க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'தமிழுக்கு அமுதென்று பேர்,
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதொன்றறியேன்'
இந்த இரண்டையும் சொன்ன போது நண்பனொருவன் சொன்னான் 'சிலவேளையில் பாரதிதாசனுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருந்திருக்கலாம் தானே? யாமறிந்த மொழிகளில் என்று தானே சொல்லியிருக்கிறார்' என்றான்.
அவனுக்கு தெரியாது பாரதிதாசன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உட்பட ஆறு மொழிகள் இளவயதிலேயே தெரியும்.
சரி இவ்வளவு பெருமைமிகுந்த தமிழ் மொழி தனது தூய்மைத்தன்மையை இழந்தது போன்று தற்போது காணப்படுகிறதே... ஏன்...

முதலாவது விடயம் எம் மொழியை இற்றைப்படுத்தும் செயலை நாங்கள் யாருமே செய்யவில்லை. அல்லது இற்றைப்படுத்தியதை பரவலாக்க வில்லை என்பது தான்.
'என்ர இணைய மேய்வானில் தான் ஏதோ பிழை. நான் வேற கணணிக்கு போய் தான் என்ர வலைப்பூவை இற்றைப்படுத்திற்று வந்தேன். அதோட என் வலைப்பூவிற்கு சில நல்ல பின்னூட்டல்கள் வந்திருந்திச்சு. அதோட என்ர மின்னஞ்சல் முகவரிக்கும் கனக்க அஞ்சல்களும் வந்திருந்தன' இப்படி நாங்கள் எல்லோரும் கதைக்கின்றோமா...
'என்ர இன்ரனெற் புறெளவசர்ல தான் ஏதோ பிழை (அல்லது ஏதோ அப்சற்). தான் வேற கொம்பியூட்டால போய தான் என்ர புளொக்க அப்டேற் பண்ணிற்று வந்தன். அதோட என்ர புளொக்குக்கு கொஞ்ச நல்ல கொமன்ற்ஸ்ம் வந்நிருந்திச்சு. அதோட என்ர மெயில் அட்ரசுக்கும் நிறைய மெயில் வந்திருந்தது.' இது தானே பெரும்பாலானோரின் தமிழாக உள்ளது. மேற்படி சொற்களிற்கு அழகான தமிழ் சொற்கள் இருக்கும் போது ஆங்கிலக் கலப்பு ஏன்...

இதற்து முக்கியமாக பல காரணங்களை சொல்லலாம்.
முதலாவது உலகில் தொழிநுட்பம் வளர்ந்த அளவிற்கு நாம் எங்களுடைய தமிழ் மொழியை இற்றைப்படுத்த வில்லை. இற்றைப்படுத்திய சொற்களை நாம் பயன்படுத்தவில்லை. வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஆங்கில சொற்களையே இப்போதும் பயன்னடுத்தி வருகின்றன. இன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களை இளைஞர்கள் திரைப்பட கதாநாயகர்கள் போன்று அதிகளவு விரும்புகிறார்கள். இக் கலைஞர்கள் தூய தமிழை கதைத்தால் அவர்களை பின்பற்றும் இளைஞர்களும் நிச்சயமாக தூய தமிழில் கதைப்பார்கள்.
அடுத்தவர்கள் திரைப்பட கதாநாயகர்கள்... முதலில் திரைப்பட மற்றும் வானொலி அறிவிப்பாளர்களை குறிப்பிட்டதன் காரணம் திரைப்பட கதாநாயகர்கள் சந்திப்பதை விட இவ் அறிவிப்பாளர்கள் மிக மிக அதிகமாக சநிதிக்கிறார்கள்.
திரைப்பட கதாநாயகர்கள் தமிழில் கதைத்துப் பார்க்கட்டுமே... தமிழ்; விரிவடையும்...
முன்பெல்லாம் தமிழ் வளர்த்த பெருமை திரைப்படங்களை சார்ந்தது. தூய தமிழை கேட்பதற்காகவே மக்கள் திரைப்படங்களை பார்க்க சென்றார்கள். இப்போது திரைப்படத்தில் சில செக்கன்கள் வரும் கதாபாத்திரம் கூட தன்னால் முடிந்தளவு ஆங்கில வார்த்தைகளை உதிர்த்து விட்டல்லவா செல்கின்றன... எதிலும் இலகுவில் 'எடுபட்டு' விடும் இளைஞர்கள் இலகுவாக தமிழை கொல்லும் முறையை அறிந்து விடுகிறார்கள்.

ஆகவே இதற்கு நாங்கள் குற்றஞ்சாட்டக் கூடியவர்கள் இன்றைய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள்...
அவர்கள் இளம் வயதில் தங்கள் கொள்ளை கொண்டோரை ஒன்றாக இணைத்துக் கொண்டு மேற்படி விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக எதிர்த்திருந்தாலும் கூட இன்று இந்த நிலைமை இருந்திருக்காது. பட்டம் பெற்று, திருமணம் முடித்துவிட்டு, பிள்ளைகளை பெற்றுவிட்டு தான் தமிழ் வளர்க்க முயல்வதால் என்ன பிரயோசனம்...

தொலைக்காட்சிகளை பற்றி கதைக்கும் போது எனது வயது மாணவர்களிடம் காணப்படும் இன்னொரு கொள்கையை பார்த்து ஆச்சரியமடைந்தேன்...
இலங்கையிலுள்ள தொலைக்காட்சி ஒன்றின் இசைப் போட்டி ஒன்றில் அந்த அறிவிப்பாளினி ஆங்கில வார்த்தைகளை அளவுகணக்கின்றி பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை நண்பனொருவனிடம் கதைக்கும் போது முன் வைத்தேன்...
அப்போது அவன் சொன்ன பதில் தான் என்னை இதை எழுத தூண்டியது...
அவன் சொன்னான்... 'இப்பிடியான புறோகிறாம்ல சத்த தமிழ்ல சதைச்சா வடிவா இருக்காது. இப்பிடி கதைச்சா தான் பார்க்க நல்லா இருக்கும். இப்பிடி கதைச்சா தான் ஸ்ரைலா இருக்கும்' என்று.
நான் அவனிடம் உடனடியாக கேட்டேன் 'அமெரிகன் ஐடல் போன்ற ஆங்கில நிகழ்ச்சிகளில் தனி ஆங்கிலத்தில் கதைத்தால் நீ சொல்கின்ற 'ஸ்ரைலா' இருக்காது என்பதற்காக "கியர் ஐ காவ் த நடுவர்களின் தீர்ப்பு. லெற் அஸ் ரேக் எ லுக் தற் கூ இஸ் கொன்னா கோ ரூ த இறுதிப் போட்டி" என்றா சொல்கிறார்கள்' என்று கேட்டேன். இதே கேள்வியைத்தான் எல்லோரிடமும் கேட்கின்றேன்... அவர்கள் தமது மொழி வளரவேண்டும் என்று நினைக்குமளவில் கொஞ்சம் கூட நாம் நினைப்பதில்லை...

இதற்கெல்லாம் காரணம் என்ன...
சுருக்காமாக சொல்வதானால்...
'வெள்ளைக்காரன் எங்கட நாட்டுக்கு வந்து செய்த பெரிய அழிவுகள் இரண்டு... முதலாவது தமிழ் ஒரு அழகற்ற மொழி;, தமிழ் கதைத்தால் மரியாதை இல்லை, ஆங்கிலம் தான் கதைப்பதற்கு ஏற்ற மொழி
இரண்டு-கறுப்பு நிறம் கூடாது. வெள்ளை நிறம் தான் மனிதரிற்கு அழகானது. என்ற இரண்டு மிகக் கொடுமையான, கேவலமான எண்ணங்களை எமது மனதில் பதித்து விட்டு சென்றது தான்.

--
க.கோபி கிருஷ்ணா.

அன்பான தமிழ் நண்பர்களே...
நலம் நலமறிய ஆவல்....
உங்களிடம் தமிழ் சம்பந்தமான உதவியொன்றை எதிர்பார்க்கின்றேன்...
தமிழில் கிறிக்கெற் சம்பந்தமான வலைப்பூவொன்றை உருவாக்கியுள்ளேன்.
கிறிக்கெற்றில் பல சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ப் பதம் தெரியாது திண்டாடுகிறேன்.
முதலாவதாக கிறிக்கெற் என்பதற்கு தமிழ்ப்பதம் என்ன? துடுப்பாட்டம் என்பதை பாவிக்க முடியாது எனக் கருதுகிறேன். காரணம் போலிங் என்பதற்கு பந்து வீச்சு என்றால் பற்றிங் என்பதற்கு துடுப்பாட்டம் தானே? ஆகவே பற்றிங் செய்பவரையும், கிறிக்கெற்றில் ஈடுபடுபவரையும் துடுப்பாட்ட வீரர் என்று தானே அழைக்க வேண்டி வரும்???
ஆகவே குழப்பம் தானே?
யாராவது எனக்கு கிறிக்கெற் சம்பந்தமான கலைச்சொற்களை தருவீர்களா?
நான் உருவாக்கிய வலைப்பூவில் பல ஆங்கிலச் சொற்களை கையாண்டிருக்கிறேன்.. தயவு செய்து யாராவது அவற்றிற்குரிய தமிழ் கலைச்சொற்களை தந்துதவுவீர்களா....
தயவு செய்து....
(எனது கிறிக்கெற் சம்பந்தமான வலைப்பூவின் முகவரி-www.tamilcricket.blogspot.com)


--
க.கோபி கிருஷ்ணா.

எனது அக்காவின் 6 வயது (தரம்1) மகள் தானாகவே எவரின் எந்தவித உதவியுமின்றி வரைந்த படம். நான் தரம் 11 முடிவில் தான் கணணியை பயன்படுத்த ஆரம்பித்தேன். எனவே இந்தப் படம் எனக்கு விசேடமானது.

--
க.கோபி கிருஷ்ணா.

 
•கதாநாயகியின் கணவன் அனேகமாக பணக்காரனாக இருப்பார்.

•கதாநாயகியின் கணவனோ அல்லது கதாநாயகிக்கு மிக நெருக்கமான ஒருவரோ இரண்டு மனைவிகளை கொண்டிருப்பார்.

•இடைக்கிடை வேலைக்கு செல்வார். ஆனால் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் இருப்பார். பின்னர் தேவைப்பட்டால் வேலைக்கு செல்வார்.

•நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திற்கு நல்ல 'புரொஜக்ற்' ஒன்றை கதாநாயகி செய்து கொடுப்பதன் மூலம் அந்த நிறுவனம் இலாபத்தில் இயங்கும். ஆனால் அந்த நிறுவனத்தில் ஏதோ காரணத்திற்காக கதாநாயகி தொடர்ந்து வேலை செய்ய மாட்டார்.

•கதாநாயகியின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்வதை எல்லாம் (கதாநாயகி சொல்லும் எல்லா விடயங்களுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும்.) கேட்பதற்கு ஆண்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தான் கதாநாயகியின் பெரும் பலமாக சித்தரிக்கப்படுவர்.

•நிச்சயமாக கணவனை பிரிந்து கொஞ்ச நாட்களாவது கதாநாயகி இருப்பார்.

•எந்த காரணமும் இல்லாமல் கதாநாயகியை எதிர்ப்பதற்கு ஒரு குழு இருக்கும்.

•கதாநாயகி மணமுடித்த வீட்டில் ஒருவராவது கதாநாயகியை காரணமின்றி எதிர்ப்பார்.

•நெடுந்தொடர் முழுவதும் 'பிஸ்னஸ்' செய்தல் என்ற உரையாடல் காணப்படும்.

•ஆரம்பத்தில் தனது எதிரியை மன்னித்து திருந்த வழி விடும் கதாநாயகி பின்னர் விஸ்வரூபம் எடுப்பார்.

•நெஞ்சை உருக்கும் உரையாடல்கள் அடிக்கடி வரும்... அதற்கு பின்ணணி இசையாக ஒப்பாரி போன்ற இசை ஒலிபரப்பாகும்...

•நெடுந்தொடரின் நடுவே கதையானது கதாநாயகியை விட்டு வழுவி வேறொருவரை பிரதானமாக கொண்டு செல்லும்.

•ஆரம்பத்தில் மிக மெதுவாக நகரும் கதையில் ஏராளமான கிளைக்கதைகள் காணப்படும். புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்து சேரும்.

•தொடக்கத்தில் எவ்வளவு மெதுவாக கதை நகர்ந்தாலும் முடிவில் அசுர வேகத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திருந்தி கதாநாயகியோடு நட்பு பாராட்டுவர்.

•கதை முடிவில் கிளைக்கதைகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில கதைகள் தொக்கி நிற்கும். அந்தக் கதையின் முடிவை பார்வையாளர்கள் தாங்களாகவே தீர்மானிக்க கடப்படுவர்.

•தொடரின் முகப்புப் பாடல் இசையை D.இமான் போன்ற வண்ணத்திரை இசையமைப்பாளரே இசையமைப்பர்.

•முகப்புப் பாடலை பா.விஜய் அல்லது கவிப்பேரரசு வைரமுத்து போன்றோர் எழுதுவர். முகப்புப் பாடல் கதைக்கு சம்பந்தமாக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொடரின் பெயர் இடைக்கிடை பாடலின் நடுவே ஒலிக்கும்.--
க.கோபி கிருஷ்ணா.

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே...
கீழே நான் தரும் ஆக்கம் இலங்கையிலுள்ள வானொலி ஒன்றின் நிகழ்ச்சிக்காக அனுப்பியது. பிரசாரம் என்ற பகுதியில் 'நான் இசையமைப்பாளரானால்...' என்ற தலைப்பில்  நகைச்சுவையாக அனுப்பியது ஆகும். இன்றைய இசையமைப்பாளர்களை கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு அனுப்பினேன்... அப்படி இருக்கிறதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
(சில ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு மன்னிக்கவும். இன்றைய இசையமைப்பாளர்களின் மொழி நடையில் எழுதும் போது ஆங்கிலம் தவிர்க்க முடியாதது. எனினும் என்னால் இயன்றவரை ஆங்கிலத்தை தவிர்க்கிறேன்...)

வணக்கமுங்கோ!
நான் தான் இசையமைப்பாளர் புஷ்வநாதன்... என்ன அப்பிடி பாக்கிறியள்? மற்றாக்கள் இசையமைப்பாளர் விஷ்வநாதன் சேரின்ர பாட்டுக்கள றீ-மிக்ஸ் பண்ணி பாவிக்கேக்க நான் அட்வான்ஸா போய் அவரின்ர பெயரையே மாத்தி பாவிக்கிறன்... எப்பிடி என்ர திறமை...
சரி நீங்க என்னட்ட கேக்கலாம் இசையமைப்பாளரா வர்றதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கெண்டு...
நான் சொல்றன்...
என்னட்ட பழைய பாட்டு சீ.டி எக்கச்சக்கமா கிடக்குது, அதோட 5, 6 றீ-மிக்ஸ் சொப்ற்வெயாரும் கிடக்குது. இத விட வேற என்ன தகுதி வேணும் இசையமைப்பாளராக? ஆ?
சரி நான் எப்பிடி பாட்டுகள உருவாக்குவன் எண்டு உங்களுக்கு சொல்றன்...
முதல்ல அந்தக்காலத்தில பிரபலமான பாட்டுக்கள தெரிவு செய்வன்... தெரிவு செய்து போட்டு அந்தப் பாட்டின்ர வேகத்த கூட்டுவன்... தேவையெண்டா அந்தப் பாட்ட இண்டைய 'ட்ரெண்ட்'ற்கு ஏத்த மாதிரி மாத்திறதுக்கு நம்மட வைரமுத்து சேர் உதவி செய்வாருங்கோ...
ஆனா அது மட்டும் காணாது...
பாட்டு வரிகளுக்கு இடையில இங்கிலீசு சொல்லுகள கண்ட மாதிரி போட்டு, அது கெட்ட வார்த்தையா இருந்தா நல்லம், அத றப் எண்ட பெயரில கத்துறதுக்கு, ஐயோ! சொறி சொறி... றப் எண்ட பெயரில பாடுறதுக்கு கழுதைக்குரலோட, ஐயோ! சொறி சொறி... கவிதைக் குரலோட நிறையப் பேர் இருக்கினம். அவய விட்டு கத்த விட்டு உங்களுக்கு சூப்பர் டூப்பர் கிற் பாட்டுகள தருவனேன்று உங்களிடம் உறுதியளிக்கிறன்.
நன்றி சுணக்கம்... ஐயோ மன்னிச்சுக் கொள்ளுங்கோ... பாட்டுகள றீ-மிக்ஸ் பண்ணி பண்ணி இப்ப தமிழ் சொல்லுகளயும் மாத்திறன் போல கிடக்கு...
நன்றி வணக்கம்....

இதை விட அதிகமாக எழுதியதாக ஞாபகம். ஆனால் எழுதி 2 மாதங்களுக்கு மேலே. ஞாபகம் இருப்பது இவ்வளவும் தான்.

நான் நினைத்ததை செய்துள்ளேனா?
ஜேம்ஸ் வசந்த் போன்றவர்களின் 'கண்கள் இரண்டால்...' போன்ற பாடல்கள் தமிழ் இசைக்கு பலமாக தெரிகிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்...
நான் நினைக்கிறேன் 'நியூ' திரைப்படத்தில் 'தொட்டால் பூ மலரும்...' பாடல் மட்டுமே விதிவிலக்காக மீள் கலவை அல்லது மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பாடல்களில் தமிழை அழிக்காது தமிழை மூச்சாக நினைப்பவர்களையும் கவர்ந்தது என்று.
தமிழில் படப்பெயரை வைத்து விட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை போட்டு குழப்பியடித்தால் என்ன நியாயம் என்று தெரியவில்லை...
இன்றைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்களுக்குள்ள ஆங்கிலப் புலமையை காட்ட விரும்பின் அவர்கள் ஆங்கிலப் பாடல்களையே உருவாக்கலாமே...?
சிறிது காலத்துக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிலே பாடலாசிரியர் ஒருவர் 'நாங்கள் எழுதும் வர்த்தக ரீதியிலான பாடல்களை மட்டும் பார்க்காதீர்கள். அவை வியாபார நோக்கத்திற்காக எழுதப்பட்டவை. நாங்கள் எழுதும் கவிதைகளுக்கு நாங்கள் தான் ராஜாக்கள். அவற்றைப் பாருங்கள்' என்றார்.
தமிழை அழித்துத் தான் பணத்தைப் பெற வேண்டுமென்றால் அந்தப் பணம் எதற்கு???
அவர்களின் செயலை விளங்கப் படுத்த சில காலங்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த போது எங்கோ ஒரு செய்தி இணையத்தளத்தில் படித்த செய்தி தான் ஞாபகம் வருகிறது....
'ஒரு திருமணமான பெண் அலுவலகமொன்றிலே வேலை புரிந்து வந்தாளாம்.. அவளுக்கு மேலே இருக்கும் உயரதிகாரிகள் மோசமானவர்கள். பெண் பித்து பிடித்தவர்கள். அவர்கள் அந்தப் பெண்ணிடம் சொன்னார்களாம், எங்களுக்கு நீ 'அந்த' விதத்தில் ஒத்துழைத்தால் உனக்கு வேலை உயர்வு தருகிறோம் என்று. அந்தப் பெண்ணும் அப்படியே செய்த வேலை உயர்வு பெற்றாளாம். ஆனால் அந்தப் பெண் வீட்டில் கணவனோடு அன்பாகத் தான் இருந்தாளாம்.
எனினும் இப்பெண்ணின் செய்கையை அறிந்த கணவன் அவளது கணவன் அந்தப் பெண்ணை வெட்டிக் கொன்றானாம். அவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டதாம்.
அந்தப் பெண்ணிற்கும் இந்தக் கவிஞர்களுக்குமிடையில் என்ன வித்தியாசம்???

பெண்கள் அப்படி பதவி உயர்வு பெறுவார்கள் என்று நான் சொல்லவில்லை.
பெண் சகோதரிகளை தவறாக எண்ணி சொல்லவில்லை...
விதிவிலக்கான கதாபாத்திரத்தை இடைநடுவே செருகியதற்கு மன்னிக்கவும்.


இதில் கொடுமை என்னவென்றால் இப்படி எல்லாம் பாடல் எழுதிவிட்டு 'தமிழ் வாழ வேண்டும், தமிழை சரியாக உச்சரியுங்கள், தமிழர்கள் தமிழ் பேச வேண்டும்' என்று வாய் கூசாமல் சொல்லித் திரிகிறார்கள்.
இன்றைய கவிஞர்கள் முன்பிருந்த கவிஞர்களை விட எல்லாம் புத்திசாலிகள். ஏனென்றால் பிரம்மனுக்கு 'மூட்' வந்ததையெல்லாம் கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்தவர்கள். (பிரம்மனுக்கு மூடு உன்ன படச்சிற்றான், அடி காமனுக்கு மூடு வந்து என்ன அனுப்பிற்றான்.).
ஆனால் தமிழ்த்தாய் அழுவதை மட்டும் இன்னும் கண்டு கொள்ளவே இல்லை...--
க.கோபி கிருஷ்ணா.

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே...
 முனி.- பொஞ்சாதி கை தொட்டா தங்கம் கூட தகரம் ஆகிடும் என???

அன்பே அன்பே! அன்பே அன்பே! நீ இன்றி நான் இல்லையே...
 முனி.- பக்கத்து வீட்டு வேலக்காரிய பாத்து தானே பாடுறாய்???

முழுமதி அவளது முகமாகும்... மல்லிகை அவளது மணமாகும்...
 முனி.- சந்திரனுக்கு போட்டு வந்திற்று சந்திரனில மேடு-பள்ளம் இருக்கெண்டு கண்டுபிடிச்சா பிறகு   பொம்பிளயள வர்ணிக்கிறது எண்ட பேர்ல இப்பிடி தான் நக்கலடிக்கிறியள் என்னடா...

என்ன விலை அழகே... சொன்ன விலைக்கு வாங்க வரவா...
 முனி.- தேத்தண்ணி கடையில நேற்று கடனுக்கு குடிச்ச தேத்தண்ணிக்க் கடனை முதல்ல அடயடா...

நீ தான் என் தேசிய கீதம்... ரஞ்சனோ ரஞசனா...
 முனி.- எப்பயும் இருந்திற்று தான் கணக்கெடுப்பாய் எண்டு சொல்லாம சோல்லுறாய் என...

கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு...
 முனி.- உன்ர சேட்டுக்கு 'சேர்ப் எக்ஸல்' போடுதல் அழகு... கிழமைக்கு ஒரு முறையாவது குளித்தல்   அழகு...

காதலெனும்... தேர்வெழுதி காத்திருந்த... மாணவன் நான்...
 முனி.- அடேயப்பா தம்பி! எத்தின சோதினை மண்டபங்களில இதுவர உந்த சோதினய எழுதிற்று உதே    பாட்ட பாடியிருக்கிறாய் எண்டு உண்மையச் சொல்லு...

சந்தரனை தொட்டது யார் ஆம்ஸ்ரோங்கா... அடி ஆம்ஸ்ரோங்கா... சத்தியமாய் தொட்டது யார் நான் தானே...
 முனி.- பக்கத்து வீட்டு பெட்டய தொட பாத்து அடி வாங்கினது நீ தானே... அட நீ தானே...

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்... நிலவே பெண் நிலவே... நான் பொறுமை வென்று நின்றேன்...
 முனி.- அப்ப 'சைற்' அடிக்கிறதுக்கு பொஞ்சாதியயும் கூட்டிற்று வர்ற ஐடியாவா...???

எங்கேயே பார்த்த மயக்கம்... எப்போதோ வாழ்ந்த நெருக்கம்...
 முனி.- ஏன்டா... நீ தண்ணி அடிச்சதால வந்த மயக்கத்துக்கு உப்பிடி ஒரு பாட்டா...?

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... ஏதோ... அது ஏதோ... அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...
 முனி.- எக்கச்சக்கமான 'அனுபவம்' இருக்கு போல கிடக்குது...

பெண் கிளியே... பெண் கிளியே... பாடுகிறேன் ஒரு பாடல்... பாட்டு வரி பிடித்திருந்தால் சிறகால் பச்சைக் கொடி காட்டு...
 முனி.- முதலாவது, நீ பாடுறாய் எண்டும், அது பாட்டு எண்டும் இஞ்ச ஒருத்தரும் சொல்லேலயே...

சேலையில வீடு கட்டவா... சேர்ந்து வசிக்க...
 முனி.- அப்ப, வீடு கட்டவும் பொஞ்சாதியின்ர சீல தான் உன்னட்ட இருக்கு என...

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்... இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் திறப்பேன்...
 முனி.- இவ்வளவு 'பில்ட்-அப்' போட்டிற்று எத்தின மணி எண்டு தானே கேக்கப் போறாய்... மிஞ்சி மிஞ்சி   போனா 10 ரூபா கடன் தானே கேக்கப் போறாய்...

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா...
 முனி.- காசில்லாட்டியும் வாங்கலாம் ஆசப்படுறத... நேற்று அந்தக் கடயில இருந்து 2 வாழப்பழத்த சுட்டவன்   தானேடா நீ...

காதலியே காதலியே... காதலை ஏன் மறந்தாய்...
 முனி.- நீ காதலிய மறந்திற்று புதுச தேடிப் போகலாம்... அந்தப் பெட்டை காதலை மறக்கக் கூடாதோ???

என்னடி முனியம்மா உன் கண்ணில மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி... நீ முன்னால போனா நான் பின்னால வாறன்...
 முனி.- ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடசியா என்னட்ட வந்திற்றாங்கள்... அடேய் பன்னாட... அது மை   இல்லயடா... அதுக்கு பேர் கண் இமை... அப்ப நான் பின்னால போனா நீ முன்னால போயிடுவியோ...???
 இது சரி வராது... நான் போயிற்று வாறன்...

 

--
க.கோபி கிருஷ்ணா.

என்னை பிடித்திருக்கிறது என்றாய் திடீரென...
என்னில் பிடிக்க என்ன இருக்கிறது என்று யோசித்தேன்...
இப்போது பிடிக்கவில்லை என்கிறாய்...
ஏன் பிடிக்கவில்லை என்று யோசிக்கிறேன்...
யோசனைகள் மட்டுமே என் வாழ்வென்று யோசித்தாயா...

--
க.கோபி கிருஷ்ணா.

நான் தரம் 11 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
2005 ம் ஆண்டின் விஜயதசமி அன்று பாடசாலையில் விஜயதசமி பூசைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நாங்கள் எல்வோரும் வகுப்றையில் இருந்தோம். அப்போது மாணவத் தலைவன் ஒருவர் எனது வகுப்பு மாணவனொருவனை அடித்து விட்டார். (யாழ்ப்பாணத்தில் இதுவெல்லாம் சர்வ சாதாரணம்)வழமையைப்போல அந்த மாணவத்தலைவருடன் வாக்குவாதப்பட்டு விட்டு நான் அந்தப் மாணவனை அதிபரிடம் அழைத்துச் சென்றேன். அதிபரிடம் முறையிட்டேன். இப்படியான விடயங்களில் அடிக்கடி அதிபரை சந்திப்பது எனது வழக்கம்.அப்போது அதிபர் சொன்னார் 'தம்பி... பூசை தொடங்கப் பொகுது... இப்ப இத பிரச்சின ஆக்கக் கூடாது. நீர் அவர (பாதிப்பிற்குள்ளான மாணவனை) வகுப்பில் இருக்க வையும். நான் நாளைக்கு விடிய உமக்கு இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு தாறன்" என்றார் மாலையில் நடக்கப் போவதை அறியாமல். நானும் மாலையில் நடக்கப் போவதை அறியாமல் 'சரி சேர்" என்று விட்டு வகுப்பிற்கு வந்து விட்டேன்.அன்று மாலை 4 மணியளவில் எமது அதிபர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு விஜயதசமி விழாவிற்கு செல்வதற்காக மண்டப வாயிலை அடைந்த போது அவரது ஸ்கூட்டரில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாட்களில் அந்த நாளும் ஒன்று.
அதிபரின் பெயரை சொல்ல மறந்து விட்டேனே...
அவரின் பெயர் - திரு.கணபதி இராஜதுரை.

1927 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திததியன்று மகாத்மா மாந்தி அவர்கள் யாழ்ப்பாணத்து இந்துக்கள் மத்தியில் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார் 'நீங்கள் நல்ல இந்துக்களாக இருக்க விரும்பினால், நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் தீண்டாதார் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எல்லா ஆலயங்களின் கதவுகளையும் திறந்து விடுங்கள்" என்று.உலகத்தையே ஆண்டு வருகின்ற அமெரிக்கா தேசம் போய் அங்கு பலரை தனது சீடர்களாக பெற்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் 'மதங்கள் வேறாயினும் அவை நோக்கிச் செல்லும் பாதை ஒன்று தான்" என்றார்.இதிலிருந்து தெரிவது ஒன்று தான். மனித வாழ்க்கையில் மதம் ஒரு பகுpயாக இருக்கலாமே தவிர, மதமே வாழ்க்கையாகி போய் விடக் கூடாது என்பது தான்.சைவ சமயம் என்பது எல்லா சமயங்களுக்கும் மூத்த சமயம் என்றும் ஆதியும் அந்தமும் இல்லாததென்றும் சொல்லப்படுவதுண்டு.ஆனால் சமயம் என்பது ஆடம்பரத்திற்குரிய ஒரு அம்சமாக இருத்தல் கூடாது, ஏனெனில் பக்தி என்பதற்கு பணம், அந்தஸ்து என்பன தேவையற்றன. இதற்து உதாரணமாக மன்னர் காலத்தில் அரசன் கூட மத அறிஞர்களுக்கு மரியாதை செய்ததாக புராணங்கள் செப்புகின்றன. இன்று ஜனாதிபதி கூட தம் இன மதத் தலைவருக்கு காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றார்.ஆகவே சமயம் என்பதற்கும் அந்தஸ்து, பதவி என்பன தேவையற்றன என்ற முடிவிற்கு வரலாம். ஊடகங்கள் வேண்டுமானால் அவர் கோவிலுக்கு சென்றார், ஆசீர்வாதம் பெற்றார் என்பதை பெரியதாக காட்டி 'பெரிய நட்சத்திரங்களுக்கு" விளம்பரம் தேடுவதோடு தாம் விளம்பரம் பெறுவதையும் செய்யலாம். ஆனால் பக்திக்கு உண்மை மட்டும் போதும்.
இன்று சைவ சமயத்தினரான நாம் செய்வது என்ன?வெள்ளிக்கிழமைகளில் 'பட்டையோடு, பொட்டோடு" விரதம் அனுஷ்டிக்கும் நாம் மறுநாள் உயிர்களை கொன்று புசிக்கும் ஊனுண்ணிகளாக மாறும் கொடுமைகள் ஏன்?விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் விரதம் அனுஷ்டிப்பவர் கொஞ்சம் அதிகமாக மற்றவர்களோடு 'எரிந்து" விழுவார். கேட்டால் 'விரதக் களைப்பு" என்ற பதில் பெறப்படும்.'உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடல் தான் விரதமாகும்" என நல்லை நகர் நாவலர் கூறியுள்ளார்.விரதத்தில் பிரதானமானது வழிபாடே ஆகும். எங்கே வழிபாடு? உணவை ஒரு வேளை விடுவது மட்டும் விரதம் என்றால் உலகில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் விரதம் அனுஷ்டித்து வருகிறார்கள்.இன்று கோவில்கள் என்பன வியாபார ஸ்தாபனங்களாக மாறி விட்டன. அர்ச்சகருக்கு மரியாதை நிமித்தம் முன்பு வழங்கப்பட்டு வந்த தட்சணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு ஒரு நிலையான பெறுமதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் கூட ஏழைகள் செல்லும் கோவில்கள், பணம் படைத்தவர்கள் செல்லும் கோவில்கள் என பிரிக்குமளவிற்கு வணிகயமாக்கப்பட்டுள்ளது.பக்கத்தில் 5 நாள் சாப்பிடாத ஒருவன் பசியால் துடித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு பக்கத்திலிருந்து 'பிட்சா" சாப்பிடும் தொழிலைத்தான் இக் கோவில்கள் செய்கின்றன.உண்மையான பக்தி என்பது இரண்டாம் பட்சமாகி மூலையில் கிடக்கின்றது.மதம் என்பது மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்க வேண்டும். அத்தோடு மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் அம்சமாகவும் காணப்படல் வேண்டும்.எவ்வளவோ மக்கள் உணவின்றி பசியால் துடிக்கும் போது அபிடேகம் என்ற பெயரில் உணவுப்பொருட்களை அர்ச்சனைக்காக மிகையாக பயன்படுத்தி கழுவித் தள்ளுங்கள் என்று எந்த புராண நூலில் உள்ளதோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுவதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு சமாந்தரமாக பயணித்து கோவில்கள் எப்போது சமூகப் பொறுப்பை உணர்கின்றனவோ அப்போது தான் உண்மையான பக்திநெறியை போதிக்க இக்கோவில்களால் முடியுமானதாக இருக்க முடியும்.

கோவில்கள் இவ்வாறு என்றால் மக்கள் ஒருபடி மேல் போய் கோவில்களிலும் தமது 'கலாசார மேன்மையை" காட்டுகிறார்கள். அணிவது நீளக்காற்சட்டையாக இருந்தாலும் கோவிலிற்கு பக்தியோடு வழிபட வரும் உண்மையான பக்திமான்கள் நீங்கள் அணியும் உடையால் மனம் நொந்து போகுமளவிற்கு அணிவதை தவிர்ப்பது சிறந்தது.உடைகளை மட்டும் பற்றி கதைத்து எதுவித பலனுமில்லை.கோவில்கள் மக்களின் நாளாந்த வாழ்வோடு சமாந்தரமாக பயணிக்க வேண்டுமென்றேன், வேறு சிலரும் அதே கருத்தை தான் கொண்டிருக்கிறார்கள் போலும். தங்கள் வீட்டில் நடக்கும் முழு விடயங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடங்களாக கோவில்கள் மாறியமை தான் கொடுமையிலும் கொடுமை. இந்த விடயத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களில் 'பெண் தேடும்" பருவ இளைஞர்களும் தான் முன்ணணியில் உள்ளார்கள்.
சைவ சமயத்தை இன்று பின்பற்றுபவர்கள் யாவரும் பரம்பரை வழி வந்த சமயத்தினாலேயே பின்பற்றுகிறார்கள். ஆனால் பலர் மதம் மாறுகிறார்களே... பலர் வேற்று மதங்களுக்கு புதிதாக செல்வது போல் சைவ சமயத்தை புதிதாக ஏற்றுக் கொள்வோர் அரிதிலும் அரிதாக இருப்பதற்கு காரணம் என்ன? இன்றைய காலத்திற்கெற்றவாறு கோவில் சுவர்களுக்கு 'மாபிள்" பதித்து கோவில் சுவரை இன்றைய கால கட்டத்திற்கு மாற்ற எடுத்த முயற்சியின், எடுத்த ஆர்வத்தின் சிறுபகுதியையாவது கோவில்களை மக்கள் நேசமான நிலைக்கு எடுத்துச் செல்ல வழங்காததே காரணம்.

'தகுதி உள்ளோர் விமர்சிக்க தவறியதால், தகுதியற்ற நான் விமர்சிக்க தகுதியுள்ளவனானேன்...."

உங்கள் கணணியில் ஒரே பெயரை உடைய ஒரே வகை கோப்புக்கள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவை ஒரே இடத்தில் காணப்படுமா?
உதாரணமாக 'தமிழ்" என்ற பெயரையும் '.txt' என்ற முடிவையும் கொண்ட அதாவது 'தமிழ்' என்ற பெயருடைய 'text file'கள் இரண்டு ஒரே இடத்தில் காணப்பட முடியுமா?
ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அவ்வாறு காணப்பட இடமுண்டு.
அந்த இடம் தான்...... 'Recycle Bin'
ஹா ஹா ஹா ஹா....

ஆதாரம் வேண்டுமா...???

ஒரு புதிய (file) கோப்பு ஒன்றை உருவாக்குங்கள். பின்னர் சுட்டியில் வலது புற அழுத்தானை அழுத்தி வரும் உப நிரலில் 'Rename" என்பதை தெரிவு செய்க. பின்னர் 'Alt" விசையை அழுத்தியவாறு 255 என்ற இலக்கத்தை 'Num Lock" காணப்படும் பகுதியிலுள்ள இலக்க விசைகள் மூலம் அழுத்துக. பின்னர் 'Enter" விசையை அழுத்துக...என்ன நடந்தது....???

ரெஸ்ற் போட்டி விளையாடும் நாடுகளில் அதிக வயதுடன் சமீபமாக விளையாடிய வீரராக சனத் ஜெயசூரியாவாக தான் இருக்கப் போகிறார் போலும். ஏனென்றால் வழமையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் 40 வயது வரைக்கும் கிரிக்கெற் விளையாடுவார்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இளையவர்களுக்கு வழிவிடுவதற்காக விரைவிலேயே ஒதுங்கி விடுவார்கள். மெக்ராத், கில்கிறிஸ்ற் போன்றவர்களோடு கெவின் பீற்றர்சன் அணியில் இடம்பெறுவதற்காக விலகிக் கொண்ட கிரஹாம் தோர்ப் உம் சில உதாரணமானவர்கள். அன்று கிரஹாம் தோர்ப் சிறிது காலம் கூடுதலாக விளையாடி இருந்தால் கெவின் பீற்றர்சன் இந்தளவுக்கு வளர இன்னும் காலம் எடுத்திருக்கும். மெக்ராத் ஓய்வு பெற்றிராவிட்டால் மிற்சல் ஜோன்ஸன், ஸ்ருவர்ட் கிளார்க் போன்றவர்கள் இன்று விருட்சமாக இருந்திருக்க முடியாது, மாறாக கற்கும் பருவத்திலேயே இருந்திருப்பர்.

ஆனால் ஆசிய நாடுகளில் உள்நாட்டு கிரிக்கெற் பெரிதாக ஊக்குவிக்கப் படுவதில்லை. இதனால் ஒரு சாதனை வீரர் ஓய்வு பெற்றால் அவரின் இடம் வெறுமையாக காணப்படும். இதனாலும் பல வீரர்கள் அதிக வயது வரை விளையாட வேண்டி ஏற்படுகிறது. உதாரணமாக இலங்கை அணியிலிருந்து சனத் ஜெயசூரியா ஓய்வு பெற்றால் அவரின் இடத்தை நிரப்ப மஹேல உடவத்த, மலிந்த வர்ணபுர போன்றோர் இருந்தும் அவர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெற வாய்ப்புகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. எனினும் சனத் ஜெயசூரியாவின் துடுப்பாட்டத்தை அவர்களால் நிரப்ப முடியுமாக இருப்பினும் அவரது சகலதுறை வீரர் என்ற இடத்தை நிரப்புவதற்கு புதிதாக ஒருவரை தான் கண்துபிடிக்க வேண்டி இருக்கிறது. அவுஸ்ரேலிய அணியில் ஷேன் வற்சன் போல இங்கும் ஒருவர் தேவை. பந்து வீச்சு என்றால் தனி பந்து வீச்சாளரளவு பந்து வீசக்கூடியவராகவும், துடுப்பாட்டம் என்றால் தனி துடுப்பாட்ட வீரரளவு துடுப்பாட கூடியவராகவும் உள்ள ஒருவர் தேவை. கண்டுபிடிப்பார்களா...???

சரி... இது இப்படி என்றால்...
இலங்கை அணியில் அஜந்த மென்டிஸ் என்றொரு புதுமுகம் கலக்கி வருகிறார். தான் விளையாடிய முதல் ரெஸ்ற் தொடரில் மொத்தமாக 26 இலக்குகளை வீழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார். விளையாடிய எதிரணியும் சாதாரண அணி அல்ல... சுழற்பந்து வீச்சாளர்களை திறமையாக சந்திக்கும் அணி என்று சொல்லப்படும் இந்திய அணி. இதற்கு நல்ல உதாரணம் முத்தையா முரளிதரன். முரளிதரன் தனது மாயாஜாலத்தை மற்றைய அணிகளளவுக்கு காட்ட முடியாத அணிகள் இந்தியாவும் அவுஸ்ரேலியாவுமாகும். அவுஸ்ரேலிய அணியை விட இந்தியா மிகச்சிறப்பாக சுழற்பந்து வீச்காளர்களை எதிர்கொள்ளும் அணி ஆகும். டிராவிட், லக்ஸ்மன், சச்சின், கங்குலி போன்ற சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்கும் வீரர்கள் சோடை போனது தான் இங்கே பரவலாக கதைக்கப்பட்டது.முரளிதரனுக்கு தூஷ்ரா என்றால் மென்டிஸ்ற்கு கரம் பந்து.

சில தமிழ் ஊடகங்களில் மென்டிஸ் இன் பந்து வீச்சு முறையின் பெயர் கரம் பந்து வீச்சு முறை என்கிறார்கள். மென்டிஸ் வீசும் ஒரு வகை பந்து வீச்சு முறையே கரம் பந்து வீச்சு என்பதை அவர்கள் இன்னும் திருத்தி கொள்ளவில்லை.

இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை இலங்கை ஒருநாள் அணியைப் பற்றிய பிரச்சினை ஆகும்.
ரெஸ்ற் அணியில் பெரிதாக பிரச்சினைகள் இல்லை.ஒரு நாள் அணியில் முரளிதரன், மென்டிஸ் இருவரும் தற்போது விளையாடுகிறார்கள். ஓர் ஒருநாள் அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது எவ்வளவு காலத்திற்கு சாதகமாக அமையும் என்று தெரியவில்லை. யாராவது ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் விளையாடுவது என்ற நிலைமை ஏற்படின் இலங்கை சார்பாக யார் விளையாடுவார்கள் என்பதே தற்போதுள்ள கேள்வி...சாதனை வீரரான முரளிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய மாயாஜாலப் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதே கேள்வி...
5 பந்து விச்சாளர்கள் விளையாடும் போட்டி எனின் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சுழற்பந்து விச்சாளர்களும் விளையாடுவது பெரியளவுக்கு பிரச்சினையாக இருக்காது. ஆனால் 4 பந்து வீச்சாளர்களோடு மற்றைய 10 பந்துப் பரிமாற்றங்களை பகுதிநேரப் பந்து வீச்சாளர் மூலம் நிரப்பும் போட்டிகளில் 2 சுழற்பந்து விச்சாளர்கள் முடியுமா?அப்படியான சந்தர்ப்பத்தில் யார் விளையாடுவார்? முரளிதரன் சமீப காலமாக தன் பந்து வீச்சு முறையை இலக்கு கைப்பற்றுவதிலிருந்து மாற்றி ஓட்ட விகிதத்தை குறைக்கும் பந்து வீச்சாளர் என்று மாற்றி விட்டார் போல உள்ளது. இலக்குப் பக்கமாக (அதாவது Bowling over the wicket) முறையில் பந்து வீசும் போது பந்து அதிகளவு திரும்பும். ஆனால் தற்போது முரளிதரன் இலக்கை சுற்றி வந்து வீசும் போது திரும்பலளவு குறைவாகவே காணப்படும். ஆனால் ஒரு சாதனை பந்து வீச்சாளர் எதுவித நோக்கங்களுமற்று அப்படி பந்து வீச மாட்டார். தூஷ்ரா வீசும் போது இலக்கை சுற்றி வந்து வீசுதலே சிறப்பாக காணப்படும். ஆனால் சமீப காலமாக, ஏறத்தாழ 4 அல்லது 5 வருடங்களில், முரளிதரன் ஒருநாள் போட்டிகளில் 5 இலக்குப் பரிதியை பெறத்தவறி வருகிறார். அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் வங்களாதேச அணிக்கெதிராக 5 இலக்குப் பரிதியை பெற்றிருந்தார். 2004 ம் ஆண்டிற்கு பிறகு முரளிதரன் பெற்றுக் கொண்ட முதல் 5 இலக்குப் பரிதி இதுவாகும். எனினும் ஒரு சவாலான அணிக்கெதிராக 5 இலக்குப் பரிதியொன்றை பெறுவதே முரளிதரன் மீதான விமர்சனங்கள் எழாமல் இருக்க உதவும்.
இது இப்படி என்றால் இந்தியாவில் இந்நிலமை மோசமாக உள்ளது.
நான்கு மூர்த்திகள் எனப்படும் டிராவிட், லக்ஸ்மன், சச்சின், கங்குலி ஆகியோர் அண்மைக்காலமாக சோபிக்கத் தவறி வருகின்றனர். இவர்களில் லக்ஸ்மன் 5 நாள் போட்டிகளுக்காக என தனியாக ஒதுக்கப்பட்டவர். டிராவிட், கங்குலி ஆகியோர் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான். இதில் சச்சின் தான் கொஞ்சம் மரியாதைக்காக அணியில் வைத்திருக்கப் பட்டிருக்கிறார். உலகில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனை மட்டும் சச்சினிடம் இல்லையென்றால் இதே நிலைமை தான்.5 நாள் போட்டிகளிலும் இனி கங்குலி, டிராவிட், லக்ஸ்மன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பதும் பெரிய சந்தேகம் தான்.
சுரேஸ் ரெய்னா போன்றவர்கள் ஒரு நாள் போட்டிகளிலும் பத்ரினாத், அஸ்னோக்கர், ஸ்ரீகார் டவான் உட்பட ஏராளமானோர் உள்நாட்டுப் போட்டிகளிலும் கலக்கி வருவதால் இளசுகள் தான் முந்துவார்கள் போலிருக்கிறது....

இங்கிருக்கும் இப் பட ஆக்கங்கள் என்னுடையவை என்று நான் சொல்லப் போவதில்லை. 'நான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்ற அடிப்படையில் எனக்கு கிடைத்ததை எனது வலைப்பூவில் காட்சிப் படுத்தியுள்ளேன்.

நான் இரசித்த கதை...
1981 ம் ஆண்டு மாதாந்த சஞ்சிகையில் வெளிவந்த கதை தான் அது...

ஆண்களுக்கு மட்டும்...
மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்களின் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...
தொகுதி 1
A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-40
மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...A.Kannan20 60 20 46 46 20 46 )
பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.
பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...
A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-20
எப்படி சோதிடம்...வெற்றி தானே...?

'என்ன நல்லதொரு குடை கொண்டுவாறியள்?
என்ன விலை இது?
இது விலைக்கு வாங்கேல... ஏபிசி இல அடகு வைக்கிறவக்கு திரும்பவும் குடை குடுக்கினம்...
ஆம்... இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏபிசி நிறுவனத்தை இன்றே நாடுங்கள்..."

இலங்கையிலுள்ள பிரபல வங்கி ஒன்றின் அடகுவைக்கும் சேவைக்கான வானொலி விளம்பரமே அது. அந்த விளம்பரத்தில் என்ன பிழை என்று கேட்கத் தோன்றலாம். அடகு வைத்தல் என்பது அவசர தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுவது மாத்திரமே. 'இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏபிசி நிறுவனத்தை இன்றே நாடுங்கள்..." என்பது எல்லோரையும் அடகு வைக்க அழைப்பது போலல்லவா இருக்கிறது?அந்த விளம்பரம் இப்படி இருந்தால் என்ன?
'என்ன நல்லதொரு குடை கொண்டுவாறியள்?
என்ன விலை இது?
இது விலைக்கு வாங்ககேல... ஏபிசி இல அடகு வைக்கிறவக்கு திரும்பவும் குடை குடுக்கினம்...
அப்பிடியே? போன கிழமை நான் வேறொரு இடத்தில அடகு வைக்கேக்க எனக்கு இப்பிடி ஒண்டும் கிடைக்கேல...
இதுக்கு தான் ஏபிசி நிறுவனத்தை எல்லாரும் தேடிப் போறவ..."

அவர்கள் சொல்ல வந்த கருத்தை இப்படியும் சொல்லலாம். ஆனால் அடகு வைத்தல் என்பது அவசர தேவைக்காக மட்டுமே. அதில் குடை கிடைக்கின்றது என்பதற்காக யாரும் அடகு வைக்க வைக்க போவதில்லை. ஆகவே குடை வழங்கப்படுகிறது என்பதை பிரதான விடயமாக கூறுவது சரியாக அமையப் போவதில்லை.
(யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கோஷ்டியினர் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் காசு, நகைகளை கொள்ளையடிப்பதால் தமது நகைகளை காப்பாற்றுவதற்காக யாழ்ப்பாண மக்கள் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து விட்டு அதற்கு வட்டி செலுத்துவது யாழ்ப்பாண மக்கள் மட்டுமே இந்த உலகத்தில் அனுபவிக்கும் கொடுமைகளில் ஒன்று.-யாழ்ப்பாணத்தில் வங்கிகளில் லொக்கர் எனப்படும் பாதுகாப்புப் பெட்டி வசதி இதுவரை இல்லை.)

சரி... ஓர் அற்ப விடயத்தை பெரிதாக காட்டுகிறார்கள் என்றால் ஏனைய விளம்பரங்களோடு ஒப்பிடுகையில் மேற்படி விளம்பரம் பரவாயில்லை எனத்தோன்றும்
நூடில்ஸ் விளம்பரம் ஒன்றில் ஒரு பெண் அந்த நூடில்ஸ் கையில் பிடித்தவாறு ஆடுவார். அது தான் விளம்பரம்.
ஒரு பெண் அழகி (அழகி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அசிங்கம் என்கிறேன் நான். அவர்கள் அணியும்(?) உடைகளின் பெறுமதி வேண்டுமானால் உயர்வாக இருக்கலாம். ஆனால் அதன் அளவு சிறியது தானே? அழகு என்பது மனம் சார்ந்தது. இதுவரை இதை சினிமாக் காரர்களோ, விளம்பர நிறுவனங்களை சார்ந்தவர்களோ, திருமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைகளோ ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை) கிடைத்தால் போதும். அவரை திரையில் காட்டினால் போதும். அது தான் விளம்பரம் என்று எம்மைப் பார்க்க சொல்கிறார்கள்.
இதன் போது தான் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வவடிவேல் என்ற பிரபல விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் ஆசிரியர் தரம் 7 ல் அவரிடம் படித்த போது சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வருகிறது.
'ஒரு அப்பளம் ஒண்டுக்கு விளம்பரம் காட்டோணும் எண்டா நானும் பாஸ்கரனும்(அக் கல்வி நிறுவன உரிமையாளர்) 10 கட்டு அப்பளத்த மொறு மொறு எண்டு கடிச்சு திண்டிற்று 'அப்பளம் சூப்பர்" எண்டு சொன்னா யாராவது வாங்குவாங்களா? ஒருத்தனும் வாங்க மாட்டான். ஆனா ரஜினிகாந்த விட்டு 'ஆ... சூ... சு... அப்பளம்... ஹா ஹா ஹா..." எண்டு சொல்ல விட்டா போதும். நாளைக்கு உங்கள் எல்லார் வீட்டயும் அந்த அப்பளம் தான் இருக்கும்."
அவர் ரஜினிகாந் என்று சொன்னதிற்கு பதில் 'ஒர் அரைகுடை ஆடையணிந்த பெண்" என்று நான் சொல்கிறேன்...
(வாத்தியார் படிப்பிச்சத உடன மறந்து போட்டு அவர் எப்பயோ ஒருக்கா சொன்னத ஞாபகம் வச்சிருக்கிறனே... நம்மள போல ஆட்கள தான் நல்லத விட்டிற்று தேவையில்லாதத வச்சிருக்கிற வடி எண்டு சொல்றது போல...!!!)

இது இப்படி என்றால் இன்னோரு குளிர்பான விளம்பரம்.
ஒரு பிரபலமான பாடகர் மேடையில் பாடிக் கொண்டிருப்பார். பார்வையாளர்களிலே ஒரு பெண் குளிர்பானம் வைத்திருப்பார். உடனே இவர் அந்த பெண்ணை மேடைக்கு அழைப்பார். குளிர்பானத்தை வாங்கி குடித்து விட்டு அந்த பெண்ணோடு நெருக்கமாக (வேறு சொற்பாவனை வேண்டாமே...) ஆடுவார். ஏன் அப்படி மட்டரகமான சிந்தனைகள்?
இதே போல் நிறைய விளம்பரங்கள்.
ஒரு குளிர்பானத்தால் அல்லது சொக்ளற்றினால் ஒரு பெண் மீது ஒரு ஆணுக்கு காதல் வருமென்றால் (காதல் என்ற பெயரில் அவர்கள் குறிப்பிடுவது வேறு தான் என்றாலும் காதல் என்று வைத்துக் கொள்வோம்.) எத்தனையோ பெண்கள் சீர்தனம் அல்லது சீதனப் பிரச்சினைகளினாலும், சாதகப் பிரச்சினைகளினாலும் திருமணம் முடிக்க முடியாமல் கஷ்ரப் படுகிறார்களே, அவர்களிடம் அந்த குளிர்பானத்தையோ அல்லது சொக்ளற்றையோ கொடுத்து விடுங்களே... அவர்களின் கவலை தீருமல்லவா?

இது இப்படி என்றால் இலங்கையின் தேசிய தொலைபேசி வழங்குனர் 4 வகையான புதிய தொலைபேசிப் பொதிகளை வழங்குகிறார்கள். அவை ஒவ்வொன்றினதும் பெயர் பிளாற்றினம், பொன், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகும். ஒரு ஆண் மேடையிலே ஆடிக்கொண்டிருப்பார். மேற்படி நான்கு பொருள்களினதும் நிறங்களை உடைய ஆடைகளை அணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து அவரோடு ஆடிச்செல்வார்கள். மேடை நாடகங்களில் குறியீட்டு வகை என்று ஒன்று உண்டு. உதாரணமாக மழை பெய்வதை மேடையில் காட்ட முடியாது ஆகையால் குடைகளை மேடைகளில் ஆங்காங்கே கட்டித் தொங்க விடுவர். ஆகவே மழை எனப் பொருள் படும். எனினும் இந்தக் குறியீட்டு வகையை புரிந்து கொள்ள சிறிதளவு நாடக அறிவு தேவை.
ஆகவே மேற்படி விளம்பரமும் குறியீட்டு வகை விளம்பரம் போலும்... நான்கு வகைத் தொலைபேசி பொதிகளை 4 பெண்களை ஒரு ஆணுடன் ஆடவிட்டு தான் காட்ட வேண்டுமா? வேறு முறைகள் இல்லையா?
என்ன கொடுமை ஷரவணா இது...
மேற்படி மட்டரகமான விளம்பரங்களைத் தான் காட்ட வேண்டுமா?
இதை நினைத்து அந்நியன் அம்பியைப் போல் மனதிற்குள் புழுங்கற் தான் முடியும். அம்பி நியாயம் கேட்ட மாதிரி கூட கேட்க முடியாதே... ஆகவே நான் அம்பியிலும் வல்லமை குறைந்தவன் போலும்...

பெண்களுக்கு சமவுரிமை வேண்டுமென வாய் கிழிய ஓலமிடுபவர்கள் பெண்களை போகப் பொருளாக அல்லது கூப்பிட்டால் வந்து விடும் கதாபாத்திரங்களுக்கு எதிராகவும் குரலெழுப்புவார்கள் என இப்போதும் கூட என்னிடம் நம்பிக்கை உண்டு.

காலம் பதில் சொல்வதற்கு இங்கு எதுவுமே இல்லை. நாம் தான் நம்முடைய மனச்சாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

பொருளாதாரம்
போதா தென்று
சீதனம் வாங்கும்
சீமான்களே...
பொருள்- ஆதாரந்தான்...
ஆனால்
பொருளா
தாரம்?

சிரிப்பர் பலர் ஏளனமாய்....
பரிகசிப்பர் நீ தோற்பாய் என...
கரி பூச நினைப்பர் உன் பெயர் மீது...
செருமிப் பார் ஓடிடுவர் வெகுதூரம் உனைவிட்டு...

கண்ணாடிக்கு கண்கள் இல்லாதது நலமே…
என்னைக் கண்டால் எட்டிக் குத்தியிருக்கும்…
அது கூட பரவாயில்லை…
உன்னைக் கண்டால் எட்டி முத்தமல்லவா இட்டிருக்குமடி…

ஒருவர்-அந்த நரம்பியல் வைத்தியர் இருதய மாற்றில் தான் கொடிகட்டிப் பறக்கின்றார்.
மற்றவர்-உமக்கென்ன மண்டை கிண்டை கழண்டிற்றே? நரம்பியல் வைத்தியர் எப்படி இருதய மாற்றுச் சிகிச்சை செய்வார்?
முதலாமவர்-இருதய மாற்று எண்டு தானே சொன்னன்? மாற்று சிகிச்சை எண்டு சொன்னனா? அவர் இதுவரை 5 பெண்களை காதலித்து இதயத்தை மாற்றினத தான் சொன்னன்.மற்றவர்-...???


ஒரு தாயார் இரண்டு கொய்யாப் பழங்களை வாங்கி வந்தார். ஒன்று பெரியது. மற்றையது சிறியது. அவற்றை ஒவ்வொன்றாக எடுக்கும் படி கூறி மகனிடம் கொடுத்தார். அவன் பெரியதை எடுத்துக்கொண்டு சிறியதை தன் தங்கையிடம் கொடுத்தான். அவனது செயலில் எரிச்சலடைந்தவளாக அச்சிறுமி தன் அண்ணனை பேசினாள். 'நீயெல்லாம் ஒரு அண்ணனா? அம்மா என்னட்ட தந்தி;ருந்தா பெருச உன்னட்ட தந்திற்று சின்னத நான் எடுத்திருப்பன். ஆனா நீ ஒரு பேராசக்காரன்" என்றாள். அவன் அமைதியாக சொன்னான் "நீ செய்ய வேண்டியத உனக்காக நானே செய்திற்றன். நீ தர்ற மாதிரியே நானே பெரிச எடுத்திற்றன்" என்று.


ஒருவர்-கந்தையா செத்ததுக்கு என்ன காரணம்?
மற்றவர்-உணவில கலப்படத்தால வருத்தம் வந்ததெண்டு டொக்ரரிட்ட போக அவர் கொடுத்த கலப்பட மருந்தால மனுசன் செத்துப்போச்சு.


சித்திரகுப்தன்- என்ன பிரபோ! பாசக்கயிறை வீசுவதற்காக இலங்கைக்கு போகும் போது இப்போதெல்லாம் எருமையில் செல்வதில்லையே? ஏன்?எமதர்மன்- இலங்கையில் எரிபொருள் விலை கைநழுவிப் போய்விட்டதாகையால் இப்போதெல்லாம் எருதுகள் தான் மீண்டும் வயல் உழுகின்றனவாம் டிராக்ரர்களுக்கு பதிலாக. நான் பாசக்கயிறு வீச எருமையிலிருந்து கீழே இறங்கும் போது எந்த நாதாரியாவது வயல் உழுவதற்காக என் எருமையை கடத்தி விடுவானுகள்.


ஒருவர்- இப்போதெல்லாம் நீதிமன்றத்திலே வழக்குகளின் எண்ணிக்கை அசாதாரணமாக கூடிவிட்டதே?
மற்றவர்- காணி விலை ஏற ஏற எல்லைப்பிரச்சினை அதிகரிக்கத் தானே செய்யும்? ஆ?


ஒருவர்- உலகிலேயே நாட்டுப்பற்று கூடியவர்கள் ஆயுள் கைதிகள் தான்...
மற்றவர்- அதெப்படி?முதலாமவர்- அவர்கள் தான் வெளிநாடு போய் உழைப்பதை எண்ணிப்பார்க்காத ஜீவன்கள்.


ஒரு பெண்- கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் போயிட்டு வாறியே ஏன்?மற்றவள்- வெளிநாட்டில இருக்கிற என்ர புருஷனுக்கு ஞாபக மறதி வரக்கூடாது எண்டு வேண்டுறதுக்கு தான்.


இது தான் ஆஷஷ் தொடர் உருவாக காரணமான செய்தி...(???)
இது வெளிவந்தது "The Sporting times" என்ற சஞ்சிகையில். எழுதியவர் "Reginald Brook" . வெளிவந்தது செப்ரம்பர் இரண்டாம் திகதி 1882.
ஓகஸ்ட் 31 ஆம் திகதியும் ஓர் சஞ்சிகையில் ஆக்கம் ஒன்று வெளிவந்தது.

“என்ன பெரிசு! சிலையையே சுத்தி சுத்தி வாறாய்?”
“சிலையில இருக்கிற ஆள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு… ஆனா சட்டெண்டு ஞாபகம் வருதில்ல…”
“உன்ன தான் சிலையா வச்சிருக்கிறாங்க. இதுக்கு தான் கண்டவன் போனவனுக்கெல்லாம் உயிரோட இருக்கேக்கயே சிலை வைக்க கூடாதெண்டுறது. கேட்டா தானே…”


“வர வர சினிமா மோசமாப்போச்சு. மீச முளைக்காத 14 வயசில என்ன காதல் வேண்டியிருக்கு. அந்தக் காலத்தில 40 வயசில தான் காதலே தொடங்கும். காலம் கெட்டுப்போச்சு.”
“ஆமாய்யா… அப்பெல்லாம் 90 வயசில தான் எமன் வருவான். இப்பவெல்லாம் 30, 40 வயசிலயே வந்து நிக்கிறானே? என்ன செய்யச் சொல்றா?”


“டொக்ரர்! சின்னக் குழந்தைகளுக்கு உடம்பு ரப்பர் மாதிரி, கீழ விழுந்தாக் கூட எலும்பு முறியாதெண்டு சொன்னீங்களே?”
“ஆமாம் பாப்பா… அதுக்கென்ன இப்போ?”
“உங்க குழந்தய மொட்டமாடிலேருந்து கீழ தள்ளி விட்டிட்டன். எதுக்கும் போய்ப் பாருங்கோ!”


“என்ன செய்யுது?”
“ஒரே தலையிடி டொக்ரர்!”
“எத்தின நாளா?”
“இப்ப தான்… ஒரு 10 நாளா…”
“எனக்கு 10 வருஷமா தலையிடி இருக்கு தெரியுமா?”
“ஓகோ… அப்ப வாங்க ரெண்டு பேருமா ஒரு நல்ல டொக்ரரிட்ட போவம்… கிளம்புங்க…”


“என் பையன் ரஷ்யாவில MBBS முடிச்சிற்று வந்தான்… சட்டுபுட்டுன்னு கலியாணத்த முடிச்சு வச்சிற்றன்…”
“காச கரியாக்கி படிப்பிச்ச பிறகு தான் முடிக்கோணுமா…
என்ர மோனுக்கு A/L முடிஞ்சதுமே முடிச்சு வச்சிற்றன்…”


“இந்த மார்கழியோட பொண்ணுக்கு தோஷமெல்லாம் கழியுது….”
“அப்ப தையில கலியாணத்த முடிச்சிடலாமெண்டு சொல்லுங்க…”
“முடியாதே… அதுக்கு மேல தானே ஏழரைச்சனி தொடங்குது…”
“…???”


“மந்திரி பதவியிலயும் இருந்துகொண்டு… சொந்தக் காரங்கள வச்சு கசிப்பு காய்ச்சி விக்கிறதா எதிர்க்கட்சி காரங்க குற்றம் சாட்டுறாங்களே…”
“மந்திரியே காச்சிறதுக்கு சட்டத்தில இடமில்லயே… சட்டமே தெரியாதவங்க எதிர்க்கட்சியா இருக்கிறது தான் இந்த நாட்டின்ர சாபக்கேடு…”


“ஏம்பா கொண்டக்ரர்! வயசுப் பெட்டையளெண்டா மிச்சக்காச உள்ளங்கையில அழுத்தி வச்சி குடுப்பியே… என்ன மாதிரி கிழவியள் எண்டா சில்லற இல்லயெண்டுவியே… நல்ல ஆள் தானப்பா நீ…”
“அடக்கிழவி… கட்டயில போற வயசில ஆசயப்பாரு…”
“அடிக் கட்டயால…”


“என்னங்க இது… சினிமா கமரா மானா(Camera man) இருக்கிற நம்ம பிள்ள வீட்டுக்கு வந்திருக்கிறான்… பால் காய்ச்சிக் குடுக்கலாம் எண்டா இந்த பசு மாடு விடமாட்டனெண்டுது… என்னாச்சு இந்தச் சனியனுக்கு…?”
“ஏய்! மாட்ட ஏன் பேசுறாய்? இவன் கமராவோட போய் மாட்ட கவர்ச்சியா படமெடத்திருப்பான்… மானமுள்ள மாடாச்சே… அது தான் தண்ணி காட்டுது…”

(தொடரும்…)

ஓடும் வரை தான் ஆறு…
அடிக்கும் வரை தான் அலை…
எரியும் வரை தான் நெருப்பு…
முயற்சிக்கும் வரை தான் மனிதன்…

(இதே போல் கவிதையை எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் ஞாபகம் வரவில்லை...)

என்னிடமும் பட்டமுண்டு…ஏற்றும் பட்டமல்ல…கௌரவப் பட்டமது…
பல்கலைக் கழகம் போனதில்லை… காசும் கொடுத்ததில்லை…
அரசியலில் புகுந்தேன்… கொலை பல செய்தேன்…
காசுதனை கொள்ளையடித்தேன்… மிரட்டினேன் எதிரிகளை…
கிடைத்தது பட்டம்… கௌரவமாக…

வயல்வெளிகள்-
அடுக்கு மாடிகளின்
அஸ்திவாரங்கள்…
திருமண மண்டபங்கள்-
சனத்தொகை உற்பத்தியின்
மணிமண்டபங்கள்…

இலங்கையில் புதியதொரு

தொலைக்காட்சி அலைவரிசை…


உங்கள் கண்களுக்கு வேட்டு

வைக்க இதோ…


“சொத்தி T.V.”எமது நிகழ்ச்சிகளைப் பற்றிய ஓர் சிறிய அறிமுகம்.


• காலை 6 மணிக்கு எமது காலை நேர பிரதான செய்திகள். (எமது செய்திகளை பற்றிய விளக்கம் பிற்பகுதியில் தரப்படும்.)


• காலை 6.30 ற்கு எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். எமது காலை நேர நிகழ்ச்சி “Bad morning viewers.” ஆகும்.


• 6.50 மணியளவில் “இன்றைய இராசி பலன்” பகுதி இடம்பெறும். இன்று எத்தனையோ பேர் நேர்முகத் தேர்வுகளுக்கும், பரீட்சைகளுக்கும், புதிய செயல்களை தொடங்குவதற்கும் தயார் செய்திருப்பர். “இன்று புதிய செயல்களை தொடங்குவது நன்றன்று, புதிய செயல்களை தவிருங்கள்” என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு மன ரீதியாக தாக்குதல் நடத்துவோம்.


• அதன் பின்னர் “வாழ்த்தும் நேரம்”. பிறந்த நாள், திருமணங்கள், திருமண நிறைவு நாட்கள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர், மற்றும் பலருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.


• அதன் பின்னர் “எங்கள் தலைப்பில் உங்கள் உளறல்” பகுதி இடம்பெறும். தலைப்பு என்ற பெயரில் நாம் தருவதைப்பற்றி நீங்கள் கதைக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எம்மால் இயன்றவரை ஆங்கிலம் கலந்து கதைக்க முயற்சிப்போம். வடிவேல் சொல்வது போல் என்றால் “எவ்வளவு முடியுமோ… அவ்வளவு இங்கிலீச கதைப்பமுள்ள…!”. எமது தொலைக்காட்சி நிலையத்தில் ஆஸ்தான அறிவிப்பாளர் ஒருவர் இருப்பார். அவரின் பெயர் “சொத்தியப் புரியாணி”. இவரை நீங்கள் எப்போதும் எமது ஒளிபரப்பில் காணலாம். இவர் இல்லையென்றால் எமது நிறுவனம் இல்லை.


• இந்த கொடுமையை நீங்கள் தாங்கிய பின்னர் 8.30 முதல் இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய ஒரே நிகழ்ச்சியை திரும்ப திரும்ப ஒளிபரப்புவோம். 10.00 மணிவரை இந்த கொடுமைகள் ஒளிபரப்பப்படும்.


• 10.00 மணி முதல் 12.00 மணி வரை இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். தொடர் நாடகங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? “அடிச்சு முழக்குவமுள்ள…!”.


• 12.00 மணிக்கு “பெண்மணிக்காக…”. இங்கு பெண்கள் மாத்திரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேயர்களிடம் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். “எங்களிடம் நீங்க call பண்ணி tips அ share பண்ணலாம். எங்களுக்கு நீங்க call பண்ணும் போது உங்க T.V volume அ கம்மி பண்ணிற்று தான் call பண்ணனும். அப்ப தான் நீங்க சொல்ற tips clear ஆ கேக்கும். முதலாவதா ஒரு tips- உங்க face பளிச்சுன்னு தெரியணும்னா உங்க வீட்டு கண்ணாடிய நல்லா துடைக்கணும். சரி… சூப்பரான tips கேட்டம். இனி ஒரு சூப்பரான பாட்ட பாத்திற்று வருவம்.’


• 12.30 ற்கு பெண்கள் நேரம். இலங்கைப் பெண்களின் தற்போதைய பெரும் பிரச்சினைகளான “புகைத்தல், குடித்தல், அழகு சிகிச்சைகள்” போன்றன பற்றி நிறையவே கதைப்போம்.


• 1.00 மணிக்கு எமது “lunch time news”. இந்த சொல்லிற்கு எமக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்திலேயே பெயர் இடுவோம்.


• 1.15 ற்கு “சொத்தியின் weekday film festival”. திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.


• 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை சிறுவர் நேரம். அமானுஷிய கதாபாத்திரங்கள் கொண்ட கேலிச்சித்திர தொடர்கள் ஒளிபரப்பப்படும். சிறார்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி எமக்கு என்ன கவலை?
எம்மைப் பொறுத்தவரை எமக்கு அனுசரனையாளர்கள் கிடைத்தால் போதுமானது.


• 6.00 மணிக்கு “புத்தம் புதுப்பாடல்”. பராசக்தி, இரத்தத்திலகம், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களிலிருந்து புத்தம் புதிய பாடல்கள் அரை-குறையாக ஒளிபரப்பப்படும்.


• 6.30 ற்கு “அலங்கோலங்கள்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 6.55 ற்கு முதன்மைச் செய்தி என்ற பெயரில்; “உப்புச்சப்பில்லாத” செய்திகள் ஒளிபரப்பாகும்.


• 7.00 மணிக்கு “கலசத்தை கவிழ்த்த பெண்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 7.30 ற்கு “மந்திரத்தால் மாங்கனி வீழ்ந்திடுமோ?” என்று கேட்ட மகாகவியின் வேடத்தை போட்ட பெண்மணியின் படத்தை இட்டு, “பேய், ஆவி, மந்திரம், கடவுளின் நேரடி விஜயம்” போன்றவற்றை கதை இல்லாதபடியால் சேர்த்து ஆக்கப்பட்ட “(பார்ப்போருக்கு) கண்ணீர் அஞ்சலி” எனும் நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 8.00 ற்கு எமது செய்தியறிக்கை.


• எமது செய்தியறிக்கையின் பெயர் “UNP 1st” ஆகும்.


• எமது செய்திகளில் “ஐக்கிய தேசிய கட்சித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் இன்று மூச்சு விட்டார்கள்” என்பதே தலைப்புச்செய்தியாக அமையும். “ஜே.வி.பி உறுப்பினர்களும், அரசாங்க உறுப்பினர்களும் இன்று மூச்சு விடவில்லை” என திஸ்ஸ அத்தநாயக்க சொன்ன செய்தியை எமது முக்கிய செய்தியாக கொண்டு எமது செய்தியறிக்கை காணப்படும். அவர் சொன்னது சரியா பிழையா என்பது எமக்கு தேவையற்றது.


• எமது செய்தியறிக்கையின் மறுபெயர் “Believe last” ஆகும். அத்தோடு பல கிளை செய்திகளும் காணப்படும். “Sports 1st, Weather 1st, Entertainment 1st, Traffic 1st, Nature 1st, Water 1st, Train 1st, Bus 1st, Lorry 1st” போன்ற ஏராளமானவை.


• “International bureau update” பகுதியில் தமிழை கதைக்கத் தெரியாத தமிழர்களைக் கொண்டு சம்பந்தமில்லாமல் கதைத்து செய்தி வாசிப்போம்.


• 8.30 ற்கு “செல்வி” நெடுந்தொடர் ஒளிபரப்பாகும். ஏனைய எல்லா நெடுந்தொடர்கள் போலவே “இரண்டு மனைவி” கதையை கொண்டதாக இது அமையும்.


• 9.00 மணிக்கு U.N.P 1st இன் ஆங்கில செய்தியறிக்கை இடம்பெறும்.


• 9.30 முதல் மீண்டும் நெடுந்தொடர்கள்.


• 11.00 ற்கு “நெஞ்சம் மறப்பதில்லை”. பழைய பாடல்களையும், நினைவுகளையும் மீட்டிப்பார்க்கும் ஓர் நிகழ்ச்சி.
• வார இறுதி நாட்களில் எமது ஒளிபரப்பு நேரங்களை ஈடு செய்ய ஏதேனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


• உதாரணமாக “இது நிகழ்ச்சி இல்லை, போயிட்டாங்கய்யா போயிட்டாங்க” போன்ற அலட்டல் நிகழ்ச்சிகள், “Waste full” என்ற விமர்சன நிகழ்ச்சி, “SMS கொடுமை, T.V ஐ பூட்டுவோமா?, 30 என்ற SMS நிகழ்ச்சி (7+7+8+8=30)” போன்றனவும் குறிப்பிடத்தக்கன.


• எம்மிடம் நிதித்தட்டுப்பாடு ஏற்படின் SMS மூலமான போட்டிகள், இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும். “கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்” என்பது பழையது. “கேக்கிறவன் கேனையனா இருந்தா சொத்தி T.V தாறது நல்ல நிகழ்ச்சியாம்” என்பது புதியது.


• “GRAND MASTER” என்ற ஒரே உருப்படியான நிகழ்ச்சியை “சொத்தியப் புரியாணி” தொகுத்து வழங்குவார். அவருக்கு சேலைகளை அணிய அனுமதி வழங்கப்பட மாட்டாது.


• ஏனையன இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.


• முக்கிய குறிப்பு: எமது

நிகழ்ச்சிகள்

இலங்கையிலுள்ள சக்தி T.V எனும்

நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை போல்

அப்படியே உள்ளதாக அந்நிறுவனத்தினர்

பிரச்சினை செய்வதால் அப்பிரச்சினைகள்

தீர்ந்த பின்னர் எமது ஒளிபரப்புகள் மீள

ஆரம்பிக்கப்படும்.


ராகு காலமென்பார்! எம கண்டமென்பார்!
சுப நேரத்தில் தாலி பூட்டிட வேண்டமென்பார்..
பூட்டிய நாளன்று “அன்பே… செல்லமே…” என்றிடுவார்…
மறுநாளும் தொடர்ந்திடுவார்…
பின் “அடியேய்…” என்றிடுவார்,
தொடர்ந்து “சனியனே…” என்றிடுவார்…
இறுதியில் சுப நேரத்தில் கையெழுத்திடுவார்-
விவாகரத்தில்…

காதலில் சிறு பொய்கள்
கூடஇனிக்கும் என்பார்கள்…
ஆனால் என் காதலையே நீ
பொய்யாக்கியதேனடி?

அரிச்சந்திரனை பொய்யன் என்பேன்-

உன் உதடுகள் “ஆமாம்” போட்டால்…

ஆனால் பொய் சொன்னது உன் கண்கள் என்பதை

தான் நம்ப முடியவில்லையடி…

அன்பு காட்டினேன் நட்பு வந்தது…
பாசம் காட்டினேன் காதல் வந்தது…
என் கோபத்தால் காதலில் ஓட்டைகள்…
உழைத்தேன்… பணக்காரனானேன்…
ஓட்டைகள் அடைபட்டன தானாய்…

ஏமாற்றுக்கள்-

ஏறிப்போன விலைவாசியின் நடுவே,

மலிந்து கிடக்கும் மனித உணர்வுகளின்சாட்சி…

ஒரு நபர் ஐம்பது மாடி கட்டடமொன்றின் மொட்டைமாடியில் நின்று தன் நண்பர்களுடன் கதைத்து கொண்டிருந்தார். அங்கே வந்த ஒருவர் அவரை பார்த்து 'அடேய் கமல்! உன்ர ஒரே மகன் செத்திட்டான்!' என்றான். என்ன செய்வது என்று தெரியாத அவன், உடனே மொட்டைமாடியிலிருந்து கீழே குதித்து விட்டான். 35 ம் மாடி உயரத்தில் தனக்கு மகன் இல்லை என்பதை உணர்ந்தான். 20 ம் மாடி உயரத்தில் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை உணர்ந்தான். 5 ம் மாடி உயரத்தில் தனது பெயர் விமல் என்பதை உணர்ந்தான்.இது தான் மனித வாழ்க்கை.