க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உங்களை ஐயா என்றழைப்பதா, கடவுள் என்றழைக்க வேண்டுமா, இல்லை அவதாரம் என்றழைப்பதா அல்லது எனக்கு விருப்பமான 'புத்திசாலித்தனமான திருடன்' என்றழைப்பதா தெரியவில்லை....

உங்களுக்கு இண்டைக்கு 83 ஆவது பிறந்தநாளாம்...
பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் எல்லாம் கொடுப்பார்கள். உங்களுக்கு என்னத்த ஐயா கொடுப்பது?
கவிதை எழுதி வாழ்த்துப்பா எண்டு குடுக்கலாம் எண்டு பாத்தா அந்த கருமாந்தரமும் எனக்கு வராது....
எண்டாலும் உங்களை வாழ்த்தி ஒரு பதிவு போடலாம் எண்டு நினச்சன்....

என்னதான் இருந்தாலும் இளைஞர் ஐயா கருணாநிதியை விட உங்களுக்கு வயது குறைவு என்பது கவலைதான்...
என்றாலும் இருவரும் ஒரே சூலில் பிறக்க வேண்டியவர்கள்...
உங்கள் இருவரின் இராஜதந்திரமும் என்னைக் கவர்ந்தவை.

உயர்தரப் பரீட்சையில் நான் கோட்டைவிட்ட பிறகு எனக்கு வந்த கவலைகளை எல்லாம் துடைத்து வைத்தவர் நீங்களய்யா.
'youtube இல இவ்வளவு ஆதாரத்துடன் இவ்வளவு வீடியோக்கள் இருந்தும் இந்த மனுசன் உயிரோட இருக்கேக்க, தொடர்ந்து ஏமாத்தேக்க நான் ஏன் கவலைப்படோணும்' என்ற உணர்வை தந்தவர் நீங்கள் ஐயா.
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற அந்த தைரியத்தையும் தந்தவர் நீங்கள் ஐயா.

ஊர்ல தந்திரங்கள் செய்யும் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் கூடும்போது நான் மொக்கை ஏதும் போட்டா 5,6 சனமாவது வராதா என்ற தைரியத்தை தந்தவர் நீங்கள்.
இன்று அவதாரம் என்று கிளம்பியிருக்கும் பலரின் மானசீகக் குரு நீங்கள்.
உங்களால் மட்டும் எப்படி ஐயா?

உங்களின் பக்தனாக மாறவிரும்பினாலும் எனது மண்டையில் இருக்கும் அந்தச் சிறிய மூளை என்னை தடுக்கிறது ஐயா.
ஆனால் உங்களால் எப்படி இவ்வளவு கூட்டத்தையும் சேர்க்க முடிந்தது?
ரஜினிகாந் படம் பார்ப்பீர்களோ? அவர் சொல்வது போல 'இது தானா சேர்ந்த கூட்டம்' என்பீர்களோ?

அவனவன் ஒரு பெண்ணை கிண்டல் செய்ததற்கே சிறையில் வாடுகிறார்கள்...
நீங்கள் 'அவ்வளவும்' செய்த பின்னர் ராஜபோகமா இருக்கும் இரகசியம் என்ன ஐயா?
உண்மையிலேயே நீங்கள் மந்திரவாதி தானோ?

உங்களுக்கு பரிசு தர விரும்பினாலும் முடியவில்லை ஐயா...
என்றாலும் உலகம் முழுதும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்களே...
அது உங்களுக்குப் போதும் என்று நம்புகிறேன்...
என்றாலும் உங்களின் பழைய மந்திர தந்திரங்கள் சிலவற்றை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் ஐயா...
அடுத்த முறை இன்னும் கவனமாக செய்யுங்கள்....என்றும் உங்கள் பண்பிற்குரிய மானசீக சீடன்
கனககோபி.
எல்லாப் புகழும் உங்களுக்கே.

31 பின்னூட்டங்கள்:

வாழ்க ! தொடரட்டும் நற்பணி

மன்னிக்கவும் கோபி தலைப்பை மட்டும் பார்த்து விட்டு மனம் வெறுத்து போகப் பார்த்தேன். இருந்தாலும் உள்ளுணர்வு ஏதோ சொல்ல வந்துப் பார்த்தேன். அருமை என்ன சொல்லி என்ன நம் ஜனங்கள் பஜனை பாடிக் கொண்டு திரியத்தான்போகுது.

//அடுத்த முறை இன்னும் கவனமாக செய்யுங்கள்....//

அருமை!

கலக்கல் கோபி, ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், உங்கள் பதிவுதானா என்று. அருமை

என்ன எங்க கட்சியில் இருந்து விலகிவிட்டின்களோ.

மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் மனிதர்களைப் பற்றி பதிவு போடும் உங்களுக்கு எதிராக அம்மா பகவானிடம் காசு கொடுத்து சும்மா முறையிடுவேன். .

ஹாய் கோபி...
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்... எதுக்கும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்....

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

யார் மீது குற்றம் சொல்ல,
படித்த பல புத்திஜீவிகளே இந்த ஏமாற்று வித்தைகளுக்கு பின்னால் செல்வதையா? அல்லது புத்திசாலித்தனமாக ஏமாற்றும் இந்த நவயுக திருடனையா?

‘தனி மனிதனை’ கடவுளாக மாற்றுகின்ற அல்லது உருவாக்குகின்ற மனநிலையை மனிதன் எப்போது விடுகின்றானோ அப்போதுதான் நல்ல சமுதாயம் சாத்தியம்.

(இந்தப் பதிவுக்கு, இந்த பின்னூட்டம் பொருத்தமோ தெரியவில்லை கோபி. நான் எந்த அவதார புருஷர்களையும் குற்றம் அல்லது குறை சொல்லவில்லை. அது ராமனாக இருந்தாலும். ஏனென்றால் தங்களின் பிழைகளேயே நீதியாக நிறுவிச் செல்ல இந்த அவதார புருஷர்களாலேயே முடிகிறது).

// சித்தூர்.எஸ்.முருகேசன் கூறியது...
வாழ்க ! தொடரட்டும் நற்பணி //

நன்றி நன்றி....

//தர்ஷன் கூறியது...
மன்னிக்கவும் கோபி தலைப்பை மட்டும் பார்த்து விட்டு மனம் வெறுத்து போகப் பார்த்தேன். இருந்தாலும் உள்ளுணர்வு ஏதோ சொல்ல வந்துப் பார்த்தேன். அருமை என்ன சொல்லி என்ன நம் ஜனங்கள் பஜனை பாடிக் கொண்டு திரியத்தான்போகுது. //

உங்களப் போல வேற ஆக்களும் வராம விட்டிருப்பாங்களோ?

ம்....
இவர்கள் திருந்தமாட்டார்கள்... என்ன செய்ய...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்ஷன்...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
//அடுத்த முறை இன்னும் கவனமாக செய்யுங்கள்....//

அருமை! //

நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

//Subankan கூறியது...
கலக்கல் கோபி, ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், உங்கள் பதிவுதானா என்று. அருமை //

என்னுடையது தான்...
ஏனய்யா இப்படி அவமானப்படுத்துறீர்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாங்கன் அண்ணா....

// சந்ரு கூறியது...
என்ன எங்க கட்சியில் இருந்து விலகிவிட்டின்களோ.

மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் மனிதர்களைப் பற்றி பதிவு போடும் உங்களுக்கு எதிராக அம்மா பகவானிடம் காசு கொடுத்து சும்மா முறையிடுவேன். . //

அதென்ன காசு குடுத்து சும்மா முறையிடுறது?
என்ன கொடுமை இது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு அண்ணா...

// யசோ...அன்பாய் உரிமையோடு கரனிடமிருந்து... கூறியது...
ஹாய் கோபி...
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்... எதுக்கும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.... //

ம்... ம்...
எம் பலீவனம் தான் அவர்களின் பலம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// மருதமூரான். கூறியது...
யார் மீது குற்றம் சொல்ல,
படித்த பல புத்திஜீவிகளே இந்த ஏமாற்று வித்தைகளுக்கு பின்னால் செல்வதையா? அல்லது புத்திசாலித்தனமாக ஏமாற்றும் இந்த நவயுக திருடனையா?

‘தனி மனிதனை’ கடவுளாக மாற்றுகின்ற அல்லது உருவாக்குகின்ற மனநிலையை மனிதன் எப்போது விடுகின்றானோ அப்போதுதான் நல்ல சமுதாயம் சாத்தியம்.

(இந்தப் பதிவுக்கு, இந்த பின்னூட்டம் பொருத்தமோ தெரியவில்லை கோபி. நான் எந்த அவதார புருஷர்களையும் குற்றம் அல்லது குறை சொல்லவில்லை. அது ராமனாக இருந்தாலும். ஏனென்றால் தங்களின் பிழைகளேயே நீதியாக நிறுவிச் செல்ல இந்த அவதார புருஷர்களாலேயே முடிகிறது). //

நான் இதுசம்பந்தமாக பதிவு இடாமல் விடத் தான் நினைத்தேன்...
ஆனால் என் வீட்டுக்குள்ளேயே இவர்கள் புகுந்திருப்பதைக் கண்டு எனக்கு கோபம் தீராமல் தான் இந்தப் பதிவிட்டேன்.

நீங்கள் சொல்வது சரி...
நாம் தான் திருந்த வேண்டும்...

அவர்கள் எல்லோரும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள், நாம் சமயம், கடவுள் என்றவுடன் முட்டாள்களாகிவிடுகிறோம்...
என்ன சொல்ல....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

அப்பிடிப்போடுறா ராசா..

என்ட அப்பாவோட வேலைசெய்த ஒரு மனுசன் ஓரு பெரீய்ய சாய்பாபா பக்தர்.. அவர் பாபாவை பற்றி விடுற பீலா எல்லாம் கேட்டுட்டு சனம் கொடுப்புக்க சிரிச்சிட்டு பொயிடும்.. அப்ப என்ன நடந்துதெண்டால் புண்ணியவான் ஒருக்கா தடல்புடலா புட்டபர்த்திக்கு ப்ளைட் எடுத்துப்போய் சாயிபாபா சீட்டுக்கு போகும் பொது எட்டி க்காலைப்பிடிச்சிருக்காப்பல.. விட்டான் பாரு பாபா ஒரு உதை.. புளுகருக்கு கொடுப்புப்பல் புடுங்கி 3 இடத்த தையல் ... பொத்திக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து இரந்திருக்கார்.. வருத்தம் பாக்கப்பொன சனமெல்லாம் ஒரு நெஸ்டமோல்ட் போணிய குடுத்துட்டு எங்கபாபா புடுங்கின கொடுப்பு பல்லை காட்டுங்க பாப்பம் எண்டு கேட்டு கொட்டின ”ச்ச்” சில பயபுள்ள பாபா படத்தை பாத்ருமில தலைகீழா கொழுவி விட்டிருந்தானாம்.. ம்ம் உந்த சனம் திருந்தாதுகள்..

நிஜக்கதை

// புல்லட் கூறியது...

நிஜக்கதை //

பாத்ரூமில தலைகீழா கொழுவின கதை நல்லாயிருக்கே....
நல்ல கதை...
உந்தக்தையை ஊரெல்லாம் பரப்போணும்....

சனம் திருந்தாதுகள் தான்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புல்லட் அண்ணா...

அடி சக்கை நீங்க ரொம்ப தில்லான ஆசாமி தான்...................... சிறு வயதில் யாழ்ப்பாணத்தில் இவரின் ஆரப்பட்டம் கொஞ்சமே.. விபூதி சிவலிங்கம் எண்டு சனம் விதம விதமா சத்தி எடுத்ததுகள் என்னையும் அப்ப சாயி சமித்தியில சேத்து விட எனக்கு அங்க குடுக்கிற சூடான பால் ரொம்மப பிடித்து போய் அதறகாகவே தவறாமல் போவேன்..
எங்க வீட்டிலே இன்னும் சில்லர் இருக்கிறார்கள் நான் வாய்திறக்க முடியாது

//Balavasakan கூறியது...
அடி சக்கை நீங்க ரொம்ப தில்லான ஆசாமி தான்...................... சிறு வயதில் யாழ்ப்பாணத்தில் இவரின் ஆரப்பட்டம் கொஞ்சமே.. விபூதி சிவலிங்கம் எண்டு சனம் விதம விதமா சத்தி எடுத்ததுகள் என்னையும் அப்ப சாயி சமித்தியில சேத்து விட எனக்கு அங்க குடுக்கிற சூடான பால் ரொம்மப பிடித்து போய் அதறகாகவே தவறாமல் போவேன்..
எங்க வீட்டிலே இன்னும் சில்லர் இருக்கிறார்கள் நான் வாய்திறக்க முடியாது //

நான் ஆசாமி இல்லை... நான் அப்பாவி....

சூடான பால் குடிக்கிறதுக்காவா?
ரொம்ம்ம்ம்ம்ம்ப கேவலமா எல்லா இருக்கு.....

எங்கள் வீட்டிலும் உள்ளார்கள் ஐயா....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...

ரொம்ப தில்லான பதிவு,

லேட்டா பின்னூட்டினாலும் லேட்டஸ்ட்டா பின்னூட்டுகிறேன்..

அப்பு நானும் ஒரு வருசத்துக்கு முன்னால் பாத்தனான். அதுக்கு என்னப்பா செய்யிறது. பல்லிருக்கிறவன் பகோடா சாப்புடுறான் நாம என்ன செய்ய. இதெல்லாம் உழைக்கும் யுக்திகள். போதாததுக்கு ஒரு வெள்ளக்கார சின்னப் பொடியனையும்..........

நீங்கள் சொல்வது ரொம்ப சரி... பாபா வின் வழியை நாமும் பின்பற்றுவோம் ...

தலைப்பைப்[ பார்த்தவுடனேயே நினைத்தேன்.. அன்றே வாசித்தாலும் லேட்டாப் பின்னூட்டம் இடுவது நல்லது என நினைத்து இன்று வந்துள்ளேன்..

தேவையான பதிவு..
சாட்டையடி..

எங்கள் சனம் எப்ப தான் திருந்தப்போகுதோ?

நானும் கூட பலவருடம் இந்த மினிசன்ரை தீவிர பக்தனா இருந்தவன் தான்.. நான் மட்டுமில்லை குடும்பத்திலை பலரும்.. ஆனால் சின்ன வயசிலை..

என்னவோ தெரியா... பாடசாலை பருவத்திலேயே ஆர்வம் விட்டுப்போய் இந்தாளின்ரை ஆச்சிரமத்துக்கு போறதை விட்டுட்டம்..

மேடையிலை செய்தா மஜிக், இந்த மனிசர் செய்தா அபூர்வ சக்தி.. என்ன செய்ய கன சனத்துக்கு சிந்திக்கிற புத்தி இல்லை.

கடவுள் உண்மை, இருக்கு எண்டு நம்புறவன், இந்த ஏமாற்று வித்தைகளுக்கெல்லாம் சோடை போவது ஆச்சரியமானதல்ல..

அந்த கடவுள் என்ற கொள்கைய வைத்து தான், இந்த மத ஏமாற்றூக்களெல்லாம் நடக்குது..

ஆணிவேரை அறுக்காட்டி அழிக்கிறது கஷ்டம்...

பதிவுக்கு நன்றி கோபி.

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
ரொம்ப தில்லான பதிவு,

லேட்டா பின்னூட்டினாலும் லேட்டஸ்ட்டா பின்னூட்டுகிறேன்.. //

என்னய்யா தில் அது இது எண்டு பயப்பிடுத்திறீங்க?
நான் அப்பாவி....

ம்.. ம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணா...

// நாய்சேகர் கூறியது...
நீங்கள் சொல்வது ரொம்ப சரி... பாபா வின் வழியை நாமும் பின்பற்றுவோம் ... //

????!!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நாய்நாய்நாய் சேகர்... :)

//ilangan கூறியது...
அப்பு நானும் ஒரு வருசத்துக்கு முன்னால் பாத்தனான். அதுக்கு என்னப்பா செய்யிறது. பல்லிருக்கிறவன் பகோடா சாப்புடுறான் நாம என்ன செய்ய. இதெல்லாம் உழைக்கும் யுக்திகள். போதாததுக்கு ஒரு வெள்ளக்கார சின்னப் பொடியனையும்.......... //

வெள்ளைக்கார சின்னப்பெடியனா?
இது எனக்கெல்லாம் தெரியாது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இலங்கன்....

// LOSHAN கூறியது...
தலைப்பைப்[ பார்த்தவுடனேயே நினைத்தேன்.. அன்றே வாசித்தாலும் லேட்டாப் பின்னூட்டம் இடுவது நல்லது என நினைத்து இன்று வந்துள்ளேன்..

தேவையான பதிவு..
சாட்டையடி..

எங்கள் சனம் எப்ப தான் திருந்தப்போகுதோ? //

ம்...

நாங்கள் என்ன செய்ய அண்ணா?

பாப்பம் என்ன நடக்குது எண்டு..

சனம் தானாத் திருந்தினாத் தான் உண்டு....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

// மதுவர்மன் கூறியது...
நானும் கூட பலவருடம் இந்த மினிசன்ரை தீவிர பக்தனா இருந்தவன் தான்.. நான் மட்டுமில்லை குடும்பத்திலை பலரும்.. ஆனால் சின்ன வயசிலை..

என்னவோ தெரியா... பாடசாலை பருவத்திலேயே ஆர்வம் விட்டுப்போய் இந்தாளின்ரை ஆச்சிரமத்துக்கு போறதை விட்டுட்டம்..

மேடையிலை செய்தா மஜிக், இந்த மனிசர் செய்தா அபூர்வ சக்தி.. என்ன செய்ய கன சனத்துக்கு சிந்திக்கிற புத்தி இல்லை.

கடவுள் உண்மை, இருக்கு எண்டு நம்புறவன், இந்த ஏமாற்று வித்தைகளுக்கெல்லாம் சோடை போவது ஆச்சரியமானதல்ல..

அந்த கடவுள் என்ற கொள்கைய வைத்து தான், இந்த மத ஏமாற்றூக்களெல்லாம் நடக்குது..

ஆணிவேரை அறுக்காட்டி அழிக்கிறது கஷ்டம்... //

ஆனா சில கடவுள் நம்பிக்கையாளர்கள் இவர்களை வெறுக்கிறார்கள் தானே அண்ணா?

ஆனால் கடவுள் என்றது இல்லையென்றால் உதெல்லாம் நடக்காது எண்டுறது உண்மைதான்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

//மு.மயூரன் கூறியது...
பதிவுக்கு நன்றி கோபி. //

நன்றி அண்ணா....