யாழ்ப்பாணத்தில் பெரியகடைச் சந்தியின் மூலையில் கந்தையாச் செட்டியார் மில் என்ற அரைக்கும் ஆலை இருந்ததாம். அந்த கந்தையாச் செட்டியாரின் பாட்டியாரின் பெயர் பொன்னம்மா அம்மையார் என்பதாகும். அம்மையார் அவர்கள் கடையிற் சுவாமிகள் மேல் பக்தி மிக்கவராம். சுவாமிகள் அவர் தம் அடியார்களுடன் செல்லும் போது சுவாமிகளையும் சுவாமிகளின் அடியார்களையும் மனங்கோணாது உபசரிப்பார்களாம்.
இளையான் குடிமாறநாயனாரின் பக்தியை சோதிக்க இறைவன் அவரின் செல்வங்களை படிப்படியாக குறைத்ததாக இலக்கியங்களில் படித்திருக்கிறோம் அல்லவா... அதைப் போல பொன்னம்மா அம்மையார் அவர்களின் வியாபாரத்தின் திடீரென பெருஞ்சரிவு ஏற்பட்டதாம். காணி, பூமி என்பன எல்லாம் பறிபோனதோடு அம்மையாரின் தாலியைத்தவிர மற்றைய எல்லா நகைகளும் விற்கப்பட்டு விட்ட நிலையில் அன்றாட சாப்பாட்டிற்கே அல்லல்படும் நிலை உருவானதாம். இந்த நிலைமையில் கடையிற்சுவாமி அவர்கள் ஒருநாள் திடீரென தமது நூற்றுக்கணக்கான அடியார்கள் சகிதம் அம்மையாரின் வீட்டுக்கு சென்றாராம். உடனே அம்மையார் தனது தாலியைக் கழற்றி தனது கணவனிடம் கொடுத்து வேண்டிய பொருட்கள் வாங்கி வருமாறு பணித்தாராம். இவ்வாறு செய்து வந்தவர்கள் அனைவருக்கும் மனம் கோணாது விருந்து படைத்தாராம்...
அன்றைய காலகட்டத்தில் தாலியை பெண்கள் தமது கணவனின் இறப்பின் போது மட்டுமே தமது கழுத்திலிருந்து கழற்றுவார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் அடியார்களுக்கு விருந்தளிக்க தனது தாலியை கழற்றிக் கொடுத்த அந்த தெய்வத்தாயை எமது சமூகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்?
நடிக நடிகையரின் பிறந்த நாட்களை அச்சொட்டாக மனனம் செய்த வைத்திருக்கும் தமிழ் சமூத்தால் இத்தகைய புனிதர்களை நினைவில் வைத்திருக்க முடியாதது தான் வேதனை.
பதின் பருவத்து(Teenagers) இளைஞர்களால் தான் பெரியளவிலான மாற்றங்களை இலகுவாக ஏற்படுத்த முடியும்...
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக