க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

1989 ம் ஆண்டு. லிற்றில் மாஸ்ரர் சச்சின் ரெண்டுல்கர் பாகிஸ்தானுக்கெதிராக தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொண்ட காலமது.
வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைக் கூட பெறாத சச்சின் அந்தக் காலகட்டத்தில் பந்துவீச்சில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கெதிராக துடுப்பெடுத்தாட வேண்டிய நிலை.
பாகிஸ்தான் பார்வையாளர்கள் சச்சினை நோக்கி 'குழந்தை வீட்டுக்கு போ! வீட்டுக்குப் போய் பால் குடி' (துட் பிட்ட பச்சா.. கர் ஜாக்கே தூத் பீ) என கேலி செய்தனர்.
அப்போதைய நிலையில் இளம் பந்து வீச்சாராக இருந்த முஸ்தாக் அக்மட்டின் ஓர் பந்து வீச்சுப் பரிமாற்றத்தில் 2 ஆறு ஓட்டங்களை அடித்தார் சச்சின். இதைக் கண்டு எரிச்சலடைந்த தலைசிறந்த லெக் ஸ்பின்னரான அப்துல் காதிர் சச்சினைப் பார்த்து 'ஏன் நீ குழந்தைகளின் பந்துகளுக்கு அடிக்கிறாய்? இயலுமானால் எனது பந்துவீச்சுக்கு அடித்துப் பார்' (பச்சன் கோ கியோன் மர் றாகேகோ? கமெய்ன் பி மார் டீக்கோஷ) என்றார்.
சச்சின் அமைதியாக இருந்தார், தனது துடுப்பு மட்டையை பேச விட்டுவிட்டு. அப்துல் காதிர் கோரிக்கையை வைத்தார். சச்சின் இலகுவாக நிறைவேற்றினார். அந்தப் பந்துப் பரிமாற்றம் இவ்வாறு அமைந்தது. 6, 0, 4, 6, 6, 6. ஒரு சாதனையாளர் பிறந்து விட்டார்.

நீ ஏன் இவ்வளவு பருத்தவனாக இருக்கிறாய் என சிம்பாப்வேயின் எட்டோ பிரென்ட்ஸ் ஐப் பார்த்துக் கேட்டார் கிளெய்ன் மக்ராத். 'ஏனென்றால் உனது மனைவியோடு நான் ஒவ்வொரு முறையும் காதல் செய்யும் போது அவள் எனக்கு பிஸ்கற்றுக்களைத் தருவதால்' என்றார் பிரென்ட்ஸ்.

செளரவ் கங்குலிக்கு பந்து வீசிக் கொண்டிருந்தார் ஷேன் வோண். ஆபத்தில்லாத பந்துகளை ஆடாமல் அப்படியே விட்டுக் கொண்டிருந்தார் கங்குலி.
'ஹேய் மேற்!' கூப்பிட்டார் வோண். 'நீ இவ்வாறு பந்துகளை ஆடாமல் விடுவதைப் பார்க்க பார்வையாளர்கள் வரவில்லை. இந்த மனிதர் (மறுமுனையில் இருந்த சச்சினை சுட்டிக் காட்டி) சில அடிகளை அடிப்பதைப் பார்க்கவே வந்திருக்கிறார்கள்' என்றார்.
சில பந்துப்பரிமாற்றங்களின் பின்னர் வோண் இன் பந்தை அரங்கத்திற்கு வெளியே அடிக்க முனைந்து ஸ்ரம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் கங்குலி.

இங்கிலாந்துக்கெதிரான போட்டியொன்றில் ஷேன் வோண் துடுப்பெடுத்தாட வந்ததும் போல் கொலிங்வூட், வோண் மீது வார்த்தைக் கணைகளைத் தொடுத்தார்.
அப்போது மொன்ரி பனசரின் பந்தொன்றுக்கு ஆறு ஓட்டங்களை அடித்துவிட்டு கொலிங்வூட் பக்கம் திரும்பி சொன்னார் வோண், 'நான் கவனத்தை ஒருமுகப் படுத்த உதவுகிறாய்' என்றார்.

தென்னாபிரிக்காவிற்கெதிரான போட்டியொன்றில் சங்கக்கார, ஷோன் போலக்கைப் பார்த்து அடிக்கடி ஏதோ கூறிக் கொண்டிருந்தார்.
மறுமுனையில் நின்ற பெளச்சர் பொலக்கிடம் சென்று 'கணக்கில் எடுக்காதே! நாய்கள் கத்துகின்றன' என்றார்.
'நாய்கள் கத்துவதில்லை மிஸ்ரர், அவை குரைக்கும்' பெளச்சரிடம் சொன்னார் சங்கக்கார.

தென்னாபிரிக்க அணி விக்கட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த சமயம் அப்போதைய அணித் தலைவரான பொலக் ஆடுகளம் வந்தார். சங்கக்கார தொடங்கினார் 'அங்கே அணித்தலைவர் வருகிறார். அவர் பதட்டமாக இருப்பது போல இருக்கிறது. ஏராளமான அழுத்தங்கள். ஏராளமான எதிர்பார்ப்புக்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்?' என்று சத்தமிட்டார் சங்கக்கார.
தான் முதலாவதாக சந்தித்த ஜெயசூரியாவின் பந்தை தட்ட முனைந்து கிட்த்தட்ட ஜெயசூரியாவிடவே பிடி கொடுத்துவிட்டார். சங்கக்கார திரும்ப கத்தினார் 'போலிங்.. போலிங்... அழுத்தம்... அழுத்தம்...'.
இந்தப் போட்டியில் தான் ஷேன் பொலக் டக்வேர்த் லூயிஸ் கணிப்பை பழையாகச் செய்து தோற்றார்.

நான் யாருமில்லை. யாருமே முழுநிறைவில்லை. ஆகவே நான் முழு நிறைவானவன்.

பயிற்சிகள் ஒருவனை முழுநிறைவாக்குகிறது. ஆனால் யாருமே முழு நிறைவில்லை. ஆகவே ஏன் பயிற்சி?

நான் இப்போது நேரத்தை மிச்சம் பிடித்தால் எப்போது திரும்பப் பெறலாம்?

இதற்கு கீழேயுள்ள கூற்று உண்மையானது.
இதற்கு மேலேயுள்ள கூற்று பொய்யானது.

சில சமயங்களில் உங்களால் வழங்கக்கூடியவற்றையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன், உங்கள் வரவின்மையை.

மதுவை திடீரென கைவிடுவதால் ஏற்படும் விளைவுகளை தடுக்க ஒரே வழி தொடர்ந்து குடிப்பது தான்...

உனது தந்தை ஏழை என்றால் அது உன் விதி. உனது மாமனார் ஏழை என்றால் அது உன் முட்டாள்தனம்.

நான் பிறக்கும் போது அறிவாளி. கல்வி என்னை அழித்து விட்டது.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத் தான் நாம் பிறந்திருக்கிறோம் என்றால் மற்றவர்கள் எதற்காக இங்கே இருக்கிறார்கள்?

பெரிய குழப்பங்களில் ஒன்று.
35ற்கு மேல் பெண்கள் பிள்ளை பெற வேண்டுமா?
இல்லை. 35 பிள்ளைகள் போதும்.

பூமியில் வாழ்வது செலவு கூடியதாக இருக்கலாம்.ஆனால் இது சூரியனைச் சுற்றி வருடாந்த இலவச சுற்றுலாவையும் கொண்டதல்லவா?

உன் எதிர்காலம் கனவுகளில் தங்கியிருக்கிறது. போ! போய் நித்திரை செய்.

புகைப்பிடித்தல் நம்மை மெதுவாகக் கொல்கிறதாம்.
அதனால் என்ன? யாருக்கு வேகமாக இறக்க அவசரம்?

சோம்பல் தான் நமது முதல் எதிரி- நேரு.
நாம் எதிரிகளை நேசிக்க வேண்டும்.- காந்தி.
நான் வேறென்ன சொல்ல முடியும்? சோம்பறியாக இருங்கள்.

ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு நாள் உண்டு.
உன்னுடைய நாளை நீ தவறவிட்டு விட்டாய்.

68.93 வீதமான தரவுகள் அர்த்தமற்றவை.

வரி கட்டுவதற்கும் கட்டாமல் இருப்பதற்குமான வித்தியாசம் 10 வருடங்கள் சிறை.

ஒரே ஒரு படிவத்தை நிரப்பி ஆண்டு முழுவதும் வரி கட்டுவதை வெல்லுங்கள்.

நான் ஏன் பழையவற்றைப் பற்றி நினைத்துக் கவலைப்பட வேண்டும், எனக்கு நினைத்துக் கவலைப்பட எதிர்காலம் இருக்கும் போது?

நான் பிழைகள் செய்ய விரும்புகிறேன், யாராவது அதன் மூலம் பாடம் படிக்க விரும்பும் போது.

தவளைகள் அல்லது தேரைகள் என்பவை எம்மைப் பொறுத்தவரை அசிங்கமானவை.
ஆனால் உலகிலுள்ள எல்லா உயிர்களிலும் அழகு இருக்கிறது தான்.
இதோ இந்தப் படங்களைப் பாருங்கள்.
வண்ணமயமான தவளைகள்...

நாம என்ன தான் பகுத்தறிவு வாதியாக இருக்க விரும்பினாலும் சில விடயங்களில் பகுத்தறிவை நான் கழற்றி வைப்பதுண்டு.
என்னைப் பற்றி சோதிடர் ஒருவர் அக்குவேறு ஆணிவேறாக தகவல்களை தெரிவித்ததால் சோதிடத்தின் மீது ஒரு சிறிய பற்று.
நம்ம காதல் நிலைமை (ஏதாவது கிடைக்குமா எண்டு தான்) எல்லாம் எப்படி இருக்கு எண்டு தேடிற்று இருந்த போதுதான் எனக்கு ஒரு வலைப்பக்க முகவரி கிடைத்தது. அற்புதமான வலைத்தளம்.
சில விடயங்களில் நம்மை மீறிய சக்திகளும் இருக்கின்றன என்பதற்கு அற்புதமான உதாரணம் தான் இந்த வலைத்தளம்.
நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்களேன்...