க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஸ்லம்டோக் மில்லியனையர் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் பணம் உழைக்க இப்படியான போட்டிகளே போதும் என்பதை உணர்ந்த நம்ம சர்தார் ஒருவர் 1 கோடி ரூபாவைப் பரிசாகத் தரும் போட்டியில் கலந்து கொண்டார்.

அங்கே நடந்ததை பாருங்கள்...

அவருக்கான கேள்விகள்...

1) 100 வருட போர் (100 year war) எவ்வளவு காலம் நடைபெற்றது?
a) 116 வருடங்கள்.
b) 99 வருடங்கள்.
c) 100 வருடங்கள்.
d) 150 வருடங்கள்.

உடனே சர்தார், தான் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொள்ள விரும்புவதாக (skip) தெரிவித்தார்.

எனவே இரண்டாவது கேள்வி,

2) 'பனாமா தொப்பிகள்' (Panama hats) எந்த நாட்டில் செய்யப்படுகின்றன?
a) பிரேசில்.
b) சிலி.
c) பனாமா.
d) ஈகுவடோர்.

தனது பல்கலைக்கழக நண்பர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.

3) பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி.

பார்வையாளர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.

4) கீழ்வருவனவற்றில் கிங் ஜோர்ஜ் VI இன் முதற்பெயர்?
a) எடேர்.
b) அல்பேட்.
c) ஜோர்ஜ்.
d) மனோஜல்.

அதிர்ஷ்ட அட்டைத் தெரிவைக் கேட்டார் சர்தார்.

5) பசுபிக் சமுத்திரத்திலுள்ள கனரி ஐலன்ட்ஸ் (Canary islands) பின்வருவனவற்றில் எந்தப் பறவையின் பெயரை அடிப்படையாகக் கொண்டது?
a) கனரி பறவை (Canary bird).
b) கங்காரு.
c) நாய்க்குட்டி.
d) எலி.

சர்தார் போட்டியிலிருந்து தானாக விலகினார்.


ஆகவே சர்தார் ஒரு வடிகட்டின முட்டாள் என நினைத்திருப்பீர்கள்.
ஆனால் விடைகளைப் பாருங்கள்...

1) 100 வருடப் போர் 116 வருடங்கள் நீடித்தது. 1337 இலிருந்து 1453 வரை இடம்பெற்றது.

2) பனாமா தொப்பிகள் ஈகுவடோரில் செய்யப்படுகின்றன.

3) ஒக்ரோபர் புரட்சி நவம்பரில் கொண்டாடப் படுகிறது.

4) ஜோர்ஜ் இன் முதற்பெயர் அல்பேட் என்பதாகும். 1936 இல் அவர் தனது பெயரை மாற்றினார்.

5) நாய்க்குட்டிகள். Insularia Canaria என்ற இலத்தீன் பெயரின் அர்த்தம் 'நாய்க்குட்டிகளின் தீவு' என்பதாகும்.

இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?
இதற்குப் பிறகு சர்தார் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்காதீ்ர்கள்...

********************************************

இப்போது உங்களை பரிசோதிக்கப் போகிறேன்...

ஓர் சர்தார் ஓர் சிறுவனை அவனது பாடசாலையிலிருந்து கடத்தினார். (இலங்கை ஆளா இருப்பாரோ? ;) )
அந்தப் பையனிடம் 'நான் உன்னைக் கடத்தியிருக்கிறேன்' என்று கூறினார். அவனை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஒரு கடதாசியை எடுத்து 'நான் உங்கள் மகனை கடத்தியிருக்கிறேன். உங்கள் மகன் உயிரோடு வேண்டும் என்றால் எனக்கு 50 இலட்சம் தரவேண்டும். அந்த 50 இலட்சத்தை மைதான மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இடவும். இப்படிக்கு சர்தார்' என்று எழுதினார். எழுதிய கடிதத்தை அந்த சிறுவனிடம் கொடுத்து அவனை வீட்டு அனுப்பினார்.
மறுநாள் குப்பைத் தொட்டியை திறந்து பார்த்தார். சந்தேகமில்லாமல் அங்கே 50 இலட்சம் பணம் இருந்தது. பணத்தோடு ஒரு கடிதமும் காணப்பட்டது. 'ஒரு சர்தாராக இருந்து கொண்டு இன்னொரு சர்தாருக்கு இப்படிச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது? பணத்தை எடுத்துக் கொண்டு என் மகனை விட்டுவிடு. இப்படிக்கு சர்தார்' என்று எழுதியிருந்தது.

யாராவது சிரிச்சீங்களா? இப்ப தானே சிரிக்க வேணாம் எண்டன்???

24 பின்னூட்டங்கள்:

//// பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி////

கனககோபி……

மேலுள்ள விடயம் குறித்து தங்களின் கேள்வியில் சில தவிர்க்க முடியாத உண்மைகள் இருக்கிறது. ஒக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது. அதற்கு ரஷ்யாவில் ஒக்ரோபர் புரட்சி நடைபெற்ற காலத்தில் இருந்த கலண்டர் 15 நாட்கள் பின்னோக்கியதே காரணம். தற்போது ரஷ்யாவும் ஒரே கலண்டரை பாவிக்கத் தொடங்கியுள்ளதால் ஓக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலே கொண்டாடும் நிலை உள்ளது. வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே. அண்மைய நாட்களாக ஜோன் கிரீட் எழுதிய ‘உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். அதிலேயே மேற்குறிப்பிட்ட தகவல் உள்ளது.

தங்களின் பதிவை முழுமையாக வாசிக்காமல் இட்டபதில் மேலுள்ளது. ஆக நானும் சரியாகவே குறிப்பிட்டுள்ளேன்.

யப்பா இது எங்கேயோ இங்கிலீசுல வந்த மாதிரி இருக்கு.. இருந்தாலும் ஓகே.. நாமளும் உங்க தொடர் விளையாட்டை தொடர்ந்தோம் வந்து பாக்கிறது.

ரொம்ப நல்லா இருக்கு

யார்ரா அது எங்க சர்தார்கள கேவலமா பேசுறது, மன் மோகன்ஜி மன் மோகன்ஜி கனக கோபிய புடிச்சி போலீசுல போடுங்க

//இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?//
அவ்வ்வ்வ்வ்வ்............

கோபி நான் சொல்லவந்ததை நண்பர் மருதமூரான் சொல்லிவிட்டார் அக்டோபர் புரட்சி நவம்பரில்தான் நடந்தது.

பதிவுக்கு சம்பந்தமில்லாத விடயம் உன்னைப்போல் ஒருவன் கலக்கலாம்.

யோ வோய்ஸ் ஹர்பஜனும் சர்தார்ஜி தான்.

// மருதமூரான். கூறியது...
//// பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி////

கனககோபி……

மேலுள்ள விடயம் குறித்து தங்களின் கேள்வியில் சில தவிர்க்க முடியாத உண்மைகள் இருக்கிறது. ஒக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது. அதற்கு ரஷ்யாவில் ஒக்ரோபர் புரட்சி நடைபெற்ற காலத்தில் இருந்த கலண்டர் 15 நாட்கள் பின்னோக்கியதே காரணம். தற்போது ரஷ்யாவும் ஒரே கலண்டரை பாவிக்கத் தொடங்கியுள்ளதால் ஓக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலே கொண்டாடும் நிலை உள்ளது. வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே. அண்மைய நாட்களாக ஜோன் கிரீட் எழுதிய ‘உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். அதிலேயே மேற்குறிப்பிட்ட தகவல் உள்ளது. //

பொது அறிவுக் களஞ்சியம் மருதமூரான் வாழ்க வாழ்க...
உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள் புத்தகத்தை படித்துவிட்டு அதிலிருந்து சுவாரசியமான தகவல்களை பதிவிடப் போகும் அண்ணன் மருதமூரான் வாழ்க...

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி அண்ணா...

// மருதமூரான். கூறியது...
தங்களின் பதிவை முழுமையாக வாசிக்காமல் இட்டபதில் மேலுள்ளது. ஆக நானும் சரியாகவே குறிப்பிட்டுள்ளேன். //

எப்பிடி அண்ணா இப்பிடி பொது அறிவுக் களஞ்சியமா இருக்கிறீங்க?
அடுத்த Grand master போட்டி நீங்களா நடத்தப் போறீங்க?

// ilangan கூறியது...
யப்பா இது எங்கேயோ இங்கிலீசுல வந்த மாதிரி இருக்கு.. இருந்தாலும் ஓகே.. நாமளும் உங்க தொடர் விளையாட்டை தொடர்ந்தோம் வந்து பாக்கிறது. //

என் தளத்தில் அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணக் குசும்பன் இலங்கன் ஒழிக ஒழிக...
படுபாவி... என்ர நேற்றய பதிவில போட்டுக் குடுத்திற்றியே...

// Varadaradjalou .P கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு //

நன்றி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
யார்ரா அது எங்க சர்தார்கள கேவலமா பேசுறது, மன் மோகன்ஜி மன் மோகன்ஜி கனக கோபிய புடிச்சி போலீசுல போடுங்க //

எங்களுக்கு சோனியாஜி ஆதரவு இருக்கு...
எங்க ஆள் தலையாட்டாம உங்க ஆள் மூச்சு கூட விடாது தெரியும் தானே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// வேந்தன் கூறியது...
//இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?//
அவ்வ்வ்வ்வ்வ்............ //

இப்பி பொது இடத்தில வந்து அழுது உங்கள நீங்களே அவமானப்படுத்தப் படாது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// வந்தியத்தேவன் கூறியது...
கோபி நான் சொல்லவந்ததை நண்பர் மருதமூரான் சொல்லிவிட்டார் அக்டோபர் புரட்சி நவம்பரில்தான் நடந்தது.//

நவம்பரில் நடந்ததா? அல்லது இப்போது நவம்பரில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டதா கலண்டர் மாற்றம் காரணமாக?

//பதிவுக்கு சம்பந்தமில்லாத விடயம் உன்னைப்போல் ஒருவன் கலக்கலாம்.//

ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க...

//யோ வோய்ஸ் ஹர்பஜனும் சர்தார்ஜி தான். //

தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

//ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க..//

தேவையில்லாம போலி பச்சிளம் பாலகர் சங்க தலைவர் வந்தியை புகழும் உங்களை கண்டிக்கிறேன்

//தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...//

வந்தியோடு இணைந்து நீங்கள் எனக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க..//

தேவையில்லாம போலி பச்சிளம் பாலகர் சங்க தலைவர் வந்தியை புகழும் உங்களை கண்டிக்கிறேன்

//தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...//

வந்தியோடு இணைந்து நீங்கள் எனக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து கண்டனங்களை பதிவு செய்கிறேன். //

கண்டனங்களை ஏற்றுக் கொண்டு அண்ணர், தானைத் தலைவன் யோ வொய்ஸிற்கு ஆதரவாக என் கரங்களை நேரே நீட்டுகிறேன்...
வாழ்க யோ வொய்ஸ்...

gopi superb
sardargis are always good and intellectuals too
Nice blog
congrts keep it up

நாங்க எப்பவும் உண்மையை உரத்து சொல்லுவம்.

உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.html

// thenammailakshmanan கூறியது...
gopi superb
sardargis are always good and intellectuals too
Nice blog
congrts keep it up //

நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// ilangan கூறியது...
நாங்க எப்பவும் உண்மையை உரத்து சொல்லுவம். //

அடப்பாவி...
இதுக்கு பேர் உண்மையா?

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.html //

வருகிறேன் யோ வொய்ஸ்...
நன்றி...

canary island located in atlantic ocean,not in pacific ocean........

// kasbaby கூறியது...
canary island located in atlantic ocean,not in pacific ocean........ //

கருத்திற்கு நன்றி...
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது...

மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திவிட்டு மாற்றிவிடுகிறேன்...
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...