க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஹா ஹா...
குழம்பாதீர்கள்...
பில்கேட்சின் மகள் தாள் இவர்....
அன்பான வேண்டுகோள்: வாயிலிருந்த வரும் நீர்வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும்...

************************************************************************************************************

குடும்பமே இப்படித் தானா...

நம்ம கந்தன்ர அப்பா தன்ர வீட்டுக்கு புதுசா ஒரு ரோபோ வாங்கிற்று வந்தார்.
அந்த ரோபோ மற்றவர்கள் பொய் சொன்னால் அதை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்தது. மற்றவர்கள் பொய் சொன்னால் அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறையும் வகையில் அதை வடிவமைத்திருந்தார்கள். ('சப்' எண்டு அறையிறது எண்டுவாங்க? அதே தான்)

கந்தன் ஒரு நாள் பாடசாலையை விட்டு பிந்தி வந்தான்.
அப்பா 'எங்க போனனீ இவளவு நேரமும்?' என்று கேட்க 'விசேட வகுப்பு இருந்தது அப்பா.' என்றான் கந்தன். உடனே அவனது கன்னத்தில் ரோபோ அறைந்தது ஓங்கி. அவன் உடனே 'மன்னிச்சுக் கொள்ளுங்கோ அப்பா. படம் பாக்கத் தான் போனன்' என்றான்.
'என்ன படம் பாக்கப் போனாய்?' அதட்டலுடன் கேட்டார் அப்பா. 'சேரனின் பொக்கிஷம் பாக்கப் போனன் அப்பா' என்றான் கந்தன். உடனே இன்னொரு அறை விழுந்தது. கந்தன் அழுதவாறே 'மன்னிச்சுக் கொள்ளுங்கோ அப்பா. நான் வயது வந்தவர்களுக்கான படம் ஒன்று தான் பாக்கப் போனன்' என்றான்.
உடனே அப்பா 'உன்ன நினச்சு வெக்கப்படுறன். எனக்கு சின்ன வயசில இப்பிடியான படங்களென்டா வெறுப்பு. பாத்ததே இல்ல தெரியுமா?' என்றார். உடனே கந்தனின் அப்பாவுக்கு கன்னத்தில் அறை விழுந்தது.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கந்தனின் அம்மா 'எல்லாத்துக்கும் மேல அவன் உங்கட மகன் தானே? உங்கள் போல தானே இருப்பான்?' என்றார்.
உடனே கந்தனின் அம்மாவுக்கு விழுந்தது அறை.

பிழை எங்கயெல்லாம் இருக்கு பாத்தீங்களா??? ஹி ஹி ஹி...
(யாராவது என்ன சொல்ல வாறீங்க எண்டு அப்பாவித் தனமா கேட்டா கொலைசெய்யப்படுவர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.)


*************************************************************************************************

குறிப்பு: யாழ்தேவியின் இந்தவார நட்சத்திரமாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறேன்...
என்னை தெரிவுசெய்த யாழ்தேவி குழுவினருக்கு எனது நன்றிகள்....
இலங்கை வலைப்பதிவர்களின் எழுத்துக்களை ஊக்குவிக்கும் பணியை யாழ்தேவி தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள்...

*****************************************************

குறிப்பு இரண்டு...: உங்களை ஏமாற்றியதாக உணர்கிறேன்...

அதிலிருக்கும் பெண்மணி பில்கேட்சின் மகள் இல்லை என மதுவதனன் அண்ணா தெரிவித்திருக்கிறார். இது வேறொரு நடிகையாம்.

தவறுக்கு வருந்துவதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்...

இந்தப் பதிவை அழிக்க முடியாமைக்கு மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்...

22 பின்னூட்டங்கள்:

கனககோபி,

இப்படியே இந்த இடுகையைப் போடுற எல்லாரையுமே திட்டுறதே எனக்கு வேலையாப் போச்சு...

சென்ற வருட இதே சம்பவத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிப்பா..

இவவுட படத்துக்கு இங்கே போங்கோ


இது வந்தியத்தேவனின் இடுகை

இவை அதற்கான பின்னூட்டங்களில் சில..

மதுவதனன் மௌ. சொல்வது:
வந்தியத் தேவன்,

இடுகைகள் இடும்போது உங்களுக்கும் சில ரெஸ்பான்ஸ் இருக்கு. இடுகை ஒனனு போட முன்னர் அதன் உண்மைத் தன்மை சம்மந்தமாக உறுதிப் படுத்திக் கொள்வதில்லையா.

இது நான் தமிழ் வலையுலகில் நான்காவது முறை காணும் ஒரே பதிவு. மங்களூர் சிவா, கானா பிரபா, இன்னொருத்தர் மற்றும் நீங்கள்.

அத்துடன் பில்கேட்சின் மகளுக்கு இப்போதுதான் 12 வயசு.

இந்தப் பொண்ணு Rachael Leigh Cook

மேலும் உறுதிப் படுத்திக் கொள்ள தயவு செய்து இஙகே போங்க.

வந்தியத் தேவன், மேலும் வலைப்பதிவுகளின் நம்பகத் தன்மை இவ்வாறான இடுகைகளால் கெட்டுப்போகலாம்.

இடுகையின் கீழ் இவர் பில்கேட்ஸின் மகள் அல்ல என போட்டுவிடுங்கள் Please.

இரவு 9:53 , ஏப்ரல் 30, 2008
வந்தியத்தேவன் சொல்வது:
நன்றி மதுசூதனன் இந்த போட்டோக்கள் எனக்கு ஈமெயிலில் வந்தவை. ஒரே நாளில் நானும் மங்களூர் சிவாவும் இந்தப் பதிவை போட்டோம் பின்னர் கானா பிரபா எம்முடன் இணைந்து கொண்டார் நேற்று லக்கி இந்தப் பதிவைப்போட்டார். நிச்சயமாக நான் கூகுளிலும் வேறு இடங்களிலும் தேடியபோது இவரின் படம் தான் பில்கேட்ஸ்சின் மகள் படம் என வந்தது. அத்துடன் இவர் பில்கேட்ஸ்சின் மகள் அல்ல ஒரு நடிகை என சில காலங்களுக்கு முன்னர் தான் அறிந்தேன்.

காலை 7:44 , மே 01, 2008
கானா பிரபா சொல்வது:
அவங்களை விட்டுடுங்கண்ணே, எத்தனை பேரு தான் கண்ணு வைப்போம், பாவம்பா பச்ச மண்ணு அது

காலை 10:54 , மே 01, 2008
மதுவதனன் மௌ. சொல்வது:
வந்தியத்தேவன்,

நான் மதுசூதனன் அல்ல மதுவதனன். எனது பெயரில்தான் பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது.

ஏனெனில் மதுவதனன் ஆகிய என்னை மதுசூதனன் எனச் சொல்லும் இரண்டாவது நபர் நீங்கள். மதுவதனன் பழக்கமில்லாத பெயராக இருக்கலாம். எனது அண்ணனின் பெயர்தான் மதுசூதனன்.

ஆகா...
மன்னிக்கவும்.... மன்னிக்கவும்....

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் இந்த வாரம் இனி உங்கள் அதிரடி தாக்குதல்களை தொடருங்கள்..

(எப்படி சரி நட்சத்திர பதவியை என்னிடமிருந்து பறித்து விட்டீர்கள் தானே??)

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் இந்த வாரம் இனி உங்கள் அதிரடி தாக்குதல்களை தொடருங்கள்..

(எப்படி சரி நட்சத்திர பதவியை என்னிடமிருந்து பறித்து விட்டீர்கள் தானே??) //

ஆகா... நானாக பறிக்கவில்லை.... அவர்களாகத் தந்தார்கள்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

:D கோபி...

உங்கட நட்சத்திர முதல் இடுகையின் முதல் பின்னூட்டமே அமங்கலமா போச்சு போல உணருகிறேன்... பரவாயிலலைப்பா... வலையுல வாழ்க்கயில இதெல்லாம் அனுபவம்தான்... இடுகையை அழிக்காம வச்சிருக்கிறதுதான் நல்லது... பின்னொரு நாளில் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கும் இந்த அனுபவம்.

வேறென்ன... நட்சத்திர வாரத்தை கலக்குங்கோ...

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
:D கோபி...

உங்கட நட்சத்திர முதல் இடுகையின் முதல் பின்னூட்டமே அமங்கலமா போச்சு போல உணருகிறேன்... பரவாயிலலைப்பா... வலையுல வாழ்க்கயில இதெல்லாம் அனுபவம்தான்... இடுகையை அழிக்காம வச்சிருக்கிறதுதான் நல்லது... பின்னொரு நாளில் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கும் இந்த அனுபவம்.

வேறென்ன... நட்சத்திர வாரத்தை கலக்குங்கோ...

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. //

அமங்கலம் என நான் நம்பவில்லை...
இது ஒரு பாடம் என எடுத்துக் கொள்கிறேன்...
நட்சத்திரப் பதிவர் ஆனவுடனேயே ஒரு நல்ல விடயத்தைப் படித்துக் கொண்டேன்.
நான் உண்மையாக கூகிள் ஆண்டவரிடம் தேடினேன்... அவரும் ஏமாற்றிவிட்டார். அதுதான்...
பரவாயில்லை...

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
இனிமேலும் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

மிக்க நன்றிகள்.

நண்பா வாழ்த்துக்கள் நட்சத்திரப் பதிவரானதற்கு. யான் இன்னும் யாழ்ப்பாணத்திலே தான். பதிவு, பின்னூட்டம் வாரத்தில் இரு தடவை என மட்டுப்படுத்தி விட்டேன். வாழ்த்துக்கள்.

நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் அருமை நண்பா

வாழ்த்துக்கள் நட்சத்திரம்!!!

அது யாரா இருந்தா என்ன? நல்லா இருக்கு. அது போதும்.

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவு எங்களுக்கு தேவை?

இவ்வார நட்சத்திரப் பதிவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

யாழ்தேவி நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள். நானும் உந்தப் பெட்டையின் படத்தைப்போட்டு மதுவிடம் வாங்கிக்கட்டியவன்

// ilangan கூறியது...
நண்பா வாழ்த்துக்கள் நட்சத்திரப் பதிவரானதற்கு. யான் இன்னும் யாழ்ப்பாணத்திலே தான். பதிவு, பின்னூட்டம் வாரத்தில் இரு தடவை என மட்டுப்படுத்தி விட்டேன். வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.
இங்கு கொழும்பிற்கு வாரும், உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// மன்னார் அமுதன் கூறியது...
நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்களுக்கு நன்றி...

// ஆகீல் முசம்மில் கூறியது...
வாழ்த்துக்கள் அருமை நண்பா //

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா...

// Subankan கூறியது...
வாழ்த்துக்கள் நட்சத்திரம்!!! //

வாழ்த்துக்களுக்கு நன்றி...

//அது யாரா இருந்தா என்ன? நல்லா இருக்கு. அது போதும். //

நீங்க தானய்யா மறத்தமிழன்...
உங்கட spirit ஐ பாராட்டுகிறேன் ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//வேந்தன் கூறியது...
நட்சத்திர வாழ்த்துக்கள் :) //

வாழ்த்துக்களுக்கு நன்றி...

// buveraj கூறியது...
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவு எங்களுக்கு தேவை? //

வாழ்த்துக்களுக்கு நன்றி...
தேவை என்பதன் பிறகு வரும் வினாக்குறியின் அர்த்தம் புரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// தங்க முகுந்தன் கூறியது...
இவ்வார நட்சத்திரப் பதிவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! //

வாழ்த்துக்களுக்கு நன்றி...
நீங்களெல்லாம் சீனியர் நட்சத்திரங்களாயிற்றே... ;)

// வந்தியத்தேவன் கூறியது...
யாழ்தேவி நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள். நானும் உந்தப் பெட்டையின் படத்தைப்போட்டு மதுவிடம் வாங்கிக்கட்டியவன் //

வாழ்த்துக்களுக்கு நன்றி...

ஹா ஹா... எனக்கு முன்னர் 3,4 பேர் வாங்கிக் கட்டிக் கொண்டதில் மகிழ்ச்சி எனக்கு. ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.