க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

தனிமை இரக்கம்.

குயிலனாய் நின்னோடு குலவியின் கலளி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்து பின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடைப் புரிந்த விதியையும் நினைத்தால்

பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உற்றுவாள் நாட்களில்

வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயிலையிற் றென்றெவர்! வனுப்பரவுக் கவட்கே!

(1904 ம் ஆண்டு 'விவேகபானு' எனும் பத்திரிகையில் வெளியானது.)
இந்த கவிதைக்க முன்னரே பல கவிதைகளை எழுதியிருந்தாலும் இது தானாம் முதலில் அச்சிலேறிய கவிதை.

ரஜினிகாந் தனது பாட்ஷா படத்தில் சொல்வார்,
'கூட்டம் சேர்த்தவனெல்லாம் ஜெயிக்க முடியாதுன்னு சொன்னாயெல்லா... உண்மை தான்... ஆனா இது சேர்த்த கூட்டம் இல்ல. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.' என்று.

இதே ரஜினிகாந் சிவாஜி படத்தில்,
'கண்ணா! பன்றிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்' என்று.

இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ரஜினிகாந் தன்னைப் பார்த்து தான் பன்றி என்று சொல்வத போலல்லவா இருக்கிறது?

என்ன கொடுமை ஷரவணா இது...

என்ன திடீரென்று எப்போதொ வந்த சிவாஜி பற்றி கதைக்கிறான் என்று யோசிக்க வேண்டாம். நேற்று இலங்கையில் ஒரு தொலைக்காட்சியில் பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்பானது. அது தான்...

கடந்த 24ம் திகதி பெரியார் அவர்களின் நினைவுதினம் என்பதால் பெரியாரைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று யோசித்தேன்.
எனக்கு பெரியாரின் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் பெருத்த ஈடுபாடு உண்டு. ஆனால் பெரியாரின் கொள்கைகள் மதிக்கப்படுவதில்லையே என்ற எண்ணம் வந்தது. அது ஏன் என யோசித்த பொழுது எனக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த பதிவு எண்ணமாக வந்தது.

சில அறிஞர்களை நாங்கள் மதிக்குமளவிற்கு அவர்களது கருத்துக்களுக்கோ, அவர்களது கொள்ளைகளுக்கோ நாம் மதிப்பு வழங்குவதில்லை.
அவர்களை நாம் மதிப்பதில் சிறிதளவிற்கு கூட அவர்களது கொள்கைகள் மதிக்கப்படுவதில்லை.
இதில் முதலாவது இடத்தில் பெரியாரை குறிப்பிடலாம்.
பெரியார், பெரியார் என்று பெரியாரிடத்தில் பலருக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரது கொள்கைகள் அந்தளவுக்கு மதிக்கப்படுகின்றனவா???

பெரியார் ஒருமுறை இலங்கை வந்திருந்த பொழுது கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இரவு பத்து மணிக்கு ஒரு கலந்துரையாடல் அல்லது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
அங்கு குழுமியிருந்தவர்கள் வெறுமனே 30 பேர் தானாம். அவர்கள் முன்பு பெரியார் அவர்கள் 3 மணித்தியாலங்கள் உரை நிகழ்த்தினாராம்.
அவ்வளவு நேரம் உரையாற்றி விட்டு அங்கிருந்தவர்களை பார்த்து கூறினாராம்,
'இவ்வளவு சிறிய தொகையினர் மத்தியில் மூன்று மணிநேரம் பேசியது பற்றி நீங்கள் எனக்கு பைத்தியக்காரன் பட்டம் சூட்டலாம். நூற்றுக்கு நூறாக மக்கள் வைத்திருக்கு நம்பிக்கைக்கும் சம்பிரதாயங்களுக்கும் சமூக அமைப்புக்களுக்கும் எதிரான கொள்கையை முன்வைத்திருப்பதால் இக்கொள்கையை இங்கே கூடியிருக்கும் உங்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் நோக்கத்துடன்தான் இவ்வளவு நேரமாக எனது கொள்கையை விளக்கியிருக்கிறேன்.' என்றாராம்.
பெரியார் அவர்கள் இவ்வளவு கஷ்ரப்பட்டு பரப்ப நினைத்த கொள்கைகளை ஏன் நாம் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை???

பெரியாரை நாம் ஏற்றுக் கொண்ட அளவுக்கு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?
தமிழர்கள் மத்தியில் கடவுள், சாதி, மதம், தேசியம், மூட நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம் என்று பெரியார் எதிர்த்தவை இப்போது இல்லையா?
பெரியாரை ஏற்றுக் கொண்ட அளவுக்கு நாம் ஏன் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?
பெரியாரின் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றால் அவர் மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டார்?

நகைச்சுவை சொல்வேன் என எதிர்பாத்திருந்தால் மன்னிக்கவும்...
ஆனால் அதைவிட பெறுமதியான நகைச்சுவை இது.


சிலம்பாட்டம் திரைப்பட பாடல் ஒன்றின் சில வரிகள்...
சிலம்பரசனுக்கும் இந்த வரிகளுக்கும் நம்பந்தம்???


கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா...
(ஊருக்கே தெரியும் சிம்பு உங்கள பற்றி...)

தடை பல பெற்றவன்டா...
தலைக்கனம் விட்டவன்டா...

தப்பு தண்டா எப்போதுமே பண்ணாதவன்டா...

வீர மகன் தான் இவன் வித்தை எல்லாம் கற்றவன்டி...
சூர மகன் தான் மனம் சுத்தமான உத்தமன்...

என்ன பெத்தவங்க குத்தம் குறை சொன்னதில்ல...
அவங்க போட்டு வச்ச கோட்ட தாண்டி நின்னதில்ல...
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை...
இந்த மண்ணுக்குள்ள மானத்த நான் விட்டதில்ல...

என்ன கொடுமை ஷரவணா இது...
என் தலய எங்க போய் முட்டிக் கொள்றது???