க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

சில பெரியவர்கள் சில விரும்பத்தகாத பழக்கங்களை கொண்டிருப்பதுண்டு. உதாரணத்திற்கு பல விஞ்ஞானிகளுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. அதையே சிலர் முன்வைத்துக்கொண்டு விஞ்ஞானிகளே புகைப்பிடிக்கும் போது நாம் ஏன் புகைப்பிடிக்கக் கூடாது என வாதிடுவதுண்டு. இவர்களைப்போன்ற 'வடி' இயல்புடையவர்களுக்காகவே இது.

கடையிற்சுவாமிகள் தனது அடியார்கள் என்ன வழங்கினாலும் அவர்களின் மனம் கோணக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக் கொள்வாராம். இதனால் பல இடங்களில் செல்லும் போது மது, புலால் வகைகளை கொடுப்பார்களாம். சுவாமிகளும் அவற்றை ஏற்றுக் கொள்வார்களாம்.(இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு, அதாவது சுவாமிகள் விருப்பு வெறுப்பு அற்றவராதலால் எதையும் ஏற்றுக் கொள்வார் என்பதாகும்.). இதை அறிந்த சில பெருந்தின்னி மனிதர்கள் சுவாமிகள் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் அவர் பின் பக்தர்கள் என்ற போர்வையில் சென்று உண்பதை வழக்கமாக்கிக் கொண்டனராம்.
இவர்களுக்கு  காடம் கற்பிக்க கடையிற் சுவாமிகள் அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் மதிய உணவு வேளைக்கு ஒரு வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவ் உணவுப்பிரியர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வருவதை அறிந்த சுவாமிகள் செல்லும் வழியில் ஓர் தொழிலாளி மெழுகு உருக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை கண்ட சுவாமிகள் அவனிடம் தன் கையில் மெழுகினை ஊற்றுமாறு சொன்னாராம். அவனும் ஊற்ற சுவாமிகள் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை பார்த்து 'வாருங்களேன்... வாங்கிக் குடியுங்களேன்...' என்றாராம். அவர்கள் அனைவரும் திரும்பி ஓடி விட்டனராம்.
கடையிற் சுவாமிகள் மது, மாமிசம் புசிப்பதால் தாமும் உண்கிறோம் என்றவர்கள் அந்த மெழுகையும் அல்லவா உண்டிருக்க வேண்டும்???
எங்கிருந்தும் நல்லன மட்டும் எடுப்போம், தீயன விடுப்போம்.
(இது ஒரு எடுத்துக்காட்டு கதையே... ஆகவே சமய நம்பிக்கைகளோ அல்லது சமயங்களோ இந்த எடுத்துக் காட்டிற்கு உட்பட்தல்ல...)

0 பின்னூட்டங்கள்: