க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

 அனைவருக்கும் வணக்கம்…
நிறைய நாளுக்குப் பிறகு எழுதுகிறேன்…

நான் நினைக்கிறன் எல்லோருக்கும் இத மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கும் என்று…
எனக்கு கொஞ்ச நாளுக்கு முதல் ஒரு நண்பர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்…
அதில்,
'இன்று திருப்பதி கடவுளின் பிறந்த நாள்… இந்த குறுஞ்செய்தியை 11 பேருக்கு முன்னகர்த்தவும்… முன்னகர்த்தினால் நீங்கள் நினைக்கும் எல்லாமே நடக்கும்… மாறாக அந்த செய்தியை அலட்சியம் செய்தால் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா காரியங்களும் தோல்வியிலேயே முடிவடையும்…; என்று இருந்தது.
அவனிடம் இதைப் பற்றி கேட்டதற்கு தனக்கு இந்த செய்தியை தனக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பியதாகவும், அந்த 11 பேரில் ஒருவராக எனக்க அனுப்பியதாகவும் சொன்னான். நான் அவனிடம் கேட்டேன் 'திருப்பதி கடவுள் எப்படா பிறந்தார்? ஏன் இப்பிடியே இருக்கிறீங்கள்?' என்ற. அவன் சொன்னான், 'எனக்கு இதப் பற்றி தெரியாது. கடவுள் விஷயம்.. ஏன் வீணா றிஸ்க் எடுப்பான்?' என்று.
நான் அவனிடம் கேட்டேன் 'சரி.. உனக்கு இந்த மெஸேஜ அனுப்பிளானின்ர நம்பர தரேலுமா?' என்று.
அவனும் தந்தான்..
இது நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர் எனக்கு இன்னொரு குறுந் தகவல் கிடைத்தது. பிள்ளையார் போன்ற உருவமுடைய படத்தை குறியீடுகள் மூலம் வரைந்து விட்டு மேலே குறிப்பிட்ட மாதிரியான ஒரு தகவல் கிடைத்தது. நான் அந்த தகவலில் 10 பேருக்கு அனுப்பவும் என்று இருந்ததை 150 பேருக்கு அனுப்பவும் என்று மாற்றி விட்டு நண்பருக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவரின் இலக்கத்திற்கு அனுப்பி விட்டேன்…
எப்படி என் இராஜதந்திரம்…???????
(ஹி ஹி ஹி ஹி…………………!!!)

0 பின்னூட்டங்கள்: