உண்மையாகவே இருக்கிறம் ஏற்பாடு செய்த அச்சுவலைச் சந்திப்புப் பற்றி பெரிதாகக் குறைசொல்லி எந்தப் பதிவும் இடக்கூடாது என்று தான் இருந்தேன்.
ஏனென்றால் பொதுவாகவே நான் சக்தி தொலைக்காட்சியை எதிர்த்துப் பதிவிட்டு, பின்னூட்டமிடுவதோடு, அம்மா பகவான் பற்றியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இதனால் சில மஞ்சட் காமாலைக் கண்களுடையவர்கள் நான் குற்றம் சொல்லிப் பிரபலமடைய முற்படுவதாக நினைத்தார்கள்.
இதனால் சில விடயங்களை கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனது மனச்சாட்சிக்குச் சரியென்று படுகின்ற எல்லாவற்றையும் சொல்கின்ற, செய்கின்ற கோபி எங்கே போனான் என்று என்னை யோசிக்க வைத்த சம்பவங்கள் அவை.
(நான் அம்மா பகவான் பற்றிப் பதிவிட்ட அன்று எனது கைத்தொலைபேசிக்கு ஒரு மனநோயாளி அழைப்பெடுத்த அவருக்கு அவரது தாய் தந்தையர்கள் அல்லது நண்பர்கள் சொல்லிக்கொடுத்த இனிய வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் கதைத்ததை அப்போது சும்மா விட்டுவிட்டேன். பின்னர் தான் யோசித்தேன் சிலவேளை அது அந்தப்பதிவை வாசித்த ஓர் பக்தரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று.)
என்னை இந்தப் பதிவை பதிவிட வைத்தது ஓர் பின்னூட்டம் தான்.
எனது கடந்த பதிவிற்கு kajee என்ற பெயரில் இடப்பட்டிருந்த அந்தப் பின்னூட்டத்தில்
'எல்லாரும் தண்ணியில தத்தளிச்சீங்களாமே?' என்று கேட்கப்பட்டிருந்தது.
அதைப் பதிவிட்ட நண்பர் சந்திப்பிற்கு வரவில்லை என்பது வெளிப்படை. இது ஒரு விஷமத்தனமான பின்னூட்டம் என்பதிலும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் 'எல்லாரும்' என்பதன் மூலம் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களுக்குமல்லவா கெட்ட பெயர்?
எனக்கு யார் மது அருந்தியது அல்லது மது அருந்தவில்லை என்பது பிரச்சினை கிடையாது. யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் மூக்கை நுழைக்கவிரும்பவில்லை.
மது அருந்துவதற்கு 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியாக முடியும்.
(இங்கும் நான் தட்டுப்படுகிறேன். எனக்கு இன்னும் 20 ஆகவில்லை)
ஆனால் எனது கேள்வி என்னவென்றால் என்னைப் போன்ற சிறியவர்கள் அன்று வந்து மது அருந்தி வீட்டிலோ அல்லது எங்கோ பிரச்சினை ஏற்பட்டிருந்தால் ஒட்டுமொத்தப் பதிவர்களுக்கும், சந்திப்புக்குமல்லவா கெட்டபெயர் ஏற்பட்டிருக்கும்.
(இப்போது மட்டும் சந்திப்புக்கு நல்ல பெயர் இருப்பதாக சொல்லவரவில்லை)
நான் கோக் ஒன்றை எடுக்கச் சென்ற பொழுது 'என்ன வேணும்?' என்று கேட்கப் பட்டது.
'நான் கோக் வேண்டும்' என்றேன்.
அப்போது அதில் நின்றவர் 'கோக் தான் வேணுமா?'என்றார்.
நானும் 'ஓம்' என்றேன். அவர் மீண்டும் 'கோக் ஆ?' என்று நான் ஏதோ விஷத்தைக் கேட்பது போலக் கேட்டார்.
இதை எனது மொழியில் 'மதுப்பழக்கத் திணிப்புகள்... கெளரவமான வடிவில்...' என்று சொல்லலாமா???
மது அருந்துதல் என்பது வெளிநாட்டு சந்திப்புகளில் சாதாரணம் என்ற நவீனக் கருத்தை பலர் சொல்லாம்.
உண்மை தான். ஆனால் அது மேற்கைத்தேய நாடுகளில்.
இங்கு மதுபான ஏற்பாட்டுக்களைச் செய்திருந்தால் அதை சந்திப்பு முடியும் தறுவாயில் ஆரம்பித்திருந்தால் சந்திப்பும் ஒழுங்காக இருந்திருக்குமல்லவா?
மு.மயூரன் அண்ணாவின் பதிவில் சொன்னது போல 'இளையதம்பி தயானந்தா அவர்கள் இணையம் மூலம் உரையாற்றும் போது உங்களோடு முடிவில் மீண்டும் கதைக்கிறேன். ஆனால் அப்போது நீங்கள் அதைக் கேட்கும் தறுவாயில் கேட்கும் நிலையில் இருப்பீர்களோ தெரியாது என்று சொன்னது தசாவதாரம் படத்தில் பூவராகவன் கமலிடம் சந்தானம் அவரது ஆட்கள் குடிபோதையில் மிதப்பதை சுட்டிக் காட்டியது' போல இருந்தது.
எங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு' என்றே சொல்லப்பட்டதே தவிர 'இருக்கிறம் சஞ்சிகையின் ஒன்றுகூடல்' அல்லது 'இருக்கிறம் சஞ்சிகையின் கொள்கைவிளக்கச் சந்திப்பு' என்றோ குறிப்பிடப்படவில்லை.
வலைப்பதிவர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் சந்திப்பை ஏற்படுத்துவதை செய்ய முற்பட்டீர்கள் என்றால் அதற்காக என்ன செய்தீர்கள், ஆரம்பத்தில் எங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தச் சொன்னதைத் தவிர?
நிறையப் பதிவர்கள் தூர இடங்களிலிருந்து இந்தச் சந்திப்புக்காக வந்திருந்தார்கள். பணம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில்?
தூர இடங்களிலிருந்த வந்த பதிவர்கள் சிலரின் மன ஓட்டத்தை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
(பதிவர்கள் யாருக்காவது இந்தச் சந்திப்பு திருப்தியளித்தது என்றால் என்னிடம் காரணத்துடன் சொல்லுங்கள். காரணம் எற்புடையது என்றால் இந்தப் பதிவிற்காக நான் பகிரங்கமாக பதிவில் மன்னிப்புக் கோருகிறேன்.)
சிலர் புதிய காரணமொன்றுடன் வரலாம்.
இருக்கிறம் சஞ்சிகை யாரையும் வற்புறுத்தி அழைக்கவி்ல்லை, விரும்பியவர்களையே அழைத்தது என்று.
இதற்குப் பெயர் தான் சப்பைக் கட்டு கட்டுதல் என்பது.
'இலங்கைப் பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் இனிய சந்திப்பு' என்றால் அந்தப் பதத்தின் மூலம் இலங்கையிலிருந்து பதிவிடும் ஒவ்வொருவரும் இந்தச் சந்திப்பின் காரணிகளாகிவிடுகின்றனர்.
பதிவர்கள் இந்தச் சந்திப்பைப் பகிஷ்கரித்திருந்தாலோ, அல்லது ஓரிருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தாலோ சந்திப்பு உண்மையில் தோல்வியடைய வேண்டும்.
பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் சந்திப்பு என்றால் பதிவர்கள் சார்பாக யார் உரையாற்றினார்கள்?
லோஷன் அண்ணா ஊடகவியலாளர்.
மருதமூரான் அண்ணா யாழ்தேவி திரட்டியின் சார்பில்.
எங்கே பதிவர்கள் சார்பாக???
பதிவர்களைப் பற்றி யார் கணக்கெடுத்தது?
ஏதோ பாடசாலையில் வைத்து படிப்பிப்பது போல எம்மை நிற்கவைத்துவிட்டு (இருக்கிறம் சஞ்சிகையில் நின்றோம்... ஹா ஹா ஹா... மிக்க நன்றி) முன்னால் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது?
இங்கே சிலர் பதிவர்கள் என்றால் என்ன பெரியவர்களா?
இலவசமாக புளொகர் அல்லது வேர்ட்பிரஸில் அல்லது வேற ஒரு தளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டு ஓர் யுனிக்கோட் தமிழ் எழுதுவானும், ஒரு கணணியும், ஓர் இணைய இணைப்பும் இருந்தால் யாருமே பதிவிடலாமே.
பிறகென்ன நீங்கள் நின்றால் ஏதோ ஜனாதிபதி நின்றதைப் போல குறை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம்.
நிச்சயமாக... நாம் சாதாரமானவர்கள் தான்...
எம்மிடம் இருப்பது சிறிய நகைச்சுவை உணர்வும், சிறிய தேடலும் தான்...
நாங்கள் டம்மிகள் தான்...
ஆனால் டம்மிகளை சந்திக்கவும், அவர்கள் மூலமாக ஒரு சஞ்சிகையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் அந்த சஞ்சிகையை என்னவென்று சொல்வது?
(சஞ்சிகையின் பிரபலத்திற்கு(ம்) இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை திரு.இளையதம்பி தயானந்தா ஏற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்)
பதிவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்படலாம்.
இரண்டாம் கொட்டகையிலிருந்து அதற்குப் பின் யாருமே நிகழ்ச்சியைக் கவனிக்கவில்லை என்று.
உண்மை... இரண்டாம் கொட்டகையிலிருந்தவன் என்ற வகையில் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.
லோஷன் அண்ணா உரையாற்றத் தொடங்கியபோது எங்களுக்கு 'கிர் கிர் கிர்' என்று ஏதோ ஒரு சத்தம் தான் கேட்டது.
மருதமூரான் அண்ணா உரையாற்றியபோதும் அதே பிரச்சினை.
மற்றவர்களின் பேச்சுக்களை நாங்கள் கேட்க விரும்பவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொண்டாலும் மேலே குறிப்பிட்ட இருவரும் பதிவர்கள். அவர்கள் எங்களில் ஒருவர். அவர்கள் பேசும் போது அதைக் கேட்காமல் விடுத்து அவர்களை அவமானப்படுத்த எமக்கு என்ன அவசியம்?
மழையை நோக்கி விரலை நீட்டுவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
கொழும்பின் பொதுவான வானிலை சுட்டெரிக்கும் வெயில் தானே?
அன்று வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் பதிவர்கள் யாவரும் அந்த வெயிலில் காய வேண்டுமா?
மழை மட்டும் தான் அசெளகரியமா?
பலர் நேரடி ஒளிபரப்பில் குறை இருப்பதாக குறை சொல்லியிருந்தார்கள்.
ஐயா! நாங்கள் நேரே சென்றே எங்களால் ஒன்றையும் காணமுடியவில்லை. நீங்கள் நேரடி ஒளிபரப்பைப் பற்றிக் கதைக்கிறீர்கள்.
நேரடி ஒளிபரப்பை செய்த அதே கெளபோய்மது தான் பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்.
அங்கே போதுமான Extension code கள் கூட இல்லை என்று சொன்னதாக ஓர் நினைவு.
அவர் என்ன செய்யமுடியும்?
அது அவரது தனிப்பட்ட முயற்சி.
அவரது முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.
நான் பலரிடம் தெரிவித்ததை திரும்பவும் சொல்கிறேன்...
அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...
நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன்... நான் அன்றைய சந்திப்பை பதிவர் சந்திப்பு என்று நினைத்து வந்து ஏமாறவில்லை.
வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் சென்றேன்.
எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.
*************************************************************************************************
எனக்கு இருக்கிறம் மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் கிடையாது.
நான் இனி இருக்கிறமை முன்பைவிட அதிகமாக வாங்கத் தான் போகிறேன், ஏனென்றால் எங்கள் பதிவர்களின் ஆக்கங்கள் எழுத்தில் வருவதை படிப்பதற்கு எனக்கு பெருமை, விருப்பம் தான்.
நான் எந்தத் தனிப்பட்ட நபர்களையும் தாக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது.
எனது சில கருத்துக்கள் சில நண்பர்களின் பதிவுகளின் சொல்லப்பட்ட கருத்துக்களாக இருக்கலாம். எனினும் எந்தக் கருத்தையும் களவாடும் நோக்கம் எனக்கில்லை. சில கருத்துக்கள் பொதுவாக இருப்பது பிழையில்லையே. சில கருத்துக்கள் என்னைப் பாதித்திருக்கலாம்...
*************************************************************************************************
அன்றைய சந்திப்பிற்கு வந்த நண்பர்கள் தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
என்னிடம் கொஞ்சப் புகைப்படங்கள் உள்ளன. அவற்றை மின்னஞ்சல் முகவரி தெரிந்த அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.
அவற்றை வலைப்பதிவில் வெளியிட விரும்பாததால் தனித்தனியே அனுப்புகிறேன்.
வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள்.
18 பின்னூட்டங்கள்:
////எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.////
வாழ்த்துக்கள் கோபி….. வெற்றிகரமாக நடத்தி முடியுங்கள். பக்கத்துணையாக இருப்போம். மீண்டும் வாழ்த்துக்கள் 2வது பதிவர் சந்திப்புக்கு.
எனக்கு மனதில் தோன்றியதை நீங்கள் பதிவாக இட்டிருக்கிறீர்கள்.
ஏற்கனவே எங்களது ஆக்கங்களை சுட்டு எங்களை பயன்படுத்திய “இருக்கிறம்” மீண்டும் எங்களை வைத்து ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொண்டது.
//அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...//
அருமை, அருமையான பதிவு கோபி.
பதிவர்கள் பலரும் சொல்லத் தயங்கிய விடயங்களை தெட்டத் தெளிவாக பகிரங்கப்படுத்தியுள்ளீர்கள், பாராட்டுக்கள், முகஸ்துதியில்லாமல் திறனாய்வு செய்தமை சிறப்பானது.
எனது பதிவினையும் அதனூடான பின்னூட்டங்களையும், இருக்கிறம் சஞ்சிகை ஆசிரியர் தயானந்தா சம்பந்தமில்லாத பதிவுக்கு பின்னூட்டமிட்டதையும் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
////எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.////
வாழ்த்துக்கள்...கோபி...நானும் உங்கள் பக்கம்...வெற்றி எங்கள் பக்கம்...
உண்மைகளை சொல்லியிருக்கின்றீர்கள்
ஆம் எமக்கும் இருக்கிறமுக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள் தான் இவை
2ம் பதிவர் சந்திப்பு சார்ந்த முயற்சிகளில் ஈருபடுவோம் நடத்தி முடித்துவிட்டு அதைப்பற்றி பேசுவோம் தவறுகள் விடப்படுவது சகஜம் திருத்தமாக செய்து முடிப்போம்
நண்பா
நான் இல்லாத பங்குக்கு என் பற்ற{ஸ் தொடரை நீங்கள் கையிலெடுத்துவிட்டீர்கள் என எண்ணினேன் தலைப்பை பார்த்துவிட்டு
இருப்பினும் உண்மையான விடயங்களை உரக்கச் சொல்லும் கோபிக்கு என் இதய புர்வமான ஆதரவுகள்.
எங்கு தப்பு நடக்குதோ அங்கு தட்டிக் கேட்கிறீர்கள் அதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதிலை எதிர் பாரத்தவண்ணம் சிங்கம் லங்கன்.
//எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.//
நானும் அதைதான் எதிர்பார்த்து இருக்கிறேன்...........:))
இரண்டாவது பதிவர் சந்திப்பில் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள்
இரண்டாவது சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
//மருதமூரான். கூறியது...
////எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.////
வாழ்த்துக்கள் கோபி….. வெற்றிகரமாக நடத்தி முடியுங்கள். பக்கத்துணையாக இருப்போம். மீண்டும் வாழ்த்துக்கள் 2வது பதிவர் சந்திப்புக்கு. //
ஏதோ என்ர சொந்த விஷயம் மாதிரி சொல்றீங்க???
பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் ஒழுங்குசெய்யிறது....
நானும் ஓர் அங்கமாக இருக்க ஆசைப்படுவதாக சொன்னேன்....
ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எனக்கு மனதில் தோன்றியதை நீங்கள் பதிவாக இட்டிருக்கிறீர்கள்.
ஏற்கனவே எங்களது ஆக்கங்களை சுட்டு எங்களை பயன்படுத்திய “இருக்கிறம்” மீண்டும் எங்களை வைத்து ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொண்டது.//
ம்... விளம்பரமே தான்...
என்ன செய்வது... இனிமேலாவது கவனமாக இருப்போம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணா...
//ஈழவன் கூறியது...
//அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...//
அருமை, அருமையான பதிவு கோபி.
பதிவர்கள் பலரும் சொல்லத் தயங்கிய விடயங்களை தெட்டத் தெளிவாக பகிரங்கப்படுத்தியுள்ளீர்கள், பாராட்டுக்கள், முகஸ்துதியில்லாமல் திறனாய்வு செய்தமை சிறப்பானது.
எனது பதிவினையும் அதனூடான பின்னூட்டங்களையும், இருக்கிறம் சஞ்சிகை ஆசிரியர் தயானந்தா சம்பந்தமில்லாத பதிவுக்கு பின்னூட்டமிட்டதையும் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.//
உங்கள் தளத்தைப் பார்த்தேன்...
ஆரம்பத்தில் பேசாமல் இருப்போம் என்று பின்னூட்டமிடவில்லை...
இப்போது தைரியம் வந்துவிட்டது...
எங்களுக்கு சரியென்று படுவதை நாங்கள் சொல்லவேண்டும் தானே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//யசோ...அன்பாய் உரிமையோடு கரன் கூறியது...
////எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.////
வாழ்த்துக்கள்...கோபி...நானும் உங்கள் பக்கம்...வெற்றி எங்கள் பக்கம்...///
பதிவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது தான் எங்கள் பலம்...
வருகைக்கும் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்...
// ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...
உண்மைகளை சொல்லியிருக்கின்றீர்கள்
ஆம் எமக்கும் இருக்கிறமுக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள் தான் இவை
2ம் பதிவர் சந்திப்பு சார்ந்த முயற்சிகளில் ஈருபடுவோம் நடத்தி முடித்துவிட்டு அதைப்பற்றி பேசுவோம் தவறுகள் விடப்படுவது சகஜம் திருத்தமாக செய்து முடிப்போம்//
நிச்சயமாக...
கூகிள் குழுமத்தில் மீண்டும் ஓர் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டியது தான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// ilangan கூறியது...
நண்பா
நான் இல்லாத பங்குக்கு என் பற்ற{ஸ் தொடரை நீங்கள் கையிலெடுத்துவிட்டீர்கள் என எண்ணினேன் தலைப்பை பார்த்துவிட்டு
இருப்பினும் உண்மையான விடயங்களை உரக்கச் சொல்லும் கோபிக்கு என் இதய புர்வமான ஆதரவுகள்.
எங்கு தப்பு நடக்குதோ அங்கு தட்டிக் கேட்கிறீர்கள் அதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதிலை எதிர் பாரத்தவண்ணம் சிங்கம் லங்கன்.//
நன்றிகள் நண்பா...
நீங்களும் வந்தால் கலக்கலாக இருக்கும்...
சந்திப்புப் பற்றி எல்லோரும் கதைக்க வேண்டும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
// Bavan கூறியது...
//எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.//
நானும் அதைதான் எதிர்பார்த்து இருக்கிறேன்...........:))//
ம்...
சந்திக்கலாம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// கார்த்தி கூறியது...
இரண்டாவது பதிவர் சந்திப்பில் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள் //
நிச்சயமாக...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//வேந்தன் கூறியது...
இரண்டாவது சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.//
நன்றிகள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
கருத்துரையிடுக