க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பச்சிளம் பாலகர் சங்கத்தின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
பொருளாதாரச் சிக்கல்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அப்பாவிகளான பச்சிளம் பாலகர்களான நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆராயப்பட்டன.
ஆகவே பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்.
'சரி... எங்களுக்கென்று தனிநாடொன்றை உருவாக்குவதில் பிரச்சினை இருக்காது. எம்மால் அது முடியும். ஆனால் உருவாகும் பச்சிளம் பாலகர் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது?'
உண்மையிலே நியாயமான கேள்விதான். எல்லோரும் அமைதியாக இருந்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கச் செயலாளரான யோ வொய்ஸ் எழுந்து 'நாம் தனிநாட்டை பெற்ற பின்னர் வேண்டுமென்று அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம். ஒபாமா பொறுமையிழந்து எம்மைத் திருப்பித் தாக்க கட்டளை பிறப்பிப்பார். உடனே அமெரிக்கா எங்கள் நாட்டைக் கைப்பற்றி எங்கள் நாட்டைத் தங்கள் நாட்டின் மாநிலமொன்றாக மாற்றிவிடும். அதன்பின்னர் நாம் தானாகவே முன்னேறிவிடுவோம்.' என்றார்.
இந்த அருமையான சிந்தனையைக் கேட்ட எல்லோரும் யோ வொய்ஸைப் பாராட்டியதோடு கனககோபிக்குப் பின்னர் யோ வொய்ஸை சங்கத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
அதுவரை அமைதியாகவிருந்த பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் கனககோபியைப் பார்த்த பலரும் 'ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டனர்.
கனககோபி லேசாகச் சிரித்துவிட்டு 'அவர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்றினால் நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?' என்றார்.
அனைவரும் சிந்தித்துவிட்டு கனககோபியை 'வேண்டுமென்றே யோசிப்போர்' சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு மாநாடு நிறைவுபெற்றது.

**********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் தந்தையார் காலமாகிவிட்டார்.
அவர் துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்தார்.
சங்கத்தின் சார்பில் கனககோபி அவரை ஆறுதற்படுத்த அங்கே சென்றிருந்தார்.
நண்பருக்கு ஓர் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவர் இன்னும் அழத்தொடங்கிவிட்டார்.
'ஏன் கூடுதலாக அழுகிறாய்?' என்று தலைவர் கேட்டார்.
'இப்போது தான் என் சகோதரி அழைப்பெடுத்தார். அவரது தந்தையும் இறந்துவிட்டாராம்.' என்றார் நண்பர்.

***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...
25 வயசில காதலிச்சா, இப்ப தான் உழைக்க தொடங்கியிருக்கிறாய் அதுக்குள்ள காதல் தேவைப்படுதோ? எண்டுறீங்க...
30 வயசில காதலிச்சா, இந்தக் கழுதை வயசில உனக்கேன்ரா காதல் எண்டுறீங்க...
நாங்க அப்ப எப்பதான்ரா காதலிக்கிறது?'

நீங்களே சொல்லுங்கோ அவர் பச்சிளம் பாலகர் தானே???

***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் தலைவரான கனககோபி அண்மையில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்துவிட்டார்.
எல்லோரையும் போல வெறுமனே 'I love you' என்றோ அல்லது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றோ சொல்லவிரும்பாத அவர் புதுமையாக தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் அந்தப்பெண் ஏன் கனககோபியை காதலிக்கத் தொடங்கினார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'

************************************************************************************************

குறிப்பு: இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எந்த தீய நோக்குடனும் அல்ல.
இங்கே பெயர் குறிப்பிட்ட பதிவர் சகோதரர்கள் இவற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

************************************************************************************************

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் இரண்டு ஏற்கனவே தயாராகிவிட்டது. எனினும் இந்தப் பதிவின் பின்னர் பதிவிடுகிறேன்.

29 பின்னூட்டங்கள்:

பச்சைப் புள்ளைங்களெல்லாம் எமகிரதகர்களாக இருப்பார்கள் போல இருக்கே.

:)

போலி ப.பா.ச. ஒழிக....

//பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்//

எங்களைப் போன்ற பல பச்சிளம் பாலகர்கள் இருக்கும்போது வந்திக்கு பச்சிளம் பாலகர் சங்கத்திலே பிரச்சாரச் செயலாளர் பதவி கொடுப்பது பக்கச் சார்பானது. இதனைகே கண்டித்து நாளை நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யப்போகின்றோம்.

யாராங்கே ஆண் நமீதா போல் இருக்கும் கோபி தன்னைப் பச்சிளம் பாலகர் என்கின்றார் இது எம் இனத்திற்க்கே இழுக்கு அவரை இழுத்துக்கொண்டுபோய் மருதமூரான், சந்ரு, புல்லட், லோஷன் போன்ற முத்திய இளைஞர்களுடன் சேர்த்துவிடுங்கள்.

நிறைய இடங்களில் சிரித்தேன் அதிலும் இந்த இடம் கலக்கல். //ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?//

மருதமூரானின் விடயம் அப்பட்டமான உண்மை. அவர் என்னை இதேகேள்விகளை ஒருமுறை கேட்டார்.

////பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...////

வணக்கம் பதிவுலக நண்பர்களே,

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளை மாத்திரமே அண்ணன் கனககோபி அவர்களுக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தேன். மீதமுள்ள பகுதிகளை அவரே முயற்சி செய்து சேர்த்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன். அண்ணனின் சிறிய தவறை இந்த மருதமூரான் தம்பி மன்னிக்கிறார். அதனால், தொடர்ந்தும் பச்சிளம் பாலகர் சங்கத்தில் ஸ்தாபக உறுப்பினராகவும், உதவிப் பொருளாளராகவும் பதவியில் இருக்கிறேன்.

நன்றி,

பால்குடி மறவாத பாலகன்,
மருதமூரான்.

அண்ணே என்ன அண்ணே உங்கள் எல்லோரையும் விட பச்சிளம் பாலகனாக இருக்கும் என்னை விட்டிங்களே. இதை நான் வந்மயுயாக கண்டிக்கின்றேன். என் மாமா வந்தியதேவனிடம் கேளுங்கள் என் பச்சிளம் பாலக விளையாட்டுக்களை சொல்வார்,(நானே சொல்ல மாட்டேன் என்ற தன்னடக்கம் இந்த வயதிலும்) அஓஉரம் வரிக்கு வரி ஒரே ரகளைதான் போங்கோ.

வாழ்நாள் பச்சிளம் பாலகன் சுபாங்கனை விட்டுவிட்டும் பதிவெழுதிய கோபியை வன்மையாக்க் கண்டித்து அவரை சங்கத்தை விட்டே விலக்கிவைக்கிறேன்.

கோபி அண்ணா என்னையும் உங்கள் ப.பா.சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கோ....:)))

டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க..

//// புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.////

நல்ல வேளை நம்ம பொருளாளர் பதவியில புல்லட் கை வைக்கல. தப்பிச்சேன்.

// பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.//
வெகு விரைவில் நான்காம் மாடி அனுபவத்தை எழுதுவிங்க என எதிர்பார்க்கின்றேன்.
// ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?//
சிரித்தேன்....:)))
காதல் சொன்ன விதம் அற்புதம்.
//அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//
இதற்கு உங்கள் மனைவியும் அவளது கணவனும் சம்மதிக்க வேண்டுமே...! :(

//'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//

கலக்கீட்டீங்க கோபி

அது சரி
இந்த ப ..பா சங்கத்துல ஜோயின் பண்ணுறத்துக்கு இன்ன தகுதி உருப்புரிமைக் கட்டணம் எவ்வளவு ன்னு சொன்னீங்கன்னா நானும் ஜோயின் பண்ணிக்கிறேன்

// கோவி.கண்ணன் கூறியது...

பச்சைப் புள்ளைங்களெல்லாம் எமகிரதகர்களாக இருப்பார்கள் போல இருக்கே.

:) //

ஹி ஹி....
எங்கட சங்கத்தில அவ்வளவு பயிற்சி....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

போலி ப.பா.ச. ஒழிக.... //

அதையே தான் நானும் சொல்கிறேன்...
போலிப் பச்சிளம் பாலகர் சங்கங்கள் ஒழிக...
உண்மையான சங்கமான எனது சங்கம் வாழ்க....

//சந்ரு கூறியது...

//பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்//

எங்களைப் போன்ற பல பச்சிளம் பாலகர்கள் இருக்கும்போது வந்திக்கு பச்சிளம் பாலகர் சங்கத்திலே பிரச்சாரச் செயலாளர் பதவி கொடுப்பது பக்கச் சார்பானது. இதனைகே கண்டித்து நாளை நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யப்போகின்றோம். //

வந்தியண்ணா உங்களைத் தேடுவதாகக் கேள்வி....

எங்கட நாட்டி ஆர்ப்பாட்டம் எல்லாம் ரொம்ப சாதாரணம்....
உதுக்கெல்லாம் நாங்கள் மசிய மாட்டம்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா....

//வந்தியத்தேவன் கூறியது...

யாராங்கே ஆண் நமீதா போல் இருக்கும் கோபி தன்னைப் பச்சிளம் பாலகர் என்கின்றார் இது எம் இனத்திற்க்கே இழுக்கு அவரை இழுத்துக்கொண்டுபோய் மருதமூரான், சந்ரு, புல்லட், லோஷன் போன்ற முத்திய இளைஞர்களுடன் சேர்த்துவிடுங்கள். //

என்னை நமீதாவுடன் ஒப்பிட்ட உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன்...
நீங்கள் என்னை 90 வயதுக் கிழவியுடன் ஒப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை...
எனக்குக் கேவலமாக இருக்கிறது...

//நிறைய இடங்களில் சிரித்தேன் அதிலும் இந்த இடம் கலக்கல். //ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?////
நன்றி....

//மருதமூரானின் விடயம் அப்பட்டமான உண்மை. அவர் என்னை இதேகேள்விகளை ஒருமுறை கேட்டார் //
அப்பா மற்றதெல்லாம் பொய் எண்டுறீங்களா???
ஹி ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

//மருதமூரான். கூறியது...

////பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...////

வணக்கம் பதிவுலக நண்பர்களே,

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளை மாத்திரமே அண்ணன் கனககோபி அவர்களுக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தேன். மீதமுள்ள பகுதிகளை அவரே முயற்சி செய்து சேர்த்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன். அண்ணனின் சிறிய தவறை இந்த மருதமூரான் தம்பி மன்னிக்கிறார். அதனால், தொடர்ந்தும் பச்சிளம் பாலகர் சங்கத்தில் ஸ்தாபக உறுப்பினராகவும், உதவிப் பொருளாளராகவும் பதவியில் இருக்கிறேன்.

நன்றி,

பால்குடி மறவாத பாலகன்,
மருதமூரான். //

சும்மா பொய் சொல்லக் கூடாது மருதமூரான் அண்ணா...........
நான் உங்கட தம்பி....
நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்போதும் எனது அலைபேசியில் இருப்பதை தெரிவிக்க விரும்புகிறேன்....
என்னிடம் விளையாட்டுக் காட்டக் கூடாது...

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

// SShathiesh கூறியது...

அண்ணே என்ன அண்ணே உங்கள் எல்லோரையும் விட பச்சிளம் பாலகனாக இருக்கும் என்னை விட்டிங்களே. இதை நான் வந்மயுயாக கண்டிக்கின்றேன். என் மாமா வந்தியதேவனிடம் கேளுங்கள் என் பச்சிளம் பாலக விளையாட்டுக்களை சொல்வார்,(நானே சொல்ல மாட்டேன் என்ற தன்னடக்கம் இந்த வயதிலும்) அஓஉரம் வரிக்கு வரி ஒரே ரகளைதான் போங்கோ. //

என்னை அண்ணா என்றழைத்ததால் உங்களைத் தள்ளிவைக்கிறேன்....
வந்தி மாமாவா? இது நல்லாயிருக்கே....
நன்றி சதீஷ் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

//Subankan கூறியது...

வாழ்நாள் பச்சிளம் பாலகன் சுபாங்கனை விட்டுவிட்டும் பதிவெழுதிய கோபியை வன்மையாக்க் கண்டித்து அவரை சங்கத்தை விட்டே விலக்கிவைக்கிறேன். //

என்னைத் தள்ளி வைக்க நேற்று வந்த பச்சாக்களால் எல்லாம் முடியாது என்பதை அடக்கமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...

நன்றி சுபாங்கன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

// Bavan கூறியது...

கோபி அண்ணா என்னையும் உங்கள் ப.பா.சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கோ....:))) //

விண்ணப்பப் படிவம் நிரப்போணும்....
பாப்பம்....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

//புல்லட் கூறியது...

டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.. //

இது பிரான்ஜ் இல்ல... இது தான் ISO முத்திரை குத்தப்பட்ட ப.பா.சங்கம்...
போலிப் பெயரை பாவித்து சங்கம் நடத்தபவர்களுக்குப் பயப்பட வெண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ;)

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

//// புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.////

நல்ல வேளை நம்ம பொருளாளர் பதவியில புல்லட் கை வைக்கல. தப்பிச்சேன். //

நீங்க செயலாளர் யோ....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ அண்ணா....

////வேந்தன் கூறியது...

// பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.//
வெகு விரைவில் நான்காம் மாடி அனுபவத்தை எழுதுவிங்க என எதிர்பார்க்கின்றேன். ////

அங்க அகலப்பட்டை இணைப்பு இருக்குமோ?

//// ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?//
சிரித்தேன்....:)))
காதல் சொன்ன விதம் அற்புதம். ////

நன்றி....

//அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//
இதற்கு உங்கள் மனைவியும் அவளது கணவனும் சம்மதிக்க வேண்டுமே...! :( //

நான் இன்னும் வாலிபனப்பா....
அவளும் வாலிபி தான்... (ஹி ஹி)
ஆகவே பிரச்சினை இல்லை....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

// Balavasakan கூறியது...

//'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//

கலக்கீட்டீங்க கோபி //

நன்றி...
தேவையெண்டா பாவிச்சுக் கொள்ளுங்கோ.... ஹி ஹி....

//Balavasakan கூறியது...

அது சரி
இந்த ப ..பா சங்கத்துல ஜோயின் பண்ணுறத்துக்கு இன்ன தகுதி உருப்புரிமைக் கட்டணம் எவ்வளவு ன்னு சொன்னீங்கன்னா நானும் ஜோயின் பண்ணிக்கிறேன் //

தகுதி - பச்சிளம் பாலகர்களா இருக்கோணும்...
உறுப்புரிமைக்கட்டணம் மாதம் 5000 ரூபா... எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படல் வேண்டும்....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.....

ஆஹா அருமை !!!
சரி சரி என்னையும் பச்சிளம் பாலகர் சங்கத்தில சேர்த்துக் கொள்ளுங்கவேன்??, ஆனா என்ன சரியா உறுப்புரிமைக் காசு கட்ட மாட்டன்,,,,hi hi hi.....

// tharshayene கூறியது...
ஆஹா அருமை !!!
சரி சரி என்னையும் பச்சிளம் பாலகர் சங்கத்தில சேர்த்துக் கொள்ளுங்கவேன்??, ஆனா என்ன சரியா உறுப்புரிமைக் காசு கட்ட மாட்டன்,,,,hi hi hi..... //

உங்களை நீங்களே பலமுறை கிழவி என்று ஏற்றுக் கொண்டிருந்தாலும், சக பதிவாயினி என்பதால் சங்கத்தில் ஏற்றுக் கொள்கிறேன்...

சந்தாப் பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவையுங்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

இன்று தான் பார்த்தேன்.. பகீரென்று சிரித்து விட்டேன்.
கலக்கல்..

நல்லகாலம் நான் சங்கத்தில் இணையவில்லை.
அதனால் இன்றும் இளைஞராகவே இருக்கிறேன்.