க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாட்களாக தனிப்பட்ட விடயங்கள் காரணமாக எதுவும் எழுதவில்லையே என்று நிறைய கவலையில் இருந்தேன். இன்று தான் நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு இடுகையாவது இடுகிறேன்…
நண்பனொருவன் உதவியொன்று கேட்டதற்காக இணைய உலாவும் இடத்திற்குச் சென்றேன்.
அங்கே அந்த நண்பனுக்கு தெரிந்த ஒருவர் வந்து இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அன்று தான் அஜித் என்ற நடிகரின் புதிய திரைப்படம் வெளியாகி இருந்தது. காலை 10 மணிக்குக் காட்டப்படும் காட்சிக்காக காலை 6 மணியிலிருந்து வரிசையில் நின்று 10 மணிக்குப் படம் பார்த்து விட்டு உடனே அந்த இணைய உலாவும் இடத்திற்கு வந்து 2 மணித்தியாலங்களாக அந்தத் திரைப்படப் பாடல்களை பார்த்துக் கொண்டு இருந்தார். படத்தை அந்தளவு நேரம் காவலிருந்து பார்த்து விட்டு அதே பாடல்களை 2 மணித்தியாலங்களாக பார்க்கத்தான் வேண்டுமா?
எதிர்கால சந்ததி இப்படித் தான் இருக்க வேண்டுமா?
அஜித் குமாரின் படம் மாத்திரமல்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் முதல் யாரினுடைய படமாக இருந்தாலும் நான் இதே கருத்தைத் தான் சொல்லியிருப்பேன்…
இரசிப்பது தவறல்ல… அடிமையாவது தான் தவறு…

உன் கைகளை விட்டு ஏதாவது கைநழுவிச் சென்றுவிட்டால் இறைவன் உன்னைத் தண்டிக்கின்றார் என்று நினைக்காதே… இன்னுமொரு பெரியதை தருவதற்கு உன் கைகளை இறைவன் வெறுமையாக்குகிறார் என்று நினைத்துக் கொள்…

அழுத்தமான வீதிகள் சிறந்த வாகன ஓட்டிகளை எப்போதும் உருவாக்காது…பிரச்சினை இல்லாத வாழ்க்கை சிறந்த மனிதனை உருவாக்காது… வாழ்க்கையைப் பார்த்து 'ஏன் நான் இதற்கு?'  என்று கேட்பதற்குப் பதில் 'இதற்கு நான் தான்' என்று சொல்லப் பழகு…

5,6 தேவதாஸ்கள் உருவாக்கப்பட்டதற்காக பல இலட்சக்கணக்கான அன்னை தெரேஸாக்களை கொண்ட பெண் சமூகத்தை தவறாக கூறுதல் எந்தளவுக்கு சரியானது...?

எப்போதோ ஒருமுறை ஒரு இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிடைத்த தகவல்…

1993-1998 காலப்பகுதியில் உலக கணணி ஜாம்பவான் பில்கேட்ஸ் தனது எல்லாவித கணக்குகளுக்கும் (மின்னஞ்சல்கள், கணணி கணக்குகள் உட்பட..) வைத்திருந்த கடவுச்சொல் என்னவென்று தெரியுமா?
IwiLlWInThi$WOrldIn@DecAde
இதே கடவுச் சொல்லைத் தான் எல்லாக் கணக்குகளுக்கும் பயன்படுத்திய பில்கேட்ஸ் இந்த கடவுச்சொல் யாராவது ஒருவரால் களவாடப் பட்டால் என்ன நிலைமை என்று சிந்திக்கவில்லை
ஆனால் பாருங்கள் தனது கடவுச்சொல்லில் பில்கேட்ஸ் குறிப்பிட்டதை எவ்வாறு அடைந்திருக்கிறார் அல்லது நிறைவேற்றியிருக்கிறார் என்று…
(ஆனால் எனக்குள்ள ஒரே சந்தேகம் எவ்வாறு இந்த கடவுச்சொல் வெளியானது என்று…
இந்தத் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்று நம்பகிறேன்…)

SOS என்பது அவசர உதவிக்கு அழைக்கப்படும் ஓர் சுருக்கக் குறியீடு ஆகும். சாதாரணமாக கைப் பேசிகளில் காணலாம்.
அவுஸ்ரேலிய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஷோன் மார்ஷ் ற்கும் செல்லப் பெயர் SOS என்பது தான். அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர் என்பதால் தான் இந்தப் பெயர் என நீங்கள் யோசிப்பது விளங்குகிறது. ஆனால் அதுவல்ல அர்த்தம். Son Of Swampy என்பது தான் அதற்குரிய அர்த்தமாம். பாருங்கள் சேற்றின் மைந்தன் என்பதை நாகரிகமாக SOS என்று அழைக்கிறார்கள்.
என்னே அறிவு...

ரெண்டுல்கர் சிறுவனாக இருக்கும் போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது மணிக்கணக்காக துடுப்பெடுத்தாடுவாராம். அப்போது அவரின் பயிற்றுனர் இலக்குகளின் மேல் நாணயக்குற்றியொன்றை வைத்துவிட்டு ரெண்டுல்கரை துடுப்பாடச் சொல்வாராம். பயிற்சியின் போது ரெண்டுல்கரின் இலக்கை பந்துவீச்சாளர் கைப்பற்றினால் அந்த நாணயம் பந்து வீச்சாளருக்கு என்றும், ரெண்டுல்கர் தப்பித்தார் என்றால் அந்த நாணயம் ரெண்டுல்கருக்கு என்றும் வைக்கப்பட்டிருக்குமாம். அத்தகைய 13 நாணயங்களை தனது பெரும் சொத்தாக ரெண்டுல்கர் இப்போதும் வைத்திருக்கிறாராம்...

ரெண்டுல்கர் தனது 79 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தான் தனது முதலாவது ஒருநாள் கதத்தைப் பெற்றுக் கொண்டார்.

4 பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வு ஒன்றிற்காக ஒரு வனப்பிராந்தியத்தைப் பார்வையிட சென்றிருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்களுக்குரிய ஆண்டுப் பரீட்சையும் இருந்தது. அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களை பெற்று விட்டு திரும்ப நினைக்கையில் அந்த வனத்தின் இயற்கை கொஞ்சும் எழில் அந்த நான்கு மாணவர்களையும் கவர்ந்து விட ஒரு மாணவன் சொன்னான், 'எம்மிடம் தான் கார் உள்ளதே நாம் இரவு இங்கே தங்கிவிட்டு நாளை அதிகாலை புறப்பட்டு சென்றாலென்ன?'. மற்றவர்களுக்கும் அது பிடித்து விட அதிகாலை நேரத்துக்கே எழுந்து செல்வதென்ற முடிவோடு நித்திரைக்குச் சென்றனர். எழில் கொஞ்சும் வனத்தின் சில்லென்ற தென்றல் அவர்களை வருட அவர்கள் தங்களை மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நித்திரையை விட்டு எழ வேண்டிய நேரத்தை கடந்து நிறைய நேரங்களின் பின்னர் நித்திரையை விட்டு எழுந்து நிலைமையை உணர்ந்து விட்டு விரிவுரையாளரிடம் பொய் சொல்லி சமாளிப்பது என்று பொய்யொன்றையும் தயார் செய்து கொண்டு பல்கலைக்கழகம் சென்றனர். அங்கு சென்று விரிவுரையாளரிடம், 'சேர் நாங்கள் ஆய்விற்காக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பும் போது காரின் ரயரில் ஓட்டை ஏற்பட்டதால் அதை சரிசெய்து எடுத்து வர நேரமாகிவிட்டதால் பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை. ஆய்வுத் தேவைக்காகவே சென்றதால் தயவுசெய்து எங்கள் நால்வருக்கும் வேறு ஒரு பரீட்சை ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டனர். விரிவுரையாளரும் நாளை வாருங்கள் உங்களுக்கு புதிய பரீட்சை வைக்கிறேன் என்றுவிட்டு சென்று விட்டார். மாணவர்களுக்கோ தங்கள் பொய் வேலை செய்து விட்டதால் ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு விடுதிகளுக்கு சென்று மறுநாள் வந்தனர்.
விரிவுரையாளர் நான்கு மாணவர்களையும் தனித்தனி அறைகளில் இருத்திவிட்டு பரீட்சை வினாத்தாளை விநியோகித்தார். முதலாவது வினாவை வாங்கிப் பார்த்தார்கள். 'ஆவர்த்தன அட்டவணையில் முதலாவது மூலகம் யாது?' என்பதே முதல் வினா. அதற்கு கீழே அந்த வினாவிற்கு 5 புள்ளிகள் என்று எழுதப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவருக்கம் ஒரே மகிழ்ச்சி. ஐதரசன் என்பதை விடையாக எழுதிவிட்டு 5 புள்ளிகளுக்கு இவ்வளவு இலகுவான வினாவா என்று கீழே பார்த்தனர் அதற்கு கீழே '95 புள்ளிகளுக்கான வினாவிற்கு மறுபக்கம் திருப்பவும்' என இடப்பட்டிருந்தது. மாணவர்களும் ஆர்வமாக மறுபக்கம் திருப்பினர்.
அடுத்த பக்கத்தில் 95 புள்ளிகளுக்கான வினா என தலைப்பிட்டு கேட்கப்பட்டிருந்தது 'நீங்கள் வந்த காரின் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது?' என்று. அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது தாங்கள் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது என்பதை முன்னரே கதைத்திருக்கவில்லை என்பது. பிறகென்ன மாட்டிக் கொண்டார்கள்.
இந்த கதையை நல்ல விதமாக எடுப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள், வேறு சிலர் பொய் சொல்லும் போது எல்லாவற்றையும் திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் என்ற படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் மகாத்மா காந்தியின் நண்பரொருவரின் பரம்பரையினர்.
(பெருமையாக நினைக்க வேண்டாம். மாகாத்மா காந்தியும் அந்த நண்பரும் அரிச்சந்திரன் நாடகத்தை பார்க்கச் சென்றார்களாம். நாடகம் நிறைவடைய இந்த நாடகத்திலிருந்து என்ன விடயத்தை பெற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு மகாத்மா காந்தி சொன்னாராம் 'உண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். இன்றிலிருந்து இனி பொய் சொல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன்' என்று. அந்த நண்பர் சொன்னாராம் 'அவசரத்துக்கு பொண்டாட்டியையும் அடகு வச்சக்கலாம் எண்டத படிச்சுக் கொண்டன்' என்று.)


மின்னஞ்சலில் கிடைத்தது...


shipit.ubuntu.com இல இயங்கு தள இறுவட்டுக்காக விண்ணப்பிச்சன்... கிடைச்சது... உடனயே நிறுவினன்...
இது தான் உபண்டுவின் டெஸ்க்ரொப்...
எண்டாலும் இத நிறுவின பிறகு தான் விளங்கிச்சு ஏன் மைக்ரொப்ற்ற எல்லாரும் பாவிக்கினம் எண்டு...
வின்டோஸ் அளவுக்கு இலகுவா இல்லைங்கோ...

நான் பிறக்கும் போதும் கருமை...
வளரும் போதும் கருமை...
வெயிலில் சென்றால் கருமை...
பயப்படும் போதும் கருமை...
நோயுற்ற பொழுதும் கருமை...
இறக்கும் பொழுது கூட கருமை தான்...

ஆனால் வெள்ளையனே நீ...
பிறக்கும் போது இளஞ்சிவப்பு...
வளரும் போது வெள்ளை...
வெயிலி்ல் சென்றால் சிவப்பு...
குளிரில் நீ நீலம்...
பயப்படும் போது மஞ்சள்...
நோயுற்ற பொழுது பச்சை...
பின் இறக்கையில் சாம்பல்...

ஆனால் நீ என்னை கறுப்பன் என்கிறாய்....

பி.கு: நீங்கள் வெள்ளையாக இருந்தால் இதை சிறியதாக எடுங்கள்... கறுப்பானவராக இருந்தால் கறுப்பாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள்...

***************************************************************
இந்த தகவலை நான் எடுத்தது எனது சகோதரி ஒருவரின் வலைப்பூவிலிருந்து... இதை அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் படிக்கலாம்... இதை அவரின் வலைப்பூவில் படிக்க cuteanju.blogspot.com என்ற முகவரிக்கு செல்லவும்.

ஆதர் ஆஷி என்ற புகழ்பெற்ற விம்பிள்டன் வீரர் 1983 இல் அவருக்கு நடந்த இருதய சத்திரசிகிச்சை ஒன்றின் போது வழங்கப்பட்ட பாதிக்ப்பட்ட இரத்தம் ஒன்றினால் எயிட்ஸ் நோய் ஏற்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தார்.

உலகெங்கிலும் இருந்து அவரது இரசிகர்களிடமிருந்து அவருக்கு கடிதங்கள் கிடைத்த வண்ணமே இருந்தது. அதில் ஒரு கடிதத்தில் ஒரு இரசிகர் கூறியிருந்தார், 'கடவுள் ஏன் உங்களை இத்தகைய ஒரு கொடுமையான நோய்க்கு உங்களைத் தெரிவு செய்தார்?'

அதற்கு ஆதர் ஆஷி இப்படிப் பதிலளித்தார்,
'உலகெங்கிலும் இருந்து 50 மில்லியன் சிறுவர்கள் ரெனிஸ் விளையாட ஆரம்பிக்கின்றனர், அதில் 5 மில்லியன் பேர் ரெனிஸ் விளையாட கற்றுக் கொள்கின்றனர்,
500,000 பேர் ரெனிஸை வாழக்கைத் தொழிலாக கொள்கின்றனர்,
அதில் 50,000 பேர் சர்வதேச எல்லைக்குள் வருகின்றனர், 5000 பேர் கிரான்ட்ஸ்லாமை வந்தடைகின்றனர்,
50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர், 4 பேர் அரையிறுதிப் போட்டியை அடைகின்றனர்,
2 பேர் இறுதிப் போட்டியை அடைகின்றனர்,
இறுதியாக விம்பிள்டன் கோப்பையை நான் பெற்ற போது நான் கடவுளிடம் நான் கேட்கவி்ல்லை 'ஏன் நான் மட்டும்' என்று,
ஆனால் இன்று நான் வருத்தத்தில் இருக்கும் போது மட்டும் 'ஏன் நான்?' என்று கேட்பது மட்டும் எவ்வாறு நியாயமாகும்?' என்று பதிலனுப்பினார்.

"சந்தோஷம் உங்களை இனிமையாவர்களாக மாற்றுகின்றது,

முயற்சிகள் உங்களை வலிமையாக்குகின்றது,

கவலைகள் உங்களை மனிதனாக இருக்க வைக்கின்றது,

தோல்விகள் உங்களை பணிவுள்ளவர்களாக்குகின்றன,

வெற்றிகள் உங்களை மின்னச் செய்யச் செய்கின்றன,
ஆனால் நேர்மையும் சிறந்த மனப்பான்மையும் மட்டுமே உங்களை தொடர்ந்து மேற்செல்ல உதவுகின்றன...'

**************************************************************
இந்த தகவலை நான் எடுத்தது எனது சகோதரி ஒருவரின் வலைப்பூவிலிருந்து... இதை அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் படிக்கலாம்... இதை அவரின் வலைப்பூவில் படிக்க cuteanju.blogspot.com என்ற முகவரிக்கு செல்லவும்.

ஒரு முதியவரும் ஒரு சிறிய பையனும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கதையின் நடுவே அந்த பையன் சொன்னான், 'என்னால உங்கட வயச 100 வீதம் சரியா சொல்லேலும்' என்றான். 'அதெப்பிடி?' ஆர்வமாக கேட்டார் முதியவர். 'கொஞ்ச நேரம் நீங்க முட்டி போட்டு நிண்டா என்னால உங்கட வயச சரியா கணிச்சு சொல்லேலும்' விளக்கம் சொன்னான் அப்பையன். என்ன அதிசயம் என்று அறிய விரும்பிய முதியவர் அவன் சொன்ன படியே முட்டி போட்டு இருந்தார். சிறிது நேரத்தில் முதியவர் முட்டி போட்டு இருந்ததை இரசித்து விட்டு சொன்னான், 'உங்களுக்கு 84 வயசு'. 'எப்பிடியப்பா இவளவு சரியாச் சொல்லுறாய்' ஆர்வமாக கேட்டார் முதியவர். அலட்சியமாகச் சொன்னான் பையன், 'நேற்று நீங்க தான் சொன்னீங்க' என்று.
(கதை முடிஞ்சு... சிரிக்கிறவங்க சிரிக்கலாம்...)

சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளியில் இடைவேளை நேரத்தில் மாணவர்கள் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்தப் பாடசாலையில் மாணவர்களுக்கு உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.
முதலில் அப்பிள் பழங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் 'ஒன்று மட்டுமே எடுங்கள். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்' என்று ஒரு அறிவிப்புப் பலகை இடப்பட்ருந்தது. அடுத்த பகுதியில் சொக்ளேற்றுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பையன் எழுதினான், 'எத்தனை வேண்டுமானாலும் எடுங்கள். இறைவன் அப்பிள்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்'.

'ஐசாக் நியூட்டன் மரத்துக்கு கீழ இருக்கும் போது கீழே விழுந்த அப்பிள்களை பார்த்து புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார். இதிலயிருந்து என்ன தெரியிது?' மாணவர்களை நோக்கிக் கேட்டார் பெளதிக ஆசிரியர்.
ஒரு மாணவன் அமைதியாக எழுந்து சொன்னான், 'எங்களப் போல புத்தகங்களோட வகுப்பில இருந்தா எதையும் உருப்படியா செய்யேலாது எண்டு விளங்குது சேர்'.

அதிசய கிளி ஒன்று ஏலத்தில் விடப்படுவதாக வந்த விளம்பரத்தைக் பார்த்து அந்தக் கிளியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவர் ஏலத்திற்கு சென்றார். யாரையும் பார்க்காமல் ஏலத்தை கேட்டார். அவர் கேட்கக் கேட்க யாரோ அவரை விட அதிகமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இவரும் விடுவதாக இல்லை. கடைசியாக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தார்.
ஏலம் எடுக்கும் போது கிளியின் உரிமையாளரிடம் கேட்டார், 'கிளி கதைக்குமா?'
உரிமையாளர் சொன்னார், 'கதைக்க மட்டுமென்னங்க, 10 இலட்சம் வரை நம்பர் சொல்லத் தெரியும்'
'ஏன் 10 இலட்சத்துக்கு மேல சொல்லிக் குடுக்கேல?' விசாரித்தார் வாங்கியவர்.
கிளி உரிமையாளர் சொன்னார், 'இதுக்கு மேல சொல்லிக்குடுத்தா நீங்க ஏலம் கேக்க கேக்க கிளி தொடர்ந்து கூடக் கேட்டுக் கொண்டு இருந்தா நான் எப்பிடிங்க ஏலத்த முடிக்கிறது?'
(சிரிப்பு வராட்டி திரும்ப வாசியுங்கோ... அதுக்குப் பிறகும் விளங்காட்டி கண்ண மூடிற்று கொஞ்சம் யோசியுங்கோ... உங்கட முட்டாள் தனத்த நினைக்க தானா சிரிப்பு வரும்...)

பிரசவ வைத்தியசாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சத்திரசிகிச்சைக் கூடத்திலிருந்து இரண்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து அதன் தந்தையாரிடம் கொடுத்து விட்டு 'உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள்' என்றார் தாதி. அவர் வியந்தவராக, 'அதெப்பிடி சரியா... நான் வேல செய்யிறது "டபிள்மின்ற்" சுவிங் கம் நிறுவனத்தில... எனக்கு இரட்டைக் குழந்தைகளா...' என்றார்.
சிறிது நேரத்தில் 3 குழந்தைகளைக் கொண்டு வந்து ஒருவரிடம் கொடுத்து விட்டு 'உங்களுக்கு முன்று குழந்தைகள் என்றார் தாதி. அவர் வியந்தவராக, 'அதெப்பிடி எனக்கும்... நான் வேல செய்யிறது 3 மொபைல் கொம்பனி பிரைவற் லிமிற்றட் இல... எனக்கு 3 குழந்தைகளா...' என்றார்.
உடனே அருகிலிருந்தவர் மெதுவாக எழும்பி நழுவினார். தாதி அவரை மறித்து 'எங்க போறீங்க? இங்க தான் நீங்க இருக்கோணும்' என்றார்.
அந்த நபர் சொன்னார், 'அவங்களாவது பரவாயில்ல டபிள்மின்ற் கொம்பனி, 3 மொபைல் கொம்பனில... நான் வேல செய்யிறது செவிண்-அப் ல... என்னால தாங்கோலாது...'.

இரண்டு பேர் வங்கியொன்றில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களிருவரும் கதைக்க முற்படும் போது வங்கியில் கொள்ளையர்கள் புகுந்து வங்கியிலுள்ள அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த அனைவரிடமும் அவர்களிடமும் உள்ள எல்லாப் பணத்தையும் தருமாறு உத்தரவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் மற்றவரின் கைகளுக்குள் எதையோ திணித்தார். அவர் என்னவென்று பார்க்காமல் 'இதுக்குள்ள என்னத்த தாறீர்?' என்றார். மற்றவர் சொன்னார், 'நான் உம்மளிற்ற வாங்கின 10,000 ரூபா கடன திருப்பித் தரேல எண்டு பத்து மாசமா கேட்டுக் கொண்டு இருந்தீர் தானே... அது தான் கடன திருப்பி தந்தன்.'

ஒருவர் வங்கியொன்றுக்கு வந்து முகாமையாளரை சந்தித்து தனக்கு அவசரமாக 10,000 ரூபா தேவைப்படுவதால் கடன் தர முடியுமா னக் கேட்டார். முகாமையாளர் சொன்னார், 'தரலாம், ஆனா ஏதாவது பாதுகாப்பு உத்தரவாதம் தேவைப்படுமே..'. உடனே அந்த நபர் சொன்னார், 'இந்தாருங்கள் எனது காரின் திறப்பும் ஆவணங்களும், எனக்கு கடனை உடனடியாக தாருங்கள்.'. உடனே கடன் வழங்கப்பட்டது. 2 வாரங்களின் பின்னர் 20 வீத வட்டியான 2000 ரூபாவையும் சேர்த்து கொண்டு வந்து கொடுத்தார்.
முகாமையாளர் ஆச்சரியமாகக் கேட்டார், 'நீங்கள் போனாப் பிறகு தான் தெரிய வந்தது நீங்க பெரிய கோடீஸ்வரர் எண்டு. எதுக்குங்க 10,000 ரூபா கடன் வாங்கினீங்க இங்க' என்று.
அதற்கு அந்த நபர் சொன்னார், 'தலநகருக்கு ஒரு அலுவலா வந்தன். கார் பார்க்ல எல்லாம் கூட காசு கேட்டாங்கள். ஆனா நீங்க மட்டும் தான் 2000 ரூபாவுக்கு 2 கிழமயா கடும் பாதுகாப்போட வச்சிருந்தீங்க. இப்ப வேல முடிஞ்சிற்று, அது தான் கார் அ எடுத்திற்றுப் போக வந்தன்' என்றார்.

மதுபானசாலைக்குள் வந்த ஒருவன் பெருத்த சத்தத்தில் கேட்டான், 'இங்க யாரடா பலசாலி? யாராவது இருக்கிறீங்களா?'
ஒரு தடியன் எழும்பினான், 'என்னடா... நான் இருக்கிறன்...'
மற்றவன் அடக்கமாகக் கேட்டான், 'சேர்... தயவுசெய்து என்ர கார் அ பெற்றோல் செற் வர தள்ளிற்று வர முடியுமா? தயவுசெய்து...'

கிளி வற்பனை நிலையத்துக்கு கிளி வாங்க ஒருவர் வந்தார்,
முதலாவது கிளியை விலை கேட்க அதை 100,000 ரூபா என்றார் கடைக்காரர்.
வாங்க வந்தவர் ஆச்சரியத்தோடு, 'ஏன் இவளவு அதிகமா விலை?'
கடைக்காரர் சொன்னார், 'இந்தக் கிளிக்கு கணணியைப் பாவிக்கத் தெரியும். அதால தான்'
இரண்டாவது கிளியை கேட்க 5 இலட்சம் என்றார் கடைக்காரர்.
'இது ஏன் இவளவு விலை' என்றார் அவர்.
'இது ஆனானப்பட்ட வின்டோஸ் விஸ்ராவையே பாவிக்கும்' என்றார் கடைக்காரர்.
மூன்றாவது கிளியை விலை கேட்டார் வந்தவர். 'அது 10 இலட்சம்' என்றார் கடைக்காரர்.
'அது ஏன் அவளவு? அந்தக் கிளிக்கு என்ன தெரியும்?' கேட்டார் வந்தவர்.
கடைக்காரர் சொன்னார், 'எனக்கும் தெரியாது. ஆனா முதல்காட்டின 2 கிளியும் இந்தக் கிளிய முதலாளி எண்டு தான் கூப்பிடும். அதுக்குத் தான் இந்த விலை' என்றார்.
(சிரிப்பு வரேல தானே...? எனக்கே வரேல, உங்களுக்கு எப்பிடி வரும்...)

ஒரு இளைஞன் இரு கன்னங்களிலும் காதிலும் எரிகாயங்களுடன் வைத்தியரிடம் சென்றான்.
'என்ன நடந்தது' என்று வைத்தியர் கேட்டதற்கு 'அயன் பண்ணிற்று இருந்தன் டொக்ரர். திடீரெண்டு என்ர செல் போனுக்கு அழைப்பு வந்தது. செல்போன காதில வைக்கிறனெண்டு அயன் பொக்ஸ்ஸ கன்னத்தில வைச்சிற்றன் டொக்ரர்' என்றான் அவன்.
'அது சரி. மற்றப் பக்கம் என்ன நடந்தது?' வைத்தியர் கேட்டார்.
'காயம் பட்டோன்ன டொக்ரருக்கு மற்றப் பக்க காதில வச்சு கோல் பண்ணினன். அது தான்.' என்றான் அவன்.

ஒரு தவளை, தவளை இன சோதிடரிடம் சென்று தனது எதிர்காலத்தைப் பற்றி கேட்டது.
சோதிட தவளை சொன்னது, 'இன்றைக்கு ஒரு அழகான தேவதை போன்ற மனிதப் பெண் உன்னிடம் வருவாள், உன்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிய விரும்புவாள்.'
உடனே தவளைக்கு ஒரே குதூகலம்... தவளை கேட்டது, 'அது சரி அவள் என்னை எங்கே சந்திப்பாள்? உணவு விடுதியிலா, அல்லது நடனமாடும் இடத்திலா?'
சோதிட தவளை அமைதியாய் சொன்னது, 'இல்ல இல்ல... உயிரியல் ஆய்வுகூடத்தில தான் உன்னை சந்திப்பாள்'.

என்னைப் போன்ற அறிவுசாலியான மாணவன் எழும்பி ஆசிரியையிடம் கேட்டான், 'ரீச்சர், செய்யாத ஒண்டுக்காக எனக்கு அடிப்பீங்களா நீங்க?'
ஆசிரியையும் 'இல்லையே... செய்யாத ஒண்டுக்காக நான் ஏன் அடிக்கப் போறன்?' என்றார்.
உடனே புத்திசாலி மாணவன் சொன்னான், 'ரீச்சர்... நான் இண்டைக்கு வீட்டு வேல செய்யேல...'

யூலை மாதம் 8ம் திகதி 1972ம் ஆண்டு இந்தியாவின் கல்கத்தா பிரதேசத்தில் பிறந்தவர் தான் இந்த வங்காளப் புலி, கொல்கத்தாவின் இளவரசன், டாடா, மகாராஜா என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சவ்ரவ் கங்குலி.

இந்தியாவின் மிகச்சிறந்த ரெஸ்ற் அணித்தலைவர், இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரர் போன்ற பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஆக்ரோஷமான வீரர்.

11ம் திகதி ஜனவரி 1992ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக தனது ஒருநாள் அறிமுகத்தைப் பெற்ற மகாராஜாவால் 4 வருடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டி ஏற்பட்டது தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொள்ள. 20ம் திகதி யூன் மாதம் 1996ம் ஆண்டு தான் கங்குலியால் தனது ரெஸ்ற் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

அவுஸ்ரேலிய தொடரிற்கு முன்னர் 109 ரெஸ்ற் போட்டிகளில் 41.74 என்ற ஓட்ட சராசரியையும், ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 311 போட்டிகளில் 41.02 என்ற ஓட்ட சராசரியையும் கொண்டிருந்தார். ஒரு நாள் போட்டிகளில் 100 இலக்குகளையும் கைப்பற்றியிருக்கும் கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தன்னை ஒரு சகலதுறை ஆட்டக் காரராக வெளிப்படுத்தினார்.
மிதவேகப் பந்து வீச்சாளரான கங்குலி பந்துகளை இலக்குகளுக்கு நேரே வீசும் இயல்பைக் கொண்டிருந்ததால் ஒருநாள் போட்டிகளில் அடித்து ஆட முற்படும் போது ஆட்டமழக்க சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் வீரர்கள் அவ்வளவாக அடித்து ஆட மாட்டார்கள் என்பதால் கங்குலியால் 32 இலக்குகளையே கைப்பற்ற முடிந்தது.
ஆனால் துடுப்பாட்ட வீரராக 11 363 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கும் கங்குலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரே.

தனது ஆக்ரோஷமான அணித் தலைமைப் பண்பால் பலதரப்பட்ட வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கங்குலிக்கு அதே குணம் தான் எதிரியாக அமைந்தது. மைதானத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் கங்குலி பலதரப்பட்ட சர்சசைகளிலும்  சிக்கினார்.

கொல்கத்தாவின் செல்வந்தர்களில் ஒருவரான சண்டிதாஸ் அவர்களின் புதல்வனாக பிறந்த கங்குலியின் சகோதரரும் ஓர் கிறிக்கெற் வீரராவார். ஆரம்பத்தில் வலதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி, தனது சகோதரரின் துடுப்பாட்ட உபகரணங்களை பயன்படுத்துவதற்காக இடதுகைத் துடுப்பாட்ட வீரராக மாறினார்.
(எல்லாம் நன்மைக்கே என்பதற்கு கங்குலியும் ஓர் சிறந்த உதாரணமாவார். சிலவேளைகளில் வலதுகைத் துடுப்பாட்ட வீரராக இருந்திருந்தால் இந்தளவுக்கு புகழ்பெற்றிருக்காமல் போயிருக்கவும் இடமுண்டு.)

தனது முதலாவது போட்டியில் வெறும் 3 ஓட்டங்களையே பெற்ற கங்குலி அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் 1996ம் ஆண்டுக்கான இங்கிலாந்து சுற்றுலாவுக்காவுக்காக மீண்டும் அழைக்கப்பட்ட கங்குலி ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடினார், அனால் முதலாவது ரெஸ்ற் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் நவ்ஜோத் சித்து அணியிலிருந்து வெளியேற லோட்ஸ் போட்டியில் ஆட வாய்ப்புப் பெற்ற கங்குலி தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொண்டார். அந்தப் போட்டியிலேயே ராகுல் ராவிட்டும் ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொண்டார். முதல் இனிங்க்ஸில் 131 ஓட்டங்களை பெற்ற கங்குலி அன்றைய காலகட்டத்தில் தனது முதலாவது போட்டியில் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்த 3ஆவது வீரராக பதிவேட்டில் இடம்பிடித்தார். கங்குலியின் பின்னர் அன்ட்டூ ஸ்ரோஸ், மற் பிறயர் போன்றோரும் இச்சாதனையை புரிந்த போதும் 131 ஓட்டங்கள் என்பதே இதுவரையில் லோட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். அடுத்த ரெஸ்ற் போட்டியில் முதலாவது இனிங்ஸ்ஸில் 136 ஓட்டங்களை பெற்ற கங்குலி தனது முதலிரண்டு இனிங்க்ஸ்களிலும் சதமடித்த மூன்றாவது வீரராக சரித்திரத்தில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் சச்சின் ரென்டுல்கருடன் 255 ஓட்டங்களை பகிர்ந்த கங்குலி இந்தியாவை விட்டு வெளியே இந்தியர்கள் இருவரால் பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டம் என்ற சாதனைக்கும் சொந்தக் காரரானார்.

ஆரம்ப காலத்தில் அசுரவேகத்தில் வளர்ந்து வந்த கங்குலிக்கு ஆப்பாக அமைந்தது 200ம் ஆண்டு தான். அந்த ஆண்டில் தான் அணித்தலைவராக ஆன போதிலும் 2000ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெற் பேரவை கொண்டுவந்த 'ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்திற்கு ஒரு தோட்பட்டைக்கு மேலால் செல்லும் பந்தை வீசலாம்' என்ற விதி தான் கங்குலியின் கிரிக்கெற் வாழ்க்கையை ஆட்டிப் பார்த்தது. ஏனென்றால் கங்குலிக்கு பெளன்சர் பந்துகளுக்கு ஆட்டமிழக்கும் ஒரு குறைபாடு இருந்தது. 200ம் ஆண்டுக்கு முன்பு 45.5 என்ற சராசரியை கொண்டிருந்த கங்குலி 2001-2005 வரையான காலப்பகுதியில் 34.9 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதிலும் ரெஸ்ற் விளையாடும் நாடுகளுக்கு எதிராக (சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் உட்பட) அவரது சராசரி 30.66 என்றளவுக்கு வீழ்ச்சியடைந்ததுது. இந்த 2001-2005 காலப்பகுதியில் 6 தடவை நூறு ஓட்டங்களைப் பெற்ற கங்குலி அதில் 3 தடவை கென்ய அணிக்கெதிராகவும், 1 தடவை நமீபிய அணிக்கெதிராகவும் பெற்றிருந்தார். எனவே இந்தக் காலப்பகுதி கங்குலிக்கு சோதனைக் காலப்பகுதியாக அமைந்தது. இந்தக் காலப்பகுதியில் கங்குலி ஏராளமான தடவைகள் தோட்பட்டைக்கு மேலால் செல்லும் பந்துகளிலேயே ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் 2001ம் ஆண்டில் போடர்-கவாஸ்கர் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றும் வகையில் அணியை வழிநடத்தியமையால் ஏராளமான பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார் கங்குலி. அத்தோடு பாகிஸ்தான் அணிக்கெதிராக ரெஸ்ற் மற்றும் ஒருநாள் தொடர்களில் முதல் முதலாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்தமையும் கங்குலியின் சிறந்த அணித்தலைமைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

2005ம் ஆண்டு அணியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கங்குலி 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன் பட்டப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியினாலும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் 4-0 என்ற ரீதியில் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டதாலும் அணிக்கு மீள அழைக்கப்பட்டார்.
தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 37 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது களமிறங்கி போட்டி வெல்ல காரணமான 85 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் கங்குலியின் துடுப்பாட்ட முறையில் மாற்றங்கள் காணப்பட்டன. வழமையாக கால்புற இலக்கில்(லெக் ஸ்ரம்ப்) நின்று ஆடும் கங்குலி அந்தப் போட்டியில் நடு இலக்கில்(மிடில் ஸ்ரம்ப்)  நின்று ஆடியமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான குறைந்த ஓட்டங்கள் அடிக்கப்பட்ட ரெஸ்ற் போட்டியில் போட்டியை வெல்ல காரணமான 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் தனது மீள்வருகையை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
மீள்வருகையின் போது தனது தோட்பட்டைப் பந்துகளுக்கு ஆட்டமிழக்கும் குறைபாட்டடிலிருந்து விடுபட்டிருந்தமை கங்குலிக்கு பெருத்த அனுகூலமாக அமைந்தது.

இந்த அசத்தலான ரெஸ்ற் மீள்வருகையை தொடர்ந்து ஒருநாள் அணிக்கு மீள அழைக்கப்பட்ட கங்குலி இரண்டு வருடங்களின் பின்னர் தான் ஆடிய முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் போட்டியை வென்று கொடுத்த 98 ஓட்டங்களை பெற்றக் கொடுத்ததோடு இலங்கைக்கு எதிரான அத்தொடரில் 70ற்கு மேற்பட்ட சராசரியைக் காண்பித்து தொடராட்ட நாயகன் விருதையும் பெற்றுக் காண்டார்.

அதன் பின்னர் 2007ம் ஆண்டில் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி வங்காளதேச அணிக்கெதிராக தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. எனினும் அத்தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்களை  பெற்றவர் கங்குலி ஆவார். இந்த வெளியேற்றத்தின் பின் அணியின் பயிற்றுவிப்பாளரான கிரேக் சப்பலுக்கம் கங்குலிக்குமிடையே முறுகல்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

டிம்பர் மாதம் 12 ம் திகதி கங்குலி தனது முதலாவது இரட்டைச் சதத்தினை பாகிஸ்தான் அணிக்கெதிராக பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டு கங்குலிக்கு ஒரு வசந்த காலமாகவே அமைந்தது.
ரெஸ்ற் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் 2007ம் ஆண்டில் பெற்றவர்களில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார் கங்குலி. (1106 ஓட்டங்கள்,  3 முறை நூறு ஓட்டங்கள், 4முறை 50 ஓட்டங்கள், சராசரி 61.44)(முதலிடம் ஜக்ஸ் கலிஸ்).
ஒருநாள் போட்டிகளில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார் கங்குலி. (சராசரி 44.28)

ஒக்ரோபர் மாதம் 2008 ஆண்டு 7ம் திகதி இந்த சாதனை மன்னன் தனது ஓய்வை அறிவித்தார். அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இந்தத் தொடருடன் ஓய்வு பெறுகிறார் கங்குலி.

சுழற்பந்து வீச்சுக்களை சிறப்பாக சந்திக்கும் திறமை படைத்த இந்த மகாராஜா, சுழற்பந்து வீச்சுக்கு இரண்டு கால் முன்னே வைத்து பந்தை லோங் ஓன் அல்லது லோங் ஓப் பகுதியூடாக ஆறு ஓட்டங்களை அடிக்கும் திறனை மிஞ்சிவிட இந்த உலகில் இதுவரை ஒருவர் பிறக்கவில்லை என்பதே உண்மையாகும்.

'நடக்குமென்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும்...
கிடைக்குமென்பார் கிடைக்காது... கடைக்காதென்பார் கடைத்துவிடும்...'

ஓர் அருமையான தத்துவப் பாடல்... ஓர் பழைய பாடல்...
இந்தப் பாடலை ஒருவன் மேடையில் பாடி அடி வாங்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்...
ஏன் அடி வாங்கினான்? எங்கு பாடினானன்?

ஹி... ஹி...
அவன் இந்தப் பாடலை பாடியது அகில உலக சோதிடர் மாநாட்டில்...
பிரிச்சு மேயாம விடுவாங்களா...

உதித்நாராயணன் என்றோரு பாடகர் இருக்கிறாரே... தமிழில் அரைவாசிச் சொற்களை சாப்பிட்டுவிட்டு மிகுதியை விருப்பமின்றி பாடும் பாடகர் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இறக்குமதி. சிவாஜி திரைப்படத்தில் சகானா சாரல் பாடலை இவர் தான் பாடியிருந்தாலும், அந்தப் பாடலை அவர் கவிப்பேரரசு அவர்களின் நேரடி பார்வையின் கீழ் பாடியதால் தான் அந்தப் பாடலின் தமிழ் ஓரளவுக்கு தப்பித்ததாம்.
இவரின் தமிழ் விழுங்கும் திறமையை யாரடி நீ மோகினி திரைப்படத்தில் அருமையாக காணலாம். எங்கேயோ பார்த்த மயக்கம், ஓ! பேபி, நெஞ்ச கசக்கிவிட்டு ஆகிய பாடல்களில் தமிழை அழகாக சாப்பிட்டிருக்கிறார்.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால் எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற பாடலை கார்த்திக் என்ற பாடகர் அருமையாக பாடியிருந்தார். அந்தப் பாடல் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்புக் கிடைத்திருந்தது. ஆனால் திரைப்படத்தில் உதித் நாராயணன் பாடிய பாடல் தான் இடம்பெற்றிருந்தது. தமிழை விழுங்கினால் தான் பாடலுக்கு நல்லது என படத்தின் இயக்குனர் விரும்பினாரோ என்னவோ...
ம்...
இது இப்படி என்றால் சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் புதியவர் ஒருவர் விழுங்க ஆரம்பித்திருக்கிறார். நான் எப்போது பெண்ணானேன் என்ற பாடலை பாடியிருக்கும் றீனா பரத்வாஜ் (இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் என்று நினைக்கிறேன். தமிழை விழுங்கினால் தான் பாட வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்தாரோ என்னவோ...) என்பவர் தான் அந்த புதிய முகம். சிலவேளைகளில் உதித்நாராயணன் அவர்களிடம் விசேட பயிற்சி பெற்றாரோ என்னவோ... சிறந்த குரல்வளம் கொண்ட இவருக்கு தமிழ் உச்சரிப்புக்கு புள்ளிகள் வழங்க முடியாதுள்ளதே...
எப்படி ஐயா உங்களால மட்டும் முடியுது...

Hey buddy!
This is the song which is gonna be a massive hit of the year... Thank u.

மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

பந்தாட்டம் உலக வச்சான் இராட்டினம் போல சுழல வச்சான்... ஏற வச்சான் இறங்க வச்சான்... சொல்லவிட்டு மயங்க வச்சான்... மயங்கினவன எழுப்புடா... எழுப்புடா... எழுப்புடா... அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா...
பந்தாட்டம் உலக வச்சான் இராட்டினம் போல சுழல வச்சான்... ஏற வச்சான் இறங்க வச்சான்... சொல்லவிட்டு மயங்க வச்சான்... மயங்கினவன எழுப்புடா... எழுப்புடா... எழுப்புடா... அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்துக் கட்டுடா...
மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்துக் கட்டுடா...

பொண்ணுங்கள பிறக்க வச்சான்... பொண்ணுக்குள்ள கருவ வச்சான்... கருவ வச்சான்... கற்ப வச்சான்... கற்புக்குள்ள தீய வச்சான்... தீய வச்சு எரிய வச்சான்... எரிய வச்சான்... எரிய வச்சான்... மதுரை எரிது... அணைங்கடா... அணைங்கடா... அணைங்கடா...
பொண்ணுங்கள பிறக்க வச்சான்... பொண்ணுக்குள்ள கருவ வச்சான்... கருவ வச்சு கற்ப வச்சான்... கற்புக்குள்ள தீய வச்சான்... தீய வச்சு எரிய வச்சான்... எரிய வச்சான்... எரிய வச்சான்... மதுரை எரிது... அணைங்கடா... அணைங்கடா... அணைங்கடா...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்துக் கட்டுடா...
மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்துக் கட்டுடா...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
மாடு செத்தா மனுசன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...
அட்ரா அட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க...

*********************************************************************************
கொடுமையை பாத்தீங்களா... இத ஒரு பாட்டெண்டு இதுக்கு ஒரு கவிஞன்...
எல்லாத்தையும் விட இது ஒரு பாட்டெண்டு கஷ்ரப்பட்டு இந்தப் பாட்டின்ட வரியை கண்டுபிடிச்சு நான் என்ர வலைப்பூவில போட்டிருக்கிறன்...
எல்லாத்தயும் விட இது ஒரு பாட்டெண்டு என்ர வலைப்பூவில இத போய் நீங்க வாசிச்சுக் கொண்டிருக்கிறீங்களே...
என்ன கொடுமை ஷரவணா இது...
(ஹி ஹி... ஹி ஹி...)

நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் காலத்திற்கு முன்னர் சினிமாவில் கதாநாயகன் காதலியை கட்டியணைக்கும் போது அந்தப் பெண் தனது கைகள் இரண்டையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கேடயம் போல் காப்பாற்றி விடுவாராம். பத்மினி அவர்கள் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் நடித்தபோது இந்தப் பழக்கத்தை உடைத்தெறிந்தாராம்...
(இன்றைய நடிகைகள் இப்படி தறிகெட்டுப் போய் இருப்பதற்குரிய ஆரம்பத்தை, அஸ்திவாரத்தை இட்ட பெருமை நடிகை பத்மினியை தான் சேரும் போல...)

நடிகை பத்மினி அவர்கள் ஒருமுறை கனடா சென்றிருந்தாராம் (நடிப்பை கைவிட்ட பிறகு தான்...)... அப்போது அவரிடம் பலர் கேட்ட கேள்வி '60 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறீர்களே, ஏன் அவரை திருமணம் செய்யவில்லை?' என்பது தானாம்... அவர்கள் கேட்டபொழுது எந்தவித முகபாவங்களையும் காட்டவில்லை... கடைசியாக கனடாவை விட்டு செல்லும் நேரத்தில் தான் அந்த வினாவிற்கு விடையளித்தாராம்...
அது இது தான்...
'நான் நாயர் பொண்ணு... அவர் கன்னர் ஜாதி... நடக்கிற காரியமா?'
(பாருங்கள்... உலகப் புகழ் பெற்றவர்கள் கூட இந்த ஜாதி விடயத்தை எவ்வளவு பெரிதாக பார்க்கிறார்கள்... என்ன கொடுமை ஷரவணா இது...)

யாழ்ப்பாணத்தில் பெரியகடைச் சந்தியின் மூலையில் கந்தையாச் செட்டியார் மில் என்ற அரைக்கும் ஆலை இருந்ததாம். அந்த கந்தையாச் செட்டியாரின் பாட்டியாரின் பெயர் பொன்னம்மா அம்மையார் என்பதாகும். அம்மையார் அவர்கள் கடையிற் சுவாமிகள் மேல் பக்தி மிக்கவராம். சுவாமிகள் அவர் தம் அடியார்களுடன் செல்லும் போது சுவாமிகளையும் சுவாமிகளின் அடியார்களையும் மனங்கோணாது உபசரிப்பார்களாம்.
இளையான் குடிமாறநாயனாரின் பக்தியை சோதிக்க இறைவன் அவரின் செல்வங்களை  படிப்படியாக குறைத்ததாக இலக்கியங்களில் படித்திருக்கிறோம் அல்லவா... அதைப் போல பொன்னம்மா அம்மையார் அவர்களின் வியாபாரத்தின் திடீரென பெருஞ்சரிவு ஏற்பட்டதாம். காணி, பூமி என்பன எல்லாம் பறிபோனதோடு அம்மையாரின் தாலியைத்தவிர மற்றைய எல்லா நகைகளும் விற்கப்பட்டு விட்ட நிலையில் அன்றாட சாப்பாட்டிற்கே அல்லல்படும் நிலை உருவானதாம். இந்த நிலைமையில் கடையிற்சுவாமி அவர்கள் ஒருநாள் திடீரென தமது நூற்றுக்கணக்கான அடியார்கள் சகிதம் அம்மையாரின் வீட்டுக்கு சென்றாராம். உடனே அம்மையார் தனது தாலியைக் கழற்றி தனது கணவனிடம் கொடுத்து வேண்டிய பொருட்கள் வாங்கி வருமாறு பணித்தாராம். இவ்வாறு செய்து வந்தவர்கள் அனைவருக்கும் மனம் கோணாது விருந்து படைத்தாராம்...

அன்றைய காலகட்டத்தில் தாலியை பெண்கள் தமது கணவனின் இறப்பின் போது மட்டுமே தமது கழுத்திலிருந்து கழற்றுவார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் அடியார்களுக்கு விருந்தளிக்க தனது தாலியை கழற்றிக் கொடுத்த அந்த தெய்வத்தாயை எமது சமூகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்?
நடிக நடிகையரின் பிறந்த நாட்களை அச்சொட்டாக மனனம் செய்த வைத்திருக்கும் தமிழ் சமூத்தால் இத்தகைய புனிதர்களை நினைவில் வைத்திருக்க முடியாதது தான் வேதனை.
பதின் பருவத்து(Teenagers) இளைஞர்களால் தான் பெரியளவிலான மாற்றங்களை இலகுவாக ஏற்படுத்த முடியும்...

சில பெரியவர்கள் சில விரும்பத்தகாத பழக்கங்களை கொண்டிருப்பதுண்டு. உதாரணத்திற்கு பல விஞ்ஞானிகளுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. அதையே சிலர் முன்வைத்துக்கொண்டு விஞ்ஞானிகளே புகைப்பிடிக்கும் போது நாம் ஏன் புகைப்பிடிக்கக் கூடாது என வாதிடுவதுண்டு. இவர்களைப்போன்ற 'வடி' இயல்புடையவர்களுக்காகவே இது.

கடையிற்சுவாமிகள் தனது அடியார்கள் என்ன வழங்கினாலும் அவர்களின் மனம் கோணக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக் கொள்வாராம். இதனால் பல இடங்களில் செல்லும் போது மது, புலால் வகைகளை கொடுப்பார்களாம். சுவாமிகளும் அவற்றை ஏற்றுக் கொள்வார்களாம்.(இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு, அதாவது சுவாமிகள் விருப்பு வெறுப்பு அற்றவராதலால் எதையும் ஏற்றுக் கொள்வார் என்பதாகும்.). இதை அறிந்த சில பெருந்தின்னி மனிதர்கள் சுவாமிகள் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் அவர் பின் பக்தர்கள் என்ற போர்வையில் சென்று உண்பதை வழக்கமாக்கிக் கொண்டனராம்.
இவர்களுக்கு  காடம் கற்பிக்க கடையிற் சுவாமிகள் அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் மதிய உணவு வேளைக்கு ஒரு வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவ் உணவுப்பிரியர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வருவதை அறிந்த சுவாமிகள் செல்லும் வழியில் ஓர் தொழிலாளி மெழுகு உருக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை கண்ட சுவாமிகள் அவனிடம் தன் கையில் மெழுகினை ஊற்றுமாறு சொன்னாராம். அவனும் ஊற்ற சுவாமிகள் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை பார்த்து 'வாருங்களேன்... வாங்கிக் குடியுங்களேன்...' என்றாராம். அவர்கள் அனைவரும் திரும்பி ஓடி விட்டனராம்.
கடையிற் சுவாமிகள் மது, மாமிசம் புசிப்பதால் தாமும் உண்கிறோம் என்றவர்கள் அந்த மெழுகையும் அல்லவா உண்டிருக்க வேண்டும்???
எங்கிருந்தும் நல்லன மட்டும் எடுப்போம், தீயன விடுப்போம்.
(இது ஒரு எடுத்துக்காட்டு கதையே... ஆகவே சமய நம்பிக்கைகளோ அல்லது சமயங்களோ இந்த எடுத்துக் காட்டிற்கு உட்பட்தல்ல...)

கலிபோர்னியா பிரதேசத்தில் 'அனோ நியூவோ' (Ano Nuevo*) என்ற பெயருடைய அதாவது 'புதுவருட முனை' என்ற பெயருடைய ஓர் முனை உள்ளதாம். கடல் நாய்களின் ஒருவகையான தும்பிக்கை வைத்த கடல்நாய்கள் (Elephant Seals) உலகிலேயே இங்கு மட்டும் தான் வருமாம். இவற்றில் ஆண் சீல்கள் அலாஸ்காவிலிருந்து (அதாவது ஏறத்தாழ 4000 மைல் தொலைவிலிருந்து) நீந்தியபடி டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இந்த முனையை சரியாக அடையுமாம். இந்த முனையை அடைந்து தங்கள் பிரதேசங்களை படித்து வைத்துக் கொள்ளுமாம்.
பெண் சீல்கள் எதிர்த்திசையான ஹவாய் தீவுகளிலிருந்து (அதாவது 3000 மைல் தொலைவிலிருந்து) நீந்தி சரியாக இந்த முனையை அடையுமாம்.
அப்போதிருந்து அவர்களின் காதல் ஆரம்பித்து பெப்ரவரி 14ம் திகதி உச்சக்கட்டத்தை அடையுமாம்.
(காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி அனுஷ்டிக்கப்பட இந்தக் காரணமும் சொல்லப்படுவதுண்டு. வலன்ரைன்ஸ் தினம் என்பது வலன்ரைன் என்ற பாதிரியாரை நினைவுபடுத்தி என்றும் சொல்கிறார்கள். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்வது எனது வேலையல்ல...)
பெண் சீல்கள் குட்டி இட்டவுடன் பெண் சீல்கள் ஹவாய் தீவுகளிற்கும், ஆண் சீல்கள் அலாஸ்காவிற்கும் சென்று விடும்.
மறுபடியும் டிசம்பர் மாதம் அதே இடத்தில் சந்திப்பு நடக்குமாம். ஆனால் முதல் முறை சந்தித்த ஜோடிகள் தான் மீண்டும் ஜோடிகள் என்பது நிச்சயமில்லையாம். (இத தான் கலாசார சீரழிவு எண்டுவாங்களோ... ஹி ஹி...)
எது எப்படியோ, அவ்வளவு தூரம் அவை நீந்தி வந்து ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தை வந்தடைவது ஆச்சரியமான விடயம் தானே...

*- (ANO என்று யசீர் அரபாத் அவர்களின் விடுதலை அமைப்பான பலஸ்தீன விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்த விடுதலை அமைப்பும் உள்ளது. Abu Nidal Organization என்பது அந்த அமைப்பின் பெயர்)

இலங்கையில் பிரபலம் பெற்ற இலங்கைப் பாடல்களான 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..." மற்றும் 'சுறாங்கனி... சுறாங்கனி..." ஆகிய பாடல்கள் தென்னிந்திய திரைப்படங்களுக்காக மீள்கலவை செய்திருப்பதாக அறிந்து கொண்ட நான் அவற்றை ஆசையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டேன்... பதிவிறக்கம் செய்துவிட்டு கேட்டேன்...
மீள்கலவைப் பாடல்களின் விதிகளிலிருந்து அவை சற்றும் விலகவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
இலங்கையின் புகழ்பெற்ற பொப் பாடல்கள் அவை.
'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்குச் சென்றாளோ, படிக்கச் சென்றாளோ?' அருமையான வரிகள்... அருமையான குரல்கள்... பாடலாயினும் பெண்களின் படிப்பை பற்றி கதைத்த பாடலது... அந்தப் பாடலை மீள் கலவை செய்திருக்கிறார்கள் என்று அறிந்த போது மகிழ்ச்சியடைந்தேன்... மீள் கலவை செய்தால் என்ன பாடலின் வேகத்தை சற்றுக் கூட்டியிருப்பார்கள் என்று நினைத்தேன்... ஆனால் பாடலையே மாற்றி விட்டார்கள். பாடலின் தொடக்கம் மட்டும் தான் இலங்கையினுடையது, மிகுதியை மாற்றி விட்டார்கள். இதில் மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் பாடலின் இறுதியில் வரும் வரிகள் உண்மையான சின்ன மாமியே பாடலின் கொள்கையோடு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்...
'கதாநாயகி- ஏன்டா வாலு என்ன வேலை பண்ணுறாய்... சைக்கிள் கப்ல ஆளை மாத்தப் பாக்கிறாய்... வேண்டா நானும் மோசமான ஆளுடா... என் கையில சைக்கிள் செயினு பாருடா...
நாயகன் -மை வைப் நீயும் ஹார்ட்டு மாறி கார்ப்ஸ் ஸ்கூப்பர் ஸ்ரெப்னி மாறி ரெண்டு பேரையும் வச்சிக்கிறேனே... ஹே... ஹே... ஹே...'
இலங்கை பாடல்களையும் விட்டுவைக்க மாட்டார்களா...

சுறாங்கனி சுறாங்கனி பாடல் தமிழிலும் பாடப்பட்டது. ஆனால் தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு தமிழில் பாடல் எழுதினால் மேலதிக வரி உள்ளதோ என்னவோ சிங்களப் பாடலின் தொடக்கத்தை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'சுறாங்கனி... சுறாங்கனி... சுறாங்கினிக்கு மாலு கனாவா... மாலு மாலு மாலு... சுறாங்கனிக்கு மாலு கனாவா...' சிங்கள மொழி தெரியாத தமிழக தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் இதில் என்ன விளங்கப் போகிறது?
'சுறாங்கனி... சுறாங்கனி... சுறாங்கனிக்க மீனு கொண்டு வந்தன்... மீனு மீனு... நான் பிடிச்ச மீனு... சுறாங்கனிக்கு மீனு கொண்டு வந்தன்...' இரண்டுக்கும் ஒரே மெட்டுத் தானே...
ஏன் புரியாத மொழியில் தான் பாடல் அமைய வேண்டுமா...?

தென்திசையை பார்க்கின்றேன்
எனட செய்வேன்- என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடடா
அன்றந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசை புகழ்ந்து
தன்புகழை வைத்தோன்
இராவணன் காண்
அவன்நாமம் உலகறியச்செய்யும்...

முகிலிலுள்ள அத்தனை நீரும் மழையாய் மாறுவதில்லை...
மழையிலுள்ள அத்தனை துளியும் பூமியை அடைவது இல்லை...
பூமியை அடைந்த அத்தனை துளியும் சிப்பியை அடைவது இல்லை...
சிப்பியை அடைந்த அத்தனை துளியும் முத்தாவது இல்லை....
திறமை இருந்தும் முயற்சிக்காதவன் வெற்றி பெற்றதில்லை...

ஜனாதிபதி-
ராஜாவுக்கு ராஜா நான்டா... எனக்கு நூற்றிப்பத்து மந்திரிங்க...

மேர்வின் சில்வா-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்... உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்து கொள்ளுங்கள்...

கோத்தபாய-
தமிழன் நினைப்பதுண்டு...கொழும்பு நல்லம் எண்டு...  நாங்கள் நினைப்பதுண்டு...கேனைத் தமிழனெண்டு...

மக்கள்-
(இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...)

வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...(2)
காசு உள்ள நேரம் கடயில் சாமான் இருக்குமா... சாமான் கடயில் இருந்த நேரம் வாங்க முடியுமா...(2)
பணத்தை பாங்கில் போட்;டு விட்டால் வட்டி கிடைக்குமா... காசை வீட்ட பூட்டி வச்சா நாளைக்கு இருக்குமா... நாளைக்கு இருக்குமா...
வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...

வோட்டை போட்ட நாங்கள் யோசிச்சு போட்டோமா... வோட்டை போட்ட பின்னும் நாங்கள் உணர்ந்து கொண்டோமா...
உணர்ந்த பின்னும் நாங்கள் இங்கு என்ன செய்தோமே... எம்மை புரிந்து அவர்கள் எம்மில் ஏறி கபடி ஆடினரே... கபடி ஆடினரே...
வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...

காதல் பாடல்கள் இல்லையென்று
இறுவட்டு வாங்க சென்றேன் காதலியோடு...
வாங்கிவிட்டு வந்தேன்...
இறுவட்டு உண்டு...
காதலியை காணவில்லை...
அவள் இப்போது அந்தக் கடையின்
முதலாளி...

141ம் இலக்க பேருந்து. எப்போதுமே பேருந்து நிறைந்த கூட்டம் பயணம் செய்யும் பேருந்துகள்...
அன்றும் அப்படித்தான்... பேருந்து நிறைந்த கூட்டம். இரண்டு பக்க இருக்கைகளை ஒட்டியும் நிற்கும் பிரயாணிகள். அந்த இரண்டு வரிசைக்கு இடையிலும் ஓர் கூட்டம். மொத்தமாக 3 வரிசையில் அந்த சிறிய பேருந்தில் பிரயாணிகள். அந்த நடு வரிசையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்... என் முன்னே ஒரு சகோதரி. மற்றைய புறத்தில் ஓர் வயதான முதியவர். இருவருக்குமிடையில் நான்.
எனக்கு எதிரே நிற்கும் அந்த சகோதரி மீது எனது கை பட்டு விடக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்தேன். ஏனென்றால் எமது சகோதரர்கள் பேருந்துகளில் செய்யும் சேட்டைகளால் தெரியாது கை பட்டாலும் இப்போதைய நிலையில் சகோதரிகள் முறைத்துப் பார்ப்பதுண்டு. ஆகவே அந்த சூழ்நிலை எனக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் கண்டேன். கடைசி நேரத்தில் திடீரென தடுப்பு பிரயோகிக்கப்பட நான் ஆடிப்போனேன், ஆனால் அந்த வேளையில் சகோதரி மீது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக எனது முழுவிசையை மறுபுறத்தில் பிரயோகித்தேன். கூடுதலாக பிரயோகித்து விட்டேனோ என்னவோ, மறுபுறத்தில் நின்ற முதியவர் மீது சாய்ந்தேன். அந்த முதியவர் ஆடிப்போனார். இருக்கையோடு மோதச்சென்ற அவரை அருகில் நின்ற சகோதரர் ஒருவர் காப்பாற்றினார். அந்த முதியவர் திரும்பி என்னைப்பார்த்தார். அவர் என்ன இனத்தவர் என என்னால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே ஒரு அப்பாவிப் போல (அதென்ன போல... நான் அப்பாவி தான்...) முகத்தை வைத்துக்கொண்டு மிக மெல்லியதாக 'சொறி' என்றேன். என் நெற்றியில் தமிழன் என்று எழுதி ஒட்டியிருந்ததோ தெரியவில்லை. அந்த முதியவர் சொன்னார் 'தம்பி! பஸ்ஸில நிக்கிறதெண்டா ஒழுங்கா நிக்கோணும். பொம்பிளப் பிள்ளையள தான் இடிக்கிறீங்கள் எண்டா என்னப்போல கிழவன்மாரையும் விட மாட்டீங்களா?'. எனக்கு வியர்த்துக் கொட்டியது. ஆனால் மறுபுறத்தில் இருந்த சகோதரி என் நிலைமையை புரிந்து கொண்டார் போலும், போகும் போது என்னைப் பார்த்து 'பாவம் அப்பாவி' என்று சொல்வது போல் சிரித்துவிட்டுச் சென்றார். இறங்கும் போது அந்த முதியவரிடம் சொன்னேன் 'ஐயா! தெரியாம இடிச்சிற்றன். ஏதும் அடி பட்டதா?' என்று. முதியவரும் 'சரி போனாப் போகுது' என்பது போல ஒன்றும் சொல்லாமற் சென்று விட்டார்.

வணக்கம் நேயர்களே!
இது உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை... 0.08 பண்பலையூடாக உங்கள் செவிப்பலைகளை உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை இன்றும் உங்களை வதைக்க மன்னிக்கவும் இன்றும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வந்திருக்கிறது.
இதோ எமது நிலையக்குறியீட்டு இசை...
'கேட்டுப் பாரு சராங் புராங்...
எதிரிங்க சாரமெல்லாம் பிய்யுது...
வெற்றிதாண்டா நமக்கு...
டண்டணக்கா... ஆ... டணக்குணக்கா...'

ஆம்...
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஒரு குறட்பா...
'நல்லன செய்வார்க்கு மறக்காமல் இரண்டு
அடி கொடுப்பது நலம்'

ஆம்... அந்த அருமையான குறட்பாவைத் தொடர்ந்து ஒரு விசேட நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது... 'கம்பஸ்ஸில் இன்று...' என்ற நிகழ்ச்சியோடு யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து செத்தலிங்கம் சாகாதேவன்...
வணக்கம் சாகாதேவன்...

ஆம்... வணக்கம் சொறிறாஜ்...
இது செத்தலிங்கம் சாகாதேவன்... யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து இன்றைய மட்டை வழங்கும் விழா பற்றிய சில சுவாரசியமான தகவல்களை வழங்க தயாராக இருக்கிறோம்.

பல்கலைக்கழக வாசலில் வாழைமரங்களும், காய் வாழைக்குலைகளும், கறுத்த நிறக் கொடிகளும், பறை மேள சத்தங்களும் மட்டை பெற வருவோரை மகிழ்ச்சியாக வரவேற்கின்றன...
மட்டைகளை வாங்குவதற்காக மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் பலர் அவிழ்த்து விட்ட ஆட்டுப்பட்டி போல வந்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலரின் உடைகளில் ஆங்காங்கே துவாரங்களும், பிய்ந்த அடையாளங்களும் காணப்படுகின்றன...
பெண்கள் சிலர் பல்கலைக்கழகத்தை கூட்டும் வேலையை இலகுவாக செய்யும் பொருட்டு சேலைகளை நிலத்தை கூட்டும் விதமாக அணிந்து வந்திருக்கிறார்கள்... ஆனால் பலரின் உடல்களில் ஆடைகளை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது... ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் ஆடைகளின் விலை அதிகரித்து விட்டதோ என்னவோ...

அங்கே ஒரு முதியவர் அவசரம் அவசரமாக உள்ளே போகிறார்... அவர் ஓர் மாணவனுடன் ஏதோ கதைக்கிறார்...
என்ன கதைக்கிறார் என கேட்கலாம்... எனது ஒலிவாங்கியை அவர்களை நோக்கிப் பிடிக்கிறேன்...

முதியவர்: அடேயப்பா தம்பி! உங்க என்னடா நடக்கப்போகுது...
மாணவன்: பட்டம் குடுக்கப் போயினம் அப்பு.
மு: உதில நிக்கிற எல்லாருக்குமோடா...?
மா: ஓமணை அப்ப...
மு: சரி... சரி... அப்ப என்ன பட்டம் குடுக்கப் போயினம்... எட்டு மூலைப்பட்டமோ? பிராந்துப் பட்டமோ?
மா: உதில நிண்டு விசர்க்கத கதையாம அங்கால போண அப்பு வெளியால...
மு: நான் போறன்... ஆனா நீங்கள் கஷ்ரப்படப் போறியள்.. ஆயிரக்கணக்கில நிக்கிறியள். எல்லாற்ற பட்டமும்     ஒண்டுக்க ஒண்டுக்க செருகப்போகுது... எனக்கென்ன... நான் போயிற்று வாறன்...

ஆம்... அப்பு சென்று விட்டார்...
இப்போது நாம் உள்ளே செல்வோம்...
ஆம்... அங்கே ஒரு மாணவனுக்கு அரிவாள், வீச்சுவாள், குறடு எல்லாம் குடுபடுது... ஆம்... அவர் சத்திரசிகிச்சையில் கலாநிதிப்பட்டம் பெற்றவராம்...
அங்கே ஒருவருக்கு சீமெந்துப் பைக்கற்றுகளும், நீர் மட்டமும், சாந்துப் பலகையும் கொடுக்கப்படுகிறது... அவர் கட்டிடத் துறையில் பட்டம் பெற்றவராம்...

இத்தோடு காலை அமர்வுகள் நிறைவுபெற்றதால் மாலை அமர்வில் சந்திப்போம்...
நன்றி நேயர்களே...

நன்றி சாகாதேவன்...
நேரம் இப்போது காலை 11.55...
'இந்த நேர அறிக்கையை உங்களுக்கு வழங்கியது கந்தசாமி வீச்சருவாள் தனியார் நிறுவனம்.'
சரி நேயர்களே...
விளம்பர இடைவேளையின் பின்னர் சந்திப்போம்...

'சிறந்த சிகை அலங்கரிப்புக்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் சனத் ஜெயசூரியா லோன்றி... உங்கள் தலைமயிரை சிறப்பாக அலங்கரிக்க இலக்கம் 00, சுடலையடி, கொழும்புத்துறை மேற்கு, கொழும்பு 48 இல் இருக்கவே இருக்கிறது சனத் ஜெயசூரியா லோன்றி...'

நேரம் இப்போது 12 மணி...
எமது அடுத்த நிகழ்ச்சி 'அறிவுலகம்' இளைஞர் நிகழ்ச்சி...
புதிய நிகழ்ச்சியோடு கலையகத்தில் வெள்ளையன் கறுவற்தம்பி...
மீண்டும் வேறொரு நிகழ்ச்சியோடு உங்களை சந்திக்கிறேன்... நன்றி நேயர்களே...

நன்றி சொறிறாஜ்...
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் ஓர் விசேட சந்திப்பு...
10 முறை ஓ.எல் எடுத்து சித்தியடையாத திருவாளர் அறிவழகன் அவர்களின் பேட்டி...
வணக்கம் அறிவழகன் அவர்களே...
அறிவழகன்: வணக்கம்...
கறுவற்தம்பி: உங்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுங்களே...

அறி: எனது பெயர் தான் தெரியுமே... பிறந்தது பெரியாஸ்பத்திரியில்... வளர்ந்தது வீட்டில... இப்ப இருக்கிறது             வானொலி நிலையத்தில...
கறு: ஆகா... அருமை...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல ஆக்களின்ர வாழத்துக்களால தான் நாங்க அறிவாளியா இருக்க முடியுது...
கறு: நன்றி... நீங்கள் எப்ப முதல் முதலா ஓ.எல் எடுத்தனீங்கள்?
அறி: உதெல்லாம் நினைவிருந்தா நான் எப்பவோ சோதின பாஸ் பண்ணியிருப்பனே...
கறு: மிக்க நன்றி...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல...
    (இடைமறித்து)
கறு: சரி... சரி... உங்கட கணக்கு வாத்தியார் பற்றி சொல்லுங்களன்...

அறி: அந்தாளுக்கு ஒண்டும் விளங்காது... எப்ப கேட்டாலும் ஒரே விடைய தான் சொல்லும்... 5 உம் 3 உம் எப்பயும்     8 தானெண்டு தான் சொல்லும்... தமிழாக்கள் ஒண்டும் கண்டுபிடிக்கிறதில்ல எண்டுறாங்கள்... 5 உம் 3 உம் 9      எண்டு நான் புதுசா கண்டுபிடிச்சன், ஆனா பிழை எண்டுறாங்கள்... சரி அது தான் முடிஞ்சது எண்டா... 89          உக்குப் பிறகு என்ன எண்டார் தொண்பது எண்டன்... பிழையாம், புதுசா கண்டுபிடிக்கிறியா எண்டு அந்த           மனுசன் அடிக்குது... கண்டு பிடிக்காட்டி கண்டுபிடிக்கேல கண்டுபிடிக்கேல எண்டுறாங்கள்... கண்டுபிடிச்சா           அடிக்கிறாங்கள்...
     என்ன கொடும ஷரவணா இது...
கறு: கூல்... கூல்...
அறி: நான் சந்திரமுகி டயலொக் சொன்னா என்ன நீர் சிவாஜி டயலொக்க சொல்றீர்? பெரிய அறிவாளியெண்ட             நினைப்போ...
கறு: ஐயோ... நான் அப்பிடி சொல்லேல... உங்கள அமைதியா இருக்கச் சொல்லி இங்கிலீசில சொன்னனான்...
அறி: நானும் தமிழ், நீரும் தமிழ்... கேக்கிறவங்களும் தமிழ்... இடைக்குள்ள என்னத்துக்கு உங்கட இங்கிலீசு???       அதான் இடைக்குள்ள ஆங்கிலம்... எனக்கு உம்ம விட நல்லா ஆங்கிலம் தெரியும்... ஆனா அப்பிடி காட்டிக்       கொள்றதில்ல...
கறு: ஐயா! மன்னிக்கவும்... அது சரி... உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா...
அறி: தெரியுமாவா... 'தாமோதிரம்பிள்ளை ஆடி ஆடி வாறார்...' எண்டத ஆங்கிலத்தில சொல்லும் பாப்பம்...
கறு: அது... அது...
அறி: நாட்டில நுனி நாக்கில ஆங்கிலம் கதைக்கிறவயின்ர உண்மை நிலை இது தான்...
     நான் சொல்றன் கேளும்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்...
கறு: ஐயா... விளங்கேல... விளங்கப்படுத்த முடியுமா...
அறி: அப்பிடி கேக்குறது...
     கிவ் எண்டா தா, றிங் எண்டா மோதிரம், சைல்ட் எண்டா பிள்ளை, யூலை எண்டா ஆடி, கம்மிங் எண்டா      வாறார்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்... அப்ப விளங்குதே...
கறு: சுத்தம்...
அறி: என்னது...
கறு: சுத்தமான ஆங்கிலம் எண்டன்...
     சரி... இறுதியா ஒரு கேள்வி...
     நீங்கள் ஓ.எல் பாஸ் பண்ணாதத எண்ணி கவலைப் பட்டதுண்டா?
அறி: சீ... நான் உதைப்பற்றி கவலைப்படேல... ஓ.எல் பாஸ் பண்ணினா ஏ.எல் படிக்கோணும்... ஏ.எல் சோதினை      எடுக்கோணும்... கம்பஸ்ஸில படிக்கோணும்... கம்பஸ்ஸில சோதினை எடுக்கோணும்... ஓய்வே இல்லாம      போயிடும்... இப்ப பாருங்கோ நான் எவ்வளவு ஓய்வா இருக்கிறன்...
     அதோட ஒரு விஷயம் சொல்லுவினம் தெரியுமா...
     நாங்க எவ்வளவு கூட கூட படிக்கிறமோ, அந்தளவுக்கு மறக்கிறம்...
     ஆகவே படிக்காம விட்டா பிரச்சினை இல்ல தானே...
கறு: ஆகா... அருமை... மிக்க நன்றி...  உங்கள் போன்றவர்களின் வாழ்க்கையை எமது சந்ததி பாடமாய்      கேட்கோணும் என்று தான் இதை ஒழுங்கு செய்தோம்... உங்கள் வாழ்க்கையை நமது இளைஞர்கள் பாடமாக      எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்... மிக்க நன்றி...
அறி: மிக்க நன்றி...


ஆம்... அறிவுலகத்தில் அடுத்ததாக புதிர்ப்போட்டி...

10 முட்டைகளின் விடை 7 எனின் பாதி முட்டையின் விலை யாது...
இந்த வினாவிற்கான விடையை தெரிந்தோர் எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டிய இலக்கம் 123456789.
உங்கள் விடைகளை அனுப்பி பெறுமதிமிக்க பரிசுகளை பெறுங்கள்...

அடுத்து ஓர் விளம்பரம்...

உங்கள் கடைசி காலத்தில் இருப்பவரா நீங்கள்... நீங்கள் மேலுலகம் செல்ல பயன்படுத்த வேண்டிய ஒரே சவப்பெட்டி சொர்க்கம் சவப்பெட்டிகள்... நீங்கள் உடனே நாடி உங்கள் சவப்பெட்டியை முன்பதிவு செய்யுங்கள்...

ஆம் நன்றி நேயர்களே...
எமது ஒலிபரப்பு மீண்டும் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்...
அதுவரை நிம்மதியாக இருக்க எமது வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...


***இந்த வேளையில் இங்கிலாந்திலுள்ள எனது மூத்த அண்ணா திரு.க.கிருஷ்ணகுமாருக்கு எனது நன்றிகள். ஏனென்றால் இந்த ஆக்கத்தை முதலில் எழுதியவர் அவரே.
நன்றிகள் கோடி.
இந்த ஆக்கம் சிறப்பாக இருந்தால் அந்தப்பெருமை எனது அண்ணாவைச் சேரும், இரசிக்கும்படி இல்லை என்றால் அந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர் எழுதியதில் சில மாற்றங்கள் செய்தேன்.

ஓர் நொடியை பல யுகங்களாலும்
பல ஆண்டுகளை சில சொடிகளாலும்
மாற்றும் அபூர்வ தேவதை நீயே...

என் அருகில் நீ இருக்கும்
யுகங்கள் எல்லாம் நொடியாய் கரைவதென்னடி...
நீ அருகில் இல்லாத நொடிகள் கூட
யுகமாய் வலிப்பதென்னடி???

உன் கண்கள் பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் காவியமடி...
காவியத்தை கற்க விரும்பும்
இலக்கிய மாணவனடி நான்...

பத்துப் பசுக்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் பசுக்களிடமும் பசுவின் குணத்தையே காணலாம்...

பத்துப் புலிகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் புலிகளிடமும் புலியின்; குணத்தையே காணலாம்...

பத்துப் சிங்கங்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் சிங்கங்களிடமும்; சிங்கத்தின் குணத்தையே காணலாம்...

ஆனால் பத்து மனிதர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்து மனிதரிலும் மனிதனின் குணத்தை காணமுடியாது. பசுவைப் புலியாக்க முடியாது. புலியை பசுவாக்க முடியாது. சிங்கத்தை மனிதனாக்க முடியாது. ஆனால் மனிதன் புலியாகலாம், சிங்கமாகலாம், பசுவாகலாம், விரும்பினால் மனிதனாகவோ அல்லது தேவனாகவோ வாழலாம்..

குடும்பத்தில் வறுமை, பிரச்சினை, அக்கா தங்கைகளுக்கு திருமணம் செய்ய பணமில்லை, குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று நகைகளை, வீட்டை அடைவு வைத்து விட்டு கதாநாயகன் சோகப்பாடல் பாடுவதாக அமெரிக்காவில் படம் எடுக்க முடியுமா...
முடியாது...
ஏனென்றால் குடும்பம், அதன் கட்டமைப்பு  என்றால் என்னவென்றே தெரியாமல் வாழந்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால் நாங்கள் அப்படியா...
தமிழர்களின் பாரம்பரியங்களில் குடும்பம் என்ற கட்டமைப்பும் ஒன்று...
சமூகம் என்ற கட்டமைப்பை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய பெருமை எங்கள் தமிழ் சமூகத்தை சார்ந்தது.
சிவாஜி கணேசன் அவர்களின் படம் ஒன்றின் பாடலில் இந்த வசனம் வரும்...
'எங்களுக்கு குறை என்றால் கடவுளிடம் முறையிடுவோம், ஆனால் கடவுளே கண்கலங்கி நின்றால் நாங்களெல்லாம் என்ன செய்வோம்' என்று...
அதே போலத்தான்... சமூகக் கட்டமைப்பை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தோம்... ஆனால் எங்களிலே சமூகக் கட்டமைப்பிலே குழப்பம் என்றால் எங்களுக்கு யார் சொல்லித் தருவார்...???
சமூகக் கட்டமைப்பைப் பற்றி கதைக்க முற்பட்டாலே முதலாவதாகவே வருவது சமூகக் கலாசார சீரழிவுகள். இதில் கொடுமையான விடயம் என்னவெனில் பலர் கலாசாரம் என்பதை கலாச்சாரம் என்று குறிப்பிட்டு வருகின்றனர். கலாசாரம் என்பததை சரியாக எழுத்துக்கூட்ட முடியாதவர்களால் எவ்வாறு கலாசாரத்தை வளர்க்க முடியும்?

ஆனால் கலாசாரம் என்ற வகைக்குள் பெண்களை மட்டும் உள்ளெடுத்து உடைகளை பற்றி கதைத்து கலாசார சீரழிவு என்று கூறுவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை.
ஏனென்றால் கலாசாரம் என்பது மிக விரிவானது.

எமது கலாசார முறையை பற்றி சிறப்பாக எடுத்துக்காட்ட கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் அருமையாக குறிப்பிட்டிருப்பார்...
'பெண்கள் வெளியே செல்லும் போது எதிரே ஆண்களை கண்டால் தமது ஆடைகளை சரிசெய்து கொள்வார்கள். தமது ஆடைகள் சரியாக இருந்தாலும் அதை உறுதிப்படுத்துவதற்காக சரிசெய்து கொள்வார்கள். அதற்கு காரணம் தங்கள் ஆடை விலகுவதன் மூலம் எதிரெ வரும் ஆடவனின் மனம் சஞசலமடையக் கூடாது என்பதாகும்.'
இங்கே அவர் ஆடைகளை பற்றி கதைக்கவில்லை, மாறாக மனத்தூய்மையை பற்றிக் கதைக்கின்றார்.
எமது கலாசாரத்தில் மனத்தூய்மை என்பது மிக மிக முக்கியமானது.

இன்று எங்களிடம் மனத்தூய்மை இருக்கிறதா??? நாங்கள் அனைவரும் எங்கள் மனதை தொட்டுப்பார்த்து எம்மிடமே இரகசியமாக கேட்க வேண்டிய கேள்வி இது.
இன்று திரைப்படங்களில் ஓர் வசனம் பொதுவாக வருவதை அவதானித்தேன்...
'திருமணத்தின் முன் தான் எந்த ஆணையும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு பெண்ணாலும், திருமணத்தின் முன் தான் எந்த பெண்ணையும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு ஆணாலும் கூற முடியுமா? ஒருவராலும் கூற முடியாது. எல்லோரும் அப்படித்தான்'. இப்படியான வசனங்கள் எமது கலாசாரத்தை எந்த வகையில் வெளிப்படுத்துகின்றன?

உலகில் சிறந்த கற்புக்கரசிகள் யாரென்று கேட்டால் உடனே சீதை, கண்ணகி என்று புராண கால பெயர்களை சொல்லும் இன்றைய ஆண்கள் ஏன் தனது தாய், மனைவி, அக்கா, தங்கை, உறவுகளை சொல்வதில்லை? தங்கள் உறவுகள் மீது நம்பிக்கை இல்லையா?
ஏன் பெண்கள் கூட கண்ணகி, சீதை என்று தானே கூறுகிறார்கள்? ஏன் நீங்கள் உங்களையும், உங்கள் அம்மாவையும், உறவுகளையும் சொல்வதில்லை? நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால் உங்களை நீங்களே கற்பில் சிறந்தவர்கள் என்று உங்கள் மனதில் திடமான எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு உலகமே உங்களை சீதை, கண்ணகிக்குப் பதிலாக சொல்லும்.
நாங்கள் ஏன் உலகத்திற்காக வாழவேண்டும், என்னைப் பொறுத்தவரை நான் சரியாக இருந்தால் போதும் என்று சொல்பவரா நீங்கள்? சரி உலகம் வேண்டாம், உங்கள் கணவன், தாய், சகோதரர்கள், சகோதரிகளாவது சொல்ல வேண்டாமா?
கண்ணகி தனது கற்பால் மதுரையை எரித்தது உண்மையானால் உங்களாலும் இந்த உலகத்தையே எரிக்க முடியும்.

ஆண்களினதும், பெண்களினதும் மனதில் தூய்மை ஏற்பட்டால் எம் நாடு வளப்பெறும், என் நாடு வளம்பெற்றால் இவ்வுலகமே வளம்பெறும்...
மனதில் தூய்மையை பேணுவோம், வளமாய் வாழுவோம்...