வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும்.
எனினும் முதலாம் பாகத்தைப் படித்துவிட்டுத் தான் இரண்டாம் பாகத்தைப் படிக்க வேண்டுமென்றில்லை. இரண்டாம் பாகத்தைப் படித்துவிட்டும் முதலாம் பாகத்தைப் படிக்கலாம்.
இல்லை முதலாம் பாகத்தை படிக்காமலேயே விடலாம்.
இல்லை, இரண்டு பாகங்களையுமே படிக்காமலும் விடலாம்.
(கொஞ்சம் அதிகமாவே அறுக்கிறனோ?)
6. சுப்ரமணியம் பத்ரினாத் -
தமிழக அணியின் தலைவராக இருந்து தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து வந்தவர்.
26 அல்லது 27 வயதில் தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.
போதியளவு ஆடாததால் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை.
எனினும் இலங்கை அணிக்கெதிரான போட்டியொன்றில் இலங்கையில் வைத்து ஆரம்ப இலக்குகள் சற்று வேளைக்கே வீழ்த்தப்பட்ட பின்னர் அணித்தலைவர் டோனியுடன் சேர்ந்து ஆடிய விதம், குறிப்பாக முரளியை சமாளித்து ஆடியவிதம் இவருக்குள் திறமை இருக்கிறது என்பதைக் காட்டியது.
எனினும் சர்வதேச ரீதியில் இனித் தான் பெரியளவில் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது.
எனினும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் இவருக்கு இனி இடம்கிடைக்குமா என்பது சந்தேகமே...
2011 உலகக்கிண்ணத்தின் பின்னர் வாய்ப்புக்கிடைக்கலாம்.
7. மிஸ்பா உல்-ஹக் -
அடுத்த இருபதுக்கு இருபது விசேடித்த வீரர். (Twenty 20 specialist)
முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறவும், தோற்கும் நிலையிலிருந்த இறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் கூட ஏற்பட்டதற்கும் (இறுதியில் தோற்றாலும்) காரணகர்த்தாக்களில் ஒருவர்.
ஏராளமான காலம் உள்ளூர்ப் போட்டிகளில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர் முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் நட்சத்திரமானார்.
பந்தை ஓங்கி அடிக்கும் வல்லமையுடைய (hard hitting batsman) இவர் சுழற்பந்துவீச்சையும் அழகாக விளையாடக் கூடியவர். (Spin expert)
இருபதுக்கு இருபது என்றால் தன் கையை உயர்த்தி அணிக்காக போட்டிகளை வெல்லும் இவர் ஒருநாள் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடினாலும். இவரது திறமைக்கு ஏற்றவாறு ஆடவில்லை. (He is not playing up to his standard). இன்னும் ஒருநாள் சதமொன்றைப் பெறாத இவர் தொடர்ந்து திறமையை வெளிக்காட்டுவதில்லை. (inconsistent)
ரெஸ்ற் போட்டிகளில் அதைவிட மோசம்.
ரெஸ்ற் போட்டிகளில் பந்துகளை தொடர்ந்தும் மறித்துக் கொண்டு (defence) ஓட்டங்களை அடிக்க முற்படாதது தான் இவரது பிரச்சினை.
ரெஸ்ற் போட்டிகளில் ஆரம்ப 50 பந்துகளில் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றால் அது இவருக்கு சாதனை.
இவ்வாறு தொடர்ந்து மறித்துக் கொண்டேயிருப்பதால் ஒட்டங்களை எடுக்கும் ஆர்வம் குறையும், அதனால் ஓட்டங்களை எடுக்காமல் விட அழுத்தம் அதிகமாக தேவையற்ற அடிகளை அடித்து ஆட்டமிழப்பது தான் இவர் வழமை.
இலங்கை அணியுடனான கடந்த தொடரில் குலசேகரவின் உள்வளையும் பந்துகள் (Inswingers and Indippers) இவருக்கு பெருஞ்சோதனையாக அமைந்தன.
8. உபுல் தரங்க -
இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஒருவர் கிடைத்துவிட்டார் என எல்லோரும் மகிழ்ச்சியடைந்தது இவரால் தான்.
தொடர்நது சதங்கள், அரைச்சதங்களும் என்று ஆரம்பத்தில் அசத்திவந்தார்.
இலங்கை சார்பாக ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களை (போட்டிகள் எண்ணிக்கையில்)பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
வேகப்பந்துவீச்சுக்களை நன்றாக ட்ரைவ் (என்ன தமிழ் போடுவது?) செய்யக் கூடிய இவரது ஸ்குயர் ட்ரைவ்கள் (Square drives) பார்ப்பதற்கு அழகு தான்...
அனைவரும் இவரை ஒரு முழுமையான துடுப்பாட்ட வீரர் (compact player) என நம்பியிருந்த காலகட்டத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்தது.
ஓவ் ஸ்ரம்ப் (Off stump) இற்கு சற்று வெளியே விலகிச்செல்லும் பந்துகளுக்கு துடுப்பை நீட்டி இலக்குக் காப்பாளரிடமோ அல்லது ஸ்லிப் வீரர்களிடமோ பிடியைக் கொடுப்பது தான் இவரது ஒரே பிரச்சினை, பெரிய பிரச்சினை.
(Off stump awareness என்று அழைப்பார்கள். இலங்கையின் மஹேல ஜெயவர்தனவிற்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.)
கிட்டத்தட்ட ஓவ் ஸ்ரம்ப் இலிருந்து விலகிச்செல்லும் பந்துகளை வீசினாலே இவரது இலக்கைக் கைப்பற்றிவிடலாம் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகியது.
எனவே அணயில் இடத்தை இழந்த இவர் அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்ததால் பாகிஸ்தானிற்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற இவர் முதல் போட்டியில் சொதப்பினாலும் இரண்டாவது போட்டியில் அட்டகாசமாக ஆடினார். எனினும் மூன்றாவது போட்டியில் தனது வழமையான முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும் இந்தப் பிரச்சினையை சீர்செய்தால் இலங்கை அணி ஓர் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவரைப் பெறலாம் என்பது மட்டும் உண்மை.
9. ஸ்ருவேட் மக்கில்
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட நட்சத்திரம்.
கிறிக்கெற் உலகில் கடினமான வேலைகளில் ஒன்றாகக் கருதப்படும் மணிக்கட்டுச் சுழற் பந்துவீச்சாளரான இவர் ஷென் வோணை விட இம்மியளவு திறமை குறைவானவர் என்பதால் ஆடமுடியாமல் போனது.
ஒரே அணியில் இரண்டு ஒரே வகைச் சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடுவது அவ்வாறு சிறந்ததல்ல என்பதால் சர்வதேச மட்டத்தில் பெரிதாக ஆடக் கிடைக்கவில்லை.
விளையாடிய போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் ஷேன் வோண் ஓய்வுபெற்ற பின்னர் வாய்ப்புக்கிடைக்கும் போது அதிக வயதாகிவிட்டதாலும், உடற்தகுதிநிலைமை காரணமாகவும் ஓய்வுபெறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தார்.
ஒரு 5 ஆண்டுகள் பிந்திப் பிறந்திருந்தாரானால் இன்னொரு சழந்பந்துவீச்சு ஜாம்பவானை உலகம் கண்டிருக்கும்.
10. பிரட் ஹொக்-
Left arm unorthodox வகை எனப்படுகின்ற பந்துவீச்சாளர்கள் கிறிக்கெற் உலகில் மிகக்குறைவு.
Left arm unorthodox என்பது இடது கையால் இடதுகைத்துடுப்பாட்ட வீரருக்கு லெக் ஸ்பின் வீசுவது தான்.
ஆனால் லெக் ஸ்பின் வீசுவது கடினமான ஓர் விடயம் என்பதாலும், அவ்வாறு கஷ்ரப்பட்டு வீசும் பந்துகள் வலதுகைத் துடுப்பாட்ட வீரருக்கு (உலகில் வலதுகைத் துடுப்பாட்ட வீரர்கள் தான் அதிகம்) உள்திரும்பும் பந்துகளாக அமையும் என்பதால் இந்தப் பந்துவீச்சு முறையை பலரும் தெரிவுசெய்வதில்லை. மாறாக Left arm orthodox பந்துவீச்சாளர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறு வீசும் போது பந்து வலதுகைத்துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்வதால் இலக்குகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம்.
(பந்து உள்நோக்கி வரும் போது அதைக் கணித்து ஆடுவது ஓரளவுக்கு சுலபம். அதுவும் மணிக்கட்டுச் சுழல் பந்துகள் உள்நோக்கி வரும் போது ஆடுவது ஓரளவுக்கு சுலபம்.
ஆனால் பந்து துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்லும் போது ஸ்லிப் இடம் பிடிகொடுக்கவோ, இலக்குக் காப்பாளரிடம் பிடிகொடுக்கவோ, அல்லது ஸ்ரம்ப் செய்யப்படவோ வாய்ப்புகள் அதிகம்.)
அப்படிப்பட்ட Left arm unorthodox வகைப்பந்துவீச்சாளரான இவர் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்.
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட இன்னாரு நட்சத்திரம்.
பெரிதாக சர்வதேச மட்டத்தில் ஆடமுடியாமல் போன இவர் சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11. மொகமட் அஷ்ரபுல்-
உருவத்தில் கட்டையான சின்னப்பையன் ஒருவன் பங்களாதேஷ் அணியில் விளையாடி எதிரணிகளை துவம்சம் செய்கிறான் என பலரும் கதைத்தார்கள்.
உருவத்தில் சச்சினைப் பொல சிறிது குள்ளமும், சில அடிகளை அடிக்கும் போது சச்சினின் சாயல் தெரிவதாலும், சிறிய வயதில் இவ்வாறு அழகாக ஆடுவதாலும் பங்களாதேஷ் அணிக்குக் கிடைத்த அரவிந்த டீ சில்வா என நினைத்துக் கொண்டேன்.
(உலகில் பிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பலரும் ஏற்குக் கொள்கிறார்கள். அதுபற்றி சொல்ல முற்பட்டால் தனியாக ஒருபதிவே இடவேண்டி வரும்.)
ஆரம்ப காலத்தில் அடித்த ஓட்டங்களும், அவற்றைப் பெற்ற விதமும் என்னை அஷ்ரபுல்லின் இரசிகனாகவே மாற்றிவிட்டிருந்தன.
ஆனால் வழமையைப் போல நான் விரும்பும் புதிய வீரர்கள் காலை வாருவது போல அஷ்ரபுல் உம் என் காலை வாரிவிட்டார்.
அணித்தலைமை கிடைத்த பின்னர் இவரது துடுப்பாட்டம் மோசமாக மழுங்கத் தொடங்கியது.
அத்தோடு மிகச்சிறிய வயதில் மைதானத்தில் பல சிரேஷ்ர வீரர்களோடு மோதுவதும் எனக்கு வெறுப்பைத் தந்தது.
இப்போதெல்லாம் அஷ்ரபுல் துடுப்பாட்டத்தில் ஓட்டங்கள் குவிப்பது நான் புத்தகம் எடுத்துப் படிப்பது போல அரிதாகிவிட்டது.
இப்போது துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சில் மனிதர் ஏதோ செய்கிறார்.
அற்புதமான ஆடும்நுட்பம் (technic என்பதை இவ்வாறு மாற்றுகிறேன். தமிழ் சரியாக உள்ளதா) கொண்ட ஒருவரான இவருக்கும் பிரச்சினை temperament தான்...
பொறுமை குறைந்தவரான இவர் இரண்டு, மூன்று பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்களைப் பெறமுடியாவிட்டால் அடுத்த பந்தில் முட்டாள்தனமாக அடித்தெரிவொன்றை (shot selection) மேற்கொண்டு ஆட்டமிழந்துவிடுவார்.
இப்போதெல்லாம் இவரது இரசிகர் என்ற அளவில் இல்லாவிட்டாலும் தனது திறமையை வீணாக்குகிறார் எனக் கவலைப்படுவதுண்டு.
12. மார்லன் சாமுவேல்ஸ்-
என்னை மிகவிரைவாக கவர்ந்த கிறிக்கெற் வீரர்களில் ஒருவர்.
மத்தியவரிசையில் அடித்து ஆடக்கூடிய இவர், சுழற்பந்துவீச்சாளரும் ஆவார்.
போட்டிகளை அணிக்காக வென்று கொடுக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் கிறிக்கெற் அணியில் ஒரு கலக்கக் கலக்குவார் என்று எதிர்பார்த்தால் மனிதர் எனக்கு ஆப்படித்துவிட்டார்.
ஆட்டநிர்ணய குற்றத்தல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒழுங்காக இருந்திருந்தால் சிறந்த வீரராக வந்திருப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் விட முக்கியமானவர்,
13. கனகலிங்கம் கோபிகிருஷ்ணா.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த இவர் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என பரவலான பேச்சுக்கள் அடிபட்டன.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் மணிக்கட்டுச் சுழற்பந்தை அநாயசமாக வீசக்கூடியவர், அத்தோடு ஓவ் ஸ்பின்னையும் அட்டகாசமாக வீசக் கூடியவர். சிறந்த கிறிக்கெற் மூளை உடையவரான இவர் பந்துகளின் வேகங்களை மாற்றி, அவற்றின் உயரங்கயும் மாற்றி துடுப்பாட்ட வீரர்களை குழப்புவதில் வல்லவர்.
அத்தோடு சிறந்த மத்தியவரிசை துடுப்பாட் வீரரான இவர் அணியின் தேவைக்கேற்றவாறு நிதானித்து ஆடக்கூடியவர்.
இலக்குகள் ஒருபுறத்தில் சரிந்தால் மறுபுறத்தில் பொறுமையாகவும், மற்றைய வேளைகளில் அடித்தும் ஆடக் கூடிய இவர் பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரராக கருதப்படுகிறார்.
சிறிது பருத்த (சிறிதா? எண்டு நக்கலா சிரிக்கப்படாது. அது அப்ப...) உருவமானவர் என்றாலும் 30 யார் கோட்டுக்குள் கவர், எக்ஸ்ரா கவர் திசைகளில் அநாயசமாக பாய்ந்து பிடிக்கக் கூடியவர், அத்தோடு துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில் நிற்கும் சிலி மிட் ஓவ், சிலி மிட் ஓன் களத்தடுப்பு நிலையில் அருமையான பிடிகளை எடுக்கக் கூடியவர்.
எனினும் அண்மைக்காலத்தில் கிறிக்கெற் விளையாடாமல் மனிதர் வீங்கி வெடிக்கும் நிலையில் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் சொல்கின்றன.
எனினும் இவர் கிறிக்கெற்றிலிருந்து ஒதுங்கி இருப்பதால் இலங்கை கிறிக்கெற் அணி சிறந்ததொரு சகலதுறை வீரரை இழந்திருப்பதாக நண்பர் குமார் சங்கக்கார ஒருசில வாரங்களுக்கு முன்னர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
(100% நகைச்சுவையே. 13 ஆவதாக பெயரிட்ட நபரை விட மற்றவர்கள் எல்லோரும் உண்மையான வீரர்களே.
13 ஆவதாக சிறிது நகைச்சுவைக்காக சேர்த்துக் கொண்டேன். ஆகவே நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு எனக்கு ஓட்டோ அனுப்பாமல் விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)
அப்படியே வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள் பட்டியலை நிறைவுசெய்யலாம் என்று நம்புகிறேன்.
இவர்கள் யாவரும் எனது மனதில் தங்கள் திறமையை வீணாக்குபவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களே.
வேறு பலரை நான் தவறவிட்டிருக்கக் கூடும்.
யாழ்தேவி வாக்குப்பட்டையிலும், தமிழிஷ் வாக்குப்பட்டையிலும் வாக்களிக்கலாம்...
பின்னூட்டத்தில் என்னைக் கும்மலாம்...
18 பின்னூட்டங்கள்:
இவர்கள் எல்லோரையும் விட சுபாங்கன் என்றொரு வீர்ர் இருந்தார். ஆனால் அவரது பெருமைகள் அவரது தெருவைத் தாண்டி எடுபடவில்லை என்பதுதான் சோகம். சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீர்ர். சுழல் பந்து வீச்சாளர். சொட்டைத் தலையைக் குறிவைத்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். முதலிகோவிலடி மைதானம் இன்னும் இவரது கதைகளைச் சொல்லும்.
உங்களின் அடுத்த வீணாப்போனவர்கள் பட்டியலில் இசாந் சர்மாவை சேர்க்க வேண்டி வரும் அது சரி சாமர சில்வாவை ஏன் குறிப்பிடவில்லை...
நல்ல காலம் கிரிக்கெட் தப்பீட்டுது.
கிறிக்கெட் வீரர்களுக்கு எடை கட்டுப்பாடில்லையென்றாலும் 200 கிலோவுக்கு கூடியவர்கள் பொதுவாக கிறிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை
வீணாய்ப்போன பதிவர்கள் என்றொரு பதிவு போடலாமே கோபி...
//Subankan கூறியது...
இவர்கள் எல்லோரையும் விட சுபாங்கன் என்றொரு வீர்ர் இருந்தார். ஆனால் அவரது பெருமைகள் அவரது தெருவைத் தாண்டி எடுபடவில்லை என்பதுதான் சோகம். சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீர்ர். சுழல் பந்து வீச்சாளர். சொட்டைத் தலையைக் குறிவைத்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். முதலிகோவிலடி மைதானம் இன்னும் இவரது கதைகளைச் சொல்லும்.//
இன்னும் பல சொல்லமுடியாத கதைகளும் சொல்லுமாம் என்று அறிந்தேன்
சந்ரு வீணாய்ப்போன பதிவர்கள் அல்ல, வீணாய்ப்போன புதிய ஊடகவியளாளர்களான ஊடகக் கல்லூரி மாணவ மாணவிகள் பற்றிப் பதிவு போடலாம்.
//பெயரில்லா கூறியது...
சந்ரு வீணாய்ப்போன பதிவர்கள் அல்ல, வீணாய்ப்போன புதிய ஊடகவியளாளர்களான ஊடகக் கல்லூரி மாணவ மாணவிகள் பற்றிப் பதிவு போடலாம்.//
ஏனையா இந்த கோல வெறி நான் சொன்னது போலிப்பதிவர்களைப் பற்றி... வீனாய்ப்போன பதிவர்கள் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று சொன்னேன்.
// Subankan கூறியது...
இவர்கள் எல்லோரையும் விட சுபாங்கன் என்றொரு வீர்ர் இருந்தார். ஆனால் அவரது பெருமைகள் அவரது தெருவைத் தாண்டி எடுபடவில்லை என்பதுதான் சோகம். சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீர்ர். சுழல் பந்து வீச்சாளர். சொட்டைத் தலையைக் குறிவைத்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். முதலிகோவிலடி மைதானம் இன்னும் இவரது கதைகளைச் சொல்லும். //
கேட்டுப் பார்த்தேன்...
பயங்கர மோசமான மனுசன் எண்டு சொன்னாங்கள்...
பயங்கர குழப்படியாமே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாங்கன் அண்ணா...
// Balavasakan கூறியது...
உங்களின் அடுத்த வீணாப்போனவர்கள் பட்டியலில் இசாந் சர்மாவை சேர்க்க வேண்டி வரும் அது சரி சாமர சில்வாவை ஏன் குறிப்பிடவில்லை... //
இசாந் சர்மா விரைவில் சேர்வார்...
சாமரசில்வா திறமையானவர் என்றாலும் கப்புகெதர போன்றோரைவிட குறைவானவர் தான்...
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சகோதரா...
//sanjeevan கூறியது...
நல்ல காலம் கிரிக்கெட் தப்பீட்டுது.
கிறிக்கெட் வீரர்களுக்கு எடை கட்டுப்பாடில்லையென்றாலும் 200 கிலோவுக்கு கூடியவர்கள் பொதுவாக கிறிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை //
அப்பிடியே,
சொல்லவே இல்ல?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...
//சந்ரு கூறியது...
வீணாய்ப்போன பதிவர்கள் என்றொரு பதிவு போடலாமே கோபி...//
அதில நானுமெல்லோ வருவன் சந்ரு அண்ணா? :P
// சந்ரு கூறியது...
//Subankan கூறியது...
இவர்கள் எல்லோரையும் விட சுபாங்கன் என்றொரு வீர்ர் இருந்தார். ஆனால் அவரது பெருமைகள் அவரது தெருவைத் தாண்டி எடுபடவில்லை என்பதுதான் சோகம். சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீர்ர். சுழல் பந்து வீச்சாளர். சொட்டைத் தலையைக் குறிவைத்து சிக்சர் அடிப்பதில் வல்லவர். முதலிகோவிலடி மைதானம் இன்னும் இவரது கதைகளைச் சொல்லும்.//
இன்னும் பல சொல்லமுடியாத கதைகளும் சொல்லுமாம் என்று அறிந்தேன்//
தேவையா சுபாங்கன் இது?
//பெயரில்லா கூறியது...
சந்ரு வீணாய்ப்போன பதிவர்கள் அல்ல, வீணாய்ப்போன புதிய ஊடகவியளாளர்களான ஊடகக் கல்லூரி மாணவ மாணவிகள் பற்றிப் பதிவு போடலாம். //
யாரோட இந்தக் கொபம்?
//சந்ரு கூறியது...
//பெயரில்லா கூறியது...
சந்ரு வீணாய்ப்போன பதிவர்கள் அல்ல, வீணாய்ப்போன புதிய ஊடகவியளாளர்களான ஊடகக் கல்லூரி மாணவ மாணவிகள் பற்றிப் பதிவு போடலாம்.//
ஏனையா இந்த கோல வெறி நான் சொன்னது போலிப்பதிவர்களைப் பற்றி... வீனாய்ப்போன பதிவர்கள் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று சொன்னேன்//
ஓ அதுக்கா சொன்னீங்க... ஹி ஹி...
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அண்ணா....
//கனககோபி கூறியது...
//சந்ரு கூறியது...
வீணாய்ப்போன பதிவர்கள் என்றொரு பதிவு போடலாமே கோபி...//
அதில நானுமெல்லோ வருவன் சந்ரு அண்ணா? :P//
அனானிகளால் திட்டுவாங்கி வீணாய்ப்போன பதிவரா?
//சந்ரு கூறியது...
//கனககோபி கூறியது...
//சந்ரு கூறியது...
வீணாய்ப்போன பதிவர்கள் என்றொரு பதிவு போடலாமே கோபி...//
அதில நானுமெல்லோ வருவன் சந்ரு அண்ணா? :P//
அனானிகளால் திட்டுவாங்கி வீணாய்ப்போன பதிவரா? //
எனக்கு அனானிகளால் 2, 3 தடவை தவிர பெரியளவில் பிரச்சினை இதுவரை வரவில்லை அண்ணா....
அவங்கள் நல்லவங்கள்... ஹி ஹி...
ஏன்யா என்னப்பற்றி போடவில்லை? நானெல்லாம் அரவிந்த டீ சில்வாவை ரீப்ளேஸ் செய்ய பிறந்து வந்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன்.
உள் வீட்டு சதி செய்து என்னை முதலாம் பந்திலேயே அவுட் ஆக்கி ஆக்கி எனது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டார்கள்.
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஏன்யா என்னப்பற்றி போடவில்லை? நானெல்லாம் அரவிந்த டீ சில்வாவை ரீப்ளேஸ் செய்ய பிறந்து வந்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன்.
உள் வீட்டு சதி செய்து என்னை முதலாம் பந்திலேயே அவுட் ஆக்கி ஆக்கி எனது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டார்கள். //
உங்கட நகைச்சுவை உணர்வு அழகு யோ...
உங்களில எனக்குப் பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்வு தான்...
அசத்தல் நகைச்சுவை யோ...
நான் விழுந்து விழுந்து சிரிக்கிறன்....
ஹா ஹா...
நன்றி யோ அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
கருத்துரையிடுக