கிறிக்கெற்றில் 'innings' என்பதற்குரிய ஒருமைப்பதமும் 'innings' ஏ ஆகும்.
'inning' என்ற சொல் பேஸ் போல்(Base ball) என்ற விளையாட்டில் மட்டும் பயன்படுத்தப்படும்.
கிறிக்கெற்றில் 'றபிற்' (Rabbit) என அழைக்கப்படுபவர் குறைவான துடுப்பெடுத்தாடும் வலிமையுள்ள வீரர் ஆவார். பொதுவாக பந்து வீச்சாளராக இருப்பார். எனினும் சில வேளைகளில் இலக்கு காப்பாளர்களும் இந்த வகையில் அடக்கப்படுவதுண்டு.
'பெரற்'(ferret) என அழைக்கப்படுபவர் 'றபிற்' என்று அழைக்கப்படுபவரிலும் பார்க்க குறைவான துடுப்பெடுத்தாடும் திறமை படைத்தோர் ஆவர். பெரற் என அழைக்கப்பட காரணம் 'றபிற் என அழைக்கப்படுபவரின் பின்னால் (துடுப்பெடுத்தாட) செல்பவர் என்பதால் ஆகும். ஏனென்றால் 'பெரற்' என்பது முயல்களை வேட்டையாடும் ஒரு வகை பிராணி ஆகும். இப்பிராணி முயலை வேட்டையாடுவதற்காக முயலின் பின்னால் செல்வதை நினைவுபடுத்தி இப்பெயர் வழங்கப்படும்.
எனினும் றபிற்,பெறற் போன்ற சொற்கள் கிறிக்கெற் விதியில் இல்லை.
Hoik (கொய்க்) என்பது குறைந்த கடடுப்பாடோடு அல்லது கட்டுப்பாடு இன்றி பந்தை முடியுமானளவு பந்தை பலத்துடன் அடித்தல்.
Agricultural Shot: என்பது குறைந்த திறமையோடு விளையாடப்பட்ட ஒரு அடி ஆகும்.
ஓட்ட எண்ணிற்கு முன்னால் வீழ்த்தப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை இடும் முறை (உதாரணமாக 2 இலக்கு இழப்பிற்கு 100 ஓட்டங்கள் என்பதை 2/100) அவுஸ்ரேலியா நாட்டிற்கு உரியதாகும்.
ஓட்ட எண்ணிக்கையின் பின்னால் இழக்கப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை இடும் முறை ஏனைய நாடுகளுக்குரிய முறை ஆகும்.(100/2)
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக