். //

அய்....
எப்ப விருந்து?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...

ஏ பீ சி டி = 26
அனா ஆவனா to ஃ = 13 அப்பு

so 39 Questions.

ரொம்பவே சீரியசாத் தான் உந்த பதிவை எடுத்து எழுதி இருக்கிறியள்.. என்ன பக்குவமான பதில்கள்... அப்பப்பா புல்லரிக்குது....

பரதேசி என்டாலும் ஓக்கே என்டு போட்டு கோவக்காரன் என்டு சொல்லுறாய் அப்பு.. எதை எடுப்பது...

Is there anyone for kummal

//முகிலினி கூறியது...
ஏ பீ சி டி = 26
அனா ஆவனா to ஃ = 13 அப்பு

so 39 Questions. //

ஓ! கணக்கில கொஞ்சம் மந்தம்....
தலைப்பே பிழைச்சிற்றுதே...
தலைப்பை மாத்திற்றன்....

//ரொம்பவே சீரியசாத் தான் உந்த பதிவை எடுத்து எழுதி இருக்கிறியள்.. என்ன பக்குவமான பதில்கள்... அப்பப்பா புல்லரிக்குது.... //
புல்லரிச்சா புல்லுக்கு கிட்ட போகாதேங்கோ...
ஹி ஹி...
சும்மா ஒரு பகிர்வு தானே...
உண்மையத் தானே எழுதோணும்...


//பரதேசி என்டாலும் ஓக்கே என்டு போட்டு கோவக்காரன் என்டு சொல்லுறாய் அப்பு.. எதை எடுப்பது...//
அது வேற... இது வேற....

//Is there anyone for kummal //

கும்மினவங்கள எவ்வளவு இராஜதந்திரமா அனுப்பிற்று இருக்கிறன்... நீங்கள் வந்து அவங்கள உசுப்பேத்துறியள்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

//ஆசைக்குரியவர்: இப்போது அப்படி யாரும் கிடையாது.//

அடப்பாவி, அப்ப அவங்க சும்மா தானா?

சரி சரி.

அவங்க மட்டும் பதிவைப் பார்த்தாங்க......

// ilangan கூறியது...
//ஆசைக்குரியவர்: இப்போது அப்படி யாரும் கிடையாது.//

அடப்பாவி, அப்ப அவங்க சும்மா தானா?

சரி சரி.

அவங்க மட்டும் பதிவைப் பார்த்தாங்க...... //

ஹி ஹி...
வெளில சொல்லிடாத நண்பா...
ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....

நானும் மகரம் தான் மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் கோபக்காரர்கள் தான்

//வந்தியத்தேவன் கூறியது...
நானும் மகரம் தான் மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் கோபக்காரர்கள் தான் //

அப்படியா....

அப்ப ராசி, நட்சத்திரம், பனங்காய் எல்லாம் உண்மை என்கிறீர்களா?

ஆகா....
கோபி.... இதுக்கெல்லாம் மசிஞ்சிடாத....
கொள்கை முக்கியம் அமைச்சரே....
ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

//ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்//

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_21.html

// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
//ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்//

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_21.html //

வாசித்தேன் தல....
நன்றிகள்....

உங்கள் தொடர்பதிவில் விளையாட தயாராகின்றேன் உடனடியாக எழுத முடியவில்லை விரைவில் எழுதுகின்றேன்.

//SShathiesh கூறியது...
உங்கள் தொடர்பதிவில் விளையாட தயாராகின்றேன் உடனடியாக எழுத முடியவில்லை விரைவில் எழுதுகின்றேன். //

ஆறுதலாக எழுதுங்கள் தளபதி...