க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஆகா... சர்ச்சைப் பதிவர் தொடங்கிற்றான்யா எண்டு யோசிக்கப்படாது...

இரண்டு பதிவுகளை ஒன்றாக போடுவதால் தான் தலைப்பு ஒருமாதிரி மார்க்கமாக இருக்கிறது....

நண்பர்களுக்கு வணக்கம்....

நிறைய நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி....

இலங்கைப் பதிவர்களின் இனிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை (13-120-2009) 571/15 காலிவீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும் விடயத்தை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்....

நிகழ்ச்சி நிரலும் ஏற்கனவே பரவலாக அனைவராலும் பதிவிடப்பட்டுவிட்டது.

இச்சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் வருமாறு

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்


இலங்கையிலிருந்து பதிவிடும் அனைவரையும் முடியுமானவரை தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கலந்துகொள்ள முடியாதவர்களும், புலம்பெயர்ந்த இலங்கைப் பதிவர்களும், ஏனைய விரும்பியோரும் இந்தச் சந்திப்பை http://www.livestream.com/srilankatamilbloggers என்ற முகவரியூடாக நேரடியாகக் கண்டு மகிழலாம்.

இதுவரை பதிவிடாத பதிவிட விரும்புவோரும், வலைப்பதிவுகளின் வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாத நண்பர்கள் தயவுசெய்து http://srilankantamilbloggers.blogspot.com/ என்ற முகவரிக்குச் சென்று உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வரவை உறுதிப்படுத்துவது ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும் என்பதால் முடிந்தவரை விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

எங்களது கூகுள் குழுமத்தில் இணையாத இலங்கைப் பதிவர்களை http://groups.google.com/group/srilankantamilbloggers என்ற குழுமத்தில் இணையுமாறும் கேட்டுக் கொள்கிறோம்....

இதுபற்றிய மேலதிக விபரங்களை

http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/524904f0d3ba6e17
என்ற முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்.சரி...
தலைப்பின் ஒருபகுதிக்கான பதிவு....

நாய்கள் யோகாசனம் செய்தால் எப்படி இருக்கும்?

பதிவின் நீளத்தை குறைக்கும் முகமாக படங்களை சிறியதாக்கி இட்டிருக்கிறேன்...
படங்களை பெரிதாக்க படங்களில் அழுத்திப் பாருங்கள்....
29 பின்னூட்டங்கள்:

யோகாசனம் செய்யும் போதும் நாயின் வால் நிமிரவில்லை...ஹிஹி

அருமை...:)

என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....

//ஆதிரை கூறியது...
என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ...//

ஹா ஹா ஹா, புரிகிறது :))

நானும் ஏதோ மறுபடியும் சொத்தி ரீவிய கிளப்புறான் எண்டல்லோ நினைச்சன்.
நன்றியுள்ளவைகள் இப்படித்தான்.

ஏன்யா என்னையும் நாயையும் சேர்த்து நாய் யோகா+ஆசனம் எனஎழுதியிருக்கீங்க?

எல்லாம் நல்லாதானே போனிச்சி? அப்புறம் ஏன்?

அருமை.

யோகாசனப் படங்கள் அருமை

;-]
ஹி..ஹி...

சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நானும் வருகிறேன்.

ஆதிரை கூறியது...
//என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//

அதே போலவே கோபியின் நையாண்டியையும் மாற்ற முடியாது.

சந்திப்புக்கு வருகிறேன்....அதுசரி இந்த நாய்களுக்கு யோகாசனம் சொல்லிக்கொடுப்பவர் யார்?

நம்ம பதிவர் யோகாவை வைத்து ஏதும் காமடி பண்ணலையே...

// Bavan கூறியது...
யோகாசனம் செய்யும் போதும் நாயின் வால் நிமிரவில்லை...ஹிஹி

அருமை...:)//

உற்றுக் கவனிக்கிறியள் என?
சரி சரி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவன்....

// ஆதிரை கூறியது...
என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//

அப்படியா?
எனக்குத் தெரியாதே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரை அண்ணா...

//Subankan கூறியது...
//ஆதிரை கூறியது...
என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ...//

ஹா ஹா ஹா, புரிகிறது :))//

ஏனய்யா இந்தக் கொலைவெறி?
அவர் சும்மா தான் சொன்னவர்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபா அண்ணா...

//ilangan கூறியது...
நானும் ஏதோ மறுபடியும் சொத்தி ரீவிய கிளப்புறான் எண்டல்லோ நினைச்சன்.
நன்றியுள்ளவைகள் இப்படித்தான். //

என்னச் சர்ச்சைப் பதிவர் எண்டே முத்திரை குத்திற்றியள் என?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
ஏன்யா என்னையும் நாயையும் சேர்த்து நாய் யோகா+ஆசனம் எனஎழுதியிருக்கீங்க?

எல்லாம் நல்லாதானே போனிச்சி? அப்புறம் ஏன்? //

நாய் யோகா எண்டு தான் முதலில தலைப்புப் போட்டன்.... பிறகு தான் அதில உள்குத்து இருக்கிற மாதிரி மற்றவங்களுக்குத் தெரியும் எண்டு நாய் யோகாசனம் எண்டு போட்டன்... இப்பிடிப் போட்டாலும் பிழையா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணா...

// தியாவின் பேனா கூறியது...
அருமை. //

நன்றி....

//தர்ஷன் கூறியது...
யோகாசனப் படங்கள் அருமை //

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

//Balavasakan கூறியது...
;-]
ஹி..ஹி... //

ஹி ஹி....
சிரிப்புக்கு நன்றி....

//வேந்தன் கூறியது...
சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். //

நிச்சயமாக....
பதிவர்கள் அனைவரும் சேர்ந்துழைப்பதால் வெற்றி நிச்சயம்...

நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்....

// B.Logeswaran கூறியது...
நானும் வருகிறேன். //

நல்லது...
ஒரு இடத்தில் உறுதிப்படுத்தினால் போதுமானது....

ஆதிரை கூறியது...
//என்னதான் செய்தாலும் - சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது பாருங்கோ....//

அதே போலவே கோபியின் நையாண்டியையும் மாற்ற முடியாது. //

அடேய்.....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....

// சந்ரு கூறியது...
சந்திப்புக்கு வருகிறேன்.... //

வாருங்கள்... சந்திப்போம்....


// அதுசரி இந்த நாய்களுக்கு யோகாசனம் சொல்லிக்கொடுப்பவர் யார்?

நம்ம பதிவர் யோகாவை வைத்து ஏதும் காமடி பண்ணலையே... //

graphics ஆக இருக்கலாம்....

எனக்கும் யோகாவிற்கும் குழப்பத்தை ஏற்படுத்தப் பாக்கக் கூடாது.... ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

டேய்.. கனககோபி..உனக்கு வேற வேலையே இல்லையா(நானா முதலாவது?...)
1. எல்லாருக்கும் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை..
2. உன்ர பின்னூட்டதினால நல்ல பதிவுகள்,சிறந்த பின்னூட்டங்கள் பாதிக்கப்படுகின்றது
3.உனக்கு வேற வேலை இல்லாட்டி எதாவது வாழ்க்கைக்கு பிரியோசனமா படி...அல்லது உடம்பயாவது குறை...சும்மா பின்னூட்டம் எர்ற பெயரில வதைக்காதை(இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல..பல காலமாய் கவனித்து வருகின்றோம்..)...
4.எல்லத்துக்கும் முதலாவதாக அண்ணன்மார்களுக்கு வாளி வைப்பதை குறை...
5.உன்னில நான் மட்டுமல்ல பதிவு வாசிக்கின்ற பல பேர் கடுப்புடன் என்னோட பகிர்ந்து கொண்டார்கள்...

// பெயரில்லா கூறியது...
டேய்.. கனககோபி..உனக்கு வேற வேலையே இல்லையா(நானா முதலாவது?...)//
எனக்கு வேல இருக்கு... கட்டாயம் சொல்லோணுமா?
அதுவும் தன்ர பெயர சொல்ல முடியாத பெயரிலிக்கு இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.
வார்த்தைகளில் கவனம் வேண்டும்.


//1. எல்லாருக்கும் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை..//
உங்களை இந்தப் பதிவில் பின்னூட்டமிடச் சொன்னேனா?
இலங்கைத் தமிழப் பதிவர் வலைத்தளத்தில் தான் வருகையை உறுதிப்படுத்தச் சொன்னேன்.
கண்ணில் ஏதாவது குளறுபாடா?


//2. உன்ர பின்னூட்டதினால நல்ல பதிவுகள்,சிறந்த பின்னூட்டங்கள் பாதிக்கப்படுகின்றது//
நீங்கள் ஒரு பதிவரா?
உங்கள் பதிவு எனது பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டால் என்னிடம் நேரடியாகச் சொல்லுங்கள். நான் எனக்கு தெரிந்தவர்களின் தளங்களில் மட்டும் தான் சற்று அதிகமாக பின்னூட்டுவேன்.
அதுவும் அவர்கள் அதைத் தப்பாக எண்ண மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான்.
ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?


//3.உனக்கு வேற வேலை இல்லாட்டி எதாவது வாழ்க்கைக்கு பிரியோசனமா படி...அல்லது உடம்பயாவது குறை...சும்மா பின்னூட்டம் எர்ற பெயரில வதைக்காதை(இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல..பல காலமாய் கவனித்து வருகின்றோம்..)...//
என்ர உடம்பக் குறைக்கிறதப் பற்றி ஒரு பெயரில்லாத, பெயர் சொல்லத் தைரியமில்லாத காழ்ப்புணர்ச்சி கொண்ட 6 அறிவு மனிதனிலிருந்து வேறுபடுகின்ற ஒரு ஜந்து சொல்லத் தேவையில்லை.
பின்னூட்டம் எனதும், அந்தத் தள உரிமையாளருக்குமான பிரச்சினை.
அதற்குள் நீங்கள் வரத் தேவையில்லை.


//4.எல்லத்துக்கும் முதலாவதாக அண்ணன்மார்களுக்கு வாளி வைப்பதை குறை...//
ஏன் வாளி வெட்டுதா?
நான் யாருக்கு வாளி வைத்தேன்?
வாளி வைத்தால் எனக்கு 10 ரூபா கிடைக்குமா?
நான் எல்லோரிடமும் இப்பிடித் தான் பழகுவேன்.
அதைத் தவிர மூத்த பதிவர்களை வாளி பிடித்து பிரபலமாகும் எண்ணம் எனக்கில்லை.
இது எனது பொழுதுபோக்கிற்கான தளம் மட்டுமே.


//5.உன்னில நான் மட்டுமல்ல பதிவு வாசிக்கின்ற பல பேர் கடுப்புடன் என்னோட பகிர்ந்து கொண்டார்கள்... //
இவ்வளவு கதைக்கும் நீங்களும், உங்களைப் பொன்றவர்களும் எனக்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாமே?

என்மீது கொண்ட தனிப்பட்ட கோபத்திற்கு ஏனிந்த தனிப்பட்ட தாக்குதல் கொண்ட பின்னூட்டம்?

@பெயரில்லா..
ஐயா பெயரில்லாப் பெரியவரே..
உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் எதற்கும் ஒரு முறையுண்டு,
1. டேய் என்று ஆரம்பித்தீர்கள், இதிலிருந்தே தெரிகிறது உங்கள் படிப்பு என்ன, உங்கள் சூழல் எப்படி, என்று இதில் நீங்கள் கோபியைப் பற்றிக் கதைக்கிறீத்கள்..
2.எம் பதிவர்களெல்லாம் தைரியசாலிகள் அவர்கள் தம் கருத்துக்களை நேரடியாகக்கூறுவார்களே தவிர "பெயரில்லாமல் வருவதில்லை

தைரியமிருந்தால் பெயருடன் வந்து பின்னூட்டமிடுங்கள்...

பெயரில்லாதவரே...

உங்கள் கருத்துக்கள் நல்ல கருத்துக்களாக, விமர்சனங்களாக இருந்தால் உங்கள் பெயரிலே சொல்வதற்கு ஏன் தயக்கம்.


நீங்கள் பயன் படுத்திய வாரத்திலிருந்து நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் கோபியா, நீங்களா நாகரிகமானவர், நல்ல பதிவர் என்பதனை.

நீங்கள்தான் உங்கள் பின்னுட்டத்திலே தகாத வார்த்தை பிரயோகித்து பதிவையே அசிங்கம் செய்திருக்கிறிர்கள். அதற்குள் மற்றவரை திருத்தப் பார்க்கிரிர்களா? முதலில் நீங்கள் திருந்துங்கள் அப்புறம் மற்றவரை திருத்த முயற்சி செய்யுங்கள். முதலில் நாகரிகமான முறையில் பின்னுட்டமிடுங்கள்.

நன்றி பவன் மற்றும் சந்ரு அண்ணா...

பிழை என்மீதும் உள்ளது. விட்டுவிடுங்கள்.

அதை எனக்கு தனிப்பட்ட ரீதியில் சொல்லியிருக்கலாம்.

சரி...
இனி நான் கவனமாக இருந்து கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஓ அதுவா இது.. ரொம்ப சிரிச்சாங்க..[இதுஎண்ட தளத்துக்குமுங்க

http://niroodai.blogspot.com ]