க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'ஆசை இல்லா மனசு, அது ஆளில்லாத தரிசு... புல்லுப் பூண்டு கூட முளைக்காது' என்று தமிழ்ச் சினிமாப் பாடல் ஒன்று இருக்கிறது.
அப்படி எம் எல்லோரிடத்திலும் ஆசைகள் இருக்கின்றன.
பதிவர் சந்ரு என்னை இது சம்பந்தமான தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்.
10 வரங்களைத் தரக்கூடிய தேவதை என் முன்னால் தோன்றினால் நான் என்னென்ன வரம் கேட்பேன் என்பது தான் இந்த தொடர் விளையாட்டு.
இதோ நான் கேட்க விரும்பும் வரங்கள்...

1. இலங்கையில் இனப்பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
எனது தாய்நாடு என்றவகையில் இலங்கையை நான் நேசிக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினை என்னை வாட்டுவதுண்டு. அடிக்கடி நம் தலைவிதிகளை நினைத்து கவலைப் படுவேன்.
ஆகவே இது தான் என் முதல் கோரிக்கை.

2. தமிழர்களிடையே சாதி பேதம் ஒழிய வரம் கேட்பேன்.
சாதி என்ற பதமே எனக்குப் பிடிக்காத ஒன்று. எமது சமுதாயம் பிரிந்து போய் இருப்பதற்கு இனப்பிரச்சினை அளவுக்கு இதுவும் காரணம் என நம்புகிறேன். பிறப்பால் ஒருவனைத் தாழ்த்துவதையும், உயர்த்துவதையும் எதிர்க்கிறேன்.
எனவே எனது இரண்டாவது கோரிக்கை தமிழர்களிடையே சாதி பேதம் ஒழிய வேண்டும்.

3. மலையக சமுதாயம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நெடுங்காலம் இருந்தபடியால் இம் மக்களின் பிரச்சினைகள் எனக்கு 100 வீதம் தெரியாது. ஆனால் இம் மக்கள் எம் எல்லோரையும் விட சுமார் 50 வருடங்கள் பின்தங்கி வாழ்கிறார்கள் என்பதை மட்டும் அறிவேன்.
அவர்கள் 500 ரூபாய் பிச்சைச் சம்பளத்திற்காக போராட்டங்கள் நடத்தும் நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் இலங்கையின் பணக்கார வர்க்கமாகவும் மாறவேண்டும்.
எனவே எனது மூன்றாவது கோரிக்கை மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

4. சமயங்களின் பெயரால் கடவுள் என்ற முகமூடியை அணிந்து திரியும் வேடதாரிகளின் வேடங்கள் களையப்பட வேண்டும்.
தமிழர்கள் சென்ரிமென்ற் இடியட்ஸ் என்று சிறிது காலத்திற்க முன்னர் பரவலாக பதிவுகள் இடப்பட்டன. இவ்வாறான குணம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்க்கையில் சமயங்கள் என்ற ஒன்று பிரச்சினை கொடுக்க அதற்கு மேல் ஒரு படியால் வாழும் மனிதர்கள் பலரும் தங்களை தாங்களே கடவுள் என அறிவித்துக் கொண்டு மோசடி செய்கிறார்கள். இவ்வேடதாரிகளின் உண்மை முகம் மக்களுக்கு காட்டப்பட வேண்டும்.

இனி எனது சுயநல ஆசைகள்...
5. கமல்ஹாசனையும் ஏ.ஆர்.ரஹ்மானையும், ஷேன் வோண் ஐயும், முரளியையும் சந்திக்க வேண்டும்.
சினிமா மீது அந்தளவிற்கு விருப்பமில்லாத எனக்கு கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பு மட்டும் விருப்பமான ஒன்று. அதில் வியப்பொன்றும் இல்லாதமை வேறு விடயம். அத்தோடு கமலின் கடவுள் பற்றிய கொள்கைகள் இந்த சமுதாயத்தில் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்படாதவை, ஆனால் தன் கொள்கைகளை எங்கும், எப்போதும் உரத்துச் சொல்லும் அந்த குணம் பிடிக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மானை எப்போது பிடிக்கத் தொடங்கியது என்று சொல்ல முடியவில்லை. சிறுவனாக (இப்போதும் அப்படித் தான்.) இருந்தபொழுது பெரிதாக பாடல்கள் கேட்பதில்லை. ஆனால் சில பாடல்கள் மட்டும் பிடிக்கும். சிறிது வளர்ந்த பின் அவை ரஹ்மானின் பாடல்கள் என அறிந்தேன். ஆனால் ரஹ்மானின் பாடல்கள் மீது பைத்தியம் என்ற அளவிற்க வந்தது ஒரு 3,4 வருடங்களிற்கு முன்னர் தான்.
முரளி, வோண் இருவரையும் பந்துவீச்சிற்காக பிடிக்கும். பந்துவீச்சைத் தவிர முரளியின் அமைதி, அடக்கம் பிடிக்கும். வோண் இன் கிறிக்கெற் பற்றிய பரந்த அறிவும், தலைமைத்துவமும் பிடிக்கும்.

6. சமுதாய விழிப்புள்ள பதிவுகளை எழுத எனக்கு மனம் வரவேண்டும்.
சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவன் நான். ஆனால் இப்போதெல்லாம் பம்பல் பதிவுகளுடனேயே காலங்கள் செல்கின்றன. நகைச்சுவை என்ற உணர்வு எனக்கு மிகப்பிடித்தது என்றாலும் அதை ஒரு புறமாகவும் சிந்தனைப் பதிவுகளை ஒரு புறமாகவும் எழுத எனக்கு புத்திவரச் செய்யக் கேட்பேன்.

7. வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறக்க சக்தி வேண்டும்.
வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்களை மறந்து வாழ எனக்கு சக்தி வேண்டும். அத்தோடு துரோகங்களையும், பொய்களையும் அடையாளம் காணும் சக்தி வேண்டும்.

8. கிறிக்கெற் விளையாட வேண்டும்.
பாடசாலைக் கிறிக்கெற் அணியில் விளையாடிய நான் பின்னர் உயர்தரத்தில் அந்தப்பக்கமே போகவில்லை. இலங்கை அணிக்காக விளையாடும் ஆசை முன்பெல்லாம் விளையாடும் போது இருக்கும். இப்போது மென்பந்து விளையாடுவதே அபூர்வம் ஆகிவிட்டது. ஆகவே எனது 2 ஆவது உயிரான கிறிக்கெற்றை (முதலாவது உயிர் எதுவென்று கேட்டு என்னை சிக்கலில் மாட்ட யாராவது முயன்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.) தொடர்ந்து விளையாட வேண்டும்.

9. என்னை நேசிப்பவர்கள் யாவருக்கும் என் அன்பு புரிய வேண்டும்
நான் பொதுவாக மற்றவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு, அன்பு போன்றவற்றை எந்த நேரமும் வெளிப்படுத்துவதில்லை. அதனால் சிலவேளைகளில் மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ளாமல் போவதுமுண்டு.
ஒருவரோடு ஒன்றாக இருக்கம் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட அவர் எம்மைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது ஏற்படும் கவலை பன்மடங்கு அதிகமானது.
எனவே கோபி என்பவனின் இயல்பான குணத்தை மற்றவர்கள் புரிய வேண்டும்.

10. ***********************************
சில ஆசைகளை பொது இடத்தில் சொல்ல முடியாது. 10 ஆவது ஆசை (தரப்படுத்தலில் 1 ஆவதாக இருக்கும் என நம்புகிறேன்) அப்படியானது. அந்த ஆசையும் நிறைவேறட்டும்.


இவை தான் என் ஆசைகள்.......
இந்த தொடர்பதிவுக்கு பின்வருவோரை அழைக்கிறேன்...

மருதமூரான்... - பாடசாலைக் காலம் பற்றிய பதிவிற்கு என்னை அழைத்தமைக்கு பதிலாக...
sshathiesh... - விருதிற்காக...
சுபாங்கன்... - யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மீண்டும் கலக்கத் தொடங்கியமைக்காக...
இலங்கன்... - வகுப்புத் தோழன். யாழ்ப்பாணத்தில் நிற்கிறான் இப்போது.

9 பின்னூட்டங்கள்:

பதிவர்கள் இருவரின் வலைத்தள முகவரிகளை இடாமைக்கு மன்னிக்கவும்.
2 முறை சரிசெய்ய முயன்று மேய்வான் முடங்கிப் போய் விட்டது.
இணைய இணைப்பில் ஏதோ பிழை...

SShathiesh -http://sshathiesh.blogspot.com/

Subankan -
http://subankan.blogspot.com

அவர்கள் 500 ரூபாய் பிச்சைச் சம்பளத்திற்காக போராட்டங்கள் நடத்தும் நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

r u crazy?
is 500 rs simple?
u dump...

தேவதை உங்க கிட்டயும் வந்திருச்சா? வாழ்த்துக்கள்.

என் இரசனையும் உங்கட ரசனையும் நல்லா ஒத்து போகுது. நமக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கோ?

வரங்கள் கிடைக்கட்டும்.

ம்.. வித்தியாசமான வரங்கள். நடக்கட்டும். எனக்குக் கனவில கூட தேவதை வந்ததில்லை. அப்படி ஒரு கொடுப்பனை. இப்ப பதிவிலதான் வந்திருக்கு. நன்றி.

// பெயரில்லா கூறியது...
அவர்கள் 500 ரூபாய் பிச்சைச் சம்பளத்திற்காக போராட்டங்கள் நடத்தும் நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

r u crazy?
is 500 rs simple?
u dump... //
நியாயமான கோரிக்கைகளை வழங்கமுடியாதவர்களுக்கு நீங்கள் அல்லக்கையா?

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
தேவதை உங்க கிட்டயும் வந்திருச்சா? வாழ்த்துக்கள்.

என் இரசனையும் உங்கட ரசனையும் நல்லா ஒத்து போகுது. நமக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கோ?

வரங்கள் கிடைக்கட்டும். //

பின்னூட்ட சிங்கம் வந்தியண்ணாவின் நாயாட நரியாட வாசித்தீர்களோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// Subankan கூறியது...
ம்.. வித்தியாசமான வரங்கள். நடக்கட்டும். எனக்குக் கனவில கூட தேவதை வந்ததில்லை. அப்படி ஒரு கொடுப்பனை. இப்ப பதிவிலதான் வந்திருக்கு. நன்றி. //

தேவதையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

கண்ணா எனக்கும் நிறைய வரம் வேணும் அது பதிவில் வர நிறைய நாளாகும் .

// ilangan கூறியது...
கண்ணா எனக்கும் நிறைய வரம் வேணும் அது பதிவில் வர நிறைய நாளாகும் . //

எப்பிடி தலைவா யாழ்ப்பாணம்?
விரைவில் பதிவிடுங்கள்...