க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஊடகங்களில் வெளியான அறிக்கைகளுக்கு புறம்பாக யுனிஸ்கானின் பதவி விலகலுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.
பதவி விலகலுக்கு காரணமான வெவ்வேறு வகைகள்...

தாஸ்ரியின் வேர்ஷன் (Dasti's Version): பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினரான தாஸ்ரி (அல்லது தஸ்ரி) இந்த மாதம் ஒக்ரோபர் என்பதை மறந்து ஏப்ரல் மாதம் எனவும் அவர் அறிக்கை வெளியிட்ட நாள் ஏப்ரல் முதலாம் திகதி எனவும் நினைத்துவிட்டார்.
அதனால் தான் ஆட்ட நிர்ணயசதி மற்றும் வேண்டுமென்றே தோற்றமை குறித்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
அரையிறுதியில் பாகிஸ்தானின் தோல்வியால் கவலையடைந்திருந்த பாகிஸ்தான் மக்களை ஏப்ரல் முட்டாள் நகைச்சுவை சொல்லி அவர்களைத் தேற்ற வந்த அவரின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை.
அவர் அந்தத் திகதியை ஏப்ரல் முதலாம் திகதி என நினைக்க காரணம் இருக்கிறது.
ஏனென்றால் இஜாஸ் பட் இன் பிறந்த தினம் ஒக்ரோபர் மாதத்திலேயே வருவதால் இரண்டையும் முடிச்சுப் போட்டு முட்டாள் தினம் என்பதால் ஏப்ரல் முதலாம் திகதி என நினைத்துவிட்டார்.


யனிஸ் கான் வேர்ஷன்: யுனிஸ்கான் நினைத்தார் இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களில் எதுவும் இல்லை என்று. ஏனென்றால் ஆட்டங்கள் யாவும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு இருப்பவை தானே. போதிய ஏற்பாடுகளை செய்வதற்காக முன்னரே ஆட்டங்களின் திகதிகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம் தானே. இதில் என்ன இருக்கிறது என விட்டுவிட்டார்.
அதே வேளை தனது திருமண நிறைவுநாள் வருவதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இரண்டுநாள் விடுமுறை கேட்டு விடுமுறைக் கோரிக்கை கடிதத்தை (leave letter) இஜாஸ் பட் இடம் கையளித்தார்.
அந்தக் கடிதத்தை ஊடகங்கள் தான் இராஜினாமாக் கடிதம் என வதந்தியாக மாற்றிவிட்டன.
இஜாஸ் பட் உம் ஷகிட் அப்ரிடியை அணித்தலைவராக்க விரும்பியதால் இராஜினாமாக் கடிதம் எனக் கதையை மாற்றிவிட்டார்.
இதற்கெதிராக தனது கையை உயர்த்த யுனிஸ் கான் விரும்பினாலும் அவரது விரலில் முறிவு இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.


திரு.இஜாஸ் பட் இன் வேர்ஷன் : Mr.Butt இன் பெற்றோர்கள் இதைவிட சிறந்த பெயரை அவருக்கு வைத்திருக்க முடியாது. (ஆங்கிலத்தில் எழுதியமையை கவனிக்க.) ஏனென்றால் அணியை மீள கட்டமைக்கும் காலப்பகுதியில் அணி பெற்றுத் தந்த அற்புதமான வெற்றிகளையும், முடிவுகளையும் சிதைத்த இவருக்கு இதைவிட சிறந்த பெயர் வேண்டுமா.
எல்லாவற்றுக்கும் இந்தியாவை நோக்கி விரலைக் காட்டுவதை விட்டுவிட்டு தனது வேலையை தான் ஒழுங்காக செய்திருந்தால் இவையெதுவும் நடந்திருக்காது. அணித்தலைவர் இல்லாமல் அணியைப் பற்றியும், அணியின் பெறுபேறுகளையும் பற்றி அணி வீரர்களோடு அதுவும் முட்டாள், பக்கச்சார்பான ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க இவர் எடுத்த முயற்சிகள் வாசிப்பதற்கும், கேட்பதற்கும் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தருகின்றன.


பாகிஸ்தான் இரசிகர்களது வேர்ஷன்: அதிகாரிகளாலும், ஊடகங்களாலும் செய்திகள் பரப்பப்பட்டு இவை நடப்பவை எமக்கொன்றும் புதிதில்லை. இதில் நல்ல விடயம் என்னவென்றால் இந்தக் கொடுமைகள் ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாலும் அணிவீரர்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்பதும் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் அணியானது மைதானத்தில் சிறப்பாக ஆடும் என்பதும் (குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக) அனைவரும் அறிந்ததே. அணி நிர்வாகத்தை நடத்த இம்ரான் கானை மறுபடியும் கொண்டுவாருங்கள்...


இங்கிலாந்து இரசிகர்களது வேர்ஷன்: கடவுளே! கெவின் பீற்றர்னை கடுப்பாக்குவதற்கு அவரின் முன்னால் வேறு ஒருவரை புகழ்வதற்கு எமக்கு யாருமே இல்லை. அதனால் தான் மைக் ஆதர்ற்றனை உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என வர்ணித்தோம்.
பாகிஸ்தானில் ஏராளமான திறமைகள் இருக்கின்றன, அத்தோடு சர்ச்சைகளும் இருக்கின்றன.
பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரிரண்டு வீரர்களை கொத்திக் கொண்டு போய் எமது இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்கு பதிலாக விளையாடினால் இங்கிலாந்து நாட்டைச் சேராத இங்கிலாந்து அணியொன்றை கட்டியெழுப்பும் எங்கள் கனவு மெய்ப்படும்.


குறிப்பு: இது என்னுடைய சொந்த ஆக்கமல்ல. ஆங்கிலத்தில் நண்பரொருவர் எழுதிய ஆக்கத்தில் தமிழ் வடிவமே இது.
தன்னுடைய ஆக்கத்தை மொழிமாற்றம் செய்து என்னுடைய தளத்தில் வெளியிட அனுமதி தந்த இந்தியாவைச் சேர்ந்த நண்பர் ரமேஷ் இற்கு நன்றிகள் பல.

****************************************************************************

அப்படியே.... இன்று தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவுருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

6 பின்னூட்டங்கள்:

உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் பதிவை அறிய இங்கேசெல்லவும் http://tamil25.blogspot.com/2009/10/blog-post_12.html

ஹா ஹா.. ஜீனியஸ் நகைச்சுவை..

இங்கிலாந்து ரசிகர்களின் வெர்ஷன் தான் மிக அருமை..

//வேந்தன் கூறியது...
உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்களுக்கு நன்றி...

//LOSHAN கூறியது...
ஹா ஹா.. ஜீனியஸ் நகைச்சுவை..

இங்கிலாந்து ரசிகர்களின் வெர்ஷன் தான் மிக அருமை.. //

ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

// ஆகீல் முசம்மில் கூறியது...
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் பதிவை அறிய இங்கேசெல்லவும் http://tamil25.blogspot.com/2009/10/blog-post_12.html //

தொடர்பதிவ காணேல....