பதிவர் அண்ணா சந்ரு , பதிவர் சயந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு அமைய பிடித்த, பிடிக்காத 10 விடயங்கள் சம்பந்தமான தொடர்பதிவு இது....
சரி... இங்கு தான் எந்த பிரச்சினையும் கிடையாதே என்பதால் பதிவிட்டுவிட்டேன்...
இப்போது பதிவு எழுத எடுக்க நேரங்கள் சுருங்கி வருகின்றன.
கடைசிப் பதிவு தலைப்பை யோசித்துவிட்டு 20 நிமிடங்களில் எழுதினேன்....
இது அதைவிடக் குறைவு...
எழுத்துப் பிழைகளை தயைகொண்டு மன்னிப்பீர்...
1. அரசியல் தலைவர்
பிடித்தவர் - அப்படிப் பெரிதாக யாரும் இல்லை. இருக்கிறவர்களுள் சஜித் பிரேமதாசா வை ஓரளவுக்குப் பிடிக்கும். அம்பாந்தோட்டையில் நிறைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக அறிந்தேன்.
பிடிக்காதவர் - நிறையப்பேர்... பெரும்பாலானோரைப் பிடிக்காது.
2. எழுத்தாளர்
பிடித்தவர் - நான் பெரிதாக வாசிப்பதில்லை. இப்போதுதான் நிறைய வலைப்பதிவர்களை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது..
பிடிக்காதவர் - அப்படி யாரும் இல்லை.
3. கவிஞர்
பிடித்தவர் - நா.முத்துக்குமார். ஏனோ இவரது பாடல்கள் எனக்குதத் தனித்தன்மையாய் தெரிகின்றன.
பிடிக்காதவர் - பாடல்களுக்கு பாடல் பிடிக்காமல் போகும்.
'சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி' எழுதியபோது வைரமுத்துவையும், 'அடட கடடம்டம்' எழுதியபோது பா.விஜய் ஐயும் உதாரணத்திற்குச் சொல்லலாம்.
4. பாடகர்
பிடித்தவர் - ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா. முதலாமவரின் பாடல் திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன், இரண்டாமவரின் தமிழ் உச்சரிப்பை வாழ்த்தியிருக்கிறேன்.
பிடிக்காதவர் - உதித் நாராயணன். இவரது தமில் உச்ரிப்பு எனக்ப் பிடிக்றதில்லே.
5. பாடகி
பிடித்தவர் - சித்ரா
பிடிக்காதவர் - நிறைய புதுமுகங்கள். ரீனா பரத்வாஜ் குறிப்பிடத்தக்கவர். சக்கரக்கட்டியில் நான் எப்போது பெண்ணானேன் பாடும் முறை பிடிக்கவில்லை.
6. இயக்குநர்
பிடித்தவர் - கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சசிக்குமார்.
பிடிக்காதவர் - சுசி கணேசன். ஏனோ மனுசனை எனக்குப் பிடிக்குதில்ல. திருட்டுப் பயலே இன் இயக்கமும் என்னைக் கவரவில்லை.
7. நடிகர்
பிடித்தவர் - கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ்
பிடிக்காதவர் - கதாநாயகர்கள் அத்தனை பேரையும். எனக்கு கதையின் நாயகர்கள் தான் வேண்டும்.
8. நடிகை
பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.
பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது.
9. விளையாட்டு
பிடித்தது - கிறிக்கெற்.
பிடிக்காதது - மல்யுத்தம்.
10. பேச்சாளர்
பிடித்தவர் - சுதா மீனாட்சி என்ற பெண்மணி. பட்டிமன்றங்களில் பார்த்திருக்கிறேன்.
பிடிக்காதவர் - அலட்டல்காரர்கள்.
அழைப்பதற்கு யாரைத் தெரிவுசெய்வது என்று தெரியவில்லை....
எனக்கு எல்லோருமே எழுதிவிட்ட உணர்வு....
மருதமூரான் அண்ணாவைத் தொலைபேசியில் அழைத்துவிட்டேன்.
வேறு யாரையும் தெரியவில்லை...
என் தளத்திற்கு வரும் இதுவரை எழுதாத ஒவ்வொருவரையும் எழுதுவதற்கு அழைக்கிறேன்...
14 பின்னூட்டங்கள்:
உங்களுக்கு பிடிக்காதவர்கள் ரொம்ப குறைவோ?
சஜித் பிரேமதாசா ......
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
//பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.
பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது//
இதுக்குப் பெயர்தான் குழப்பக்காரனோ?
வித்தியாசமான அணுகுமுறை.
யார் அந்த சஜித் பிரேமதாச இண்டைக்கு தான் கெள்விப்படுறன்
குழப்பக்காரனின் விருப்பங்கள், கொஞ்சம் தெளிவாகத்தான் இருக்கு.
சித்திரா, பிரகாஷ் ராஜ் அற்புதமான விருப்பங்கள்.
//8. நடிகை
பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.
பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது.//
நீங்கள் நல்ல பிள்ளை என்பதை நம்பிவிட்டோம்
////அரசியல் தலைவர்
பிடித்தவர் - அப்படிப் பெரிதாக யாரும் இல்லை. இருக்கிறவர்களுள் சஜித் பிரேமதாசா வை ஓரளவுக்குப் பிடிக்கும். அம்பாந்தோட்டையில் நிறைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக அறிந்தேன்.////
இலங்கையின் எதிர்கால அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நபர் சஜித் பிரேமதாஸ…. என்னுடைய எதிர்பார்ப்பு மஹிந்தவுக்கு பின்னர் ஜனாதிபதியாகக்கூடிய அதிக வாய்ப்புள்ளவர். தங்களின் பதிவு சுருக்கமாக அழகாகவுள்ளது.
// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
உங்களுக்கு பிடிக்காதவர்கள் ரொம்ப குறைவோ?//
ஆமாம் யோ...
எனக்குப் பிடிக்காதவர்கள் குறைவு, ஆனால் என்னைப் பிடிக்காதவர்கள் தான் அதிகம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
// Balavasakan கூறியது...
சஜித் பிரேமதாசா ......
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????//
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வருகைக்கும் கருத்துககும் நன்றிகள்....
// Subankan கூறியது...
//பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.
பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது//
இதுக்குப் பெயர்தான் குழப்பக்காரனோ?
வித்தியாசமான அணுகுமுறை//
அப்படியும் வைத்துக் கொள்ளலாம்...
ஹி ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சுபாங்கன் அண்ணா...
// sanjeevan கூறியது...
யார் அந்த சஜித் பிரேமதாச இண்டைக்கு தான் கெள்விப்படுறன் //
அம்பாந்தோட்டையச் சேர்ந்தவர்...
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//சயந்தன் கூறியது...
குழப்பக்காரனின் விருப்பங்கள், கொஞ்சம் தெளிவாகத்தான் இருக்கு.
சித்திரா, பிரகாஷ் ராஜ் அற்புதமான விருப்பங்கள்.//
ஹி ஹி...
நன்றிகள்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மத்தியின் மைந்தரே...
//சந்ரு கூறியது...
//8. நடிகை
பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.
பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது.//
நீங்கள் நல்ல பிள்ளை என்பதை நம்பிவிட்டோம்//
இதுக்கும் நல்ல பிள்ளைக்கும் என்ன சம்பந்தம் அண்ணா? :P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா....
// மருதமூரான். கூறியது...
////அரசியல் தலைவர்
பிடித்தவர் - அப்படிப் பெரிதாக யாரும் இல்லை. இருக்கிறவர்களுள் சஜித் பிரேமதாசா வை ஓரளவுக்குப் பிடிக்கும். அம்பாந்தோட்டையில் நிறைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக அறிந்தேன்.////
இலங்கையின் எதிர்கால அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நபர் சஜித் பிரேமதாஸ…. என்னுடைய எதிர்பார்ப்பு மஹிந்தவுக்கு பின்னர் ஜனாதிபதியாகக்கூடிய அதிக வாய்ப்புள்ளவர். தங்களின் பதிவு சுருக்கமாக அழகாகவுள்ளது. //
கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது...
பார்ப்போம் என்ன செய்கிறார் என்று...
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
கருத்துரையிடுக