க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உன்னிடமிருப்பதை உலகத்திற்கு காட்டு...

உலகம் உன்னை நேசிக்கும்...

இதைச் சொன்னவர்...

 

 


விடைக்கு கீழே இழுக்குக...

 

 


சொன்னவர்...
 
 
 

நமிதா...
(ஹி ஹி ஹி ஹி...)

இலங்கையில் லங்காபெல் என்றொரு CDMA வகை இணைப்புக்களைத் தரும் தொலைபேசி வழங்குனர் இருக்கின்றது. முற்றுமுழுதாக இலங்கைக்கு சொந்தமான தொலைபேசி என சொல்லப்படுவதுண்டு. ஒப்பீட்டளவில் மற்றைய CDMA , கைப்பேசி இணைப்புக்களை விட இலாபகரமானது என கருதப்படும் இத் தொலைபேசி நிறுவனத்தினர் இப்போது வெளிநாட்டிலிருந்து எங்களுக்கு வருகின்ற உள்வரும் அழைப்புகளுக்கு எங்களுக்கு பணம் தருகின்றனர். ஒரு நிமிட வெளிநாட்டு உள்வரும் அழைப்பு பெறப்படின் எமக்கு 50 சதம் எங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
உதாரணமாக எங்களுக்கு 30 நிமிட உள்வரும் அழைப்பு பெறப்படின் எமது கணக்கில் ரூபா 15 வரவு வைக்கப்படும்.
எவ்வளவு பணம் என்பது இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டால் உள்வரும் அழைப்புகளுக்கு எங்களிடம் பணம் பெறும் நிலையில் எங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எங்களுக்கு பணம் தருதல் என்பது அதிசயமன ஒன்று தானே…
(அவர்களது நோக்கம் எதுவாக இருப்பினும் அதை விட்டுவிட்டால் எங்களுக்கு நன்மை என்பது சிறப்பானது
 தானே…)

என்னை அடிக்கடி உண்மைக் காதலன் என்பாள்…
சினிமா அடிக்கடி பார்த்து,
'எங்கிருந்தாலும் வாழ்க' என்பது தான்
உண்மைக் காதலனின் வேலை என நினைத்தாளோ என்னவோ…

உன் புன்னகை ஆயிரம் கதை சொன்னாலும்
உன் மௌனம்  சொல்லும் கதையையே கவிதை என்பேன்…
கவிதைகளுக்கு வன்முறை தெரியும்-
என அறிந்ததும் உன் கண்களைப் பார்த்துத் தான்…

தமிழில் உங்களுக்கு சரளமாக எழுத வரும் என்று நினைக்கிறீர்களா?
கீழே உள்ள இடைவெளிகளை 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதில் ஒன்றை மாத்திரம் வைத்து நிரப்புங்கள் பார்க்கலாம்…

………, நான் ஒரு கெட்டவன் தான்.
………, நான் வாரமொருமுறை தான் குளிப்பேன்.
………, இந்த வலைப்பூ மிகச்சிறப்பாக உள்ளது.

(ஹி.. ஹி.. ஹி.. எல்லாவற்றிலும் விட இறுதி வினா தான் அதிகமாக பாதித்திருக்கும் என?. 'இது ரொம்ப பழசுடா' என்ற சொல்ல நினைக்கிறீர்களா?)

அனல் வெயிலில் உன்னோடு வந்தேன்…
வெயில் சுடவில்லை…
கடும் மழையில் உன்னோடு வந்தேன்…
மழை என்னை நனைக்கவில்லை…
உன் மேல் நான் கொண்ட காதலின் மகிமை
என நினைக்காதே,
நான் அப்போது குடை பிடித்திருந்ததை மறந்துவிட்டு…

 அனைவருக்கும் வணக்கம்…
நிறைய நாளுக்குப் பிறகு எழுதுகிறேன்…

நான் நினைக்கிறன் எல்லோருக்கும் இத மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கும் என்று…
எனக்கு கொஞ்ச நாளுக்கு முதல் ஒரு நண்பர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்…
அதில்,
'இன்று திருப்பதி கடவுளின் பிறந்த நாள்… இந்த குறுஞ்செய்தியை 11 பேருக்கு முன்னகர்த்தவும்… முன்னகர்த்தினால் நீங்கள் நினைக்கும் எல்லாமே நடக்கும்… மாறாக அந்த செய்தியை அலட்சியம் செய்தால் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா காரியங்களும் தோல்வியிலேயே முடிவடையும்…; என்று இருந்தது.
அவனிடம் இதைப் பற்றி கேட்டதற்கு தனக்கு இந்த செய்தியை தனக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பியதாகவும், அந்த 11 பேரில் ஒருவராக எனக்க அனுப்பியதாகவும் சொன்னான். நான் அவனிடம் கேட்டேன் 'திருப்பதி கடவுள் எப்படா பிறந்தார்? ஏன் இப்பிடியே இருக்கிறீங்கள்?' என்ற. அவன் சொன்னான், 'எனக்கு இதப் பற்றி தெரியாது. கடவுள் விஷயம்.. ஏன் வீணா றிஸ்க் எடுப்பான்?' என்று.
நான் அவனிடம் கேட்டேன் 'சரி.. உனக்கு இந்த மெஸேஜ அனுப்பிளானின்ர நம்பர தரேலுமா?' என்று.
அவனும் தந்தான்..
இது நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர் எனக்கு இன்னொரு குறுந் தகவல் கிடைத்தது. பிள்ளையார் போன்ற உருவமுடைய படத்தை குறியீடுகள் மூலம் வரைந்து விட்டு மேலே குறிப்பிட்ட மாதிரியான ஒரு தகவல் கிடைத்தது. நான் அந்த தகவலில் 10 பேருக்கு அனுப்பவும் என்று இருந்ததை 150 பேருக்கு அனுப்பவும் என்று மாற்றி விட்டு நண்பருக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவரின் இலக்கத்திற்கு அனுப்பி விட்டேன்…
எப்படி என் இராஜதந்திரம்…???????
(ஹி ஹி ஹி ஹி…………………!!!)

மின்னஞ்சலில் கிடைத்தது...
அனுப்பியவரின் விபரம் தரப்பட்டுள்ளது...
**********************************************************


எயிட்ஸ் நோய் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் அஞ்சி ஓடும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் எயிட்ஸ் நோயாளியொருவரை துணிந்து திருமணம் செய்துள்ளார்.

முஹம்மத் அஸிம் அஷ்ரப் என்ற இந்த எயிட்ஸ் நோயாளி, எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க எடுத்துக் கொண்ட மும்முர பிரசார நடவடிக்கைகளைப் பார்த்து கவரப்பட்டே அவர் மீது காதல் கொண்டதாக ருபினா அஷ்ரப் என்ற மேற்படி 30 வயது மதிக்கத்தக்க பெண் தெரிவித்தார்.

அஸிம் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விபரம் குறித்து அவரது உறவினரான தனது நண்பி ஒருவர் மூலம் ருபினா அறிந்தார்.அச்சமயம் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸிமை ருபினா நேரில் சென்று பார்த்தார். அதற்கு முன் ருபினா தனது வாழ்க்கையில் எயிட்ஸ் நோயாளி எவரையும் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலவீனமடைந்திருந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காத அஸிமின் நிலை அவரைக் கவர்ந்தது.

தனது காதல் தொடர்பில் ருபினா "டெய்லி டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ""அவரது தைரியம் என்னைப் பாதித்தது. ஆனால், அவரை எதிர்காலத்தில் காதலிப்பேன் என்றோ, அவரைக் திருமணம் செய்வேன் என்றோ அந்நேரத்தில் நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், அவர் நல்ல ஆராக்கியம் பெறவேண்டும் என விரும்பினேன். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் அவருக்கு உதவுவதாக வாக்குறுதியளித்தேன்'' என்று கூறினார்.

தொடர்ந்து முல்தானில் அஸிம், எயிட்ஸ் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டபோது ருபினா அவரை மீண்டும் சந்தித்தார்.

"அன்று அவரைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவர் முன்னைய நோயாளித் தோற்றம் மாறி அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் தோன்றினார்.ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் பணியில் நான் அவருக்கு உதவ ஆரம்பித்தேன்" என ருபினா தெரிவித்தார்.

"ஒருநாள் நான் அவரிடம் எனது காதலைத் தெரிவித்தேன். அஸிம் எனது முடிவு பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி மறுத்தார். விடயத்தை கேள்விப்பட்ட இருவரது குடும்பத்தவருக்கும் பெரும் அதிர்ச்சி. எனினும், பெரும் சிரமத்தின் பின் எனது குடும்பத்தவர்கள் எனது காதலுக்கு இணங்கினர். ஆனால், அஸிமோ திருமணத்தை தவிர்க்க எவரிடமும் கூறாமல் கராச்சி நகருக்கு பயணமானார்.ஆனால் நான் மனம் தளராது விடாது முயற்சி செய்ததன் பயனாக, கடைசியில் அவர் எனது காதலை ஏற்று என்னைத் திருமணம் செய்ய இணங்கினார்" என ருபினா தெரிவித்தார்.

அஸிமுக்கு 19 வயதாக இருக்கும்போது அவருக்கு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தின் மூலம் இந்த எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமண பந்தத்தில் இணைந்துள்ள அஸிமும் ருபினாவும் பரிசோதனைக் குழாய் மூலம் குழந்தையொன்றைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.
Posted by எம்.ரிஷான் ஷெரீப்

--
http://www.mrishanshareef.tk/
http://www.rishanshareefpoems.tk/
http://www.rishanshareefarticles.tk/
http://www.myphotocollections.tk/
http://www.rishanworldnews.tk/
http://www.picturestothink.tk/
http://www.shortstories.tk/
http://www.rishan.tk/

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகன்...
கதாநாயகி யாருங்கோ...?

ஜனவரி...
1- அலோக் கபாலி - பங்களாதேஷ்.
  முஸ்பிகூர் றகீம்  - பங்களாதேஷ்.
11- ராகுல் ட்ராவிட் - இந்தியா.
13- கமரன் அக்மல் - பாகிஸ்தான்.
15- சைட் பொட்டம் - இங்கிலாந்து.
27- சமிந்த வாஸ் - இலங்கை.
   டானியல் விற்றோரி- நியூசிலாந்து.

பெப்ரவரி...
1- கிரேம் சிமித் - தென்னாபிரிக்கா.
  சொய்ப் மலிக் - பாகிஸ்தான்.
  பீற்றர் புல்ரன் - நியூசிலாந்து.
9- கிளெய்ன் மக்ராத்- அவுஸ்ரேலியா.
17- ஏ.பி.டி வில்லியஸ் - தென்னாபிரிக்கா.
23- கேர்ஸல் கிப்ஸ் - தென்னாபிரிக்கா.
24- மொகமட் சமி - பாகிஸ்தான்.
25- ஸ்ருவர்ட் மக்கில் - அவுஸ்ரேலியா.
26- மக் பிறயர்- இங்கிலாந்து.
28- நவீட் உல் ஹசன் - பாகிஸ்தான்.

மார்ச்...
1- சகிட் அப்ரிடி - பாகிஸ்தான்.
2- பிறையன் லாரா- மேற்கிந்தியத் தீவுகள்.
  அன்ட்ரூ ஸ்ரோஸ் - இங்கிலாந்து.
3- இன்சமாம் உல் ஹக் - பாகிஸ்தான்.
5- டெரன் லெக்மான் - அவுஸ்ரேலியா.
6- பிரட் ஹொக் - அவுஸ்ரேலியா.
7- உபுல் சந்தன - இலங்கை.
8- ரொஸ் ரெய்லர் - நியூசிலாந்து.
9- பார்த்திவ் பட்டேல் - இந்தியா.
13- நுவான் சொய்சா - இலங்கை.
14- ரெற்றென்டா தைபு - சிம்பாப்வே.
   சிக்கும்புரா - சிம்பாப்வே.
16- ஹீத் ஸ்ரீக் - சிம்பாப்வே.
19- அஸ்லி கைல்ஸ் - இங்கிலாந்து.
   றங்கன ஹேரத் - இலங்கை.
20- கௌசல்ய லொக்குவாராய்ச்சி - இலங்கை.
22- ஷோன் ரெய்ற் - அவுஸ்ரேலியா.
26- அவிஸ்க குணவர்த்தன - இலங்கை.
27- மஹேல ஜெயவர்த்தன - இலங்கை.
31- ஹசிம் அம்லா - தென்னாபிரிக்கா.

ஏப்ரல்...
1- ஸரீபன் பிளமிங் - நியூசிலாந்து.
2- மைக்கல் கிளார்க் - அவுஸ்ரேலியா.
6- பிளங்கற் - இங்கிலாந்து.
11- இயன் பெல் - இங்கிலாந்து.
14- உமர் குல் - பாகிஸ்தான்.
17- முத்தையா முரளிதரன் - இலங்கை.
19- அஸ்லி கைல்ஸ் - இங்கிலாந்து.
24- ஷக்லைன் முஸ்ராக் - பாகிஸ்தான்.
25- மொன்ரி பனேசர் - இங்கிலாந்து.
29- ஆஷிஷ் நெக்ரா - இந்தியா.
30- அ. நொப்கே - அவுஸ்ரேலியா.

மே...
3- பில் ஜக்ஸ் - அவுஸ்ரேலியா.
4- ரவி போப்பரா - இங்கிலாந்து.
8- மைக்கல் பெவன் - அவுஸ்ரேலியா.
26- போல் கொலிங்வூட் - இங்கிலாந்து.
27- மைக் ஹசி - அவுஸ்ரேலியா.

யூன்...
4- திலின கண்டம்பி - இலங்கை.
7- ஷேன் பொன்ட் - நியூசிலாந்து.
9- அன்ட்ரூ சைமன்ட்ஸ் - அவுஸ்ரேலியா.
10- அல்பி மோக்கல் - தென்னாபிரிக்கா.
14- டிப்பன்னர் - தென்னாபிரிக்கா.
15- அப்துர் ரஷாக் - பங்களாதேஷ்.
17- ஷேன் வற்சன் - அவுஸ்ரேலியா.
20- தௌபிக் உமர் - பாகிஸ்தான்.
23- ராம் நரேஷ் சர்வான் - மேற்கிந்தியத் தீவுகள்.
24- ஸ்ரூவர்ட் புரோட் - இங்கிலாந்து.
25- ஸ்ரீவ் ரிக்கலோ - கென்யா.
27- கெவின் பீற்றர்சன் - இங்கிலாந்து.
   டேல் ஸ்ரைன் - தென்னாபிரிக்கா.
30- சனத் ஜெயசூரிய - இலங்கை.

யூலை...
3- ஹர்பஜன் சிங் - இந்தியா.
6- மக்காயா (இன்)ரினி - தென்னாபிரிக்கா.
7- மகேந்திரசிங் டோனி - இந்தியா.
  மொகமட் அஸ்ரபுல் - பங்களாதேஷ்.
8- சௌரவ் கங்குலி - இந்தியா.
9- ஷோன் மார்ஷ் - அவுஸ்ரேலியா.
10- ஸ்கொட் ஸ்ரைறிஸ் - நியூசிலாந்து.
14- ஜெரன் ஜோன்ஸ் - இங்கிலாந்து.
15- டேவிட் ஹசி - அவுஸ்ரேலியா.
   அன்ட்ரூ நெல் - தென்னாபிரிக்கா.
16- ஷோன் பொலக் - தென்னாபிரிக்கா.
19- டில்கார பெர்னான்டோ - இலங்கை.
28- ஜேக்கப் ஓரம் - நியூசிலாந்து.
30- ஜேம்ஸ் அன்டர்சன் - இங்கிலாந்து.
31- அன்ட்ரூ ஹோல் - தென்னாபிரிக்கா.

ஓகஸ்ற்...
13- சொகைப் அக்தர் - பாகிஸ்தான்.
16- சிவ் நரேன் சந்தர்போல் - மேற்கிந்தியத் தீவுகள்.
17- ஹபிபுல் பஷார் - பங்களாதேஷ்.
18- கமரன் வைற் - அவுஸ்ரேலியா.
21- சைமன் கற்றிச் - அவுஸ்ரேலியா.
27- மொகமட் யூசுப் - பாகிஸ்தான்.
28- லசித்த மலிங்க - இலங்கை.

செப்ரம்பர்...
4- லான்ஸ் குழூஸ்னர் - தென்னாபிரிக்கா.
5- எம்.ராமபிரகாஷ் - இங்கிலாந்து.
7- பர்வேஷ் மகரூப் - இலங்கை.
11- முரளி கார்த்திக் - இந்தியா.
12- நதன் பிரக்கன் - அவுஸ்ரேலியா.
13- ஷேன் வோர்ன் - அவுஸ்ரேலியா.
15- நதன் அஸ்லே - நியூசிலாந்து.
17- பி. மக்கெய்ன் - அவுஸ்ரேலியா.
21- கிறிஸ் கெய்ல் - மேற்கிந்தியத் தீவுகள்.
22- திலான் சமரவீர - இலங்கை.
27- பிரன்டன் மக்கலம் - நியூசிலாந்து.
   லக்ஸ்மிபதி பாலாஜி - இந்தியா.
28- ஸ்ருவேட் கிளார்க் - அவுஸ்ரேலியா.

ஒக்ரோபர்...
1- தோர்ண்லி - அவுஸ்ரேலியா.
2- ஜஸ்ரின் கெம்ப் - தென்னாபிரிக்கா.
5- மஷ்ரபி மோர்ற்றஷா - பங்களாதேஷ்.
7- ஷகீர் கான் - இந்தியா.
  சல்மான் பட் - பாகிஸ்தான்.
9- பிரசன்ன ஜெயவர்த்தன - இலங்கை.
14- திலகரட்ண டில்ஷான் - இலங்கை.
   கௌதம் கம்பீர் - இந்தியா.
16- ஜக்;ஸ் கலிஸ் - தென்னாபிரிக்கா.
17- அணில் கும்ப்ளே - இந்தியா.
   மொகமட் ஹபீஸ் - பாகிஸ்தான்.
20- விரேந்தர் ஷெவாக் - இந்தியா.
21- டேமியன் மார்ட்டின் - அவுஸ்ரேலியா.
22- ஒவைஷ் ஷா - இங்கிலாந்து.
23- ஸ்ரீவ் ஹார்மிசன் - இங்கிலாந்து.
   பிரட் ஹடின் - அவுஸ்ரேலியா.
24- ஜேம்ஸ் ஹோப் - அவுஸ்ரேலியா.
25- ரசல் ஆர்னல்ட் - இலங்கை.
27- குமார் சங்கக்கார - இலங்கை.
   இர்பான் பதான் - இந்தியா.
29- மத்தியூ ஹெய்டன் - அவுஸ்ரேலியா.
   மைக்கல் வோன் - இங்கிலாந்து.
30- டுமிற்ரி மஸ்கரின்கஸ் - இங்கிலாந்து.

நொவம்பர்...
1- வி.வி.எஸ்.லக்ஸ்மன் - இந்தியா.
2- மிற்சல் ஜோன்ஸன் - அவுஸ்ரேலியா.
7- டுவைன் பிராவோ - மேற்கிந்தியத் தீவுகள்.
  ஜேம்ஸ் பிராங்ளின் - நியூசிலாந்து.
8- பிரட் லீ - அவுஸ்ரேலியா.
11- லூ வின்சன்ற் - நியூசிலாந்து.
14- அடம் கில்கறிஸ்ற் - அவுஸ்ரேலியா.
21- ஜஸ்ரின் லாங்கர் - அவுஸ்ரேலியா.
24- நீல் மக்கன்சி - தென்னாபிரிக்கா.
25- ஜாவிற் ஓமர் - பங்களாதேஷ்.
29- யுனிஸ் கான் - பாகிஸ்தான்.

டிசம்பர்...
1- மொகமட் கைவ் - இந்தியா.
2- அப்துல் ரஷாக் - பாகிஸ்தான்.
3- மார்க் பவுச்சர் - தென்னாபிரிக்கா.
4- அஜித் அகர்கர் - இந்தியா (நான் இப்போது அஜித் அகர்கரின் பரம இரசிகன். நான் டிசம்பர் 4 இல் பிறப்பேன் என்று   தெரிந்து வைத்துக் கொண்டு 12 வருடங்களுக்கு முன்னரே பிறந்து விட்டார் என்று இப்போது தான் தெரியும்.)
6- அன்ட்ரூ பிளின்ரொவ் - இங்கிலாந்து.
12- யுவ்ராஜ் சிங் - இந்தியா.
14- பிரன்டன் நாஷ் - அவுஸ்ரேலியா.
16- டனிஷ் கனேரியா - பாகிஸ்தான்.
19- றிக்கி பொன்ரிங் - அவுஸ்ரேலியா.
21- சஜித் மக்மூட் - இங்கிலாந்து.
25- மார்க்கஸ் ட்ரெஸ்கோத்திக் - இங்கிலாந்து.
   அலிஸ்ரயர் குக் - இங்கிலாந்து.
   சைமன் ஜோன்ஸ் - இங்கிலாந்து.
29- ஷக்லைன் முஸ்ராக் - பாகிஸ்தான்.
   பிரட் ஹொட்ஜ் - அவுஸ்ரேலியா.
31- மத்தியு ஹொகாட் - இங்கிலாந்து.

கிறிக்கெற்றில் 'innings' என்பதற்குரிய ஒருமைப்பதமும் 'innings' ஏ ஆகும்.
'inning' என்ற சொல் பேஸ் போல்(Base ball) என்ற விளையாட்டில் மட்டும் பயன்படுத்தப்படும்.

கிறிக்கெற்றில் 'றபிற்' (Rabbit) என அழைக்கப்படுபவர் குறைவான துடுப்பெடுத்தாடும் வலிமையுள்ள வீரர் ஆவார். பொதுவாக பந்து வீச்சாளராக இருப்பார். எனினும் சில வேளைகளில் இலக்கு காப்பாளர்களும் இந்த வகையில் அடக்கப்படுவதுண்டு.
'பெரற்'(ferret) என அழைக்கப்படுபவர் 'றபிற்' என்று அழைக்கப்படுபவரிலும் பார்க்க குறைவான துடுப்பெடுத்தாடும் திறமை படைத்தோர் ஆவர். பெரற் என அழைக்கப்பட காரணம் 'றபிற் என அழைக்கப்படுபவரின் பின்னால் (துடுப்பெடுத்தாட) செல்பவர் என்பதால் ஆகும். ஏனென்றால் 'பெரற்' என்பது முயல்களை வேட்டையாடும் ஒரு வகை பிராணி ஆகும். இப்பிராணி முயலை வேட்டையாடுவதற்காக முயலின் பின்னால் செல்வதை நினைவுபடுத்தி இப்பெயர் வழங்கப்படும்.
எனினும் றபிற்,பெறற் போன்ற சொற்கள் கிறிக்கெற் விதியில் இல்லை.

Hoik (கொய்க்) என்பது குறைந்த கடடுப்பாடோடு அல்லது கட்டுப்பாடு இன்றி பந்தை முடியுமானளவு பந்தை பலத்துடன் அடித்தல்.
Agricultural Shot: என்பது குறைந்த திறமையோடு விளையாடப்பட்ட ஒரு அடி ஆகும்.

ஓட்ட எண்ணிற்கு முன்னால் வீழ்த்தப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை இடும் முறை (உதாரணமாக 2 இலக்கு இழப்பிற்கு 100 ஓட்டங்கள் என்பதை 2/100) அவுஸ்ரேலியா நாட்டிற்கு உரியதாகும்.
ஓட்ட எண்ணிக்கையின் பின்னால் இழக்கப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை இடும் முறை ஏனைய நாடுகளுக்குரிய முறை ஆகும்.(100/2)

போட்டியில் துடுப்பெடுத்தாடும் அணியின் சார்பாக களமிங்கும் இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாவர்.(openers)
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பொதுவாக அணியின் விசேடித்த துடுப்பாட்ட வீரர்களாக இருப்பர். ஏனெனில் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களில் பந்தானது அதிகம் திரும்பும் தன்மை கொண்டதாக காணப்படும், அத்தோடு அதிகம் மேலெழும்பும் தன்மை கொண்டதாக காணப்படும். ஏனெனில் ஆரம்ப நிலைகளில் பந்தானது இறுக்கமாகவும் புதியதாகவும் மினுங்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படும்.. எனவே தமது ஆட்டத்தை காப்பாற்றி கொள்வதோடு அணிக்கு ஓட்டங்களை பெற்று ஓட்ட விகிதத்தை கௌரவாக பேணினால் மட்டுமே ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் அழுத்தமெதுவுமின்றி ஓட்டங்களை பெற முடியும். எனினும் ஆரம்ப பந்து பரிமாற்றங்களில் களத்தடுப்பு மட்டுப்பாடுகள் காணப்படுவதால் 4 ஓட்டங்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு அடுத்து களமிறங்குபவர் முதலாவது இறக்க வீரர்(one down) எனப்படுவார். முதலாவது இறக்க வீரருக்கு அடுத்து களமிறங்குபவர் இரண்டாவது இறக்க வீரர்(two down) எனப்படுவார். 1 ஆவது மற்றும் 2 ஆவது இறக்க வீரர்கள் பொதுவாக அணியின் பிரதான துடுப்பாட்ட வீரர்களாக இருப்பர். ஆரம்ப இலக்குகள் விரைவாக சரிந்தால் அணியை காப்பாற்றும் பொறுப்பு இவர்களுடையது.

களத்தடுப்பு செய்யும் அணி சார்பாக முதலிரண்டு பந்துப் பரிமாற்றங்களையும் வீசும் வீரர்கள் ஆரம்ப பந்து வீச்சாளர்கள்(open bowlers) ஆவர். மூன்றாவதாக பந்து வீசுபவர் முதலாவது மாற்ற பந்து வீச்சாளர்(1st change bowler) எனப்படுவார். நான்காவதாக பந்து வீசுபவர் இரண்டாவது மாற்ற பந்து வீச்சாளர்(2nd change bowler) எனப்படுவார்.
ஆரம்ப பந்து வீச்சாளர்கள் பந்தை திருப்பும் வல்லமையை கொண்டிருத்தல் அணிக்கு சாதகமாக இருக்கும்.

ஆரம்ப பந்து வீச்சாளர்கள் வேகப் பந்து வீச்சாளர்கள் வேகப் பந்து வீச்சாளர்களாக காணப்படுவர். ஏனெனில் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களில் பந்து வழுக்கும் தன்மை பொண்டதாக காணப்படுமாதலால் பந்தை இறுக்கமாக பற்றி சுழற்றுவது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானது. அத்தோடு சுழற்பந்து வீச்சுக்கள் இலகுவாக உயர்த்தி அடிக்கக் கூடியனதானதால் (காரணம் வேகம் குறைவு) எல்லைக் கோடுகளில் களத்தடுப்பு அவசியம், ஆனால் ஆரம்ப நிலைகளில் களத்தடுப்பு கட்டுப்பாடு காணப்படுவதால் எல்லைக்கோடுகளில் அதிகமான களத்தடுப்பாளர்கள் களத்தடுப்பில் ஈடுபடல் சாத்தியமற்றது.


துடுப்பாட்ட அடிகள்...(Batting shots)
துடுப்பாட்ட அடிகள் ஆடும் போது பந்து விழும் இடத்திற்கு கிட்டவாக கால்கள் வைக்கப்பட்டு துடுப்பு கால்களுக்கு அருகில், அத்தோடு கால்களுக்கு முன்னால் வைத்து ஆடப்படும்.

தடுத்தாடுதல்-(blocking)
 கால்களை வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வைத்தல்.
 இது இரண்டு வகைப்படும்.
 1. முன் தடுத்தாடல்-(forward defense)
  கால்களை முன்னோக்கி வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வைத்தல்.
  இது இடை உயரத்திற்கு கீழ் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்       முறையாகும்.
 2. பின் தடுத்தாடல்-(backward defense)
  கால்களிரண்டையும் பின்னோக்கி வைத்து சிறிது கால் விரல் நுனியில் நின்று      தடுத்தாடல். இது இடை உயரத்திற்கு மேல் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்     முறையாகும்.

ட்ரைவ்-(drive)
 கால்களை வைத்து துடுப்பால் பந்தை முன்னோக்கி அடித்தல் ஆகும். இங்கு கால்களுக்கு அருகில் துடுப்பு   காணப்படும்.
 இங்கு முக்கியமான விடயம் அடித்த பின் பந்தானது தரையை ஒட்டியே செல்லும்.
 இது பிரதானமாக இரண்டு வகைப்படும்.
 1. முன் ட்ரைவ்-(fronfoot drive)
  கால்களை முன்னோக்கி வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வர முன்னோக்கி அடித்தல்..
  இது இடை உயரத்திற்கு கீழ் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்       முறையாகும்.
  அடிக்கும் பந்து செல்லும் இடத்தை பொறுத்து இது 4 வகைப்படும்.
  1. கவர் ட்ரைவ்- (cover drive)கவர் திசைக்கு செல்வது.
  2. ஒன் ட்ரைவ்-(on drive) கால்த் திசையில் செல்வது.
  3. ஓவ் ட்ரைவ்-(off drive)துடுப்பாட்ட வீரரின் வலது புறத்தில் செல்வது.
  4. ஸ்ரெயிட் ட்ரைவ்-(straight drive) பந்து வீச்சாளர் ஓடி வரும் பகுதிக்கூடாக அதாவது மிட்    ஓவ் இற்கும்(mid-off) மிட் ஓனிற்குமிடையில்(mid-on) செல்வது.
 2.பின் ட்ரைவ்-(backfoot drive)
  கால்களிரண்டையும் பின்னோக்கி வைத்து சிறிது கால் விரல் நுனியில் நின்று அடித்தல்.
  இது இடை உயரத்திற்கு மேல் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும் முறையாகும்.
  இதுவும் மேற்கூறியவாறே 4 வகைப்படும்.


கட் அடி-(cut shot)
 வலது புறத்தில் சற்று அகலமாக செல்லும் பந்துகளை பின்னங்காலை வலது புறத்தில் வைத்து தலையை பந்தை நோக்கி முன்னோக்கி செலுத்தி அடித்தல். இந்த அடியானது கவர் பிரதேசத்திற்கும் ஹலி(gully) பிரதேசத்திற்குமிடையில் செல்லும்.

புள் அடி-(pull shot)
 உயர்ந்து உடம்பை நோக்கி வரும் பந்துகளை இடது மூலைப்பகுதியூடாக(square leg) மட்டையை கிடையாக அடித்து ஆடுதல்.

குக் அடி-(hook shot)
 புள் அடியைப் போன்றது. எனினும் சிறிது உயரம் கூடிய பந்துகளை பொதுவாக ஆறு ஓட்டங்களை  எதிர்பார்த்து அடிக்கப்படுவது.

ஸ்வீப் அடி-(sweep shot)
 சுழற்பந்து வீச்சை முன்னங்காலை முன்னே வைத்து முன்னங்காலை மடித்து பின்னங்கால் முட்டியில்  இருந்தவாறு மட்டையை கிடையாக டீப் ஸ்கூயார் லெக்(deep square leg) பகுதியை நோக்கி அடிக்கப்படுவது.

முன் தடுத்தாடல், பின் தடுத்தாடல், முன் ட்ரைவ், பின் ட்ரைவ், கட் அடி, புள் அடி, ஸ்வீப் அடி என்பன கிறிக்கெற்றின் ஆரம்ப அடிகள்(basic shots) அல்லது பிரதான அடிகள் எனப்படும்.

இவற்றை தவிர
 லெக் கிளான்ஸ்(leg glance), திருப்பல் அடி(reverse sweep) என்பனவும் உண்டு.
 லெக் கிளான்ஸ் என்பது பந்தை இடது புறம் நோக்கி மெதுவாக திருப்பி விடுதல் ஆகும்.
 திரும்பல் அடி என்பது ஸ்வீப் அடிக்கு வைப்பது போல கால்களை வைத்து விட்டு மட்டையை திருப்பி கவர்  அல்லது பொயின்ற் திசை நோக்கி அடித்தல் ஆகும்.
இவை வரையறுக்கப்படக் கூடிய அடிகளாகும்.
இவற்றை தவிர வேறு அடிகளும் உண்டு. இவ்வகை அடிகள்(குறுக்கு அடிகள்- cross shots) போட்டி இறுதிப் பந்துப் பரிமாற்றங்களிலோ அல்லது 'றபிற்(rabbit)', 'பெரற்(ferret)' என அழைக்கப்படும் குறை திறனுடைய வீரர்களால் ஆடப்படும். இங்கு கால்கள் வைக்கப்படும் இடத்துக்கும் அடிக்கப்டும் திசைக்குமிடையில் எவ்வித சம்பந்தமும் காணப்படாது.


பவர் பிளே.....(power play)

பவர் பிளே என்பது களத்தடுப்பு கட்டுப்பாடுகளுக்கானது அகும்.
3 வகை பவர் பிளே கள் உண்டு.
1 ஆவது பவர் பிளே-
 1ஆவதிலிருந்து 10 ஆவது பந்துப் பரிமாற்றங்கள் வரை வீசப்படும்.
 2 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க அனுமதிக்கப்படுவர். அத்தோடு 2 வீரர்கள்  கட்டாயமாக பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலை(catching positions) எனப்படும் 15 யாருக்கு உட்பட்ட பகுதியில் களத்தடுப்பில் ஈடுபடல் வேண்டும்.
2 ஆவது பவர் பிளே-
 இது 5 பந்துப் பரிமாற்றங்களை உடையது. களத்தடுப்பு அணித்தலைவர் தான் விரும்பிய நேரத்தில்  பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். இங்கும் 2 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க  அனுமதிக்கப்படுவர். ஆனால் பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலையில் 2 பேர் நிற்க வேண்டிய கட்டாயம்  இல்லை.
3 ஆவது பவர் பிளே-
 இதுவும் 5 பந்துப் பரிமாற்றங்களை உடையது. இதையும் களத்தடுப்பு அணித்தலைவர் தான் விரும்பிய  நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். 3 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க   அனுமதிக்கப்படுவர். பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலை பற்றி இங்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

2 ஆவது பவர் பிளேயை எடுத்து விட்டுத்தான் 3 ஆவது பவர் பிளேயை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மாறியும் பயன்படுத்தலாம்.

இலவச அடி-(free hit)
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் கால்களை கோட்டிற்கு வெளியே வைப்பதன் மூலம் முறையற்ற பந்தொன்றை வீசுவாராயின் அந்த பந்து முறையற்ற பந்தாக அறிவிக்கப் படுவதோடு அடுத்த பந்து இலவச அடி என வழங்கப்படும். அந்தப் பந்தை வீச முன்னர் களத்தடுப்பில் மாற்றங்களை செய்ய அணித்தலைவரால் முடியும், எனினும் 5 பேர் மட்டுமே 30 யார் கோட்டிற்கு வெளியே நிற்பது அனுமதிக்கப்படும். இலவச அடியில் துடுப்பாட்ட வீரர் இலக்கு சரிதல், எல்.பி.டபிள்யு, ஸரம்ப்ற், பிடியெடுத்தல், இலக்கை மோதுதல் ஆகிய 5 முறைகளால் ஆட்டமிழக்க முடியாது. பந்தை கையாளுதல், களத்தடுப்பிற்கு இடைஞ்சல் செய்தல், பந்தை இருமுறை அடித்தல் என்பன அரிதானவை என்பதாலும், நேர ஆட்டமிழப்பிற்குரிய நிலைமைகள் இங்கு இல்லை என்பதாலும் இங்கு துடுப்பாட்ட வீரர் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழக்கலாம். எனவே துடுப்பாட்ட வீரர் எந்த வித பயமுமின்றி 6 அல்லது 4 ஓட்டங்களை பெறும் நோக்கோடு அடிக்க முற்படுவார்.


இரவுக் காவலாளி-(night watchman)
 ரெஸ்ற் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட நாளின் ஆட்டம் முடிவடையும் தருணத்தில் ஓர் அணி புதிதாக துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கையில் அல்லது குறிப்பிட்ட நாளின் ஆட்டம் முடிவடையும் தருணத்தில் ஓர் புதிய வீரர் துடுப்பாட்ட வீரர் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்படின் விசேடித்த துடுப்பாட்ட வீரருக்கு பதிலாக கீழ் வரிசை துடுப்பாட்ட வீரரொருவர் களமிறங்கி இலக்கு சரிவதை கட்டுப்படுத்தவார். ஆட்டம் முடியும் நேரத்தில் இலக்குகள் சரிவது விரைவாக நிகழும். இதற்கு தொழிநுட்ப ரீதியாக பெரிய காரணங்கள் இல்லாவிடினும் கடைசி நேரத்தில் துடுப்பாட்ட வீரர்களின் மன நிலையில் ஏற்படும் தொய்வும், அழுத்தமுமே காரணம் என கூறப்படுகிறது. எனவே விசேடித்த துடுப்பாட்ட வீரர் மறுநாள் அழுத்தமின்றி புதிய மனநிலையோடு துடுப்பெடத்தாட வழிவிட உதவும். இரவுக் காவலாளியாக செல்பவர் மறுமுனையில் நிற்கும் விசேடித்த துடுப்பாட்ட வீரரையும் காக்கும் விதமாக தானே அதிகளவு பந்துகளை விளையாடுவதோடு இயலுமானவரை விசேடித்த துடுப்பாட்ட வீரர் அடித்தாடாத பகுதியில்(non-striker's end) நிற்பதை உறுதி செய்வார். இரவுக் காவலாளியாக களமிறங்குபவர் பந்தை நன்றாக தடுத்தாடும் திறனை கொண்டிருக்க வேண்டும்.
(அவுஸ்ரேலிய அணியின் ஜேசன் கிலஸ்பி இரவுக் காவலாளியாக களமிறங்கி 200 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இரவுக்காவலாளி ஒருவரால் பெறப்பட்ட ஒரே இரட்டைச் சதம் இதுவாகும்.)

1- Silly mid-off
2- Silly mid-on
3- 1st slip
4- 2nd slip
5- 3rd slip
6- Gully
7- Point
8- Cover
9- Short 3rd man
10-Leg slip
11-Short fine leg
12-Square leg
13-Mid wicket
14-Mid-on
15-Mid-off
16-Extra-cover
17-Long-off or Deep mid-off
18-Long-on  or Deep mid-on
19-Deep mid-wicket
20-Backward square leg
21-Deep backward square leg
22-Fine leg
23-3rd man
24-Backward point
25-Deep cover
26-Deep extra-cover

மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றப் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் தோளுக்கு மேலால் செல்லும் பந்து ஒரு பந்தும், ரெஸ்ற் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் தோளுக்கு மேலால் செல்லும் பந்துவீச்சுகள் ஆகக்கூடுதலாக இரண்டு முறையும் வீசப்படலாம் என்ற விதி ஏற்படுத்தப்பட காரணம்...
1932-1933 காலப்பகுதியில் இங்கிலாந்துக்கான அவுஸ்ரேலிய சுற்றுலாவில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் தோளுக்கு மேலால் செல்லும் பந்துகளை வீரரை தாக்கும் விதமாக வீசியதோடு ஏராளமான வீரர்களை துடுப்பாட்ட வீரரை சுற்றி நிற்க வைத்தார்கள். எனவே துடுப்பாட்ட வீரர் தன்னை பாதுகாக்க வேண்டி மறித்து ஆட முற்பட தன்னைச் சுற்றி நின்ற வீரர்களிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள். சிலர் இலக்குக் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இதன் போது கிலர் காயமடைந்ததாகவும், சிலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பிறகே ஆபத்தான பந்து வீச்சு பற்றிய விதி உருவாக்கப்பட்டதோடு இலக்குக்கு இடது புறத்தில் இலக்குக்கு மூலைப்பகுதியில்(Squre of the wicket) 2 களத்தடுப்பாளர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபடலாம் என்ற விதியும் உருவானது.

ஆடுகளம்...(Pitch)
செவ்வக வடிவானது.
20.12 மீற்றர் நீளமும் 3.05 மீற்றர் அகலமும் கொண்டதாக காணப்படும். இது புல்தரை(turf) பிட்ச் களுக்கான அளவீடாகும்.
செயற்கை பிட்ச்(Artificial pitch) எனின் ஆகக்குறைந்தது 17.68 மீற்றர் நீளமும், 1.83 மீற்றர் அகலமும் கொண்டதாக காணப்படும்.
எனினும் புல்தரை பிட்சே சர்வதேச போட்டிகளிலும், வியாபார ரீதியிலான ஆட்டங்களிலும் பயன்படுத்தப்படும்.
பிட்சை தயார் செய்யும் பொறுப்பு மைதான ஊழியர்களை சார்ந்தது எனினும் ஆட்டம் தொடங்கிய பின்னர் பிட்சானது நடுவருக்கு உரியதாகும்.


பந்து...
பந்தின் சுற்றளவு- 224 முதல் 229 மில்லி மீற்றர்கள்.
பந்தின் நிறை- 155.9 முதல் 163 கிராம்கள்.
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களுள்ள(Limited over) போட்டிகளில் வெள்ளை நிறப் பந்தும் ஏனைய போட்டிகளில் சிவப்பு நிறப் பந்தும் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு போட்டியின் போதும் புதிய பந்தே பயன்னடுத்தப்படும். ஒவ்வொரு இனிங்சின் போதும் புதிய பந்தே பயன்படுத்தப்படும்.
ரெஸ்ற்(test) போட்டிகளில் 80 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் பின்னரும், ஒருநாள் போட்டிகளில் 35 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் போதும் பந்து மாற்றப்படல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களுள்ள போட்டிகளில் 35 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் போது மாற்றப்படும் பந்து புதியதாக இருக்க முடியாது. ஏற்கனவே பாவித்த நல்ல நிலையிலுள்ள பந்தே பயன்படுத்தப்படும்.


துடுப்பாட்ட மட்டை...
ஒரு புறம் தட்டையாகவும் மறுபுறம் வளைந்த கூன் வடிவிலும் (மட்டையின் பல்த்தை கூட்டுவதற்காக) (humped) காணப்படும்.
அதிகபட்சமாக 10.8 சதம மீற்றர் அகலமும், 96.5 சதம மீற்றர் நீளமும் காணப்படலாம். எனினும் குறிப்பிட்ட அளவை விட சிறியதாக காணப்படலாம்.
துடுப்பாட்ட மட்டையானது மரத்தாலேயே செய்யப்படல் வேண்டும். பொதுவாக வெள்ளை வில்லோவினால் (white willow) செய்யப்படும். எனினும் விதியல்ல.
மட்டையின் கைபிடியும் மட்டையின் ஓர் அங்கமாகவே கருதப்படும். துடுப்பாட்ட மட்டையின் தட்டையான மேற்பரப்பில் பாரமான உலோகங்கள் என கிறிக்கெற்றில் அழைக்கப்படும் அலுமினியம் என்பன பூசப்பட முடியாது.
(றிக்கி பொன்டிங்கின் மட்டை இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகப் பட்டது குறிப்பிடத்தக்கது.)


இலக்குகள்...(Wickets)
பிற்சின் இருபுறமும் இலக்குகள் காணப்படும். மொத்தம் 6 இலக்குகள். 3 ஒரு பகுதியிலும் மற்றைய 3 மற்றைய புறத்திலும் காணப்படும்.
மரத்தாலான 71.1 சதம மீற்றர் நீளமானது. 3 இலக்குகளிடையேயும் சம இடைவெளி காணப்படல் வேண்டும். 3 இலக்குகளும் சேர்ந்து மொத்தமாக 22.86 சதம மீற்றர் அகலத்தை எடுத்துக் கொள்ளும்.
இலக்குகளின் மேல் 2 'பெய்ல்கள்'(Bails) காணப்படும். இவை இலக்கிற்கு மேலே 1.27 கதம மீற்றருக்கு மேல் செல்லக்கூடாது. எனினும் சீதோஷண நிலைமைகளால் 'பெயில்கள்' கீழே விழும் என நடுவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் 'பெயில்களை" நடுவர் அகற்றலாம்.


உடை...
நீளக்காற்சட்டையும் மேலங்கியும்.
மேலங்கி முழு கைகளை முழுவதுமாக மூடியதாகவோ அல்லது அரைவாசி கையை மூடியதாகவோ அல்லது கைகளை மறைக்காததாகவோ காணப்படலாம்.
சிவப்பு பந்து விளையாடப்படும் போட்டிகளில் உடையானது வெள்ளையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ காணப்படலாம்.
வெள்ளைப்பந்து எனில் நிற ஆடைகள் அணிவர்;. எனினும் வீரர்கள் அனைவரும் ஒரே நிற ஆடைகளை அணிதல் வேண்டும்.
உடைகளில் வீரரின் பெயரையும் குறியீட்டு இலக்கத்தையும் இட வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.


ஒரு இனிங்ஸ்...
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளில் ஒரு அணி முழுமையாக ஆட்டமிழக்கும் வரை அல்லது குறிப்பிட்ட பந்துப்பரிமாற்றங்கள் நிறைவடையும் வரை ஒரு இனிங்ஸ் ஆகும்.
ரெஸ்ட் போட்டிகளில் ஓர் அணி ஆட்டமிழக்கும் வரை ஒரு இனிங்ஸ் தொடரும்.
நேரப் போட்டிகளில் குறித்த நேரம் நிறைவடையும் வரை அல்லது ஒரு அணி முழுமையாக ஆட்டமிழக்கும் வரை ஒரு இனிங்ஸ் ஆகும்.

நாணயச்சுழற்சிக்கு முன்னரே அணியின் விபரம் போட்டி நடுவரிடம் கையளிக்கப்பட வேண்டும். நாணயச்சுழற்சியின் பின்னர் தனது அணியிலுள்ள ஓர் வீரரை மாற்ற வேண்டி அணித்தலைவருக்கு ஏற்படின் தகுந்த காரணங்களை காட்டுவதன் மூலம் எதிரணித்தலைவரின் அனுமதி பெறப்பட வேண்டும்.


ஆட்டத்தை இடைநிறுத்தல்...
ஒரு அணியின் இனிங்ஸை அவ்வணித்தலைவர் தான் விரும்பிய நேரத்தில் இடைநிறுத்தம் செய்யலாம்.(declare)
ஒரு இனிங்ஸை ஆடாமல் அவ் இனிங்ஸை தன் அணி சார்பாக இடைநிறுத்தம் செய்யலாம்.(forfeiture)
எனினும் ஆட்டத்தை இடைநிறுத்தும் போது பந்து இறந்த நிலையில்(dead) காணப்பட வேண்டும். அதாவது பந்து வீச்சாளர் பந்தை வீசி முடித்து பந்து ஓய்வை அடைந்திருக்க வேண்டும்.


தொடர்ந்து ஆடப்பணித்தல்...(follow-on)
ரெஸ்ற் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி பெற்ற ஓட்டங்களை விட 200 ஓட்டங்களை இரண்டாவது துடுப்பெடுத்தாடிய அணி பெறின் முதலில் துடுப்பொடுத்தாடிய அணியின் தலைவர் எதிரணியை தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை ஆடுமாறு பணிக்கலாம். ஆனால் கட்டாயமில்லை...
3 அல்லது 4 நாள் போட்டிகள் எனின் முன்னிலை ஓட்டங்கள் 150 ஐ விட கூடுதலாக முதலாவது துடுப்பாடிய அணி பெறின் தொடர்ந்து ஆடப்பணிக்கலாம்.
2 நாள் ஆட்டம் எனின் 100 ஓட்டங்கள்.
1 நாள் ஆட்டமெனில் (மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்ற போட்டி அல்ல) 50 ஓட்டங்கள்.


போட்டி தொடக்கம்...
போட்டி தொடங்கும் போது நடுவர் 'Play' என உரத்துக் கூறுவார்.
ரெஸ்ற் போட்டியின் ஒரு நாளுக்குரிய ஆட்டம் நிறைவடையின் 'Time' என கூறுவார்.
போட்டி தொடங்கிய பின்னர் மைதானத்தில் பயிற்சிகளுக்குரிய அனுமதி வழங்கப்பட மாட்டாது. பந்து வீச்சாளர் மாத்திரம் பயிற்சி ஓட்டத்தை மேற்கொள்ளலாம். எனினும் பயிற்சி ஓட்டத்தின் போது நேரம் வீணாகும் என நடுவர் கருதின் அதை தடுக்கலாம்.
ரெஸ்ற் ஆட்டத்தின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தில் 20 பந்துப் பரிமாற்றங்கள் வீசப்பட வேண்டும். 20 பந்துப் பரிமாற்றங்கள் வீசி முடிக்கும் வரை போட்டியின் கால அளவு நீடிக்கப்படலாம். எனினும் விளையாடுவதற்குரிய சூழ்நிலை (போதிய வெளிச்சம், காற்று விளையாட்டை பாதிக்காமை, மழைத்தூறல்கள் இன்மை) காணப்படல் வேண்டும்.

ஓட்டங்கள்...

ஓட்டங்கள் பெறப்படக்கூடிய முறைகள்-
ஓடிப்பெறல்-(By running)
துடுப்பாட்ட வீரரின் துடுப்பு மட்டையில் அல்லது அவரின் உடலின் ஏதாவதொரு பகுதியில் பந்து படுமாயின் துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை ஓடிப்பெறலாம்.
பந்தை அடித்து விட்டு அதிகபட்சமாக 4 ஓட்டங்கள் தான் ஓடிப்பெறப்படலாம் என்று எதுவித சட்டங்களும் இல்லை. எத்தனை ஓட்டங்களும் ஓடிப்பெறப்படலாம்.
ஒரு பந்து வீச்சை துடுப்பாட்ட வீரர் ஆடாமல் விட்ட பின்பு அந்த பந்தின் முலம் ஓட்டங்களை பெற முடியாது. உதாரணமாக கால்த்தடுப்பை மாத்திரம் பந்திற்கு நேரே வைத்து ஆடாமல் விடின் அந்தப் பந்தின் மூலம் ஓட்டங்களை பெற முடியாது.

எல்லையை பந்து தாண்டுதல்-(Boundries)
4 ஓட்டங்களும் 6 ஓட்டங்களும் இந்த வகையில் அடங்கும். எல்லைக் கோட்டை கடந்து பந்து செல்லும் முன்னர் நிலத்தை தொட்டிருப்பின் அது 4 ஓட்டமாகும். நிலத்தை தொடவில்லையெனில் அது 6 ஓட்டமாகும்.


முறையற்ற பந்துவீச்சு மூலம்-(No ball)
பந்து வீச்சாளரொருவர் முறையற்ற பந்து வீச்சை மேற்கொண்டால் எதிரணிக்கு 1 ஓட்டம் வழங்கப்படும்.
முறையற்ற பந்து வீச்சுகள்...
ஆடும் பிட்ச் இல் காணப்படும் கோடுகள் தடிப்பாக காணப்படுவதால் அந்த கோட்டின் உட்பகுதியே அதாவது இலக்குக்கு மிக அருகில் காணப்படும் கோடே(popping crease) கணக்கில் கொள்ளப்படும். எனவே பந்து வீச்சாளர் உட்பகுதி கோட்டை தாண்டி பந்து வீசுவாரெனில் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீசும் போது வீசும் கணத்தில் முழங்கையை நீட்டுவாராயின் அதாவது முழங்கையை நேர்ப்படுத்துவாராயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீச்சாளருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வீசின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீசும் போது ஆடுகளத்தில் பந்தானது இரு முறைகளுக்கு மேல் நிலத்தில் துள்ளுமாயின் அல்லது உருளுமாயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து தடுக்கும் வீரர்கள் முறையற்ற இடற்களில் நிற்பாராயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.

இறந்த பந்து...(dead ball)
பந்து வீசும் போது பந்தானது இருமுறை நிலத்தை அடித்ததோடு இரண்டாவது அடிப்பு துடுப்பாட்ட வீரரின் கோட்டுக்கு முன்னர் அடித்தல்.
இறந்த பந்தின் மூலம் ஓட்டங்களோ, ஆட்டமிழப்போ வழங்கப்படமாட்டாது.

அகலப்பந்து...(wide ball)
ஒரு பந்து வீச்சை துடுப்பாட்ட வீரர் சௌகரியமாக ஆடி ஓட்டங்களை பெற முடியாதளவுக்கு பந்து அகலமாகச் செல்கிறது என நடுவர் தீர்மானிப்பாராயின் அது அகலப்பந்து ஆகும். துடுப்பாட்ட வீரரின் தலைக்கு மேலே செல்லும் பந்து சென்றாலும் அது அகலப்பந்து ஆகும்.

உதிரிகள் மற்றும் கால் உதிரிகள்...(byes and leg-byes)
துடுப்பாட்ட வீரரை பந்து தாண்டி செல்லும் போது துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் அல்லது துடுப்பாட்ட வீரரில் படாமல் சென்று ஓட்டங்கள் பெறப்படின் அது உதிரி ஆகும்.
துடுப்பாட்ட வீரரை பந்து தாண்டி செல்லும் போது துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் படாமல் துடுப்பாட்ட வீரரில் பட்டு சென்று ஓட்டங்கள் பெறப்படின் அது கால் உதிரி ஆகும்.


பிரதான ஆட்டமிழப்பு வகைகள்....
ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து விட்டார் என பந்து வீசும் அணி நினைக்குமாயின் ஆட்டமிழப்பை கோரலாம். 'How's that?' என கேட்கலாம்.
இலக்குகள் சரிதல்.
துடுப்பாட்ட வீரர் கோட்டுக்கு வெளியே நிற்கையில்.


ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்கும் வகைகள் 10 ஆகும்.
1. இலக்குகள் சரிதல்.-(Bowled)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது பந்து இலக்கை அடிக்குமாயின் அவர் ஆட்டமிழந்தவராக கருதப்படுவார். எனினும் 'பெயில்கள்" இலக்கை விட்டு அப்புறப்படல் வேண்டும். இலக்கை தாக்கும் முன்னர் பந்து துடுப்பாட்ட வீரரையோ, அவரின் மட்டையையோ தாக்கியிருப்பினும் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

2. பிடியெடுப்பு.(Caught)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது மட்டையில் பட்டு எதிரணி வீரர் ஒருவர் பந்து நிலத்தை அடிக்கும் முன்னர் பிடியெடுப்பாராயின் அது ஆட்டமிழப்பு ஆகும்.
துடுப்பாட்ட வீரரில் பட்டு பின்னர் மட்டையில் பட்டாலும், மட்டையில் பட்டு துடுப்பாட்ட வீரரில் பட்டாலும் ஆட்டமிழப்பு வழங்கப்படும். அதாவது எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது துடுப்பாட்ட வீரரின் மட்டையில் பந்து பட்டிருத்தல் போதுமானது. துடுப்பை கைத்திருக்கும் கையில் பட்டாலும் அதுவும் துடுப்பில் பட்டதாகவும் கொள்ளப்படும்.
எனினும் களத்தடுப்பாளர் பந்தை பிடிக்கும் போதோ அல்லது பிடித்த உடனரோ எல்லைக் கொட்டை தாண்டுவாராயின் அது ஆட்டமிழப்பு என வழங்கப்பட மாட்டாது.
பந்தானது களத்தடுப்பு வீரரின் கைகளில் அல்லது உடலில் 8 செக்கன்கள் தங்கி இருந்தாலே ஆட்டமிழப்பாக கருதப்படும்.
பந்தை பிடிக்கும் போது களத்தடுப்பு வீரர் சிலவேளைகளில் பாதுகாப்புக்காக அணியும் தலைக்கவசத்தில் படுமாயின் அதுவும் ஆட்டமிழப்பாக வழங்கப்பட மாட்டாது.

3. இலக்குக் காப்பாளரால் ஸ்ரம்ப்ட் செய்யப்படல்.(Stumped)
கோட்டை விட்டு முன்னோக்கிச் சென்று ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட முயற்சிக்கையில் அந்தப் பந்து தவறவிடப்படுகையில் இலக்கு காப்பாளர் பந்தை சேகரித்து இலக்கை அடித்தல். பந்தை கொண்டிருக்கும் கையின் எந்தப் பகுதியாலும் இலக்கை அடிக்கலாம்.

4. இலக்கின் முன் காலில் பந்து படுதல்- எல்.பி.டபுள்யு -(L.B.W)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது பந்தானது துடுப்பாட்ட வீரரின் உடலில் படுமாயின் அந்தப் பந்து இலக்கை தாக்கும் சந்தர்ப்பம் காணப்படின் ஆட்டமிழப்பு வழங்கப்படும். எனினும் கால் மட்டுமல்ல உடலின் எந்தப் பகுதி பட்டாலும் ஆட்டமிழப்பு வழங்கப்படும். துடுப்பில் பட்ட பின்னர் உடலில் படுமாயின் ஆட்டமிழப்பு வழங்கப்பட மாட்டாது. எனினும் உடலில் பட்ட பின்னர் துடுப்பில் பட்டு மேற்சொல்லப்பட்ட நிபந்தனைகளை திருப்தி செய்யுமாயின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

5. இலக்கை மோதுதல் -(Hit wicket)
வீரர் ஆடுப் போது துடுப்பாலோ அல்லது அவரது உடலினாலோ இலக்கை அடிப்பாராயின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.
எனினும் ஓட்டங்கள் பெறப்படும் போது பாயும் போதோ அல்லது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலோ ஆட்டமிழப்பு வழங்கப்பட மாட்டாது.

6. ரன் அவுட்-(Run out)
துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை ஓடிப்பெறும் போது பந்து இலக்கிற்கு எறியப்படும் போது இலக்கில் பந்து படும் போது துடுப்பாட்ட வீரர் நிலத்தை தொட்ட படி இருத்தல் வேண்டும். அவர் ஏற்கனவே கோடுகளை அடைந்து நிலத்தை தொட்டிருந்தாலும் பந்து இலக்கில் படும் கணத்தில் நிலத்தை தொடாமல் வளியில் இருப்பாராயின் (பாய்தல் போன்றவற்றின் போது) அவர் ஆட்டமிழந்ததாக கருதப்படும்.

7. நேர ஆட்டமிழப்பு -(Time out)
ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து 2 நிமிடத்துள் மற்றைய துடுப்பாட்ட வீரர் களம் நுழையாமை. எனினும் இந்த ஆட்டமிழப்பு எதிரணி அணித்தலைவரால் விலக்களிக்கப்பட முடியும்.

8. களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்தல்-(Obstucting the field)
ஒரு துடுப்பாட் வீரர் களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்கிறார் என களத்தடுப்பு அணி ஆட்டமிழப்புக்கு கோரலாம். அந்த சந்தர்ப்பத்தில் துடுப்பாட்ட வீரர் வேண்டுமென்றே களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்தார் என கருதின் ஆட்டமிழப்பு வழங்கப்படும். அத்தோடு களத்தடுப்பு அணியின் களத்தடுப்பை இடைஞ்சல் செய்யும் விதமாக சொற்களை பாவிப்பினும் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

9. இரண்டு முறை அடித்தல். -(Hit the ball twice)
தனது ஆட்டத்தை பாதுகாக்கும் அல்லது எதிரணியின் அனுமதியின்றி பந்தை இருமுறை துடுப்பால் அடிப்பின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

10. பந்தை கையாளுதல் -(Handling the ball)
வேண்டுமென்றே பந்தை தொடுதல், எதிரணியின் அனுமதியின்றி பந்தை தொடின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

முதல் 5 வகைகளில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழப்பின் மட்டுமே பந்து வீச்சாளருக்கு உரிய இலக்கு கைப்பற்றலாக கருதப்படும். ஏனைய யாவும் அணிக்குரிய ஆட்டமிழப்புகள் ஆகும்.

6, 8, 9, 10 ஆகிய முறைகளில் ஒரு வீரர் முறையற்ற பந்து வீச்சின் போதும் ஆட்டமிழப்பார்.
1, 2, 3, 4, 5 ஆகிய முறைகளில் ஆட்டமிழக்க அந்தப்பந்து முறையான பந்தாக இருத்தல் வேண்டும்.

கள நடுவருக்கு ஆட்டமிழப்பா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படின் மூன்றாம் நடுவரை நாடலாம். மூன்றாம் நடுவருக்கும் தெளிவான முடிவை பெற முடியாமல் போயின் தீர்ப்பு துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக வழங்கப்பட வேண்டும்.

நடுவரின் மீது பந்து பட்டு பந்து நிலத்தில் காணப்படின் விளையாட்டு தொடரும். நடுவரின் உடையில் பந்து தங்கி விடின் அந்தப் பந்து மேலும் விளையாட்டுக்குக்கு சேர்க்கப்பட மாட்டாது. இறந்த பந்தாக கருதப்படும்.

மாற்று ஓட்ட வீரர்...(Substitute runner)

துடுப்பாட்ட வீரர் ஒருவர் துடுப்பாடிக் கொண்டிருக்கும் போது உபாதைகள் ஏற்படின் தனக்கு ஒரு வீரரை ஓடுபவராக பயன்படுத்த விரும்பலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் அந்த வேண்டுகோளை நடுவரிடம் தெரிவிக்கலாம். எனினும் எதிரணியின் தலைவரின் அனுமதி கட்டாயமாக பெறப்பட வேண்டும்.


'நாசா' இற்க்கு போனமோ...?


இப்பவே தெருவில நிக்கிறமோ...?

(செய்தது நண்பன் தான்...)

அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரக் உசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்...
(இதெல்லாம் ரொம்ப அதிகம்டா... ஒபாமாவுக்கு நீ வாழ்த்து தெரிவிச்சா போல அவர் இத வாசிக்கப் போற மாதிரி...)