க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நீங்கள் ஏற்கனவே ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள் என்றும், அந்த நிறுவனம் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரபல்யம் அடையவில்லை, உங்கள் நிறுவன இணையத்தளம் பிரபல்யமடையவில்லை என்று வைத்துக் கொண்டால் அதை பிரபல்யப்படுத்த ஓர் திட்டம்...

இந்த உலகத்தில ஏமாளிகள் என்றால் அவர்கள் பதிவர்கள் தான்...
சந்திக்கப்போறம் எண்டு சொன்னியள் எண்டா வரிஞ்சு கட்டிக் கொண்டு ஓடி வருவானுகள்...

வந்ததும் அவங்கள அறிமுகப்படுத்தச் சொல்லுங்கோ...
அது மட்டும் பொறுமையா இருந்திற்று அதுக்குப் பிறகு வந்தவங்கள ஒரு மூலையில நிக்கப் பண்ணுங்கோ...
முக்கியமான விசயம், சந்திப்பு பொதுவா மக்கள் இருக்காத இடமாப் பாத்து நடத்துங்கோ....
அதாவது உயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது பொதுவா அலுவலகங்கள் செறிந்து இருக்கிற இடத்தில நடத்துங்கோ...

அப்ப வாறவங்கள் எல்லாம் தூரத்தில இருந்து வருவாங்கள்...
1 மணித்தியாலம், 2, 3, 4, சிலபேர் அத விடக் கூடுதலா பயணம் செய்து வருவார்கள்...
சந்திப்பு நடக்கிற இடத்தில சும்மா திரியிறது கஷ்ரம் எண்டபடியா (உயர் பாதுகாப்பு வலயமப்பா...) பதிவர்கள் எல்லாம் களைச்சு விழுந்து வருவார்கள்... வருபவர்களுக்கு சோடா அதோட ஏதாவது சிற்றுண்டிகள் கொடுங்கோ...
முக்கியமா அதுகள அவங்கள் சாப்பிடேக்க உங்கட ஆக்கள விட்டு படங்கள எடுத்துக் கொள்ளுங்கோ...

பிறகு சந்திப்பு முழுக்க உங்கட நிறுவனம், உங்கட பனங்கொட்டைக் கொள்கைகள் பற்றிக் கதையுங்கோ.

கதைச்சிற்று அவங்கள அமைதியா அனுப்பி வையுங்கோ.

பதிவர்கள் சும்மா இருப்பாங்களோ?
சும்மாவே ஊரில எவனவன் பிழை விட்டாலே வரிஞ்சுகட்டிக் கொண்டு எழுதுறவங்கள்.
தங்களுக்கே ஆப்பு வச்சா விடுவாங்களோ?
பதிவில போட்டுத் தாக்குவாங்கள்.

இப்ப தான் நீங்கள் உங்கட பனங்கொட்டை வியாபாரப் புத்தியைக் காட்டோணும்...

வந்தவங்களுக்கு நன்றி சொல்றம் எண்டு நீ்ங்களா பதிவர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவ உங்கட தளத்தில போடுங்கோ.

அதில நீங்களே பெயரில்லாம (அனானி) பதிவர்களத் தாக்கிப் பின்னூட்டம் போடுங்கோ.
பதிவர்கள் முதலில வந்த அமைதியாத் தான் பின்னூட்டம் போடுவாங்கள். ஏனென்டா அவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்கள் ஆச்சே?
அவங்கள் அமைதியாப் பின்னூட்டம் போட்டா பெயரில்லாம அவங்களக் கேவலமா திட்டிப் பின்னூட்டம் போடுங்கோ.
பதிவர்கள் கோபப்பட்டு உண்மையளக் கக்கிருவாங்கள்.

அதுக்குப் பிறகு உங்கட நிவுனத்தில வேலை தருவதாகச் சொல்லி ஒரு எட்டப்பப் பதிவருக்கு ஆசையூட்டி அவனுக்கு பதிவர்கள் சோடா குடிச்ச, சிற்றுண்டி சாப்பிட்ட படங்கள குடுத்து அத வச்சுப் பதிவர்கள எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனிப்பட்ட முறையில் தாக்கிப் பதிவு போடப் பண்ணுங்கோ.

அதுக்குப் பிறகு பதிவர்கள் கட்டுப்பாட்டை இழந்து உங்கள் வலைத்தளத்தில் வந்து நீங்கள் பெயரில்லாமல் போட்ட கருத்துரைகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்குவார்கள்.
அப்ப தான் 'சிங்கம் எங்கட வலையில மாட்டிற்று' எண்டு உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு நீங்கள் தான் பெயரில்லாமல் பின்னூட்டமிடுகிறீர்கள் என்று நீங்கள் முட்டாள்கள் என்று நம்பும் பதிவர்கள் அறியமாட்டார்கள் என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டு தொடர்ந்து பின்னூட்டமிடுங்கோ.

பிறகு எதியோப்பியாவிலிருந்து பன்றி, சிம்பாப்வேயிலிருந்து வேலை வெட்டி இல்லாதவன், சோமாலியாவிலிருந்து கழுதை எண்ட பெயர்களில் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தி பின்னூட்டமிடுங்கள்...
உடனே பதிவர்கள் அவற்றிற்று பின்னூட்டமிட வருவதோடு நீங்கள் பதிவர்களைப் பற்றி தரக்குறைவாக பின்னுர்ட்டமிடுவதால் அதைப் பார்க்குமாறு தினமும் 10 ஹிட்ஸ் கிடைக்கும் உங்கள் தளத்தைப் பார்க்குமாறு பதிவுலக நண்பர்களிடம் கொடுப்பார்கள்...

சர்வதேச ரீதியாக பதிவர்கள் சென்றடைவதால் அவர்கள் உங்களை பதிவுகளில் விமர்சிக்க குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த உங்கள் நிறுவனத்தின் பெயர் சர்வதேச ரீதியில் புகழ்பெறும்.
பிறகென்ன....
உங்கள் திட்டம் வெற்றியடைந்துவிடும்...

முன்னரே வாழ்த்துக்கள்....

16 பின்னூட்டங்கள்:

adoi kopi, nalla matuku otu soodu. nee innum thiunthellai. unaku irukuda

//பெயரில்லா கூறியது...
adoi kopi, nalla matuku otu soodu. nee innum thiunthellai. unaku irukuda //

ஏனய்யா... அந்த யாழ்தேவி கருவிப்பட்டையில மறைவாக்குப் பொட மாட்டியளோ?

நல்ல மாட்டுக்குத் தானய்யா ஒரு சூடு... நான் மனுசன்... சூடு வாங்க சூடு வாங்கத்தான் திருந்துவன்...
நீங்கள் தொடருங்கோ....
அதுசரி,
எவ்வளவு வாங்கினியள்?

நல்ல அறிவுரை.....கோபி....

//ஏனய்யா... அந்த யாழ்தேவி கருவிப்பட்டையில மறைவாக்குப் பொட மாட்டியளோ?//நல்ல மனசுதானப்பா உமக்கு...

இரு கைகளும் தட்டினால்தான் சத்தம் வரும்.

என்னைப்பொறுத்தவரை, போலிப்பதிவர்கள்தான் நம்மைத்தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

பிரச்சனைகளை இன்னும் ஒருபடி மேலே கொண்டுபோனவர்கள் போலிப்பதிவர்கள்.

அன்பு நண்பர் ஒருவரின் தளத்திற்கு வந்து ஆசையுடன் பின்னூட்டமிடும் என் முதல் நடவடிக்கையிலேயே, முதலாவதாக கூர்ப்படையா கணனிக்கையாளி ஒருவரின் அநாகரிக விளையாட்டு.
"சந்திரப்பயணங்கள் தொடரட்டும் நண்பரே" குலைப்பவை அப்படியே குலைக்கட்டும்.

இப்ப தான் முழுமையாக வாசித்தேன் உப்படியெல்லாம் நடக்குதா .....

ப்ளீஸ் கோபி... தேவையில்லாத வேலை எதற்கு... பதிவர்கள் ஆக்க பூர்வமாக எழுதலாம். இதை விட்டு விடுங்கள். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்...

// Balavasakan கூறியது...
நல்ல அறிவுரை.....கோபி.... //

ம்... எதிர்காலத்தில் பயன்படுத்துங்கள்...

// சந்ரு கூறியது...
//ஏனய்யா... அந்த யாழ்தேவி கருவிப்பட்டையில மறைவாக்குப் பொட மாட்டியளோ?//நல்ல மனசுதானப்பா உமக்கு...

இரு கைகளும் தட்டினால்தான் சத்தம் வரும்.

என்னைப்பொறுத்தவரை, போலிப்பதிவர்கள்தான் நம்மைத்தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

பிரச்சனைகளை இன்னும் ஒருபடி மேலே கொண்டுபோனவர்கள் போலிப்பதிவர்கள். //

நான் நல்லவன் தானே?

ம்.. போலிப் பதிவர்கள் தான்...

ஆனால் இது உள்குத்தகள் பெரிதாக அற்ற மொக்கைப் பதிவு தான்...

//சயந்தன் கூறியது...
அன்பு நண்பர் ஒருவரின் தளத்திற்கு வந்து ஆசையுடன் பின்னூட்டமிடும் என் முதல் நடவடிக்கையிலேயே, முதலாவதாக கூர்ப்படையா கணனிக்கையாளி ஒருவரின் அநாகரிக விளையாட்டு.
"சந்திரப்பயணங்கள் தொடரட்டும் நண்பரே" குலைப்பவை அப்படியே குலைக்கட்டும் //

அழகான தமிழ் நண்பரே... கூர்ப்படையா கணணிக்கையாளி...
எதிர்காலத்தில் பயன்படுத்த உதவும்...

ம்... என்ன செய்வது... கூர்ப்படைவார்கள் கொஞ்சம் காலம் தாழ்த்தியாவது என்று எதிர்பார்ப்போம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

//Balavasakan கூறியது...
இப்ப தான் முழுமையாக வாசித்தேன் உப்படியெல்லாம் நடக்குதா ..... //

உது நடக்கிறதில்ல... உது சும்மா கற்பனை தான் கண்டியளோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

//பெயரில்லா கூறியது...
ப்ளீஸ் கோபி... தேவையில்லாத வேலை எதற்கு... பதிவர்கள் ஆக்க பூர்வமாக எழுதலாம். இதை விட்டு விடுங்கள். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்...//

உங்கள் பெயருடன் சொல்லியிருக்கலாமே சகோதரா?
என் மீது, பதிவர்கள் மீது அக்கறை உள்ள நீங்கள் உங்களை ஏன் வெளிக்காட்டாமல் பதில் சொன்னீர்கள்?

சில அனுபவங்களுக்குப் பிறகு யாரையும் நம்பமுடியவில்லை.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
இந்தப் பதிவுக்குப் பின் நான் எனது வழமையான பாணியில் தான் பதிவிடுவேன்.
நன்றிகள்...

நல்லது சொல்ல எதுக்கு பெயர்...
பிரயோசனமாக சண்டை பிடிக்கலாம்... இது தேவை இல்லாதது....
வலை பதிவர்கள் ஊடகவியலாலர்கலுக்கு ஒரு உறவு தேவை. மோதும் போது ஏற்க முடியாத சில கருத்துக்கள் வருகின்றது... பெயரில்லாத பன்னாடை பரதேசிகள் எல்லாம் பின்னுட்டம் இடுகின்றது . துண்டி விட்டு வேடிக்கை பாக்குது..

//பெயரில்லா கூறியது...
நல்லது சொல்ல எதுக்கு பெயர்...
பிரயோசனமாக சண்டை பிடிக்கலாம்... இது தேவை இல்லாதது....
வலை பதிவர்கள் ஊடகவியலாலர்கலுக்கு ஒரு உறவு தேவை. மோதும் போது ஏற்க முடியாத சில கருத்துக்கள் வருகின்றது... பெயரில்லாத பன்னாடை பரதேசிகள் எல்லாம் பின்னுட்டம் இடுகின்றது . துண்டி விட்டு வேடிக்கை பாக்குது.. //

நீங்களும் பெயரில்லாமல் வந்துகொண்டு மற்றைய பெயரில்லாதவர்களைத் திட்டுவது அவ்வளவு நன்றாக இல்லை....
நான் உங்களின் அடையாளம் கேட்டது இதை யார் எனக்குக் கூறுகிறார்கள் என்றறியவே..
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய மாட்டேன்...

நான் ஊடகவியலாளர்களை எதிர்க்கவில்லை.
எனக்கு ஊடகவியல்துறை பிடிக்கும்... வாய்ப்புக் கிடைத்தால் ஊடகவியலாளனாக ஆகும் ஆசையும் உண்டு.
நான் யாரையும் தரக்குறைவாகத் திட்டவில்லை.
ஆனால் பதிவர்களை தனிப்பட்ட ரீதியில் தரக்குறைவாக வந்த பதில்களுக்கு பதில் சொல்வதை நிறுத்தினாலும் எம் மீதான தாக்குதல் குறையவில்லை.

பதிவர்கள் அன்பானவர்கள்...
பழகிப்பாருங்கள்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்

அ முதல் Z வரை

http://yovoice.blogspot.com/2009/11/z.html

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்

அ முதல் Z வரை

http://yovoice.blogspot.com/2009/11/z.html //

தொடர்கிறேன் யோ...
அழைப்புக்கு நன்றிகள்....