இலங்கையிலிருந்து வெளியாகும் பொழுதுபோக்குச் சஞ்சிகையான 'இருக்கிறம்' ஏற்பாடு செய்த அச்சுலைச் சந்திப்பு நேற்று (02.11.2009)மாலை இடம்பெற்றது.
'அச்சு' ஊடகத்தினருக்கும் 'வலை'ப் பதிவர்களுக்குமிடையில் இணைப்பொன்றை ஏற்படுத்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மழை வந்து குழப்பிவிட ஏற்பாடுகள் ஒருகணம் ஆடிப்போயின.
எனினும் ஓரளவுக்கு சுதாகரித்துக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஆவன செய்தனர்.
சரி... இனி எனது தமிழில்....
நான் அச்சவலைச் சந்திப்புக்குப் போனதே பெரிய பமபல்.
எனக்கு இருக்கிறம் அலுவலகம் எங்க இருக்கு எண்டு தெரியாது. சரி எண்டு வந்தியண்ணாற்ற கேட்டன். அவரும் ஆதிரை அண்ணாற்ற கேள் எண்டார்.
ஆதிரை அண்ணா தான் அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் சரியான நேரத்துக்கு வரமுடியாது என்பதால் பதிவர் பால்குடி அண்ணாவ தொடர்பு கொள்ளுமாறு அவரின் தொடர்பு கொள்ளுமாறு கூறி அவரின் அலைபேசி இலக்கத்தைத் தந்தார்.
எனக்குப் பெரிய குழப்பம், அவரை பால்குடி என்று கூப்பிடுறதா அல்லது அவரின்ர உண்மையான பெயரில கூப்பிடோணுமா எண்டு.
சரி எண்டு முடிவே எடுக்காம அவருக்கு அழைப்பு ஏற்படுத்தி,
'ஹலோ... நான் கோபி கதைக்கிறன். கனககோபி எண்ட பெயரில பதிவிடுறனான். நீங்க பால்குடியா?' எண்டு கேட்டன்...
அவர் பயங்கரமா சிரிக்கத் தொடங்கிற்றார். எனக்கும் அப்ப தான் விசயம் விளங்கி நானும் பயங்கரமா சிரிச்சு ஒரு மாதிரி கதைச்சு முடிஞ்சிற்று.
சரி எண்டு அவரோட சேர்ந்து இருக்கிறம் அலுவலகத்திற்கு போனா அங்க தெரிஞ்ச ஒரு முகத்தையும் காணேல.
(பிறகு தான் விளங்கிச்சு, எனக்கு நிறைய முகங்களைத் தெரியாது எண்டு. படுபாவிகள்... 10, 15 வருசத்துக்கு முதல் எடுத்த புகைப்படங்கள வலைப்பதிவில் தங்கட புகைப்படமா போட்டிருக்கிறாங்க.)
பிறகு ஒருவாறு இறக்குவானை நிர்ஷன் மற்றும் யோ வொய்ஸிடம் அறிமுகமானேன். மன்னார் அமுதனை நேரடியாக அடையாளம் கண்டுகொண்டேன்.
பிறகு கொஞ்சம் (கொஞ்சமா.... 3 மணிக்கு சந்திப்பு எண்டா 3.45 வாறது கொஞ்சம் பிந்தியா?) பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார்.
(வந்தியண்ணாவின் பச்சிளம் பாலகர் சங்க உறுப்பினர் பதவி ஆபத்தில் இருப்பது வேறுகதை)
பிறகு லோஷன் அண்ணா வந்தார். பிறகு மருதமூரான் அண்ணா வந்தார்.
அப்பாடா எண்டு சுபாங்கனும் நானும் கூட்டணி அமைச்சுக் கொண்டம்.
பிறகு புற்தரைக்குப் போய் நாங்கள் அச்சுவலைச் சந்திப்பை பதிவர் சந்திப்பாக மாற்றி 5,6 பதிவர்கள் ஒன்றாக கூடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
பதிவர்களில் இறக்குவானை நிர்ஷன் மட்டும் முன்னனுக்குப் போயிருந்து அழகாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் மூலமாகத் தான் அங்கே என்ன நடந்தது என்பதை அறியப் போகிறோம் என்பது வேறு கதை.
(லோஷன் அண்ணாவும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் ஊடகவியலாளரும் என்பதால் அவர் தனிப்பிரிவு.)
நிறைய இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அச்சு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்திலிருந்து நமது மூத்த, பிரபல பதிவர் ஒருவரது இளவரசி ஒருவர் வரவில்லை என அவர் கவலைப்படுவதை பதிவிடுமாறு இன்னுமொரு பிரபல, மூத்த பதிவர் என்னைக் கேட்டுக் கொண்டாலும் மூத்த,பிரபல பதிவர் பாவம் என்பதால் அதைப் பற்றிப் பதிவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ;)
(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)
சந்திப்பில் இருக்கிறம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களைப் பற்றி சில விவாதங்கள் இடம்பெற்றாலும் இருக்கிறம் சஞ்சிகையைப் பற்றிக் கதைக்கின்ற உரிமை, தகுதி எனக்கில்லாததால் அதைப்பற்றிக் கதைக்கவிரும்பவில்லை.
இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகளில் இதுவரை 5 அல்லது 6 சஞ்சிகைகளைத் தான் வாங்கியிருக்கிறேன்.
ஒரு சஞ்சிகையை வாங்கிப்படிக்காமல் அதைப்பற்றி விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
(இருக்கிறம் சஞ்சிகையை வாங்காததற்கு காரணம் அவர்களது உள்ளடக்கங்கள் சரியில்லை என்பதால் அல்ல. பொதுவாகவே பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை நான் வாங்குவதில்லை. இந்தியச் சஞ்சிகைகளை வாங்கியதே கிடையாது.)
வேறென்ன...
பதிவர்களின் அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டதால் இனி அவ்வப்போது 'superb post' என்று குறுஞ்செய்திகள் செல்வதற்கு இடமுண்டு.
**********************************************************************************************
நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு இனி பதிவர்கள் எல்லோரையுடைய பெயர்களுக்குப் பின்னாலும் 'அண்ணா' சேர்க்கப்படும்.
இறக்குவானை நிர்ஷன் அண்ணா, யோ வொய்ஸ் அண்ணா, சந்ரு அண்ணா...
சுபாங்கன் தான் நடுவில் நிற்கிறார். 2 வயது மூத்தவர் என்பதால் அண்ணா என்றழைப்பதா இல்லையா என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும் முடிவு எடுக்கப்படும்.
(மற்றவர்களை ஏற்கனவே அண்ணா என்றழைப்பது தான் வழக்கம் என்பதால் பிரச்சினையில்லை)
**********************************************************************************************
சரி...
இனி ஓரிரண்டு படங்கள்....
31 பின்னூட்டங்கள்:
////(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)////
கோபி…… யார் இவர்கள்? குறித்த சந்திப்பில் என்னுடைய தம்பி ஒருவர் வந்து சிரிச்சுக்கொண்டு நிண்டதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லையே நீங்கள்?
என்னை அண்ணா என எல்லாம் கூறி எனது பச்சிளம் பாலகன் இமேஜை கெடுக்க வேண்டாம் என கூறி எச்சரிக்கிறேன்.
////(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)////
இவர்கள் யாரென்று எனக்க் மட்டும் தெரியப்படுத்தவும்
//பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார். //
தப்பு, இருவரும் ஒன்றாகத்தான் வந்தோம். நான் மிக, மிக அழகாக இருந்ததால்(கூல்) உங்களால் என்னை அடையாளம் காண முடியாதிருந்திருக்கும்.
அண்ணா என்று கூப்பிட்டால் இலவசமாக விஜய் படத்துக்குக் கூட்டிப்போய்விடுவேன், ஜாக்கிரதை
ஃஃஒருவர் மூத்தஇ பிரபல பதிவர்... மற்றையவர் பிரபலஇ மூத்த பதிவர்...ஃஃ
கண்ணா எனக்கு மட்டுமாவது யார் யார் என சொல்லப்படாதா? ரொம்ப தூரத்தில் இருக்கிறனப்பா?
அது சரி எப்ப பதிவர் சந்திப்பு.ஃ
ஒரு படத்திலயும் சிரித்த முகத்தை காணவில்லையே?
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
நேற்று நடந்த சந்திப்பின் பின் பச்சிளம் பாலகர் சங்கத்திலிருந்து வந்தியண்ணா உத்தியோகபூர்வமாக நீக்கப்புகிறாராமே.
பால்குடியை நீங்க அப்பிடியே கூப்பிடலாம்.
அவர் எதுக்குமே கோபப்பட மாட்டார் ரொம்ப நல்லவரு ஆச்சே.
பச்சிளம் பாலகர்களை நேற்று தண்ணீரில் மிதக்க வைத்து விட்டனர்(மழையை சொன்னேன்) அப்புறம் கோபி அங்கிள் நீங்கள் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிட்டாலும் என்னை அப்படிக் கூப்பிட முடியாதே அப்போ என்ன செய்விங்க அங்கிள்.
வணக்கம் கனககோபி அண்ணா,
நானும் உங்களை இப்படி எதிர்பார்க்கவில்லை? முதலிருந்த படத்தைப் பார்த்து தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
வெள்ளிமலர் போட்டி இலக்கம் 9 - தலைப்பு "இருக்கிறம் அச்சுவலை சந்திப்பு" சமர்ப்பிக்க பூச்சரத்துக்கு வாருங்கள்
http://poosaram.blogspot.com/
நிழற்படங்கள் நன்றாக இருக்கின்றன
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
எல்லாரும் தண்ணீல தத்தளிச்சீங்களாமே
ஐயோ ஐயோ ........
பால்குடி நல்ல பம்பல் ..
ஏன் தான் அப்பிடி பெயர் வைத்தாரோ
அனைவரின் பின்னூட்டங்களுக்கும் நன்றி....
வகுப்புக்கள் காரணமாக பதிலிட முடியவில்லை...
இன்று மாலை தனித்தனியாக பதிலிடுகிறேன்...
//மருதமூரான். கூறியது...
////(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)//
கோபி…… யார் இவர்கள்?//
அவங்க ரொம்ப நல்லவங்க அண்ணா...
//குறித்த சந்திப்பில் என்னுடைய தம்பி ஒருவர் வந்து சிரிச்சுக்கொண்டு நிண்டதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லையே நீங்கள்? //
அந்தத் தம்பி அப்பாவி ஆச்சே???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
என்னை அண்ணா என எல்லாம் கூறி எனது பச்சிளம் பாலகன் இமேஜை கெடுக்க வேண்டாம் என கூறி எச்சரிக்கிறேன். //
சரி தாத்தா....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாத்தா...
////Subankan கூறியது...
////(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)//
இவர்கள் யாரென்று எனக்க் மட்டும் தெரியப்படுத்தவும்////
அவங்க ரொம்ப அப்பாவிங்க அண்ணே...
////பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார்.
தப்பு, இருவரும் ஒன்றாகத்தான் வந்தோம். நான் மிக, மிக அழகாக இருந்ததால்(கூல்) உங்களால் என்னை அடையாளம் காண முடியாதிருந்திருக்கும்.////
ஓ... நான் உங்களைப் பிறகு தான் கண்டேன்....
அடையாளம் காணமுடியாததற்கு அதுவும் காரணமாக இருந்திருக்கலாம்...
//அண்ணா என்று கூப்பிட்டால் இலவசமாக விஜய் படத்துக்குக் கூட்டிப்போய்விடுவேன், ஜாக்கிரதை//
நான் விஜயின் பரம இரசிகன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
//ilangan கூறியது...
ஃஃஒருவர் மூத்தஇ பிரபல பதிவர்... மற்றையவர் பிரபலஇ மூத்த பதிவர்...ஃஃ
கண்ணா எனக்கு மட்டுமாவது யார் யார் என சொல்லப்படாதா? ரொம்ப தூரத்தில் இருக்கிறனப்பா?
அது சரி எப்ப பதிவர் சந்திப்பு.ஃ //
ஆகா...
ஆதே கேள்வி.... அதே பதில்....
அவங்க ரொம்ப நல்லவங்க அண்ணே....
//ilangan கூறியது...
ஒரு படத்திலயும் சிரித்த முகத்தை காணவில்லையே? //
அவனவன் கடுப்பில நிக்கேக்க சிரிச்சுக்கொண்டு நிப்பான் எண்டு எப்பிடி நீங்கள் எதிர்பாக்கலாம் அண்ணே???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
//மன்னார் அமுதன் கூறியது...
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் //
நன்றிகள்...
உங்களையும் கண்டேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
// sanjeevan கூறியது...
நேற்று நடந்த சந்திப்பின் பின் பச்சிளம் பாலகர் சங்கத்திலிருந்து வந்தியண்ணா உத்தியோகபூர்வமாக நீக்கப்புகிறாராமே. //
இன்னும் சங்கத்தில் இருக்கிறார்...
எச்சரிக்கை அனுப்பப்ட்டிருக்கிறது...
ஹி ஹி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//SShathiesh கூறியது...
பச்சிளம் பாலகர்களை நேற்று தண்ணீரில் மிதக்க வைத்து விட்டனர்(மழையை சொன்னேன்)//
ஓம் ஓம்...
ஆனா சிலர் நனையவிலல்லை...!!!
// அப்புறம் கோபி அங்கிள் நீங்கள் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிட்டாலும் என்னை அப்படிக் கூப்பிட முடியாதே அப்போ என்ன செய்விங்க அங்கிள்.//
ஐயயோ...
உங்களை மறந்துவிட்டேனே....
நீங்களும் எனக்கு அண்ணா தான்...
நான் பிறந்தது 1989 இல்...
நீங்கள் 19888 தானே?
அப்ப அண்ணா தான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
//pirassath கூறியது...
வணக்கம் கனககோபி அண்ணா,
நானும் உங்களை இப்படி எதிர்பார்க்கவில்லை? முதலிருந்த படத்தைப் பார்த்து தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.//
எனக்கும் மகிழ்ச்சி தான்...
உங்கள் வலைப்பூ முகவரி என்ன???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//sanjeevan கூறியது...
பால்குடியை நீங்க அப்பிடியே கூப்பிடலாம்.
அவர் எதுக்குமே கோபப்பட மாட்டார் ரொம்ப நல்லவரு ஆச்சே. //
கொழுவி வைக்கிறீங்களா?
பிச்சுப்புடுவன் பிச்சு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//பூச்சரம் கூறியது...
வெள்ளிமலர் போட்டி இலக்கம் 9 - தலைப்பு "இருக்கிறம் அச்சுவலை சந்திப்பு" சமர்ப்பிக்க பூச்சரத்துக்கு வாருங்கள்
http://poosaram.blogspot.com/ //
சரி...
//Thevesh கூறியது...
நிழற்படங்கள் நன்றாக இருக்கின்றன
நல்ல பதிவு வாழ்த்துக்கள். //
நன்றிகள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//kajee கூறியது...
எல்லாரும் தண்ணீல தத்தளிச்சீங்களாமே //
உங்களுக்காகத் தான் தனியே பதிவொன்று போட்டிருக்கிறேன்...
பாருங்கள்...
//Balavasakan கூறியது...
ஐயோ ஐயோ ........
பால்குடி நல்ல பம்பல் ..
ஏன் தான் அப்பிடி பெயர் வைத்தாரோ //
ஏன் நல்ல பெயர் தானே?
ஏனய்யா கொழுவி வைக்கிறீர்கள்... ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
எனக்கும் இருக்கிறம் நடாத்திய இச் சந்திப்பின் அர்த்தம் புரியவில்லை...
//"பிறகு தான் விளங்கிச்சு, எனக்கு நிறைய முகங்களைத் தெரியாது எண்டு. படுபாவிகள்... 10, 15 வருசத்துக்கு முதல் எடுத்த புகைப்படங்கள வலைப்பதிவில் தங்கட புகைப்படமா போட்டிருக்கிறாங்க..."//
அப்போ உங்களுக்கும் இதே நிலமைதானா...
சந்திப்போம்... அடுத்த பதிவர் சந்திப்பில்
முதன் முறையாக தொலைபேசி வழியாக பால்குடி என்று அழைத்ததால் தான் அவ்வாறு சிரித்தேன். மற்றும் படி, எப்பிடி வேண்டுமானாலும் அழைக்கலாம். கொளுவி வைக்க எதுவுமே இல்லை.
கருத்துரையிடுக