க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உங்களை ஐயா என்றழைப்பதா, கடவுள் என்றழைக்க வேண்டுமா, இல்லை அவதாரம் என்றழைப்பதா அல்லது எனக்கு விருப்பமான 'புத்திசாலித்தனமான திருடன்' என்றழைப்பதா தெரியவில்லை....

உங்களுக்கு இண்டைக்கு 83 ஆவது பிறந்தநாளாம்...
பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் எல்லாம் கொடுப்பார்கள். உங்களுக்கு என்னத்த ஐயா கொடுப்பது?
கவிதை எழுதி வாழ்த்துப்பா எண்டு குடுக்கலாம் எண்டு பாத்தா அந்த கருமாந்தரமும் எனக்கு வராது....
எண்டாலும் உங்களை வாழ்த்தி ஒரு பதிவு போடலாம் எண்டு நினச்சன்....

என்னதான் இருந்தாலும் இளைஞர் ஐயா கருணாநிதியை விட உங்களுக்கு வயது குறைவு என்பது கவலைதான்...
என்றாலும் இருவரும் ஒரே சூலில் பிறக்க வேண்டியவர்கள்...
உங்கள் இருவரின் இராஜதந்திரமும் என்னைக் கவர்ந்தவை.

உயர்தரப் பரீட்சையில் நான் கோட்டைவிட்ட பிறகு எனக்கு வந்த கவலைகளை எல்லாம் துடைத்து வைத்தவர் நீங்களய்யா.
'youtube இல இவ்வளவு ஆதாரத்துடன் இவ்வளவு வீடியோக்கள் இருந்தும் இந்த மனுசன் உயிரோட இருக்கேக்க, தொடர்ந்து ஏமாத்தேக்க நான் ஏன் கவலைப்படோணும்' என்ற உணர்வை தந்தவர் நீங்கள் ஐயா.
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற அந்த தைரியத்தையும் தந்தவர் நீங்கள் ஐயா.

ஊர்ல தந்திரங்கள் செய்யும் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் கூடும்போது நான் மொக்கை ஏதும் போட்டா 5,6 சனமாவது வராதா என்ற தைரியத்தை தந்தவர் நீங்கள்.
இன்று அவதாரம் என்று கிளம்பியிருக்கும் பலரின் மானசீகக் குரு நீங்கள்.
உங்களால் மட்டும் எப்படி ஐயா?

உங்களின் பக்தனாக மாறவிரும்பினாலும் எனது மண்டையில் இருக்கும் அந்தச் சிறிய மூளை என்னை தடுக்கிறது ஐயா.
ஆனால் உங்களால் எப்படி இவ்வளவு கூட்டத்தையும் சேர்க்க முடிந்தது?
ரஜினிகாந் படம் பார்ப்பீர்களோ? அவர் சொல்வது போல 'இது தானா சேர்ந்த கூட்டம்' என்பீர்களோ?

அவனவன் ஒரு பெண்ணை கிண்டல் செய்ததற்கே சிறையில் வாடுகிறார்கள்...
நீங்கள் 'அவ்வளவும்' செய்த பின்னர் ராஜபோகமா இருக்கும் இரகசியம் என்ன ஐயா?
உண்மையிலேயே நீங்கள் மந்திரவாதி தானோ?

உங்களுக்கு பரிசு தர விரும்பினாலும் முடியவில்லை ஐயா...
என்றாலும் உலகம் முழுதும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்களே...
அது உங்களுக்குப் போதும் என்று நம்புகிறேன்...
என்றாலும் உங்களின் பழைய மந்திர தந்திரங்கள் சிலவற்றை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் ஐயா...
அடுத்த முறை இன்னும் கவனமாக செய்யுங்கள்....என்றும் உங்கள் பண்பிற்குரிய மானசீக சீடன்
கனககோபி.
எல்லாப் புகழும் உங்களுக்கே.

பதிவர்கள் சிலருக்கு ஆயுள்தண்டனை சீச்சீ... திருமணம் நடக்க இருக்கும் சந்தர்ப்பத்தில அபசகுனமாக விவாகரத்துப் பற்றிக் கதைக்கிறானே எண்டு யோசிக்கப்படாது.... சும்மா சிரிக்கிறதுக்காக மட்டும்...
யார் வாழ்க்கையிலும் இந்த 'கேக்'குகளுக்கு வேலை வரக்கூடாது என்று விரும்புகிறேன்....

*********************************************************************************


இன்று வெளியாகியிருக்கும் தினக்குரல் பத்திரிகையில் என்னைப் பற்றிய அறிமுகமும், எனது ஒரு ஆக்கமும் வெளியாகியிருக்கிறது...
இதற்காக யாழ்தேவி திரட்டியினருக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்....

http://bit.ly/69sKS8

பதிவர்களின் உண்மை எண்ணங்களை அறிய உதவும் தொடர்பதிவுகளில் ஒன்றாக இந்த தொடர்பதிவை நான் பாக்கிறேன்...
நான் விரும்பும் தொடர்பதிவுகளில் இதுவும் ஒன்று.

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்ப அண்ணா யோ வொய்ஸ் இற்கு நன்றிகள்.
என் உண்மையான முகத்தை இயலுமானவளவிற்கு மற்றவர்களை புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறேன்.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.


தமிழ்

அன்புக்குரியவர்கள்: மனித உணர்வு கொண்ட அனைவரும்.

ஆசைக்குரியவர்: இப்போது அப்படி யாரும் கிடையாது.

இலவசமாய் கிடைப்பது: ஆப்புகள்...

ஈதலில் சிறந்தது: ஆதரவு மொழி

உலகத்தில் பயப்படுவது: எனக்கு

ஊமை கண்ட கனவு: முயன்றால் பலிக்கும்.

எப்போதும் உடனிருப்பது: என் மனச்சாட்சி

ஏன் இந்த பதிவு: அன்பு அண்ணா யோ வெய்ஸ் யோகா அழைத்ததால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி

ஒரு ரகசியம்: நான் கடும் கோபக்காரன்

ஓசையில் பிடித்தது: இனிமையான எந்த ஒலியும்

ஔவை மொழி ஒன்று: சித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம்

(அ)ஃறிணையில் பிடித்தது: மான்English

1. A – Avatar (Blogger) Name / Original Name : கனககோபி என்னும் க.கோபிகிருஷ்ணா

2. B – Best friend? : தேடுகிறேன்...

3. C – Cake or Pie? : கேக் என்று வைத்துக் கொள்ளலாம்.

4. D – Drink of choice : பழரசம்

5. E – Essential item you use every day? : கணணி, அலைபேசி.. (இரண்டும் அவசியம் என்றில்லை என்றாலும் என்னோடு ஒட்டிக் கொண்டுவிட்டன.)

6. F – Favorite color ? : வானத்து நீலம்.

7. G – Gummy Bears Or Worms : பயமில்லை

8. H – Hometown? : யாழ்ப்பாணம்

9. I – Indulgence? : தனிமை, அமைதி

10. J – January or February? : ஜனவரி

11. K – Kids & their name : திட்டமெதுவும் இல்லை

12. L – Life is incomplete without : சாதனைகள்

13. M – Marriage date? திட்டமெதுவும் இல்லை

14. N – Number of siblings : ஐந்து

15. O – Oranges or Apples : அப்பிள்

16. P – Phobias/Fears? : அப்படி எதுவும் கிடையாது.

17. Q – Quote for today? : புத்திசாலிகள் பிரச்சினைகளை தீர்க்கிறார்கள், அதிபுத்திசாலிகள் பிரச்சினைகளை தடுக்கிறார்கள் - அல்பேட் ஐன்ஸ்டீன்

18. R – Reason to smile? : இதுவரை கண்டுபிடிக்கவில்லை. (சிலவேளை என்னை நினைத்தோ? )

19. S – Season? : குளிர்காலம்


21. U – Unknown fact about me? : நானோரு கோபக்காரன். ஆனால் அன்பு செலுத்துபவர்களிடம் அடிமை போல.

22. V – Vegetable you don't like? : பூசணிக்காய், பாகற்காய், தக்காளிப்பழம்

23. W- Worse habit? : Much sensitive.

24. X – X-rays you've had? : ஒருமுறை. இதயநோவிற்கு.

25. Y – Your favorite food? : அப்படி எதுவும் கிடையாது.

26. Z – Zodiac sign? : மகரம். (உனக்கு இண்டைக்கு நல்லநாள் எண்டா சிரிச்சிற்றுப் போவன். இண்டைக்கு உனக்கு கூடாத நாள் எண்டா சோதிடம் பொய் எண்டுசொல்லுவன். ஆனால் நம்பி்க்கை கிடையாது.)

எழுதச் சொன்னாக்கள் எல்லாம் எழுதுங்கோ....
பகிருங்கோ.....

வணக்கம் நேயர்களே!
இது உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை... 0.08 பண்பலையூடாக உங்கள் செவிப்பலைகளை உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை இன்றும் உங்களை வதைக்க மன்னிக்கவும் இன்றும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வந்திருக்கிறது.
இதோ எமது நிலையக்குறியீட்டு இசை...
'கேட்டுப் பாரு சராங் புராங்...
எதிரிங்க சாரமெல்லாம் பிய்யுது...
வெற்றிதாண்டா நமக்கு...
டண்டணக்கா... ஆ... டணக்குணக்கா...'

ஆம்...
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஒரு குறட்பா...
'நல்லன செய்வார்க்கு மறக்காமல் இரண்டு
அடி கொடுப்பது நலம்'

ஆம்... அந்த அருமையான குறட்பாவைத் தொடர்ந்து ஒரு விசேட நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது... 'கம்பஸ்ஸில் இன்று...' என்ற நிகழ்ச்சியோடு யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து செத்தலிங்கம் சாகாதேவன்...
வணக்கம் சாகாதேவன்...

ஆம்... வணக்கம் சொறிறாஜ்...
இது செத்தலிங்கம் சாகாதேவன்... யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து இன்றைய மட்டை வழங்கும் விழா பற்றிய சில சுவாரசியமான தகவல்களை வழங்க தயாராக இருக்கிறோம்.

பல்கலைக்கழக வாசலில் வாழைமரங்களும், காய் வாழைக்குலைகளும், கறுத்த நிறக் கொடிகளும், பறை மேள சத்தங்களும் மட்டை பெற வருவோரை மகிழ்ச்சியாக வரவேற்கின்றன...
மட்டைகளை வாங்குவதற்காக மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் பலர் அவிழ்த்து விட்ட ஆட்டுப்பட்டி போல வந்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலரின் உடைகளில் ஆங்காங்கே துவாரங்களும், பிய்ந்த அடையாளங்களும் காணப்படுகின்றன...
பெண்கள் சிலர் பல்கலைக்கழகத்தை கூட்டும் வேலையை இலகுவாக செய்யும் பொருட்டு சேலைகளை நிலத்தை கூட்டும் விதமாக அணிந்து வந்திருக்கிறார்கள்... ஆனால் பலரின் உடல்களில் ஆடைகளை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது... ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் ஆடைகளின் விலை அதிகரித்து விட்டதோ என்னவோ...

அங்கே ஒரு முதியவர் அவசரம் அவசரமாக உள்ளே போகிறார்... அவர் ஓர் மாணவனுடன் ஏதோ கதைக்கிறார்...
என்ன கதைக்கிறார் என கேட்கலாம்... எனது ஒலிவாங்கியை அவர்களை நோக்கிப் பிடிக்கிறேன்...

முதியவர்: அடேயப்பா தம்பி! உங்க என்னடா நடக்கப்போகுது...
மாணவன்: பட்டம் குடுக்கப் போயினம் அப்பு.
மு: உதில நிக்கிற எல்லாருக்குமோடா...?
மா: ஓமணை அப்ப...
மு: சரி... சரி... அப்ப என்ன பட்டம் குடுக்கப் போயினம்... எட்டு மூலைப்பட்டமோ? பிராந்துப் பட்டமோ?
மா: உதில நிண்டு விசர்க்கத கதையாம அங்கால போண அப்பு வெளியால...
மு: நான் போறன்... ஆனா நீங்கள் கஷ்ரப்படப் போறியள்.. ஆயிரக்கணக்கில நிக்கிறியள். எல்லாற்ற பட்டமும் ஒண்டுக்க ஒண்டுக்க செருகப்போகுது... எனக்கென்ன... நான் போயிற்று வாறன்...

ஆம்... அப்பு சென்று விட்டார்...
இப்போது நாம் உள்ளே செல்வோம்...
ஆம்... அங்கே ஒரு மாணவனுக்கு அரிவாள், வீச்சுவாள், குறடு எல்லாம் குடுபடுது... ஆம்... அவர் சத்திரசிகிச்சையில் கலாநிதிப்பட்டம் பெற்றவராம்...
அங்கே ஒருவருக்கு சீமெந்துப் பைக்கற்றுகளும், நீர் மட்டமும், சாந்துப் பலகையும் கொடுக்கப்படுகிறது... அவர் கட்டிடத் துறையில் பட்டம் பெற்றவராம்...

இத்தோடு காலை அமர்வுகள் நிறைவுபெற்றதால் மாலை அமர்வில் சந்திப்போம்...
நன்றி நேயர்களே...

நன்றி சாகாதேவன்...
நேரம் இப்போது காலை 11.55...
'இந்த நேர அறிக்கையை உங்களுக்கு வழங்கியது கந்தசாமி வீச்சருவாள் தனியார் நிறுவனம்.'
சரி நேயர்களே...
விளம்பர இடைவேளையின் பின்னர் சந்திப்போம்...

'சிறந்த சிகை அலங்கரிப்புக்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் சனத் ஜெயசூரியா லோன்றி... உங்கள் தலைமயிரை சிறப்பாக அலங்கரிக்க இலக்கம் 00, சுடலையடி, கொழும்புத்துறை மேற்கு, கொழும்பு 48 இல் இருக்கவே இருக்கிறது சனத் ஜெயசூரியா லோன்றி...'

நேரம் இப்போது 12 மணி...
எமது அடுத்த நிகழ்ச்சி 'அறிவுலகம்' இளைஞர் நிகழ்ச்சி...
புதிய நிகழ்ச்சியோடு கலையகத்தில் வெள்ளையன் கறுவற்தம்பி...
மீண்டும் வேறொரு நிகழ்ச்சியோடு உங்களை சந்திக்கிறேன்... நன்றி நேயர்களே...

நன்றி சொறிறாஜ்...
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் ஓர் விசேட சந்திப்பு...
10 முறை ஓ.எல் எடுத்து சித்தியடையாத திருவாளர் அறிவழகன் அவர்களின் பேட்டி...
வணக்கம் அறிவழகன் அவர்களே...
அறிவழகன்: வணக்கம்...
கறுவற்தம்பி: உங்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுங்களே...

அறி: எனது பெயர் தான் தெரியுமே... பிறந்தது பெரியாஸ்பத்திரியில்... வளர்ந்தது வீட்டில... இப்ப இருக்கிறது வானொலி நிலையத்தில...
கறு: ஆகா... அருமை...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல ஆக்களின்ர வாழத்துக்களால தான் நாங்க அறிவாளியா இருக்க முடியுது...
கறு: நன்றி... நீங்கள் எப்ப முதல் முதலா ஓ.எல் எடுத்தனீங்கள்?
அறி: உதெல்லாம் நினைவிருந்தா நான் எப்பவோ சோதின பாஸ் பண்ணியிருப்பனே...
கறு: மிக்க நன்றி...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல...
(இடைமறித்து)
கறு: சரி... சரி... உங்கட கணக்கு வாத்தியார் பற்றி சொல்லுங்களன்...

அறி: அந்தாளுக்கு ஒண்டும் விளங்காது... எப்ப கேட்டாலும் ஒரே விடைய தான் சொல்லும்... 5 உம் 3 உம் எப்பயும் 8 தானெண்டு தான் சொல்லும்... தமிழாக்கள் ஒண்டும் கண்டுபிடிக்கிறதில்ல எண்டுறாங்கள்... 5 உம் 3 உம் 9 எண்டு நான் புதுசா கண்டுபிடிச்சன், ஆனா பிழை எண்டுறாங்கள்... சரி அது தான் முடிஞ்சது எண்டா... 89 உக்குப் பிறகு என்ன எண்டார் தொண்பது எண்டன்... பிழையாம், புதுசா கண்டுபிடிக்கிறியா எண்டு அந்த மனுசன் அடிக்குது... கண்டு பிடிக்காட்டி கண்டுபிடிக்கேல கண்டுபிடிக்கேல எண்டுறாங்கள்... கண்டுபிடிச்சா அடிக்கிறாங்கள்...
என்ன கொடும ஷரவணா இது...
கறு: கூல்... கூல்...
அறி: நான் சந்திரமுகி டயலொக் சொன்னா என்ன நீர் சிவாஜி டயலொக்க சொல்றீர்? பெரிய அறிவாளியெண்ட நினைப்போ...
கறு: ஐயோ... நான் அப்பிடி சொல்லேல... உங்கள அமைதியா இருக்கச் சொல்லி இங்கிலீசில சொன்னனான்...
அறி: நானும் தமிழ், நீரும் தமிழ்... கேக்கிறவங்களும் தமிழ்... இடைக்குள்ள என்னத்துக்கு உங்கட இங்கிலீசு??? அதான் இடைக்குள்ள ஆங்கிலம்... எனக்கு உம்ம விட நல்லா ஆங்கிலம் தெரியும்... ஆனா அப்பிடி காட்டிக் கொள்றதில்ல...
கறு: ஐயா! மன்னிக்கவும்... அது சரி... உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா...
அறி: தெரியுமாவா... 'தாமோதிரம்பிள்ளை ஆடி ஆடி வாறார்...' எண்டத ஆங்கிலத்தில சொல்லும் பாப்பம்...
கறு: அது... அது...
அறி: நாட்டில நுனி நாக்கில ஆங்கிலம் கதைக்கிறவயின்ர உண்மை நிலை இது தான்...
நான் சொல்றன் கேளும்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்...
கறு: ஐயா... விளங்கேல... விளங்கப்படுத்த முடியுமா...
அறி: அப்பிடி கேக்குறது...
கிவ் எண்டா தா, றிங் எண்டா மோதிரம், சைல்ட் எண்டா பிள்ளை, யூலை எண்டா ஆடி, கம்மிங் எண்டா வாறார்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்... அப்ப விளங்குதே...
கறு: சுத்தம்...
அறி: என்னது...
கறு: சுத்தமான ஆங்கிலம் எண்டன்...
சரி... இறுதியா ஒரு கேள்வி...
நீங்கள் ஓ.எல் பாஸ் பண்ணாதத எண்ணி கவலைப் பட்டதுண்டா?
அறி: சீ... நான் உதைப்பற்றி கவலைப்படேல... ஓ.எல் பாஸ் பண்ணினா ஏ.எல் படிக்கோணும்... ஏ.எல் சோதினை எடுக்கோணும்... கம்பஸ்ஸில படிக்கோணும்... கம்பஸ்ஸில சோதினை எடுக்கோணும்... ஓய்வே இல்லாம போயிடும்... இப்ப பாருங்கோ நான் எவ்வளவு ஓய்வா இருக்கிறன்...
அதோட ஒரு விஷயம் சொல்லுவினம் தெரியுமா...
நாங்க எவ்வளவு கூட கூட படிக்கிறமோ, அந்தளவுக்கு மறக்கிறம்...
ஆகவே படிக்காம விட்டா பிரச்சினை இல்ல தானே...
கறு: ஆகா... அருமை... மிக்க நன்றி... உங்கள் போன்றவர்களின் வாழ்க்கையை எமது சந்ததி பாடமாய் கேட்கோணும் என்று தான் இதை ஒழுங்கு செய்தோம்... உங்கள் வாழ்க்கையை நமது இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்... மிக்க நன்றி...
அறி: மிக்க நன்றி...


ஆம்... அறிவுலகத்தில் அடுத்ததாக புதிர்ப்போட்டி...

10 முட்டைகளின் விடை 7 எனின் பாதி முட்டையின் விலை யாது...
இந்த வினாவிற்கான விடையை தெரிந்தோர் எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டிய இலக்கம் 123456789.
உங்கள் விடைகளை அனுப்பி பெறுமதிமிக்க பரிசுகளை பெறுங்கள்...

அடுத்து ஓர் விளம்பரம்...

உங்கள் கடைசி காலத்தில் இருப்பவரா நீங்கள்... நீங்கள் மேலுலகம் செல்ல பயன்படுத்த வேண்டிய ஒரே சவப்பெட்டி சொர்க்கம் சவப்பெட்டிகள்... நீங்கள் உடனே நாடி உங்கள் சவப்பெட்டியை முன்பதிவு செய்யுங்கள்...

ஆம் நன்றி நேயர்களே...
எமது ஒலிபரப்பு மீண்டும் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்...
அதுவரை நிம்மதியாக இருக்க எமது வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...

***இந்த வேளையில் இங்கிலாந்திலுள்ள எனது மூத்த அண்ணா திரு.க.கிருஷ்ணகுமாருக்கு எனது நன்றிகள். ஏனென்றால் இந்த ஆக்கத்தை முதலில் எழுதியவர் அவரே.
நன்றிகள் கோடி.
இந்த ஆக்கம் சிறப்பாக இருந்தால் அந்தப்பெருமை எனது அண்ணாவைச் சேரும், இரசிக்கும்படி இல்லை என்றால் அந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர் எழுதியதில் சில மாற்றங்கள் செய்தேன்.

*********************************************************************************************************************************************************************************

இது ஒரு மீள்பதிவு...
திரட்டிகளில் இணைக்காத காலங்களில் பதிவிட்ட சில ஆக்கங்களை நேற்று வாசித்த பொழுது எனக்குப் பிடித்திருந்தது...
அதுதான் ஓர் மீள்பதிவு....


அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்...

நீங்களே சொல்லுங்கோ...
இவங்க எல்லாம் சண்டை பிடிக்கப் போனா யாராவது சண்டை பிடிப்பானா?
உடன சரணடைஞ்சிருவாங்கள்..............................

***********************************************************************

என்ர விடியக்காலமச் சாப்பாடு....

பதிவர் அண்ணா சந்ரு , பதிவர் சயந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு அமைய பிடித்த, பிடிக்காத 10 விடயங்கள் சம்பந்தமான தொடர்பதிவு இது....
சரி... இங்கு தான் எந்த பிரச்சினையும் கிடையாதே என்பதால் பதிவிட்டுவிட்டேன்...
இப்போது பதிவு எழுத எடுக்க நேரங்கள் சுருங்கி வருகின்றன.
கடைசிப் பதிவு தலைப்பை யோசித்துவிட்டு 20 நிமிடங்களில் எழுதினேன்....
இது அதைவிடக் குறைவு...
எழுத்துப் பிழைகளை தயைகொண்டு மன்னிப்பீர்...

1. அரசியல் தலைவர்

பிடித்தவர் - அப்படிப் பெரிதாக யாரும் இல்லை. இருக்கிறவர்களுள் சஜித் பிரேமதாசா வை ஓரளவுக்குப் பிடிக்கும். அம்பாந்தோட்டையில் நிறைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக அறிந்தேன்.

பிடிக்காதவர் - நிறையப்பேர்... பெரும்பாலானோரைப் பிடிக்காது.


2. எழுத்தாளர்

பிடித்தவர் - நான் பெரிதாக வாசிப்பதில்லை. இப்போதுதான் நிறைய வலைப்பதிவர்களை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது..

பிடிக்காதவர் - அப்படி யாரும் இல்லை.


3. கவிஞர்

பிடித்தவர் - நா.முத்துக்குமார். ஏனோ இவரது பாடல்கள் எனக்குதத் தனித்தன்மையாய் தெரிகின்றன.

பிடிக்காதவர் - பாடல்களுக்கு பாடல் பிடிக்காமல் போகும்.
'சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி' எழுதியபோது வைரமுத்துவையும், 'அடட கடடம்டம்' எழுதியபோது பா.விஜய் ஐயும் உதாரணத்திற்குச் சொல்லலாம்.

4. பாடகர்

பிடித்தவர் - ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா. முதலாமவரின் பாடல் திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன், இரண்டாமவரின் தமிழ் உச்சரிப்பை வாழ்த்தியிருக்கிறேன்.

பிடிக்காதவர் - உதித் நாராயணன். இவரது தமில் உச்ரிப்பு எனக்ப் பிடிக்றதில்லே.


5. பாடகி

பிடித்தவர் - சித்ரா

பிடிக்காதவர் - நிறைய புதுமுகங்கள். ரீனா பரத்வாஜ் குறிப்பிடத்தக்கவர். சக்கரக்கட்டியில் நான் எப்போது பெண்ணானேன் பாடும் முறை பிடிக்கவில்லை.


6. இயக்குநர்

பிடித்தவர் - கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சசிக்குமார்.

பிடிக்காதவர் - சுசி கணேசன். ஏனோ மனுசனை எனக்குப் பிடிக்குதில்ல. திருட்டுப் பயலே இன் இயக்கமும் என்னைக் கவரவில்லை.


7. நடிகர்

பிடித்தவர் - கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் - கதாநாயகர்கள் அத்தனை பேரையும். எனக்கு கதையின் நாயகர்கள் தான் வேண்டும்.


8. நடிகை

பிடித்தவர் - எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்காது.

பிடிக்காதவர் - அப்படியும் யாரும் கிடையாது.


9. விளையாட்டு

பிடித்தது - கிறிக்கெற்.

பிடிக்காதது - மல்யுத்தம்.


10. பேச்சாளர்

பிடித்தவர் - சுதா மீனாட்சி என்ற பெண்மணி. பட்டிமன்றங்களில் பார்த்திருக்கிறேன்.

பிடிக்காதவர் - அலட்டல்காரர்கள்.

அழைப்பதற்கு யாரைத் தெரிவுசெய்வது என்று தெரியவில்லை....
எனக்கு எல்லோருமே எழுதிவிட்ட உணர்வு....
மருதமூரான் அண்ணாவைத் தொலைபேசியில் அழைத்துவிட்டேன்.
வேறு யாரையும் தெரியவில்லை...
என் தளத்திற்கு வரும் இதுவரை எழுதாத ஒவ்வொருவரையும் எழுதுவதற்கு அழைக்கிறேன்...

நீங்கள் ஏற்கனவே ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள் என்றும், அந்த நிறுவனம் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரபல்யம் அடையவில்லை, உங்கள் நிறுவன இணையத்தளம் பிரபல்யமடையவில்லை என்று வைத்துக் கொண்டால் அதை பிரபல்யப்படுத்த ஓர் திட்டம்...

இந்த உலகத்தில ஏமாளிகள் என்றால் அவர்கள் பதிவர்கள் தான்...
சந்திக்கப்போறம் எண்டு சொன்னியள் எண்டா வரிஞ்சு கட்டிக் கொண்டு ஓடி வருவானுகள்...

வந்ததும் அவங்கள அறிமுகப்படுத்தச் சொல்லுங்கோ...
அது மட்டும் பொறுமையா இருந்திற்று அதுக்குப் பிறகு வந்தவங்கள ஒரு மூலையில நிக்கப் பண்ணுங்கோ...
முக்கியமான விசயம், சந்திப்பு பொதுவா மக்கள் இருக்காத இடமாப் பாத்து நடத்துங்கோ....
அதாவது உயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது பொதுவா அலுவலகங்கள் செறிந்து இருக்கிற இடத்தில நடத்துங்கோ...

அப்ப வாறவங்கள் எல்லாம் தூரத்தில இருந்து வருவாங்கள்...
1 மணித்தியாலம், 2, 3, 4, சிலபேர் அத விடக் கூடுதலா பயணம் செய்து வருவார்கள்...
சந்திப்பு நடக்கிற இடத்தில சும்மா திரியிறது கஷ்ரம் எண்டபடியா (உயர் பாதுகாப்பு வலயமப்பா...) பதிவர்கள் எல்லாம் களைச்சு விழுந்து வருவார்கள்... வருபவர்களுக்கு சோடா அதோட ஏதாவது சிற்றுண்டிகள் கொடுங்கோ...
முக்கியமா அதுகள அவங்கள் சாப்பிடேக்க உங்கட ஆக்கள விட்டு படங்கள எடுத்துக் கொள்ளுங்கோ...

பிறகு சந்திப்பு முழுக்க உங்கட நிறுவனம், உங்கட பனங்கொட்டைக் கொள்கைகள் பற்றிக் கதையுங்கோ.

கதைச்சிற்று அவங்கள அமைதியா அனுப்பி வையுங்கோ.

பதிவர்கள் சும்மா இருப்பாங்களோ?
சும்மாவே ஊரில எவனவன் பிழை விட்டாலே வரிஞ்சுகட்டிக் கொண்டு எழுதுறவங்கள்.
தங்களுக்கே ஆப்பு வச்சா விடுவாங்களோ?
பதிவில போட்டுத் தாக்குவாங்கள்.

இப்ப தான் நீங்கள் உங்கட பனங்கொட்டை வியாபாரப் புத்தியைக் காட்டோணும்...

வந்தவங்களுக்கு நன்றி சொல்றம் எண்டு நீ்ங்களா பதிவர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவ உங்கட தளத்தில போடுங்கோ.

அதில நீங்களே பெயரில்லாம (அனானி) பதிவர்களத் தாக்கிப் பின்னூட்டம் போடுங்கோ.
பதிவர்கள் முதலில வந்த அமைதியாத் தான் பின்னூட்டம் போடுவாங்கள். ஏனென்டா அவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்கள் ஆச்சே?
அவங்கள் அமைதியாப் பின்னூட்டம் போட்டா பெயரில்லாம அவங்களக் கேவலமா திட்டிப் பின்னூட்டம் போடுங்கோ.
பதிவர்கள் கோபப்பட்டு உண்மையளக் கக்கிருவாங்கள்.

அதுக்குப் பிறகு உங்கட நிவுனத்தில வேலை தருவதாகச் சொல்லி ஒரு எட்டப்பப் பதிவருக்கு ஆசையூட்டி அவனுக்கு பதிவர்கள் சோடா குடிச்ச, சிற்றுண்டி சாப்பிட்ட படங்கள குடுத்து அத வச்சுப் பதிவர்கள எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனிப்பட்ட முறையில் தாக்கிப் பதிவு போடப் பண்ணுங்கோ.

அதுக்குப் பிறகு பதிவர்கள் கட்டுப்பாட்டை இழந்து உங்கள் வலைத்தளத்தில் வந்து நீங்கள் பெயரில்லாமல் போட்ட கருத்துரைகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்குவார்கள்.
அப்ப தான் 'சிங்கம் எங்கட வலையில மாட்டிற்று' எண்டு உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு நீங்கள் தான் பெயரில்லாமல் பின்னூட்டமிடுகிறீர்கள் என்று நீங்கள் முட்டாள்கள் என்று நம்பும் பதிவர்கள் அறியமாட்டார்கள் என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டு தொடர்ந்து பின்னூட்டமிடுங்கோ.

பிறகு எதியோப்பியாவிலிருந்து பன்றி, சிம்பாப்வேயிலிருந்து வேலை வெட்டி இல்லாதவன், சோமாலியாவிலிருந்து கழுதை எண்ட பெயர்களில் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தி பின்னூட்டமிடுங்கள்...
உடனே பதிவர்கள் அவற்றிற்று பின்னூட்டமிட வருவதோடு நீங்கள் பதிவர்களைப் பற்றி தரக்குறைவாக பின்னுர்ட்டமிடுவதால் அதைப் பார்க்குமாறு தினமும் 10 ஹிட்ஸ் கிடைக்கும் உங்கள் தளத்தைப் பார்க்குமாறு பதிவுலக நண்பர்களிடம் கொடுப்பார்கள்...

சர்வதேச ரீதியாக பதிவர்கள் சென்றடைவதால் அவர்கள் உங்களை பதிவுகளில் விமர்சிக்க குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த உங்கள் நிறுவனத்தின் பெயர் சர்வதேச ரீதியில் புகழ்பெறும்.
பிறகென்ன....
உங்கள் திட்டம் வெற்றியடைந்துவிடும்...

முன்னரே வாழ்த்துக்கள்....

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும்.
எனினும் முதலாம் பாகத்தைப் படித்துவிட்டுத் தான் இரண்டாம் பாகத்தைப் படிக்க வேண்டுமென்றில்லை. இரண்டாம் பாகத்தைப் படித்துவிட்டும் முதலாம் பாகத்தைப் படிக்கலாம்.
இல்லை முதலாம் பாகத்தை படிக்காமலேயே விடலாம்.
இல்லை, இரண்டு பாகங்களையுமே படிக்காமலும் விடலாம்.
(கொஞ்சம் அதிகமாவே அறுக்கிறனோ?)

6. சுப்ரமணியம் பத்ரினாத் -
தமிழக அணியின் தலைவராக இருந்து தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து வந்தவர்.
26 அல்லது 27 வயதில் தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.
போதியளவு ஆடாததால் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை.
எனினும் இலங்கை அணிக்கெதிரான போட்டியொன்றில் இலங்கையில் வைத்து ஆரம்ப இலக்குகள் சற்று வேளைக்கே வீழ்த்தப்பட்ட பின்னர் அணித்தலைவர் டோனியுடன் சேர்ந்து ஆடிய விதம், குறிப்பாக முரளியை சமாளித்து ஆடியவிதம் இவருக்குள் திறமை இருக்கிறது என்பதைக் காட்டியது.
எனினும் சர்வதேச ரீதியில் இனித் தான் பெரியளவில் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது.
எனினும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் இவருக்கு இனி இடம்கிடைக்குமா என்பது சந்தேகமே...
2011 உலகக்கிண்ணத்தின் பின்னர் வாய்ப்புக்கிடைக்கலாம்.


7. மிஸ்பா உல்-ஹக் -
அடுத்த இருபதுக்கு இருபது விசேடித்த வீரர். (Twenty 20 specialist)
முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறவும், தோற்கும் நிலையிலிருந்த இறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் கூட ஏற்பட்டதற்கும் (இறுதியில் தோற்றாலும்) காரணகர்த்தாக்களில் ஒருவர்.
ஏராளமான காலம் உள்ளூர்ப் போட்டிகளில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர் முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் நட்சத்திரமானார்.
பந்தை ஓங்கி அடிக்கும் வல்லமையுடைய (hard hitting batsman) இவர் சுழற்பந்துவீச்சையும் அழகாக விளையாடக் கூடியவர். (Spin expert)
இருபதுக்கு இருபது என்றால் தன் கையை உயர்த்தி அணிக்காக போட்டிகளை வெல்லும் இவர் ஒருநாள் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடினாலும். இவரது திறமைக்கு ஏற்றவாறு ஆடவில்லை. (He is not playing up to his standard). இன்னும் ஒருநாள் சதமொன்றைப் பெறாத இவர் தொடர்ந்து திறமையை வெளிக்காட்டுவதில்லை. (inconsistent)
ரெஸ்ற் போட்டிகளில் அதைவிட மோசம்.
ரெஸ்ற் போட்டிகளில் பந்துகளை தொடர்ந்தும் மறித்துக் கொண்டு (defence) ஓட்டங்களை அடிக்க முற்படாதது தான் இவரது பிரச்சினை.
ரெஸ்ற் போட்டிகளில் ஆரம்ப 50 பந்துகளில் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றால் அது இவருக்கு சாதனை.
இவ்வாறு தொடர்ந்து மறித்துக் கொண்டேயிருப்பதால் ஒட்டங்களை எடுக்கும் ஆர்வம் குறையும், அதனால் ஓட்டங்களை எடுக்காமல் விட அழுத்தம் அதிகமாக தேவையற்ற அடிகளை அடித்து ஆட்டமிழப்பது தான் இவர் வழமை.
இலங்கை அணியுடனான கடந்த தொடரில் குலசேகரவின் உள்வளையும் பந்துகள் (Inswingers and Indippers) இவருக்கு பெருஞ்சோதனையாக அமைந்தன.


8. உபுல் தரங்க -
இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஒருவர் கிடைத்துவிட்டார் என எல்லோரும் மகிழ்ச்சியடைந்தது இவரால் தான்.
தொடர்நது சதங்கள், அரைச்சதங்களும் என்று ஆரம்பத்தில் அசத்திவந்தார்.
இலங்கை சார்பாக ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களை (போட்டிகள் எண்ணிக்கையில்)பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
வேகப்பந்துவீச்சுக்களை நன்றாக ட்ரைவ் (என்ன தமிழ் போடுவது?) செய்யக் கூடிய இவரது ஸ்குயர் ட்ரைவ்கள் (Square drives) பார்ப்பதற்கு அழகு தான்...
அனைவரும் இவரை ஒரு முழுமையான துடுப்பாட்ட வீரர் (compact player) என நம்பியிருந்த காலகட்டத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்தது.
ஓவ் ஸ்ரம்ப் (Off stump) இற்கு சற்று வெளியே விலகிச்செல்லும் பந்துகளுக்கு துடுப்பை நீட்டி இலக்குக் காப்பாளரிடமோ அல்லது ஸ்லிப் வீரர்களிடமோ பிடியைக் கொடுப்பது தான் இவரது ஒரே பிரச்சினை, பெரிய பிரச்சினை.
(Off stump awareness என்று அழைப்பார்கள். இலங்கையின் மஹேல ஜெயவர்தனவிற்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.)
கிட்டத்தட்ட ஓவ் ஸ்ரம்ப் இலிருந்து விலகிச்செல்லும் பந்துகளை வீசினாலே இவரது இலக்கைக் கைப்பற்றிவிடலாம் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகியது.
எனவே அணயில் இடத்தை இழந்த இவர் அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்ததால் பாகிஸ்தானிற்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற இவர் முதல் போட்டியில் சொதப்பினாலும் இரண்டாவது போட்டியில் அட்டகாசமாக ஆடினார். எனினும் மூன்றாவது போட்டியில் தனது வழமையான முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும் இந்தப் பிரச்சினையை சீர்செய்தால் இலங்கை அணி ஓர் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவரைப் பெறலாம் என்பது மட்டும் உண்மை.


9. ஸ்ருவேட் மக்கில்
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட நட்சத்திரம்.
கிறிக்கெற் உலகில் கடினமான வேலைகளில் ஒன்றாகக் கருதப்படும் மணிக்கட்டுச் சுழற் பந்துவீச்சாளரான இவர் ஷென் வோணை விட இம்மியளவு திறமை குறைவானவர் என்பதால் ஆடமுடியாமல் போனது.
ஒரே அணியில் இரண்டு ஒரே வகைச் சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடுவது அவ்வாறு சிறந்ததல்ல என்பதால் சர்வதேச மட்டத்தில் பெரிதாக ஆடக் கிடைக்கவில்லை.
விளையாடிய போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் ஷேன் வோண் ஓய்வுபெற்ற பின்னர் வாய்ப்புக்கிடைக்கும் போது அதிக வயதாகிவிட்டதாலும், உடற்தகுதிநிலைமை காரணமாகவும் ஓய்வுபெறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தார்.
ஒரு 5 ஆண்டுகள் பிந்திப் பிறந்திருந்தாரானால் இன்னொரு சழந்பந்துவீச்சு ஜாம்பவானை உலகம் கண்டிருக்கும்.10. பிரட் ஹொக்-
Left arm unorthodox வகை எனப்படுகின்ற பந்துவீச்சாளர்கள் கிறிக்கெற் உலகில் மிகக்குறைவு.
Left arm unorthodox என்பது இடது கையால் இடதுகைத்துடுப்பாட்ட வீரருக்கு லெக் ஸ்பின் வீசுவது தான்.
ஆனால் லெக் ஸ்பின் வீசுவது கடினமான ஓர் விடயம் என்பதாலும், அவ்வாறு கஷ்ரப்பட்டு வீசும் பந்துகள் வலதுகைத் துடுப்பாட்ட வீரருக்கு (உலகில் வலதுகைத் துடுப்பாட்ட வீரர்கள் தான் அதிகம்) உள்திரும்பும் பந்துகளாக அமையும் என்பதால் இந்தப் பந்துவீச்சு முறையை பலரும் தெரிவுசெய்வதில்லை. மாறாக Left arm orthodox பந்துவீச்சாளர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறு வீசும் போது பந்து வலதுகைத்துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்வதால் இலக்குகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம்.
(பந்து உள்நோக்கி வரும் போது அதைக் கணித்து ஆடுவது ஓரளவுக்கு சுலபம். அதுவும் மணிக்கட்டுச் சுழல் பந்துகள் உள்நோக்கி வரும் போது ஆடுவது ஓரளவுக்கு சுலபம்.
ஆனால் பந்து துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்லும் போது ஸ்லிப் இடம் பிடிகொடுக்கவோ, இலக்குக் காப்பாளரிடம் பிடிகொடுக்கவோ, அல்லது ஸ்ரம்ப் செய்யப்படவோ வாய்ப்புகள் அதிகம்.)
அப்படிப்பட்ட Left arm unorthodox வகைப்பந்துவீச்சாளரான இவர் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்.
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட இன்னாரு நட்சத்திரம்.
பெரிதாக சர்வதேச மட்டத்தில் ஆடமுடியாமல் போன இவர் சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


11. மொகமட் அஷ்ரபுல்-
உருவத்தில் கட்டையான சின்னப்பையன் ஒருவன் பங்களாதேஷ் அணியில் விளையாடி எதிரணிகளை துவம்சம் செய்கிறான் என பலரும் கதைத்தார்கள்.
உருவத்தில் சச்சினைப் பொல சிறிது குள்ளமும், சில அடிகளை அடிக்கும் போது சச்சினின் சாயல் தெரிவதாலும், சிறிய வயதில் இவ்வாறு அழகாக ஆடுவதாலும் பங்களாதேஷ் அணிக்குக் கிடைத்த அரவிந்த டீ சில்வா என நினைத்துக் கொண்டேன்.
(உலகில் பிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பலரும் ஏற்குக் கொள்கிறார்கள். அதுபற்றி சொல்ல முற்பட்டால் தனியாக ஒருபதிவே இடவேண்டி வரும்.)
ஆரம்ப காலத்தில் அடித்த ஓட்டங்களும், அவற்றைப் பெற்ற விதமும் என்னை அஷ்ரபுல்லின் இரசிகனாகவே மாற்றிவிட்டிருந்தன.
ஆனால் வழமையைப் போல நான் விரும்பும் புதிய வீரர்கள் காலை வாருவது போல அஷ்ரபுல் உம் என் காலை வாரிவிட்டார்.
அணித்தலைமை கிடைத்த பின்னர் இவரது துடுப்பாட்டம் மோசமாக மழுங்கத் தொடங்கியது.
அத்தோடு மிகச்சிறிய வயதில் மைதானத்தில் பல சிரேஷ்ர வீரர்களோடு மோதுவதும் எனக்கு வெறுப்பைத் தந்தது.
இப்போதெல்லாம் அஷ்ரபுல் துடுப்பாட்டத்தில் ஓட்டங்கள் குவிப்பது நான் புத்தகம் எடுத்துப் படிப்பது போல அரிதாகிவிட்டது.
இப்போது துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சில் மனிதர் ஏதோ செய்கிறார்.
அற்புதமான ஆடும்நுட்பம் (technic என்பதை இவ்வாறு மாற்றுகிறேன். தமிழ் சரியாக உள்ளதா) கொண்ட ஒருவரான இவருக்கும் பிரச்சினை temperament தான்...
பொறுமை குறைந்தவரான இவர் இரண்டு, மூன்று பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்களைப் பெறமுடியாவிட்டால் அடுத்த பந்தில் முட்டாள்தனமாக அடித்தெரிவொன்றை (shot selection) மேற்கொண்டு ஆட்டமிழந்துவிடுவார்.
இப்போதெல்லாம் இவரது இரசிகர் என்ற அளவில் இல்லாவிட்டாலும் தனது திறமையை வீணாக்குகிறார் எனக் கவலைப்படுவதுண்டு.


12. மார்லன் சாமுவேல்ஸ்-
என்னை மிகவிரைவாக கவர்ந்த கிறிக்கெற் வீரர்களில் ஒருவர்.
மத்தியவரிசையில் அடித்து ஆடக்கூடிய இவர், சுழற்பந்துவீச்சாளரும் ஆவார்.
போட்டிகளை அணிக்காக வென்று கொடுக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் கிறிக்கெற் அணியில் ஒரு கலக்கக் கலக்குவார் என்று எதிர்பார்த்தால் மனிதர் எனக்கு ஆப்படித்துவிட்டார்.
ஆட்டநிர்ணய குற்றத்தல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒழுங்காக இருந்திருந்தால் சிறந்த வீரராக வந்திருப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட முக்கியமானவர்,
13. கனகலிங்கம் கோபிகிருஷ்ணா.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த இவர் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என பரவலான பேச்சுக்கள் அடிபட்டன.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் மணிக்கட்டுச் சுழற்பந்தை அநாயசமாக வீசக்கூடியவர், அத்தோடு ஓவ் ஸ்பின்னையும் அட்டகாசமாக வீசக் கூடியவர். சிறந்த கிறிக்கெற் மூளை உடையவரான இவர் பந்துகளின் வேகங்களை மாற்றி, அவற்றின் உயரங்கயும் மாற்றி துடுப்பாட்ட வீரர்களை குழப்புவதில் வல்லவர்.
அத்தோடு சிறந்த மத்தியவரிசை துடுப்பாட் வீரரான இவர் அணியின் தேவைக்கேற்றவாறு நிதானித்து ஆடக்கூடியவர்.
இலக்குகள் ஒருபுறத்தில் சரிந்தால் மறுபுறத்தில் பொறுமையாகவும், மற்றைய வேளைகளில் அடித்தும் ஆடக் கூடிய இவர் பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரராக கருதப்படுகிறார்.
சிறிது பருத்த (சிறிதா? எண்டு நக்கலா சிரிக்கப்படாது. அது அப்ப...) உருவமானவர் என்றாலும் 30 யார் கோட்டுக்குள் கவர், எக்ஸ்ரா கவர் திசைகளில் அநாயசமாக பாய்ந்து பிடிக்கக் கூடியவர், அத்தோடு துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில் நிற்கும் சிலி மிட் ஓவ், சிலி மிட் ஓன் களத்தடுப்பு நிலையில் அருமையான பிடிகளை எடுக்கக் கூடியவர்.
எனினும் அண்மைக்காலத்தில் கிறிக்கெற் விளையாடாமல் மனிதர் வீங்கி வெடிக்கும் நிலையில் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் சொல்கின்றன.
எனினும் இவர் கிறிக்கெற்றிலிருந்து ஒதுங்கி இருப்பதால் இலங்கை கிறிக்கெற் அணி சிறந்ததொரு சகலதுறை வீரரை இழந்திருப்பதாக நண்பர் குமார் சங்கக்கார ஒருசில வாரங்களுக்கு முன்னர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
(100% நகைச்சுவையே. 13 ஆவதாக பெயரிட்ட நபரை விட மற்றவர்கள் எல்லோரும் உண்மையான வீரர்களே.
13 ஆவதாக சிறிது நகைச்சுவைக்காக சேர்த்துக் கொண்டேன். ஆகவே நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு எனக்கு ஓட்டோ அனுப்பாமல் விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)

அப்படியே வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள் பட்டியலை நிறைவுசெய்யலாம் என்று நம்புகிறேன்.
இவர்கள் யாவரும் எனது மனதில் தங்கள் திறமையை வீணாக்குபவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களே.
வேறு பலரை நான் தவறவிட்டிருக்கக் கூடும்.

யாழ்தேவி வாக்குப்பட்டையிலும், தமிழிஷ் வாக்குப்பட்டையிலும் வாக்களிக்கலாம்...
பின்னூட்டத்தில் என்னைக் கும்மலாம்...

நமது தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள், குறிப்பாக ரஜினி, விஜய் போன்ற நாயகர்கள் இறப்பது எவ்வாறு?

Image Hosted by ImageShack.us

பச்சிளம் பாலகர் சங்கத்தின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
பொருளாதாரச் சிக்கல்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அப்பாவிகளான பச்சிளம் பாலகர்களான நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆராயப்பட்டன.
ஆகவே பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்.
'சரி... எங்களுக்கென்று தனிநாடொன்றை உருவாக்குவதில் பிரச்சினை இருக்காது. எம்மால் அது முடியும். ஆனால் உருவாகும் பச்சிளம் பாலகர் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது?'
உண்மையிலே நியாயமான கேள்விதான். எல்லோரும் அமைதியாக இருந்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கச் செயலாளரான யோ வொய்ஸ் எழுந்து 'நாம் தனிநாட்டை பெற்ற பின்னர் வேண்டுமென்று அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம். ஒபாமா பொறுமையிழந்து எம்மைத் திருப்பித் தாக்க கட்டளை பிறப்பிப்பார். உடனே அமெரிக்கா எங்கள் நாட்டைக் கைப்பற்றி எங்கள் நாட்டைத் தங்கள் நாட்டின் மாநிலமொன்றாக மாற்றிவிடும். அதன்பின்னர் நாம் தானாகவே முன்னேறிவிடுவோம்.' என்றார்.
இந்த அருமையான சிந்தனையைக் கேட்ட எல்லோரும் யோ வொய்ஸைப் பாராட்டியதோடு கனககோபிக்குப் பின்னர் யோ வொய்ஸை சங்கத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
அதுவரை அமைதியாகவிருந்த பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் கனககோபியைப் பார்த்த பலரும் 'ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டனர்.
கனககோபி லேசாகச் சிரித்துவிட்டு 'அவர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்றினால் நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?' என்றார்.
அனைவரும் சிந்தித்துவிட்டு கனககோபியை 'வேண்டுமென்றே யோசிப்போர்' சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு மாநாடு நிறைவுபெற்றது.


**********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் தந்தையார் காலமாகிவிட்டார்.
அவர் துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்தார்.
சங்கத்தின் சார்பில் கனககோபி அவரை ஆறுதற்படுத்த அங்கே சென்றிருந்தார்.
நண்பருக்கு ஓர் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவர் இன்னும் அழத்தொடங்கிவிட்டார்.
'ஏன் கூடுதலாக அழுகிறாய்?' என்று தலைவர் கேட்டார்.
'இப்போது தான் என் சகோதரி அழைப்பெடுத்தார். அவரது தந்தையும் இறந்துவிட்டாராம்.' என்றார் நண்பர்.


***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...
25 வயசில காதலிச்சா, இப்ப தான் உழைக்க தொடங்கியிருக்கிறாய் அதுக்குள்ள காதல் தேவைப்படுதோ? எண்டுறீங்க...
30 வயசில காதலிச்சா, இந்தக் கழுதை வயசில உனக்கேன்ரா காதல் எண்டுறீங்க...
நாங்க அப்ப எப்பதான்ரா காதலிக்கிறது?'

நீங்களே சொல்லுங்கோ அவர் பச்சிளம் பாலகர் தானே???


***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் தலைவரான கனககோபி அண்மையில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்துவிட்டார்.
எல்லோரையும் போல வெறுமனே 'I love you' என்றோ அல்லது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றோ சொல்லவிரும்பாத அவர் புதுமையாக தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் அந்தப்பெண் ஏன் கனககோபியை காதலிக்கத் தொடங்கினார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'

************************************************************************************************

குறிப்பு: இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எந்த தீய நோக்குடனும் அல்ல.
இங்கே பெயர் குறிப்பிட்ட பதிவர் சகோதரர்கள் இவற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

************************************************************************************************

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் இரண்டு ஏற்கனவே தயாராகிவிட்டது. எனினும் இந்தப் பதிவின் பின்னர் பதிவிடுகிறேன்.

உண்மையாகவே இருக்கிறம் ஏற்பாடு செய்த அச்சுவலைச் சந்திப்புப் பற்றி பெரிதாகக் குறைசொல்லி எந்தப் பதிவும் இடக்கூடாது என்று தான் இருந்தேன்.
ஏனென்றால் பொதுவாகவே நான் சக்தி தொலைக்காட்சியை எதிர்த்துப் பதிவிட்டு, பின்னூட்டமிடுவதோடு, அம்மா பகவான் பற்றியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இதனால் சில மஞ்சட் காமாலைக் கண்களுடையவர்கள் நான் குற்றம் சொல்லிப் பிரபலமடைய முற்படுவதாக நினைத்தார்கள்.
இதனால் சில விடயங்களை கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனது மனச்சாட்சிக்குச் சரியென்று படுகின்ற எல்லாவற்றையும் சொல்கின்ற, செய்கின்ற கோபி எங்கே போனான் என்று என்னை யோசிக்க வைத்த சம்பவங்கள் அவை.
(நான் அம்மா பகவான் பற்றிப் பதிவிட்ட அன்று எனது கைத்தொலைபேசிக்கு ஒரு மனநோயாளி அழைப்பெடுத்த அவருக்கு அவரது தாய் தந்தையர்கள் அல்லது நண்பர்கள் சொல்லிக்கொடுத்த இனிய வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் கதைத்ததை அப்போது சும்மா விட்டுவிட்டேன். பின்னர் தான் யோசித்தேன் சிலவேளை அது அந்தப்பதிவை வாசித்த ஓர் பக்தரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று.)


என்னை இந்தப் பதிவை பதிவிட வைத்தது ஓர் பின்னூட்டம் தான்.
எனது கடந்த பதிவிற்கு kajee என்ற பெயரில் இடப்பட்டிருந்த அந்தப் பின்னூட்டத்தில்
'எல்லாரும் தண்ணியில தத்தளிச்சீங்களாமே?' என்று கேட்கப்பட்டிருந்தது.

அதைப் பதிவிட்ட நண்பர் சந்திப்பிற்கு வரவில்லை என்பது வெளிப்படை. இது ஒரு விஷமத்தனமான பின்னூட்டம் என்பதிலும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் 'எல்லாரும்' என்பதன் மூலம் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களுக்குமல்லவா கெட்ட பெயர்?
எனக்கு யார் மது அருந்தியது அல்லது மது அருந்தவில்லை என்பது பிரச்சினை கிடையாது. யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் மூக்கை நுழைக்கவிரும்பவில்லை.
மது அருந்துவதற்கு 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியாக முடியும்.
(இங்கும் நான் தட்டுப்படுகிறேன். எனக்கு இன்னும் 20 ஆகவில்லை)

ஆனால் எனது கேள்வி என்னவென்றால் என்னைப் போன்ற சிறியவர்கள் அன்று வந்து மது அருந்தி வீட்டிலோ அல்லது எங்கோ பிரச்சினை ஏற்பட்டிருந்தால் ஒட்டுமொத்தப் பதிவர்களுக்கும், சந்திப்புக்குமல்லவா கெட்டபெயர் ஏற்பட்டிருக்கும்.
(இப்போது மட்டும் சந்திப்புக்கு நல்ல பெயர் இருப்பதாக சொல்லவரவில்லை)
நான் கோக் ஒன்றை எடுக்கச் சென்ற பொழுது 'என்ன வேணும்?' என்று கேட்கப் பட்டது.
'நான் கோக் வேண்டும்' என்றேன்.
அப்போது அதில் நின்றவர் 'கோக் தான் வேணுமா?'என்றார்.
நானும் 'ஓம்' என்றேன். அவர் மீண்டும் 'கோக் ஆ?' என்று நான் ஏதோ விஷத்தைக் கேட்பது போலக் கேட்டார்.
இதை எனது மொழியில் 'மதுப்பழக்கத் திணிப்புகள்... கெளரவமான வடிவில்...' என்று சொல்லலாமா???


மது அருந்துதல் என்பது வெளிநாட்டு சந்திப்புகளில் சாதாரணம் என்ற நவீனக் கருத்தை பலர் சொல்லாம்.
உண்மை தான். ஆனால் அது மேற்கைத்தேய நாடுகளில்.
இங்கு மதுபான ஏற்பாட்டுக்களைச் செய்திருந்தால் அதை சந்திப்பு முடியும் தறுவாயில் ஆரம்பித்திருந்தால் சந்திப்பும் ஒழுங்காக இருந்திருக்குமல்லவா?
மு.மயூரன் அண்ணாவின் பதிவில் சொன்னது போல 'இளையதம்பி தயானந்தா அவர்கள் இணையம் மூலம் உரையாற்றும் போது உங்களோடு முடிவில் மீண்டும் கதைக்கிறேன். ஆனால் அப்போது நீங்கள் அதைக் கேட்கும் தறுவாயில் கேட்கும் நிலையில் இருப்பீர்களோ தெரியாது என்று சொன்னது தசாவதாரம் படத்தில் பூவராகவன் கமலிடம் சந்தானம் அவரது ஆட்கள் குடிபோதையில் மிதப்பதை சுட்டிக் காட்டியது' போல இருந்தது.


எங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு' என்றே சொல்லப்பட்டதே தவிர 'இருக்கிறம் சஞ்சிகையின் ஒன்றுகூடல்' அல்லது 'இருக்கிறம் சஞ்சிகையின் கொள்கைவிளக்கச் சந்திப்பு' என்றோ குறிப்பிடப்படவில்லை.
வலைப்பதிவர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் சந்திப்பை ஏற்படுத்துவதை செய்ய முற்பட்டீர்கள் என்றால் அதற்காக என்ன செய்தீர்கள், ஆரம்பத்தில் எங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தச் சொன்னதைத் தவிர?
நிறையப் பதிவர்கள் தூர இடங்களிலிருந்து இந்தச் சந்திப்புக்காக வந்திருந்தார்கள். பணம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில்?
தூர இடங்களிலிருந்த வந்த பதிவர்கள் சிலரின் மன ஓட்டத்தை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
(பதிவர்கள் யாருக்காவது இந்தச் சந்திப்பு திருப்தியளித்தது என்றால் என்னிடம் காரணத்துடன் சொல்லுங்கள். காரணம் எற்புடையது என்றால் இந்தப் பதிவிற்காக நான் பகிரங்கமாக பதிவில் மன்னிப்புக் கோருகிறேன்.)

சிலர் புதிய காரணமொன்றுடன் வரலாம்.
இருக்கிறம் சஞ்சிகை யாரையும் வற்புறுத்தி அழைக்கவி்ல்லை, விரும்பியவர்களையே அழைத்தது என்று.
இதற்குப் பெயர் தான் சப்பைக் கட்டு கட்டுதல் என்பது.
'இலங்கைப் பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் இனிய சந்திப்பு' என்றால் அந்தப் பதத்தின் மூலம் இலங்கையிலிருந்து பதிவிடும் ஒவ்வொருவரும் இந்தச் சந்திப்பின் காரணிகளாகிவிடுகின்றனர்.
பதிவர்கள் இந்தச் சந்திப்பைப் பகிஷ்கரித்திருந்தாலோ, அல்லது ஓரிருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தாலோ சந்திப்பு உண்மையில் தோல்வியடைய வேண்டும்.

பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் சந்திப்பு என்றால் பதிவர்கள் சார்பாக யார் உரையாற்றினார்கள்?
லோஷன் அண்ணா ஊடகவியலாளர்.
மருதமூரான் அண்ணா யாழ்தேவி திரட்டியின் சார்பில்.
எங்கே பதிவர்கள் சார்பாக???
பதிவர்களைப் பற்றி யார் கணக்கெடுத்தது?
ஏதோ பாடசாலையில் வைத்து படிப்பிப்பது போல எம்மை நிற்கவைத்துவிட்டு (இருக்கிறம் சஞ்சிகையில் நின்றோம்... ஹா ஹா ஹா... மிக்க நன்றி) முன்னால் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது?

இங்கே சிலர் பதிவர்கள் என்றால் என்ன பெரியவர்களா?
இலவசமாக புளொகர் அல்லது வேர்ட்பிரஸில் அல்லது வேற ஒரு தளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டு ஓர் யுனிக்கோட் தமிழ் எழுதுவானும், ஒரு கணணியும், ஓர் இணைய இணைப்பும் இருந்தால் யாருமே பதிவிடலாமே.
பிறகென்ன நீங்கள் நின்றால் ஏதோ ஜனாதிபதி நின்றதைப் போல குறை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம்.
நிச்சயமாக... நாம் சாதாரமானவர்கள் தான்...
எம்மிடம் இருப்பது சிறிய நகைச்சுவை உணர்வும், சிறிய தேடலும் தான்...
நாங்கள் டம்மிகள் தான்...
ஆனால் டம்மிகளை சந்திக்கவும், அவர்கள் மூலமாக ஒரு சஞ்சிகையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் அந்த சஞ்சிகையை என்னவென்று சொல்வது?
(சஞ்சிகையின் பிரபலத்திற்கு(ம்) இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை திரு.இளையதம்பி தயானந்தா ஏற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்)

பதிவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்படலாம்.
இரண்டாம் கொட்டகையிலிருந்து அதற்குப் பின் யாருமே நிகழ்ச்சியைக் கவனிக்கவில்லை என்று.
உண்மை... இரண்டாம் கொட்டகையிலிருந்தவன் என்ற வகையில் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.
லோஷன் அண்ணா உரையாற்றத் தொடங்கியபோது எங்களுக்கு 'கிர் கிர் கிர்' என்று ஏதோ ஒரு சத்தம் தான் கேட்டது.
மருதமூரான் அண்ணா உரையாற்றியபோதும் அதே பிரச்சினை.
மற்றவர்களின் பேச்சுக்களை நாங்கள் கேட்க விரும்பவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொண்டாலும் மேலே குறிப்பிட்ட இருவரும் பதிவர்கள். அவர்கள் எங்களில் ஒருவர். அவர்கள் பேசும் போது அதைக் கேட்காமல் விடுத்து அவர்களை அவமானப்படுத்த எமக்கு என்ன அவசியம்?

மழையை நோக்கி விரலை நீட்டுவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
கொழும்பின் பொதுவான வானிலை சுட்டெரிக்கும் வெயில் தானே?
அன்று வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் பதிவர்கள் யாவரும் அந்த வெயிலில் காய வேண்டுமா?
மழை மட்டும் தான் அசெளகரியமா?

பலர் நேரடி ஒளிபரப்பில் குறை இருப்பதாக குறை சொல்லியிருந்தார்கள்.
ஐயா! நாங்கள் நேரே சென்றே எங்களால் ஒன்றையும் காணமுடியவில்லை. நீங்கள் நேரடி ஒளிபரப்பைப் பற்றிக் கதைக்கிறீர்கள்.
நேரடி ஒளிபரப்பை செய்த அதே கெளபோய்மது தான் பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்.
அங்கே போதுமான Extension code கள் கூட இல்லை என்று சொன்னதாக ஓர் நினைவு.
அவர் என்ன செய்யமுடியும்?
அது அவரது தனிப்பட்ட முயற்சி.
அவரது முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.

நான் பலரிடம் தெரிவித்ததை திரும்பவும் சொல்கிறேன்...
அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...

நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன்... நான் அன்றைய சந்திப்பை பதிவர் சந்திப்பு என்று நினைத்து வந்து ஏமாறவில்லை.
வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் சென்றேன்.

எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.

*************************************************************************************************
எனக்கு இருக்கிறம் மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் கிடையாது.
நான் இனி இருக்கிறமை முன்பைவிட அதிகமாக வாங்கத் தான் போகிறேன், ஏனென்றால் எங்கள் பதிவர்களின் ஆக்கங்கள் எழுத்தில் வருவதை படிப்பதற்கு எனக்கு பெருமை, விருப்பம் தான்.
நான் எந்தத் தனிப்பட்ட நபர்களையும் தாக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது.
எனது சில கருத்துக்கள் சில நண்பர்களின் பதிவுகளின் சொல்லப்பட்ட கருத்துக்களாக இருக்கலாம். எனினும் எந்தக் கருத்தையும் களவாடும் நோக்கம் எனக்கில்லை. சில கருத்துக்கள் பொதுவாக இருப்பது பிழையில்லையே. சில கருத்துக்கள் என்னைப் பாதித்திருக்கலாம்...

*************************************************************************************************

அன்றைய சந்திப்பிற்கு வந்த நண்பர்கள் தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
என்னிடம் கொஞ்சப் புகைப்படங்கள் உள்ளன. அவற்றை மின்னஞ்சல் முகவரி தெரிந்த அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.
அவற்றை வலைப்பதிவில் வெளியிட விரும்பாததால் தனித்தனியே அனுப்புகிறேன்.
வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள்.

இலங்கையிலிருந்து வெளியாகும் பொழுதுபோக்குச் சஞ்சிகையான 'இருக்கிறம்' ஏற்பாடு செய்த அச்சுலைச் சந்திப்பு நேற்று (02.11.2009)மாலை இடம்பெற்றது.
'அச்சு' ஊடகத்தினருக்கும் 'வலை'ப் பதிவர்களுக்குமிடையில் இணைப்பொன்றை ஏற்படுத்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மழை வந்து குழப்பிவிட ஏற்பாடுகள் ஒருகணம் ஆடிப்போயின.
எனினும் ஓரளவுக்கு சுதாகரித்துக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஆவன செய்தனர்.

சரி... இனி எனது தமிழில்....

நான் அச்சவலைச் சந்திப்புக்குப் போனதே பெரிய பமபல்.
எனக்கு இருக்கிறம் அலுவலகம் எங்க இருக்கு எண்டு தெரியாது. சரி எண்டு வந்தியண்ணாற்ற கேட்டன். அவரும் ஆதிரை அண்ணாற்ற கேள் எண்டார்.
ஆதிரை அண்ணா தான் அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் சரியான நேரத்துக்கு வரமுடியாது என்பதால் பதிவர் பால்குடி அண்ணாவ தொடர்பு கொள்ளுமாறு அவரின் தொடர்பு கொள்ளுமாறு கூறி அவரின் அலைபேசி இலக்கத்தைத் தந்தார்.
எனக்குப் பெரிய குழப்பம், அவரை பால்குடி என்று கூப்பிடுறதா அல்லது அவரின்ர உண்மையான பெயரில கூப்பிடோணுமா எண்டு.
சரி எண்டு முடிவே எடுக்காம அவருக்கு அழைப்பு ஏற்படுத்தி,
'ஹலோ... நான் கோபி கதைக்கிறன். கனககோபி எண்ட பெயரில பதிவிடுறனான். நீங்க பால்குடியா?' எண்டு கேட்டன்...
அவர் பயங்கரமா சிரிக்கத் தொடங்கிற்றார். எனக்கும் அப்ப தான் விசயம் விளங்கி நானும் பயங்கரமா சிரிச்சு ஒரு மாதிரி கதைச்சு முடிஞ்சிற்று.


சரி எண்டு அவரோட சேர்ந்து இருக்கிறம் அலுவலகத்திற்கு போனா அங்க தெரிஞ்ச ஒரு முகத்தையும் காணேல.
(பிறகு தான் விளங்கிச்சு, எனக்கு நிறைய முகங்களைத் தெரியாது எண்டு. படுபாவிகள்... 10, 15 வருசத்துக்கு முதல் எடுத்த புகைப்படங்கள வலைப்பதிவில் தங்கட புகைப்படமா போட்டிருக்கிறாங்க.)
பிறகு ஒருவாறு இறக்குவானை நிர்ஷன் மற்றும் யோ வொய்ஸிடம் அறிமுகமானேன். மன்னார் அமுதனை நேரடியாக அடையாளம் கண்டுகொண்டேன்.
பிறகு கொஞ்சம் (கொஞ்சமா.... 3 மணிக்கு சந்திப்பு எண்டா 3.45 வாறது கொஞ்சம் பிந்தியா?) பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார்.
(வந்தியண்ணாவின் பச்சிளம் பாலகர் சங்க உறுப்பினர் பதவி ஆபத்தில் இருப்பது வேறுகதை)
பிறகு லோஷன் அண்ணா வந்தார். பிறகு மருதமூரான் அண்ணா வந்தார்.
அப்பாடா எண்டு சுபாங்கனும் நானும் கூட்டணி அமைச்சுக் கொண்டம்.

பிறகு புற்தரைக்குப் போய் நாங்கள் அச்சுவலைச் சந்திப்பை பதிவர் சந்திப்பாக மாற்றி 5,6 பதிவர்கள் ஒன்றாக கூடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
பதிவர்களில் இறக்குவானை நிர்ஷன் மட்டும் முன்னனுக்குப் போயிருந்து அழகாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் மூலமாகத் தான் அங்கே என்ன நடந்தது என்பதை அறியப் போகிறோம் என்பது வேறு கதை.
(லோஷன் அண்ணாவும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் ஊடகவியலாளரும் என்பதால் அவர் தனிப்பிரிவு.)

நிறைய இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அச்சு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்திலிருந்து நமது மூத்த, பிரபல பதிவர் ஒருவரது இளவரசி ஒருவர் வரவில்லை என அவர் கவலைப்படுவதை பதிவிடுமாறு இன்னுமொரு பிரபல, மூத்த பதிவர் என்னைக் கேட்டுக் கொண்டாலும் மூத்த,பிரபல பதிவர் பாவம் என்பதால் அதைப் பற்றிப் பதிவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ;)

(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)

சந்திப்பில் இருக்கிறம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களைப் பற்றி சில விவாதங்கள் இடம்பெற்றாலும் இருக்கிறம் சஞ்சிகையைப் பற்றிக் கதைக்கின்ற உரிமை, தகுதி எனக்கில்லாததால் அதைப்பற்றிக் கதைக்கவிரும்பவில்லை.
இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகளில் இதுவரை 5 அல்லது 6 சஞ்சிகைகளைத் தான் வாங்கியிருக்கிறேன்.
ஒரு சஞ்சிகையை வாங்கிப்படிக்காமல் அதைப்பற்றி விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
(இருக்கிறம் சஞ்சிகையை வாங்காததற்கு காரணம் அவர்களது உள்ளடக்கங்கள் சரியில்லை என்பதால் அல்ல. பொதுவாகவே பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை நான் வாங்குவதில்லை. இந்தியச் சஞ்சிகைகளை வாங்கியதே கிடையாது.)

வேறென்ன...
பதிவர்களின் அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டதால் இனி அவ்வப்போது 'superb post' என்று குறுஞ்செய்திகள் செல்வதற்கு இடமுண்டு.

**********************************************************************************************

நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு இனி பதிவர்கள் எல்லோரையுடைய பெயர்களுக்குப் பின்னாலும் 'அண்ணா' சேர்க்கப்படும்.
இறக்குவானை நிர்ஷன் அண்ணா, யோ வொய்ஸ் அண்ணா, சந்ரு அண்ணா...
சுபாங்கன் தான் நடுவில் நிற்கிறார். 2 வயது மூத்தவர் என்பதால் அண்ணா என்றழைப்பதா இல்லையா என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும் முடிவு எடுக்கப்படும்.
(மற்றவர்களை ஏற்கனவே அண்ணா என்றழைப்பது தான் வழக்கம் என்பதால் பிரச்சினையில்லை)

**********************************************************************************************

சரி...
இனி ஓரிரண்டு படங்கள்....
காதலி: நாங்க கலியாணம் முடிச்சதும், உன்ர எல்லாத் துக்கங்களிலயும், கஷ்ரங்களிலயும் உனக்கு ஆறுதலா இருக்க விரும்புறன். உன்ர கண்ணீர எப்பயும் துடைக்க விரும்புறன்.
காதலன்: உன்ர அன்புக்கு நன்றி. ஆனா எனக்குத் தான் இப்ப எந்தக் கஷ்ரமோ துன்பமோ இல்லையே?
காதலி: அது ஏனென்டா நாங்க இன்னும் கலியாணம் கட்டேலயே...


வழிகாட்டி: வாங்கோ... இது தான் நயகரா நீர்வீழ்ச்சி.(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...
இந்த வீழ்ச்சிகளின்ர சத்தம் மிகப்பெரியது. 20 சுப்பர்சொனிக் விமானங்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலால பறந்தாலும் அந்த விமானங்களின்ர சத்தம் கீழ நிக்கிற எங்களுக்கு கேக்காது. அந்தளவுக்கு இரைச்சல் வாய்ந்தது.
அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்.


நம்ம சுப்பிரமணியம் அண்ண புதுசா மாருதி கார் வாங்கினார்.
கார் வாங்கிற்று சொந்த ஊருக்குக் கிளம்பினார்.
கொழும்பில இருந்து சிலமணி நேரங்களிலயே வவுனியாவுக்குப் போய்ச் சேர்ந்திட்டார்.
அங்க போய் ரெண்டு, மூண்டு நாள் இருந்திற்று ஒருநாள் விடிய கொழும்பில இருக்கிற மனிசிக்கு அழைப்பு எடுத்தார்.
'இஞ்ச, நான் இப்ப வெளிக்கிடுறன். அங்க 5,6 மணித்தியாலத்தில வந்திடவன்' எண்டார்.
மனுசியும் பாத்து பாத்து களைச்சுப் போச்சுது.
அழைப்பு எடுத்து இரண்டாவு நாள் களைச்ச சுப்பிரமணியத்தார் வந்து சேர்ந்தார்.
'என்னப்பா நடந்தது? ஏன் பிந்தினது?' எண்டு மனுசி கேட்டிச்சு.
'இவங்கள் கார் செய்யிறவங்களுக்கு விசர். மூளை இல்ல. முன்பக்கம் போறதுக்கு 4 gear வச்சிருக்கிறாங்கள். ஆனா பின்பக்கம் வாறதுக்கு ஒரே ஒரு கியர் தான். முட்டாளுகள்...' எண்டார் சுப்பிரமணியத்தார்.


ஆசிரியை: எருதும், பசுவும் புல் 'மேய்ந்தது' என்ற வாக்கியத்தை சரியாக சொல்...
மாணவன்: பசுவும், எருதும் புல் மேய்ந்தது
ஆசிரியை: ஏன் அப்பிடி?
மாணவன்: பெண்களுக்கு முதலிடம் ரீச்சர்.


திருமணத்தின் முன்னர் ஓர் ஆண் ஓர் பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் அது அவள் மீது அவன் காட்டும் அன்பு.
திருமணத்தின் பின்னர் அவளின் கையை இறுகப் பற்றிப் பிடித்தால் அது தற்பாதுகாப்பு.


ஓர் கணவனின் ஆதங்கம்.
என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்கள் என்னும் அழகைப் படைக்கும் கடவுள், பின்னர் ஏன் அவர்களை மனைவிகளாக மாற்றிவிடுகிறான்?


தன்பக்கம் உண்மையிருக்கும் போது அதை ஏற்று சரணடைபவன், நேர்மையாளன்.
தன்கருத்து பற்றி முடிவாகத் தெரியாத போது சரணடைபவன், பரந்த மனம் கொண்டவன்.
தன்பக்கம் உண்மை இருந்த பொழுதிலும் சரணடைந்து மன்னிப்புக் கேட்பவன், கணவன்.

(தலைப்பு விளக்கம்....
இதை வாசித்துவிட்டு 'இவன் திருந்த மாட்டனா... எப்ப பாத்தாலும் பெண்களை குறை சொல்றதயே பிழைப்பா வச்சிருக்கிறான்' என்று நீங்கள் மனதில் நினைத்ததைத் தான் தலைப்பாக இட்டிருக்கிறேன்...
நான் பெண்களை நகைச்சுவைகளில் அதிகம் எடுக்கக் காரணம், அப்போது தான் பெரும்பான்மை ஆண் வாசகர்கள் சிரிப்பீர்கள்.
பெண்கள் புத்திசாலிகள் என்பதால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள்...
இது எப்பிடி இருக்கு விளக்கம்....???)


*******************************************************************************************

இருக்கிறம் சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அச்சுவலைச் சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முதலாவது பதிவர் சந்திப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருந்ததைவிட இம்முறை கொஞ்சம் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் தான் நிறையப் பேரை அறிந்து கொண்டேன்.
முதலாம் சந்திப்பில் தெரியாத முகங்களை சந்திக்கச் சென்றேன், இம்முறை தெரிந்த முகங்களை அறியச் செல்கிறேன்.

ஆனால் ஒரு முக்கியமான வேண்டுகோள்...
இன்று நடக்கும் அச்சுவலைச் சந்திப்பில் எனக்கு (அதாவது கனககோபிக்கு) இரசிகர் மன்றம் வைக்கப் பேச்சுக்கள் நடப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்தையக முயற்சி எடுப்பவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள், எச்சரிக்கை.
எனது பெயரில் எந்த முயற்சியை எடுத்தாலும் என்னிடம் தக்க அனுமதி பெற்று செய்யுமாறு வேண்டுகிறேன்.
அத்தோடு இரசிகர் மன்றம் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாததால் அந்த முயற்சியைக் கைவிடுமாறும் அன்பாக வேண்டுகிறேன்.
என்னை கெளரவப்படுத்த நினைத்தால் ஏற்கனவே உள்ள அகில உலக கனககோபி இரசிகர் மன்றத்தில் சேர்ந்து அதற்குரிய சந்தாப்பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்...

(யாராவது இதை வாசிச்சிற்று கொலைவெறியோட என்னத் தேடினா, அவங்களுக்கு நான் சொல்றது ஒண்டே ஒண்டு தான்...
கொலை வழக்கில மாட்டிடுவீங்க... சொல்லிற்றன்....)

*************************************************************************************************************************************

இனி சீரியஸான விடயம்....
அச்சுவலைச் சந்திப்பிற்கு வெள்ளவத்தையிலிருந்து செல்லும் நண்பர்கள் யாராவது என்னையும் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமா?
நான் உங்களோடு எங்கே, எத்தனை மணிக்கு இணையலாம் என மின்னஞ்சல் செய்வீர்களா???