க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாட்களாக இந்தவகைப் பதிவொன்னு (அதாவது சுயதம்பட்டப் பதிவு போடோணும் எண்டு ஆசை... ஆனா ஏனோ போட மறந்திற்று வந்தன்...
அண்டைக்கு திண்ணையில கதைச்சுக் கொண்டு இருக்கும்போது வந்தியண்ணா தான் கிறிக்கெற் அனுபவத்த பதிவிடப் போறன் எண்டு சொன்னதும் எனக்கு பழைய ஆசை வந்திற்றுது....

இது கிறிக்கெற்றில் எனது சுவாரசிய அனுபவங்கள். உங்களுக்கும் சுவாரசியமா இருக்கும் எண்டு நம்புறன்.


நான் கடினப்பந்து கிறிக்கெற்றுக்குள்ள போனதே ஒரு பெரிய சுவாரசியமான கதை.
நான் இப்ப இருக்கிற மாதிரியே (குண்டாவா எண்டு கேட்டா வேட்டைக்காரன் படம் போட்டுக் காட்டுவன் எண்டு சொல்ல மாட்டன்...) கிறிக்கெற் பைத்தியம்.
பள்ளிக்கூடத்தில அணிவீரர்களுக்கு பயிற்சி நடக்கேக்க மைதானத்துக்கு வெளியே நிண்டு அதையே பாத்துக்கொண்டு நிப்பன்.
நான் உப்பிடி நெடுகலும் நிக்கிறதப்பாத்த பயிற்சியாளர் சண்முகலிங்கன் சேர் (உண்மை அவர் அப்ப பயிற்சியாளர் இல்ல. ஆலோசகராத் தான் இருந்தார்) ஏன் நிக்கிறாய்? வந்து மைதானத்தில நில்லு எண்டு என்னை மைதானத்துக்குள்ள அழைச்சிற்றுப் போனார்.
(15 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சி அது. எனக்கு அப்ப 12 வயது.)
(நான் பாடசாலை சீருடையில தான் நிண்டன்...)

போய் நான் முதலில நான் நிண்ட இடம் fine leg பகுதி தான். போய் நிண்ட 1,2 பந்திலயே ஒரு பந்து சீறிக் கொண்டு வந்திச்சு.. நானும் மென்பந்து பாய்ஞ்சு பிடிக்கிற நினைப்பு இருந்து அந்த வேகத்த மனசில வச்சு பாய்ஞ்சன்... அதுக்குள்ள பந்து ஓடீற்றுது. அப்ப தான் முதல் பாடம் படிச்சுக் கொண்டன் கடினப் பந்தைக் களத்தடுப்புச் செய்யிறதுக்கு ஒரு விசேட வேகம் வேணும் எண்டு.
அப்பிடியெ கொஞ்ச நேரம் களத்தடுப்புச் செய்திற்று இருக்க 'போல் போடத் தெரியுமோ?' எண்டு கேட்டார்...
நான் வழமையப் போல 'பெருசாத் தெரியாது' எண்டு சொன்னன்.
(அடக்கமெல்லாம் இல்ல... என்ர குணமே இது தான். தாழ்வு மனப்பான்மை என்று வைத்துக் கொள்ளலாம்.)
'அது பரவாயில்லை. வந்து போடு' என்றார்.


சரி நானும் தயங்கித் தயங்கி போனா அங்கால துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தவரப் பாத்ததும் நடுக்கம் கூடிற்று. அவர் தான் அணித்தலைவர். அற்புதமான துடுப்பாட்ட வீரர். அந்த மனுசன் மற்றைய அணிகளை மொங்கியெடுக்க நான் தூர இருந்து பாத்திருக்கிறன்.
சரியெண்டு போய் தயங்கித் தயங்கி என்ர ஓவ் ஸ்பின்னை போட்டேன்.
கடினப்பந்து பிடிக்கவே கஷ்ரமாயிருந்தது.
கஷ்ரப்பட்டு பந்துவீசினன். அவர் இடதுகைத் துடுப்பாட்ட வீரர். நான் over the wicket ஆல தான் போட்டன். பந்து கணக்கா ஓவ் ஸ்ரம்ப் பகுதியில் விழுந்து விலகிச் சென்றது. மனுசன் அத defend பண்ணப் பாத்து அது அவரின்ர துடுப்பு ஓரத்தில பட்டு விக்கெற் காப்பாளரிடம் போய் தஞ்சமடைந்தது.
அதற்காக சண்முகலிங்கன் சேர் முதுகில தட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு.
வந்த சின்னப் பெடியன் போட்ட முதல் பந்திலயே ஆட்டமிழக்கப் பண்ணிற்றான் எண்டு எல்லாரும் என்ன கெட்டிக்காரனாப் பாத்தாங்கள்.

அண்டைய நாள் முடியிற நேரம் சண்முகலிங்கன் சேர் தொடர்ந்து பயிற்சிக்கு வா எண்டு சொன்னார். நான் எதிர்பார்த்திரா விடயம் இது. நானும் சந்தொசமா பயிற்சிக்குப் போனன். அந்தக் காலத்தில மாவட்டமட்டப் போட்டிகள் எல்லாம் முடிஞ்ச படியா பயிற்சிகள் கொஞ்ச நாளில முடிஞ்சுது.

அடுத்த வருசம் எப்பிடியாவது பயிற்சிக்குப் போறது எண்டு முடிவெடுத்து வீட்ட படாதபாடுபட்டு அனுமதி வாங்கி 13 வயதுக்குட்பட்ட அணிப்பயிற்சிக்குப் போனன்.
அந்த வருசம் அணியில சுழற்பந்துவீசும் சகலதுறை வீரரா எடுபட்டு விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்பட்டேன்.

அந்த வருசப் பயிற்சியில ஒருநாள் முக்கியமான இடத்தில வைக்கிற 'guard' ஐ வீட்ட விட்டிற்றுப் போட்டன். அந்த நாள் பாத்து அந்த பயிற்சியாளர் எனக்கு வலைப்பயிற்சியல துடுப்பெடுத்தாட வாய்ப்பு வந்திற்றுது. அண்டைக்கு என்ர முறை இல்ல எண்டாலும் 2 பேர் பயிற்சிக்கு வராம விட வாய்ப்பு (ஆப்பு....) என்னத் தேடி வந்திற்றுது..
சரியெண்டு அண்டைக்கு 'சேதாரமில்லாம' துடுப்பெடுத்தாடி முடிச்சிற்றன்.

அதப்போல இன்னொருநாள் உண்மையான ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபொழுது எனக்கும் பந்துவீசிக்கொண்டிருந்த ஒருத்தனுக்கும் போட்டி வந்திற்றுது.
நான் வீணா வாயக் குடுத்திற்றன். அவன் வேகப்பந்துவீச்சாளர்.
அவன் வேணுமெண்டு என்ர உடம்ப நோக்கி பவுண்சர்கள வீசத் தொடங்கினான்.
நானும் எவ்வளவு முடியுமோ அவ்வளவ அடிச்சன் அல்லது அடிக்க முயற்சிச்சன்.
ஒரு பந்து போட்டான் பாருங்கோ.... யப்பா... வந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில வந்து 'டொங்' எண்டு அடிச்சிச்சு. என்ன வேதனையப்பா...
ஆனா பவுன்சர் பந்துக்கு ஆறு ஓட்டம் அடிச்சுக் காட்டுறன் எண்டுற சவாலுக்காக 5,6 தரம் குனிஞ்சு எழும்பிற்று திரும்பவும் துடுப்பெடுத்தாடினா அடுத்த பந்து நெஞ்சில.
அவ்வளவு தான்... வலியெண்டா வலி தான்...
பயிற்சியாளர் அடிச்சுக் கலைச்சுவிட்டார் போய் ஓய்வெடு எண்டு...

அதுக்குப் பிறகு ஒருநாள் பரியோவான் கல்லூரியோட நடந்த போட்டியொண்டுக்கு முதல்முதலா என்ர குடும்பத்தில இருந்து அண்ணா போட்டியப் பாக்க வந்தார். அவர் வந்த உடனயே நான் துடுப்பெடுத்தாட வேண்டி வந்திற்றுது.
போன முதல் பந்து ஒருபடுபாவி ஓவ் ஸ்பின் போட்டான். நானும் அழகா defend பண்ணுவம் எண்டு பண்ணினா அது துடுப்புக்கும் காலுக்குமிடையால போய் முதல் பந்திலயே போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்திற்றன். பெருத்த அவமானம்....

நிறைய அலட்டப்படாது கண்டியளோ....
இது கடைசி விசயம்.
ஒரு கல்லூரிக்கும் (பெயர் வேணாம்.) எங்கட கல்லூரிக்குமிடையிலான போட்டி நடந்துகொண்டிருந்தது.
நான் எனக்குப் பிடித்த சிலி மிட் ஓவ் இல் (துடுப்பாட்ட வீரருக்கு அருகில் தலைக்கவசத்தோடு நிற்கும் இடம்) நின்று கொண்டிருந்தேன்.
நாங்கள் இனிங்ஸ் வெற்றி ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருந்தோம்.
4 விக்கெட்டுக்கள் எடுக்க வேண்டி இருந்தது. போட்டி நிறைவடைய கொஞ்ச நேரம் தான் இருந்தது.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிக் கொண்டிருந்தார்.
அது ஒரு பவுண்சர். துடுப்பாட்ட வீரர் திமிறி பந்தை விட்டு விலக முயற்சித்த வேளையில் பந்து துடுப்பு ஓரத்தில் பட்டு மேலெழுந்தது. எனக்கு சாதாரணமாக எட்டவில்லை. இனிங்ஸ் வெற்றி வேண்டும் என்ற வெறியில் பாய்ந்தேன் ஒரு பாய்ச்சல்... பந்து என்கையில். அப்படியே கீழே விழும்போது முழங்கை நிலத்தோடு அடித்து பந்து கையை விட்டு நழுவ முற்பட நான் அமுக்கிக் கொண்டேன். எனினும் அந்தக் கணத்தில் பந்து நிலத்தில் பட்டுவிட்டது.
நான் பாய்ந்த தருணத்தில் எனக்கு எதுவுமே நினைவில்லை. எனக்கு பாய்ந்ததும், விழும்போது ஏற்பட்ட வலியும் தான் மனதில் தெரிந்தன.
ஆட்டமிழப்பைக் கோரினேன். நடுவர்கள் இருவரும் சிறிதுநேரக் கலந்துரையாடலின் பின்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவிக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் எனக்கு முழுவதும் புரிந்து பந்து நிலத்தில் பட்டது நினைவுக்கு வந்தபோதிலும் நடுவர்கள் கடைசிநேரத்தில் சொல்கிறேன் என்று தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லவில்லை.
அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.


இது எனக்குத் தெரிந்தவரை எனது அனுபவங்கள்.
இவ்வளவு நேரம் பொறுமையாக அறுவையைத் தாங்கியதற்கு நன்றி....

33 பின்னூட்டங்கள்:

///யப்பா... வந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில வந்து 'டொங்' எண்டு அடிச்சிச்சு. என்ன வேதனையப்பா.///

ஹிஹி...

///சிலி மிட் ஓவ் இல் (துடுப்பாட்ட வீரருக்கு அருகில் தலைக்கவசத்தோடு நிற்கும் இடம்) நின்று கொண்டிருந்தேன்///

நான் எங்கயாவது அடி கிடி பட்டதோ என்று நினைச்சன்..ஹிஹி
வட போச்சே..

////அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.
////

அவ்வ்வ்... தலைவா வாழ்க உன் மனிதநேயம்..:)

அருமையாக எழுதியுள்ளீர்கள்..:)

//அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.//

நீங்கள் ஒரு சாதாரண மனிதன் இல்லை, ஒரு பெரிய மனிதன் என்பதற்கான அடையாளமே இது...!!

அப்படியே கற்பனை செய்து பார்க்க வசதியாக இருக்கிறது உங்கள் எழுத்து போட்டியை நேரில் பார்த்தது போல்

அப்புறம் அந்த spirit of cricket விருது உங்களுக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். கோபி உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்தான் (ச்சும்மா ஐஸ்)

அடப்பாவி முந்திவிட்டாயே. உங்கள் பாணியில் அழகாக எழுதியிருக்கின்றீர்கள். ஆனாலும் எனக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஒரு சிறிய விபத்தால் என் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது.

அப்போ நீங்கள் எல்லாவற்றிலும் கில்லாடி என்று சொல்லுங்கள்.

//அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.//
:( .... :)
நல்ல அனுபவ பதிவு.
எனக்கு கிறிக்கெற் மீது ஆர்வம் குறைவு....

என்னது நன்றியா…… இவ்வளவு நேரமும் எவ்வளவு பொறுமையா வாசிச்சனான். இந்த நன்றியைப் பார்த்துத்தான் கோபம் வருது. இந்த பொடியன் நல்லதானே விளையாடியிருக்கிறான். என்னத்துக்கு நன்றியெல்லாம்.

நல்ல அனுபவம் கோபி. ஆனாலும், அந்த பிடியெடுப்பை மறைத்து சாதனை புரிந்த கோபி ஏன் பிற்காலத்தில் அணியில் விளையாடவில்லை என்பதை சொல்லவில்லையே.

//நிறைய அலட்டப்படாது கண்டியளோ...//

ரொம்ப பிடிச்சிருக்கு…

சென்ரலைட் விளையாட்டுக்கழகம் நீர் கொழும்பு வந்ததில ஒரு வீரனை இழந்திட்டுது போல

//நிறைய அலட்டப்படாது கண்டியளோ...//

ரொம்ப பிடிச்சிருக்கு…

சென்ரலைட் விளையாட்டுக்கழகம் நீர் கொழும்பு வந்ததில ஒரு வீரனை இழந்திட்டுது போல

அடப்பாவி.. நீ கிரிக்கட் விளாண்டினியா? பாவம் பந்து..

நல்ல அனுபவ கட்டுரை தம்பி .. இப்பிடி இன்னும் எழுது.. மலேசிய உறவுகளின் தொடர்ச்சியாக உன் தம்பட்டம் நன்றாகத்தான் இரக்கிநது

//Bavan கூறியது...
///யப்பா... வந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில வந்து 'டொங்' எண்டு அடிச்சிச்சு. என்ன வேதனையப்பா.///

ஹிஹி...//

துன்பம் வருங்கால் நகுக எண்டு வள்ளுவர் சொன்னது அவரவரின்ர துன்பமடாப்பா....
என்ன ஒரு கொலைவெறி...

///சிலி மிட் ஓவ் இல் (துடுப்பாட்ட வீரருக்கு அருகில் தலைக்கவசத்தோடு நிற்கும் இடம்) நின்று கொண்டிருந்தேன்///

நான் எங்கயாவது அடி கிடி பட்டதோ என்று நினைச்சன்..ஹிஹி
வட போச்சே. //
அடப்பாவி மக்கா......

//Bavan கூறியது...
////அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.
////

அவ்வ்வ்... தலைவா வாழ்க உன் மனிதநேயம்..:) //

இன்னாது தலைவரா?
அடப்பாவிங்களா....
என்ன எங்க போய் மாட்டிவிடப்போறீங்க?

//Bavan கூறியது...
அருமையாக எழுதியுள்ளீர்கள்..:) //

நன்றி பவன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவன்.
முக்கியமாக திரைக்குப் பின்னால் பதிவைத் தரம் பார்த்து போடலாம் எண்டு சொன்னதுக்கும் நன்றி.

// நிமல்-NiMaL கூறியது...
//அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.//

நீங்கள் ஒரு சாதாரண மனிதன் இல்லை, ஒரு பெரிய மனிதன் என்பதற்கான அடையாளமே இது...!! //

ஆகா...
நான் ஒன்றும் நல்லவன், புண்ணியவான் இல்லை.
என்றாலும் பிழையான காரியத்தைச் செய்த ஒரு உணர்வு ஒருவனை ஆட்கொண்டால் அதிலிருந்து மீள்வது கடினம். அதனால் தான் அப்படி.
மற்றும்படி நான் மனிதனாக முயற்சித்துக் கொண்டிருக்கும் சாதாரணணன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

//தர்ஷன் கூறியது...
அப்படியே கற்பனை செய்து பார்க்க வசதியாக இருக்கிறது உங்கள் எழுத்து போட்டியை நேரில் பார்த்தது போல்//

நன்றி... :)

//அப்புறம் அந்த spirit of cricket விருது உங்களுக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். கோபி உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்தான் (ச்சும்மா ஐஸ்) //

ஹி ஹி... ஐயோ ஐயோ....
குளிர் கூடவாக இருப்பதால் அந்த ஐஸை உங்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன்....
ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்ஷன்...

//வந்தியத்தேவன் கூறியது...
அடப்பாவி முந்திவிட்டாயே. உங்கள் பாணியில் அழகாக எழுதியிருக்கின்றீர்கள். ஆனாலும் எனக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஒரு சிறிய விபத்தால் என் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது. //

எல்லாம் தங்களின் தயவால்தான் குருவே....
அதனால்தான் ஆரம்பத்திலேயே குருவணக்கம் போட்டிருக்கிறேன். :)

என்ர பாணியா?
அப்பிடியெண்டா என்ன அண்ணா?
எனக்கெண்டு ஒரு பாணி இல்லயே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றியண்ணா....

// சந்ரு கூறியது...
அப்போ நீங்கள் எல்லாவற்றிலும் கில்லாடி என்று சொல்லுங்கள். //

இதில உள்குத்து ஏதோ இருக்கிறமாதிரி இருக்குதே?
எல்லாவற்றிலும்? ம்ஹ்ம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு அண்ணா...

//வேந்தன் கூறியது...
//அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.//
:( .... :)
நல்ல அனுபவ பதிவு.
எனக்கு கிறிக்கெற் மீது ஆர்வம் குறைவு.... //

நன்றி வேந்தன் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும்...

// மருதமூரான். கூறியது...
என்னது நன்றியா…… இவ்வளவு நேரமும் எவ்வளவு பொறுமையா வாசிச்சனான். இந்த நன்றியைப் பார்த்துத்தான் கோபம் வருது. இந்த பொடியன் நல்லதானே விளையாடியிருக்கிறான். என்னத்துக்கு நன்றியெல்லாம்.//
நிறையவே அறுத்திற்றனோ எண்டு ஒரு பயம் தான்...
அதுதான் உங்கள ஐஸ் பண்ணுறதுக்கு,.. ஹஜி ஹி...

//நல்ல அனுபவம் கோபி. ஆனாலும், அந்த பிடியெடுப்பை மறைத்து சாதனை புரிந்த கோபி ஏன் பிற்காலத்தில் அணியில் விளையாடவில்லை என்பதை சொல்லவில்லையே. //
அது சும்மா....
சின்னச்சின்ன எதிர்ப்புகள் வீட்டில... ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருதமூரான் அண்ணா...

//VARO கூறியது...
//நிறைய அலட்டப்படாது கண்டியளோ...//

ரொம்ப பிடிச்சிருக்கு…//

உங்களுக்குப் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியே... :P

//சென்ரலைட் விளையாட்டுக்கழகம் நீர் கொழும்பு வந்ததில ஒரு வீரனை இழந்திட்டுது போல //

அவங்கள் சந்தோசப்பட்டிருப்பாங்கள்... ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரோ....

//புல்லட் கூறியது...
அடப்பாவி.. நீ கிரிக்கட் விளாண்டினியா? பாவம் பந்து..//

இரட்டை அர்த்தம் ஏதும் இல்லையே? ஹி ஹி....
நம்ப மாட்டியளோ நான் சொன்னா...

//நல்ல அனுபவ கட்டுரை தம்பி .. இப்பிடி இன்னும் எழுது.. மலேசிய உறவுகளின் தொடர்ச்சியாக உன் தம்பட்டம் நன்றாகத்தான் இரக்கிநது //
மலேசியாவா?
ஐயோ நான் இல்ல....

நன்றி அண்ணா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் புல்லட் த கிரேட்....

//முக்கியமான இடத்தில வைக்கிற 'guard' ஐ வீட்ட விட்டிற்றுப் போட்டன். அந்த நாள் பாத்து அந்த பயிற்சியாளர் எனக்கு வலைப்பயிற்சியல துடுப்பெடுத்தாட வாய்ப்பு வந்திற்றுது. அண்டைக்கு என்ர முறை இல்ல எண்டாலும் 2 பேர் பயிற்சிக்கு வராம விட வாய்ப்பு (ஆப்பு....) என்னத் தேடி வந்திற்றுது.. சரியெண்டு அண்டைக்கு 'சேதாரமில்லாம' துடுப்பெடுத்தாடி முடிச்சிற்றன்.//

ஐயோ தப்பிட்டனே கோபி...

//சவாலுக்காக 5,6 தரம் குனிஞ்சு எழும்பிற்று திரும்பவும் துடுப்பெடுத்தாடினா அடுத்த பந்து நெஞ்சில. அவ்வளவு தான்... வலியெண்டா வலி தா//

அச்சா..அச்சா

முதல் பந்திலயே போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்திற்றன். பெருத்த அவமானம்.

ஹி,,ஹி...

// Balavasakan கூறியது...
//முக்கியமான இடத்தில வைக்கிற 'guard' ஐ வீட்ட விட்டிற்றுப் போட்டன். அந்த நாள் பாத்து அந்த பயிற்சியாளர் எனக்கு வலைப்பயிற்சியல துடுப்பெடுத்தாட வாய்ப்பு வந்திற்றுது. அண்டைக்கு என்ர முறை இல்ல எண்டாலும் 2 பேர் பயிற்சிக்கு வராம விட வாய்ப்பு (ஆப்பு....) என்னத் தேடி வந்திற்றுது.. சரியெண்டு அண்டைக்கு 'சேதாரமில்லாம' துடுப்பெடுத்தாடி முடிச்சிற்றன்.//

ஐயோ தப்பிட்டனே கோபி...////

ஏனய்யா இந்தக் கொலைவெறி?
முடியல...

//சவாலுக்காக 5,6 தரம் குனிஞ்சு எழும்பிற்று திரும்பவும் துடுப்பெடுத்தாடினா அடுத்த பந்து நெஞ்சில. அவ்வளவு தான்... வலியெண்டா வலி தா//

அச்சா..அச்சா//

ஆகா....


//முதல் பந்திலயே போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்திற்றன். பெருத்த அவமானம்.

ஹி,,ஹி... //

ஏனிந்தக் கொலைவெறி?
நான் உங்களுக்குப் பண்ணினதுக்குப் பழிவாங்கலா?
சரி நடக்கட்டும் நடக்கட்டும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா அண்ணே....

அப்போ கண்டிப்பா நீங்க போல்ட்ல
ஆட்டமிழக்க சந்தர்பமே இல்லை எண்டு நினைக்றேன்.
இடையில் ஒரு செண்டிமென்ட்..
அருமை..
நான் இங்கு கிரிக்கெட் விளையாடும் போது படாத இடத்தில் பந்து பட்டு ஒரு கிழமை ஆஸ்பத்திரியில் இருந்தேன். இப்போ எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது.(நான் உடம்பை சொன்னேன்)

வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது..

மன்னிப்புக்கோராமைக்கான மனவருத்தம் உங்கள் நல்ல மனத்தைக் காட்டியுள்ளது..

அதுசரி, உங்கள் உடலில் எத்தனை பந்துகள் புதைந்தன? ;)

ஒரு வலைப்பதிவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஒழுங்கு செய்வோமே..

// இளந்தி... கூறியது...
அப்போ கண்டிப்பா நீங்க போல்ட்ல
ஆட்டமிழக்க சந்தர்பமே இல்லை எண்டு நினைக்றேன்.
இடையில் ஒரு செண்டிமென்ட்..
அருமை..
நான் இங்கு கிரிக்கெட் விளையாடும் போது படாத இடத்தில் பந்து பட்டு ஒரு கிழமை ஆஸ்பத்திரியில் இருந்தேன். இப்போ எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது.(நான் உடம்பை சொன்னேன்) //

கவனம் அண்ணே...
வாழ்க்கை அண்ணே....

நான் ஒருக்கா போல்ட் ஆகியிருக்கிறேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

//LOSHAN கூறியது...
வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது..//

நன்றியண்ணா...

//மன்னிப்புக்கோராமைக்கான மனவருத்தம் உங்கள் நல்ல மனத்தைக் காட்டியுள்ளது..//

'என்ன ரொட்ப நல்லவன்' எண்டு சொல்லீற்றாங்களே எண்டு வடிவேல் அழுதது தான் ஞாபகம் வருகிறது.

பொதுவாக அனைவருக்கும் இந்த உணர்வு இருக்கும் தானே?


//அதுசரி, உங்கள் உடலில் எத்தனை பந்துகள் புதைந்தன? ;) //

விளையாடும் போது இந்தளவுக்கு இல்லை நான்... ஹி ஹி...

//ஒரு வலைப்பதிவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஒழுங்கு செய்வோமே.. //

இலங்கன் அடிக்கடி எனக்கு சொல்லும் விடயம் இது,..
நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

நல்ல அனுபவ கட்டுரை

கோபி உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவன்தான் hehe...

am proud of u da kopi colour kopi

//நினைவுகளுடன் -நிகே- கூறியது...
நல்ல அனுபவ கட்டுரை //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

//முகிலினி கூறியது...
கோபி உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவன்தான் hehe...//

ஹி ஹி....
நல்லா மொக்கை போடுறீங்க...


//am proud of u da kopi colour kopi //

ம்ஹம்...
ஆப்பு...
ம்.. ம்..
ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..............................