உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...
- டேவிட் பிஸனோற்
திருமணத்தி்ன் பின்னர் கணவனும் மனைவியும் ஓர் நாணயத்தின் இருபக்கமும் போல் ஆகிவிடுகிறார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஆனால் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
- சச்சா குய்ற்ரி
திருமணம் என்பது எப்போதும் நல்லதே.
நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய்.
கூடாத மனைவி கிடைத்தால் தத்துவவியலாளனாக மாறிவிடுவாய்.
- சோக்றடீஸ்.
மிகப்பெரிய இலக்குகளை எமக்குக் காட்டி, நாம் அதை அடைய நினைக்கும் போது அதைத் தடுப்பவர்கள் தான் பெண்கள்.
- பெயரில்லா... (அனானி...)
என் வாழ்வில் நான் விடையளிக்க முடியாமல் போன மிகப்பெரிய கேள்வி...
'பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்?'
-டுமஸ்.
நான் என் மனைவியிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினேன்.
அவள் ஓரிரண்டு பந்திகள் பேசினாள்.
- சிங்மன்ட் பிரெட்
சிலர் எங்கள் நீண்ட திருமண வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.
நாங்கள் உணவுவிடுதிக்குச் செல்ல வாரத்தில் இரண்டு நாட்களை ஒதுக்குகிறோம்.
ஒரு சிறிய மெழுகுவர்த்தியில்.... ஓர் இரவு உணவு.... மென்மையான இசை... மற்றும் சிறிய நடனங்கள்...
மனைவி வியாழக்கிழமை செல்வாள்... நான் வெள்ளிக் கிழமை செல்வேன்...
- பெயரில்லா...
இலத்திரனியல் வங்கியியலை விட வேகமாக பணத்தை பரிமாற்றும் நடவடிக்கை ஒன்று இருக்கிறது...
அதை திருமணம் என்று அழைக்கிறார்கள்.
- ஷாம் கினிசன்.
என் இரண்டு மனைவிமாரோடும் எனக்கு துரதிஷ்ரம் தான்...
முதலாமவள் இறந்துவிட்டாள்... இரண்டாமவள் உயிரோடு இருக்கிறாள்...
- ஜேம்ஸ் ஹொல்ற் மக்கவ்ரா.
உங்கள் மனைவியின் பிறந்த தினத்தை வாழ்க்கை முழுவதும் மறக்காமல் இருக்க சிறந்த வழி, ஒரு முறை அவளின் பிறந்த தினத்தை மறத்தல் தான்...
- நாஷ்.
திருமணத்திற்கு முன்னர் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா...?
எனக்கு விரும்பிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.
- பெயரில்லா...
நானும் என் மனைவியும் இருபது வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
பின்பு இருவரும் சந்தித்துக் கொண்டு காதலில் விழுந்தோம்.
- ஹென்னி ஜங்மான்.
நல்ல மனைவி என்பவள் எப்போதும் தன் கணவனை மன்னிப்பாள், பிழை தன்பக்கம் இருக்கும் போது.
- றொட்னி டேன்ஜர்பீல்ட்.
(அவ்வப்போது சேர்த்து வைத்திருந்தவை. திடீரென்று பார்த்தால் ஒரு பதிவு போடுமளவிற்கு சேர்ந்திருந்தன.
அதனால் மனைவிமாரைப் பற்றி ஒரு பதிவு. எதுவுமே என் சொந்தக் கருத்து இல்லை. ;)
ஏற்கனவே மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிக் கதைத்தாலும் நான் சின்னப் பையன் என்பதால் பிரச்சினைகள் வராது என்று பதிவுலக சோதிட சிங்கம் வந்தியண்ணா தனது சோதிடப் பதிவில் சொல்லியிருப்பதால் தைரியமாக பதிவிடுகிறேன்.)
**********************************************************************************************************
முதலாமவன் : என் மனைவி தேவதை... என் மனைவி தேவதை...
இரண்டாமவன்: நீ அதிர்ஷ்ரக் காரன்... என் மனைவி இப்போதும் உயிரோடு தான் இருக்கிறாள்.
மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...
நட்பு என்றால் இது தான்...
ஒரு நபர் இன்னொருவரிடம் கூறுகிறார்.
'எனது மனைவி எனது நண்பனொருவனுடன் ஓடிவிட்டாள். நான் எனது நண்பனை இழந்து தவிக்கிறேன்.
30 பின்னூட்டங்கள்:
//மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...//
;கோபி Purse காலி ஆன அனுபவமோ ???.....;)
கோபி..நல்ல பதிவு...சில இடங்களில் கொஞ்சம் ஆழமாக வாசிக்கும் பொது உங்கள் அனுபவங்களும் பிரதிபலித்து போன்ற ஒரு மாயை... நல்ல தொகுப்பு...உபயோகமானதும் கூட...சின்ன பையன் ...சின்ன பையன் என்று சொன்னாலும் பெரிய ஆள் யோசனை ... சும்மா பகிடிக்கு சொன்னான் கோவிக்காதயிங்கோ...
இதன் ஆங்கிலம் எனக்கு நேற்றுகிடைத்தது மொழிபெயர்த்து அடிக்கமுன்னர் கோபி கலக்கிவிட்டீர்கள். நல்ல காலம் என்னால் இப்படி அழகாக மொழிபெயர்க்கமுடியாது.
Before marriage you were writing love poems...after marriage you are writting like this
நல்ல அனுவமான தத்துவங்களை தெருவித்தற்கு நன்றி...
ஒய்விருந்தால் கீழ்கண்ட வலைபூபக்கத்தை சென்று பார்வையிடவும்...
http://tamil498a.blogspot.com
இந்தியாவில் இதுபோல் கொடுமைகள் பல நடந்து கொண்டிருக்கின்றது என்று உங்கட நாட்டு மக்களுக்கு சொல்லுங்க நண்பா
கோபி,
கலக்கலோ கலக்கல்…..
இதோ என் பங்குக்கு,
என் மனைவியுடன் நான் வெளியில் செல்லும் சந்தர்ப்பம் என்றால் சுற்றுப்பிரயாணம் தான். எனக்கு அதில் அலாதிப்பிரியம். அப்போதுதான் மனைவியின் தங்கையும் வருவாள்.
நள்ளிரவில் யாருடனோ அவள் கதைத்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும் நான் கவலைப்படவில்லை. அது மட்டும் தான் நான் நிம்மதியாகத் து}ங்கும் நேரம்.
அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத் தான் கொடுக்க வேண்டும். 30 வருடமாக இராட்சசியின் சாம்ராஜ்யத்தில் கணவன் என்ற பெயருடன் வேலைக்காரனாக பொறுமை காக்கிறேன்.
ஒரு நாள் இரவு. மனைவி மாடியிலுள்ள படுக்கையறைக்குச் சென்று விட்டாள். கணவன் இன்னும் வரவில்லை.
எவ்வளவு நேரம் காத்திருப்பது, கீழே சென்றாள்.
கணவன் கையில் மதுக் கோப்பையுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
"என்னங்க, மேல வராம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க, இன்னும்?"
"அன்பே, இருபது ஆண்டுகள்முன் உன் தகப்பனார் என்னை அழைத்து, 'நான் ஒரு நீதிபதி. உன்னை 20 ஆண்டுகள் சிறையில் தள்ளி விடுவேன். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் என் பெண்னை மணந்துகொள்' என்றார், நினைவிருக்கிறதா?"
"அதுக்கென்னங்க இப்போ?"
"இன்னைக்கு விடுதலை ஆகியிருப்பேன்"
என்னை கல்யாணம் பண்ண சொல்லி சொல்லுபவர்களிடம் இந்த பதிவை அனுப்ப போறேன்..
யப்பா மனைவிகள் வேண்டவே வேண்டாமப்பா
செம மொக்கை..
ம்.. நல்ல அனுபவங்கள், பயனுள்ள தகவல்கள். தகவலுக்கு நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் சிங்கமோ?
// Subankan கூறியது..
நீங்கள் ஆங்கிலத்தில் சிங்கமோ?//
அவர் ஆங்கிலத்தின் சிங்கமோ இல்லையோ.. தமிழ் மொழியின் காதலர் .....ஹா...ஹா...
உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...//
எப்ப அப்பன் கலியாணம் கட்டுறியள்? நல்ல டீலா இருக்கு!
அழகு
என்ன ஆச்சு கோபி உங்களுக்கு....
// Bavan கூறியது...
//மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...//
;கோபி Purse காலி ஆன அனுபவமோ ???.....;) //
இத்தால் நான் அறியத் தருவது யாதெனில், இங்கு எனது சொந்த அனுபவங்கள் எதுவும் இல்லை என்பது தான்...
ஹி ஹி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் கூறியது...
கோபி..நல்ல பதிவு...சில இடங்களில் கொஞ்சம் ஆழமாக வாசிக்கும் பொது உங்கள் அனுபவங்களும் பிரதிபலித்து போன்ற ஒரு மாயை... நல்ல தொகுப்பு...உபயோகமானதும் கூட...சின்ன பையன் ...சின்ன பையன் என்று சொன்னாலும் பெரிய ஆள் யோசனை ... சும்மா பகிடிக்கு சொன்னான் கோவிக்காதயிங்கோ...//
ஐயயோ... அனுபவம் ஏதும் இல்ல...
வதஙந்தியக் கிளப்பப்படாது...
நான் சின்னப் பையன் தான்...
நான் கோவிக்க மாட்டன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//வந்தியத்தேவன் கூறியது...
இதன் ஆங்கிலம் எனக்கு நேற்றுகிடைத்தது மொழிபெயர்த்து அடிக்கமுன்னர் கோபி கலக்கிவிட்டீர்கள். நல்ல காலம் என்னால் இப்படி அழகாக மொழிபெயர்க்கமுடியாது. //
நான் முதலே சொன்ன மாதிரி நானொண்டும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் கிடையாது.
2 வார்த்தை ஆங்கிலத்தில கோர்த்து கதைக்கத் தெரியாது, 4 வார்த்தை ஆங்கிலத்தில கோர்த்து எழுதத் தெரியாது....
//Before marriage you were writing love poems...after marriage you are writting like this//
மன்னிக்கவும்.... நான் இப்போதும் வாலிபன் தான்.... திருமணம் முடிக்கவில்லை... ஹி ஹி....
நன்றி வந்தியண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....
//தமிழ். சரவணன் கூறியது...
நல்ல அனுவமான தத்துவங்களை தெருவித்தற்கு நன்றி...
ஒய்விருந்தால் கீழ்கண்ட வலைபூபக்கத்தை சென்று பார்வையிடவும்...
http://tamil498a.blogspot.com
இந்தியாவில் இதுபோல் கொடுமைகள் பல நடந்து கொண்டிருக்கின்றது என்று உங்கட நாட்டு மக்களுக்கு சொல்லுங்க நண்பா //
அனுபவம் எதுவுமே இல்லை...
நான் சின்னப் பையன்...
உங்கள் தளத்தைப் பார்த்தேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
கோபி,
கலக்கலோ கலக்கல்….. //
நன்றி நிர்ஷன்....
//இதோ என் பங்குக்கு,
என் மனைவியுடன் நான் வெளியில் செல்லும் சந்தர்ப்பம் என்றால் சுற்றுப்பிரயாணம் தான். எனக்கு அதில் அலாதிப்பிரியம். அப்போதுதான் மனைவியின் தங்கையும் வருவாள்.
நள்ளிரவில் யாருடனோ அவள் கதைத்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும் நான் கவலைப்படவில்லை. அது மட்டும் தான் நான் நிம்மதியாகத் து}ங்கும் நேரம்.
அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத் தான் கொடுக்க வேண்டும். 30 வருடமாக இராட்சசியின் சாம்ராஜ்யத்தில் கணவன் என்ற பெயருடன் வேலைக்காரனாக பொறுமை காக்கிறேன். //
ஹி ஹி...
எனக்கு அனுபவம் ஏதும் இல்ல... உங்களுக்கு...?? ஹி ஹி ஹி...
கலக்கல் நிர்ஷன்...
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....
// இ.பி.கோ 498A கூறியது...
ஒரு நாள் இரவு. மனைவி மாடியிலுள்ள படுக்கையறைக்குச் சென்று விட்டாள். கணவன் இன்னும் வரவில்லை.
எவ்வளவு நேரம் காத்திருப்பது, கீழே சென்றாள்.
கணவன் கையில் மதுக் கோப்பையுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
"என்னங்க, மேல வராம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க, இன்னும்?"
"அன்பே, இருபது ஆண்டுகள்முன் உன் தகப்பனார் என்னை அழைத்து, 'நான் ஒரு நீதிபதி. உன்னை 20 ஆண்டுகள் சிறையில் தள்ளி விடுவேன். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் என் பெண்னை மணந்துகொள்' என்றார், நினைவிருக்கிறதா?"
"அதுக்கென்னங்க இப்போ?"
"இன்னைக்கு விடுதலை ஆகியிருப்பேன்" //
ஹி ஹி....
சிறிது கால்திற்கு முன்னர் வாசித்தேன்...
பகிர்தலுக்கு நன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
என்னை கல்யாணம் பண்ண சொல்லி சொல்லுபவர்களிடம் இந்த பதிவை அனுப்ப போறேன்..//
அப்பா... ஒரு சகோதரி தப்பிச்சிற்றா.... ;)
//யப்பா மனைவிகள் வேண்டவே வேண்டாமப்பா //
அண்ணா... இது கொஞ்சம் அதிகம்... மனைவிகளோ? அவரின்ர ஆசையப் பாரன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொண்ஸ்...
//sanjeevan கூறியது...
செம மொக்கை.. //
நன்றி நண்பா...
//Subankan கூறியது...
ம்.. நல்ல அனுபவங்கள், //
மன்னிக்க வேண்டும்... இவை அனுபவங்கள் அல்ல... இப்படி பொய் சொல்லப்படாது.... குழந்தை (நான் தான்) அழுதிரும்...
//பயனுள்ள தகவல்கள். தகவலுக்கு நன்றி. //
அப்படியா?
//நீங்கள் ஆங்கிலத்தில் சிங்கமோ? //
மன்னிக்க வேண்டும்... தவறான தகவல் கிடைத்திருக்கிறது....
2 வார்த்தை ஆங்கிலத்தில கோர்த்து கதைக்கத் தெரியாது, 4 வார்த்தை ஆங்கிலத்தில கோர்த்து எழுதத் தெரியாது....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாங்கன்...
// Bavan கூறியது...
// Subankan கூறியது..
நீங்கள் ஆங்கிலத்தில் சிங்கமோ?//
அவர் ஆங்கிலத்தின் சிங்கமோ இல்லையோ.. தமிழ் மொழியின் காதலர் .....ஹா...ஹா... //
ஐயயோ... வதந்தி... நான் யாரையும் காதலிக்கேல...
(அப்பா... வடிவா வாசியுங்கோ திரும்ப....)
நான் யாரையும் காதலிக்கேல....
// புல்லட் கூறியது...
உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...//
எப்ப அப்பன் கலியாணம் கட்டுறியள்? நல்ல டீலா இருக்கு! //
எனக்கு அந்த திட்டம் இல்லையே புல்லட் அண்ணா...
என்ன செய்வம்...???
வருகைக்கம் கருத்துக்கும் ந்னறி அண்ணா....
// SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
அழகு //
நன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
// சந்ரு கூறியது...
என்ன ஆச்சு கோபி உங்களுக்கு.... //
நல்லாத்தான் இருந்தன்...
இப்பவும் நல்லாத் தான் இருக்கிறன்...
ஹி ஹி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
ha ha ha..
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு
நண்பா மீண்டும் பதிவர் சந்திப்பாமே...
நான் வரமுடியாவிட்டால் நான் என் பதிவில் சில வேண்டுகோள்கள் விடுத்திருக்கிறேன் என் சார்பாக தெரிவித்து விடுங்கள்..
//LOSHAN கூறியது...
ha ha ha..//
Hee hee....
//மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!//
அண்ணா... என்னைப் போன்ற பச்சைப் புள்ளைகள் சொன்னால் நகைச்சுவை...
உங்களைப் போல குடும்பஸ்தர்கள் சொன்னால் அனுபவம் என்றாகிவிடும்... கவனம்.... ஹி ஹி.....
// மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு //
இது விஜய் நகைச்சுவை ஆச்சே....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
// ilangan கூறியது...
நண்பா மீண்டும் பதிவர் சந்திப்பாமே...
நான் வரமுடியாவிட்டால் நான் என் பதிவில் சில வேண்டுகோள்கள் விடுத்திருக்கிறேன் என் சார்பாக தெரிவித்து விடுங்கள்.. //
பார்த்தேன்... பின்னூட்டமிட்டிருக்கிறேன் நண்பா....
கருத்துரையிடுக