4 பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வு ஒன்றிற்காக ஒரு வனப்பிராந்தியத்தைப் பார்வையிட சென்றிருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்களுக்குரிய ஆண்டுப் பரீட்சையும் இருந்தது. அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களை பெற்று விட்டு திரும்ப நினைக்கையில் அந்த வனத்தின் இயற்கை கொஞ்சும் எழில் அந்த நான்கு மாணவர்களையும் கவர்ந்து விட ஒரு மாணவன் சொன்னான், 'எம்மிடம் தான் கார் உள்ளதே நாம் இரவு இங்கே தங்கிவிட்டு நாளை அதிகாலை புறப்பட்டு சென்றாலென்ன?'. மற்றவர்களுக்கும் அது பிடித்து விட அதிகாலை நேரத்துக்கே எழுந்து செல்வதென்ற முடிவோடு நித்திரைக்குச் சென்றனர். எழில் கொஞ்சும் வனத்தின் சில்லென்ற தென்றல் அவர்களை வருட அவர்கள் தங்களை மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நித்திரையை விட்டு எழ வேண்டிய நேரத்தை கடந்து நிறைய நேரங்களின் பின்னர் நித்திரையை விட்டு எழுந்து நிலைமையை உணர்ந்து விட்டு விரிவுரையாளரிடம் பொய் சொல்லி சமாளிப்பது என்று பொய்யொன்றையும் தயார் செய்து கொண்டு பல்கலைக்கழகம் சென்றனர். அங்கு சென்று விரிவுரையாளரிடம், 'சேர் நாங்கள் ஆய்விற்காக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பும் போது காரின் ரயரில் ஓட்டை ஏற்பட்டதால் அதை சரிசெய்து எடுத்து வர நேரமாகிவிட்டதால் பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை. ஆய்வுத் தேவைக்காகவே சென்றதால் தயவுசெய்து எங்கள் நால்வருக்கும் வேறு ஒரு பரீட்சை ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டனர். விரிவுரையாளரும் நாளை வாருங்கள் உங்களுக்கு புதிய பரீட்சை வைக்கிறேன் என்றுவிட்டு சென்று விட்டார். மாணவர்களுக்கோ தங்கள் பொய் வேலை செய்து விட்டதால் ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு விடுதிகளுக்கு சென்று மறுநாள் வந்தனர்.
விரிவுரையாளர் நான்கு மாணவர்களையும் தனித்தனி அறைகளில் இருத்திவிட்டு பரீட்சை வினாத்தாளை விநியோகித்தார். முதலாவது வினாவை வாங்கிப் பார்த்தார்கள். 'ஆவர்த்தன அட்டவணையில் முதலாவது மூலகம் யாது?' என்பதே முதல் வினா. அதற்கு கீழே அந்த வினாவிற்கு 5 புள்ளிகள் என்று எழுதப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவருக்கம் ஒரே மகிழ்ச்சி. ஐதரசன் என்பதை விடையாக எழுதிவிட்டு 5 புள்ளிகளுக்கு இவ்வளவு இலகுவான வினாவா என்று கீழே பார்த்தனர் அதற்கு கீழே '95 புள்ளிகளுக்கான வினாவிற்கு மறுபக்கம் திருப்பவும்' என இடப்பட்டிருந்தது. மாணவர்களும் ஆர்வமாக மறுபக்கம் திருப்பினர்.
அடுத்த பக்கத்தில் 95 புள்ளிகளுக்கான வினா என தலைப்பிட்டு கேட்கப்பட்டிருந்தது 'நீங்கள் வந்த காரின் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது?' என்று. அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது தாங்கள் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது என்பதை முன்னரே கதைத்திருக்கவில்லை என்பது. பிறகென்ன மாட்டிக் கொண்டார்கள்.
இந்த கதையை நல்ல விதமாக எடுப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள், வேறு சிலர் பொய் சொல்லும் போது எல்லாவற்றையும் திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் என்ற படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் மகாத்மா காந்தியின் நண்பரொருவரின் பரம்பரையினர்.
(பெருமையாக நினைக்க வேண்டாம். மாகாத்மா காந்தியும் அந்த நண்பரும் அரிச்சந்திரன் நாடகத்தை பார்க்கச் சென்றார்களாம். நாடகம் நிறைவடைய இந்த நாடகத்திலிருந்து என்ன விடயத்தை பெற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு மகாத்மா காந்தி சொன்னாராம் 'உண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். இன்றிலிருந்து இனி பொய் சொல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன்' என்று. அந்த நண்பர் சொன்னாராம் 'அவசரத்துக்கு பொண்டாட்டியையும் அடகு வச்சக்கலாம் எண்டத படிச்சுக் கொண்டன்' என்று.)
என்னைப் பற்றி
பிச்சு உதறினது
-
►
2009
(76)
- ► செப்டம்பர் (12)
-
▼
2008
(87)
-
▼
அக்டோபர்
(28)
- எதிர்கால சந்ததி?
- நானும் கிளம்பிற்றன்...
- பில்கேட்ஸ் வைத்திருந்த கடவுச்சொல்...
- சேற்றின் மைந்தன்
- 95 புள்ளிகளுக்கான வினாவிற்கு மறுபக்கம் திருப்பவும்
- இந்த வருடத்தின் புகைப்படம்
- shipit.ubuntu.com இல இயங்கு தள இறுவட்டுக்காக விண்ண...
- கறுப்பாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள்...
- 'ஏன் நான் மட்டும்?'
- சிரிக்கிறவங்க சிரிக்கலாம்...
- வங்காளப் புலி- சவ்ரவ் கங்குலி...
- பிரிச்சு மேயாம விடுவாங்களா...
- இன்னுமொருவரா... வேண்டாமே...
- என்ன கொடுமை ஷரவணா இது...
- படித்த விடயங்கள்...
- வேதனை.
- நல்லன மட்டும் எடுப்போம்
- காதல்
- இலங்கைப் பாடல்களுக்கு நடந்த கதி...
- பாரதிதாசன் அவர்கள் இலங்கையை பற்றிப் பாடிய கவிதை...
- முயற்சி
- இன்றைய சூழ்நிலையில் சில பிரபலங்களின் சூழ்நிலைப்பாட...
- காதல்
- பேருந்தில் நான் பேச்சு வாங்கிய கதை...
- வானொலிச் சேவை
- தேவதை
- மனிதன்
- தமிழனும் சமூகமும்
- ► செப்டம்பர் (32)
-
▼
அக்டோபர்
(28)
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
அச்சுவலை
(2)
அப்ரிடி
(1)
அழகு
(1)
அழகு.
(1)
அழைப்பிதழ்.
(1)
அறுவை
(4)
அனுபவம்
(1)
ஆண்கள்
(1)
இராஜினாமா
(1)
இருக்கிறம்
(3)
இலங்கை
(5)
உள்குத்து
(1)
எரிச்சல்
(1)
ஐ.பி.எல்
(1)
ஒபாமா
(1)
ஒருவரி
(1)
ஒருவரி.
(1)
ஓடுதல்
(2)
கடவுள்
(2)
கடுப்பாக்குதல்
(1)
கணிப்பு
(1)
கப்பல்
(1)
கரச்சல்
(1)
கருத்து
(1)
கல்யாணம்
(1)
கவலை
(1)
களவு
(1)
காதல்
(2)
காதல
(1)
கார்
(1)
கிரபிக்ஸ்
(1)
கிறிக்கெற்
(6)
சக்தி ரீ.வி
(1)
சச்சின்
(1)
சண்டை
(2)
சந்திப்பு
(5)
சமயம்
(1)
சர்தார்
(1)
சாய்பாபா
(1)
சிந்தனை
(1)
சிரிப்பு
(1)
சிலெட்ஜிங்
(2)
சீரியஸ்
(1)
சும்மா
(1)
சுயதம்பட்டம்
(1)
சுயம்வரம்
(1)
சோதிடம்
(1)
தமிழ்
(3)
தமிழர்
(1)
தனிநாடு
(1)
தாடி
(1)
திணிப்பு
(1)
திருமண அழைப்பிதழ்
(1)
திருமணம்
(3)
திறமை
(2)
தினக்குரல்
(1)
தீவிரவாதம்
(1)
தேவதை
(1)
தொடர் விளையாட்டு
(1)
தொடர்பதிவு
(2)
தொலைக்காட்சி
(1)
நக்கல்
(1)
நகைச்சுவை
(18)
நட்சத்திரம்
(1)
நடைமுறை
(1)
நண்பர்
(1)
நம்பிக்கை.
(1)
நல் வாக்கியங்கள்
(1)
நாய்
(1)
நியூட்டன்
(1)
நேர்மை
(1)
பச்சிளம் பாலகர்
(1)
படங்கள்
(6)
பணக்காரர்
(1)
பணம்
(1)
பதிவர்
(11)
பதிவர் சந்திப்பு
(3)
பதிவர் சந்திப்பு படங்கள்
(2)
பம்பல்
(13)
பல்கலைக்கழகம்
(1)
புதுமை
(1)
பெண்கள்
(2)
மக்ராத்
(1)
மகாத்மா காந்தி
(1)
மன அழுத்தம்
(1)
மனம்
(1)
மனைவி
(3)
முயற்சி
(1)
மொக்கை
(9)
யாழ்தேவி
(2)
ரைற்றானிக்
(1)
லாரா
(1)
வலைப்பயிற்சி
(1)
வாடிக்கையாளர் சேவை
(1)
வாழ்க்கை
(1)
வானொலி
(1)
விவாகரத்து
(1)
வீண்
(2)
வெறுப்புக்கள்
(1)
ஹர்பஜன்
(1)
cricket
(2)
funny
(1)
gif
(1)
Sledging.
(3)
word exchange.
(1)
தமிழ்
பதிவிட்ட வகைகள்:
கார்,
நண்பர்,
நேர்மை,
பரீட்சை,
பல்கலைக்கழகம்,
பொய்,
மகாத்மா காந்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக