இலங்கையில் பிரபலம் பெற்ற இலங்கைப் பாடல்களான 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..." மற்றும் 'சுறாங்கனி... சுறாங்கனி..." ஆகிய பாடல்கள் தென்னிந்திய திரைப்படங்களுக்காக மீள்கலவை செய்திருப்பதாக அறிந்து கொண்ட நான் அவற்றை ஆசையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டேன்... பதிவிறக்கம் செய்துவிட்டு கேட்டேன்...
மீள்கலவைப் பாடல்களின் விதிகளிலிருந்து அவை சற்றும் விலகவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
இலங்கையின் புகழ்பெற்ற பொப் பாடல்கள் அவை.
'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்குச் சென்றாளோ, படிக்கச் சென்றாளோ?' அருமையான வரிகள்... அருமையான குரல்கள்... பாடலாயினும் பெண்களின் படிப்பை பற்றி கதைத்த பாடலது... அந்தப் பாடலை மீள் கலவை செய்திருக்கிறார்கள் என்று அறிந்த போது மகிழ்ச்சியடைந்தேன்... மீள் கலவை செய்தால் என்ன பாடலின் வேகத்தை சற்றுக் கூட்டியிருப்பார்கள் என்று நினைத்தேன்... ஆனால் பாடலையே மாற்றி விட்டார்கள். பாடலின் தொடக்கம் மட்டும் தான் இலங்கையினுடையது, மிகுதியை மாற்றி விட்டார்கள். இதில் மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் பாடலின் இறுதியில் வரும் வரிகள் உண்மையான சின்ன மாமியே பாடலின் கொள்கையோடு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்...
'கதாநாயகி- ஏன்டா வாலு என்ன வேலை பண்ணுறாய்... சைக்கிள் கப்ல ஆளை மாத்தப் பாக்கிறாய்... வேண்டா நானும் மோசமான ஆளுடா... என் கையில சைக்கிள் செயினு பாருடா...
நாயகன் -மை வைப் நீயும் ஹார்ட்டு மாறி கார்ப்ஸ் ஸ்கூப்பர் ஸ்ரெப்னி மாறி ரெண்டு பேரையும் வச்சிக்கிறேனே... ஹே... ஹே... ஹே...'
இலங்கை பாடல்களையும் விட்டுவைக்க மாட்டார்களா...
சுறாங்கனி சுறாங்கனி பாடல் தமிழிலும் பாடப்பட்டது. ஆனால் தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு தமிழில் பாடல் எழுதினால் மேலதிக வரி உள்ளதோ என்னவோ சிங்களப் பாடலின் தொடக்கத்தை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'சுறாங்கனி... சுறாங்கனி... சுறாங்கினிக்கு மாலு கனாவா... மாலு மாலு மாலு... சுறாங்கனிக்கு மாலு கனாவா...' சிங்கள மொழி தெரியாத தமிழக தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் இதில் என்ன விளங்கப் போகிறது?
'சுறாங்கனி... சுறாங்கனி... சுறாங்கனிக்க மீனு கொண்டு வந்தன்... மீனு மீனு... நான் பிடிச்ச மீனு... சுறாங்கனிக்கு மீனு கொண்டு வந்தன்...' இரண்டுக்கும் ஒரே மெட்டுத் தானே...
ஏன் புரியாத மொழியில் தான் பாடல் அமைய வேண்டுமா...?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக