141ம் இலக்க பேருந்து. எப்போதுமே பேருந்து நிறைந்த கூட்டம் பயணம் செய்யும் பேருந்துகள்...
அன்றும் அப்படித்தான்... பேருந்து நிறைந்த கூட்டம். இரண்டு பக்க இருக்கைகளை ஒட்டியும் நிற்கும் பிரயாணிகள். அந்த இரண்டு வரிசைக்கு இடையிலும் ஓர் கூட்டம். மொத்தமாக 3 வரிசையில் அந்த சிறிய பேருந்தில் பிரயாணிகள். அந்த நடு வரிசையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்... என் முன்னே ஒரு சகோதரி. மற்றைய புறத்தில் ஓர் வயதான முதியவர். இருவருக்குமிடையில் நான்.
எனக்கு எதிரே நிற்கும் அந்த சகோதரி மீது எனது கை பட்டு விடக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்தேன். ஏனென்றால் எமது சகோதரர்கள் பேருந்துகளில் செய்யும் சேட்டைகளால் தெரியாது கை பட்டாலும் இப்போதைய நிலையில் சகோதரிகள் முறைத்துப் பார்ப்பதுண்டு. ஆகவே அந்த சூழ்நிலை எனக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் கண்டேன். கடைசி நேரத்தில் திடீரென தடுப்பு பிரயோகிக்கப்பட நான் ஆடிப்போனேன், ஆனால் அந்த வேளையில் சகோதரி மீது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக எனது முழுவிசையை மறுபுறத்தில் பிரயோகித்தேன். கூடுதலாக பிரயோகித்து விட்டேனோ என்னவோ, மறுபுறத்தில் நின்ற முதியவர் மீது சாய்ந்தேன். அந்த முதியவர் ஆடிப்போனார். இருக்கையோடு மோதச்சென்ற அவரை அருகில் நின்ற சகோதரர் ஒருவர் காப்பாற்றினார். அந்த முதியவர் திரும்பி என்னைப்பார்த்தார். அவர் என்ன இனத்தவர் என என்னால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே ஒரு அப்பாவிப் போல (அதென்ன போல... நான் அப்பாவி தான்...) முகத்தை வைத்துக்கொண்டு மிக மெல்லியதாக 'சொறி' என்றேன். என் நெற்றியில் தமிழன் என்று எழுதி ஒட்டியிருந்ததோ தெரியவில்லை. அந்த முதியவர் சொன்னார் 'தம்பி! பஸ்ஸில நிக்கிறதெண்டா ஒழுங்கா நிக்கோணும். பொம்பிளப் பிள்ளையள தான் இடிக்கிறீங்கள் எண்டா என்னப்போல கிழவன்மாரையும் விட மாட்டீங்களா?'. எனக்கு வியர்த்துக் கொட்டியது. ஆனால் மறுபுறத்தில் இருந்த சகோதரி என் நிலைமையை புரிந்து கொண்டார் போலும், போகும் போது என்னைப் பார்த்து 'பாவம் அப்பாவி' என்று சொல்வது போல் சிரித்துவிட்டுச் சென்றார். இறங்கும் போது அந்த முதியவரிடம் சொன்னேன் 'ஐயா! தெரியாம இடிச்சிற்றன். ஏதும் அடி பட்டதா?' என்று. முதியவரும் 'சரி போனாப் போகுது' என்பது போல ஒன்றும் சொல்லாமற் சென்று விட்டார்.
3 பின்னூட்டங்கள்:
எமது சகோதரர்கள் பேருந்துகளில் செய்யும் சேட்டைகளால் தெரியாது கை பட்டாலும் இப்போதைய நிலையில் சகோதரிகள் முறைத்துப் பார்ப்பதுண்டு. ஆகவே அந்த சூழ்நிலை எனக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்.ஃஃஃ
நல்லவேளை தப்பினீர்கள்... பொண்ணுங்க மேல விழுந்திருங்தீங்கன்னா... பதிவை கொஞ்சம் தாமதமாக போட வேண்டிதிருக்கும்.
ஹி ஹி...
என்ன செய்ய... காலம்...
இப்படிப்பட்ட பல அனுபவங்கள் எனக்கும் நேர்ந்துள்ளது தான். சரி
தம்பி நீங்கள் அப்பாவியாக இருந்தால் இந்நாட்டில் வாழ முடியாது. எதோ பார்த்து
கருத்துரையிடுக