மற்றவர்களை எரிச்சற் படுத்துதல் அல்லது கொச்சை மொழியில் கடுப்பாக்குதல் என்பது பலருக்கு மிகவும் பிடித்த செயற்பாடுகளில் ஒன்று...
அப்படியான நண்பர்களுக்காக உங்கள் அன்பு நண்பன் க.கோபியின் அழகு அறிவுரைகள்...
10. சிரிப்பு...
சிரிப்பு என்பது சாதாரண விடயமல்ல. சிரிப்பின் மூலம் இணர்டு பிரதான விடயங்களை செய்யலாம். ஒன்று எல்லாவற்றுக்கும் சிரிப்பது. மற்றையது அவர் சொல்லும் எல்லா நகைச்சுவைகளைக் கேட்ட பின்பும் பேசாமல் வாயைத் திறக்காமல் இருப்பது.
உதாரணமாக 'எனது செல்லப்பிராணி இறந்துவிட்டது' என்று ஒருவர் சொல்லும் போது உடனே ஹா ஹா ஹா என்று சத்தமாகச் சிரியுங்கள்... மனிதர் குழம்பிவிடுவார்.
அதேவேளை மிகக் கஷ்ரப்பட்டு நல்ல நகைச்சவையை சொன்ன பின்னர் அமைதியாக இருங்கள்...
9. இலக்கணம்...
நீங்கள் அலுவலகத்தில் வேலைசெய்பவராக இருந்தால் உங்கள் மேலதிகாரியையும், உங்கள் சகதொழிலாளர்களையும் எரிச்சல்படுத்த மிகச்சிறந்த வழி, இலக்கணப்பிழையாக இருப்பது. தான். எல்லாவற்றையும் பிழையாக எழுதுதல் தான் அதன் வழி. 'ஆது ஆவர்களை பையங்கைரமாக கூழப்பூம். ஆது ஆவர்களை பாடு பாயங்காரமாக ஏரிச்சால் பாடுத்தும். எற்பாடுகீன்ற கூழப்பாத்தீல் ஊங்காள் பாக்கமே ஏட்டீப் பார்க்காமட்டர்கள்'
8. இணையம்...
சகாக்களை எரிச்சல்படுத்த இன்னொரு வழி, ஊரிலுள்ள வெற்று வேட்டு மின்னஞ்சல்களையெல்லாம் அவர்களுக்கு முன்னகர்த்துங்கள். அதுவும் முக்கியமாக காதலிக்கும் நண்பர்களுக்கு அனுப்புங்கள். காதலியின் மின்னஞ்சல் வரும் என ஒவ்வொருமுறையும் மின்னஞ்சலைப் பார்க்கும் போது உங்கள் பிரயோசனமற்ற மின்னஞ்சல்களைப் பார்த்து கொலைவெறியுடன் உங்களைத் தேடிவருவார்கள்.
7. பிறகென்ன நடந்தது?
அலுப்புத் தரக்கூடிய தமிழ்வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
யாராவது ஏதாவது சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டு முகத்தில் உணர்ச்சிகள் எவற்றையும் காட்டாமல் 'பிறகென்ன நடந்தது?' என்று கேளுங்கள். அவர்கள் உங்களை கத்தி எடுத்து குற்றும் வரை அல்லது துப்பாக்கி எடுத்து சுடும் வரை 'பிறகென்ன நடந்தது?' என்று கேட்டுக்கொண்டே இருங்கள்.
(குற்றிய பிறகு அல்லது சுட்ட பிறகு உங்களால் கேட்க முடியாது என்பது சோகமான விடயம்.)
6. நேரடி கண்பார்வையை தவிருங்கள்...
இது கேட்பதற்க சிறியவிடயமாக இருக்கும். ஆனால் மிக சக்திவாய்ந்தது. யாராவது உங்களுடன் கதைக்கும் போது அவர்களது கண்களைப் பார்க்காதீர்கள். அவர்களது நெற்றியைப் பார்த்துக் கதையுங்கள். ஒன்றில் தாங்கள் கதைப்பது எதிலும் ஏதும் பிழையிருக்கிறதோ என்று யோசிப்பார்கள் அல்லது தலையில் ஏதும் இருக்கிறதா என தடவிப் பார்ப்பார்கள்.
5. நகைச்சுவை சொல்லுங்கள்...
ஆம்... நகைச்சுவையை சொல்லுங்கள். மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பெரிய நகைச்சுவையை சொல்லுங்கள். முடிவை மறந்துவிட்டு தலையைச் சொறியுங்கள்.
பக்கத்தில் கிடைக்கும் கட்டையை எடுத்து உங்களைத் தாக்காவிட்டால் அந்த நபரில் ஏதோ பிழையிருக்கிறது என்று அர்த்தம்.
4. சுத்தமாக இருங்கள்...
படுபயங்கர சுத்தமாக இருங்கள். ஆம். மற்றவர்கள் தாங்கள் அசுத்தமாக இருக்கிறோம் என நினைத்தால் அவர்களுக்கு கஷ்ரமாக இருக்கும். எப்போதும் கைகளில் லைசோல், டெற்றோல், நறுமண சிவிறிகள் போன்றவற்றோடு திரியுங்கள்.
அவர்கள் அலுவலகத்தில் தொடும் ஒவ்வொரு பகுதியையும் லைசோல். டெற்றோல் போட்டு கழுவுங்கள்.
அவர்கள் உங்களுடன் கைகுலுக்கினால் உடனே கையை மருந்து போட்டுக் கழுவுங்கள். அத்தோடு நறுமண சிவிறியை கையில் உடனே தெளியுங்கள்.
முகத்தைச் சுழித்து ஓர் பார்வை பார்த்து முறைக்காவிட்டால் வந்து சொல்லுங்கள்.
3. பாடல் பாடுங்கள்...
ஆம். மிகப்பிரபலமான, மென்மையான பாடலை மிகச்சத்தமாக திரும்பத் திரும்ப பாடிக் கொண்டே இருங்கள். முக்கியமாக உங்களுக்கு கிட்ட இருக்கும் நபர்களுக்கு பிடித்த பாடலாக இருந்தால் மிக்க நல்லது.
ஒரு கட்டத்திற்கு மேல் 'நிறுத்துடா' என்றோ 'Stop it' என்றோ கத்தாவிட்டால் அவருக்கு உங்கள் பாடல் திறமையால் காது கேட்காமல் போய்விட்டது என்று அர்த்தம்.
2. எனக்குத் தெரியும்...
யார் என்ன சொன்னாலும் 'எனக்குத் தெரியும்..' என்று சொல்லுங்கள். சொல்வது உங்கள் மேலதிகாரியாக இருந்தாலும் முகத்தில் அறைந்தது போல் 'எனக்குத் தெரியும்' என்று சொல்லுங்கள். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முயற்சித்துப் பாருங்கள்...
1. எல்லாவற்றிலும் சிறந்தது சொல்கிறேன்...
இவை எல்லாவற்றையும் விட மிக சக்தி வாய்ந்தது இப்படியான மொக்கைத்தனமான அறிவுரைகள் கொண்ட இரண்டு பதிவுகள் இட்டுப் பாருங்கள்... அவனவன் வந்து கும்மிற்றுப் போவான்...
(ஆனா எனக்கு கும்மக் கூடாது... நான் பச்சப் புள்ள... அகில உலக விரல் சூப்பிகள் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவர்... தூரத்தில இருந்து பாக்கத் தான் பயங்கரமா இருப்பன்... கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க... சீ.. சீ... கிட்ட வந்தீங்க எண்டா 'கெக்க புக்க கெக்க புக்க' எண்டு சிரிப்பீங்க...)
|
10 பின்னூட்டங்கள்:
அறிவுரை என்ற பெயரில் அடுத்த நாள் வேலைக்கு ஆப்பு வைத்திடுவீங்க போல இருக்கே.....
அடீ வங்கீ கெடுக்கானுமூணூ ஓரு ஏண்ணாத்தில் தன் திரீயூரீங்கானூ னால்லா வேளங்கூதூ!
//கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க//
அப்போ நீங்கள் குளிப்பதே இல்லையா?
ரசித்தேன்
ஏன் இப்படி
ஐயா எப்படி இப்படி
ரூம் பொட்டு யோசிப்பீங்களோ?
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...
// ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...
அறிவுரை என்ற பெயரில் அடுத்த நாள் வேலைக்கு ஆப்பு வைத்திடுவீங்க போல இருக்கே.....
அடீ வங்கீ கெடுக்கானுமூணூ ஓரு ஏண்ணாத்தில் தன் திரீயூரீங்கானூ னால்லா வேளங்கூதூ! //
செய்து பாருங்கோ...
ஆவல போனா வந்து சொல்லுங்கோ...
நான் கைகொட்டி சிரிக்கிறன்...
//கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க//
அப்போ நீங்கள் குளிப்பதே இல்லையா?//
ஹி ஹி...
உண்மைகளை பொது இடத்தில கதைக்ப்படாது...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
// ஆகீல் முசம்மில் கூறியது...
ஏன் இப்படி //
சும்மா...
வெட்டியா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஐயா எப்படி இப்படி
ரூம் பொட்டு யோசிப்பீங்களோ? //
றூம் போட காசில்லை...
முடிஞ்சா கொஞ்சம் அனுப்பினா றூம் போட்டு யோசிச்சு இன்னம் மொக்கையா போடுறன்... ;)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
//சந்ரு கூறியது...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க... //
வேல வெட்டி இல்லாட்டி இப்பிடித் தான்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலதை நான் என் அலுவலகத்தில் செய்தாலும் மேலதிகாரி என்று எல்லோரும் பொறுத்துப் போகிறார்கள்.. மீதியும் சொல்லிட்டீங்க இல்ல? இனி பின்னிருவோம்..
//LOSHAN கூறியது...
சூப்பர் .. ஏற்கெனவே இதில் பலதை நான் என் அலுவலகத்தில் செய்தாலும் மேலதிகாரி என்று எல்லோரும் பொறுத்துப் போகிறார்கள்.. மீதியும் சொல்லிட்டீங்க இல்ல? இனி பின்னிருவோம்.. //
பின்னீற்று என்ன நடந்தது எண்டு சொல்லுங்கோ...
ஆனா... ஒரே ஒரு வேண்டுகோள்...
வானொலியில செய்து போடாதேங்கோ...
நான் இப்ப வானொலி கேக்கிறது குறைவெண்டாலும், இடக்கிட அவதாரம், விடியல் கேக்கிறனான்...
நான் பாவம்...
ஹி ஹி ஹி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
கருத்துரையிடுக