க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பணக்காரர்களின் மனைவிமார் பொதுவாக ஏன் அழகாக இருப்பதில்லை என்ற வினா உங்கள் மனதில் எழுந்திருந்தால் இந்தப் பதிவு அதற்கு விடை பகரும் என்று நம்புகிறேன்.

ஓர் ஊரில் ஓர் பெண் இருந்தாள். அவள் பணக்காரர்கள் அடங்கிய குழுவொன்றிற்கு எழுதிய கடிதம் இதோ.
'நான் நேர்மையாக செயற்பட விரும்புகிறேன். நான் இந்த ஆண்டு 25 வயதை அடைகிறேன். நான் மிகவும் அழகானவள், நல்ல சுவை கொண்டவள், அத்தோடு மிக நல்ல பண்பாடு உடையவள். நான் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு மேல் உழைக்கும் ஒருவரை மணம் முடிக்க விரும்புகிறேன். நீங்கள் சிலவேளை என்னை பேராரச பிடித்தவள் என எண்ணலாம். ஆனால் இப்போதெல்லாம் மாத வருமானம் 1 இலட்சம் என்பது மத்தியதர வர்க்கமாகவே கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த குழுவில் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு மேல் உள்ள யாராவது உள்ளீர்களா? நீங்கள் எல்லோரும் மணமுடித்தவர்களா? நான் உங்களிடம் கேட்க விரும்புவது இது தான். உங்களைப் போல் உள்ள பணக்காரர்களை மணமுடிக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதுவரை காதலித்தவர்களில் அதிக பணக்காரன் வருடம் 10 இலட்சம் தான் உழைத்தான். நான் வாழ விரும்பும் வாழ்க்கைக்கு 10 இலட்சம் போதாது.
நான் சில கேள்விகளை கேட்கிறேன்.
1. மணமுடிக்காத பணக்காரர்கள் எங்கே அதிகமாக இருப்பர்?
(தயவுசெய்து அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் செல்லும் மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகளை வரிசைப்படுத்தவும்.)
2. எந்த வயதினரை நான் குறிவைக்க வேண்டும்?
3. ஏன் பொதுவாக பணக்காரர்களின் மனைவிமார் அழகாக இருப்பதில்லை. நான் பல பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் பெரிதாக கவர்ச்சியாக செயற்படுபவர்களாகவும் இல்லை.
4. உங்கள் மனைவி அல்லது காதலிகளை தெரிவு செய்யும் போது எவ்வாறு தெரிவுசெய்வீர்கள்?
(எனது இப்போதைய இலக்கு மணம் புரிவது தான்)

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
செல்வி. அழகி.

இதோ அதற்கான பதிலை வழங்குகிறார் அந்த குழுவிலுள்ள ஓர் பணக்காரர்.

வணக்கம் செல்வி அழகி அவர்களே!
நான் உங்களது கடிதத்தை மிக ஆவலுடன் வாசித்தேன். உங்களைப் போல் ஏராளமான பெண்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கும் என நம்புகிறேன்.
நான் ஒரு தொழில்வல்லுனராக உங்களுக்கு பதில் வழங்குகிறேன்.
எனது ஆண்டு வருமானம் 20 இலட்சத்துக்கு மேல். ஆகவே நான் இங்கே நேரத்தை வீணடிக்கவில்லை என்பதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
ஓர் வியாபார மனிதனாக இருந்து கொண்டு உங்களை மணப்பது என்பது பிழையான முடிவாகும். அதற்கான காரணம் மிக இலகுவானது. நான் புரிய வைக்கிறேன்.
நீங்கள் என்ன செய்ய முற்படுகிறீர்கள் என்றால் அழகையும் பணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்ய முற்படுகிறீர்கள். நபர் 'அ' அழகை வழங்க, நபர் 'ஆ' அதற்கு பணம் செலுத்துகிறார். மேலோட்டமாக பார்க்கும் போது சரியாகத் தான் தோன்றும். ஆனால் இங்குள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், உங்கள் அழகு குறைவடையும். ஆனால் என் பணம் தானாக பெரிய பிரச்சினைகள் வந்தாலொழிய குறைவடையாது. என் வருமானம் எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் நீங்கள் மேலும் மேலும் அழகாக முடியாது. ஆகவே பொருளியலாளர்களின் நோக்கில் நான் வளரும் சொத்து. நீங்கள் குறையும் சொத்து. குறைவு என்பது சாதாரணமானதொன்றல்ல. வெளிப்படையாகவே மிக வேகமாக குறையும் சொத்து. அழகு ஒன்று தான் உங்கள் சொத்து என்றால் இன்னும் 10 வருடங்களில் உங்கள் பெறுமதி இல்லாமலே போய்விடும்.
எங்கள் பங்குவர்த்தகத்தில் பெறுமதி குறையும் போது நாங்கள் பங்குகளை விற்பது வழக்கம். அதனால் தான் நாங்கள் திருமணத்தை பெரிதாக நினைப்பதில்லை.
வருட வருமானம் 20 இலட்சத்தை கொண்ட எவரும் முட்டாளல்ல. நாங்கள் உங்களை காதலிக்கவே விரும்புவோம், மணமுடிக்க அல்ல. ஆகவே பணக்காரனொருவனை மணமுடிக்கும் உங்கள் ஆசையை கைவிடுங்கள். மறுதலையாக நீங்கள் 20 இலட்சம் உழைப்பவராக மாறலாம். இந்த முறையில் சிலவேளையில் நீங்கள் தேடும் பணக்காரரொருவரை மணமுடிக்க வாய்ப்புக்கள் உள்ளன.'

12 பின்னூட்டங்கள்:

இதென்ன புதுக் கதை....? ஆனால் நல்லா இருக்கு.

அழகியின் கேள்வி சுவாரஸ்யம்.! பணக்காரனின் பதில் தான் இடிக்கிறது........

// tharshayene கூறியது...
இதென்ன புதுக் கதை....? ஆனால் நல்லா இருக்கு.

அழகியின் கேள்வி சுவாரஸ்யம்.! பணக்காரனின் பதில் தான் இடிக்கிறது........ //

ஓ! நீங்களும் அதே குழு தானா???
அவர் தான் சொல்கிறாரே, அழகையும் பணத்தையும் பண்டமாற்று செய்வது நட்டம் என்று...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// எங்கள் பங்குவர்த்தகத்தில் பெறுமதி குறையும் போது நாங்கள் பங்குகளை விற்பது வழக்கம். அதனால் தான் நாங்கள் திருமணத்தை பெரிதாக நினைப்பதில்லை.
வருட வருமானம் 20 இலட்சத்தை கொண்ட எவரும் முட்டாளல்ல. நாங்கள் உங்களை காதலிக்கவே விரும்புவோம், மணமுடிக்க அல்ல. ஆகவே பணக்காரனொருவனை மணமுடிக்கும் உங்கள் ஆசையை கைவிடுங்கள்//

அவரும் அதைத் தானே திருப்பிச் சொல்லுகிறார்..........?

அது சரி எந்தக் குழு? ........

//அது சரி எந்தக் குழு? ........ //

பணக்கார முட்டாள்களைத் தேடி அலைவோர் சங்கம்...

என்ன நக்கலே !

பணக்காரர் முட்டாளேண்டால் ,அப்ப நாங்க புத்திசாலிகள் தானே ?அதைத் தானே முதலிலேயே சொன்னன்.....
late pik-up!.......

// tharshayene கூறியது...
என்ன நக்கலே !

பணக்காரர் முட்டாளேண்டால் ,அப்ப நாங்க புத்திசாலிகள் தானே ?அதைத் தானே முதலிலேயே சொன்னன்.....
late pik-up!....... //

பணக்காரர் முட்டாள்கள் இல்லை என்று தான் அந்த பணக்காரர் சொன்னார்.
நான் நக்கல் விடேல...
(உண்மைய சொன்னா நக்கல் எண்டுறாங்க...)
ம்... ஏதோ...
வாழ்த்துக்கள்...

நீங்கள் தானே சொன்னியள், பணக்கார முட்டாள்களைத் தேடி அலைவோர் சங்கம்
எண்டு......


சரி நானும் வாழ்த்துறன் ..(?!)...

மச்சான் சர்ச்சை நிறைந்த விடயங்களை போடுறீங்க..

// tharshayene கூறியது...
நீங்கள் தானே சொன்னியள், பணக்கார முட்டாள்களைத் தேடி அலைவோர் சங்கம்
எண்டு......


சரி நானும் வாழ்த்துறன் ..(?!)... //

நீங்கள் அலையிறியள்... ஆனா அப்பிடி யாரும் இல்ல...
கானல் நீர உண்மையெண்டு நம்பிறவங்கள தான் சொன்னன்...
கரத்துக்கும் வருகைக்கும் ஆப்புகளுக்கும் நன்றி.

// M.Buveraj கூறியது...
மச்சான் சர்ச்சை நிறைந்த விடயங்களை போடுறீங்க.. //

சர்ச்சை எதுவுமே இல்லை... அது வெறும் மொக்கைப் பதிவு...

அந்த அழகிக்கு எனது அட்ரஸை கொடுக்கவும்..

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
அந்த அழகிக்கு எனது அட்ரஸை கொடுக்கவும்.. //

ஆகவே நீங்க வருஷத்துக்கு 20 இலட்சத்துக்கு மேல உழைக்கிறீங்க என்டுறீங்க???
சரி...
வெள்ளை வான் விரைவில் உங்கள் வீட்டைத் தட்டும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.