க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஒரு மனிதன் தன் மனைவியைக் காணவில்லை என்பதை முறையிட காவல்துறை அலுவலகத்திற்கு சென்றான்.

நபர்: எனது மனைவியைக் காணவில்லை.

காவல்துறை அதிகாரி: அவளின் பெயர் என்ன?

நபர்: ஏதோ ஒரு பூவின் பெயர் சேர்.

கா.அ: என்ன உயரம் இருப்பா?

நபர்: ஒருக்காலும் கவனிச்சதில்லை.

கா.அ: ஒல்லியா? குண்டா?

நபர்: ஒல்லி இல்லை. குண்டா இருக்கலாம்.

கா.அ: கண்களின் நிறம்?

நபர்: கவனிச்சதில்லை.

கா.அ: கூந்தலின் நிறம்?

நபர்: காலங்களுக்கேற்றவாறு மாறும்.

கா.அ: காணாமல் போகும் போது என்ன அணிந்திருந்தா?

நபர்: சேலை அல்லது சல்வார். வடிவா ஞாபகம் இல்ல.

கா.அ: காணாமல் போகும் போது யாராவது கூட இருந்தாங்களா?

நபர்: ஓம். என்ர செல்ல நாய். பெயர் றோமியோ. பொன்னிற சங்கிலியால கட்டப்பட்டிருக்கும். 30 அங்குல உயரம், அளவான உடலமைப்பு, நீல நிற கண்கள், கறுப்பு சேர்ந்த மண்ணிற உரோமம், றோமியோவின் இடது காலின் பெருவிரலின் நகம் சிறிது உடைந்துள்ளது, குரைப்பது குறைவு, ஓர் பொன்னிற கழுத்துப்பட்டி அணிந்திருந்தான், அவனுக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும், நானும் அவனும் ஒன்றாகத் தான் உணவு அருந்துவோம், ஒன்றாகத் தான் நடைப்பயிற்சிக்கு செல்வோம்... (இதைச் சொன்னவாறே அந்த நபர் அழத் தொடங்கினான்)

காவல்துறை அதிகாரி- நாங்கள் முதல்ல நாயைத் தேடுவம்.

****************************************************************
சிறிய நகைச்சுவைகள்...

ஆண்கள் பொதுவாக தங்களது மனைவியிடத்தில் 3 குண அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்.
சமையலறையில் சிக்கனம் செய்பவளாகவும், ஓர் கலைஞனாக வீட்டிலும், படுக்கையறையில் பேயாகவும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நடப்பதோ, சமையலறையில் கலைஞனாகவும், வீட்டில் பேயாகவும், படுக்கையறையில் சிக்கனம் செய்பவளாகவுமே கிடைக்கிறார்கள். (என்று சொல்கிறார்கள். அனுபவம் இல்லை. ஹி ஹி ஹி...)

ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.

பன்றிகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான முக்கியமான வித்தியாசம் என்ன?
பன்றிகள் குடித்த பின்னர் மனிதர்களாக மாறுவது இல்லை.

நல்ல வழக்கறிஞருக்கும், புத்திசாலி வழக்கறிஞருக்குமிடையிலான வித்தியாசம் என்ன?
நல்ல வழக்கறிஞருக்கு சட்டம் தெரியும், ஆனால் புத்திசாலி வழக்கறிஞருக்கு வழக்கின் தீர்ப்புத் தெரியும்.

நாய்கள் ஏன் மணம்முடிப்பதில்லை?
ஏனெனில் அவை ஏற்கனவே நாய்வாழ்க்கை வாழ்வதால்.

அம்மாவுக்கும், மனைவிக்குமிடையிலான ஒற்றுமை என்ன?
அம்மா எங்களை இந்த பூமிக்கு அழுதவாறு கொண்டுவருகிறாள். மனைவி நாங்கள் தொடர்ந்து அழுவதை உறுதி செய்கிறாள்.

ஓர் அழகு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'இங்கிருந்து வெளியே செல்லும் அழகான இளம் பெண்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டாம். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்.'

ஓர் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'எங்கள் வியாபாரத்தை கொண்டோடுவதற்கு உங்கள் தலைகள் வேண்டும்'

வீதியில் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகை:
'உங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். அல்லாவிடில் அவர்கள் குறித்த வயதை அடையாமலேயே போய்விடுவார்கள்.'

***********************************************************************************************************

எந்நேரமும் மொக்கைப் பதிவுகள் போடுவதாக ஓர் உணர்வு...
நாளை ஏதாவது சிந்தனைப்பதிவுகள் (சீரியஸ் பதிவு என அழைப்பதைவிட சிந்தனைப்பதிவு என அழைப்தை விரும்புகிறேன்.) போட முயற்சிக்கிறேன்...