வணக்கம் நேயர்களே! ஆம்... ஆம்... அந்த அருமையான குறட்பாவைத் தொடர்ந்து ஒரு விசேட நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது... 'கம்பஸ்ஸில் இன்று...' என்ற நிகழ்ச்சியோடு யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து செத்தலிங்கம் சாகாதேவன்... ஆம்... வணக்கம் சொறிறாஜ்... பல்கலைக்கழக வாசலில் வாழைமரங்களும், காய் வாழைக்குலைகளும், கறுத்த நிறக் கொடிகளும், பறை மேள சத்தங்களும் மட்டை பெற வருவோரை மகிழ்ச்சியாக வரவேற்கின்றன... அங்கே ஒரு முதியவர் அவசரம் அவசரமாக உள்ளே போகிறார்... அவர் ஓர் மாணவனுடன் ஏதோ கதைக்கிறார்... முதியவர்: அடேயப்பா தம்பி! உங்க என்னடா நடக்கப்போகுது... ஆம்... அப்பு சென்று விட்டார்... இத்தோடு காலை அமர்வுகள் நிறைவுபெற்றதால் மாலை அமர்வில் சந்திப்போம்... நன்றி சாகாதேவன்... 'சிறந்த சிகை அலங்கரிப்புக்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் சனத் ஜெயசூரியா லோன்றி... உங்கள் தலைமயிரை சிறப்பாக அலங்கரிக்க இலக்கம் 00, சுடலையடி, கொழும்புத்துறை மேற்கு, கொழும்பு 48 இல் இருக்கவே இருக்கிறது சனத் ஜெயசூரியா லோன்றி...' நேரம் இப்போது 12 மணி... நன்றி சொறிறாஜ்... அறி: எனது பெயர் தான் தெரியுமே... பிறந்தது பெரியாஸ்பத்திரியில்... வளர்ந்தது வீட்டில... இப்ப இருக்கிறது வானொலி நிலையத்தில... அறி: அந்தாளுக்கு ஒண்டும் விளங்காது... எப்ப கேட்டாலும் ஒரே விடைய தான் சொல்லும்... 5 உம் 3 உம் எப்பயும் 8 தானெண்டு தான் சொல்லும்... தமிழாக்கள் ஒண்டும் கண்டுபிடிக்கிறதில்ல எண்டுறாங்கள்... 5 உம் 3 உம் 9 எண்டு நான் புதுசா கண்டுபிடிச்சன், ஆனா பிழை எண்டுறாங்கள்... சரி அது தான் முடிஞ்சது எண்டா... 89 உக்குப் பிறகு என்ன எண்டார் தொண்பது எண்டன்... பிழையாம், புதுசா கண்டுபிடிக்கிறியா எண்டு அந்த மனுசன் அடிக்குது... கண்டு பிடிக்காட்டி கண்டுபிடிக்கேல கண்டுபிடிக்கேல எண்டுறாங்கள்... கண்டுபிடிச்சா அடிக்கிறாங்கள்... 10 முட்டைகளின் விடை 7 எனின் பாதி முட்டையின் விலை யாது... அடுத்து ஓர் விளம்பரம்... உங்கள் கடைசி காலத்தில் இருப்பவரா நீங்கள்... நீங்கள் மேலுலகம் செல்ல பயன்படுத்த வேண்டிய ஒரே சவப்பெட்டி சொர்க்கம் சவப்பெட்டிகள்... நீங்கள் உடனே நாடி உங்கள் சவப்பெட்டியை முன்பதிவு செய்யுங்கள்... ஆம் நன்றி நேயர்களே...
இது உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை... 0.08 பண்பலையூடாக உங்கள் செவிப்பலைகளை உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை இன்றும் உங்களை வதைக்க மன்னிக்கவும் இன்றும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வந்திருக்கிறது.
இதோ எமது நிலையக்குறியீட்டு இசை...
'கேட்டுப் பாரு சராங் புராங்...
எதிரிங்க சாரமெல்லாம் பிய்யுது...
வெற்றிதாண்டா நமக்கு...
டண்டணக்கா... ஆ... டணக்குணக்கா...'
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஒரு குறட்பா...
'நல்லன செய்வார்க்கு மறக்காமல் இரண்டு
அடி கொடுப்பது நலம்'
வணக்கம் சாகாதேவன்...
இது செத்தலிங்கம் சாகாதேவன்... யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து இன்றைய மட்டை வழங்கும் விழா பற்றிய சில சுவாரசியமான தகவல்களை வழங்க தயாராக இருக்கிறோம்.
மட்டைகளை வாங்குவதற்காக மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் பலர் அவிழ்த்து விட்ட ஆட்டுப்பட்டி போல வந்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலரின் உடைகளில் ஆங்காங்கே துவாரங்களும், பிய்ந்த அடையாளங்களும் காணப்படுகின்றன...
பெண்கள் சிலர் பல்கலைக்கழகத்தை கூட்டும் வேலையை இலகுவாக செய்யும் பொருட்டு சேலைகளை நிலத்தை கூட்டும் விதமாக அணிந்து வந்திருக்கிறார்கள்... ஆனால் பலரின் உடல்களில் ஆடைகளை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது... ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் ஆடைகளின் விலை அதிகரித்து விட்டதோ என்னவோ...
என்ன கதைக்கிறார் என கேட்கலாம்... எனது ஒலிவாங்கியை அவர்களை நோக்கிப் பிடிக்கிறேன்...
மாணவன்: பட்டம் குடுக்கப் போயினம் அப்பு.
மு: உதில நிக்கிற எல்லாருக்குமோடா...?
மா: ஓமணை அப்ப...
மு: சரி... சரி... அப்ப என்ன பட்டம் குடுக்கப் போயினம்... எட்டு மூலைப்பட்டமோ? பிராந்துப் பட்டமோ?
மா: உதில நிண்டு விசர்க்கத கதையாம அங்கால போண அப்பு வெளியால...
மு: நான் போறன்... ஆனா நீங்கள் கஷ்ரப்படப் போறியள்.. ஆயிரக்கணக்கில நிக்கிறியள். எல்லாற்ற பட்டமும் ஒண்டுக்க ஒண்டுக்க செருகப்போகுது... எனக்கென்ன... நான் போயிற்று வாறன்...
இப்போது நாம் உள்ளே செல்வோம்...
ஆம்... அங்கே ஒரு மாணவனுக்கு அரிவாள், வீச்சுவாள், குறடு எல்லாம் குடுபடுது... ஆம்... அவர் சத்திரசிகிச்சையில் கலாநிதிப்பட்டம் பெற்றவராம்...
அங்கே ஒருவருக்கு சீமெந்துப் பைக்கற்றுகளும், நீர் மட்டமும், சாந்துப் பலகையும் கொடுக்கப்படுகிறது... அவர் கட்டிடத் துறையில் பட்டம் பெற்றவராம்...
நன்றி நேயர்களே...
நேரம் இப்போது காலை 11.55...
'இந்த நேர அறிக்கையை உங்களுக்கு வழங்கியது கந்தசாமி வீச்சருவாள் தனியார் நிறுவனம்.'
சரி நேயர்களே...
விளம்பர இடைவேளையின் பின்னர் சந்திப்போம்...
எமது அடுத்த நிகழ்ச்சி 'அறிவுலகம்' இளைஞர் நிகழ்ச்சி...
புதிய நிகழ்ச்சியோடு கலையகத்தில் வெள்ளையன் கறுவற்தம்பி...
மீண்டும் வேறொரு நிகழ்ச்சியோடு உங்களை சந்திக்கிறேன்... நன்றி நேயர்களே...
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் ஓர் விசேட சந்திப்பு...
10 முறை ஓ.எல் எடுத்து சித்தியடையாத திருவாளர் அறிவழகன் அவர்களின் பேட்டி...
வணக்கம் அறிவழகன் அவர்களே...
அறிவழகன்: வணக்கம்...
கறுவற்தம்பி: உங்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுங்களே...
கறு: ஆகா... அருமை...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல ஆக்களின்ர வாழத்துக்களால தான் நாங்க அறிவாளியா இருக்க முடியுது...
கறு: நன்றி... நீங்கள் எப்ப முதல் முதலா ஓ.எல் எடுத்தனீங்கள்?
அறி: உதெல்லாம் நினைவிருந்தா நான் எப்பவோ சோதின பாஸ் பண்ணியிருப்பனே...
கறு: மிக்க நன்றி...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல...
(இடைமறித்து)
கறு: சரி... சரி... உங்கட கணக்கு வாத்தியார் பற்றி சொல்லுங்களன்...
என்ன கொடும ஷரவணா இது...
கறு: கூல்... கூல்...
அறி: நான் சந்திரமுகி டயலொக் சொன்னா என்ன நீர் சிவாஜி டயலொக்க சொல்றீர்? பெரிய அறிவாளியெண்ட நினைப்போ...
கறு: ஐயோ... நான் அப்பிடி சொல்லேல... உங்கள அமைதியா இருக்கச் சொல்லி இங்கிலீசில சொன்னனான்...
அறி: நானும் தமிழ், நீரும் தமிழ்... கேக்கிறவங்களும் தமிழ்... இடைக்குள்ள என்னத்துக்கு உங்கட இங்கிலீசு??? அதான் இடைக்குள்ள ஆங்கிலம்... எனக்கு உம்ம விட நல்லா ஆங்கிலம் தெரியும்... ஆனா அப்பிடி காட்டிக் கொள்றதில்ல...
கறு: ஐயா! மன்னிக்கவும்... அது சரி... உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா...
அறி: தெரியுமாவா... 'தாமோதிரம்பிள்ளை ஆடி ஆடி வாறார்...' எண்டத ஆங்கிலத்தில சொல்லும் பாப்பம்...
கறு: அது... அது...
அறி: நாட்டில நுனி நாக்கில ஆங்கிலம் கதைக்கிறவயின்ர உண்மை நிலை இது தான்...
நான் சொல்றன் கேளும்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்...
கறு: ஐயா... விளங்கேல... விளங்கப்படுத்த முடியுமா...
அறி: அப்பிடி கேக்குறது...
கிவ் எண்டா தா, றிங் எண்டா மோதிரம், சைல்ட் எண்டா பிள்ளை, யூலை எண்டா ஆடி, கம்மிங் எண்டா வாறார்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்... அப்ப விளங்குதே...
கறு: சுத்தம்...
அறி: என்னது...
கறு: சுத்தமான ஆங்கிலம் எண்டன்...
சரி... இறுதியா ஒரு கேள்வி...
நீங்கள் ஓ.எல் பாஸ் பண்ணாதத எண்ணி கவலைப் பட்டதுண்டா?
அறி: சீ... நான் உதைப்பற்றி கவலைப்படேல... ஓ.எல் பாஸ் பண்ணினா ஏ.எல் படிக்கோணும்... ஏ.எல் சோதினை எடுக்கோணும்... கம்பஸ்ஸில படிக்கோணும்... கம்பஸ்ஸில சோதினை எடுக்கோணும்... ஓய்வே இல்லாம போயிடும்... இப்ப பாருங்கோ நான் எவ்வளவு ஓய்வா இருக்கிறன்...
அதோட ஒரு விஷயம் சொல்லுவினம் தெரியுமா...
நாங்க எவ்வளவு கூட கூட படிக்கிறமோ, அந்தளவுக்கு மறக்கிறம்...
ஆகவே படிக்காம விட்டா பிரச்சினை இல்ல தானே...
கறு: ஆகா... அருமை... மிக்க நன்றி... உங்கள் போன்றவர்களின் வாழ்க்கையை எமது சந்ததி பாடமாய் கேட்கோணும் என்று தான் இதை ஒழுங்கு செய்தோம்... உங்கள் வாழ்க்கையை நமது இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்... மிக்க நன்றி...
அறி: மிக்க நன்றி...
ஆம்... அறிவுலகத்தில் அடுத்ததாக புதிர்ப்போட்டி...
இந்த வினாவிற்கான விடையை தெரிந்தோர் எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டிய இலக்கம் 123456789.
உங்கள் விடைகளை அனுப்பி பெறுமதிமிக்க பரிசுகளை பெறுங்கள்...
எமது ஒலிபரப்பு மீண்டும் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்...
அதுவரை நிம்மதியாக இருக்க எமது வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...
நன்றிகள் கோடி.
என்னைப் பற்றி
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
தமிழ்
அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்...
***********************************************************************
என்ர விடியக்காலமச் சாப்பாடு....
பச்சிளம் பாலகர் சங்கத்தின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
பொருளாதாரச் சிக்கல்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அப்பாவிகளான பச்சிளம் பாலகர்களான நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆராயப்பட்டன.
ஆகவே பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்.
'சரி... எங்களுக்கென்று தனிநாடொன்றை உருவாக்குவதில் பிரச்சினை இருக்காது. எம்மால் அது முடியும். ஆனால் உருவாகும் பச்சிளம் பாலகர் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது?'
உண்மையிலே நியாயமான கேள்விதான். எல்லோரும் அமைதியாக இருந்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கச் செயலாளரான யோ வொய்ஸ் எழுந்து 'நாம் தனிநாட்டை பெற்ற பின்னர் வேண்டுமென்று அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம். ஒபாமா பொறுமையிழந்து எம்மைத் திருப்பித் தாக்க கட்டளை பிறப்பிப்பார். உடனே அமெரிக்கா எங்கள் நாட்டைக் கைப்பற்றி எங்கள் நாட்டைத் தங்கள் நாட்டின் மாநிலமொன்றாக மாற்றிவிடும். அதன்பின்னர் நாம் தானாகவே முன்னேறிவிடுவோம்.' என்றார்.
இந்த அருமையான சிந்தனையைக் கேட்ட எல்லோரும் யோ வொய்ஸைப் பாராட்டியதோடு கனககோபிக்குப் பின்னர் யோ வொய்ஸை சங்கத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
அதுவரை அமைதியாகவிருந்த பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் கனககோபியைப் பார்த்த பலரும் 'ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டனர்.
கனககோபி லேசாகச் சிரித்துவிட்டு 'அவர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்றினால் நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?' என்றார்.
அனைவரும் சிந்தித்துவிட்டு கனககோபியை 'வேண்டுமென்றே யோசிப்போர்' சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு மாநாடு நிறைவுபெற்றது.
**********************************************************************************************
பச்சிளம் பாலகர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் தந்தையார் காலமாகிவிட்டார்.
அவர் துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்தார்.
சங்கத்தின் சார்பில் கனககோபி அவரை ஆறுதற்படுத்த அங்கே சென்றிருந்தார்.
நண்பருக்கு ஓர் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவர் இன்னும் அழத்தொடங்கிவிட்டார்.
'ஏன் கூடுதலாக அழுகிறாய்?' என்று தலைவர் கேட்டார்.
'இப்போது தான் என் சகோதரி அழைப்பெடுத்தார். அவரது தந்தையும் இறந்துவிட்டாராம்.' என்றார் நண்பர்.
***********************************************************************************************
பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...
25 வயசில காதலிச்சா, இப்ப தான் உழைக்க தொடங்கியிருக்கிறாய் அதுக்குள்ள காதல் தேவைப்படுதோ? எண்டுறீங்க...
30 வயசில காதலிச்சா, இந்தக் கழுதை வயசில உனக்கேன்ரா காதல் எண்டுறீங்க...
நாங்க அப்ப எப்பதான்ரா காதலிக்கிறது?'
நீங்களே சொல்லுங்கோ அவர் பச்சிளம் பாலகர் தானே???
***********************************************************************************************
பச்சிளம் பாலகர் சங்கத்தின் தலைவரான கனககோபி அண்மையில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்துவிட்டார்.
எல்லோரையும் போல வெறுமனே 'I love you' என்றோ அல்லது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றோ சொல்லவிரும்பாத அவர் புதுமையாக தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் அந்தப்பெண் ஏன் கனககோபியை காதலிக்கத் தொடங்கினார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'
************************************************************************************************
குறிப்பு: இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எந்த தீய நோக்குடனும் அல்ல.
இங்கே பெயர் குறிப்பிட்ட பதிவர் சகோதரர்கள் இவற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
************************************************************************************************
வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் இரண்டு ஏற்கனவே தயாராகிவிட்டது. எனினும் இந்தப் பதிவின் பின்னர் பதிவிடுகிறேன்.
காதலி: நாங்க கலியாணம் முடிச்சதும், உன்ர எல்லாத் துக்கங்களிலயும், கஷ்ரங்களிலயும் உனக்கு ஆறுதலா இருக்க விரும்புறன். உன்ர கண்ணீர எப்பயும் துடைக்க விரும்புறன்.
காதலன்: உன்ர அன்புக்கு நன்றி. ஆனா எனக்குத் தான் இப்ப எந்தக் கஷ்ரமோ துன்பமோ இல்லையே?
காதலி: அது ஏனென்டா நாங்க இன்னும் கலியாணம் கட்டேலயே...
வழிகாட்டி: வாங்கோ... இது தான் நயகரா நீர்வீழ்ச்சி.(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...
இந்த வீழ்ச்சிகளின்ர சத்தம் மிகப்பெரியது. 20 சுப்பர்சொனிக் விமானங்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலால பறந்தாலும் அந்த விமானங்களின்ர சத்தம் கீழ நிக்கிற எங்களுக்கு கேக்காது. அந்தளவுக்கு இரைச்சல் வாய்ந்தது.
அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்.
நம்ம சுப்பிரமணியம் அண்ண புதுசா மாருதி கார் வாங்கினார்.
கார் வாங்கிற்று சொந்த ஊருக்குக் கிளம்பினார்.
கொழும்பில இருந்து சிலமணி நேரங்களிலயே வவுனியாவுக்குப் போய்ச் சேர்ந்திட்டார்.
அங்க போய் ரெண்டு, மூண்டு நாள் இருந்திற்று ஒருநாள் விடிய கொழும்பில இருக்கிற மனிசிக்கு அழைப்பு எடுத்தார்.
'இஞ்ச, நான் இப்ப வெளிக்கிடுறன். அங்க 5,6 மணித்தியாலத்தில வந்திடவன்' எண்டார்.
மனுசியும் பாத்து பாத்து களைச்சுப் போச்சுது.
அழைப்பு எடுத்து இரண்டாவு நாள் களைச்ச சுப்பிரமணியத்தார் வந்து சேர்ந்தார்.
'என்னப்பா நடந்தது? ஏன் பிந்தினது?' எண்டு மனுசி கேட்டிச்சு.
'இவங்கள் கார் செய்யிறவங்களுக்கு விசர். மூளை இல்ல. முன்பக்கம் போறதுக்கு 4 gear வச்சிருக்கிறாங்கள். ஆனா பின்பக்கம் வாறதுக்கு ஒரே ஒரு கியர் தான். முட்டாளுகள்...' எண்டார் சுப்பிரமணியத்தார்.
ஆசிரியை: எருதும், பசுவும் புல் 'மேய்ந்தது' என்ற வாக்கியத்தை சரியாக சொல்...
மாணவன்: பசுவும், எருதும் புல் மேய்ந்தது
ஆசிரியை: ஏன் அப்பிடி?
மாணவன்: பெண்களுக்கு முதலிடம் ரீச்சர்.
திருமணத்தின் முன்னர் ஓர் ஆண் ஓர் பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் அது அவள் மீது அவன் காட்டும் அன்பு.
திருமணத்தின் பின்னர் அவளின் கையை இறுகப் பற்றிப் பிடித்தால் அது தற்பாதுகாப்பு.
ஓர் கணவனின் ஆதங்கம்.
என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்கள் என்னும் அழகைப் படைக்கும் கடவுள், பின்னர் ஏன் அவர்களை மனைவிகளாக மாற்றிவிடுகிறான்?
தன்பக்கம் உண்மையிருக்கும் போது அதை ஏற்று சரணடைபவன், நேர்மையாளன்.
தன்கருத்து பற்றி முடிவாகத் தெரியாத போது சரணடைபவன், பரந்த மனம் கொண்டவன்.
தன்பக்கம் உண்மை இருந்த பொழுதிலும் சரணடைந்து மன்னிப்புக் கேட்பவன், கணவன்.
(தலைப்பு விளக்கம்....
இதை வாசித்துவிட்டு 'இவன் திருந்த மாட்டனா... எப்ப பாத்தாலும் பெண்களை குறை சொல்றதயே பிழைப்பா வச்சிருக்கிறான்' என்று நீங்கள் மனதில் நினைத்ததைத் தான் தலைப்பாக இட்டிருக்கிறேன்...
நான் பெண்களை நகைச்சுவைகளில் அதிகம் எடுக்கக் காரணம், அப்போது தான் பெரும்பான்மை ஆண் வாசகர்கள் சிரிப்பீர்கள்.
பெண்கள் புத்திசாலிகள் என்பதால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள்...
இது எப்பிடி இருக்கு விளக்கம்....???)
*******************************************************************************************
இருக்கிறம் சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அச்சுவலைச் சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முதலாவது பதிவர் சந்திப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருந்ததைவிட இம்முறை கொஞ்சம் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் தான் நிறையப் பேரை அறிந்து கொண்டேன்.
முதலாம் சந்திப்பில் தெரியாத முகங்களை சந்திக்கச் சென்றேன், இம்முறை தெரிந்த முகங்களை அறியச் செல்கிறேன்.
ஆனால் ஒரு முக்கியமான வேண்டுகோள்...
இன்று நடக்கும் அச்சுவலைச் சந்திப்பில் எனக்கு (அதாவது கனககோபிக்கு) இரசிகர் மன்றம் வைக்கப் பேச்சுக்கள் நடப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்தையக முயற்சி எடுப்பவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள், எச்சரிக்கை.
எனது பெயரில் எந்த முயற்சியை எடுத்தாலும் என்னிடம் தக்க அனுமதி பெற்று செய்யுமாறு வேண்டுகிறேன்.
அத்தோடு இரசிகர் மன்றம் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாததால் அந்த முயற்சியைக் கைவிடுமாறும் அன்பாக வேண்டுகிறேன்.
என்னை கெளரவப்படுத்த நினைத்தால் ஏற்கனவே உள்ள அகில உலக கனககோபி இரசிகர் மன்றத்தில் சேர்ந்து அதற்குரிய சந்தாப்பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்...
கொலை வழக்கில மாட்டிடுவீங்க... சொல்லிற்றன்....)
*************************************************************************************************************************************
இனி சீரியஸான விடயம்....
அச்சுவலைச் சந்திப்பிற்கு வெள்ளவத்தையிலிருந்து செல்லும் நண்பர்கள் யாராவது என்னையும் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமா?
நான் உங்களோடு எங்கே, எத்தனை மணிக்கு இணையலாம் என மின்னஞ்சல் செய்வீர்களா???
உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...
- டேவிட் பிஸனோற்
திருமணத்தி்ன் பின்னர் கணவனும் மனைவியும் ஓர் நாணயத்தின் இருபக்கமும் போல் ஆகிவிடுகிறார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஆனால் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
- சச்சா குய்ற்ரி
திருமணம் என்பது எப்போதும் நல்லதே.
நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய்.
கூடாத மனைவி கிடைத்தால் தத்துவவியலாளனாக மாறிவிடுவாய்.
- சோக்றடீஸ்.
மிகப்பெரிய இலக்குகளை எமக்குக் காட்டி, நாம் அதை அடைய நினைக்கும் போது அதைத் தடுப்பவர்கள் தான் பெண்கள்.
- பெயரில்லா... (அனானி...)
என் வாழ்வில் நான் விடையளிக்க முடியாமல் போன மிகப்பெரிய கேள்வி...
'பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்?'
-டுமஸ்.
நான் என் மனைவியிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினேன்.
அவள் ஓரிரண்டு பந்திகள் பேசினாள்.
- சிங்மன்ட் பிரெட்
சிலர் எங்கள் நீண்ட திருமண வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.
நாங்கள் உணவுவிடுதிக்குச் செல்ல வாரத்தில் இரண்டு நாட்களை ஒதுக்குகிறோம்.
ஒரு சிறிய மெழுகுவர்த்தியில்.... ஓர் இரவு உணவு.... மென்மையான இசை... மற்றும் சிறிய நடனங்கள்...
மனைவி வியாழக்கிழமை செல்வாள்... நான் வெள்ளிக் கிழமை செல்வேன்...
- பெயரில்லா...
இலத்திரனியல் வங்கியியலை விட வேகமாக பணத்தை பரிமாற்றும் நடவடிக்கை ஒன்று இருக்கிறது...
அதை திருமணம் என்று அழைக்கிறார்கள்.
- ஷாம் கினிசன்.
என் இரண்டு மனைவிமாரோடும் எனக்கு துரதிஷ்ரம் தான்...
முதலாமவள் இறந்துவிட்டாள்... இரண்டாமவள் உயிரோடு இருக்கிறாள்...
- ஜேம்ஸ் ஹொல்ற் மக்கவ்ரா.
உங்கள் மனைவியின் பிறந்த தினத்தை வாழ்க்கை முழுவதும் மறக்காமல் இருக்க சிறந்த வழி, ஒரு முறை அவளின் பிறந்த தினத்தை மறத்தல் தான்...
- நாஷ்.
திருமணத்திற்கு முன்னர் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா...?
எனக்கு விரும்பிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.
- பெயரில்லா...
நானும் என் மனைவியும் இருபது வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
பின்பு இருவரும் சந்தித்துக் கொண்டு காதலில் விழுந்தோம்.
- ஹென்னி ஜங்மான்.
நல்ல மனைவி என்பவள் எப்போதும் தன் கணவனை மன்னிப்பாள், பிழை தன்பக்கம் இருக்கும் போது.
- றொட்னி டேன்ஜர்பீல்ட்.
(அவ்வப்போது சேர்த்து வைத்திருந்தவை. திடீரென்று பார்த்தால் ஒரு பதிவு போடுமளவிற்கு சேர்ந்திருந்தன.
அதனால் மனைவிமாரைப் பற்றி ஒரு பதிவு. எதுவுமே என் சொந்தக் கருத்து இல்லை. ;)
ஏற்கனவே மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிக் கதைத்தாலும் நான் சின்னப் பையன் என்பதால் பிரச்சினைகள் வராது என்று பதிவுலக சோதிட சிங்கம் வந்தியண்ணா தனது சோதிடப் பதிவில் சொல்லியிருப்பதால் தைரியமாக பதிவிடுகிறேன்.)
**********************************************************************************************************
முதலாமவன் : என் மனைவி தேவதை... என் மனைவி தேவதை...
இரண்டாமவன்: நீ அதிர்ஷ்ரக் காரன்... என் மனைவி இப்போதும் உயிரோடு தான் இருக்கிறாள்.
மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...
நட்பு என்றால் இது தான்...
ஒரு நபர் இன்னொருவரிடம் கூறுகிறார்.
'எனது மனைவி எனது நண்பனொருவனுடன் ஓடிவிட்டாள். நான் எனது நண்பனை இழந்து தவிக்கிறேன்.
1. உங்கள் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே உங்கள் நுண்ணலை அடுப்பில் அழுத்தியிருப்பீர்கள்...
2. Cards விளையாட்டை உண்மையான Cards ஐக் கொண்டு விளையாடி பல வருடங்கள் ஆகியிருக்கும்...
3. 3 பேரைக் கொண்ட உங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி இலக்கங்கள் இருக்கும்...
4. உங்களுக்கு மறுபுறத்தில் அலுவலகத்தில் வேலைசெய்யும் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்கள்...
5. உங்கள் முன்னாள் நண்பர்கள் பலருடன் தொடர்பில் இருக்காத காரணம், அவர்களிடம் ஓர் மின்னஞ்சல் கணக்கு இல்லை என்பதாலாகும்...
6. வீட்டு வாசலில் வண்டியுடன் வந்தபின்னர், வாசல் கதவைத் திறக்குமாறு கோர வீட்டிலுள்ளவர்களை உங்கள் அலைபேசியில் அழைப்பீர்கள்...
7. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஒவ்வொன்றின் அடிப்பகுதியிலும் அனேகமாக வலைத்தள முகவரி காண்பிக்கப்படும்...
8. வீட்டிலிருந்து செல்லும் போது உங்கள் அலைபேசியை விட்டுவிட்டு செல்லுதல் என்பது (உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் அறிந்தே இருக்காத இந்த அலைபேசிகளை) இப்போதெல்லாம் உங்களை குழப்பிவிடும்...
திரும்ப எடுப்பதற்காக பாதிவழியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி செல்வீர்கள்...
10. காலையில் நித்திரையிலிருந்து எழும்பி காலைத் தேநீரை அருந்த முன்னர் ஒருமுறை தொடரறாநிலைக்கு சென்று வலைத்தளங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவீர்கள்...
11. இப்போது உங்கள் தலையை ஆட்டி ஆட்டி மெல்லமாக புன்னகைப்பீர்கள்...
12. மேலே உள்ளதை வாசித்ததும் பெரிதாக சிரிப்பீர்கள்...
13. எல்லாவற்றையும் விட கொடுமையாக இந்தப் பதிவை யாருக்காவது முன்னகர்த்த விரும்புவீர்கள்...
14. மேலே இலக்கங்கள் இட்டதில் 9ம் இலக்கம் தவறவிடப்பட்டமையை கவனிக்காமலிருக்குமளவிற்கு நீங்கள் வேலைப்பழுவாக இருப்பீர்கள்...
15. அதை வாசித்த பின்னர் மேலே சென்று 9ம் இலக்கம் இல்லைதானா என்பதை உறுதிப்படுத்தியிருப்பீர்கள்...
இப்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்....
இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று....
(தமிழிஷ் வாக்களிப்புப் பட்டை இட்டிருக்கிறேன்... யாழ்தேவி வாக்களிப்புப் பட்டை முன்பு முதலே இருக்கிறது... பிடித்திருந்தால் வாக்களியுங்கள்...
அப்படியே 'பின்தொடர்பவர்கள் விட்ஜெற்றை' கஷ்ரப்பட்டு html குறிகள் தேடி எடுத்து இட்டிருக்கிறேன்... எனக்கு பின்தொடர்பவர்கள் விட்ஜெற் வழங்கப்பட்டிருக்கவில்லை...
எனவே பின்தொடர விரும்பினால் பின்தொடருங்கள்...)
மனிதர்களுக்கு ஆறறிவு, பகுத்தறிவு என நாம் மார்தட்டிக் கொண்டாலும் எமக்கு சிந்திக்கும் திறன் குறைவு தான்...
நாமெல்லாம் சீரியஸாக மொக்கை போடும் இனம்...
கீழே சில சந்தர்ப்பங்களில் நாம் விடைகள் தெளிவாகத் தெரிந்த வினாக்களை எவ்வாறு கேட்கிறோம் எனப் பாருங்கள்.
அந்த வினாக்களுக்கு இப்படியான விடைகள் கிடைக்கவில்லை என மகிழ்ச்சியாக இருங்கள்.
1. திரையரங்கில்: திரையரங்கில் நீங்கள் உங்கள் நண்பன் அல்லது தெரிந்தவரைக் காணும் போது..
முட்டாள்தனமான கேள்வி: மச்சான்... நீ இங்க என்னடா செய்யிறாய்?
விடை: உனக்குத் தெரியாதா? நான் இங்க கறுப்புச் சந்தையில (Black இல) ரிக்கெற் விக்கிறன்.
2. பேருந்தில்: நெரிசல் மிக்க பேருந்தில், உயர்ந்த குதி கொண்ட செருப்பணிந்த பருமனான பெண்மணி ஒருவர் உங்கள் காலை மிதித்துவிடுகிறார்.
முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். காயப்படுத்தி விட்டதா?
விடை: இல்லை. இல்லவே இல்லை. நான் இப்போது மயக்கத்தில் இருக்கிறேன். வேண்டுமானால் இன்னுமொருமுறை மிதித்துப் பாருங்களேன்?
3. இறந்த வீட்டில்: இறந்தவருக்கு நெருங்கிய ஒருவர் அழுதவாறே...
முட்டாள்தனமான கேள்வி: ஏன்? ஏன்? ஏன் இவர்? மற்றவங்க எல்லாரையும் விட்டிற்று ஏன் இவரை மட்டும்?
விடை: ஏன்? அவருக்கு பதிலா நீங்க (மேல) போக விரும்பிறீங்களா?
4. உணவகத்தில்: உணவகத்தில் நீங்கள் உணவு பரிமாறுபவரிடம்...
முட்டாள்தனமான கேள்வி: மசாலாத் தோசை நல்லமா?
விடை: இல்லை. அது கூடாது. கூடவே கூடாது. அதுக்குள்ள நாங்கள் கல்லு, மண் எல்லாம் கலந்து செய்யிறனாங்கள். அடிக்கடி துப்பவும் செய்வம்.
5. குடும்ப ஒன்றுகூடலில்: நீண்ட காலத்தின் பின்னர் உங்களைக் காணும் அன்ரிமார்...
முட்டாள்தனமான கேள்வி: ஹேய் கோபி... நீ இப்ப பெரியாளா வந்திற்றாய்...
விடை: நல்லது. ஆனா நீங்க சொல்லிக் கொள்ற அளவுக்கு மெல்லிசா மாறேல.
6. திருமணம்: உங்கள் நண்பியொருத்தி தனது திருமணம் பற்றி உங்களுக்கு அறிவிக்கும் போது நீங்கள்...
முட்டாள்தனமான கேள்வி: நீ கலியாணம் முடிக்கப்போற பெடியன் நல்லவனா?
விடை: இல்ல. அவன் மனுசிய அடிக்கிற ரகம். உணர்வுகளற்ற ஜடம். குடிகாரன். எல்லாம் சும்மா காசுக்காகத் தான்...
7. தொலைபேசி: நடு இரவில் நித்திரை செய்துகொண்டிருக்கும் போது அழைப்பு வருகிறது... மறுமுனையில்...
முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். நித்திரை செய்து கொண்டிருந்தீங்களா?
விடை: சீ, இல்லை. ஒபாமான்ர சுகாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் சரியா எண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன். நான் நித்திரை எண்டா நீ நினைச்சாய்? நீ ஒரு முட்டாள்.
8. தலைமுடி: உங்கள் நண்பனொருவன் தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டுவருகிறான்...
முட்டாள்தனமான கேள்வி: ஹேய்... தலைமயிர் வெட்டியிருக்கிறாய் போல?
விடை: சீ.. இப்ப இலையுதிர்காலம் தானே? அதுதான் உதிர்க்கிறன்.
9. பல்வைத்தியர்: பல்வைத்தியர் உங்களைப் பரிசோதிக்கும் போது வாயில் தட்டி, அடித்துப் பார்க்கிறார்.
முட்டாள்தனமாக கேள்வி: நோகுதா எண்டு சொல்லுங்கோ...
விடை: இல்லை. அது நோகாது. அடியுங்கோ. இரத்தம் தான் கொஞ்சம் வரும்.
10. புகைத்தல்: நீங்கள் வீதியில் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓர் அழகான பெண்மணி வருகிறார்.
முட்டாள்தனமான கேள்வி: ஒ! நீ புகைக்கிறனியா?
விடை: கடவுளே... என்ன அதிசயம்... இது ஒரு துண்டு வெண்கட்டி(Chalk). இப்ப என்னடாவெண்டா நுனியில புகையுது... என்ன அதிசயம்...
*************************************************************************************
யாழ்தேவின் நட்சத்திர வாரம் இன்றோடு நிறைவடைகிறது.
என்னை நட்சத்திரமாக தெரிவுசெய்தமைக்கு யாழ்தேவி திரட்டிக்கு எனது நன்றிகள்.
அப்படியே யாழ்தேவி திரட்டியில் இதுவரை தங்களை இணைத்துக் கொள்ளாத தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இருப்பின் அவர்களை யாழ்தேவியில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் யாழ்தேவிக்கு எனது நன்றிகள்.
இந்த நட்சத்திர வாரக் காலப்பகுதியில் ஒரு சிந்தனைப் பதிவும் (சீரியஸ் பதிவு), ஒரு தொடர் பதிவும் போட்டுவிட்டேன்.
சிந்தனைப்பதிவு போட்டு நொந்து போனதால் (ஒரு ஈ, காக்கா கூட என் வலைப்பதிவுப் பக்கம் வரேல) 'சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தில்' கெளரவ உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறேன்.
ஸ்லம்டோக் மில்லியனையர் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் பணம் உழைக்க இப்படியான போட்டிகளே போதும் என்பதை உணர்ந்த நம்ம சர்தார் ஒருவர் 1 கோடி ரூபாவைப் பரிசாகத் தரும் போட்டியில் கலந்து கொண்டார்.
அங்கே நடந்ததை பாருங்கள்...
அவருக்கான கேள்விகள்...
1) 100 வருட போர் (100 year war) எவ்வளவு காலம் நடைபெற்றது?
a) 116 வருடங்கள்.
b) 99 வருடங்கள்.
c) 100 வருடங்கள்.
d) 150 வருடங்கள்.
உடனே சர்தார், தான் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொள்ள விரும்புவதாக (skip) தெரிவித்தார்.
எனவே இரண்டாவது கேள்வி,
2) 'பனாமா தொப்பிகள்' (Panama hats) எந்த நாட்டில் செய்யப்படுகின்றன?
a) பிரேசில்.
b) சிலி.
c) பனாமா.
d) ஈகுவடோர்.
தனது பல்கலைக்கழக நண்பர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.
3) பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி.
பார்வையாளர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.
4) கீழ்வருவனவற்றில் கிங் ஜோர்ஜ் VI இன் முதற்பெயர்?
a) எடேர்.
b) அல்பேட்.
c) ஜோர்ஜ்.
d) மனோஜல்.
அதிர்ஷ்ட அட்டைத் தெரிவைக் கேட்டார் சர்தார்.
5) பசுபிக் சமுத்திரத்திலுள்ள கனரி ஐலன்ட்ஸ் (Canary islands) பின்வருவனவற்றில் எந்தப் பறவையின் பெயரை அடிப்படையாகக் கொண்டது?
a) கனரி பறவை (Canary bird).
b) கங்காரு.
c) நாய்க்குட்டி.
d) எலி.
சர்தார் போட்டியிலிருந்து தானாக விலகினார்.
ஆகவே சர்தார் ஒரு வடிகட்டின முட்டாள் என நினைத்திருப்பீர்கள்.
ஆனால் விடைகளைப் பாருங்கள்...
1) 100 வருடப் போர் 116 வருடங்கள் நீடித்தது. 1337 இலிருந்து 1453 வரை இடம்பெற்றது.
2) பனாமா தொப்பிகள் ஈகுவடோரில் செய்யப்படுகின்றன.
3) ஒக்ரோபர் புரட்சி நவம்பரில் கொண்டாடப் படுகிறது.
4) ஜோர்ஜ் இன் முதற்பெயர் அல்பேட் என்பதாகும். 1936 இல் அவர் தனது பெயரை மாற்றினார்.
5) நாய்க்குட்டிகள். Insularia Canaria என்ற இலத்தீன் பெயரின் அர்த்தம் 'நாய்க்குட்டிகளின் தீவு' என்பதாகும்.
இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?
இதற்குப் பிறகு சர்தார் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்காதீ்ர்கள்...
********************************************
இப்போது உங்களை பரிசோதிக்கப் போகிறேன்...
ஓர் சர்தார் ஓர் சிறுவனை அவனது பாடசாலையிலிருந்து கடத்தினார். (இலங்கை ஆளா இருப்பாரோ? ;) )
அந்தப் பையனிடம் 'நான் உன்னைக் கடத்தியிருக்கிறேன்' என்று கூறினார். அவனை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஒரு கடதாசியை எடுத்து 'நான் உங்கள் மகனை கடத்தியிருக்கிறேன். உங்கள் மகன் உயிரோடு வேண்டும் என்றால் எனக்கு 50 இலட்சம் தரவேண்டும். அந்த 50 இலட்சத்தை மைதான மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இடவும். இப்படிக்கு சர்தார்' என்று எழுதினார். எழுதிய கடிதத்தை அந்த சிறுவனிடம் கொடுத்து அவனை வீட்டு அனுப்பினார்.
மறுநாள் குப்பைத் தொட்டியை திறந்து பார்த்தார். சந்தேகமில்லாமல் அங்கே 50 இலட்சம் பணம் இருந்தது. பணத்தோடு ஒரு கடிதமும் காணப்பட்டது. 'ஒரு சர்தாராக இருந்து கொண்டு இன்னொரு சர்தாருக்கு இப்படிச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது? பணத்தை எடுத்துக் கொண்டு என் மகனை விட்டுவிடு. இப்படிக்கு சர்தார்' என்று எழுதியிருந்தது.
யாராவது சிரிச்சீங்களா? இப்ப தானே சிரிக்க வேணாம் எண்டன்???
இலங்கையில் புதியதொரு
தொலைக்காட்சி அலைவரிசை…
உங்கள் கண்களுக்கு வேட்டு
வைக்க இதோ…
“சொத்தி T.V.”
எமது நிகழ்ச்சிகளைப் பற்றிய ஓர் சிறிய அறிமுகம்.
• காலை 6 மணிக்கு எமது காலை நேர பிரதான செய்திகள். (எமது செய்திகளை பற்றிய விளக்கம் பிற்பகுதியில் தரப்படும்.)
• காலை 6.30 ற்கு எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். எமது காலை நேர நிகழ்ச்சி “Bad morning viewers.” ஆகும்.
• 6.50 மணியளவில் “இன்றைய இராசி பலன்” பகுதி இடம்பெறும். இன்று எத்தனையோ பேர் நேர்முகத் தேர்வுகளுக்கும், பரீட்சைகளுக்கும், புதிய செயல்களை தொடங்குவதற்கும் தயார் செய்திருப்பர். “இன்று புதிய செயல்களை தொடங்குவது நன்றன்று, புதிய செயல்களை தவிருங்கள்” என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு மன ரீதியாக தாக்குதல் நடத்துவோம்.
• அதன் பின்னர் “வாழ்த்தும் நேரம்”. பிறந்த நாள், திருமணங்கள், திருமண நிறைவு நாட்கள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர், மற்றும் பலருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.
• அதன் பின்னர் “எங்கள் தலைப்பில் உங்கள் உளறல்” பகுதி இடம்பெறும். தலைப்பு என்ற பெயரில் நாம் தருவதைப்பற்றி நீங்கள் கதைக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எம்மால் இயன்றவரை ஆங்கிலம் கலந்து கதைக்க முயற்சிப்போம். வடிவேல் சொல்வது போல் என்றால் “எவ்வளவு முடியுமோ… அவ்வளவு இங்கிலீச கதைப்பமுள்ள…!”. எமது தொலைக்காட்சி நிலையத்தில் ஆஸ்தான அறிவிப்பாளர் ஒருவர் இருப்பார். அவரின் பெயர் “சொத்தியப் புரியாணி”. இவரை நீங்கள் எப்போதும் எமது ஒளிபரப்பில் காணலாம். இவர் இல்லையென்றால் எமது நிறுவனம் இல்லை.
• இந்த கொடுமையை நீங்கள் தாங்கிய பின்னர் 8.30 முதல் இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய ஒரே நிகழ்ச்சியை திரும்ப திரும்ப ஒளிபரப்புவோம். 10.00 மணிவரை இந்த கொடுமைகள் ஒளிபரப்பப்படும்.
• 10.00 மணி முதல் 12.00 மணி வரை இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். தொடர் நாடகங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? “அடிச்சு முழக்குவமுள்ள…!”.
• 12.00 மணிக்கு “பெண்மணிக்காக…”. இங்கு பெண்கள் மாத்திரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேயர்களிடம் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். “எங்களிடம் நீங்க call பண்ணி tips அ share பண்ணலாம். எங்களுக்கு நீங்க call பண்ணும் போது உங்க T.V volume அ கம்மி பண்ணிற்று தான் call பண்ணனும். அப்ப தான் நீங்க சொல்ற tips clear ஆ கேக்கும். முதலாவதா ஒரு tips- உங்க face பளிச்சுன்னு தெரியணும்னா உங்க வீட்டு கண்ணாடிய நல்லா துடைக்கணும். சரி… சூப்பரான tips கேட்டம். இனி ஒரு சூப்பரான பாட்ட பாத்திற்று வருவம்.’
• 12.30 ற்கு பெண்கள் நேரம். இலங்கைப் பெண்களின் தற்போதைய பெரும் பிரச்சினைகளான “புகைத்தல், குடித்தல், அழகு சிகிச்சைகள்” போன்றன பற்றி நிறையவே கதைப்போம்.
• 1.00 மணிக்கு எமது “lunch time news”. இந்த சொல்லிற்கு எமக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்திலேயே பெயர் இடுவோம்.
• 1.15 ற்கு “சொத்தியின் weekday film festival”. திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.
• 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை சிறுவர் நேரம். அமானுஷிய கதாபாத்திரங்கள் கொண்ட கேலிச்சித்திர தொடர்கள் ஒளிபரப்பப்படும். சிறார்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி எமக்கு என்ன கவலை?
எம்மைப் பொறுத்தவரை எமக்கு அனுசரனையாளர்கள் கிடைத்தால் போதுமானது.
• 6.00 மணிக்கு “புத்தம் புதுப்பாடல்”. பராசக்தி, இரத்தத்திலகம், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களிலிருந்து புத்தம் புதிய பாடல்கள் அரை-குறையாக ஒளிபரப்பப்படும்.
• 6.30 ற்கு “அலங்கோலங்கள்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.
• 6.55 ற்கு முதன்மைச் செய்தி என்ற பெயரில்; “உப்புச்சப்பில்லாத” செய்திகள் ஒளிபரப்பாகும்.
• 7.00 மணிக்கு “கலசத்தை கவிழ்த்த பெண்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.
• 7.30 ற்கு “மந்திரத்தால் மாங்கனி வீழ்ந்திடுமோ?” என்று கேட்ட மகாகவியின் வேடத்தை போட்ட பெண்மணியின் படத்தை இட்டு, “பேய், ஆவி, மந்திரம், கடவுளின் நேரடி விஜயம்” போன்றவற்றை கதை இல்லாதபடியால் சேர்த்து ஆக்கப்பட்ட “(பார்ப்போருக்கு) கண்ணீர் அஞ்சலி” எனும் நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.
• 8.00 ற்கு எமது செய்தியறிக்கை.
• எமது செய்தியறிக்கையின் பெயர் “UNP 1st” ஆகும்.
• எமது செய்திகளில் “ஐக்கிய தேசிய கட்சித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் இன்று மூச்சு விட்டார்கள்” என்பதே தலைப்புச்செய்தியாக அமையும். “ஜே.வி.பி உறுப்பினர்களும், அரசாங்க உறுப்பினர்களும் இன்று மூச்சு விடவில்லை” என திஸ்ஸ அத்தநாயக்க சொன்ன செய்தியை எமது முக்கிய செய்தியாக கொண்டு எமது செய்தியறிக்கை காணப்படும். அவர் சொன்னது சரியா பிழையா என்பது எமக்கு தேவையற்றது.
• எமது செய்தியறிக்கையின் மறுபெயர் “Believe last” ஆகும். அத்தோடு பல கிளை செய்திகளும் காணப்படும். “Sports 1st, Weather 1st, Entertainment 1st, Traffic 1st, Nature 1st, Water 1st, Train 1st, Bus 1st, Lorry 1st” போன்ற ஏராளமானவை.
• “International bureau update” பகுதியில் தமிழை கதைக்கத் தெரியாத தமிழர்களைக் கொண்டு சம்பந்தமில்லாமல் கதைத்து செய்தி வாசிப்போம்.
• 8.30 ற்கு “செல்வி” நெடுந்தொடர் ஒளிபரப்பாகும். ஏனைய எல்லா நெடுந்தொடர்கள் போலவே “இரண்டு மனைவி” கதையை கொண்டதாக இது அமையும்.
• 9.00 மணிக்கு U.N.P 1st இன் ஆங்கில செய்தியறிக்கை இடம்பெறும்.
• 9.30 முதல் மீண்டும் நெடுந்தொடர்கள்.
• 11.00 ற்கு “நெஞ்சம் மறப்பதில்லை”. பழைய பாடல்களையும், நினைவுகளையும் மீட்டிப்பார்க்கும் ஓர் நிகழ்ச்சி.
• வார இறுதி நாட்களில் எமது ஒளிபரப்பு நேரங்களை ஈடு செய்ய ஏதேனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
• உதாரணமாக “இது நிகழ்ச்சி இல்லை, போயிட்டாங்கய்யா போயிட்டாங்க” போன்ற அலட்டல் நிகழ்ச்சிகள், “Waste full” என்ற விமர்சன நிகழ்ச்சி, “SMS கொடுமை, T.V ஐ பூட்டுவோமா?, 30 என்ற SMS நிகழ்ச்சி (7+7+8+8=30)” போன்றனவும் குறிப்பிடத்தக்கன.
• எம்மிடம் நிதித்தட்டுப்பாடு ஏற்படின் SMS மூலமான போட்டிகள், இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும். “கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்” என்பது பழையது. “கேக்கிறவன் கேனையனா இருந்தா சொத்தி T.V தாறது நல்ல நிகழ்ச்சியாம்” என்பது புதியது.
• “GRAND MASTER” என்ற ஒரே உருப்படியான நிகழ்ச்சியை “சொத்தியப் புரியாணி” தொகுத்து வழங்குவார். அவருக்கு சேலைகளை அணிய அனுமதி வழங்கப்பட மாட்டாது.
• ஏனையன இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
• முக்கிய குறிப்பு: எமது
நிகழ்ச்சிகள்
இலங்கையிலுள்ள சக்தி T.V எனும்
நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை போல்
அப்படியே உள்ளதாக அந்நிறுவனத்தினர்
பிரச்சினை செய்வதால் அப்பிரச்சினைகள்
தீர்ந்த பின்னர் எமது ஒளிபரப்புகள் மீள
ஆரம்பிக்கப்படும்.
வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி- பிட்ஸா ஹட் நிலையத்துக்கு அழைத்தமைக்கு நன்றி. நான் உங்கள்...
வாடிக்கையாளர்- பொறுங்கள்... நான்...
வா.சே.பி- பொறுங்கள்... நான் உங்கள் பல நோக்கு பயன்பாட்டு அட்டை இலக்கத்தை அறிந்து கொள்ளலாமா?
வாடிக்.- ஆ.. சற்றுப் பொறுங்கள்.. ஆ... இதோ... 867456477546-788-46464
வா.சே.பி- நன்றி... ஆம்.. நீங்கள் திரு.கோபி.. இலக்கம் 234, கண்டி வீதி, வவுனியாவிலிருந்து அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கம் 338675. உங்கள் கைத்தொலைபேசி இலக்கம் 78346346743648. உங்கள் அலுவலக இலக்கம் 57545347. எந்த இலக்கத்திலிருந்து சேர் கதைக்கிறீர்கள்?
வாடிக்- வீட்டு இலக்கத்திலிருந்து. அது சரி, என்னுடைய இலக்கங்கள் எவ்வாறு உங்களுக்கு தெரியும்?
வா.சே.பி- நாங்கள் வலையமைப்போடு இணைந்திருக்கிறோம் சேர். We are connected to the system Sir.
வாடிக்- நான் கடல் உணவு சேர்ந்த பிட்ஸாவை ஓடர் செய்ய விரும்புகிறேன்.
வா.சே.பி- அது சிறந்த திட்டம் இல்லை சேர்.
வாடிக்- ஏன் அப்படி?
வா.சே.பி- உங்களுடைய மருத்துவ அறிக்கைகளி்ன் படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, அத்தோடு கொலஸ்ரோல் அளவும் கூடுதலாக உள்ளது சேர்.
வாடிக்- என்னது? அப்ப எனக்கு என்ன உணவை பிரேரிக்கிறீர்கள்?
வா.சே.பி- எங்களது கொழுப்பு மிதமான வெங்காய பிட்ஸாவை வாங்குங்கள் சேர். அது உங்களுக்கு விருப்பமானது.
வாடிக்- எவ்வாறப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?
வா.சே.பி- தேசிய நூலகத்திலிருந்து கடந்த வாரம் தான் 'பிரபலமான வெங்காய உணவுகள்' என்ற புத்தகத்தை பெற்றுச் சென்றீர்கள் சேர்.
வாடிக்- சரி. விடுங்கள். எனக்கு 2 தாருங்கள். எவ்வளவு செலவாகும்?
வா.சே.பி- 10 பேர் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு 2 போதாது சேர். 3 வாங்க வேண்டும். 3 இன் விலை 49.99 டொலர்கள் சேர்.
வாடிக்- எனது கடனட்டை மூலம் செலுத்தலாமா?
வா.சே.பி- மன்னிக்க வேண்டும் சேர். உங்கள் கடனட்டையின் கடன் நிலுவை கடனெல்லையைத் தாண்டி விட்டது. உங்கள் கடனட்டையின் கடன் மீதி தற்போது 4067.33 டொலர்கள் சேர். ஆகவே நீங்கள் உடன் பணம் மூலம் செலுத்த வேண்டும்.
வாடிக்- அப்போது நான் அருகிலுள்ள தன்னியக்க மீளப்பெறல் இயந்திரத்திலிருந்து பணத்தை மீளப்பெற்று உங்கள் விநியோகப்பிரதிநிதி வீட்டை வந்தடைய முன்னர் தயாராக இருக்க வேண்டும்.
வா.சே.பி- உங்களால் முடியாது சேர். அறிக்கைகளின் படி இன்றைய நாளுக்குரிய அதிகபட்ச பணத்தை மீளப்பெற்று விட்டீர்கள் சேர்.
வாடிக்- அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் பிட்ஸாவை அனுப்புங்கள் பணம் தயாராக இருக்கும். எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் விநியோகம் செய்ய?
வா.சே.பி- கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சேர். ஆனால் விரைவாக வேண்டுமெனில் நீங்கள் உங்கள் மோட்டார் வண்டியில் வந்து பெற்றுக் கொள்ளலாம் சேர்.
வாடிக்- என்னது?
வா.சே.பி- எங்களிடமுள்ள அறிக்கைகளின் படி உங்களிடம் ஒரு ஹீரோ ஹொண்டா, ஸ்பிளென்டர் வகை மோட்டார் வண்டி உள்ளது சேர். பதிவு இலக்கம் NP ZZ 5768.
வாடிக்- (தனக்குள்) ஐயோ கடவுளே.
வா.சே.பி- வேறு ஏதாவது வேண்டுமா சேர்?
வாடிக்- வேண்டாம். ஆனூல் நீங்கள் வாக்களித்தபடி 3 கொக்க கோலா பானங்களை வழங்குவீர்கள் தானே?
வா.சே.பி- வழமையாக நாங்கள் வழங்குவதுண்டு. ஆனால் உங்கள் விடயத்தில் நீங்கள் நீரிழிவு நோயாளி என அறிக்கைகள் கூறுவதால் குளிர்பானங்களை வழங்க முடியாது சேர்.
வாடிக்- #$$^%&$@$%^
வா.சே.பி- நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்வது நல்லது சேர். கடந்த 1987 ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி நீங்கள் காவல்துறை அதிகாரி மீது அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதால் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டமையை நினைவுறுத்த விரும்புகிறேன் சேர்.
வாடிக்கையாளர் மூர்ச்சையடைந்து விட்டார்.
ஓர் இளைஞனுக்கும் ஓர் வயதானவருக்குமிடையிலான உரையாடல். ஒரு தடவை நேரம் சொல்வதால் என்ன நடக்கும் எனப் பாருங்கள்.
இளைஞன்: பெரியவரே! நேரம் என்னெண்டு சொல்ல முடியுமா?
முதியவர்: நிச்சயமா முடியாது.
இளைஞன்: ஐயா? ஆனா ஏன்? எனக்கு ஒருக்கா நேரம் சொல்றதால ஏதாவது குறைஞ்சிடுமா?
முதியவர்: ஓம். நிச்சயமா.
இளைஞன்: ஆனா, என்னெண்டு விளங்கப்படுத்த முடியுமா?
முதியவர்: இங்க பார். இப்ப நான் உனக்கு நேரம் சொன்னா நீ நிச்சயமா நன்றி சொல்லுவாய். அதோட நாளைக்கும் வரும் போதும் நேரம் கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: அதுக்கு பிறகு 2,3 தரம் சந்திக்க வேண்டி வரலாம். நீ என்னட்ட என்ர பெயரயும் முகவரியயும் கேப்பாய்.
இளைஞன்: ஓம். நடக்கலாம்.
முதியவர்: பிறகொருநாள் என் வீட்டுக்கு வருவாய். அதால போகும் போது ஒருக்கா எட்டிப் பாத்திற்று போவம் எண்டு வந்தனான் எண்டு சொல்லுவாய். நானும் மரியாதைக்கு உனக்கு தேத்தண்ணி தருவன். என்ர மரியாதையான நடத்தையைப் பாத்து நீ திரும்ப திரும்ப வீட்டுக்கு வருவாய். இந்த முறை தேத்தண்ணி நல்லா இருந்ததெண்டு சொல்லி யார் தயாரிச்சதெண்டு கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: பிறகு நான் அது என்ர மகள் எண்டு சொல்லுவன். பிறகு நான் என்ர இளமையான, அழகான மகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டி வரும். நீ என்ர மகளின்ர அழகில மயங்கி நிப்பாய்.
இளைஞன்: (புன்னகைத்தல்)
முதியவர்: அதுக்கு பிறகு நீ என்ர மகள அடிக்கடி பாக்க விரும்புவாய். அவளோட படத்துக்கு போகக் கேப்பாய். பிறகு தனியா எங்கயாவது வெளில போகக் கூப்பிடுவாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: அதுக்குப் பிறகு என்ர மகளும் உன்ன விரும்பத் தொடங்குவாள். உனக்காகக் காத்திருக்கத் தொடங்குவாள். நீ அவள காதலிக்கத் தொடங்குவாய். அவள கலியாணம் முடிக்கக் கேப்பாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: ஒரு நாள் ரெண்டு பேருமா ஒண்டா வந்து என்னட்ட கல்யாணம் முடிக்க அனுமதி கேப்பீங்க.
இளைஞன்: ஓம். நடக்கும்.
முதியவர்: (கோபமாக) ஒரு மணிக்கூடு கூட இல்லாத உன்ன என்ர மகளுக்கு எப்பயுமே கல்யாணம் கட்டித்தர மாட்டன். தொலைஞ்சு போ!.
Web Designer: Ray Creations. Sponsored by Web Hosting India & Web Design Company
-719759.jpg)
-721201.jpg)
-722539.jpg)
-723717.jpg)
-725013.jpg)
-726125.jpg)
-727406.jpg)
-728856.jpg)
-729947.jpg)
-731392.jpg)