க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பதிவிற்கு முன்பு நான் சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
நான் நாத்திகக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திகன்.
எமக்கு மேலான சக்தியை நம்புகின்ற போதிலும் மதங்களையும், வழிபாடுகளையும் தேவையில்லையென்று கருதுகின்றவன்.

எனது அக்காவிற்கு தரம் 2 இல் படிக்கின்ற ஓர் மகள் இருக்கின்றாள். கொழும்பில் இருக்கின்ற பிரபலமான மகளிர் பாடசாலையில் கல்விகற்கிறாள்.
சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி.
இது அம்மா பகவான் என்பவருக்கு எதிரான ஆக்கமல்ல. அவரை பின்பற்றுபவர்களுக்கு எதிரான ஆக்கமுமல்ல. அந்த நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்க எத்தனிப்பவர்களுக்கு எதிரானதே ஆகும்.

8 வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே?

நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது. ஆகவே அது பிழையானதல்ல.
ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஓர் விடயத்தை எவ்வாறு திணிக்கலாம்?

சில காலங்களுக்கு முன்னர் நான் இந்த அம்மா பகவான் பற்றி ஆராய்ந்த போது எனக்கு சில விடயங்கள் அறியக் கிடைத்தன.
அவரின் உண்மையான பெயர் விஜயகுமார் என்றும் அவர் இந்தியாவின் அரச காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக பணிபுரிந்தார் என்றும் அங்கிருந்து பணமோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட இன்னொரு நிறுவனத்தை தான் தொடங்கினாரென்றும் அங்கும் பணமோசடி செய்து காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது.
அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.

சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரது இயற்பெயர் விஜயகுமார் என்பதும், அவர் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதையும் அவரது பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் காப்புறுதி நிறுவனத்திலிருந்து தானாக விலகியதாகவும், அவர் புதிய நிறுவனம் தொடங்கியமை உண்மை என்றும் ஆனால் அங்கே பணமோசடி நடைபெறவில்லை என்றும் கூறினார்.
1990 இல் காவல்துறையினர் அவரை பெண்கள் துஷ்பிரயோகத்திற்காக கைதுசெய்ய முயன்றார்கள் என்றும் ஆனால் கைதுசெய்யவில்லை என்றும் மறுத்தார். (விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்!)

ஆகவே நான் மேலே கூறியவை உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இவரைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஓர் ஆசிரியர் உண்மை நிலை தெரியாமல் எவ்வாறு செயற்படலாம்?
ஆகக் குறைந்தது அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி பெறப்பட்டதா?

ஏன் இவ்வாறு ஓர் சமூகத்தை பிழையான வழியில் செலுத்த முயல்கிறீர்கள்?

இதே போன்றதொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு நேரடியாக நடந்தது.
இலங்கையிலுள்ள ஆன்மிக நிறுவனமொன்று (ஒருவகை மிஷன்) வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு உணவு, உடைகளை அனுப்பியது. அந்த குழுவில் என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அந்தப் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கமைய அங்கே சென்றேன்.
(நான் இரண்டு நாட்கள் அதுவும் அரை நாட்கள் தான் செய்தென். அந்த நண்பர்கள் ஏராளமான நாட்களாக அந்தப் புனிதமான பணியை செய்தார்கள். என்னை விளம்பரப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.)

மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.
நான் அந்த நண்பனிடம் கேட்டேன், 'எல்லாம் செய்கிறீர்கள் சரி. ஆனால் ஏன் அந்த விபூதி உட்பட்ட சமயப் பொருட்கள். அந்த மக்களில் வேறு சமயத்தவர்கள் இருக்கமாட்டார்களா? நாத்திகர்கள் இருக்கமாட்டார்களா? அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நீங்கள் சமயத்தை அந்த மக்களிடம் திணிக்கிறீர்கள் அல்லவா? ஆங்கிலேயர்கள் எம்மை ஆண்டுவிட்டு எம்மிடம் ஆங்கிலத்தையும் அவர்களது சமயத்தையும் திணித்துவிட்டுச் சென்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? கிறிஸ்தவர்கள் மதமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்றேன்.
நண்பர் விடை சொல்லவில்லை. அவரால் முடியாது. ஆனால் அவர் வெறும் தொண்டர் தான். தலைகள் தான் இவற்றிற்கு பதிலளிக்க வேண்டும்.

குறிப்பு: எந்த மதங்களையோ, அவர்களின் நம்பிக்கைகளையோ கேவலப்படுத்தும் நோக்குடனோ அல்லது எந்த தனிநபர்களிற்கு எதிராகவோ இந்தப் பதிவை இடவில்லை.
நண்பர்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் உங்கள் பெயர்களுடன் பதிலளியுங்கள். பெயரை சொல்ல விரும்பாவிடின் பெயரில்லாமல் சொல்லுங்கள். ஆனால் இழிசொற் பிரயோகம் வேண்டாம். ஏற்கனவே இருமுறை நண்பரொருவர் இழிசொற்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் முன்னைய ஆக்கங்களில்.

90 பின்னூட்டங்கள்:

//அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி//

இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.

உந்த பகவான்களை நினைத்துப் பெருமை கொள்கின்றேன். ஏனெனில், முட்டாள் தனமான உலகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

வேறு என்னத்தைச் சொல்ல... அல்லது யாரைப் போய் நோக முடியும்

//பிளாகர் வந்தியத்தேவன் கூறியது...

//அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி//

இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.//

ம்...
நீங்கள் சொல்வது சரிதான்...
பாடசாலைகள் மதகூடங்களாக மாறக் கூடாது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

//பிளாகர் ஆதிரை கூறியது...

உந்த பகவான்களை நினைத்துப் பெருமை கொள்கின்றேன். ஏனெனில், முட்டாள் தனமான உலகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

வேறு என்னத்தைச் சொல்ல... அல்லது யாரைப் போய் நோக முடியும் //

சரியாகச் சொன்னீர்கள்...
நம்மை நாம் தான் நோக வேண்டும்...

அதுசரி...
நீங்களும் நானும் ஒரு பகவான் கோயில் தொடங்குவமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

//இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.//

உமது கருத்துகள் உமது வெளிபாடுகளாக அமையலாம் அதை விட்டு விட்டு அதை முடிவாக நினைகவேண்டாம்.இக் காலத்தில் மாணவர்களை ஆபாச படம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவரது ஆசிரியர் இவரை தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை.அதை பின் பற்றுவது பற்றாமல் விடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா.

எனக்கும் இந்த அம்மா பகவான் என திடீரென முளைத்த கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை பலபேர் அதை செய்கிறார், இதை செய்கிறார். அதனால் பின்பற்ற அழைத்தார்கள். அவர்களிடம் நான் கூறியது மெஜிக் செய்கிறவர்களும் இதை தானே செய்கிறார்கள் பின்னர் அவுர்களையும் நாங்கள் கடவுளாக பின்பற்றலாமே..

பிரேமானந்தா சுவாமிகள் என ஊர ஏமாற்றியவனுக்கு கடைசியில் நடந்தது சகலருக்கும் தெரியும்.

நானும் ஒரு இந்து, கடவுளை நம்புகிறவன். ஆனால் இந்த மாதிரி திடீர் கடவுள்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

நண்பர்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் உங்கள் பெயர்களுடன் பதிலளியுங்கள். பெயரை சொல்ல விரும்பாவிடின் பெயரில்லாமல் சொல்லுங்கள். ஆனால் இழிசொற் பிரயோகம் வேண்டாம். ஏற்கனவே இருமுறை நண்பரொருவர் இழிசொற்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் முன்னைய ஆக்கங்களில்

இவர்களை ஒன்றும் பண்ண இயலாது. முகத்தை வெளி காட்ட மறுக்கும் முகமூடி திருடர்கள் போன்றவர்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.

எல்லா அனானிகளும் அவ்வாறல்ல. சில பேர் பெயர் சொல்ல விரும்பாமல் காத்திரமான மறு மொழியினை கூறி செல்வார்கள். அவர்களை நான் இதில் சேர்க்க வில்லை.

//பெயரில்லா பெயரில்லா கூறியது...

//இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள்.//

உமது கருத்துகள் உமது வெளிபாடுகளாக அமையலாம் அதை விட்டு விட்டு அதை முடிவாக நினைகவேண்டாம்.இக் காலத்தில் மாணவர்களை ஆபாச படம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவரது ஆசிரியர் இவரை தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை.அதை பின் பற்றுவது பற்றாமல் விடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா. //

சகோதரா பெயரில்லாதவரே...
அவர் கூறிய கருத்தை முழுமையாக வாசியுங்கள்...
அவர் என்ன சொன்னார் என்றால் 8 வயது குழந்தையிடம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத விடயத்தை திணித்தது பிழை என்பதையே.
8 வயது குழந்தையிடம் நீங்கள் இப்போது சொல்பவை வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிலைத்து நிற்குமே?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்களே?

அவர் தனது கருத்தை யாரிடமும் திணிக்கவில்லை. நீஞ்கள் தான் உங்கள் கருத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.

அவர் என்னை அறிந்தவர், மூத்தவர் என்பதால் எனக்குத் தான் அறிவுரை சொன்னார்.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

எனக்கும் இந்த அம்மா பகவான் என திடீரென முளைத்த கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை பலபேர் அதை செய்கிறார், இதை செய்கிறார். அதனால் பின்பற்ற அழைத்தார்கள். அவர்களிடம் நான் கூறியது மெஜிக் செய்கிறவர்களும் இதை தானே செய்கிறார்கள் பின்னர் அவுர்களையும் நாங்கள் கடவுளாக பின்பற்றலாமே..

பிரேமானந்தா சுவாமிகள் என ஊர ஏமாற்றியவனுக்கு கடைசியில் நடந்தது சகலருக்கும் தெரியும்.

நானும் ஒரு இந்து, கடவுளை நம்புகிறவன். ஆனால் இந்த மாதிரி திடீர் கடவுள்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை //

சிலருடன் முன்பு இது பற்றி வாதிட்டேன்.. ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
கிணற்றில் விழப்போகிறேன், இயலுமானால் தடுத்துப் பார் என்று சவால் விடுபவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்சத்திரம் அவர்களே...

//பிளாகர் யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
இவர்களை ஒன்றும் பண்ண இயலாது. முகத்தை வெளி காட்ட
மறுக்கும் முகமூடி திருடர்கள் போன்றவர்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.

எல்லா அனானிகளும் அவ்வாறல்ல. சில பேர் பெயர் சொல்ல விரும்பாமல் காத்திரமான மறு மொழியினை கூறி செல்வார்கள். அவர்களை நான் இதில் சேர்க்க வில்லை//

எனக்கு பெயரில்லாமல் கருத்து சொல்பவர்கள் மேல் எந்த வெறுப்பும் இல்லை.
ஆனால் எனது சொத்தி ரீ.வி பதிவிலும், சச்சின் ரொம்ப நல்லவர பதிவிலும் ஓர் பெயரில்லா (அல்லது இருவர்) நண்பர் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியிருந்தார்...
அதற்குத் தான் சொன்னேன்...

பார்ப்போம்... திருந்துவார்களா என்று...

//உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா //

முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது.

நன்றாகத்தான் வழிநடத்துகிறார்கள். அந்த ஆசிரியையை நீங்கள் தொடர்புகொண்டு கேட்கவில்லையா?

சொந்த மூளையைக் கொண்டு சிந்திக்க முடியாதவர்கள் பிறர்செல்லும் தவறான வழியிலேயே செல்கிறார்கள்.
கோபி,
திருந்தவேண்டும். அல்லது திருத்தவேண்டும்.

முடிவெடுங்கள்.

//உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா //
பச்சைக் கண்ணாடி போட்டுப்பார்த்தால் எல்லாம் பச்சையாகத் தான் தெரியும்.

//முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது//

இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.

காலம் தான் உன்போன்றவர்களையும் வாளவைக்கும்

// பெயரில்லா கூறியது...
//முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது//

இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.

காலம் தான் உன்போன்றவர்களையும் வாளவைக்கும்//

சொந்த பெயரை கொண்டு கருத்து தெரிவிக்க இயலாத அனாணியே.. இதிலிருந்தே உனது கருத்தை நீயே வெளியே சொல்ல தயங்குவது. தெரிகிறதே?

இப்படி பட்ட உலகத்தில் நானும் கடவுள் தான் ஹா ஹா

இறைவன் ஒருவனே அவனை அன்றி வேறு யாரும் இல்லை
"இதுவே எங்கள் நன்மார்க்கம் சொல்லும் பதில்"

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

எனக்கும் இந்த அம்மா பகவான் என திடீரென முளைத்த கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை பலபேர் அதை செய்கிறார், இதை செய்கிறார். அதனால் பின்பற்ற அழைத்தார்கள். அவர்களிடம் நான் கூறியது மெஜிக் செய்கிறவர்களும் இதை தானே செய்கிறார்கள் பின்னர் அவுர்களையும் நாங்கள் கடவுளாக பின்பற்றலாமே..

பிரேமானந்தா சுவாமிகள் என ஊர ஏமாற்றியவனுக்கு கடைசியில் நடந்தது சகலருக்கும் தெரியும்.//

சாய்பாபா வை மறந்து விட்டிரே???

//ஆகீல் முசம்மில் கூறியது

சாய்பாபா வை மறந்து விட்டிரே???//

சாய்பாபாவை பிரேமானந்தாவுடன் ஒப்பிட இயலாது, சாய்பாபா என்பவரை ஒரு அவதார கடவுளாக வணங்குபவர்கள் ஏராளம். யாரும் அவரை பின்பற்ற பலவந்தமாக அழைக்க வில்லை. ஆகவே சாய்பாபாவை பிரேமானந்தாவுடன் ஒப்பிட வேண்டாம். பிரேமானந்தா ஒரு கள்ளன்.

கனககோபி….

தனி மனித வழிபாடு எங்கும் தேவையற்றது என்ற கொள்கையைக் கொண்டவன் நான். இவ்வாறான தனி வழிபாடுகளே அதிகார துஷ்பிரயோகங்களையும், மக்களின், மதங்களின் பெயரினால் அத்துமீறல்களைச் செய்யவும் உதவுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இருக்கிற மதங்களும் மார்க்கங்களும் போதாதென்று இவர்கள் வேறு ஆரம்பித்து மக்களை மடையர்கள் ஆக்குகிறார்கள். (பதிவு சம்பந்தப்படாத விடயம்: தங்களின் தளம் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்)

//பெயரில்லா சொன்னது…
இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.//

நான் புத்திசாலி இல்லைத்தான் ஆனால் அம்மா பகவானையோ பிரேமானந்தாவையோ கும்பிடுகின்றவன் கிடையாது. எங்கள் குடும்பத்திலையும் யாரும் இல்லை, நண்பர்களும் யாருமில்லை.

நீ புத்திசாலி என்றால் உன் பெயரைச் சொல்லலாமே?

இன்னொரு விடயம் பொதுவாக இலங்கையர் சைவர்கள் நாம் வாழும் நாடு சிவபூமி. அவர்களுக்கு உந்த மறைகழண்ட மனித வழிபாடு பிடிக்காது.

//சாய்பாபா வை
ஒரு அவதார கடவுளாக வணங்குபவர்கள் ஏராளம். யாரும் அவரை பின்பற்ற பலவந்தமாக அழைக்க வில்லை.//
பெயர் இல்லாமல் சொன்னவர் கருத்தையும் பார்த்தேன். உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.
சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..
நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.
இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்..
நீங்க பூசினா திருநீறு நாங்க பூசினா சானமா
தவளை தன் வாயால் கெட்டதுக்கு நீர் தன் உதரணம்

சாய் பாபா பற்றிய இன் வீடியோ bbc ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..

பெயரில்லா கூறியது...

நன்றி என்னை தவளை என குறிப்பிட்டதற்கு, சாய்பாபாவோ அல்லது அம்மா பகவானோ யாரையும் பலவந்தமாக கும்பிட சொல்வதை எதிர்க்கிறேன்.இப்போது இவ்வளவு பேசும் நீங்கள் பாடசாலையில் எதிர்த்து பேசாதிருக்கலாமே..

நான் எந்த தனி மனிதனையும் வணங்குபவனல்ல, ஆனாலும் நான் நாத்திகனல்ல.

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://subankan.blogspot.com/2009/09/blog-post_25.html

வன்னியில் இத்தனை தமிழர்கழும் போரில் மடியும் போது எங்கே போனாராம் இந்த அம்மா பகவான்???

தனிநபர் வணக்கத்தை யார்
திணித்தாலும் அது எதிர்க்கப்
படவேண்டும்.இளம் வயதில்
இப்படியானதிணிப்புக்கு
இடங்கொடுக்கவேண்டாம்.
நேரே அந்த ஆசிரியையிடமே
கூறுங்கள் நிலைமை திருத்தப்
படவேண்டும்

. நல்ல பதிவு கனககோபி, இந்த மாதிரி பதிவொன்றை நானே எழுத இருந்தேன்...
இப்போது பல பாடசாலைகளில் இவ்வாறான முறையில்லக் கடவுள் நிர்ப்பந்திக்கப்படுகிறது. பகல் இடைவேளையின் போது மாணவர்களை இடை மறிச்சு, எழுப்பி வைத்து அம்மாபகவானின் தியானம் என்கிற பெருஞ்சத்தம் இன்னும் எங்களது ஸ்க்கூலில் நடைபெறுகின்றது.இதனால் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட தவணைப் பரீட்சைகளில் மாணவர்கள் குறிப்பிட்ட அளவு நேரத்தை தவற விடுகிறார்கள் இன்னும் காலைக் கூடத்தில், அங்கங்கு முளைக்கின்ற எல்லாச் சாமிகளையும் கூட்டி வந்து, புகுத்தும் முறைகள்....
குழந்தை மாணவர்களின் உளச் சுகாதாரத்தை இவை எந்த அளவு பாதிக்கும் என்பதை கல்வியமைச்சுக்குட்பட்ட பாடசாலைகள் கவனிக்காதா.....

unagalukkaka oru article eluthi irukan enda fb la vanthu parunga enna..

http://www.facebook.com/ajandan?ref=name

add me and c the article..

திருந்தாத உலகம் தீப்பிடித்து எரியும் வீட்டில் எடுக்கிற வரைக்கும் லாபம்

// வந்தியத்தேவன் கூறியது...
//உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா //

முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது. //

ஹி ஹி...
பெயரில்லாதவர்களின் தொல்லைகள் பெருந்தொல்லைகள் ஆகிவிட்டன என?

// இறக்குவானை நிர்ஷன் கூறியது...
நன்றாகத்தான் வழிநடத்துகிறார்கள். அந்த ஆசிரியையை நீங்கள் தொடர்புகொண்டு கேட்கவில்லையா?

சொந்த மூளையைக் கொண்டு சிந்திக்க முடியாதவர்கள் பிறர்செல்லும் தவறான வழியிலேயே செல்கிறார்கள்.
கோபி,
திருந்தவேண்டும். அல்லது திருத்தவேண்டும்.

முடிவெடுங்கள்.//

முன்பு திருத்த முயற்சித்தேன்...
அவர்கள் திருந்துவதாக இல்லை.
அதனால் விட்டுவிட்டேன்..
இப்போது மீண்டும் திருத்த தொடங்கலாம் என்றிருக்கிறேன் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைப் பார்த்த பிறகு...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா //
பச்சைக் கண்ணாடி போட்டுப்பார்த்தால் எல்லாம் பச்சையாகத் தான் தெரியும். //

ம்... அரசியல்... ம்...

// பெயரில்லா கூறியது...
//முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது//

இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.

காலம் தான் உன்போன்றவர்களையும் வாளவைக்கும் //

எனக்குத் தெரிந்தவரை வந்தியண்ணா கும்பிடமாட்டார்.
அவர் குடும்பத்தினர் பற்றித் தெரியாது.
கும்பிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்...
ஆனால் குடும்பத்தினர் ஒருவேளை கும்பிட்டால் அவர்கள் கும்பிடுவதால் வந்தியண்ணா கதைக்கக் கூடாது என்றில்லையே...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
// பெயரில்லா கூறியது...
//முட்டாள் அனானியே அதற்க்கும் இதற்க்கும் முடிச்சுப்போடாதே நீ யார் எங்கிருந்து வந்தாய் எல்லாம் புரிகின்றது//

இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.

காலம் தான் உன்போன்றவர்களையும் வாளவைக்கும்//

சொந்த பெயரை கொண்டு கருத்து தெரிவிக்க இயலாத அனாணியே.. இதிலிருந்தே உனது கருத்தை நீயே வெளியே சொல்ல தயங்குவது. தெரிகிறதே? //

தாழ்வு மனப்பான்மை யோ வொய்ஸ்...
ஒன்றும் செய்ய முடியாது... ;)

// ஆகீல் முசம்மில் கூறியது...
இப்படி பட்ட உலகத்தில் நானும் கடவுள் தான் ஹா ஹா //

நீ உனக்குக் கடவுளாக இருப்பதில் தவறில்லை ஆகில். ஆனால் மற்றவர்கள் உன்னை வழிபடவேண்டும் என்றும் அதுவும் அவர்கள் உனக்குப் பணம் தந்து வழிபடவேண்டும் என்பது தான் பிழை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

// ஆகீல் முசம்மில் கூறியது...
இறைவன் ஒருவனே அவனை அன்றி வேறு யாரும் இல்லை
"இதுவே எங்கள் நன்மார்க்கம் சொல்லும் பதில்" //

எல்லா மதங்களும் இதைத் தான் சொல்கின்றன...
எங்களுக்கு மதவேறுபாடுகள் வேண்டாம்...

// ஆகீல் முசம்மில் கூறியது...
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

எனக்கும் இந்த அம்மா பகவான் என திடீரென முளைத்த கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை பலபேர் அதை செய்கிறார், இதை செய்கிறார். அதனால் பின்பற்ற அழைத்தார்கள். அவர்களிடம் நான் கூறியது மெஜிக் செய்கிறவர்களும் இதை தானே செய்கிறார்கள் பின்னர் அவுர்களையும் நாங்கள் கடவுளாக பின்பற்றலாமே..

பிரேமானந்தா சுவாமிகள் என ஊர ஏமாற்றியவனுக்கு கடைசியில் நடந்தது சகலருக்கும் தெரியும்.//

சாய்பாபா வை மறந்து விட்டிரே??? //

ஆகா...
உசுப்பேத்தி விடுறானே...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//ஆகீல் முசம்மில் கூறியது

சாய்பாபா வை மறந்து விட்டிரே???//

சாய்பாபாவை பிரேமானந்தாவுடன் ஒப்பிட இயலாது, சாய்பாபா என்பவரை ஒரு அவதார கடவுளாக வணங்குபவர்கள் ஏராளம். யாரும் அவரை பின்பற்ற பலவந்தமாக அழைக்க வில்லை. ஆகவே சாய்பாபாவை பிரேமானந்தாவுடன் ஒப்பிட வேண்டாம். பிரேமானந்தா ஒரு கள்ளன். //

கள்ளன் என்று சொல்லி கள்வர்களை கேவலப்படுத்த வேண்டாம் யோ வொய்ஸ்...

// மருதமூரான். கூறியது...
கனககோபி….

தனி மனித வழிபாடு எங்கும் தேவையற்றது என்ற கொள்கையைக் கொண்டவன் நான். இவ்வாறான தனி வழிபாடுகளே அதிகார துஷ்பிரயோகங்களையும், மக்களின், மதங்களின் பெயரினால் அத்துமீறல்களைச் செய்யவும் உதவுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இருக்கிற மதங்களும் மார்க்கங்களும் போதாதென்று இவர்கள் வேறு ஆரம்பித்து மக்களை மடையர்கள் ஆக்குகிறார்கள். (பதிவு சம்பந்தப்படாத விடயம்: தங்களின் தளம் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்) //

முளைத்துவிட்டு வேர் ஊன்றி விட்டதே...

இருக்கின்ற மதங்களே கொடுமை என்பதை சரியாகச் சொன்னீர்கள்....

தளவடிவமைப்ப சார்பாக,
எங்கள் கூகிள் குழுமத்தில் கொல்வின் பெர்னான்டோ என்பவர் கறுப்பு பின்னணி கண்ணை உறுத்துகின்றது என்றார்... அது தான் மாற்றிவிட்டேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

// வந்தியத்தேவன் கூறியது...
//பெயரில்லா சொன்னது…
இப்பொழுது உன் மனசாட்சியை கேள்? உனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அம்மாபகவன் கும்பிடவில்லையா. என்னை முட்டால் என்று சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும் புத்திசாலி கிடையாது.//

நான் புத்திசாலி இல்லைத்தான் ஆனால் அம்மா பகவானையோ பிரேமானந்தாவையோ கும்பிடுகின்றவன் கிடையாது. எங்கள் குடும்பத்திலையும் யாரும் இல்லை, நண்பர்களும் யாருமில்லை.

நீ புத்திசாலி என்றால் உன் பெயரைச் சொல்லலாமே?

இன்னொரு விடயம் பொதுவாக இலங்கையர் சைவர்கள் நாம் வாழும் நாடு சிவபூமி. அவர்களுக்கு உந்த மறைகழண்ட மனித வழிபாடு பிடிக்காது //

என் சந்தேகம் தீர்ந்துவிட்டது...
வந்தியண்ணாவின் குடும்பத்தினரும் வணங்குவதில்லை...
அடித்து முழக்கியிருக்கிறீர்கள் என வந்தியண்ணா நான் இல்லாத வேளையில்...?

// பெயரில்லா கூறியது...
//சாய்பாபா வை
ஒரு அவதார கடவுளாக வணங்குபவர்கள் ஏராளம். யாரும் அவரை பின்பற்ற பலவந்தமாக அழைக்க வில்லை.//
பெயர் இல்லாமல் சொன்னவர் கருத்தையும் பார்த்தேன். உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.
சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..
நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.
இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்..
நீங்க பூசினா திருநீறு நாங்க பூசினா சானமா
தவளை தன் வாயால் கெட்டதுக்கு நீர் தன் உதரணம் //

என்னிடமும் இருக்கிறது சகோதரரே...
ஆனால் என்ன பிரச்சினை என்றால்,
ஆதாரங்கள் எல்லாம் உள்ள நீங்கள் பெயரை மட்டும் ஏன் சொல்கிறீர்கள் இல்லை?
சிலவேளை காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளீரோ?

// M.Buveraj கூறியது...
பெயர் இல்லாமல் சொன்னவர் கருத்தையும் பார்த்தேன். உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.
சாய் பாபா பற்றிய இன் வீடியோ bbc ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..
நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.
இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்..

நீங்க பூசினா திருநீறு நாங்க பூசினா சானமா
தவளை தன் வாயால் கெட்டதுக்கு நீர் தன் உதரணம் //

அடடே...
அது நீங்க தானா...?

உங்களிற்ற எங்க இருக்கெண்டு சொல்ல முடியுமா?
சாயிபாபாவை விட அம்ம பகவானை அதிகம் பேர் வணங்குகிறார்கள் என்பது பிழை என நம்புகிறேன்...
நீங்கள் கிணற்றுத் தவளை போல் அம்மா பகவான் என்ற வட்டத்துக்குள் இருக்கிறீர்கள்..
அம்மா பகவான் என்றால் யாரென்று தெரியாத ஏராளமானோர் உள்ளனர் சகோதரா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
பெயரில்லா கூறியது...

பெயர் இல்லாமல் சொன்னவர் கருத்தையும் பார்த்தேன். உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.
சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..
நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.
இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்..
நீங்க பூசினா திருநீறு நாங்க பூசினா சானமா
தவளை தன் வாயால் கெட்டதுக்கு நீர் தன் உதரணம்

நன்றி என்னை தவளை என குறிப்பிட்டதற்கு, சாய்பாபாவோ அல்லது அம்மா பகவானோ யாரையும் பலவந்தமாக கும்பிட சொல்வதை எதிர்க்கிறேன்.இப்போது இவ்வளவு பேசும் நீங்கள் பாடசாலையில் எதிர்த்து பேசாதிருக்கலாமே..

நான் எந்த தனி மனிதனையும் வணங்குபவனல்ல, ஆனாலும் நான் நாத்திகனல்ல. //

நன்றாகச் சொன்னீர்கள் யோ வொய்ஸ்...
அப்போது எதிர்க்காதத அவரவர் பிழை...
அதுசரி, எந்தப் பாடசாலையில் அப்படி?

// Subankan கூறியது...
தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://subankan.blogspot.com/2009/09/blog-post_25.html //

வருகிறேன் சகோதரா...

// Buvi கூறியது...
வன்னியில் இத்தனை தமிழர்கழும் போரில் மடியும் போது எங்கே போனாராம் இந்த அம்மா பகவான்??? //

M.Buveraj இற்கும் உங்களுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக பல்லி சொல்கிறது...
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

// Thevesh கூறியது...
தனிநபர் வணக்கத்தை யார்
திணித்தாலும் அது எதிர்க்கப்
படவேண்டும்.இளம் வயதில்
இப்படியானதிணிப்புக்கு
இடங்கொடுக்கவேண்டாம்.
நேரே அந்த ஆசிரியையிடமே
கூறுங்கள் நிலைமை திருத்தப்
படவேண்டும் //

இது ஒரு இடத்தில் மட்டும் நடப்பதில்லை நண்பா...
தமிழ் சமுதாயம் முழுமையாகத் திருந்த வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு...
அது சரி, என் மின்னஞ்சல் கிடைத்ததா?
(கடிதம் கிடைச்ச மாதிரி கேக்கிறன் என?)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...

//tharshayene கூறியது...
. நல்ல பதிவு கனககோபி, இந்த மாதிரி பதிவொன்றை நானே எழுத இருந்தேன்...
இப்போது பல பாடசாலைகளில் இவ்வாறான முறையில்லக் கடவுள் நிர்ப்பந்திக்கப்படுகிறது. பகல் இடைவேளையின் போது மாணவர்களை இடை மறிச்சு, எழுப்பி வைத்து அம்மாபகவானின் தியானம் என்கிற பெருஞ்சத்தம் இன்னும் எங்களது ஸ்க்கூலில் நடைபெறுகின்றது.இதனால் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட தவணைப் பரீட்சைகளில் மாணவர்கள் குறிப்பிட்ட அளவு நேரத்தை தவற விடுகிறார்கள் இன்னும் காலைக் கூடத்தில், அங்கங்கு முளைக்கின்ற எல்லாச் சாமிகளையும் கூட்டி வந்து, புகுத்தும் முறைகள்....
குழந்தை மாணவர்களின் உளச் சுகாதாரத்தை இவை எந்த அளவு பாதிக்கும் என்பதை கல்வியமைச்சுக்குட்பட்ட பாடசாலைகள் கவனிக்காதா..... //

இலங்கையில் கல்வியமைச்சு இருக்கிறதா? ;)

தமக்குத் தாமே ஆப்பு வைத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே...
நீங்களும் பதிடுங்கள்...
அப்போது தான் வித்தியாசமான பார்வைகள், எழுத்துக்கள் கிடைக்கும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...

// பெயரில்லா கூறியது...
unagalukkaka oru article eluthi irukan enda fb la vanthu parunga enna..

http://www.facebook.com/ajandan?ref=name

add me and c the article.. //

ம்... வருகிறேன்...

// அம்மா பகவான் கூறியது...
திருந்தாத உலகம் தீப்பிடித்து எரியும் வீட்டில் எடுக்கிற வரைக்கும் லாபம் //

அடடே... வாங்கோ திரு.விஜயகுமார்...
உங்களத் தான் தேடிக் கொண்டிருக்கிறம்...
எங்க நிக்கிறியள் எண்டு சொன்னா வசதியாயிருக்கும்...

Mayooran (வந்தியத்தேவன்) anna ena ithu....
aka poraa iruku

நல்லது நண்பரே உமது கருத்துகளை நான் குற்றம் சொல்லவில்லை முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளும் மதம் என்பது ஒருவனை வழி படுத்த உதவும் சாதனம்(என்னுடைய தனிப்பட்ட கருத்து) இதற்காக நான் அம்மா பகவானை வழிபடுபவன் என்று எண்ண வேண்டாம்...உமது கருத்துகள் சில தனி மனித நம்பிக்கைகளை குற்றம் சொல்வது போல் உள்ளது.. கிறிஸ்தவத்தை பரப்பினார்கள் என்று கூறினீர் ஆனால் இன்றும் கிறிஸ்தவத்தில் சேர்பவர்கள் இருக்கிறார்கள் காரணம் மதக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு....

உம்மை போல் கருத்து உடையவரும் இருக்க வேண்டும்...
எதிரான கருத்துகளை உடையவர்களும்(மேற்படி கருத்துகளை கூறியவர்கள் பெயரில்லாதவர் உட்பட) இருக்க வேண்டும்.. அப்போது தான் தெளிவான முடிவு கிடைக்கும்....

நண்பா காலத்தின் பதில் உன் பக்கம் சார்பாகவே அமையும்.எவ்வளவு காலம் தான் ஏமாற்ற முடியும்.

உங்கள் கருத்து சரியானது.. ஆசிரியையின் முயற்சி மதத்திணிப்பே.. அதுவும் உலகம் புரியாத சிறுகுழந்தையின் மேது என்பதுதான் மகா கொடுமை.. எம்மைப்போல் சகல பலவீனங்களையும் கொண்டவரை கடவுளாக நம்புவதன் லொஜிக் தான் சிரிப்புக்கிடமானது.. கடவுளுக்கு வரைவிலக்கணம் சொல்ல வைக்க வேண்டும்..

அழகிய வார்ப்புரு..

இண்டைக்கு தற்செயலாக உந்த அம்மாபகவான் பஜனை நடக்கும் இடத்துக்கு சென்றேன்.. வெளியில் வந்து சிரித்த சிரிப்பில் இன்னும் இடுப்பு நொகுது.. உப்படியான மனித வணக்கத்தை ஒழுகும் ஆதரிக்கும் அனைவரும் மூளைவளர்ச்சி குறைவானவர்கள் என்பது என்கருத்து.. ஆனால் அப்படிப்பட்ட மூடர்களின் பணத்தையும் நேரத்தையும் இப்படியான தில்லாலங்கடிகள் திருடுவதை அரசாங்கம்தான் தண்டிக்கவேண்டும்.. ஆனால் அங்கிருக்கும் அடிமடையர்களும் சிலர் உந்த பிராடுகளை வணங்கினால் என்ன செய்வது? நான் விரைவில் உது பற்றி எழுத வேண்டும்... அந்த டீச்சர் கிடைத்தால் என் சார்பிலும் ரெண்டு செகிட்டைப்பொத்தி போடுங்கள்...

வந்தி,
வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்க்கும் தைரியமில்லா கூட்டத்துக்கு பதில்சொல்லி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.
இன்னும் கொஞ்ச நாளில் அம்மாபகவான், நாயைப் பார்த்து அதுதான் எறுமை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்பவர்கள்தானே இவர்கள்.

கோபி(கோபி என்று அழைக்கலாமா?)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இப்படிக்கூறுகிறார் "இன்னுமா நீங்கள் எனது புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியென்றால் நான் இதுவரை சொன்னதை நீங்கள் செயலில் காட்டவில்லை என்று அர்த்தம்"

பயப்படாமல் செயலில் இறங்குவோம். நியாயத்தை பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?

ஆகா, உரோமாபுரி பற்றி எரிழ பிடில் வாசித்தவன் போல அன்று அவசரத்தில் பதிவைப் படிக்காமல் தொடர்பதிவுக்கு மட்டும் அழைத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.

என்ன செய்வது?, இங்கே செம்மறியாட்டுக் கூட்டங்கள் கொஞ்சம் அதிகம்தான்.

அவசியமான இடுகை இன்று மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றனர் பலர். எனது கருத்துக்களை ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://shanthru.blogspot.com/2009/09/blog-post_28.html#

//பெயரில்லா கூறியது...

உமது கருத்துகள் உமது வெளிபாடுகளாக அமையலாம் அதை விட்டு விட்டு அதை முடிவாக நினைகவேண்டாம்.இக் காலத்தில் மாணவர்களை ஆபாச படம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவரது ஆசிரியர் இவரை தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை.அதை பின் பற்றுவது பற்றாமல் விடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா.//

இந்த விடயம் தவறில்லை என்று யார் சொன்னது. இது ஒரு மதத் திணிப்பல்லவா? இப்பவே இந்த பிஞ்சுகளிடம் பகவான் பற்றி மனதில் பதிய வைக்கப்படும் நிகழ்வல்லவா?

1. அதிபரிடம் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக முறையிடுவது முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கை. ஆசிரியர்களின் பணி பிள்ளைகளின் பகுத்தறிவினை வளர்ப்பதே.. மூட நம்பிக்கைகளுக்குள் மூழ்கடிப்பதல்ல. இது ஒரு பாரதூரமான செயல். நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். முறைப்பாட்டுக்குப் பின் பாடசாலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறியத்தரவும்.

2. வங்கிக்கொள்ளைக்காரனை ஆதரித்துக்கொண்டு சங்கிலி அறுப்பவனை எப்படி எதிர்க்க முடியாதோ, அதேபோலத்தான் சத்தியசாயி போன்றவர்களை ஆதரித்துக்கொண்டு பிரேமானந்தாவையும் விஜயகுமர் தம்பதிகளையும் எதிர்க்க முடியாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

3. மதநம்பிக்கைகள், மதங்களின் உருவாக்கம் வரலாறு போன்றவற்றை நாம் மெல்ல மெல்ல கற்க வேண்டும். நாம் சார்ந்த மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களின் மூலக்கருத்துக்களையும் அவற்றின் வரலாற்றையும் அவை தோன்றிய காலம், அவை பெற்ற மாற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆய்ந்து கற்கவேண்டும். இதன் மூலம் மட்டுமே மதங்களின் அடிப்படையில், மதங்களின் பெயரால் மக்களை ஏமாற்றுகிற இத்தகைய சமூக விரோதிகளை நாம் உறுதியாகவும், ஆற்றலுடனும் எதிர்க்க முடியும். இல்லாவிட்டால் ஜெகோவாவின் சாட்சிகளை, கோயிலில் அர்ச்சனை செய்வதை ஆதரித்துக்கொண்டு அம்மாபகவானை எதிர்ப்பது போன்ற அடிப்படையற்ற வீண்செயல்களைச் செய்யும் நிலை வந்துவிடும்.

4. அம்மாபகவான் தற்போது வேகமாகப்பரவிவரும் ஒரு சமூக நோய். இதனை உடனடியாக எதிர்த்து அம்பலப்படுத்தி இல்லாமற்செய்யவேண்டும். இது சமூக அக்கறைகொண்ட இளைஞர்களின் கடமை. இந்த அம்மா பகவான் நிறுவனங்களை இங்கே நடத்துபவர்கள் யார், அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்கள் யாரோடெல்லாம் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள் போன்ற தகவல்களை நாம் சேகரிக்கவேண்டும். இது நம்பிக்கை, வழிபாடு போன்ற எளிமையான விசயம் அல்ல. திட்டமிட்ட நிறுவனரீதியான ஒரு மாஃபியா கும்பல்.

பாடசாலையில் மாணவர்களுக்கு சமயங்களைப்படிப்பிக்காமல், மதவாரியாய் பிரித்து, திருஞானசம்பந்தர் ஆண்பனையை பெண்பனை ஆக்கியதையும், யேசுநாதர் எச்சிலால் பார்வை குடுத்ததையும் படிப்பித்துக்கொண்டிருந்தால் அந்தப்பிள்ளைகள் வளர்ந்து சாயிபாபா திருநீறுகொடுப்பதையும் சுகமளிக்கும் ஆராதனை ஆவிதுரத்துவதையும் நம்பாமல் என்ன செய்வார்கள்?

பாடசாலைச் சமயபாடப்புத்தகங்களே பெரிய மதத்திணிப்புத்தான்.

பிள்ளைகளுக்குப் படிப்பிக்க வேண்டியது மதங்களையும் அவை சொல்லும் கருத்துக்களையும். ஒற்றை மதத்தையும் அதன் "கதை"களையும் அல்ல.

மதங்களைக் கற்றபின் பிள்ளை எந்தமதம் தனக்கு உவப்பானதோ அதைப்பின்பற்றுவதென்றும். அல்லது மதங்களை மறுப்பதென்றும் தனது சுய அறிவின் பாற்பட்ட முடிவுக்கு வரும்.

// root கூறியது...
Mayooran (வந்தியத்தேவன்) anna ena ithu....
aka poraa iruku //

போர் போர்...
ஹா ஹா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// senthuran கூறியது...
நல்லது நண்பரே உமது கருத்துகளை நான் குற்றம் சொல்லவில்லை முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளும் மதம் என்பது ஒருவனை வழி படுத்த உதவும் சாதனம்(என்னுடைய தனிப்பட்ட கருத்து) இதற்காக நான் அம்மா பகவானை வழிபடுபவன் என்று எண்ண வேண்டாம்...உமது கருத்துகள் சில தனி மனித நம்பிக்கைகளை குற்றம் சொல்வது போல் உள்ளது.. கிறிஸ்தவத்தை பரப்பினார்கள் என்று கூறினீர் ஆனால் இன்றும் கிறிஸ்தவத்தில் சேர்பவர்கள் இருக்கிறார்கள் காரணம் மதக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு....

உம்மை போல் கருத்து உடையவரும் இருக்க வேண்டும்...
எதிரான கருத்துகளை உடையவர்களும்(மேற்படி கருத்துகளை கூறியவர்கள் பெயரில்லாதவர் உட்பட) இருக்க வேண்டும்.. அப்போது தான் தெளிவான முடிவு கிடைக்கும்.... //

நான் யாருடைய கருத்தையும் குறைகூறவில்லை.
எனது கருத்தை நான் சொன்னேன்.
அதைப் புரிந்து கொள்ளாத சில நண்பர்கள் நான் அவர்களை அம்மா பகவானை வணங்க வேண்டாம் என சொல்வதாக நினைத்துக் கொண்டு கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு பிறகு இனி இந்த வழிபாடுகளை எதிர்ப்பதென்று முடிவுசெய்து விட்டேன்.
ஏராளமான பதிவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//Thivak கூறியது...
நண்பா காலத்தின் பதில் உன் பக்கம் சார்பாகவே அமையும்.எவ்வளவு காலம் தான் ஏமாற்ற முடியும். //

இப்பிடி பொதுப்படையா கதைச்சே பழகிற்றீங்க என திவாகர்?
எப்பிடி உங்களால மட்டும்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

// என்ன கொடும சார் கூறியது...
உங்கள் கருத்து சரியானது.. ஆசிரியையின் முயற்சி மதத்திணிப்பே.. அதுவும் உலகம் புரியாத சிறுகுழந்தையின் மேது என்பதுதான் மகா கொடுமை.. எம்மைப்போல் சகல பலவீனங்களையும் கொண்டவரை கடவுளாக நம்புவதன் லொஜிக் தான் சிரிப்புக்கிடமானது.. கடவுளுக்கு வரைவிலக்கணம் சொல்ல வைக்க வேண்டும்..

அழகிய வார்ப்புரு.. //

அந்தக் கொடுமையை ஆதரிக்கிறார்களே.. அது மிகப்பெரும் கொடுமை...
உங்கள் பெயரைத் தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
என்ன கொடுமை சேர் இது...

வார்ப்புரு களவெடுத்தது தான்.
என் வலைப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அந்த இணையத்தள முகவரி உள்ளது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// புல்லட் கூறியது...
இண்டைக்கு தற்செயலாக உந்த அம்மாபகவான் பஜனை நடக்கும் இடத்துக்கு சென்றேன்.. வெளியில் வந்து சிரித்த சிரிப்பில் இன்னும் இடுப்பு நொகுது.. உப்படியான மனித வணக்கத்தை ஒழுகும் ஆதரிக்கும் அனைவரும் மூளைவளர்ச்சி குறைவானவர்கள் என்பது என்கருத்து.. ஆனால் அப்படிப்பட்ட மூடர்களின் பணத்தையும் நேரத்தையும் இப்படியான தில்லாலங்கடிகள் திருடுவதை அரசாங்கம்தான் தண்டிக்கவேண்டும்.. ஆனால் அங்கிருக்கும் அடிமடையர்களும் சிலர் உந்த பிராடுகளை வணங்கினால் என்ன செய்வது? நான் விரைவில் உது பற்றி எழுத வேண்டும்... அந்த டீச்சர் கிடைத்தால் என் சார்பிலும் ரெண்டு செகிட்டைப்பொத்தி போடுங்கள்... //

நீங்களும் எழுதுங்கள்..
பணம் திருடுவது பற்றி நீங்கள் சொல்வது சரி.
சட்டபூர்வமற்ற நிதிநிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்றால் ஏன் இவர்கள் மேல் எடுக்க முடியாது.
செகிட்டைப் பற்றி போடுகிறேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// இறக்குவானை நிர்ஷன் கூறியது...
வந்தி,
வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்க்கும் தைரியமில்லா கூட்டத்துக்கு பதில்சொல்லி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.
இன்னும் கொஞ்ச நாளில் அம்மாபகவான், நாயைப் பார்த்து அதுதான் எறுமை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்பவர்கள்தானே இவர்கள்.

கோபி(கோபி என்று அழைக்கலாமா?)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இப்படிக்கூறுகிறார் "இன்னுமா நீங்கள் எனது புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியென்றால் நான் இதுவரை சொன்னதை நீங்கள் செயலில் காட்டவில்லை என்று அர்த்தம்"

பயப்படாமல் செயலில் இறங்குவோம். நியாயத்தை பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? //

நிறைய நண்பர்கள் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
இனி நாம் இறங்குவோம்.
கோபி என்று தான் என்னை எல்லோரும் அழைப்பார்கள்.
வலைப்பதிவில் தான் கனககோபி என்று பயன்படுத்துகிறேன்

பொய்யர்கள் சத்தமாகக் கதைக்கும் போது நாம் உண்மையைப் பேசுவதில் தயக்கம் கூடாது.

வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

// Subankan கூறியது...
ஆகா, உரோமாபுரி பற்றி எரிழ பிடில் வாசித்தவன் போல அன்று அவசரத்தில் பதிவைப் படிக்காமல் தொடர்பதிவுக்கு மட்டும் அழைத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.

என்ன செய்வது?, இங்கே செம்மறியாட்டுக் கூட்டங்கள் கொஞ்சம் அதிகம்தான். //

ஹா ஹா...
தொடர்பதிவை பதிவிடுகிறேன்..
செம்மறியாடு நாம் சொல்வதை கேட்கும் என்று கேள்விப்பட்டேன்.
இவர்கள் உப்பு மூட்டையும், பஞ்சு மூட்டையும் சுமக்கும் சலவைத் தொழிலாளியின் கழுதைகள்.

பஞ்சு மூட்டையோடு விழுந்து எழுந்தால் தான் பாரம் புரியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// சந்ரு கூறியது...
அவசியமான இடுகை இன்று மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றனர் பலர். எனது கருத்துக்களை ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://shanthru.blogspot.com/2009/09/blog-post_28.html# //

இடுகைக்கு நன்றி.
வந்து பின்னூட்டம் இடுகிறேன்...

// சந்ரு கூறியது...
//பெயரில்லா கூறியது...

உமது கருத்துகள் உமது வெளிபாடுகளாக அமையலாம் அதை விட்டு விட்டு அதை முடிவாக நினைகவேண்டாம்.இக் காலத்தில் மாணவர்களை ஆபாச படம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவரது ஆசிரியர் இவரை தவறான வழிக்கு இட்டு செல்லவில்லை.அதை பின் பற்றுவது பற்றாமல் விடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உரிமை கேட்டு கிடைக்காத போது இப்பொழுது அடங்கி வாழ வில்லையா.//

இந்த விடயம் தவறில்லை என்று யார் சொன்னது. இது ஒரு மதத் திணிப்பல்லவா? இப்பவே இந்த பிஞ்சுகளிடம் பகவான் பற்றி மனதில் பதிய வைக்கப்படும் நிகழ்வல்லவா? //

அவருக்கு புரியவில்லை.
விட்டுவிடுங்கள்...
எம்மால் முடிந்தவரை சொல்லிவிட்டோம்.
அவர் புரிந்து கொள்வதாக இல்லை.

வருகைக்கம் கருத்துக்கும் நன்றி.

@ மு.மயூரன்...

நான் சாயிபாபாவை ஆதரிக்கவில்லை.

நான் எல்லோரையும் எதிர்க்கிறேன்.

நான் மதங்களையும் எதிர்க்கிறேன்...

உங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றி.

// மு.மயூரன் கூறியது...
பார்க்க:

அம்மா பகவான் விபசாரம் //

எப்போதே பார்த்தேன்.
நான் கருத்துரை இட்டிருக்கிறேன் அதில்.

ஆனால் சுட்டிக்கு நன்றி.
வேறு நண்பர்கள் அறிய முடியும்.

@ மு.மயூரன்...
ஏங்கள் சமயப் புத்தகங்கள் தான் எமக்கு முதல் வில்லன்கள்...

பிள்ளையார் டான்ஸ் ஆடித்தான் சந்திரன் தேய்ஞ்சது எண்டார்கள் பாருங்கள்... என்னால் இப்போதும் என் கொலைவெறியை அடக்க முடியவில்லை...

அந்த மாணவி எனது பிள்ளையாக இருந்திருந்தால் நான் நீதிமன்றங் சென்றிருப்பேன்.

ம்ம்.... பதிவு எட்டு வீதம் எண்டா பின்னூட்டங்கள் 80 வீதம் - இப்பத்தான் எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.

பரவாயில்லை இன்றைய இளைஞர்கள் விழிப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது நிலையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆனால் அதைவிடப் பெரிய வருத்தம் என்னுள் இருக்கிறது... இப்படியெல்லாம் பல பேர் பலவாறு செய்து எங்கள் புனிதமான இந்து மதத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார்களே என எண்ணும் போது மனது வலிக்கிறது.

இந்து மதம் - இது கற்பித்தோ, போதித்தோ உணரக்கூடிய ஒன்றல்ல... இது இயல்பாக உணரக்கூடிய ஒன்று. எவனொருவன் இந்த வாழ்க்கையை வாழ்ந்த பின்னே அதன் மாயையை உணர்ந்து உண்மை ஞானத்தைத் தேடுகிறானோ அவனே இந்துவாகின்றான். இது மிகவும் சிக்கல்கள் நிறைந்த எண்ணக்கரு - இலகுவில் புரியாது - புரிந்து கொண்டாலும் தெரியாது. இங்கு மதம் என்ற மதத்திற்கு இடமில்லை - இந்து என்பது ஒரு உணர்வு.

இப்படியிருந்த ஒரு உணர்வை வியாபாரமாக்கி கிரியைகளை வியாபாரப் பொருளாக்கி, சித்து விளையாட்டுக்களை அர்த்தமுள்ளதாக்கி முடிவில் எல்லாவற்றையும் கேலிக்குள்ளாக்கி விட்டார்கள்.

ஏ.எல். முடித்து இந்த சும்மா இருந்த ஒரு வருடத்தில் தான் எனக்கும் இந்து மதம் பற்றிய அதிக புத்தகங்களை படிக்கக் கிடைத்தது - அது இந்து மதம் பற்றிய விழிப்புணர்வையும் என்னுள் ஊட்டியது. என்னைப் போன்ற இளைஞர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான். - ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் ஆக ஏமாறாமல் இருக்க எமக்கு இது தொடர்பான அறிவு வேண்டும் அதற்கு தேடல் வேண்டும் - நீங்கள் இந்து மதத்தை பின்பற்ற விரும்பினீர்களானால் கொஞ்சம் அது பற்றித் தேடிக்கற்றுப் பாருங்கள் - அப்போது உண்மையான இந்து மதம் என்றால் என்ன என்று புரியும் - போலி விளையாட்டுக்களின் மாயை புரியும். நிறையப் படிக்க வேண்டாம் இந்து மதம் பற்றிய சுவாமி விவேகானந்தரின் சுருக்கமான விளக்கங்களை முதலில் படியுங்கள் நீங்களும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

கனககோபி உங்களுக்கு எனதும் என் நண்பர்களதும் முழுமையான ஆதரவை இந்த சமூக விரோதிகளை எதிர்ப்பதில் தெரிவிக்கிறேன். சமூக விரோதிகளை எதிர்க்கும் நண்பர்களே உங்களோடும் இணைந்து கொள்கிறேன்.

**********************************

என்.கே.அசோக்பரன் 'இந்து மதம் என்றதே பிற்கால கண்டுபிடிப்பு. அதற்கு முதல் மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அதையும் ஆராயுங்கள்

எஸ்.சத்தியன்,

உண்மைதான் ஹிந்து என்ற பெயரே பிற்காலத்தில் உருவானது தான் ஆனால் இந்த தர்ம முறை (சனாதன தர்மம்) ஆதிகாலத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தானே சொன்னேன் இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு உணர்வு. இது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதல்ல - யாருக்கும் அந்த உணர்வு வரலாம். ஹிந்து மதம் பற்றிய பல உண்மைகளை சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் காணலாம். இந்தப் போலி பித்தலாட்டக்காரர்கள் தங்களைக் கடவுள், சுவாமி எனவெல்லாம் கூறிக்கொள்வது எரிச்சலைத்தான் உண்டாக்குகிறது.

// Fazeena Saleem கூறியது...

அந்த மாணவி எனது பிள்ளையாக இருந்திருந்தால் நான் நீதிமன்றங் சென்றிருப்பேன். //

ம்...
எங்களுக்கு சில நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன...
எனது பிள்ளையானால் நான் சட்டரீதியாக நிச்சயமாக செயற்படுவேன்.

ம்... என்ன செய்வது...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ என்.கே.அஷோக்பரன்

இந்து மதத்தை இவர்கள் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள்.
நானும் பிறப்பால் இந்து தான். (சைவன் என்பது தான் கூடுதலாக சரி. அப்படியா?)

ஆனால் மதங்களே வேண்டாம் என்ற கொள்கையுள்ளவன் நான்.
எனது கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் தங்களது கருத்தை என்மீத திணிப்தை நான் எதிர்க்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//எஸ்.சத்யன் (திருகோணமலை) கூறியது...

கனககோபி உங்களுக்கு எனதும் என் நண்பர்களதும் முழுமையான ஆதரவை இந்த சமூக விரோதிகளை எதிர்ப்பதில் தெரிவிக்கிறேன். சமூக விரோதிகளை எதிர்க்கும் நண்பர்களே உங்களோடும் இணைந்து கொள்கிறேன்.

**********************************

என்.கே.அசோக்பரன் 'இந்து மதம் என்றதே பிற்கால கண்டுபிடிப்பு. அதற்கு முதல் மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அதையும் ஆராயுங்கள் //

உங்கள் பிரதேசத்திலும் இது நடைபெறுவதாக அறிந்தேன்...
என்ன செய்ய...
வேர்விட முன்னர் கிள்ளியிருக்க வேண்டும். இன்று கிளைகளோடு விருட்சமாக வந்துவிட்டது.

நானும் இந்து தான் பிறப்பில்.
ஆனால் சமயங்கள் வேண்டாம் என்பது என் கொள்கை...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// என்.கே.அஷோக்பரன் கூறியது...

எஸ்.சத்தியன்,

உண்மைதான் ஹிந்து என்ற பெயரே பிற்காலத்தில் உருவானது தான் ஆனால் இந்த தர்ம முறை (சனாதன தர்மம்) ஆதிகாலத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தானே சொன்னேன் இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு உணர்வு. இது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதல்ல - யாருக்கும் அந்த உணர்வு வரலாம். ஹிந்து மதம் பற்றிய பல உண்மைகளை சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் காணலாம். இந்தப் போலி பித்தலாட்டக்காரர்கள் தங்களைக் கடவுள், சுவாமி எனவெல்லாம் கூறிக்கொள்வது எரிச்சலைத்தான் உண்டாக்குகிறது. //

சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களில் உள்ள மத ஒற்றுமை குறித்த கருத்துக்களை நான் இரசித்ததுண்டு...

I read the article and all the comments, i'm impressed by everyone. I believe all religeon was man made to make him dicipline. It is upto one to follow one religeon or not. It is the freedom everyone has. If that teacher realy believes in this new PATH she may have given that portrait to the child believing its realy good. It is from parents and teacher a child learns and understand this universe! I do not believe in Living human worship but I will never critisize the ones who practise it. They have chosen their path of life! It is non of my business to critizise them!

one diciple of this "Amma Bahavan" said their theme is "respect your parents"
I do respect my parents and I'm not diciple of "Amma Bahavan"

//பெயரில்லா கூறியது...

I read the article and all the comments, i'm impressed by everyone. I believe all religeon was man made to make him dicipline. It is upto one to follow one religeon or not. It is the freedom everyone has. If that teacher realy believes in this new PATH she may have given that portrait to the child believing its realy good. It is from parents and teacher a child learns and understand this universe! I do not believe in Living human worship but I will never critisize the ones who practise it. They have chosen their path of life! It is non of my business to critizise them! //

It's none of my business to critize those who follow this too.
But I'm critizing those who try to spread this habit in a forceful manner...

Thank u for ur visit and comment mate...
It would've been better, had u said ur name.

//பெயரில்லா கூறியது...

one diciple of this "Amma Bahavan" said their theme is "respect your parents"
I do respect my parents and I'm not diciple of "Amma Bahavan" //

Yeah, that's right...
If u obey ur parents, then u don't need to worship other gods.
Thank u for ur visit mate...

நண்பர்களே, நானும் சிறிது சொல்ல விரும்புகிறேன்...

அம்மா பகவானைப் பற்றிக் கூறியிருந்தீர்கள்... உண்மையாக இருக்கலாம்... எனக்கு அவர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது, அந்த அவசியமும் இல்லை. ஆனால் மனித வழிபாடு பற்றிய கருத்துக்களில் சில தவறுகள் இருப்பதாக எண்ணுகிறேன்.

சைவ சமயத்தில் மனித வழிபாடு இல்லை என்று யார் சொன்னது? "சங்கம வழிபாடு" என்ற பகுதியை (அல்லது ஒரு வழியை) சிலர் அறிந்திருக்கவில்லைப் போலும். விளக்கம் தேவையாயின் 'தில்லைவாழ் அந்தணர்தம்' தேவாரம் பாடப் பெற்ற சம்பவத்தை ஆராயவும். அவதாரங்களும் உள்ளன... போலிகளும் உள்ளன. உங்களுக்கு அதைப் பிரித்தறியும் அறிவு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் மூடிக்கொண்டிருங்கள்.

அடுத்து மிஷன் செய்த நிவாரணப் பணியில் மதத் திணிப்பு இருப்பதாக நண்பர் கோபி கூறியிருந்தீர்கள். அதுவும் தவறென்றே நான் சொல்கிறேன்.

கோபிக் கண்ணா... நீ ஒரு கடைக்குச் செல்கிறாய் என வைத்துக் கொள்வோம். அங்கே பௌடர் (முகப் பூச்சு) விற்கிறார்கள். ஒரு பௌடர் வாங்கினால் ஒரு லிப்ஸ்டிக் இலவசம் எனக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இலவசமாகக் கொடுத்தார்களே என்பதற்காக அதை நீ உதட்டில் பூசிக்கொண்டு திரிவாயா அல்லது அதை உன் சகோதரிக்குக் கொடுத்து விட்டுப் பௌடரை மட்டும் பூசிக் கொள்வாயா?
நிவாரணம் பெறுபவர்களில் பெரும்பாலானோர் சைவர்கள். சிலர் கிறிஸ்தவர்கள். பெரும்பான்மையைக் கருத்திற் கொண்டு பிரசாதம் வழங்கப் படுகிறது; அது தேவையில்லை என்றால் அதைத் தம் இந்துச் சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தமது அலுவலைப் பார்க்கும் அறிவு அந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (ஏனெனில் அவர்கள் உங்களைப் போல் விவகாரமாகச் சிந்திப்பதில்லை). ஆங்கிலேயர் செய்தது மதமாற்றம்/திணிப்பு. ஏனெனில் "மதம் மாறினால் சலுகை தருவோம்" என அவர்கள் கூறினர். ஆனால் நிவாரணக் கிராமங்களில் போய் நின்று கொண்டு இந்தத் தொண்டு நிறுவனங்கள் "இந்துக்களுக்கு மட்டுமே நிவாரணம் கொடுப்போம்" என்று அடம்பிடிப்பதில்லை.

சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தர் போன்றோர் உங்களை விட அறிவில், நியாய தர்மங்களில் சிறந்தவர்கள் என்றே நான் நம்புகிறேன். அப்படிப் பட்டவர்களைப் போன்றோரின் எண்ணக் கருக்களை அடிப்படையாக வைத்து செயல்படும் மிஷன் நிறுவனங்கள் நீங்கள் சொல்வது போன்ற சிறுபிள்ளைத் தனமான தவறுகளைச் செய்யாது.

நண்பரே, ஒருவரைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க முன் சற்று நிதானமாகச் சிந்திக்கப் பழகிக் கொள்ளும்.

@ TGP

உங்கள் நீண்ட கருத்துரைக்கு முதலில் நன்றி...

எனக்கு சைவசமயத்தைப் பற்றி பெரிதாகத் தெரியாது. நான் பிறப்பால் சைவ சமயனாக இருந்தாலும் மதங்கள் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டவன்.

அம்மா பகவானைக் கும்பிடுபவர்கள் கும்பிடட்டும். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.
ஆனால் அதை மற்றவர்களிடம் திணிப்பதைத் தான் நான் எதிர்த்தேன்.
என் பதிவில் ஆரம்பத்தில் அதைத் தெளிவாகக் கூறியிருந்தேன்...
வேண்டுமானால் வாசித்துப் பாருங்கள்...

மிஷன் பற்றிய உங்கள் கருத்திற்கு:
ஆம்... தெளிவாகத் தான் இருக்கிறீர்கள்...
ஆனால் ஒரே ஒரு கேள்வி...

ஒரு கிறிஸ்தவ நிறுவனம் அகததிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் காடுக்கம் போது பைபிளையும், ஜெபங்களையும் கொடுத்தால் உங்களைப் போன்ற மிதவாதிகள் அதைப் பரவாயில்லை என விட்டுவிடுவீர்களா?
இவ்வாறான ஏராளமான சம்பவங்களுக்கு கிறிஸ்தவ சமயத்தினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையை நான் அனுபவப்பட்டிருக்கிறேன்...

பெரும்பான்மை சைவர்கள் என்பதால் சைவப் பொருட்களைக் கொடுப்பதில் தவறில்லை என்றீர்கள்... மகிழ்ச்சி...
அப்படியானால் சிங்கள இனத்தவர்கள் இலங்கையில் தாங்கள் பெரும்பான்மை என்பதால் எம்மை புறக்கணித்தமையை சரியென்பீர்களா?
பெரும்பான்மை என்பது வரப்பிரசாதம் அல்ல....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

நான் ஒரு அகதி என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கிறிஸ்தவர்கள் நிவாரணம் கொடுக்கும் போது
பைபிளையும் ஜெப மாலையையும் தந்தால்... பைபிளை வாங்கி அதிலுள்ள நல்ல விடயங்களைப் பொறுக்கிக் கொள்வேன். எனக்குத் தேவையில்லாத ஜெப மாலையை என் கிறிஸ்தவ நண்பர் யாருக்காவது கொடுத்து விடுவேன்.
மதம் மாறச் சொன்னால் நிவாரணப் பொருளே வேண்டாம் என்று சொல்வேன்.

சிங்கள இனத்தவர்கள் எம்மைப் புறக்கணிப்பதைப் பற்றிக் கணக்கெடுக்கத் தேவையில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் எம்மைப் புறக்கணித்தமை தவறே. ஏனெனில் இலங்கை அரசாங்கம் (நியாயப்படி) சிங்கள அரசாங்கமல்ல. அது தமிழருக்கும் பொதுவான அரசாங்கம். அரசாங்க விடயத்தில், மக்கள் மக்களால் ஆளப் படுகின்றார்கள். எனவே அங்கு எடுக்கப் படும் முடிவுகளில் புறக்கணிப்பைப் பற்றி நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் மிஷன், கிறிஸ்தவ மத நிறுவனங்கள் போன்றவை மக்களை ஆள்வதில்லை. சில வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள்; விரும்பியவர்கள் பயன்படுத்தலாம், வேண்டாதவர்கள் வற்புறுத்தப் பட மாட்டார்கள். அவர்கள் மதத்தைக் கொடுக்கிறார்கள்; திணிக்கவில்லை (வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை).
எனவே எமது நாட்டு அரசாங்கத்தால் நடத்தப் படும் புறக்கணிப்பையும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஏற்படுத்தப் படும் புறக்கணிப்புக்களையும் தயவு செய்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஒரு கேள்வி... என்னை "மிதவாதி" என்று குறிப்பிட்டதன் காரணத்தை அறியலாமா?

@ TGP...

(நல்ல காலம்... TNT என்று உங்கள் பெயரை வைக்கவில்லை...)

நண்பருக்கு நான் முன்னரே தெளிவாகக் கூறியிருக்கிறேன்...
தெளிவில்லாதவர்கள் போலக் கதைக்காதீர்கள்...

முன்னரே கிறிஸ்தவர்கள் மதங்களைத் திணிக்கிறார்கள் என்று அவர்களுக்கெதிராக இப்படியான சூழ்நிலைகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டமையை எனது பின்னூட்டத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

இதை நான் கட்டாய மதத்திணிப்பு என்று கூறவில்லை.
தலைப்பைப் பாருங்கள்...
கெளரவமான வடிவில் திணிக்கிறார்கள் என்று தான் சொன்னேன்.
அதைத் தவிர அவர்கள் அந்த மக்களுக்கு உலர் உணவு வழங்கியமையை நான் எனது பதிவில் தெளிவாக் பாராட்டியிருக்கிறேன்.

உங்களை மிதவாதி என அழைக்கவில்லை.
மிதவாதிகள் போல் காட்டிக் கொள்பவர்கள் என்று தான் சொன்னேன்.

//அது தேவையில்லை என்றால் அதைத் தம் இந்துச் சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தமது அலுவலைப் பார்க்கும் அறிவு அந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. //

இந்த கருத்திற்காகத் தான் சொன்னேன்.

திரும்பவும் சொல்கிறேன்...
ஒரு பதிவுக்குக் கருத்துத் தெரிவிக்க முன்னர் பதிவை முழுமையாக விளங்க வாசியுங்கள்... விளங்காவிட்டால் பின்னூட்டமிடுவதை தவிருங்கள்.

மற்றையது,
//உங்களுக்கு அதைப் பிரித்தறியும் அறிவு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் மூடிக்கொண்டிருங்கள். //

எங்களை மூடிக்கொண்டிருக்க சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
இது எனது தனிப்பட்ட வலைப்பதிவு. என் எண்ணங்களை, என் கருத்துக்களை சொல்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.

ஆகவே நீங்கள் மூடிக் கொண்டிருப்பது சிறந்தது...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...

நண்பரே, தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.
நான் மூடிக்கொண்டிருக்கச் சொன்னது உங்களை அல்ல. 'தனி மனித வழிபாட்டைப்' பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்களுக்கே. என் கருத்துக்களால் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை. சில கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவறுதலாகப் பயன்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். என் கருத்துக்களை நீங்கள் "ஏற்றுக் கொள்ளக் கூடாது" என முடிவெடுத்துவிட்டீர்கள் போலுள்ளது. அவற்றைத் திணிக்க நான் விரும்பவில்லை. எனது கருத்துக்கள் உங்களுக்கு இடையூறு விளைவித்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி.

@ TGP...

கருத்துக்களை நான் எப்போதும் மதிக்கிறேன்... எதிர்க் கருத்துக்கள் இல்லாவிட்டால் எல்லாமே சப்பென்றாகிவவிடும்.
ஆனால் 'மூடிக் கொண்டிருங்கள்' என்ற பதம் கெளவைமான பதமாக கருதப்படுவதில்லை.

அத்தோடு இங்கு கருத்துத் தெரிவித்த அனைவரும் தங்கள் சொந்தக் கருத்துக்களைத் தான் தெரிவித்திருக்கிறார்கள்... ஆகவே யாருடைய கருத்தையும் நான் தடுத்து நிறுத்த விரும்பவில்லை...
எந்தவொரு கருத்துரையையும் நான் பிரசுரம் செய்யாமல் விட்டதில்லை.
(இரண்டு கருத்துரைகள் தவிர. தூஷண வார்த்தைகளை மட்டும் கொண்டிருந்தத கருத்துரைகள் ஆவை.)

நான் கோபப் படவில்லை.
ஆனால் பலர் விட்ட தவறு, என் கருத்தை முழுமையாக வாசிக்காதது தான்.
நான் அம்மா பகவானுக்கு எதிராக இந்தப் பதிவை எழுதவில்லை.
'இப்படிப்பட்ட' குழப்பங்கள் நிகழ்கின்ற ஒருவரை, முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படா ஒருவரின் பழக்கங்களை கெளரவமாக திணித்ததைத் தான் எதிர்த்தேன்...
எனத பதிவை முழுமையாக வாசியுங்கள் தெரியும்.

அத்தோடு நிவாரணப் பொருட்கள் சம்பந்தமாக நான் அவர்களின் சமூகப் பாறுப்பை மதிக்கிறேன்.
ஆனால் அந்த விபூதிப் பொருட்களை நிவாரணப் பொருட்களோடு சேர்த்துக் கொடுக்காவிட்டால் நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடையாது என்பதில்லைத் தானே?

அவர்களுக்கு ஆன்மிக விடயங்களைச் சொல்ல விரும்பினாலல் தனியாக சொல்லுங்கள் என்பது தான் என் கருத்து....

உங்கள் கருத்துக்களை தாராளமாகச் சொல்லுங்கள்...
உங்கள் கருத்திற்கு நன்றி...