க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

காதலி: நாங்க கலியாணம் முடிச்சதும், உன்ர எல்லாத் துக்கங்களிலயும், கஷ்ரங்களிலயும் உனக்கு ஆறுதலா இருக்க விரும்புறன். உன்ர கண்ணீர எப்பயும் துடைக்க விரும்புறன்.
காதலன்: உன்ர அன்புக்கு நன்றி. ஆனா எனக்குத் தான் இப்ப எந்தக் கஷ்ரமோ துன்பமோ இல்லையே?
காதலி: அது ஏனென்டா நாங்க இன்னும் கலியாணம் கட்டேலயே...


வழிகாட்டி: வாங்கோ... இது தான் நயகரா நீர்வீழ்ச்சி.(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...
இந்த வீழ்ச்சிகளின்ர சத்தம் மிகப்பெரியது. 20 சுப்பர்சொனிக் விமானங்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலால பறந்தாலும் அந்த விமானங்களின்ர சத்தம் கீழ நிக்கிற எங்களுக்கு கேக்காது. அந்தளவுக்கு இரைச்சல் வாய்ந்தது.
அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்.


நம்ம சுப்பிரமணியம் அண்ண புதுசா மாருதி கார் வாங்கினார்.
கார் வாங்கிற்று சொந்த ஊருக்குக் கிளம்பினார்.
கொழும்பில இருந்து சிலமணி நேரங்களிலயே வவுனியாவுக்குப் போய்ச் சேர்ந்திட்டார்.
அங்க போய் ரெண்டு, மூண்டு நாள் இருந்திற்று ஒருநாள் விடிய கொழும்பில இருக்கிற மனிசிக்கு அழைப்பு எடுத்தார்.
'இஞ்ச, நான் இப்ப வெளிக்கிடுறன். அங்க 5,6 மணித்தியாலத்தில வந்திடவன்' எண்டார்.
மனுசியும் பாத்து பாத்து களைச்சுப் போச்சுது.
அழைப்பு எடுத்து இரண்டாவு நாள் களைச்ச சுப்பிரமணியத்தார் வந்து சேர்ந்தார்.
'என்னப்பா நடந்தது? ஏன் பிந்தினது?' எண்டு மனுசி கேட்டிச்சு.
'இவங்கள் கார் செய்யிறவங்களுக்கு விசர். மூளை இல்ல. முன்பக்கம் போறதுக்கு 4 gear வச்சிருக்கிறாங்கள். ஆனா பின்பக்கம் வாறதுக்கு ஒரே ஒரு கியர் தான். முட்டாளுகள்...' எண்டார் சுப்பிரமணியத்தார்.


ஆசிரியை: எருதும், பசுவும் புல் 'மேய்ந்தது' என்ற வாக்கியத்தை சரியாக சொல்...
மாணவன்: பசுவும், எருதும் புல் மேய்ந்தது
ஆசிரியை: ஏன் அப்பிடி?
மாணவன்: பெண்களுக்கு முதலிடம் ரீச்சர்.


திருமணத்தின் முன்னர் ஓர் ஆண் ஓர் பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் அது அவள் மீது அவன் காட்டும் அன்பு.
திருமணத்தின் பின்னர் அவளின் கையை இறுகப் பற்றிப் பிடித்தால் அது தற்பாதுகாப்பு.


ஓர் கணவனின் ஆதங்கம்.
என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்கள் என்னும் அழகைப் படைக்கும் கடவுள், பின்னர் ஏன் அவர்களை மனைவிகளாக மாற்றிவிடுகிறான்?


தன்பக்கம் உண்மையிருக்கும் போது அதை ஏற்று சரணடைபவன், நேர்மையாளன்.
தன்கருத்து பற்றி முடிவாகத் தெரியாத போது சரணடைபவன், பரந்த மனம் கொண்டவன்.
தன்பக்கம் உண்மை இருந்த பொழுதிலும் சரணடைந்து மன்னிப்புக் கேட்பவன், கணவன்.

(தலைப்பு விளக்கம்....
இதை வாசித்துவிட்டு 'இவன் திருந்த மாட்டனா... எப்ப பாத்தாலும் பெண்களை குறை சொல்றதயே பிழைப்பா வச்சிருக்கிறான்' என்று நீங்கள் மனதில் நினைத்ததைத் தான் தலைப்பாக இட்டிருக்கிறேன்...
நான் பெண்களை நகைச்சுவைகளில் அதிகம் எடுக்கக் காரணம், அப்போது தான் பெரும்பான்மை ஆண் வாசகர்கள் சிரிப்பீர்கள்.
பெண்கள் புத்திசாலிகள் என்பதால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள்...
இது எப்பிடி இருக்கு விளக்கம்....???)


*******************************************************************************************

இருக்கிறம் சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அச்சுவலைச் சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முதலாவது பதிவர் சந்திப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருந்ததைவிட இம்முறை கொஞ்சம் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் தான் நிறையப் பேரை அறிந்து கொண்டேன்.
முதலாம் சந்திப்பில் தெரியாத முகங்களை சந்திக்கச் சென்றேன், இம்முறை தெரிந்த முகங்களை அறியச் செல்கிறேன்.

ஆனால் ஒரு முக்கியமான வேண்டுகோள்...
இன்று நடக்கும் அச்சுவலைச் சந்திப்பில் எனக்கு (அதாவது கனககோபிக்கு) இரசிகர் மன்றம் வைக்கப் பேச்சுக்கள் நடப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்தையக முயற்சி எடுப்பவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள், எச்சரிக்கை.
எனது பெயரில் எந்த முயற்சியை எடுத்தாலும் என்னிடம் தக்க அனுமதி பெற்று செய்யுமாறு வேண்டுகிறேன்.
அத்தோடு இரசிகர் மன்றம் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாததால் அந்த முயற்சியைக் கைவிடுமாறும் அன்பாக வேண்டுகிறேன்.
என்னை கெளரவப்படுத்த நினைத்தால் ஏற்கனவே உள்ள அகில உலக கனககோபி இரசிகர் மன்றத்தில் சேர்ந்து அதற்குரிய சந்தாப்பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்...

(யாராவது இதை வாசிச்சிற்று கொலைவெறியோட என்னத் தேடினா, அவங்களுக்கு நான் சொல்றது ஒண்டே ஒண்டு தான்...
கொலை வழக்கில மாட்டிடுவீங்க... சொல்லிற்றன்....)

*************************************************************************************************************************************

இனி சீரியஸான விடயம்....
அச்சுவலைச் சந்திப்பிற்கு வெள்ளவத்தையிலிருந்து செல்லும் நண்பர்கள் யாராவது என்னையும் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமா?
நான் உங்களோடு எங்கே, எத்தனை மணிக்கு இணையலாம் என மின்னஞ்சல் செய்வீர்களா???

8 பின்னூட்டங்கள்:

அப்பன், கலியாணத்தைப்பற்றி கனக்கக் கதைக்கிறீங்கள், என்னவோ நடக்குது.

ரசிகர் மன்றம் வேண்டாமென்றால் மக்கள் நற்பணி மன்றம் தொடங்கலாமா டாக்டர் கோபி?

இன்று மாலை சந்திக்கலாம்.

//(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...//

கவனமாக வாசித்தேன்.....ஹீ..ஹீ..

//அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்//

பெண்கள் உங்களை கொலை வெறியோடு தேடிக்கொண்டு இருப்பதாக தகவல்........... எதுக்கும் கவனமா இருங்கள்......

நல்லாயிருக்கு....:))))

நீங்கள் திருந்த வேண்டாம் ...
பேந்து இப்படி அருமையான மொக்கை பதிவுகளை யார் தருவார்கள்

// Subankan கூறியது...
அப்பன், கலியாணத்தைப்பற்றி கனக்கக் கதைக்கிறீங்கள், என்னவோ நடக்குது.//

உங்களுக்குத் தெரியாமலயா சுபாங்கன் அண்ணா


//ரசிகர் மன்றம் வேண்டாமென்றால் மக்கள் நற்பணி மன்றம் தொடங்கலாமா டாக்டர் கோபி?//
நான் தயார்....

//இன்று மாலை சந்திக்கலாம். //
சந்திச்சிற்றமே...

நன்றி சுபாங்கன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

//Bavan கூறியது...
//(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...//

கவனமாக வாசித்தேன்.....ஹீ..ஹீ..//

நீங்கள் நல்லவர் எண்டு இந்த ஊருக்கே தெரியுமே....

//அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்

பெண்கள் உங்களை கொலை வெறியோடு தேடிக்கொண்டு இருப்பதாக தகவல்........... எதுக்கும் கவனமா இருங்கள்...... //

இல்லை இல்லை...
அவங்க ரொம்ம்ம்மபப நல்லவங்க....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

// வேந்தன் கூறியது...
நல்லாயிருக்கு....:)))) //

நன்றி....

// Balavasakan கூறியது...
நீங்கள் திருந்த வேண்டாம் ...
பேந்து இப்படி அருமையான மொக்கை பதிவுகளை யார் தருவார்கள் //

ஹி ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....